Sunday, February 6, 2011

குகைக்குப் போனோமே!

தலைப்பை பார்த்து விட்டு,  ஏதோ இமய மலை குகைக்குப் போயிட்டேன்னு நினைக்காதீங்க.....
நியூ மெக்ஸிகோ மாநிலத்தில், லாஸ் அலமோஸ் (Los Alamos)  என்கிற ஊருக்கு பக்கத்தில்  இருக்கிற  Bandelier National Monument ஆக இருக்கிற மலைகுகைப் பத்தி தான் சொன்னேன்பா....


இது முனிவர்கள் இருந்த குகை இல்லைங்க..... அமெரிக்காவின் natives ஆன செவ்விந்தியர்களில் ஒரு பிரிவினர்,  பல வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த  குகைகள்.    அமெரிக்காவில் அவர்களை செவ்விந்தியர்கள்  - Red Indians - என்று தற்பொழுது அழைப்பதில்லை.  native அமெரிக்கர்கள் (Native Americans)  என்றே சொல்றாங்க.....

ஒரு டவுட்டு:  native என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன?  தெரிஞ்சா சொல்லுங்க மக்கா....  native place என்பதை சொந்த ஊருனு சொல்லுவோம்.... native அமெரிக்கர்கள் என்று இருப்பதை, எப்படி தமிழில் சொல்ல?  ம்ம்ம்ம்......

 Ancestral Pueblo Indians, New Mexico:




  இந்த குகை வீடுகளில்,  பல அறைகள் இருந்தது, சிறப்பம்சம் தானே! 


  இரவில் மிருகங்கள் கிட்ட இருந்து தங்களை பாது காத்துக் கொள்வதற்கும்,    எதிரிகள் மூலமாக தங்களது பெண்கள், குழந்தைகளுக்கு ஆபத்து எதுவும் வந்து விடாமல் இருப்பதற்கும், இந்த வீடுகள் பயன் பட்டு இருக்கின்றன.

குகையில் இருந்து வெளியே உள்ள view : 

 தொலைவில் இருந்து பார்க்கும் போது, இது பெரிய மலைகள் போலவே இருப்பதால், அங்கு இவர்கள் குடி இருந்தார்கள் என்று யாருக்கும் எளிதாக கண்டு பிடிக்க முடியாமல் இருந்து இருக்கிறது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்த நேரங்கள் மட்டுமே, கீழே இறங்கி வந்து  ஒரே கூட்டமாக சேர்ந்து,  ஒன்றாக கூடி கொண்டாடி இருக்கிறார்கள்.


இப்பொழுது,  சுற்றுலா பயணிகள் ஏறி பார்ப்பதற்கு என சில குகை வீடுகளுக்கு மட்டும் ஏணி வைத்து இருக்கிறார்கள்.  அதில் ஏறிப் போய் குகைக்குள்ள  பார்த்த போது ..... பாபாவோ பாஷாவோ தெரியல..... ஆனால்,  குகை மனிதர்கள் வரைந்து வைத்து இருந்த சில drawings  தெரிந்தன.....  கவனிக்க:  paintings என்று நான் சொல்லவில்லை.... அப்புறம், எல்லோரா - அஜந்தா - ரேஞ்சுக்கு நீங்க கற்பனை பண்ணிடாதீங்க....  அந்த காலத்துல,  குகைகளின் உள்பக்க சுவர்கள் தான்,  அவர்களுக்கு  ப்லாக் ஸ்பாட் போல..... ஒரு கூர்மையான ஆயுதம் வைத்து, என்ன என்னவோ வரைந்து வைத்து இருந்தாங்க.... பாதி புரிந்தன. பாதி புரியல....   ஹா,ஹா,ஹா,ஹா.....

குகை வாழ் மனிதர்கள் இருந்த இடத்தில்,  நான் நிற்கிறேன் என்கிற பீலிங்க்ஸ் வந்துச்சு பாருங்க...... அட....அட..... அது சொன்னா புரியாது..... காதல் வந்த நெஞ்சம் மாதிரி, அப்படியே உணர்ந்து பார்க்கணும்.... ஹி, ஹி, ஹி, ஹி, ஹி....  இதுக்குத்தான் திருமண நாள் கொண்டாட்டத்தை ஒட்டி டூர் அடிக்கக் கூடாது..... இப்படித்தான் எழுத வருது....


 சரி, இப்போ  எங்கே விட்டேன்? ..... ஆங்..... ஏணியை விட்டேன்.... ச்சே.... ஏணி பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன்....  அந்த காலத்துல,   ஆபத்து நேரங்களில், இந்த ஏணிகளை, குகைக்குள் ஏறி விட்டு உள்ளே இழுத்து வைத்து கொள்வார்கள்.  ஏணிகளை பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் மட்டும் தான் பயன் படுத்தி இருக்கின்றனர். கூட்டத்தில் உள்ள இளைஞர்கள்,  ஏணி இல்லாமலே  மலையில் தங்கள் குகைகளுக்கு,  குரங்கு மாதிரி  ஏறி விடும் வகை தெரிந்து இருந்தார்களாம்.  பயமில்லாமல், மளமளனு அவங்க எப்படி ஏறி இருப்பாங்கனு நினைத்து பார்த்த போது அதிசயமா இருந்துச்சு...  அப்படி ஏறி பார்க்க ட்ரை பண்ணினியானு கேப்பீங்க?  இஃகி ..... இஃகி .... பதில் சொல்ல மாட்டேனே.....


