சொந்த செலவுல, என் தமிழ் ஆர்வத்துக்கு சூனியம் வச்சிக்கிட்ட மாதிரி, ஆகி போச்சு....
அமெரிக்காவுல இப்போ, விஜய் டிவி - ஜெயா டிவி - கலைஞர் டிவி எல்லாமே டிஷ் நெட்வொர்க்கில் தெரியுதுன்னு சொல்லி, ஒரு ஆர்வ கோளாறுல நானும் தமிழ் மெகா பாக் ஆர்டர் பண்ணிட்டேன். ரெண்டு நாளா, எங்க வீட்டு குட்டீஸ்கிட்ட - அம்மா மட்டும் தான் டிவி பார்க்கலாம்.... நீங்க ரெண்டு பெரும் விளையாட போங்க - அப்படியே டிவி பார்க்கணும்னா, அம்மா பார்க்கிற ப்ரோக்ராம் தான் பார்க்கணும் - என்று அம்மா பவர் use பண்ணி புது ஆர்டர் தெரியாமல் போட்டுட்டேன் ... இப்போ "பே" னு முழிக்கிறேன்.
"நோ, ஒளிஞ்சிருக்கும் பற்சிதைவு!"
"ஆக்குமே, சகல நோய்க்கும் complete stop."
"வளர்ந்தாங்க இரட்டிப்பு மடங்கு அதிகமா."
"ஆக்குமே, சகல நோய்க்கும் complete stop."
"வளர்ந்தாங்க இரட்டிப்பு மடங்கு அதிகமா."
"பத்து ஸ்கின் ப்ரோப்ளம் - நோ டென்ஷன்!"
அப்படின்னு புது தமிழில் என்னை நானே கரைத்துக் கொண்டிருந்த நேரத்துக்கு - வந்துச்சே, complete ஸ்டாப்.
என் எட்டு வயது பொண்ணு, என்ன மாதிரி அமெரிக்கன் டிவி சேனல் தேர்ந்து எடுக்கிறாள், என்ன மாதிரி அமெரிக்க டிவி நிகழ்ச்சிகள் பார்க்கிறாள் என்று மிகவும் கவனமாக இருக்கும் நான், தமிழ் டிவி விஷயத்தில் மட்டும், மூளையை அடகு வச்சுட்டேன். ஆனால், அவள் அப்படி இல்லையே..... நான் போட்ட ரூல்ஸ் எல்லாத்தையும், எனக்கே திருப்புறா!
இக்கரைக்கு அக்கரை "பச்சை":
சினிமா காமெடி சீன்:
"ஏம்மா, இந்த ஆளு அடி வாங்கிகிட்டு இருக்காரு? அடிக்கிறது தப்பில்லையா?"
"இது காமெடி!"
"ஒரு ஆளை அடிக்கிறதுதான் காமெடியா?"
"இந்த ஆளு அடி வாங்குறதுதான் காமெடி."
"அவர் bad guy யா?"
"இல்லை, அவர் good guy ."
"அப்போ, அவரை அடிக்கிறவங்க bad guys ஆ?"
"இல்லை, அவங்களும் good guys ."
"நல்ல பிள்ளைனா, யாரையும் அடிக்க கூடாதுன்னு சொன்னீங்க..."
"......................???????!!!!!!!!!.........."
சினிமா பாடல்கள்:
"அம்மா, இப்படித்தான் இந்தியாவில எப்போ பார்த்தாலும் guys , yucky ட்ரிங்க்ஸ் (டாஸ் மார்க் ஐட்டம்ஸ்) ரோடுலேயே எடுத்துக்கிட்டு, பொண்ணுங்களை disturb பண்ணிக்கிட்டே இருப்பாங்களா?"
"...............????????!!!!!!!........."
"எங்க எழுந்து போற?"
"தம்பியோட விளையாட போறேன். நீங்கதானே அமெரிக்கன் டிவி சேனல்ஸ்ல MTV எல்லாம் நான் பார்க்க கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க.... நீங்க, இந்தியன் MTV songs பார்த்துக்கிட்டு இருக்கீங்க.... நான் தான் பார்க்க கூடாதே...."
"..............????????!!!!!!!!!........"
விளம்பரங்கள்:
"அம்மா, இந்தியாவில லுக் (look ) க்குத்தான் அதிகம் importance கொடுப்பாங்க போல..."
"அப்படியெல்லாம் இல்லை.... எதற்கு அப்படி சொல்றே?"
" எப்போ பாரு..... ஷாம்பூ, சோப்பு, டூத் பேஸ்ட், fairness cream commercials (விளம்பரங்கள்) தான் மாத்தி மாத்தி வந்து கிட்டே இருக்குது."
"............????????!!!!!!!!......."
