Sunday, November 7, 2010

தனி மரங்களின் தீபாவளி.

இந்தியாவில் இருக்கும் வரை, தீபாவளி குதூகலத்துக்கும்  கலகலப்புக்கும் பஞ்சம் இருந்ததில்லை.... எங்கள் தெருவில் உள்ள வீடுகளில் முதலில் வர்ண கோலங்கள் களை கட்டி விடும்.  பக்கத்து வீடுகளில் உள்ள தீபாவளி பட்சணங்கள் எங்கள் வீட்டிலும் அணி வகுத்து வரும்.  பட்டாசுகள்  - இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என்று பாராது - எல்லோரும் சேர்ந்து வெடிப்போம்.   அப்படியாக இருந்து விட்டு,  அமெரிக்க வந்த பின்  குடும்பத்தை மட்டும் அல்ல, அக்கம் பக்கத்து வீட்டினரையும்  தொலைத்து விட்டு, திருவிழா கூட்டத்தில் காணாமல் போன சிறுமி போல கண்களில் நீருடன் திகைத்து நின்ற முதல் தீபாவளியை மறக்க முடியாது.

அப்பொழுது  என் கணவர் தனது Ph.D. படிப்பில் சேர்ந்து இருந்த நேரம்.  இந்தியாவில் இருந்து மேற்படிப்புக்கு வந்து இருந்த  பல மாணவர்களும் தங்கி இருந்த Apartments Complex  அது.  எங்களைத் தவிர,  இன்னும் மூன்று  ஜோடிகள். மற்றவர்கள் எல்லாம் தனிக்காட்டு ராஜாக்கள்.

மறு வாரம் தீபாவளி.... எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்தது. கனத்த இதயத்துடன்,  தோழிக்கு கால் செய்து பேசினேன். பட்டும் படாமல் பேசினாள். என்னவென்று கேட்டேன். "home- sick. வீட்டை ரொம்ப தேடுது , " என்றாள்.  எனக்கே சந்தோஷம் பஞ்சம் என்று அங்கே பேசினால், அவள் கிட்ட இன்னும் சந்தோஷப் பஞ்சம், ஜிங்கு ஜிங்குனு தலை விரித்து ஆடி கொண்டு இருந்தது. இது வேலைக்கு ஆவுறதில்லை - என்ன சொல்வதென்றும் தெரியவில்லை  - பெருமூச்சுடன் போன் வைத்து விட்டேன்.

அடுத்த நண்பரை அழைத்து பேசினேன். அங்கும் அதே  ரெட் சிக்னல். "போங்கப்பா - இந்த அழுகுணி ஆட்டத்துக்கு நான் வரல," என்று போன் வைத்து விட்டேன்.  மூன்றாவது நண்பர், கார்த்திக் அழைத்து பேசினேன்.  போன் எடுத்த உடனேயே,  "சித்ரா, தீபாவளிக்கு என்ன பண்றீங்க?" என்று கேட்டார்.  இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லைதான்...
"கார்த்திக், நான் கிறிஸ்துமஸ் கொண்டாடுரவ.  என்கிட்டே போய் இதென்ன கேள்வி?" என்றேன்.
கார்த்திக் சளைக்காமல், "அது எங்களுக்கு தெரியாதா?  உங்களை என்ன - தீபாவளிக்கு ஸ்பெஷல் பூஜை பண்ணலியா என்று கேட்பேன்?  தீபாவளிக்கு ஸ்பெஷல் விருந்து பண்ணலியா என்று தான் கேட்பேன்.  நீங்கள் எல்லாம் இப்படி அமைதியா இருந்தா, எங்களை மாதிரி தனி மரங்களுக்கு கல்யாணம் ஆகிற வரை தீபாவளியை டிவியில தான் பார்க்கணுமா?" என்றாரே பார்க்கலாம்.

