Wednesday, November 4, 2009

மக்கள் வயித்தை கலக்க போவது யாரு - ஒரு அரசியல் பார்வை


விஜய் அன்டோனியின், "ஆத்திச்சூடி ... ஆத்திச்சூடி  ...... இது new age ஆத்திச்சூடி !" பாடலில் வரும் நியாயமான கேள்வி போல், "என்ன சித்ரா, நீங்க எப்ப பாத்தாலும் உங்களை பற்றியே எழுதிக்கிட்டு இருக்கீங்களே. அரசியல் பத்தியும் நாட்டு நடப்பை பற்றியும் எப்ப எழுத போறீங்கனு தெரியுமாஆஆஆஆ.??????" னு கேக்கிறவங்களுக்கு: "கேளு, மக்களே கேளு - வாயை மூடிக்கிட்டு கேளு -  மாலு நகி மாலு - அரசியல் நகி மாலு. இந்த bloggai படிச்சு புட்டா உனக்கு முளைக்கும் வாலு!" என்று அந்த பாடலில் இருந்தே அநியாயமான பதிலும் copy அடிச்சுட்டு எழுதுறேன்.

இன்னொரு காரணமும் உண்டு. நாளைக்கு யாராவது, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று கேட்டால் அரசியல் கட்சிகள்  பற்றி ஆராய்ந்து எழுதி இருக்கிறேன் என்று சொல்லலாம் அல்லவா? நிறைய பேர் இப்படித்தான் நாட்டு மேல அக்கறை கொண்டு பாட்டு எழுதிறாங்க, blog எழுதுறாங்க, பேட்டி கொடுக்கிறாங்க, வசனம் பேசுறாங்க, புலம்புறாங்க, திட்டுறாங்க, ஏன் - ஒரு படி மேல போய் உண்ணாவிரதம் கூட இருக்குறாங்க ....... இதெல்லாம் மாற்றம் ஏதும் கொண்டு வராத வழிமுறைகள் - ஆக்கப் பூர்வமாக நாட்டுக்கு துரும்பை கூட எடுத்து போடாத வெட்டி பேச்சு என்று தெரிந்தும் ...................

பாரதியார் பாடல்கள்,  காந்தியடிகள் பேச்சு, திருப்பூர் குமரன் செயல் எல்லாம் வெள்ளையனை வெளியேற்றி சுதந்தரம் பெற்று தரும் - புரட்சி வரும் அளவுக்கு -  அனலுடன் இருந்தன.  நம் blogging,  "நாட்டு நடப்பு" reality மறக்க
நல்ல time-pass. சூப்பர் திண்ணை பேச்சு - டீ கடை பெஞ்சு அரட்டை.

புது Blogger சித்ராவின் பேட்டி: "அரசியல் சேட்டை" பத்திரிகை நிருபர் வருகிறார்.

நிருபர்:   வணக்கம்.
சித்ரா:    வணக்கம். கொஞ்ச blog matter வந்ததிலேயே, இப்படி ரித்தீஷ் மாதிரி பேட்டி கொடுக்கும் அளவு வருவேன்னு எதிர் பாக்கலை. எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும். இவ்வளுவுக்கும் நான் அம்பது ரூபா கூட செலவு பண்ணலை. பிரியாணி பொட்டலம் ஒண்ணு கூட வாங்கி கொடுக்கலை.

நிருபர்:   மன்மோகன் சிங் ஆட்சி பத்தி?
சித்ரா:    அவங்க ஆச்சி உயிரோட இல்லை. சோன்யா காந்தி மேடம் அவங்க ஆச்சி வயசு இல்லை. அதானல அவர் ஈன குரலில் strongaa ஏதாவது பேசி செய்ய முயற்சிக்கிரார்னு நான் நினைக்கிறேன்.

நிருபர்:    ADMK future?
சித்ரா:     அம்மா செல்வியா ஏன் இருந்தோம்னு நினைக்கிறாங்க. வாரிசு அரசியல் policy பத்தி தெரியாம தத்து எடுத்த புள்ளையையும் விலக்கிட்டு அவங்க futureaiye கேள்வியா பாக்கிறாங்க. சசிகலா வயசு கம்மினாலும் ஏதோ பொண்ணு role ல சமாளிக்கலாம். அதுக்கும் வழியில்லை. என்னதான் close ஆனாலும் தோழி வேறு; குடும்பம் வேறு.

