Monday, May 24, 2010

ஆண் பேச நினைப்பதெல்லாம் .......

எங்கே  ரொம்ப நாளாக  போஸ்ட் எதையும் காணோம் என்று நமது "ரசிக பெருமக்கள் கூட்டம்" கேட்க ஆரம்பிச்சாட்டாங்க....    நிஜமா, ஒரு research பண்ணிக்கிட்டு இருந்தேன்.   unbiased results வர வேண்டும் என பலரை contact  செய்து,   ஆண்கள் பேச நினைப்பதில்,  சில "உண்மைகளை" தெரிந்து கொண்டேன்.   துப்பறிந்து கண்டு பிடித்தவை,   இதோ!

DISCLAIMER:   இந்த "வாக்குமூலத்தை",  என் கணவரிடம் வாங்க முயன்ற போது, சிரித்து விட்டு ரொம்ப விவரமா "s " ஆகி விட்டார்.   அவர் என்  கூடயே இருந்து குப்பை கொட்டணுமே ...... சரி, புளச்சு போங்கனு விட்டுட்டேன்.

  கேள்விகளுக்கு பதில் அளித்த ஆண்கள் ஒவ்வொருவரும், அவர்கள் அனுபவத்தில் தெரிந்தது என்று நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஒரே கண்டிஷன் தான் போட்டார்கள். அவர்கள் பெயரை போட்டு,  மனைவியிடமோ  girlfriend இடமோ மாட்டி விடக் கூடாது.  ஒத்துக் கொண்டேன்.
நான், ரொம்ப நல்லவா....................!!!  நம்புங்க......!
 
    சில சுவாரசியாமான "வாக்குமூலங்களை"  இங்கே தொகுத்து தந்து,  பகிர்ந்து கொள்கிறேன்.

மற்றும், விதிவிலக்குகள் எல்லா ஆராய்ச்சி முடிவுக்கும் உண்டு. இவை உங்களுக்கு ஒத்து வரவில்லை என்றால்:  ஹா,ஹா,ஹா,ஹா,....... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி........ ஹோ.ஹோ,ஹோ,ஹோ,ஹோ....... (சார், உங்களை பார்த்தா பாவமா இருக்குதுங்க......ஆனாலும் சிரிப்பை அடக்க முடியல......)

                                                 ஆண்களின் பார்வையில்:

தோழர்கள்  இருவர் வெகு நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டால்:

"எப்படி இருக்க? வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?
காபி டீ குடிக்க போலாமா, மாம்ஸ்?"
(அல்லது ............ சேர்ந்து "தண்ணி" அடிக்க போலாமா?)அதே வேளையில், தோழிகள் இருவர் வெகு நாட்கள் கழித்து சந்தித்து கொண்டால்:

"எப்படி இருக்க? என்ன இவ்வளவு வெயிட் போட்டுட்ட?
(இல்லை என்றால், என்ன diet ல் இருக்கியா? இப்படி மெலிஞ்சிட்ட)  
இந்த கலர் சாரி (அல்லது டிரஸ்) நல்லா இருக்குது.
உன் அம்மாவுக்கு, மூட்டு  வலி சரியா போச்சா?
உன் அப்பாவுக்கு,  பல் வலி சரியா போச்சா? 
உன் தம்பி, இப்போ என்ன பண்றான்?
உன் அக்கா வீட்டில் பிரச்சினை சரியா போச்சா?
உன் மகனுக்கு அப்புறம் காது வலி வரல இல்ல?
உன் நாத்தனார் இன்னும் சண்டைக்கு வராங்களா?
உன் ஆபீஸ் ஜொள்ளு சபா,  இன்னும்  தொல்லை பண்ணுதா?
நீ இன்னும் அதே வீடுதானா இல்லை, வீடு மாறிட்டியா?
நீ..................??????"
  கேள்வி மேல கேள்வி இருவரும் கேட்டு கொண்டு,  சந்திக்காத நாட்களில் நடந்த விஷயங்கள் ஒன்று விடாமல் அப்டேட் செய்யப்படும்.

ஆணின் தெளிவான பேச்சு:

"எனக்கு பசிக்கிற மாதிரி இருக்குது"    ------------- எனக்கு பசி வயிற்றை கிள்ளுது.
"எனக்கு களைப்பாக இருக்குது "        ................... தூங்க போகலாம் என்று இருக்கிறேன்.
"கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்றேன்."  .................. கிரிக்கெட் மேட்ச் (sports) டிவியில் பார்க்க போறேன்
                                   .................... Facebook/internet ல டைம் பாஸ் பண்ண போறேன்.

கணக்கு: 

வீர பிரதாபங்கள்:
நண்பர்களிடம் =  "வகுத்து"  சொல்லப்படும் ;
மனைவியிடம்/girlfriend இடம் = " பெருக்கி:சொல்லப்படும்;
"figure " பிரதாபங்கள்:
நண்பர்களிடம் = "கூட்டி" சொல்லப்படும்;
மனைவியிடம்/girlfriend இடம் = "கழித்து" சொல்லப்படும்.

compliment: 

கணவன்:       "சேலை (அல்லது சுடிதார்/டிரஸ்) புதுசா?"
மனைவி:         "நீங்கதானே என் கூட வந்து,  இதை பார்த்து,  கடையிலேயே ரொம்ப நல்லா இருக்குது..... நல்லா இருக்குதுனு சொல்லிக்கிட்டு இருந்தீங்க.   நீங்க வாங்கி கொடுத்தது தான்."
கணவன் மனதுக்குள்:
" கடையில் வைத்து நல்லா  இருக்குதுன்னு சொன்னது, இந்த சாரியை (டிரஸ்) பாத்துனு நினைச்சிட்டா போல. நான் தப்பிச்சேன்."


girlfriend அல்லது மனைவியின்  கேள்விகளும் அதற்கு ஆண்  சொல்ல நினைக்கும்  பதில்களும்: 

"இந்த சாரி (அல்லது டிரஸ்) நல்லா இருக்குதா?"
சொல்லும் பதில்:     "ரொம்ப நல்லா இருக்குது."