தெரிந்தோ தெரியாமலோ, என் சோக மனதில் ஒரு பட்டாசு கொளுத்தி போட்டு விட்டார்.  என் கண்களில் ஸ்பார்க் தெரிந்தது.   வாயில் சிரிப்பு மத்தாப்பு...... எத்தனை தீபாவளிக்கு தான் ஊர் நினைவில் சோக கீதம் பாட முடியும்? தொடர்ந்து சில போன் கால்கள்.  இது, அனுதாப பேச்சுக்கு அல்ல.  சரவெடி பிளான்க்கு......


தீபாவளி என் வீட்டில் என்று முடிவு செய்தேன்.  எல்லோரும் பங்கு எடுக்கும் விதமாக, ஆளுக்கு ஒரு ஐட்டம் கொண்டு வரும்  பாட்லக் டின்னெர் (potluck dinner) என்று முடிவு செய்தேன். ஒரு தோழி, தனக்கு லட்டு செய்யத் தெரியும் என்றார்.... ஒருவர்,  முறுக்கு என்றார் - ஒரு நண்பர்,  அவியல் என்றார் - ஒரு நண்பர் - வடை என்றார். இப்படியாக ஒரு நீண்ட மெனு - ஆயிரம் வாலா பட்டாசாக நீண்டது. நானும் என் பங்குக்கு இரண்டு ஐட்டம் செய்து வைத்தேன்.

மள மள வென்று, எங்கள் வீட்டில் தீபாவளி அன்று கூட்டம் சேர ஆரம்பித்தது.  Home-sick என்று சோர்ந்து இருந்த தனி மரங்கள் முகங்களில்,  தீபாவளி தீபங்களின் பிரகாசம்.  தோழமையுடன் ஒவ்வொருவரின் அனுசரணையான வாழ்த்துக்களில்  எங்கள் குடும்பங்களை கண்டோம்.   ஊரில்,  குடும்பத்தினர் போல பழகிய அக்கம்  பக்கம் வீட்டினரின் நட்பு பிடிப்பை கண்டோம்.  சந்தோஷம் வாண வேடிக்கையாக மின்னியது.

சாப்பாட்டுக்கும் கலகலப்பான பேச்சுக்கும் குறைவு இல்லாமல், களை கட்டியது.  அந்த தீபாவளியில் கார்த்திக் எனக்கு கற்று கொடுத்த பாடத்தை இன்று வரை மறந்ததில்லை.   ஒவ்வொரு வருடமும் தீபாவாளி வருகிறது - ஊர் நினைவு வருகிறது - அமெரிக்கா வந்த முதல் வருடத்தில், மனதை அழுத்திய home-sickness நினைவுக்கு வருகிறது.  எங்கள் வீட்டருகே இருக்கும் முதன் முதலாய்  "தனி மரமாய்" இருக்கும்  கல்லூரி மாணவர்கள் முகத்தின் சோகம் புரிகிறது.  என் கணவர் உற்சாகத்துடன் பேசி அழைக்கிறார்.  அவரவருக்கு தெரிந்த உணவு வகைகளை கொண்டு வருகிறார்கள்.

தீபவாளி கொண்டாடப்படும் மதமோ - மதம் சொல்லும் காரணமோ அப்பொழுது அவர்களுக்கு தெரிவதில்லை.   குடும்பமும் பாசமும் - அவர்களை முதன் முதலாக பிரிந்த ஏக்கமும் தான் தெரிகிறது.  தனி மரம் தோப்பாகாது. ஆனால், எல்லோரும் சேர்ந்து வரும் போது ..........  ஆஹா...... !  ஒவ்வொரு வருடமும் தீபாவளி - எங்கள் மனதிலும் - வீட்டிலும். பட பட பட பட............... கல கல கல கலகலப்புக்கு பஞ்சம் இல்லையே!http://www.ladiesspecial.com/IssueDisplay.asp?BookId=33
இந்த மாதம் "லேடீஸ் ஸ்பெஷல்" பத்திரிகையில் வெளியான எனது கட்டுரை, இது.  என்னை கட்டுரை எழுத சொல்லி ஊக்குவித்த தேனம்மை அக்காவுக்கு நன்றி.

படங்கள்:  நன்றி, கூகுள்!

122 comments:

என்னது நானு யாரா? said...