நிருபர்:     நீங்க ADMK future பற்றி கேட்டா, ஜெயலலிதா future பற்றி பேசுறீங்க.
சித்ரா:      ADMK வேறு; ஜெயலலிதா வேறா? என்ன சொல்றீங்க? ஜெயலலிதாவுக்கு அப்புறம் ADMK நிலைமை என்னன்னு அந்த அம்மாவே யோசிக்காதபோது நான் ஏன் யோசிக்கணும்?

நிருபர்:     நீங்க விஜயகாந்த்'s DMDK கட்சியை ஆதரிக்கிறீர்களா?
சித்ரா:      கேப்டன் களம் இறங்கிட்டாரு. அவர் இரண்டு மகன்களும் இன்னும் கொஞ்சம் பெரிதானதும் முழு மூச்சா DMK குடும்ப அரசியல் மாதிரி வர நல்ல வாய்ப்பிருக்கு.  இதுக்கு மேல என் கருத்தை சொல்லி நான் ஆதரிக்கிறேனா இல்லையானு  என் ரசிகர்களை influence பண்ண நான் விரும்பலை.

நிருபர்:    ப.ம.க.????
சித்ரா:     பக்காவான  மங்கி (monkey) கட்சி.  இவருக்கு மற்ற கட்சிகளின் support வேணும்னு மரம் விட்டு மரம் தாவுவார். மக்களுக்கு அப்படி ஒரு கட்சி இருக்கு, அப்படி ஒரு கட்சி தலைவர் இருக்காருன்னு மறந்திட கூடாதுன்னு அறிக்கை மேல அறிக்கை விட்டு attendance கொடுப்பார். குடும்ப அரசியல் பண்ண மாட்டேன்னு ஆரம்பத்தில்  ராமதாஸ் சத்தியம் பண்ணினதாக ஞாபகம். அவர் மகன் MP ஆகலையா? அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா......

நிருபர்:     சரத் குமார் கட்சி பற்றி?
சித்ரா:      அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  (அ.இ.ச.ம.க. - a.k.a. - அகில இளிச்ச சன மங்கி (monkey) கழகம்) என்று ரூம் போட்டு யோசித்து ஒரு கட்சி பெயரை வச்சிருக்கார். மொட்டையா சரத் குமார் கட்சின்னு நீங்க மட்டும் இல்லை, எல்லாரும் சொல்றது சரி இல்லை. 16 வயதினிலே படத்தில் சப்பாணி கமல், மயிலிடம், "என்னை யாரு கோபால்னு கூப்பிடுறா? சப்பாணி சப்பாணினுதான் கூப்பிடுறாங்கன்னு" அங்கலாச்ச மாதிரி நேத்து கூட சரத்குமார் என்ட்ட புலம்பினார். கட்சி பெயரையே மக்கள் தெரிஞ்சிக்க முயற்சிக்கலை. கட்சியப் பற்றி?

நிருபர்:    அப்போ கார்த்திக் கட்சியை பற்றி?
சித்ரா:      ஒரு நிமிஷம். (google....google.....google....)
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி - All India Parliamentary People's Party - 
(AIPPP) - அய்யோ பாவம் பரிதாபம் party.
 இதுவும் ஒரு கட்சி; அதுக்கும் ஒரு தலைவர்னு இருக்க விடுறாங்களே.  serious அரசியலுக்கும் வாழ்க்கைக்கும்  ஒரு comedy relief தேவைதான். அதுக்காக இப்படியா? அவர் comedy kingaa இல்ல அவர் கூட கூட்டணி வச்சிருக்கிற சரத்குமார் comedy kingaa னு ஒரு போட்டி வைக்கலாம்.