டிவி ஹோஸ்ட்:
"அம்மா, தமிழ்ல பேசு ... நல்லா தமிழ்ல பேசுன்னு என்கிட்டே சொல்றீங்களே.... பாருங்க..... அவங்களுக்கும் நல்லா தமிழ் பேச தெரியல...."
"..............???????????!!!!!!!!!........."
ரியாலிட்டி கேம் ஷோ:
" அம்மா, அவங்களோட talents க்கு challenging (சவாலாக) கேம்ஸ் வைக்காமல், எதற்கு அவங்களை silly யாக (சின்ன புள்ளத்தனமாக) காட்டுற மாதிரி கேம்ஸ் கொண்டு வராங்க?"
"..............??????????!!!!!!!!!........"
ரெண்டு நாளா, தாங்க முடியல என் ரவுசு - புலம்புனாங்க குட்டீஸ் நல்லா.
எனக்கு வீட்டு ப்ரோப்ளம் - நோ டென்ஷன்.
ஆனால் ஆக்குமே, குட்டீஸ் அப்பாக்கிட்ட கம்ப்ளைன் - எஸ் டென்ஷன்.
பண்ணிட்டாரே சப்போர்ட், குட்டீஸ்க்காக, என் கணவர்.
ஆக.... கட் ஆயிடுச்சு, என் தமிழ் டிவி டைம்.
சொல்லிட்டாரே, குட்டீஸ் முன்னால, நோ தமிழ் டிவி.
அதுவரை, நான் என்ன பண்றது? முன்பு ஒரு பதிவில நான் சொல்லி இருந்த மாதிரி:
எழுதுவேன் பாரதியார் பாடல்களை நான் இப்படி:
தமிழ் language போல் அறிந்த யாம் language களில்
காணோம் எங்கும் sweetaa;
சொல்லும்போது red தமிழ் country என்று - பாயுது
காதினிலே honey வந்து .....
பாப்பா விளையாடு ஓடி -
பாப்பா ஆகாது ஓய்ந்திருக்க நீ!
கண்ணம்மா விழிச்சுடர் hot தான் -
sun ஆ? moon ஆ?
தமிழ் language போல் அறிந்த யாம் language களில்
காணோம் எங்கும் sweetaa;
சொல்லும்போது red தமிழ் country என்று - பாயுது
காதினிலே honey வந்து .....
பாப்பா விளையாடு ஓடி -
பாப்பா ஆகாது ஓய்ந்திருக்க நீ!
கண்ணம்மா விழிச்சுடர் hot தான் -
sun ஆ? moon ஆ?
கொலை பண்ண உனக்கு பாரதியார் பாட்டுத்தான் கிடச்சுதானு, யாரும் என் கிட்ட கேட்காதீங்க.
"முதல்ல, அவங்கள நிப்பாட்ட சொல்லுங்க.... அப்புறம், நான் நிப்பாட்டுறேன்!"
என்ன நினைப்புல டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கிறார்கள் என்று தெரியல.... வியாபாரம் மட்டும் தான் உள்நோக்கமோ? நிச்சயமாக தமிழ் மொழி வளர்ப்பு திட்டம் இல்லை - தமிழ் கலாச்சாரம் காப்பு திட்டமும் இல்லை. தனியார் தொலைக்காட்சி எல்லாம் அரசியல் கட்சிகள் பிடியில் இருக்கிறதன் காரணம் மட்டும் புரியுது.... தமிழ் மக்கள், தங்கள் பொழுதை எல்லாம் இப்படி கழிச்சிட்டாங்கன்னா, அவங்க நிம்மதியா அரசியல் பண்ணலாம் பாருங்க... எந்த தமிழ் மகனும் கேள்வி கேட்க மாட்டாங்க.....நாட்டு நிலைமையை கண்டு பொங்கி எழ மாட்டாங்க...... ஜூப்பரு!
என்ன சொல்ல வர்ற? ஒண்ணும் புரியல என்று நினைக்கிறவங்களுக்காக:
எனக்கும் இந்த போஸ்டர்ல இருக்கிற மாதிரி, தமிழ் டிவி நிகழ்ச்சிகள் பற்றி ஒண்ணும் புரியல: (கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும். அதற்கு உங்கள் மம்மி டாடி பர்மிசன் தேவையில்லைங்கோ!"
பி.கு.
தமிழர் என்பதன் முதல் அடையாளமே, தமிழ் மொழிதானே.... அது படுகொலை செய்யப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமே..... பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு பொங்கி எழப் போகிறோமோ?
தமிழர் என்பதன் முதல் அடையாளமே, தமிழ் மொழிதானே.... அது படுகொலை செய்யப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமே..... பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு பொங்கி எழப் போகிறோமோ?