சூப்பர் சித்ரா! என் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிட்டது உங்களின் பதிவு! மதங்களைக் கடந்த தீபாவளி! ரொம்ப அருமை! தொடருங்கள் உங்களின் அமைதி ஆக்கப் பணியினை!

ரொம்ப நல்லா இருக்குங்க பதிவு!

Asiya Omar said...

ஆகா அட்டகாசம்,வாழ்த்துக்கள்.

எப்பூடி.. said...

பண்டிகைகளை மதத்தைதாண்டி ஒரு மகிழ்ச்சியாக கொண்டாடவே பெரும்பாலானவர்கள் விரும்புவது வழக்கம், உங்களது தீபாவளிபோலவே நானும் கிறிஸ்மஸ், வெசாக் எல்லாம் கொண்டாடியிருக்கிறேன், மீலாதுந் நபி பெருவிழாவில் புல் கட்டு(சாப்பாடு) கட்டியிருக்கிறேன். அதில இருக்கிற சகோதரத்துவம், மகிழ்ச்சி எதிலையும் வராது.

நாலு பேருக்கு மகிழ்ச்சியின்னா எதுவுமே தப்பில்ல :-)

தங்களுக்கு அட்வான்ஸ் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.

a said...

உங்க லிஸ்ட்ல என்னயும் சேர்த்துக்குங்க..........
நாங்களும் potluck dinner அழைப்பு விடுத்து தனிமர தீபாவளியை தோப்பு - தீபாவளியாக மாத்தி கொண்டாடினோம்.......

எல் கே said...

கூடி களிக்கவே பண்டிகைகள். உங்கள் கட்டுரையும் வந்துள்ளதா? வாழ்த்துக்கள்

Anonymous said...

அருமை சித்ராக்கா!

என்னைப் போன்ற "அயல் தேச தனிமர"ங்களின் வருத்தங்களையும் அழகாய் பதிவு செய்திருக்கிறீர்கள்!

வாழ்த்துக்கள்..

ஜோதிஜி said...

தேனம்மை பெண்களுக்கு ஒரு வழிகாட்டி. ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அழகா கொண்டாடியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Prapa said...

உங்கள போல எல்லோருடனும் சேர்ந்து பண்டிகைகளை கொண்டாட ஆசையா இருக்கு... அத்தோட சமையலையும் ஒரு கட்டு கட்டணும்.. கிடைக்குமா/?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்ல கட்டுரை சித்ரா..
நீங்க சொல்வது ரொம்ப உண்மை.. இந்தியாவில் இருந்தாலும் பல சமயம் தீபாவளிக்கு நாங்க போகமுடியாமல் பெரியவங்களும் வரமுடியாமலும் ஆகிடுது.. எதிர்வீட்டு ஆண்ட்டி தான் என் பையனுக்கு பாட்டி அவங்க பேரன் தான் கஸின் ப்ரதர்.. :) தீபாவளி ஆச்சு..

butterfly Surya said...

வாழ்த்துகள் சித்ரா. எங்க வீட்லேயும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்.

தேனம்மைக்கு நன்றி.

Jeysingh said...

rompa arumai.....

தேவன் மாயம் said...

very very very nice attitude! Keep it up... I rarely see this kind of attitude in US indians ( my relatives!)

ராமலக்ஷ்மி said...

// என் கணவர் உற்சாகத்துடன் பேசி அழைக்கிறார். அவரவருக்கு தெரிந்த உணவு வகைகளை கொண்டு வருகிறார்கள்.//

அருமை சித்ரா.

லேடீஸ் ஸ்பெஷலுக்கும் வாழ்த்துக்கள்!

S Maharajan said...

வாழ்த்துக்கள் சித்ராக்கா!

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு அருமை.கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
சேர்ந்து சாப்பிட்டா கிடைக்கும் மேன்மை

ஜீஜிக்ஸ்சில் பரிசு பெற வாழ்த்துக்கள்

மொக்கராசா said...

உங்களின் இந்த பதிவு என் மனதை நெகிழ செய்துவிட்டது.

வாழ்த்துக்கள். எங்கேயோ படித்தது,உங்களின் இந்த பதிவுக்கு பொருந்தும்.