நிருபர்:     இப்போ ஒரு முக்கியமான கேள்வி: DMK பற்றி?
சித்ரா:       நாட்டை கொள்ளை அடித்து சேர்த்து வைத்த சொத்தை மட்டும் இல்லை -  நாட்டையே பங்கு போட்டு பிரித்து கொடுத்த ஒரு "உயர்ந்த" தமிழ் வரலாற்று நாயகனை குறித்து நான் என்ன சொல்ல முடியும்? அரசியல், குடும்பம், டி.வி., சினிமா, இலக்கியம், வியாபாரம் சேர்ந்த ஒரு கதம்ப குடும்பம்,  நாட்டை ஆள்கிறது. ஜன நாயக ஆட்சியா? அப்படினா இப்படிதான் போல  என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு அர்த்தம் மாற்றத்  தெரிந்த சூத்திரதாரர்கள். மனைவி, துணைவி, இணைவி மற்றும் அவர்கள் மூலமுள்ள வாரிசுகள் கொண்டு நடத்தப்படும் action packed குடும்ப சித்திரம். இந்த மெகா மெகா சீரியல் இன்னும் எப்படியெல்லாம் போகும்? சிந்துபாத்திடம் கேட்க வேண்டும்.  மூன்றோடு  (அல்லது மூன்றை மட்டும்) நிறுத்திக் கொண்டதற்காக,  நான் தமிழ் மக்கள் சார்பாக கட்சி தலைவருக்கு  நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். மனைவி, துணைவி, இணைவி மாதிரி அடுத்த  decent தமிழ் வார்த்தை அதிகார பூர்வமாக தமிழில் அறிமுகப் படுத்திவிட்டு தொடருமோ என்னவோ? தமிழ் வாழ்க!

நிருபர்:      நீங்க ஏன் நக்கலாவே பேசுறீங்க?
சித்ரா:       இதெல்லாத்தையும் சகிச்சுகிட்டு சினிமா, டி.வி. மோக போதைகளில் சுயநல லாபங்களில்  தன்னை அடகு வைத்து இருக்கும் தமிழ் மக்களிடம் இல்லாத நக்கலா? லொள்ளா? குசும்பா? தமிழ் வாழ்க! தமிழ் நாடு வாழ்க! தமிழ் மக்களை ஏலம் விட்டு வாழும் கட்சி தலைவர்கள் வாழ்க! இவர்கள்தான் அரசியல்வாதிகள் என்று வரை படுத்தி கொண்ட ஜன நாயகம் வாழ்க!

நிருபர்:      நன்றி. கடைசியா ஒரு கேள்வி.  நீங்க அரசியல் கட்சி  எப்ப ஆரம்பிக்க  போறீங்க?
சித்ரா:       பிரியாணி பொட்டலம் வாங்க sponsors கிடைக்கணும். ஒரு டி.வி. சேனல் ஆரம்பிக்கணும். இப்போ கிண்டல் பண்ண அத்தனை கட்சிகளோடும் சந்தர்ப்பம் பார்த்து கூட்டணி வைக்க சந்திச்சு பேசணும். எனக்கு அடைமொழி பெயர்கள் கொடுக்க நண்பர்களிடம் கெஞ்சணும்.  வசூல் ராஜாக்களை சந்திக்கணும். publicity க்கு ஏதாவது ஏடாகூடமாக நடத்தி  காட்டணும்.  போஸ்டர் எழுத ஒட்ட ஆள் பிடிக்கணும். அறிக்கை நிறைய விடணும்.  ஒரு universitya சரி கட்டி doctor பட்டம் வாங்கணும். எல்லாத்துக்கும் மேல சினிமாவில் ரெண்டு படமாவது நடிக்கணும். போங்க சார். எனக்கு இப்ப அதுக்கெல்லாம் டைம் இல்ல. வந்ததும்............

Monday, November 2, 2009

தம்பி, தங்க கம்பி.....(paasakiligal)

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.............

மத்தவங்களை பத்தி தெரியலை. எந்த படைக்கும் நான் அஞ்சேன். Saibol இல்லைனாலும் இன்னொரு prescription strength medicine கொடுத்து என்னை காப்பாத்திடுவான். தம்பியே டாக்டரா இருந்தா அப்படி ஒரு வசதி.

என் ஒவ்வொரு இந்தியா trip பையும் கலகலப்பாக மாற்றி அடுத்து எப்போடா போவோம்னு எதிர் பார்க்க வைப்பதில் என் தம்பிக்கு ஒரு பெரும் பங்கு உண்டு.  இன்று என் தம்பியின் companyai ரொம்ப தேடுகிறது.