இன்னும், சுவாரசியமான விஷயம் என்னவென்றால்,   கீழே இருந்து பார்க்கும் போது குகை மாதிரி பல ஓட்டைகள் மலையில் தெரியும்.  ஆனால், எது குகையின் வாசல், எது குகையின் சன்னல், எது எதிரிகளை ஏமாற்ற குகை போல அமைக்கப்பட்ட ஓட்டைகள் என்று கண்டுப்பிடிக்க முடியாது.  தவறான வழியில் ஏறி விட்டால்,  பாம்புகள் வாழும் பொந்துக்குள்  கை விட்டு விட்டு,  ஒரேயடியாக  போய் விட வேண்டியதுதான்.   இல்லை,  சரியான பிடிமானம் இல்லாமல், கீழே விழுந்து, அப்புறம் - லிப்ட் இல்லாமலே மேலோகம் போக வேண்டியதுதான்.
Rattle snake: 
 சிலந்தி பூச்சியின் சைஸ் பார்த்தீங்களா?  இது கடிச்சுதுனா ..... யம்மாடி!

வீட்டுக்கு வீடு வாசப்படி என்று நாம் சொல்கிற  மாதிரி, அவங்க சொல்லும் போது - மலைக்கு மலை நோ வாசப்படி என்று சொல்லி இருப்பாங்களோ?  


மேற்கொண்டு விவரங்கள் தெரிந்து, உங்கள்  பொது அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள:  

http://en.wikipedia.org/wiki/Bandelier_National_Monument


இப்படி பல சுவாரசியமான இடங்கள், நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் உண்டு....  எல்லாத்தையும் சொல்லி,  உங்களை "கடிச்சு "  வைக்க விரும்பல.... ஆனால்,  அதில் வெகு முக்கியமாக இன்னும் ஒரே  ஒரு இடத்தை மட்டும் விரைவில் சொல்லிவிட்டு நியூ மெக்ஸிகோ தல சுற்றுலா புராண கதையை முடிச்சிக்கிறேன்....  ஓகேவா? 

பின் குறிப்பு:  நான் எடுத்த படங்கள்.... பர்சனல் ..... அதான், கூகிள் ஆல்பத்துல கைவச்சுட்டேன்.


165 comments:

அஞ்சா சிங்கம் said...

ஐ முதல் வெட்டு

Ramesh said...

அருமையான தகவல். அறியாத தகவல் நன்றிங்கோ..

அஞ்சா சிங்கம் said...

என்ன ரொம்ப பொறாமை பட வைக்கிறீர்கள் ..........

அந்த இடத்துக்கு எங்க ஊருல இருந்து ஆட்டோ வசதி இல்ல இருந்தான் நல்லாஇருக்கும் ..............

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
சரி, இப்போ எங்கே விட்டேன்? ..... ஆங்..... ஏணியை விட்டேன்.... ச்சே..

ஹ ஹா செம காமெடி பஞ்ச்

சி.பி.செந்தில்குமார் said...

பயணக்கட்டுரை நடை உங்களுக்கு நல்ல வருது சித்ரா

tamilan said...
This comment has been removed by a blog administrator.
சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப கம்மியா பதிவு போட்டும் குவாலிட்டி பதிவர் கேட்டகிரியில் 19வது இடம் பெற்றமைக்கு (தமிழ்மணம்) வாழ்த்துக்கள்

S Maharajan said...

அறியாத தகவல்
நன்றி அக்கா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல தகவல்கள். எங்களுக்கு டிக்கெட் எடுத்து கூப்டு போனீங்கன்னா பார்த்துட்டு இந்த பதிவுக்கு கருத்து சொல்ல வசதியாக இருக்குமே.

சசிகுமார் said...

அம்மாடியோ நீங்க வீட்லயே இருக்க மாட்டீங்களா சம்பாதிக்கறத எல்லாம் இப்படி ஊர் சுற்றியே காலி பண்ணிடுவீங்க போல இருக்கே ஹா ஹா ஹா. உங்க புண்ணியத்துல நாங்கெல்லாம் எதுவுமே செலவழிக்காம ஒரு சூப்பர் Guide உதவியுடன் அனைத்தையும் சுற்றி பார்க்கிறோம் நன்றி அக்கா. உங்களால் நிறைய இடங்களை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. நாங்கல்லாம் அமெரிக்கா வரமுடியுமோ இல்லையோ அப்படி வந்தா முதலில் காண்டக்ட் பண்ண வேண்டியது உங்கள தான். உங்கள் சேவையை தொடருங்கள் அக்கா நன்றி மீண்டும்.

எல் கே said...

அறியத் தகவல்கள் சித்ரா. பூர்வக் குடிகள் என்று சொல்லலாம்

குறையொன்றுமில்லை. said...

படங்களும் நீங்க, தகவல்களை பகிர்ந்து கொள்ளும் அழகும் எங்களையும் உங்க கூடவே கூட்டிச்செல்வதுபோல இருக்கு.

Asiya Omar said...

நாங்களும் குகையை பார்த்துட்டோமே!நீங்க சுற்றி காட்டி தான்.குகையில் யாரு இருந்தாங்க,பழங்குடி மக்கள்-natives அர்த்தம் இது தான்.
பகிர்வுக்கு மகிழ்ச்சி.

G.M Balasubramaniam said...

இந்த மாதிரி குகைகள் இயற்கையிலேயே இருந்ததா.. இல்லை இவர்களால் ஏற்படுத்தப்பட்டதா.?அறைகள் சன்னல்கள் என்றெல்லாம் இருப்பதால் வந்த சந்தேகம்...

சமுத்ரா said...

arumai chitra

கோலா பூரி. said...