"God wants us to be a praying people. But more than that, God wants us to pray for people. The blessing of that kind of prayerful life is that we get to live peaceful and quiet lives full of godliness and holiness. So pray, dear friend in Jesus, pray as if world peace depends upon it, because it does!"

Anonymous said...

//தீபவாளி கொண்டாடப்படும் மதமோ - மதம் சொல்லும் காரணமோ அப்பொழுது அவர்களுக்கு தெரிவதில்லை. குடும்பமும் பாசமும் - அவர்களை முதன் முதலாக பிரிந்த ஏக்கமும் தான் தெரிகிறது. தனி மரம் தோப்பாகாது. ஆனால், எல்லோரும் சேர்ந்து வரும் போது .......... ஆஹா...... ! ஒவ்வொரு வருடமும் தீபாவளி - எங்கள் மனதிலும் - வீட்டிலும். பட பட பட பட............... கல கல கல கலகலப்புக்கு பஞ்சம் இல்லையே!//

சந்தோஷ நிகழ்வுகளை கொண்டாட மதம் இனம் மொழி என்றும் எங்கும் தடையில்லை...உங்கள் நேர்த்தி சமத்து பிடிச்சிருக்கு சித்ரா..

Unknown said...

சித்ரா.. மதங்களை கடந்த உங்களின் தீபாவளி அருமை...
எங்கள் வீட்டில் நாங்கள் தீபாவளி கொண்டாட வில்லை என்றாலும் என் நண்பர்களின் வீட்டுக்கு சென்று தீபாவளி,பொங்கல், கிருஸ்துமஸ் கொண்டாடுவோம்.. அவர்களும் பக்ரீத், பெருநாள் அன்று எங்கு வீட்டுக்கு வருவார்கள்... மற்றவர்களுடன் சேர்ந்து பண்டிகை கொண்டாடும் சுகமே தனிதான்..

Deepa said...

Excellent!!

Alarmel Mangai said...

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்பதை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

எழுத ஊக்குவித்த தேனம்மை அக்காவுக்கு நன்றி...

RVS said...

மத மாச்ச்சர்யங்களை தொலைக்கவே பண்டிகைகள்... நல்ல சிறப்பான கட்டுரை சித்ரா. வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கிட்டீங்க! அயல்தேசங்களில் தனிமரமாய் நிற்பவர்களின் உணர்வுகளைச் சரியா சொல்லியிருக்கீங்க!

Unknown said...

Hi,

Congrats on being published in the magazine...Keep rocking!!:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

ஸாதிகா said...

சித்ரா,நானும் லேடீஸ் ஸ்பெஷலில் உங்கள் கட்டுரை பார்த்தேன்.சுவாரஸ்யமாக இருந்தது.வாழ்த்துக்கள்.ந்ட்புக்களின் பார்வைக்காக அதனை ஸ்கான் செய்து போட்டு இருக்கலாமே?

ஸாதிகா said...

சித்ரா,நானும் லேடீஸ் ஸ்பெஷலில் உங்கள் கட்டுரை பார்த்தேன்.சுவாரஸ்யமாக இருந்தது.வாழ்த்துக்கள்.ந்ட்புக்களின் பார்வைக்காக அதனை ஸ்கான் செய்து போட்டு இருக்கலாமே?

தினேஷ்குமார் said...

தனி மரங்களின் தீபாவளி

தனிமை
தகர்ந்தெரிய
புது சொந்தங்கள்
படைப்போம்...........

KParthasarathi said...