சொல்ல நினைக்கும் பதில்:
.............. நல்லா இருந்தா, அதை முதலிலேயே சொல்லி இருக்க மாட்டோமா?
...............கடையில் பார்த்தப்போ, இதை விட நல்லா இருந்த மாதிரி ஞாபகம்.
................சாரி நல்லாத்தான் இருக்குது,  நீ கட்டிய பின்னும்......

ஒரு expensive பொருள் காட்டி,  "வாங்கலாமா?  அழகா இருக்குமே."
சொல்லும் பதில்:     "அழகுக்கே அழகா?"

சொல்ல நினைக்கும் பதில்:
................. அப்படி வேற உனக்கு நினைப்பு இருக்கா?
.................  ஆளை விடு.

"அந்த நடிகைதான், உங்களுக்கு பிடிக்குமா?"
சொல்லும் பதில்:     "முந்தி பிடிக்கும். அவ்வளவுதான்."  or
                                "அப்போ பிடித்து இருந்தது...."

சொல்ல நினைக்கும் பதில்:
..............  அவளை மட்டும் இல்ல...... அவளை போல இருக்கிற.....
...............  கனவு வேறு, ஆசை வேறுனு தெரியாதா?
................ சீ, சீ .... இந்த பழம் புளிக்கும் கதையா ஆனப்புறம் வேற என்ன?
.................. ஹூம்........ பிடித்து என்ன செய்ய?

"அங்கே போன பெண்ணைத்தான பார்த்தீங்க?"
சொல்லும் பதில்:     "பொண்ணா? எங்கே?  பொண்ணு ஒருத்தி  போனாளா, என்ன?"

சொல்ல நினைக்கும் பதில்:
...........  "அந்த பிங்க் கலர் சாரி, லோ ஹிப் ல கட்டிக்கிட்டு போனவதானே?"
............. "துப்பட்டா போட்டு மறைச்சாலும், சுடிதார்ல சிக்னு இருந்தவதானே?" 
..............." ஒருத்தியா? அங்கே ஒரு கல(ர்) கல(ர்) கூட்டமே  போகுது. யாரைன்னு பாக்குறது தெரியாம முழிக்கிறேன்." 
.............. " என்னை ஓரக் கண்ணால பார்த்துக்கிட்டே போனாளே. அவளா?"
............... " எனக்கு ஒண்ணு மாட்டாதானு அலையும் போது,  இவ எல்லாம் கண்ணுல பட மாட்டாளே. இப்போ போய்...."
.............."அடிக்கடி  இந்த பக்கம் வரதே அதுக்குதானே."


"பரிவுடன்" கேட்கும் இரண்டு வார்த்தைகளின் அனர்த்தங்கள்:
  
கணவன்/boyfriend    கேட்கும் கேள்வி:     "என்ன ஆச்சு?"

உள்ளே இருக்கும் "பீலிங்க்ஸ்":

...................  "அதுக்குள்ள அழ ஆரம்பிச்சிட்டியா?"
.................... "இன்னைக்கு என்ன நோண்டலோ?"
....................." PMS???"
....................." இன்னைக்கு வரும் போது எனக்கு இருந்த நல்ல 'ஜிங்கு ஜங்கா' மூடுக்கு டாடா!"
................... "இந்த மாத   quota இன்னும் முடியலியா?"
................... " எதுவா இருந்தாலும், அதுக்கு நான் காரணமாக இருக்க கூடாது"
 ................... " புது பிரச்சனையா? இல்லை எப்போவோ உள்ளதின் தொடருமானு தெரியலியே."
..................... " ஆரம்பிச்சாட்டாம்மா ....... ஆரம்பிச்சிட்டா......"
..................... " என் எஸ்கேப் ரூட் எங்கே இருக்குது?"
...................... " என் வீட்டாளுங்க இப்போதைக்கு ஊரில் இருந்து வரலியே. அப்புறம் என்ன?"
......................." காரணம் கண்டிப்பா நான் தெரிஞ்சிக்கணுமா?"
...................... " காரணம் என்னனு இப்போ சொல்றியா? இல்ல,  ஒரு டிவி மெகா சீரியல் டிராமா சீன் நடத்திட்டு, அப்புறம் சொல்ல போறியா?"
..................... " என்ன பாத்தா, 'இங்கே புலம்பலும் பொருமலும் வரவேற்கப்படும்" என்று நெத்தியில் எழுதி ஒட்டுனவன் மாதிரியா இருக்குது?"


எல்லாம் இன்ப மயம்:


ஒரே அர்த்தம் - "இன்னிக்கு 'உம்ம்ம்மா - - - - -  யம்ம்ம்ம்மா' வேணும்."

சொல்வது பல வழிகளில்:   
"இன்னைக்கு என்ன விசேஷம்? ரொம்ப அழகா இருக்கே!"
இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன்."
"உனக்கு இது பிடிக்குமே. அதான் வாங்கிட்டேன்."
"எதுக்கு எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சு களைச்சு போற?"
"நீ சிம்பிளா வந்தா கூட,   நச்னு இருக்குது."  
தெரிந்தவர் ஒருவரின்   " affair"  வெளியாகும் போது: 


பிறரிடம் பேசும் போது:   "எப்படித்தான், பொண்டாட்டிக்கு (girlfriend க்கு) துரோகம் பண்ண, அவனுக்கு  மனம் வந்ததோ?"