அமெரிக்கா, வாவ், அமெரிக்காதான். உங்க தயவுல நாங்களும் எல்லா இடங்களும் சுற்றிப்பாக்கரோம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அறியாத அருமையான தகவல் சகோதரி,,...

மங்குனி அமைச்சர் said...

பரவா இல்லையே பழசெல்லாம் மறக்காம நீங்க சின்ன வயசுல வாழ்ந்த உங்க பழைய வீட்ட போயி பாத்திட்டு வந்திருக்கிங்க

Chitra said...

சத்தம் போட்டு சிரிச்சேன்.... பக்கத்து வீட்டுல இருந்த உங்களைத் தவிர வேற யாருக்கும் இது தெரிய வாய்ப்பில்லை.... ஹா,ஹா,ஹா,ஹா....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நம்மளே நேர வந்து குகைய சுத்திப் பார்த்த மாதிரி இருக்குங்க மேடம்! கொஞ்சம் பாம்பு கத சொல்லி பயமுறுத்திட்டீங்களே

Prabu M said...

சூப்பர்க்கா....
நியூமெக்ஸிகோ ட்ரிப் அடிச்சுட்டோம் நாங்களும் உட்கார்ந்த இடத்திலிருந்தே!
இது மிகவும் அருமையான புதுமையான ஒரு பயணக்கட்டுரைத் தொகுப்பு... நிச்சியமா!

சிநேகிதன் அக்பர் said...

ஊர்க்காரங்க... அப்படின்னு சொல்லலாமா. (அப்ப நாங்கல்லாம் காட்டுவாசியான்னு கேட்க கூடாது :))

அந்த காலத்து ஆட்கள் ரொம்பதான் ரிஸ்க் எடுத்து இருக்காங்க.

நல்ல சுவாரஸ்யமான கட்டுரை சகோ.

அடுத்த கட்டுரையை எதிர்பார்த்திருக்கிறோம்.

Karthick Chidambaram said...

சரி, இப்போ எங்கே விட்டேன்? ..... ஆங்..... ஏணியை விட்டேன்.... :))))

MANO நாஞ்சில் மனோ said...

உங்க கூடவே பயணித்த ஒரு ஃபீலிங்.......
ஐ நான் அமெரிக்காவுலதான் இருக்கேன் இப்போ.....

MANO நாஞ்சில் மனோ said...

//குகை வாழ் மனிதர்கள் இருந்த இடத்தில், நான் நிற்கிறேன் என்கிற பீலிங்க்ஸ் வந்துச்சு பாருங்க//

ம்ம்ம் கற்காலம் ஃபீலிங்க்ஸ்......ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த குகை வீடுகளில், பல அறைகள் இருந்தது,//

அந்த காலத்து மக்கள் அறிவாளிங்க பாஸ்.....

MANO நாஞ்சில் மனோ said...

//தலைப்பை பார்த்து விட்டு, ஏதோ இமய மலை குகைக்குப் போயிட்டேன்னு நினைக்காதீங்க//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...........
ஆரம்பமே லொள்ளா....

Unknown said...

அருமையான தகவல்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

//மலைக்கு மலை நோ வாசப்படி என்று சொல்லி இருப்பாங்களோ?//


இது புதுசா இருக்கே....

ராமலக்ஷ்மி said...

அழகான படங்கள், தகவல்களுடன் அருமையான பகிர்வு சித்ரா.

ஸாதிகா said...

அறிய தகவல்கள்.வினோதமாக இருந்தது.பகிர்வுக்கு நன்றி சித்ரா.

middleclassmadhavi said...

பழமையான குகைகள் பற்றி (எனக்கு) புதுமையான தகவல்கள், நன்றி

Sukumar said...

As Usual Nice Post..!!

அமுதா கிருஷ்ணா said...

நாங்களும் குகைக்கு போனோமே.

இராஜராஜேஸ்வரி said...

நானும் அமெரிக்கா சென்று வந்துவிட்டேன்.

வலைப் பதிவு மிக நன்று
வாழ்த்துக்கள்!!

raji said...

அட!சுவாரசியமா இருக்கே

//அப்படி ஏறி பார்க்க ட்ரை பண்ணினியானு கேப்பீங்க? இஃகி ..... இஃகி .... பதில் சொல்ல மாட்டேனே.....//

நான் புரிஞ்சுகிட்டேன்.

//சத்தம் போட்டு சிரிச்சேன்.... பக்கத்து வீட்டுல இருந்த உங்களைத் தவிர வேற யாருக்கும் இது தெரிய வாய்ப்பில்லை.... ஹா,ஹா,ஹா,ஹா....//

சத்தியமா எங்களுக்கெல்லாம் நீங்க சிரிச்சது கேக்கவே இல்லைப்பா

VELU.G said...

ரொம்ப அருமையான தகவல்கள் படிக்கும் போதே நேரில் பார்க்கும் ஆசை வந்து விட்டது. ஒரு பிளைட் டிக்கெட் எடுத்து கொடுத்தீங்கன்ன உங்க செலவிலேயே வந்து போய் விடுவேன். ஹ ஹ ஹ ஹ ஹா


//எல்லாத்தையும் சொல்லி, உங்களை
"கடிச்சு " வைக்க விரும்பல....
//

ஆமாங்க அந்த பெரிய சிலந்தி கடிச்சா விஷந்தாங்க

Mythili (மைதிலி ) said...

நல்ல தகவல்... வர வர நிறைய புதிய தகவல்கள் தர்ரீங்க...நாம்முடைய மூதாதையர்கள் எப்படி இருந்தாங்களோ??

