வேலைப்பளு காரணமாக சனி ஞாயிறு பதிவுலகுக்கு வராமல் விரதம் இருப்பது தெரிந்ததே.... இந்த வாரம், அது மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.
Valentine's Day Special ஆதரித்தும் - எதிர்த்தும் தமிழ் நாட்டில் சில விஷயங்கள் நடந்ததை கேள்விப்பட்டேன்....
கழுதை கெட்டால் குட்டி சுவரு - இந்தியா கெட்டால் அமெரிக்கா என்று ஆகி போச்சு.... ஆனால், எனக்கு ஒரு டவுட்டு! அது எப்படி சரியா இந்த Valentine Day மாதிரி விஷயங்களை மட்டும் கரெக்ட் ஆக - அரைகுறையாக தெரிஞ்சு வச்சுக்கிட்டு அங்கே follow பண்ணிடுறாங்க?
நம்ம ஊரில் பேசப்படுற அளவுக்கு இங்கே பெரிய ஸ்பெஷல் இல்லை... அதுவும் இந்த வருடம், வார நாளில் (திங்கள்) வந்ததால் - சும்மா கடைகளில் greeting cards - ரோஜா மலர்கள் - heart shaped balloons - chocolates மட்டும் நல்லா sales ஆச்சு ... இதெல்லாம் commercial கண்ணோட்டத்தோட கொண்டாடப்படுகிறது என்று ஆகி போச்சு.... Valentine's Day , சனி - ஞாயிறு வந்தால் மட்டும் கொஞ்சம் களை கட்டும்.... அம்புடுதேன்!
Valentine's Day - அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல், காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க .... ம்ம்ம்ம்......
சரி, ரெண்டு நாள் கழிச்சு வந்துட்டு என்ன புளிச்சு போன மாவுல இட்லி அவிக்கிற? என்று புலம்பாதீங்க.... "எது மாதிரியும் இல்லாத புது மாதிரி நியூஸ்க்கு "கொஞ்சம் வெட்டி பேச்சு" என்று ஆன பிறகு, பேரை காப்பாத்திருவோம்ல.... பில்ட் அப்பு! பில்ட் அப்பு!
அமெரிக்காவில், Valentine's Day ஒட்டி வருகிற ஞாயிற்றுக் கிழமை - (February மாதத்தில் - இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை) உலக திருமண நாள் ஆக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில், இது விசேஷம். நம்ம ஊரிலும் கொண்டாடப்படும் என்று நினைக்கிறேன்.
World Marriage Day
- http://wmd.wwme.org/purpose-history.html
பெண்ணின் ரோல் என்னன்னு சொல்றாங்களாம்?
கல்யாணம் வரை - காதலி;
கல்யாணத்திற்கு பின் - மனைவி;
குழந்தைகளுக்கு பின் - தாய் தான்... ஆனால், கணவருக்கு?????
அவரையும் கவனிச்சுக்கிற ஆயாதான். காதலியாக கவனிக்கப்பட்டு - வர்ணிக்கப்பட்டு;
மனைவியாக கொண்டாடப்பட்டு ;
அப்புறம் அன்னையாக ஆனதும், "உன் வழி - குழந்தைகள் வழி ... தாண்டாதே" என்று அடக்கி விடப்படுவதால் தான் பல குடும்பங்களில், கணவர் மனைவிக்கிடையே ஒரு புரிதல் இல்லாமல் போய் விடுகிறது... காதலிச்சு கல்யாணம் செய்தவர்கள் கூட, கல்யாண வாழ்க்கை கசந்து - பெரிய சண்டைகள் இல்லை என்றாலும், சள்ளு புள்ளு என்று ஒருத்தர் மேல ஒருத்தர் எரிஞ்சு விழுந்துக்கிட்டே - குழந்தைகளுக்காக மட்டுமே சேர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது என்று நான் சொல்லல, ஆய்வு (research) சொல்லுது.
http://www.itwire.com/science-news/health/24374-married-couples-less-happy-with-children
சிலரால் மட்டும் எப்படி திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆனாலும், காதல் குறையாமல் கொஞ்சி கொண்டே இருக்க முடியுது? என்று வேறு ஒரு ஆய்வு நடத்துனாங்களாம். அதில், கணவன் மனைவி இருவரும், எந்த சூழ்நிலையிலும் தாங்கள் பெற்றோர்கள் மட்டும் அல்ல - கணவன் மனைவி என்ற நினைப்ஸ் மறக்காமல், காதலோடு தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி, அன்னியோன்யம் வளர்த்துக் கொண்டே இருப்பவர்களால் தான் அப்படி இருக்க முடியுமாம்.