மனதுக்குள்: 
................ கொடுத்து வச்சவன்.
................ அவன் எப்போதுமே, risk taker - adventurer - நினைத்ததை முடிப்பவன்.
.................. போயும் போயும் அவள் கூடயா? வேற ஆளு கிடைக்கலியா?  
................. தெரிஞ்சவங்க  நாலு பேருக்கு பயப்படறேனோ இல்லையோ,  இங்கிலிஷில் தெரிஞ்ச நாலு எழுத்துக்காக யோசிக்கிறேன்.  அவை:    
  A .....I......D......S...... 
................ இருக்கிற ஒண்ணுக்கே,  எனக்கு  வாங்கி போட்டு கட்டுப்படி ஆக மாட்டேங்குது..... இல்லைனா.....

தத்துவ  ஜொள்ஸ்:  

Women - - - -   You can't live with them  or without them.........
 Sixth Sense வந்து எத்தனை முறை அறிவுப்பூர்வமாக பேசி warn செய்தாலும்,  மற்ற ஐந்து senses ,  ஓவர் ரியாக்ட் செய்து   "வெற்றி" பெறுகின்றன.

இன்னும் இருந்தால், கமெண்ட்ஸ்  போட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.  :-)


பி.கு.:  1:
  இந்த அகராதி தொகுப்பு சமூக சேவைக்காக - - -  யாரும் எனக்கு  சிலையும்  வைக்க வேண்டாம் - பாமும் வைக்க வேண்டாம்.
 
பி.கு.  2:
ஆண் மக்கள், திறந்த புத்தகமாக கொட்டிட்டாங்க..... இப்போ, எனது அடுத்த வெட்டி ஆராய்ச்சி, பெண்கள் அறிக்கைகளுக்கு,  அர்த்தங்கள் என்ன என்று தொகுக்கலாம் என்று இருக்கிறேன்.  Questionnaire தயார் செய்ய வேண்டும்.  பதில் தெரிய வேண்டிய கேள்விகள் மற்றும் சங்கதிகள் கமெண்ட்ஸ் போடும்போது போட்டால்,  investigate செய்ய ஆரம்பித்து விடுவேன்.  கூடுமானவரை unbiased ஆக இருக்க முயற்சி பண்றேன்........ (ஸ்ஸ்ஸ்ஸ்...... அப்பா........ இவங்களை நம்ப வைக்கிறதுக்கு உள்ள........ ...ம்ம்ம்ம்......)


அடுத்த  Ph.D.  இதுலதான்..... அதுக்காக:  " டாக்டர் சித்ரா, வாழ்க!" என்று எல்லாம் - ப்ளீஸ் -  யாரும் இப்போவே சொல்லாதீங்க....... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க........ சரியா?

நோ அருவாள் or bad  words .  நன்றி.  ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.......

படங்கள்:  நன்றி டு கூகுள்.101 comments:

Sukumar said...

டாக்டர் சித்ரா... வாழ்க வாழ்க... ஹி ஹி.. உங்க ஆராய்ச்சி நல்லாவே இருக்கு .. அதனால இதை சொல்லாம இருக்க முடியல... :)

பனித்துளி சங்கர் said...

தாமதமாக பதிவுகள் தந்தாலும் மறக்க இயலாத பதிவுகள்தான் அனைத்தும் .கலக்கல் . பகிர்வுக்கு நன்றி

S Maharajan said...

//ஆராய்சி பண்ணுறேன் அப்படின்னு
ஆப்பு வச்சுடீன்களே அக்கா!

சமுக சேவகி சித்ரா அக்கா வாழ்க
அவர் புகழ் மென் மேலும் வளர்க//

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல ஆராய்ச்சிங்க :)

தமிழ் உதயம் said...

சித்ரா அவர்களின் சேவை நாட்டுக்கு தேவை.
அடுத்த ஆராய்ச்சி என்ன?

சௌந்தர் said...

பெரிய ஆராய்ச்சி தான். டாக்டர் பட்டம் தரலாம்
ஆன்னா... உங்களுக்கு பட்டம் விட தெரியுமா

vasu balaji said...

நல்லாக் குடுக்குறாங்கப்பா டீட்டெய்லு. :))

அமைதி அப்பா said...

நடமாட முடியாம பண்ணிட்டீங்களே மேடம்!

Asiya Omar said...

சித்ரா இந்த ஆம்பிளைங்க என்னமா நடிக்கிறாங்க,நமக்கு தான் நடிப்பு வர மாட்டேங்குது.அடுத்த ஆராய்ச்சி பெண்கள் questionaire எனக்கும் அனுப்பி வைங்க.எப்படி சித்ரா இப்படி கரெக்டாக ஒண்ணுவிடாம தொகுத்து இருக்கீங்க.வாழ்க வாழ்க !

settaikkaran said...

கமெண்ட் பண்ணினா கமிட் பண்ணுறா மாதிரி ஆயிடுமே! பண்ணுறதா வேண்டாமா? பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுத்துச் சொல்லுறேன். :-)

Unknown said...

நல்லா பண்ணுனீங்க ஆராய்ச்சி..

டாலஸுக்கு ஆட்டோ அனுப்ப எவ்வளவு செலவாகும்?

Chitra said...