மிகவும் அழகாகவும்,உண்மையாகவும் எழுதி உள்ளீர்கள்.மனது சந்தோஷம் என்பது துணி
மணியிலோ,பட்டாசுகளிலோ,
தின்பண்டங்களிலோ முழுவதும் இல்லை இவை எல்லாம் இருந்தும் மனது உற்ச்சாகமாக இருக்கும் என்று நிச்சயமாக சொல்ல முடியாது.
சந்தோஷம் என்பது நமது மனதையும் ,நேச மனப்பான்மையையும்,பழகும் தன்மையையும் கொண்டது.மத சம்பந்த பட்டதே இல்லை. கிறிஸ்துமஸ் விழா காலங்களில் நாங்களும் வீட்டுக்கு வெளியில் நக்ஷத்திர விளக்கையும், கலர் பல்பு தோரணங்களையும் கட்டி இரவு வெகு நேரம் முழித்துக்கொண்டு பங்கெடுத்துக்கொள்வோம்.
I am happy you took the lead and made the occasion a gala time.Thanks Chitra.I wonder whether you can share your email ID
kpartha12@gmail.com

Gayathri Kumar said...

Manadai thottu vittirgal..

அமுதா கிருஷ்ணா said...

இது தான் கலக்கல் தீபாவளி

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் சித்ரா,தலைப்பே அட்டகாசமாக இருக்கு.

வாழ்த்துக்க்் ரொம்ப சந்தோ்ம்.
அனுப் மெசேஜும் ஜீ்ப்பர்/////

Madhavan Srinivasagopalan said...

//இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என்று பாராது - எல்லோரும் சேர்ந்து வெடிப்போம். //

Super. மதங்களைக் கடந்த தீபாவளி

One set of sweet box, crackers Chitrakku parcel..

culinary tours worldwide said...

v nic dear chitra thanks for comment

Madurai pandi said...

Diwali Virundhu!!! vazhthukkal!!!

சசிகுமார் said...

சாப்பாடு நல்லா இருந்தது ஆனா வடை மட்டும் எனக்கு கெடைக்குல. நல்ல பகிர்வு.

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லபதிவு!
வாழ்த்துக்கள்.

மாணவன் said...

"தீபவாளி கொண்டாடப்படும் மதமோ - மதம் சொல்லும் காரணமோ அப்பொழுது அவர்களுக்கு தெரிவதில்லை. குடும்பமும் பாசமும் - அவர்களை முதன் முதலாக பிரிந்த ஏக்கமும் தான் தெரிகிறது. தனி மரம் தோப்பாகாது. ஆனால், எல்லோரும் சேர்ந்து வரும் போது .......... ஆஹா...... ! ஒவ்வொரு வருடமும் தீபாவளி - எங்கள் மனதிலும் - வீட்டிலும். பட பட பட பட............... கல கல கல கலகலப்புக்கு பஞ்சம் இல்லையே!"

அருமை, சந்தோஷமான தருனங்களை
அழகாக பதிவு செய்துள்ளீர்கள்

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

வாழ்த்துக்களுடன்
மாணவன்

மங்குனி அமைச்சர் said...

இதெல்லாம் நம்ம ரத்தத்துலே ஊறி இருக்கு மேடம்

Prabu M said...

சூப்பர் அக்கா....
என்னுடைய இந்த வருட தீபாவளியை நினைத்துக்கொண்டேன் இதைப் படித்தபோது..
மும்பையில் உங்கள் பாஷையில் தனிக்காட்டுராஜா இப்பொழுது நான்... :)
நீ கிறிஸ்தும‌ஸ் கொண்டாடுற‌வ‌ன் தானே என்று சொல்லி ஆஃபீஸ் வ‌ர‌ச் சொல்லிவிட்டார்க‌ள்..
முந்தைய‌ நாள் ஹோட்ட‌ல் சாப்பாட்டில் ஃபுட் பாய்ஸ‌ன் ஆகித் தீபாவ‌ளி அன்று ஆட்டோ பிடித்து என்னை நானே ஹாஸ்பிட‌லில் அட்மிட் செய்துகொண்டேன்... பாட்டில் பாட்டிலாக‌ டிரிப்ஸ் ஏற்றிய‌ பின்பு த‌மிழ்சினிமாவில் வ‌ருவ‌து போல் "நான் எங்கே இருக்கேன்" என்று கேட்டேன்... டாக்ட‌ர் "நீ பொழ‌ச்சிட்ட‌ ஹாப்பி தீபாவளி"ன்னு சொல்றார்!! ஸோ தீபாவ‌ளி காலைல‌ ஹோம்சிக்ன‌ஸ்ல‌ ஆர‌ம்பிச்சு சாய‌ங்கால‌ம் ரிய‌ல்சிக்ன‌ஸில் போய் முடிந்துவிட்ட‌து.....ஹ்ம்ம் என்ன‌ செய்ய‌ இங்கே ஒரு சித்ரா அக்கா இல்லையே!! :)