இதெல்லாம் நடக்கிற காரியமா என்று சொல்லப்படாது....
பொதுவாக, சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் வேலைப்பளு அதிகம் இருப்பதால், எல்லா கவனமும் அவர்களிடம் மட்டும் சென்று விடுவதால், களைப்பு தான் மிஞ்சும். மாறி வரும் கால கட்டத்தில், அது மன சோர்வைத் தான் கொண்டு வருமாம். அவர்கள் உணர்வுகளும் நாள் ஆக ஆக மரத்து போக ஆரம்பிக்குமாம். எத்தனை நாளைக்குத்தான் தாக்கு பிடிக்க முடியும்? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், தன் தனித்தன்மையை (special quality) அடையாளம் கண்டு பாராட்டும் அல்லது பாராட்டுகிற மாதிரி பேசும் இன்னொரு ஆணின் மீது ஈர்ப்பு ஏற்பட ஆரம்பிக்குதாம். இந்த பீலிங்க்ஸ் எல்லாமே வேண்டாத affair ஆக மாறுவதில்லை.... ஆனால், ஒரு வீக் மொமென்ட்ல மாறவும் செய்யுமாம். இது குடும்ப தலைவிகளுக்கு மட்டும் அல்ல, குடும்ப தலைவர்களுக்கும் இதே டென்ஷன் - இதே கண்டிஷன் - இதே மனநிலை - இதே effect தானாம். இந்த சூழ்நிலை, அதிகமாக 32 - 52 வயதுக்குள் இருக்கும் தம்பதியினர் மத்தியில் காணப்படுகிறதாம்.
இதையெல்லாம் தவிர்க்க, கணவனும் மனைவியும் தனியாக - மாதத்தில் ஒரு நாளாவது தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டுமாம். அது ஒரு புத்துணர்வையும் - திருமண வாழ்க்கையில் ஒரு புது ஈடுபாட்டையும் கொண்டு வருமாம்... அப்போதான், குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதோ - இல்லை வேறு எந்த குடும்ப பிரச்சனைகளும் பெரிதாக விஸ்வரூபம் எடுக்காதாம். தாயாக தியாக உள்ளத்தோட செய்யும் காரியங்களை விட, காதல் உள்ளத்தோடு குடும்பத்தில் வேலைகளை செய்யும் போது, உற்சாகமாய் - அழகாய் - புது பொலிவோடு இருக்குமாம்.
காதல் கொண்ட நெஞ்சங்கள் - எல்லா தடைகளையும், பிரச்சனைகளையும் சமாளிக்க எப்படி முடியுதுன்னு எத்தனை தமிழ் படங்கள்ல பார்த்து இருக்கோம்.... அதான்..... தியாக தீபங்களை விட, காதல் ஜோதிகள் - கஷ்டங்களை ஈஸியாக கையாண்டு கொள்ளுமாம்.
நாங்க போற கத்தோலிக்க ஆலயத்தில், அருகில் உள்ள பல்கலைகழகத்தில் உள்ள Catholic Students' Association இல் உள்ள மாணவர்கள் - மாணவிகள் - ரொம்ப ஆக்டிவ் ஆக ஆலய காரியங்களில் பங்கு கொள்வாங்க... அவர்களில் சிலர் உலக திருமண நாள் ஒட்டி வந்த வெள்ளிக் கிழமை மாலை, தங்களின் Valentine's Day weekend mood எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, volunteers ஆக வந்து 6 p.m. to 9 p.m. - சர்ச் ஹால் இல் வைத்து, எங்கள் ஆலயத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின் (Registered Members) குழந்தைகளை கவனித்துக் கொள்வதாக அறிவித்து இருந்தார்கள். அந்த நேரத்தில், குழந்தைகள் படமும் - பாப் கார்ன் - ஐஸ் கிரீம் - board games - எல்லாம் உண்டு என்று சொல்லி இருந்தாங்க... அதற்கு அவர்கள் சார்ஜ் எதுவும் வாங்கவில்லை.
சமூதாயத்துக்கு, அக்கறையோட தங்களால் செய்யக்கூடிய பங்கு என்று சொல்லிட்டாங்க....
அதற்காக free சர்வீஸ் என்று மக்களும், "ஹி, ஹி, ஹி,... தேங்க்ஸ் " என்று மட்டும் சொல்லிட்டு போகவில்லை.