ஹலோ Mukilan, நோர்த் கரோலினாவுக்கு நானே வாரேன்.... ஆட்டோவில் அல்ல.....

mightymaverick said...

//இந்த "வாக்குமூலத்தை", என் கணவரிடம் வாங்க முயன்ற போது, சிரித்து விட்டு ரொம்ப விவரமா "s " ஆகி விட்டார். அவர் என் கூடயே இருந்து குப்பை கொட்டணுமே ......//சாலமன் பொழைக்க தெரிஞ்ச ஆளு... நிறைய ரங்கமணிகள் தங்கள் தங்கமணிகளிடம் படாத பாடு படுவதாக கேள்வி...


//" கடையில் வைத்து நல்லா இருக்குதுன்னு சொன்னது, இந்த சாரியை (டிரஸ்) பாத்துனு நினைச்சிட்டா போல. நான் தப்பிச்சேன்."//கைப்புள்ள... சங்கத்து ரகசியத்தை வெளியே சொன்ன அந்த ரங்கமணிக்கு ஒரு குண்டு அனுப்பு...


//"அங்கே போன பெண்ணைத்தான பார்த்தீங்க?"//அப்பாடா... நல்ல வேளை... தப்பிச்சேன்... இங்கே இந்தப்பக்கமா போன சூப்பர் பிகரை பார்த்ததை இவள் பார்க்க வில்லை... இது எப்படி இருக்கு.... (இதுவும் சங்கத்து ரகசியம் தான்)


அப்புறம்! யக்கா... இந்த தடவை அருவாள் தூக்கலை... போதுமா... உங்களுக்கு டாக்டர் பட்டம் எல்லாம் தூசுன்னு தெரியும்... அதனால மொக்கை பதிவர்கள் சங்கத்தில் இருந்து உங்களுக்கு "ஆயிரம் பட்டம் வாங்கிய அபூர்வ சித்ராம்மணி" (சித்ரா அம்மணி என்று படிக்கவும்) என்கிற புது பட்டம் உங்களுக்கு கொடுக்கப் படுகிறது... ஹிஹிஹிஹி...

Chitra said...

//"அங்கே போன பெண்ணைத்தான பார்த்தீங்க?"//அப்பாடா... நல்ல வேளை... தப்பிச்சேன்... இங்கே இந்தப்பக்கமா போன சூப்பர் பிகரை பார்த்ததை இவள் பார்க்க வில்லை... இது எப்படி இருக்கு.... (இதுவும் சங்கத்து ரகசியம் தான்)........ POINT noted ..... Thank you, thank you, thank you..... :-)

Anonymous said...

//நல்லாக் குடுக்குறாங்கப்பா டீட்டெய்லு. :))//

Repeattu....

நாடோடி said...

இதை எல்லாம் ந‌ம்ம‌ த‌ஞ்சாவூர் க‌ல்வெட்டில் ப‌திக்க‌ணும்.. எவ்வ‌ள‌வு செல‌வு ஆனாலும் ப‌ர‌வாயில்லை.. எங்க‌ள் அண்ண‌ன், கொடைவ‌ள்ள‌ல், பின்னூட்ட‌புய‌ல் சித்ரா அக்காவின் த‌ர்ம‌ ப‌த்த‌ன்(பெண்ணுனா ப‌த்தினி, ஆணுண்னா ப‌த்த‌ன் எப்ப‌டி க‌ண்டு பிடிச்சோம் பாத்தீங்க‌ளா?) சால‌ம‌ன் அவ‌ர்க‌ள் கொடுப்பார்க‌ள்..

நாஸியா said...

அடடா அடடா அடடா!!

தலைவி வாழ்க!

பத்மா said...

இவ்ளோ தானா சித்ரா? .அதுங்ககுள்ள இன்னும் என்னன்னோவோ இருக்கும் .கேடிகள்:))
சூப்பர் ஆராய்ச்சி .பாதிபேர் உண்மை உண்மைன்னு தலையாட்றது தெரியுது .well done chithu

ஜெய்லானி said...

//சேட்டைக்காரன் said...

கமெண்ட் பண்ணினா கமிட் பண்ணுறா மாதிரி ஆயிடுமே! பண்ணுறதா வேண்டாமா? பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுத்துச் சொல்லுறேன். :-) //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Karthick Chidambaram said...

ஆராய்ச்சி கலக்கல். ஆனால் ஆம்பளைங்க எல்லாம் விதி விதிவிலக்குகள். ஹி ஹி ஹி ... உண்மைங்க :)

insight said...

சில வியங்கள் உண்மைதாங்க . ஆண்கள் பொய் சொன்னாலும் பெண்கள் எப்படி கண்டு பிடிக்கரீங்கு கொஞ்சம் சொன்னிங்கன உங்களுக்கு கோடி புண்ணியமா போகுமுங்க

சாந்தி மாரியப்பன் said...

நல்லா ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. இப்படி ரகசியத்தையெல்லாம் வெளிய சொல்லிட்டீங்கல்ல. இனிமே ஆண்கள் புதுசா ஏதாவது கண்டுபிடிச்சாத்தான் உண்டு :-))))))))

Chitra said...

Insight: இப்படிதான் போட்டு வாங்கிடுவோம்ல...... :-)

VELU.G said...

கணம் நீதிபதியவர்களே எதிர்தரப்பு சேர்ந்தவர் ஆண்வர்க்கத்தின் மீது அவதூறு செய்கிறார் என்று குற்றம்சாட்டுகிறேன்

Chitra said...