நான் தமிழ் பாடங்களில் செய்யுளை படிக்க திணறிக் கொண்டிருந்த போது, செய்யுளின் இலக்கணம் அறிந்து, வெண்பா உட்பட சில செய்யுட்களை அவனே உருவாக்குவான். அவனுடைய கவிதைகள், நாடகங்கள். நடிப்புக்கு நான் முதல் விசிறி. He is a performer.

மூன்று வருடங்கள் முன்பு வரை நானும் அவனும் சேர்ந்து போனால், சகோதரி சகோதரன் போகிறார்கள் என்று சொல்லியவர்களை விட குண்டோதரியும் குண்டோதரனும் போகிறார்கள் என்று சொல்லியவர்கள்தான் அதிகம். யார் கண் பட்டதோ - இப்போ அவன் diet, exercise, healthy measure என்று சொல்லி அவன் மட்டும் மெலிந்து - - - comedy piece மாதிரி இருந்தவன், சூப்பர் ஹீரோ மாதிரி மாறிட்டான். நல்லா இருக்கட்டும்.

மூளையே தனியா முட்டை போட்டு அறிவு குஞ்சுகளை பொரித்து எடுக்கும் அளவுக்கு examsukku படிப்பான். ஆனால் exams எழுதி முடித்த கையோடு அன்று இரவே நைட் ஷோ ஒரு படத்துக்கு போவான் பாருங்க ...... தியேட்டரில் ரிலீஸ் ஆகி    மூன்றே நாட்கள் ஓடிய - தியேட்டரின் projector operator உட்பட பத்தே பேர் ஒரு காட்சி வீதம் பாத்த படங்கள் லிஸ்டில் உள்ள - படமாக இருக்கும். "ஏண்டா? அப்படி ஒரு படம் பாக்க போன?" என்று கேட்டால், "மூளை இப்பதான் balanced levelukku வந்திருக்கு. ஓவரா படிச்சிட்டேன். இந்த படம் பார்த்த பிறகு சரியா இருக்கு" என்பான்.

எந்த exams எழுதினாலும் first rank or gold medal  வாங்கும்படி கடவுள் அவனுக்கு ஆசிர்வாதம் தந்திருக்கிறார். ஆனால் நான் அவனிடம், அப்பா அம்மாவிடம் இருந்து intelligence genes,  எனக்கு  அதிகம் எடுத்து கொள்ளாமல், என் share ஐயும் சேர்த்து அவனுக்கு கொடுத்து விட்டாதாக சொன்னாலும் எனக்கு நன்றி சொல்லுவான்.

அவனுக்கு உள்ள கிரிக்கெட் பைத்தியத்திற்கு treat செய்ய  அவனே psychiatrist ஆயிட்டான்னு கேலி பண்ணி கொண்டிருந்ததை, இன்னொரு ஆத்மா என்னை தட்டி, உன்னை அக்காவை வச்சிக்கிட்டு அவன் வேற என்னவா ஆவான் என்றதும், நிறுத்தி விட்டேன்.

நாங்கள் சண்டை போட்டு கொண்ட நாட்களை விட ஒருவரை ஒருவர் மொக்கை  - கடி - போட்டு "காயப்" படுத்தி கொண்ட நாட்கள் அதிகம். நாங்கள் இருவரும் சேர்ந்து பேசும் போது,  வயசு, சைசு, படிப்பு, பொறுப்பு, வித்தியாசம் எல்லாம் மறைந்து உள்ளே தூங்கி கொண்டிருக்கும் குழந்தை தனம் விழித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்து விடுகிறது. என் தம்பிக்குள் ஒரு நண்பனை காண்கிறேன்.

எந்த ஒரு சூழ்நிலையிலும், சின்ன பிள்ளைகளாகவே இருந்திருக்க கூடாதா என்று ஏங்குவதை விட, நம்முள் இருக்கும் குழைந்த தனமான குறும்பு உணர்வுகளை வெளியே கொண்டு வரும் உறவுகளை அடையாளம் கண்டு கொண்டால் என்ன? அவர்களோடு இருக்கும் போது பெரியவர்களின் கோப தாப - ஈகோ - மரியாதை - எதிர்ப்பார்ப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டால் என்ன?