ரொம்ப‌ அழ‌கா எழுதியிருக்கீங்க அக்கா.... ஸோ ஸ்வீட்... எண்ண‌மும் எழுத்தும்!! :)

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள்!(தலைப்பிற்கும் சேர்த்து!)

தமிழ் உதயம் said...

தனி மரங்களின் தீபாவளி

தலைப்போ கவிதை நயம்.
படைப்போ இனிய ரகம்.

Unknown said...

வாழ்த்துக்கள்ங்க.. :-)))

Anonymous said...

சிறப்பான பதிவு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

அருண் பிரசாத் said...

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இது ஒன்றுதான் வழி... நாங்களும் இங்கு அப்படித்தான் கொண்டாடினோம்

இளங்கோ said...

//Home-sick என்று சோர்ந்து இருந்த தனி மரங்கள் முகங்களில், தீபாவளி தீபங்களின் பிரகாசம். //
Nice :)

vasu balaji said...

welldone. :)

ஹேமா said...

அருமையான கட்டுரை சித்ரா.வாழ்த்துகள்.

ALHABSHIEST said...

ஏய் பாளையங்கோட்டையா ஓ[ன்] ஊட்டுல தீவாளியன்னைக்கு பருமாருனத படமா போட்டு என்ன எதுக்கு கடுப்பாக்குத. ஒளுங்கு மரியாதயா ஒரு ஆளு சாப்ட்த மாரி சோத்த இந்த கொரியரு கிரியருங்கானுவல்லா அதுல அனுப்பி வையி. சரி அவருக்கு[மச்சானுக்கு] எந்தூரு?.

அன்பரசன் said...

//எனக்கே சந்தோஷம் பஞ்சம் என்று அங்கே பேசினால், அவள் கிட்ட இன்னும் சந்தோஷப் பஞ்சம், ஜிங்கு ஜிங்குனு தலை விரித்து ஆடி கொண்டு இருந்தது.//

ஹி ஹி ஹி.

அன்பரசன் said...

தலைப்பே அட்டகாசமாக இருக்கு.
வாழ்த்துக்கள்.

சுசி said...

வாழ்த்துக்கள் சித்ரா.. அசத்திட்டிங்க போங்க..

படம் சூப்பர்..

//கண்களில் நீருடன் திகைத்து நின்ற முதல் தீபாவளியை மறக்க முடியாது.//
ஆவ்வ்வ்..

Udayakumar Sree said...

தேரேது சிலையேது திருநாளேது...
தெய்வம்போல் மனிதரெல்லாம் மாறும்போது!

எஸ்.கே said...

கட்டுரை அருமையாக உள்ளது! அழகு! அருமை! சிறப்பு!

Angel said...
This comment has been removed by the author.
சுபத்ரா said...

சூப்பர்.. இங்க தான் நீங்க நிக்கிறீங்க :-)

GEETHA ACHAL said...

உண்மை தான் சித்ரா...முதன்முதலாக வீட்டை விட்டு வெளிநாடு வருப்வர்கள் அனைவருக்கும் ஏற்படுவது தான்...எனக்கும் அப்படி தான் இருந்தது...இப்ப எல்லாம் மாறியே போச்சு...அழகாக எழுதி இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...வாழ்த்துகள்...நானும் இதனை லேடீஸ் ஸ்பெஷலில் பார்த்தேன்..

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கட்டுரை சித்ரா.. ஸ்பெஷலில் வந்ததுக்கு முதலில் ஸ்பெஷல் வாழ்த்துக்களை பிடியுங்க.

அம்பிகா said...

ஆஹா! என்ன ஒரு அழகான தலைப்பும்.,கட்டுரையும். படிக்கவே சந்தோஷமாய் இருக்கிறது.
வாழ்த்துக்கள் சித்ரா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்!