Velu.G. sir, நான் DMK வில் சேரும் எண்ணம் இப்பொழுது இல்லை. கேஸ் போடாதீங்க..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

க‌ரிச‌ல்கார‌ன் said...

பிர‌சென்ட் மேட‌ம்

Ahamed irshad said...

வித்தியாசமான ஆராய்ச்சி....நல்லாயிருக்குங்க சித்ராக்கா...

Uma said...

LOL! :))

dheva said...

நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு....திடீர்னு சடன் பிரேக் அடிச்சு.....இப்படி அஸ்திவாரத்தயே ஆட்டினா எப்படி....ஆம்பிளைங்க...எல்லாருக்குமே..பில்டிங் ஸ்ட்ராங்க்....ஆனா பேஸ் மட்டம் வீக்.....

" அங்கே போன பெண்ணைத்தான பார்த்தீங்க?"
சொல்லும் பதில்: "பொண்ணா? எங்கே? பொண்ணு ஒருத்தி போனாளா, என்ன?"

சொல்ல நினைக்கும் பதில்:
........... "அந்த பிங்க் கலர் சாரி, லோ ஹிப் ல கட்டிக்கிட்டு போனவதானே?"
............. "துப்பட்டா போட்டு மறைச்சாலும், சுடிதார்ல சிக்னு இருந்தவதானே?"
..............." ஒருத்தியா? அங்கே ஒரு கல(ர்) கல(ர்) கூட்டமே போகுது. யாரைன்னு பாக்குறது தெரியாம முழிக்கிறேன்."
.............. " என்னை ஓரக் கண்ணால பார்த்துக்கிட்டே போனாளே. அவளா?"
............... " எனக்கு ஒண்ணு மாட்டாதானு அலையும் போது, இவ எல்லாம் கண்ணுல பட மாட்டாளே. இப்போ போய்...."
.............."அடிக்கடி இந்த பக்கம் வரதே அதுக்குதானே."//


மேலே சொன்னது போன்ற அப்பட்டமான உண்மைகளை பகிங்கரப்படுத்தியதால்...என்ன செய்வது என்று அறியாத ஆண்கள் கூட்டம் திருவிழாவில் காணமல் போன பிள்ளை போன்று திரு திரு வென்று விழித்துக் கொண்டு இருக்கிறது.....


ஏங்க.....சித்ரா.....இது உங்களுக்கே நல்லா இருக்கா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

அகல்விளக்கு said...

ஆராய்ச்சி பண்றேன்...
ஆராய்ச்சி பண்றேன்னுட்டு ஆப்பு வச்சுட்டீங்களே சகோதரி..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

SUFFIX said...

Deborah Tennen புத்தகம் படிச்சது மாதிரி இருக்கு, நல்ல ஆராய்ச்சி சித்ரா!!

Jerry Eshananda said...

"objection overrule", sema comedy.....you rock..chitra.

Romeoboy said...

\\நோ அருவாள் or bad words . நன்றி. ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..//

உங்க கடைக்கு வந்தாலே இந்த மாதிரி எல்லாம் பேசி எஸ்கேப் ஆகிடுங்க.. இந்தியாக்கு வாங்க உங்களை தேடி கண்டிப்பா ஒரு லாரி வரும்

Menaga Sathia said...

ஆராய்ச்சி டாக்டர் வாழ்க!! எப்படி இப்படிலாம்...

Madhavan Srinivasagopalan said...

மனைவி : எனக்கு ஓவியம் வரைதல் மற்றும் பாட்டுல ஆர்வமிருக்கு.. அனா ரெண்டுக்கும் நேரமில்லை.. பாட்டு கத்துக்கவா.. ஓவியம் கத்துக்கவா.?.
கணவன் : ஓவியம் கத்துக்கோ..
மனைவி : (ஆர்வமாய், உற்சாகத்துடன்) நா வரஞ்சத பாத்துருக்கீங்களா?
கணவன் : இல்லை, நீ பாடி கேட்டிருக்கிறேன்..

Unknown said...

chitra akka aaraichi very super

எல் கே said...

அவ்வவ். இது நல்லதுக்கு இல்ல சித்ரா.. அப்புறம் அடுத்த பதிவு எப்ப போடுவீங்க (அப்பதான் உங்க ப்ளாக வீட்ல இருந்து ஓபன் பண்ணுவேன் )

க.பாலாசி said...

அடக்கொடுமையே... பயபுள்ளைங்க மாத்தி மாத்தி உண்மைய சொல்லுதுங்களே.... எங்கபோயீ முடியுமோ....

மின்மினி RS said...

யம்மாடியோவ் இவ்வளவு ஆம்பளைங்களோட சைக்காலாஜியா.. நல்லாவே ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க.. டாக்டர் சித்ராக்கா வாழ்க வாழ்க.. ஆமா இதெல்லாம் எப்படி?.. சான்ஸே இல்லை.. நீங்க நீங்கதான்.

Prabu M said...

பின்னிட்டீங்க அக்கா....
ரொம்பவே ரிசர்ச் பண்ணியிருக்கீங்க போல... :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹலோ சித்ரா.. என்னஇதெல்லாம்.. நல்லாவே இல்லைன்னு சொல்லமாட்டேன். நல்லாவே கலாய்ச்சிருக்கீங்க. இவ்வளவு விசயங்கள் சேகரிக்க??.. சந்தேகமே இல்லாமல் நீங்க ஒரு டாக்டர் என்பதை பலமுறை நீரூபித்து வருகிறீர்கள். டாக்டர் சித்ரா வாழ்க வாழ்க.

ஜெட்லி... said...