என் தம்பியை அடுத்த  முறை சந்திக்கும் போது கண்டிப்பாக ஒரு தேங்காய் மாங்காய் பட்டாணி  சுண்டல் பொட்டலம் வாங்கி பங்கு போட்டு சாப்பிட வேண்டும் - பங்கு பிரிக்கும் போது சண்டை போட வேண்டும் - சண்டையில் சுண்டல் கீழே விழ வேண்டும் - கோபத்தில் அவனை திட்ட வேண்டும் - அம்மாவிடம் தம்பியை பற்றி குறை சொல்ல வேண்டும் - வேறு பொட்டலம் வாங்க வேண்டும் - அவனுக்கு கொடுக்காமல், "வெவெவ்வே..." சொல்ல வேண்டும் - சுண்டல் சாப்பிட்டு விட்டு அவன் சட்டையில் கைய துடைக்க வேண்டும் - அவன் அடிக்க வரும் போது ஓட வேண்டும் - அவன் மனைவியிடம் நானும் என் கணவரிடம் அவனும் முறையிட வேண்டும் ...................

Sunday, November 1, 2009

இட்லிக்கு அஞ்சலி

சென்னையில் இருந்து ஒரு செய்தி:

வாசிப்பவர்: Mrs. அலட்டி பந்தாகிருஷ்ணன்.

வாசித்த இடம்: மால்குடி உணவகம் in Hotel Savera,  சென்னை.

பல upper middle class வீடுகளில் இட்லி என்ற சிற்றுண்டி இனம் அழிந்துவிட்டது. அதை காப்பாற்றும் முயற்சியாக ரத்தம் ஏற்றுவது போல இட்லியுடன் red food coloring chemical கொஞ்சம் சேர்த்து இட்லியின் தன்மையான தென்னிந்திய ருசியை எடுத்து விட்டு சைனீஸ் டிஷ்ஷாக சில்லி இட்லி என்று plastic surgery செய்தும் பயன் இல்லை.
இன்றைய இளைய தலைமுறைக்கு pizza மற்றும் burger, breakfast ஆக கூட  சாப்பிடும் அளவுக்கு இருக்கும் ஆசை இட்லி சாப்பிடுவதில் காட்டாததால் என் (அலட்டி)  வீடு உட்பட பல வீடுகளில் இட்லிக்கு மங்களம் பாடப் பட்டு விட்டது.
15 வயது அமர்க்களா, நுனி நாக்கு டமிலுலும் stylish Englishilum சொல்லியதாவது: "You know, idlies were never popular among younger generation. oh, no. அத எப்டிதான்  சாப்பிட்டன்களோ? idlies are DEAD. you know, it is simply dead and gone."  இத்துடன் இன்றைய காலை உணவு செய்திகள் முடிவடைந்தது.

WHOA!  WHAT DID SHE JUST SAY?
ஆமாங்க, BELIEVE IT OR NOT, இது நிஜமாவே எங்கள் தமிழ்  நண்பர் ஒருவரின்  மனைவியும் அவர் மகளும் சொல்லியவை. அமெரிக்காவில் இருந்து வந்த பட்டிக்காடு, தன்  மகளுக்கு இட்லி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது சொல்லப்பட்ட இந்த செய்தி அதிர்ச்சியை தந்தது.
சென்னையில் சில வீடுகளில் இட்லி இறந்த (or கொல்லப்பட்ட) செய்தியை கேட்டு மனம் வருந்துகிறேன். இன்று இட்லிக்கு அஞ்சலி செய்யும் விதமாக நீண்ட வெட்டி பேச்சை சுருக்கியிருக்கிறேன்.  கட்டி தேங்காய் சட்னி,  சூடான சாம்பார், நேத்து வச்ச மீன் குழம்பு எல்லாம் வேறு துணை  தேட வேண்டிய நேரமிது...........இட்லி பொடி பெயரையே மாற்ற நேரிட அநாதையானது.........நல்லவேளை, தமிழ்நாட்டில் இன்னும் சில பழங்குடியினர் வாழ்ந்து வருவதால், அவர்கள் வீட்டில் இட்லி தஞ்சம் புகுந்து இன்னும் அழிந்து போகாமல்  உள்ளது.