Mythili (மைதிலி ) said...

நல்ல தகவல்... வர வர நிறைய புதிய தகவல்கள் தர்ரீங்க...நாம்முடைய மூதாதையர்கள் எப்படி இருந்தாங்களோ??

Anonymous said...

உங்க பதிவுகளை தொடர்ந்து படித்தால் போதும் அமெரிக்கா பற்றி மொத்தமா நாங்க தெரிந்து கொள்ளலாம்..கண்ணை இமைக்காமல் பார்த்தேன்..சூப்பர்ங்க..

நாஸியா said...

அந்த எட்டுக்கால் பூச்சிக்கு எட்டே கால் தானா? எண்ணி பார்த்தீங்களா?

வெட்டிப்பேச்சு said...

அருமையான பதிவு.

வாழ்த்துக்கள்.

RVS said...

நல்ல பகிர்வு. நன்றி. ;-)

சுந்தரா said...

சுவாரஸ்யமான கட்டுரை சித்ரா.

//அமெரிக்காவில் அவர்களை செவ்விந்தியர்கள் - Red Indians - என்று தற்பொழுது அழைப்பதில்லை. //

நாம சொந்தம்கொண்டாடிருவோம்னு நினைச்சுட்டாங்களோ?

சாந்தி மாரியப்பன் said...

சுவாரஸ்யமா இருந்தது சித்ரா.

ஸாதிகா said...

நான் இட்ட பின்னூட்டம் எங்கே?

suneel krishnan said...

பூர்வ குடிகள் அப்டின்னு சொல்லலாம் :)
இந்த எடத்த பத்தி கேள்வி பட்டுருக்கேன் ..இங்க இந்த குகைகளை வேற்று க்ரஹா வாசிகள் உருவாக்கினாங்க அப்டின்னு ஒரு பிட்டு எங்கயோ வாசித்தது மாறி இருக்கு .இன்னும் மத்த எடங்கலையும் சுத்திட்டு எழுதுங்க .

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான பதிவுக்கு"சித்ரா"
அவர்களை"மண்ணின் மைந்தர்கள்"
அப்படீன்னு சொல்லலாமா சித்ரா?
பார்க்க ட்ரை பண்ணினியானு கேப்பீங்க? இஃகி ..... இஃகி .... பதில் சொல்ல மாட்டேனே.....எம்.ஜி.ஆர் படிகட்டிலேறியா போவார்? ஆலமரத்தின்
விழுதைப்பிடித்துத்தானே அரண்மனைக்குள்ளேயே எண்ட்ராவார்?

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

ஆனந்தி.. said...

அருமையான பயண தொகுப்பு ...குகை பயணம் உங்களுக்கு செம திரில் ஆ இருந்து இருக்கும் இல்லையா..ஆமாம்..மக்கா..நீங்களும் அந்த ஏணியில் ஏறி உள்ளே போயி பார்த்திங்களா..ஏணிக்கு ஒண்ணும ஆகலை தானே ஹ ஹ....ஆசியா ஓமர் சொன்னது மாதிரி பழங்குடி மக்கள் னால் -tribes னு சொல்வோம்..LK சொல்றது மாதிரி பூர்வ குடி நும் சொல்லலாம் தான் தோணுது...ஐயோ...அந்த சின்ன சின்ன ஓட்டை ல பாம்பும் இருக்குமோ...நல்லா இருந்தது எங்களுக்கும் இந்த ட்ரிப்..அட நீங்க ஓசியில் ஊரு சுத்தி காமிச்சதை தான் சொன்னேன்..அதுவும் அவங்க வரஞ்ச கிறுக்கல்ஸ்..ப்ளாக் ஸ்பாட் வுடன் உவமையா சொன்னது செம டைமிங்..(என் ப்ளாக் ஸ்பாட் கிறுக்கல்ஸ் தானே மனசுக்குல் வச்சு சொன்னிங்க..:)) ) சூப்பர் அம்மு...

Gayathri Kumar said...

Very interesting!

மாதேவி said...

அருமையான குகை. தகவல்களுக்கு நன்றி.

Jana said...

அஜந்தா, சிகிரியா குகைள் பற்றி கேள்விப்பட்டதுண்டு. இப்போ இது பற்றியும் அறியவைத்துள்ளீர்கள். மேலும் பல இரசிக்கும் இடங்களுக்கு நீங்கள் போக நான் பிரார்த்திக்கிறேன்.

ஹேமா said...

நீங்க சொல்றப்போ நாங்களும் போய்வந்த திருப்தி சித்ரா !

வைகை said...

இதையெல்லாம் போட்டோவுலயாவது பார்த்துக்கிறோம்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல தகவல்..
வாழ்த்துக்கள்..

எப்பூடி.. said...

சிறப்பான பதிவு, நன்றி.

Unknown said...

ஏதோ நம்ம ஊரு கரையான் புற்றுமாதிரி இருக்குது. அவங்க ஏன் ஸ்ட்ராங்கா இருக்காங்கன்னு இப்பதான் புரியுது. இதுல ஏறி இறங்குறதே பெரிய விஷயம்தான்.

arasan said...

தகவல்களை வழங்கி எங்களை வியப்பில் ஆழ்திவிட்டிர் ...
இன்னும்ம் நிறைய நாங்க எதிர் பாக்குறோம் ...
நேரம் கிடைக்கும் போது சொல்லுங்க மேடம்

Anonymous said...

சூப்பர் அனுபவமா இருக்கே

Anonymous said...

அவ்வளவு தூரம் ஏணியில ஏறணும்னு நினைச்சாலே உதறுது யப்பா

பழமைபேசி said...