அடுத்த ஆராய்ச்சி ரிப்போர்ட் எப்படி இருக்குனு பார்ப்போம்.....

ஜெயந்தி said...

உங்க ஆராய்சி ரிசல்ட் பர்பெக்ட்டா வந்திருக்கு. பட்டம் குடுத்துற வேண்டியதுதான். அதுலயும் அந்த இரண்டு தோழர்கள் சந்தித்துக்கொண்டால், இரண்டு தோழிகள் சந்தித்துக்கொண்டால் சூப்பர்.

Unknown said...

ஹி.. ஹி..

Dr.Rudhran said...

interestingly written and aptly illustrated. keep going!

Anonymous said...

நல்லா research பண்ணிருக்கீங்க..
PHd பட்டம் வாங்கிட்டீங்கள...
அடுத்த research பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?

ஹேமா said...

சித்ரா...யாராச்சும் எதிர்ப் பதிவு போடப்போறாங்கப்பா !

நேசமித்ரன் said...

நல்லாக் குடுக்குறாங்கப்பா டீட்டெய்லு. :))

ரிபீட்டேடேடே......ய்

ஸ்ரீராம். said...

எல்லாமே புதுசா இருக்கு...இப்படியெல்லாமா யோசிக்கறாய்ங்க ...

"இடுகையில் வந்துள்ள அத்தனையும் கற்பனையே...இதில் வரும் சம்பவங்கள் யாரையாவது.."
என்று டிஸ்கி எதிர்பார்த்தேன்.

வந்தியத்தேவன் said...

ஆண்களைப் பற்றி நன்றாக அறிந்துவைத்திருக்கின்றீர்கள்.

எப்படி இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்கின்றீர்களோ.

காதல் என்பது பவிள்கம் போன்றது ஆரம்பத்தில் இனிக்கும் பின்னர் இழுபடும் (இன்னொரு தத்துவம்)

கலகலப்ரியா said...

அடேங்கப்பா எவ்ளோ பெரீய்ய ஆராய்ச்சி.. கலக்கிறீங்க சித்ரா..

பருப்பு (a) Phantom Mohan said...

இப்பவும் ஆம்பளைங்க தான் ஜெயிச்சோம்! நீங்க போட்டது எல்லாமே சாதாரண விஷயம், பல முக்கிய விசயங்கள நண்பர்கள் ஆராய்ச்சியில் சொல்லவில்லை...

நாங்க வென்றுட்டோம்!!

க ரா said...

ஒ இதான் மேட்டரா. நான் டீச்சர் போஸ்ட ரிஸைன் பன்னிட்டேன்னு சொல்லிருக்கறதுக்கு. கலக்க்குங்க டாக்டர் சித்ரா :-).

பருப்பு (a) Phantom Mohan said...

பதிவை படித்த பிறகு,

"ரொம்ப அருமையான தொகுப்பு...ரசித்தோம்" ...........இது உங்ககிட்ட சொல்ல

"எந்தப் பய இவ்ளோ விசயத்த சொன்னவன், ஓவர் நக்கலால எழுதுறிக்கு...ஏன்னா வில்லத்தனம்?"
...............இது மனதுக்குள்

ஈரோடு கதிர் said...

//எங்கே ரொம்ப நாளாக போஸ்ட் எதையும் காணோம் என்று நமது "ரசிக பெருமக்கள் கூட்டம்" கேட்க ஆரம்பிச்சாட்டாங்க...//

அதானே.... நாம பின்னூட்டத்துல பிசியா இருந்தது மக்களுக்கு தெரியல போல

//Facebook/internet ல டைம் பாஸ் பண்ண போறேன்.//

ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சீ

ISR Selvakumar said...

நகைச்சுவையாக இருந்தாலும், பல ஆங்கில ஜோக்குகளில் படித்து முடித்த கேள்வி பதிலாகவே எனக்குத் தெரிகிறது. ஆண்கள் உண்மையைச் சொல்ல மாட்டார்கள், அதிகபட்சம் இது போன்ற ஜோக்குகளுடன் ரிலேட் செய்து கொண்டு மிகைப் படுத்துவார்கள்.

கவனிக்க..
ஒன்று - சொல்லமாட்டார்கள்..
இரண்டு - மிகைப்படுத்துவார்கள்.

"உழவன்" "Uzhavan" said...

:-))

ஹுஸைனம்மா said...

//ஒரே கண்டிஷன் தான் போட்டார்கள். அவர்கள் பெயரை போட்டு, மனைவியிடமோ girlfriend இடமோ மாட்டி விடக் கூடாது. ஒத்துக் கொண்டேன்//

நீங்க ஒத்துகிட்டீங்க, சரி. ஆனா, அவங்க வீட்டம்மணிகளுக்கு நீங்க அவுங்க வீட்டுக்காரருக்கும் ஃப்ரண்டுன்னு தெரிஞ்சுருக்குமே! அத வச்சு கண்டுபுடிச்சுடுவாங்க பாருங்க!!

பித்தனின் வாக்கு said...

Good report. but intha reportla fiffty percent reasons ellam not understand properly or not fullfilled cupples. A good understanding jodi they dont tell answers like this. This is my idea.
I am not married and i dont have any girl friend affiars. So in this case i cant help u. Anyway congrates for phd and all the best for success.

ராஜ நடராஜன் said...

//சில சுவாரசியாமான "வாக்குமூலங்களை" இங்கே தொகுத்து தந்து, பகிர்ந்து கொள்கிறேன்.//

வாக்கு மூலர்கள் யார் யார் என்ற ரகசியத்தையும் வெளியிடலாமே:)

எனக்குத் தெரிந்து ஆண்கள் இருவகை.
1.கல்லுளி மங்கன்கள்
2.காது,மூக்கு வைத்து பிரமிப்பவர்கள்.