""Thank You" greeting cards - வீட்டில் செய்த cookies அல்லது சின்ன பரிசு - அந்த மாணவர்களுக்கு கொடுத்து விட்டு நன்றி சொன்னது, அருமையாக இருந்துச்சு... கல்லூரி மாணவர்கள் செய்கிற உதவியை, appreciate பண்ணிய விதம் பிடித்து இருந்துச்சு.
குழந்தைகளை அங்கே விட்டு விட்டு, தனியாக அந்த நேரத்தில், Flame of love புதுப்பித்துக் கொள்ள, அந்த நேரத்தை பயன் படுத்திக் கொள்ளும் படி பரிந்துரைக்கப் பட்டது. வீட்டு வேலைகளை - ஷாப்பிங் வேலைகளை - அந்த நேரத்தில் செய்யாமல், டிவி - சினிமா என்று இங்கே உட்கார்ந்து கிட்டு, அங்கே பே என்று பார்த்துக் கொண்டு இருக்காமல், இருவர் மட்டுமே தங்கள் அன்பை- காதலை - ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் விதமாக அந்த நேரத்தை செலவிட வேண்டும் என்று சொன்னாங்க...
Restaurant இல் வைத்து dating மாதிரி ஒரு ஸ்பெஷல் டின்னெர் - அல்லது
ஒரு ஜாலி கார் டிரைவ் - அல்லது
இயற்கையை ரசித்துக் கொண்டு ஒரு வாக் - அல்லது
மனம் விட்டு பேசி, ஒருவருக்கொருவர் கொண்ட காதலை வெளிப்படுத்துவது என்று சில வழிமுறைகளும் காதல் உறவைப் புதிப்பித்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டன.
அமெரிக்காவில் திருமண தோல்விகள் நிறைய இருப்பதற்கும், விவாகரத்து அதிகம் இருப்பதையும் சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு - அதற்கு என்னவெல்லாம் செய்து அதை மேற்கொள்ளலாம் என்று முயற்சி எடுக்க ஆரம்பித்து இருக்காங்க....
அப்புறம் ஞாயிற்றுக் கிழமை அன்று பாதிரியார், Sunday Mass time ல எல்லாத் தம்பதியினரையும் எழுந்து கொள்ள சொன்னாங்க...
புதுசா கல்யாணம் ஆன ஜோடியில் இருந்து, கல்யாணம் ஆகியே அறுபத்து இரண்டு வருடங்கள் ஆன ஜோடி வரை எழுந்து நின்னாச்சு....
கணவரும் மனைவியும் வலது கரங்களை பிடித்து கொள்ள சொன்னாங்க.....
இருவரும், ஒருத்தரை ஒருத்தர் கண்களை பார்த்து புன்னகைக்க சொன்னாங்க....
அப்புறம் திருமண நாளில் சொல்லிய உறுதி மொழியை (wedding vows) புதுப்பித்துக் கொடுத்தார்.
அப்புறம், அப்புறம் என்ன..... இங்கே உள்ள வழக்கப்படி - இச் ..... இச்... கொடுக்க சொன்னாங்க...
எனக்கு அந்த டைம்ல நிஜமாவே வெட்கம் வந்துடுச்சுப்பா.....ஆமாம்ப்பா...
சர்ச்ல அமர்ந்து இருந்த அத்தனை பேரும் கைதட்டி வாழ்த்து சொன்னாங்க... குழந்தைகளும் சேர்த்து.....
புதுசா கல்யாணம் ஆன பீலிங்க்ஸ் தான்.....
எல்லா வேலையையும், இனி ஒரு துள்ளலோட செய்ய சொல்லுது ......
இதெல்லாம், அமெரிக்காவுக்குத்தான் தேவை..... தமிழ்நாட்டுக்குத் தேவை இல்லை என்று சொல்லாதீங்க... Self-Denial இல்லாமல், யோசித்து பார்த்தால் - இந்தியாவிலேயும் எத்தனையோ நகரத்துப் பிரச்சனைகளில் stress மிகுந்த வாழ்க்கைதான் அதிகமாகி கொண்டே வருகிறது. இதுவும் விரைவில் தேவைப்படலாம்....
எப்போ நம்ம ஊரில், உலக திருமண நாளை கொண்டாடப்போறாங்க என்று தெரியவில்லை.... இப்படியும் அமெரிக்காவில் நடக்குதுன்னு காதில போட்டாச்சு.... அப்புறம் உங்கள் இஷ்டம்.... அது வரை, காதலர் தினம் மட்டும் தானோ?