பூர்விக அமெரிக்கக் குடியினர்!!!

Riyas said...

nice post.. very interesting

Kurinji said...

really very informative..

mightymaverick said...

native என்பதை மண்ணின் மைந்தர்கள் என்றும் கூட சொல்லலாம்...

R. Gopi said...

சிங்கம் புலி எல்லாம் எங்க போச்சு? குகைலதான இருக்கும்:-)

thenikari said...

hai chitra,
I'm following your blog for more than six months.very nice.nalla enjoy pannunga.pala naadukal suthi vara vazhthukal.Thanks.

ADHI VENKAT said...

பார்க்க பார்க்க பிரமிப்பா இருக்கு. நல்லா என்ஜாய் பண்ணீங்களா? பகிர்வுக்கு நன்றி சித்ரா.

KParthasarathi said...

படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. பாம்பு தான் கொஞ்சம் பயமூட்டி விட்டது.

தெய்வசுகந்தி said...

நிறைய இடம் சுத்தி காட்டறீங்க சித்ரா!!

goma said...

பிலோ இருதயநாத் உங்க தாத்தாவா...

settaikkaran said...

குகையிலே இருந்தபோது கூட, தன் குடும்பம், தன் வீடுன்னு மனிசன் எம்புட்டு சாக்கிரதையா இருந்திருக்கான்னு புரியுது. படமெல்லாம் படு சூப்பர்!

//மேற்கொண்டு விவரங்கள் தெரிந்து, உங்கள் பொது அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள://

இதுக்கு மேலே மூளை வளர்ந்தா,பக்கத்துலே இருக்கிறவர் மண்டையிலே கொஞ்சம் இடம் வாடகைக்கு எடுக்க வேண்டி வருமுன்னு டாகுடரு சொல்லிட்டாரு! :-)

சுவாரசியமான இடுகை! படங்கள் அபாரம்!! :-)

vanathy said...

நேட்டிவ் அமெரிக்கர்கள் - பூர்வ குடிகள்.
very nice post & photos.

ராஜவம்சம் said...

மனிதர்கள் ரசித்து வாழ்ந்திருகிரார்கள் நீங்களும் ரசித்து எழுதியிறுகிறீர்கள் நானும் ரசித்துப்படித்தேன் பாம்பு சிலந்தி பயத்துடன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான தகவல்... அதைவிட அறியாத தகவல் பகிர்வுக்கு நன்றி அக்கா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அதில் ஏறிப் போய் குகைக்குள்ள பார்த்த போது ..... பாபாவோ பாஷாவோ தெரியல....//

ம்...கிண்டல் ரொம்ப அதிகமாப் போச்சு...சிட்டியை அனுப்ப வேண்டியதுதான் :)))

அருமையான தகவல் chitra

ஸ்ரீராம். said...

ரொம்ப சுவாரஸ்யமான இடங்கள். உங்கள் கண்களாலும், எழுத்தாலும் எங்களையும் பார்க்க வைத்தமைக்கு நன்றி. Native Americans = ஆதி அமெரிக்கர்கள்...!!!

கும்மாச்சி said...

நல்ல பதிவு சித்ரா. தொடரட்டும்.

Menaga Sathia said...

very interesting post!!

சாருஸ்ரீராஜ் said...

நல்ல தகவல்கள்

pichaikaaran said...

குகை பெயிண்டிங்கை , பிளாக் ஸ்பாட்டுடன் ஒப்பிட்டது மிக மிக அருமை...

எல்லாம் அருமை என்றாலும் இந்த வரி எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது

Anonymous said...

குகைகளின் உள்பக்க சுவர்கள் தான், அவர்களுக்கு ப்லாக் ஸ்பாட் போல.....

எங்க போனாலும் ப்ளாக் ஞாபகம் வந்துவிடுகிறதா?

பாம்பு புத்து மாதிரி பார்க்கவே பயமா இருக்கு..

செங்கோவி said...

பூர்வீக அமெரிக்கர்கள் வாழ்ந்த குகை அனுபவம் சூப்ப்ர்..!

உணவு உலகம் said...

வித்தியாசமான தகவல்கள், விரிவாக தந்த உங்கள் கோணம் சூப்பர். ஆங்காங்கு தூவியுள்ள,
நகைச்சுவை கலந்த பகிர்விற்கு நன்றி.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Interesting post.. very nice photos !

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Interesting post.. very nice photos !

தமிழ்க்காதலன் said...

விளங்கிடுசுக்கா...... உங்க சுற்றுலாவும் அதற்கான காரணம், அதுசரி...... அங்க என்ன பாம்பு கூட விளையாட்டு... உண்மைய சொல்லுங்க.. பாம்பு உங்கள கண்டு பயந்து போய் அழுதுறுக்குமே... அப்புறம் நீங்க கேட்டதுக்கு பதில்..
native - அப்படின்னா "பூர்வீகம்" என்று அர்த்தம்.

மோகன்ஜி said...

சித்ரா! நீங்க அங்கப் போய் அனுபவித்த சந்தோஷத்தை,உங்கள் பதிவைப் படித்து நானும் பெற்றேன். அழகான புகைப் படங்கள்

Saraswathi Ganeshan said...

Superb Chitra, Very informative & marked it...

GEETHA ACHAL said...

அருமையாக இருக்கின்றது...அடுந்த project New Mexicoவில் கிடைத்தால் நல்லா இருக்குமே...இப்படி ஓவ்வொரு இடத்தினை காட்டி பார்க்க ஆசையினை கிளப்புறிங்க...

வருண் said...