நான் 1 ல் சேர்த்தி:)

கண்மணி/kanmani said...

உஷாராயிட்டோம்ல....
ஆண்கள்கிட்டேமட்டுமில்ல...
வாக்குமூலத்தை நிர்மூலமாக்கி மாட்டிவிடும் சித்ராவிடமும்...:))))))))))

மங்குனி அமைச்சர் said...

பஸ்ட்டு சரகடிச்சு பழகுங்க, அப்புறம் நாங்க ஆராய்ச்சி பண்ணனும்

Chitra said...

super idea, மங்குனி அமைச்சரே..... இதுக்குதான் யோசனை சொல்ல ஒரு அமைச்சர் வேணும்ங்கறது.... :-)

சத்ரியன் said...

//கணவன் மனதுக்குள்:
" கடையில் வைத்து நல்லா இருக்குதுன்னு சொன்னது, இந்த சாரியை (டிரஸ்) பாத்துனு நினைச்சிட்டா போல. நான் தப்பிச்சேன்."//

ஹையய்ய்யோ... நான் தப்பிச்சேன்

சத்ரியன் said...

//தெரிஞ்சவங்க நாலு பேருக்கு பயப்படறேனோ இல்லையோ, இங்கிலிஷில் தெரிஞ்ச நாலு எழுத்துக்காக யோசிக்கிறேன். அவை:
A .....I......D......S...... //

ஆஹா...!

சத்ரியன் said...

//சித்ரா...யாராச்சும் எதிர்ப் பதிவு போடப்போறாங்கப்பா..//

ஹேமா, நீயே போட்டுறலாமே!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ஆண்களைப் பற்றி எழுத மிகவும் நேரம் எடுத்துக் கொண்டது போல தெரிகிறது. ஏற்கனவே வெளிவந்த ஆராட்ச்சி போல தான் இதுவும் இருக்கிறது. புதுசா ஒன்னுமில்லையே!...

பொண்ணுங்களைப் பற்றி கூட புதிதாக எதுவும் இல்லை.

ஒட்டுமொத்த ஆண்களையும் ஜோல்லர்களாகவும், மனைவியுடன் கஸ்டப்பட்டு இல்லறம் நடத்துபவர்களாகவுமே சொல்கிறீர்கள்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

உண்மையில் பெண்களின் அன்பை விட ஆண்களின் அன்பு பிரதானமானது.

ஒரு தாயோ, தமக்கையோ அன்பை வெகு இயல்பாக வெளிக்காட்டி விடுகின்றாள்.

ஆனால் ஆண்வர்கம் அன்பை காட்ட இங்கு கட்டுப்பாடுகள் உண்டு. வயது வந்த பெண்ணுடன் ஓடிவிளையாடக் கூட இங்கே உடன்பிறந்தவர்களுக்கு உரிமையில்லை என்பதை கவனத்தில் கொள்க.

AR.RAVI said...

சிந்திக்கும் ஆணகளை சந்திக்கூ அழைப்புக்கூ நன்றி
சித்திரம் அக்கா

வளர்க உங்கள் சேவை

நசரேயன் said...

// சில சுவாரசியாமான "வாக்குமூலங்களை" இங்கே தொகுத்து தந்து, பகிர்ந்து கொள்கிறேன்.//

நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குறோம்

திருவாரூர் சரவணா said...

இதுல நீங்க சொல்லியிருக்குற செய்தி எல்லாமே உண்மைதான். உடனே சொந்த அனுபவமான்னு கேட்கக் கூடாது. ஆனா இனிமேதான் அந்த அந்த அனுபவம் கிடைக்கப் போகுதுன்னு ஒப்புக்கொள்ளத்தான் வேணும். இன்னும் புரியலையா...நீங்க சொல்லியிருக்குற ஆண்களின் மனசாட்சிக் குரல் திருமணம் ஆன ஆண்களுக்குரியது. அத சொன்னேன்.

வருண் said...

Chitra: சரி, ஆண் பேச நினைப்பதெல்லாம்னு நீங்களே பேசி முடிச்சுட்டீங்க! LOL

ஆனா ஒண்ணுங்க, "கெட்டாலும் ஆண்மக்கள் மேன் மக்களே!!" :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. இவ்ளோ மேட்டர் இருக்கா இதுல..??

ஓகே ஓகே.. கொஞ்ச நெஞ்சம் டவுட் இருந்ததும் கிளியர் ஆச்சு :P :P

எப்பவும் போல்.. சிரிக்க வசிடீங்க..
பெண்கள் மனது பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் வெயிட்டிங்.. :)

movithan said...

டாக்டர் வசூல் ராணி....

அசத்தல் ஆராய்ச்சி

சுசி said...

செம ஆராய்ச்சிதான் போங்க.

GEETHA ACHAL said...

மிகவும் பெரிய ஆராய்ச்சு...மிகவும் நகைசுவையாக அழகாக ஒவ்வொருவர் மனதினையும் புட்டு புட்டு வைத்து இருக்கின்றிங்க...சூப்பர்ப்...

Mythili (மைதிலி ) said...

