"தமிழ் உதயம்" ரமேஷ் அவர்கள், ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றி...
http://tamiluthayam.blogspot.com/2010/07/blog-post.html
இந்த தலைப்பில் எவ்வளவு அருமையாக அவர் எழுதி இருக்கிறார் என்று அந்த பதிவை வாசிக்கும் உங்கள் அனைவருக்கும் தெரிந்து விடும். எல்லா கோணங்களிலும் அவர் யோசித்து எழுதி விட்டதால், இந்த தலைப்பை நாம இப்படிக்கா இந்த டீ கடை பெஞ்ச்ல உக்கார்ந்துக்கிட்டு, சூடாக ஒரு வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமா? (யம்மா, இந்த எந்திரன் காய்ச்சல் வந்ததில் இருந்து, திரும்பவும் ஒரு ரவுண்டு ரஜினி படங்களைத்தான் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு இருக்கேன்....... சிவாஜி படத்துல, அந்த பஜ்ஜி சீன் பத்தி சொன்னாலே அதிருதுல........ ஹையா.... அதிலும் பணம் டீலிங்தான்...... ஆரம்பமே, இந்த தலைப்புக்கு அமர்க்களமா அமைந்து விட்டது........... கூல்!)
அவர் தந்து இருக்கும் தலைப்பு: பணம் குறித்த எனது அனுபவம் வைத்து ஒரு பகிர்வு.
நான் இன்னும் millionaire ஆகவில்லை.... ஆன பின்னாலே, அதை பத்தி ஒரு புத்தகமே போடுறேன்... அந்த புத்தகத்தை, நீங்க உங்கள் பணம் கொடுத்து வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். இப்போ, பணம் குறித்த எனது வெட்டி பேச்சு கருத்துக்களை மட்டும் பார்க்கலாமா?
என்னதான் மாமா, பாட்டிம்மா, தாத்தா என் கையில காசு கொடுத்தாலும், அப்பாவோட சட்டைப் பையில - பெல்ட் பாக்கெட்ல - காசு "சுட்டு" வாங்கி தின்ன குச்சி ஐஸ் taste தனிதான்.... சரி, சரி....... விட்டா, அப்படியே நம்ம வண்டவாளத்தை எல்லாம், நானே ஒரு flow ல பதிவுலக தண்டவாளத்தில் ஏற்றி விட்டுருவேன் போல.
(சித்ரா, அடக்கி வாசி.......!!!)
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...... எதற்காக இந்திய ரூபாய் நோட்டுல காந்தி தாத்தா சிரிக்கிற மாதிரி படம் போட்டு இருக்காங்க? நம்ம நாட்டுல, ஒருவர் செய்ய வேண்டிய வேலையை - official கடமையை - அவர் செய்யாமல் இருக்கும் போது, அவரை திட்டி - அடிச்சு - துவைச்சு - அதை செய்ய வைக்காமல் - அவருக்கு அஹிம்சை முறையில், பணம் கொடுத்து - படிய வைத்து - அந்த வேலையை செய்ய வைக்க வேண்டும் என்று நமக்கு நினைவு படுத்தவா? யார் கண்டா? இருக்கலாம்.....

அப்புறம்...... பணம் வந்தால், ஒருவருடைய குணம் மாறிடும் என்று சொல்றாங்க..... இல்லைப்பா, ஒருவருடைய உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை அவருக்கு கொடுத்து பாருங்க, இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்க வேற, literal மீனிங் இல்லைப்பா..... பணம் அதிகம் சேரும் போதோ, இல்லை, பணம் ஒருவரை விட்டு போகும் போதோதான், நான் பலரின் உண்மையான குணங்களை கண்டு புரிந்து கொண்டு இருக்கிறேன்..... இது, புகழுக்கும் பொருந்தும்.....
டீக்கடை பெஞ்ச்ல உக்கார்ந்துகிட்டு பழைய தினத்தந்தி பேப்பர் நியூஸ் படிக்கலைனா எப்படி?
திடீர் பணக்காரர்கள் குறித்து, நான் எனது சித்தப்பாவுடன் வெட்டி பேச்சு பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது அவர், தமிழ்நாட்டுல lottery ban வருவதற்கு முன் திருநெல்வேலி பேப்பர்ல வந்த ஒரு நியூஸ் பத்தி சொன்னாங்க.......
திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த ஒருவருக்கு, ஒரு முறை lottery ல சில லட்சங்கள் பரிசாக கிடைச்சுச்சாம். அப்போ நிருபர், "இனி என்ன செய்யப்போறதா இருக்கீங்க?" என்று கேட்டதற்கு,
" ஒரு டீச்சர்க்கோ டாக்டர்க்கோ லாட்டரி பரிசு விழுந்தா, அவங்க செய்யுற வேலையை - பார்க்குற தொழிலை விட்டுருவாங்களா? எனக்கு தெரிந்த தொழில், பிச்சை எடுக்கிறதுதான். lottery பணம் வந்துட்டுனு அதை விட்டுற முடியுமா? ஆனால், ஒண்ணு மட்டும் நிச்சயம் சார்..... எனக்கு ஏற்கனவே ரெண்டு பொண்டாட்டி. இந்த பணம் வந்துட்டே என்று மூணாவது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்," என்று நியூஸ்பேப்பர்ல நிஜமாகவே பேட்டி கொடுத்து இருந்தாராம். அவருக்கு ரொம்ப தங்க மனசு......
அப்புறம், எனக்கு பிடித்த சில பணம் குறித்த quotes - புதுமொழிகள் - பாத்துட்டு இன்றைய வெட்டி பேச்சை முடிச்சிக்கலாமா?
Every day I get up and look through the Forbes list of the richest people in America.
If I'm not there, I go to work. .........
Robert Orben
It is pretty hard to tell what does bring happiness; poverty and wealth have both failed.
.........
Kin Hubbard
I finally know what distinguishes man from other beasts: financial worries. ........
Jules Renard
There's no reason to be the richest man in the cemetery (grave). You can't do any business from there.
..........
Colonel Sanders (KFC)
A man explained inflation to his wife thus: 'When we married, you measured 36-24-36. Now you're 42-42-42. There's more of you, but you are not worth as much.' ..........
Joel Barnett.