***ஒரு டவுட்டு: native என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன?***

"பூர்வீகம்"னு சொல்லலாமா? பூர்வீக குடிமக்கள் னு சொல்லலாமா? பின்னூட்டத்தில் டாக்டர் சுனீல் கிருஷ்ம்மும் அப்படித்தான் சொல்லியிருக்காரு.

"ராட்டில் ஸ்னேக்" நம்ம ஊர்ல கெடையாதுனு நெனைக்கிறேன். ஆனால் நம்ம ஊர் "நல்ல (நாகம்) பாம்பு" அளவுக்கு விஷம் அதிகம்னு சொல்லுவாங்க!

சுசி said...

எவளவு அற்புதமா இருக்கு சித்ரா. பகிர்வுக்கு ரொம்ப நன்றி.

எம் அப்துல் காதர் said...

ஏணிப்படியெல்லாம் புடுச்சுக்கிட்டு கீழே விழுந்திடாம மேலே போகனுமா,, நா வரல இந்த ஆட்டத்துக்கு?? பார்த்திட்டு நீங்க சொன்ன விஷயமே கோடிபெறும் டீச்சர்!!

Anonymous said...

>>> Very Informative..Sister!!

Yaathoramani.blogspot.com said...

நல்ல பதிவு தெரியாத தகவல்கள்
பல தெரிந்துகொள்ள முடிந்தது
மிக அக்கரையுடனும் மிகத்தெளிவாகவும்
படங்களுடனும் உங்கள் பதிவு எங்களை
பிரமிக்க வைக்கிறது நன்றி
தொடர வாழ்த்துக்கள்
செவ்விந்தியர்களை
பூர்வீகக் குடிகள் எனச் சொல்லலாமா?

Philosophy Prabhakaran said...

// பின் குறிப்பு: நான் எடுத்த படங்கள்.... பர்சனல் ..... அதான், கூகிள் ஆல்பத்துல கைவச்சுட்டேன். //

So sad...

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

அன்புள்ள சித்ரா மேடம்,வணக்கமும், எமது வலைப்பூவிற்கு வந்ததற்கு எம் நன்றியும்...உங்கள் வலைப்பூவில் வந்திருந்த மெக்சிகோ குகை தகவல்கள் மிகவும் சுவாரஸ்யம். நாம் தற்போது படித்துக் கொண்டிருக்கும் "வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற மொழிபெயர்ப்பு கதையை ஒட்டிய தகவல்கள் நீங்கள் தந்தவை...அதற்காக பிடித்துக் கொள்ளுங்கள் மீண்டும் ஒரு நன்றி......ஒ ...மறந்து விட்டேனே.... (காலம் தாழ்த்தியதாக இருந்தாலும் ) திருமண நாள் நல் வாழ்த்துகள் !

shammi's blog said...

interesting one .....

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

very nice pictures , useful info.
Felt like we were there.

Thanks for sharing.

Vidhya Chandrasekaran said...

புகைப்படங்கள் அருமை. பகிர்விற்கு நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

அருமையான அறியாத தகவல்....

Anonymous said...

தகவல்களும் புகைப்படங்களும் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன..
வாழ்த்துக்கள் சித்ரா.
பகிர்விற்கு நன்றி.

Unknown said...

நல்ல பதிவு !
வாழ்த்துக்கள் !

Ramesh said...

அதிசியக்கத்தக்க புதுப்புது சுவாரஷ்யத் தகவல்களா அள்ளி விடறீங்களே... அருமை.. நீங்க ஏன் இதெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமா வெளியடக்கூடாது?

போளூர் தயாநிதி said...

அறியாத அருமையான தகவல்நேர வந்து குகைய சுத்திப் பார்த்த மாதிரி இருக்குங்க
உங்கள் சேவையை தொடருங்கள் நன்றி

சென்னை பித்தன் said...

என் முதல் வருகை!(நீங்க சொல்வதற்கு முன் நானே சொல்லி விட்டேன்!)
ரொம்ப சுவாரஸ்யமான பதிவு. படிக்கத் தூண்டும் நடை!நன்று.

மதுரை சொக்கன் said...

அமர்க்களமாக இருக்கிறது!

Ram said...

//நியூ மெக்ஸிகோ மாநிலத்தில், லாஸ் அலமோஸ் (Los Alamos) //

ஓ அதுவா.??? சரி சரி..

இப்படியெல்லாம் பதிவு போடுறதுக்கு அப்படியே டிக்கெட் எடுத்து அனுப்பிவச்சா நல்லாயிருக்கும்..

sakthi said...

குடுத்த வைத்த மகராசி கண்ணு படப்போகுது சுத்தி போட்டுக்குங்க சித்ரா

Malar Gandhi said...

Thats a good information...had no clue about this dwellings. Good that you also shared a link...will trail to it, love to buff knowledge about it. Hope you guys enjoyed ur trip...belated Anniversary wishes:)

Thenammai Lakshmanan said...

ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்.. நு டூயட் பாடினியா சித்து.. ஹிஹிஹி.. சரி தொகுத்து ஒரு புக்காக போடலாம் .. நிஜமாதான் சித்து..:))

Unknown said...

great beginning..

FARHAN said...

ஓசில அமெரிக்க குகைகளை சுத்தி காட்டிடீன்களே

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான தகவல் .
தகவலுக்கு நன்றி

CS. Mohan Kumar said...

Interesting.

அம்பிகா said...

அழகான படங்கள், தகவல்களுடன் அருமையான பகிர்வு சித்ரா.