இனி மேல கவனமா இருக்கப்போறேன் சித்ரா (இது வரை இந்த விஷயத்தை சரியா கவனிச்சதில்லை)... இப்ப நீங்க பாடம் நடத்திட்டீங்கல்ல.. நல்ல காமடியான பதிவு.ஆண்களோட அகராதி பார்த்தாச்சு.. இதொட விட்டுடக்கூடாதா?? பெண்கள பத்தி எழுதித்தான் ஆகணுமா?? இது கொள்ளிகட்டையை எடுத்து நம்ம தலையை நாமே சொறிஞ்ஜிகிட்ட மாதிரி ஆகிடாது..

Chitra said...

Mythili Madam,

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சூப்பர் கமென்ட்...... இப்போதான், questionnaire க்கு கேள்விகள் collect பண்ணிக்கிட்டு இருக்கேன்..... பதில்கள் எப்படி வருதுனு பார்ப்போம்...... எப்படியும் ரெண்டு வாராமாவது minimum ஆகும் போல... பாக்கலாம்.....
ஆண்கள் sportive ஆ எடுத்துக்கிட்டாங்க..... நாமும் குறைஞ்சவங்க இல்ல என்று காட்ட வேண்டாமா?

CINEMA GALLARY said...

தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?

தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்? http://cinema-gallary.blogspot.com/2010/05/blog-post_25.html

அ.ஜீவதர்ஷன் said...

சங்கத்து ரகசியங்களை பகிர்ந்துவிட்டு பெயரை குறிப்பிட வேண்டாம் என்று கூறிய அன்பர்களுக்கு கண்டனங்களை பதிவு செய்கிறேன் .

Prasanna said...

கண்ணா.. ஒரு பக்கத்தைதான் பாத்து இருக்கீங்க ;) இன்னொரு பக்கத்தை பாத்தீங்க நொந்துடுவீங்க..

(இது சும்மா ரஜினி டைலாக்.. இதற்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை)

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல் பதிவு. ஆராய்ச்சிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

flower said...

refer Dr.Shalini dated 25.5.2010.

Anonymous said...

ரசித்தேன்

JAYANTHI DINESH said...

Chitra,

Un blog padikka manasukku romba sandhosama irukku...You have very good writting skills....

அஷீதா said...

pineiteenga chitra....nalla aaraaychi :)))))))))

டவுசர் பாண்டி said...

எப்பிடி எப்பிடியெல்லாம் யோசிக்கிராங்கோ !! எப்புடீ !!

mightymaverick said...

//பாதிபேர் உண்மை உண்மைன்னு தலையாட்றது தெரியுது//பாக்கலாம்... நம்ம ஆராய்ச்சி திலகம், ஆயிரம் பட்டம் வாங்கிய அபூர்வ சித்ராம்மணி அடுத்ததாக பெண்கள் பற்றிய பதிவு போடுவதாக சொல்லி இருக்கிறார்கள்... அவர்கள் எத்துனை உண்மைகளை சொல்லுகிறார்கள்... அதனை எத்துனை பெண்கள் உண்மைன்னு ஒத்துக்கிறாங்க பாக்கலாம்...


//அடக்கொடுமையே... பயபுள்ளைங்க மாத்தி மாத்தி உண்மைய சொல்லுதுங்களே.... எங்கபோயீ முடியுமோ//அட தைரியமா ஒத்துகிட்டாங்களே... அதை சொல்லுங்க... பாக்கலாம்... அந்த சங்கத்து ரகசியங்கள் எத்துனை வெளியே வருதுன்னு...


//ஆனா ஒண்ணுங்க, "கெட்டாலும் ஆண்மக்கள் மேன் மக்களே!!" :)//தப்புங்க சார்... கேட்டாலும் ஆண்மக்கள் male மக்களே...ஹிஹிஹி


கடந்த வாரம் ஆராய்ச்சி வாரம் என்று நினைக்கிறேன்... தக்குடு என்னடான்னா, மூக்கை வைச்சு பெரிய ஆராய்ச்சி பண்ணி இருக்கான்... நீங்க என்னடான்னா ஆண்களை காலை வாரி விட்டிருக்கீங்க... பாக்கலாம். அடுத்த பதிவில் வரும் பெண்கள் பற்றிய ஆராய்ச்சியில் எத்துனை முட்டை உடையப்போகுதுன்னு...

அம்பிகா said...

Ph.D வாங்குற அளவுக்கு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க போல...
அசத்தல்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டாக்டர் சித்ரா வாழ்க

பாலா said...

நல்ல பதிவுதான். ரொம்ப ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க..

இதையும் படிச்சு பாருங்க..

http://balapakkangal.blogspot.com/2010/05/blog-post_27.html

ஸாதிகா said...

நல்ல ஆராய்ச்சி.தொடருங்கள் சித்ரா

Radhakrishnan said...

எப்போ ஆராய்ச்சிக்கான தேர்வு? :) நல்லாவே இருக்குங்க.

butterfly Surya said...

சித்ராவா இது..?? யப்பா

ராமலக்ஷ்மி said...

ஹலோ டாக்டர்:))!

Anitha Manohar said...

சித்ரா,
அலசி ஆராஞ்சிட்டீங்க போங்க...ஹ்ஹாஹ்

Jaleela Kamal said...

நல்ல எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சிட்டீஙக்

culinary tours worldwide said...

dear chitra thank u for ur comment VIETNAMESE RICE PAPPER ROLL im v happy ur comments

Unknown said...

:-)))

Unknown said...

நல்லாதான் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க..

காதர் அலி said...

யக்கோவ், நானும் பின்னோட்டம் போடணும் என்று மௌசை சுத்து சுத்துன்னு சுத்தினதுதான் மிச்சம்,சுத்தின சுத்துல என்ன வாசிச்சோம் என்றே மறந்து போயிட்டது போங்க.