Suni said...

sooper.
தலைவர் வழி follow பண்ணி நீங்களும் பேரும், புகழும் கிடைத்ததும் அமைதி தேடி இமயமலைக்கு போயிட்டீங்களோனு நினைச்சேன்.

Priya dharshini said...

119 comments...ammadi,neenga rompa periya aal,enaku 20 comment vanthale athusayam,mexico tour round up super..

ஜோதிஜி said...

நக்கல் சித்ரான்னு மாத்தி யோசித்து பார்க்கின்றேன்.

Avargal Unmaigal said...

அந்த காலத்தில் இதயம் பேசுகிறது என்ற வார இதழில் ஆசிரியர் மணியன் என்பவர் பயணக்கட்டுரை எழுதுவார். அது போல உங்கள் கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் அவர் வெளி நாட்டை சுற்றிவந்து பயணக்கட்டுரை எழுதுவார் ஆனால் நீங்க உள் நாட்டை சுற்றிவந்து பயணக் கட்டுரை எழுதுகிறீரகள்( அமெரிக்கா நமக்கு எல்லாம் உள் நாடுதானே...ஹி..ஹீ. ஹீ) அடுத்த பதிவு போடும் போது வெளி நாட்டை பற்றி எழுதுங்க( அதுதாங்க நான் தமிழ் நாட்டை பற்றி சொல்லுறேண்க.) அந்த நாட்டுல்ல ஊழல் கோடிகணக்கா பண்ணா தப்பு இல்லையாமே அது உண்மைதானுங்க?

Unknown said...

படங்கள் அழகு....பதிவு பொது அறிவு..!!

ஆயிஷா said...

அழகான படங்கள்,அருமையான பகிர்வு.

Pranavam Ravikumar said...

Quite informative...! Very nice pics too. My wishes..

கோமதி அரசு said...

அருமையான தகவல்கள் சித்ரா.

அழகு படங்கள், ஏணியில் ஏறும் காட்சிப் படம் திகிலாக இருக்கு.

Jaleela Kamal said...

ரொமப்ப் நல்ல இருக்கு ஆனால் பயமாவும் இருக்கு

Jaleela Kamal said...

ஏணி ல ஏறும் போது வழுகிவிட்டால் என்ன செய்வது

Saravanakumar said...

நீங்க அமெரிக்கால இருக்கீங்களா .நமக்கு ஒரு அமெரிக்க நண்பர் கூட இல்ல நாம நட்பாவோமா.மற்றபடி அருமையான பதிவு...

Muruganandan M.K. said...

புதிய விடயம் என்னைப் போல கடல் கடக்காத ஜன்மங்களுக்கு. மிகச் சுவார்சமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நேட்டிவ் என்பதை சுதேசி எனச் சொல்லுவார்கள் என நினைக்கிறேன்.
பகிர்ந்து கொள்கிறேன் Facebook ல்

சத்ரியன் said...

சித்ராக்காவுக்கு ஒரு கமெண்ட் எழுத எத்தன படி இறங்கி வரவேண்டிருக்கு...!

அதெப்புடிக்கா... “காதல் வந்த நெஞ்சு மாதிரின்னா...?

சூப்பர் பயணம் அக்கா.

இன்றைய கவிதை said...

உங்கள் கட்டுரை அருமை

கொஞ்சம் அகராதியில் பார்த்ததில் native என்றால்

native உடன் பிறந்த
native states , சுதேச அரசுகள்
native நிலையான வாழ்விடம் , பிறப்பிடம்
native : பிறப்பினாலே சொந்தமான , பிறப்பிலேயே ஏற்பட்ட

என்று வந்தது

ஒரே ஒரு கேள்வி எப்படி அவ்வள்வு உசரத்துக்கு போய்ட்டு வந்தீங்க ,

போய் பார்க்கனும் போல இருக்கு

நன்றி
ஜேகே

அமுதா said...

interesting.... ஜன்னலோட குகை... ஏணியைப் பார்த்தாலே தலை சுத்துதே!!!!

ப.கந்தசாமி said...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ, பெரிய்யய்யய்யய்யய்யயய பதிவர் போல இருக்கு. தெரியாம நொழைஞ்சுட்டேன். மன்னிச்சுக்குங்க.

சக்தி கல்வி மையம் said...

அருமையான தகவல். அறியாத தகவல் நன்றி..

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க மறந்துடீங்க போல...

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

Unknown said...

அக்கா,தகவலுக்கு நன்றி.
நீங்கள் Subscribe via email ஐ உங்கள் வலைப்பதிவில் இணைத்தால் உடனுக்குடன் பதிவைப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.
தயவு செய்து இதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

priyamudanprabu said...

காதல் வந்த நெஞ்சம் மாதிரி, அப்படியே உணர்ந்து பார்க்கணும்.... ஹி, ஹி, ஹி, ஹி, ஹி....
/////////

hayyo hayyo...

priyamudanprabu said...

நன்றிங்கோ..

Sathish said...

அதன் பயமுறுத்துற இடம்னு வேற போட்டு இருக்கீங்க. அங்க ஏன் போனிங்க? எங்கள பயமுறுத்தவா?

Chitra said...

Nice pics. nalla info. First time here. u have an entertaining blog :)

Shanthi Krishnakumar said...

Informative and useful post

Unknown said...

அறியத்தகவல்களுக்கு நன்றி சகோ

ம.தி.சுதா said...

அழகான குகை அருமை அருமை.. அதற்கள் பாம்பைக் காட்டி கிடுகிடுக்க வச்சிட்டிங்களே...

சிவகுமாரன் said...

பகிர்வுக்கு நன்றி.
பூர்விக அமெரிக்கர்கள் என்று சொல்லலாமா ?

Prabu Krishna said...

சுத்திபாத்தாச்சு மேடம்.

Unknown said...

native என்பதை பூர்வீகம் என்று தமிழாக்கலாம். இப்போதெல்லாம் நடைமுறையில் இருப்பிடம் என்று அளவில் தான் பயன்படுத்துகிறார்கள்.

Unknown said...

அப்ப அதெல்லாம நீங்க எடுத்த படம் கிடையாதா?

நீங்கள் படம் எடுத்திருந்தா ஒரு வேள அந்த பாம்பு சுருண்டு கிடக்காமல் அதுவும் படம் எடுத்திருக்குமோ?

Unknown said...

//நீங்க வீட்லயே இருக்க மாட்டீங்களா சம்பாதிக்கறத எல்லாம் இப்படி ஊர் சுற்றியே காலி பண்ணிடுவீங்க போல இருக்கே //
Rightuuuuu...

Prasanna said...

நலமா.. எப்படி அந்த கொஞ்சம் Natives தப்பிச்சாங்கன்னு தெரில.. பாவம்..

அன்புடன் நான் said...

படங்கள் அனைத்தும் மிக மிக நேர்த்தி... பாராட்டுக்கள்.

அன்புடன் நான் said...

இவ்வளவோ நாள் இத பாக்காம போயிட்டேன்.... வருந்துகிறேன்.

அன்புடன் நான் said...

குகையும் குகைசார்ந்த... பகிர்வும் படிக்கவே பிரமிப்பா இருந்தது.

அன்புடன் நான் said...

தகவல் சொன்னவிதம் அருமை.

அன்புடன் நான் said...

நீங்களும் கொஞ்ச நேரம் செவ்விந்தியரா வாழ்ந்திருக்கிங்க???

அன்புடன் நான் said...

அந்த நேட்டிவ்க்கு தமிழ்ல “பூர்வ குடி” அல்லது பூர்வீகம் அப்படின்னு சொல்லலாம்.

அன்புடன் நான் said...

அந்த இரண்டாவது படத்துல ... எவ்வலவுதேடியும் உங்கள காணலையே?????

கிரி said...

Red Indians என்று ஏன் பெயர் வந்தது என்று கூகிள் ல் ஆராய்ச்சி செய்ய ஆசை...சோம்பேறித்தனம் :-) எனக்கு இவங்க சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் ரொம்ப பிடிக்கும்.. . கண்டிப்பாக குதிரை சேசிங் இருக்கும் ..அதில் பெஸ்ட் என்றால் மெக்கானஸ் கோல்ட் படம்..

இங்கே சென்று வந்தால் ஒரு நல்ல (த்ரில்லிங்கான) அனுபவம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்

Anonymous said...

thtz quite a writeup.maybe I shuld make a visit to this place.

I stumbled on ur blog and loved the valentineday special post about ur hubby, pretty impressive.
I was quite takenaway by the support and inspiration ur hubby has provided you which isnt very usual. Quite a lucky lady you are.
my hubby hates me blogging does everything he can, to sabotage or stop me from writing -juz kidding!
keep up the good work!

Anisha Yunus said...

//குகை வாழ் மனிதர்கள் இருந்த இடத்தில், நான் நிற்கிறேன் என்கிற பீலிங்க்ஸ் வந்துச்சு பாருங்க...... அட....அட..... அது சொன்னா புரியாது..... காதல் வந்த நெஞ்சம் மாதிரி, அப்படியே உணர்ந்து பார்க்கணும்.... //

athaiyethan antha kugai vaazh manithargaLum sonnanga. "enga edaththula avanga vanthu ninnappa eppadi irunthirukkumnu"... he he he

சக்தி கல்வி மையம் said...

சீக்கிரம் புது பதிவை போடுங்க..

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதன் முதலாக இன்று தான் வருகை தந்து, உங்களின் ”குகைக்குப் போனோமே” படித்தேன். உலகின் ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு ஆச்சர்யமான விஷயங்கள்! மிகவும் அருமையாக, நகைச்சுவையாக, த்ரில்லிங்காக எழுதியுள்ளீர்கள். என் மனமார்ந்த பாராட்டுகள். gopu1949.blogspot.com

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த contextல் Native என்ற வார்த்தைக்கு தமிழாக்கம் "பூர்வகுடி" னு நினைக்கிறேன்... நல்ல போஸ்ட்...நல்ல போட்டோஸ்... ஷேர் பண்ணினதுக்கு நன்றிங்க சித்ரா...:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த contextல் Native என்ற வார்த்தைக்கு தமிழாக்கம் "பூர்வகுடி" னு நினைக்கிறேன்... நல்ல போஸ்ட்...நல்ல போட்டோஸ்... ஷேர் பண்ணினதுக்கு நன்றிங்க சித்ரா...:)

Guru said...

பூர்வீக குடிகள் என்று சொல்லலாம்.

செந்தில்குமார் said...

நல்லாவே ஊரைசுத்தியிருக்கிங்க.சித்ரா

அழகான குகை புகைப்படங்கள்

நிரூபன் said...

native அமெரிக்கர்கள்//

வணக்கம் சகோதரி, இன்று தங்களின் இராஜ தளத்திற்கு முதல் விஜயம். கட்டுரை வரலாற்று விடயங்களைப் பேசி நிற்கிறது.

பூர்விகக் குடிகளை native people's என்று அழைப்பார்கள்.

ரிஷபன் said...

அசத்தல் தகவல்கள்.. சுவாரசியமாய் சொல்லிய விதமும் அருமை