கிறுக்கன் said...

மதம் கடந்த மனிதம் பிரமாதம்!!!!
வாழ்துக்கள் சித்ரா!!!

-
கிறுக்கன்

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள் சித்ரா.

நேசமித்ரன் said...

நெகிழ்வான நிகழ்வை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி

Philosophy Prabhakaran said...

இந்த மாதிரி போட்டோவெல்லாம் போட்டு என் நாவில் எச்சில் ஊற வைக்காதீர்கள்...

அன்புடன் அருணா said...

பூங்கொத்து சித்ரா!!

Ramesh said...

செம! படிக்கும் போதே ஒரு சந்தோசம் வருதுங்க சித்ரா..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நீங்க என்ன பலகாரம் செய்தீங்கன்னு சொல்லவே இல்ல ?

Nithu Bala said...

Vazhthukal Chitra..migavum arumayana pathivu..

நிலாமதி said...

உண்மையான,அன்புப்பதிவு...வாண வேடிக்கையல்ல.தீபாவளி அன்பு உள்ளங்களில் வரும் மத்தாபூ சிரிப்புதான் தீபாவளி.....உங்களதும் உங்கள் கணவனதும் உபசரிக்கும உன்னத உள்ளங்களுக்கு பாராட்டு. நல்ல மனங்களை சம்பாதித்து விடீர்கள்.
நானும் கிறிஸ்மஸ் தான் கொண்டாடுவது வழக்கம்.

மாதேவி said...

இனிது இனிது.வாழ்த்துக்கள்.

pichaikaaran said...

wow.....

superb,,,,/./

belated diwali wishes

ஸ்ரீராம். said...

தனிமையை மாற்றி இனிமையாக்கிக் கொண்ட தீபாவளி என்று சொல்லுங்கள். லேடீஸ் ஸ்பெஷலில் வெளியானதற்கு பாராட்டுக்கள்.

Unknown said...

மதங்களைக் கடந்த தீபாவளி!
nice!! :)

ராஜவம்சம் said...

தனி மரங்களின் தீபாவளி
கலகலப்பானது தாங்களாள்
வாழ்த்துக்கள்.

சிவராம்குமார் said...

செம செம!

\\நானும் என் பங்குக்கு இரண்டு ஐட்டம் செய்து வைத்தேன்.\\

ஆனா கடைசி வரை நீங்க என்ன பண்ணீங்கனு சொல்லாம ஆடுனதுக்கு பேரு போங்கு ஆட்டம் ;-)

தெய்வசுகந்தி said...

நாங்களும் இப்படித்தான் தீபாவளி கொண்டாடுகிறோம். நல்ல தலைப்பு சித்ரா!

வருண் said...

தோப்பு தனிமரமாகி இப்போ மறுபடியும் தீவாளிக்கு தனிமரங்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து தோப்பாகி தீவாளி கொண்டாடியிருக்காங்க போல.

"பொட்டு வெடி" யாரும் கொண்டு வந்தாங்களா னு நீங்க சொல்லல! :))

R. Gopi said...

சூப்பர்.

நான் லண்டன் தீபாவளி பத்தி எழுதறேன்

அரசூரான் said...

சூப்பர்... கலக்கல் தீபாவளின்னு சொல்லுங்க. நாங்க இன்னும் அபார்மெண்ட்லதான் இருக்கோம், ஆகையால் கூட்டத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் பஞ்சம் இல்லாம் இருக்கு... இந்த வருசமும் வெடியோட தீபாவளி... :)

தாராபுரத்தான் said...

மனம் இருந்தால் மகிழ்ச்சி தானே வரும்

நசரேயன் said...

//தனி மரம் தோப்பாகாது. ஆனால்,
எல்லோரும் சேர்ந்து வரும் போது//

தோப்பாகலாம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

[im]http://www.animationbuddy.com/Animation/Science_and_Body/Hands_and_Feet/Clapping.gif[/im]

suneel krishnan said...

நம் நாட்டில் கூட இப்படி இனைந்து கொண்டாட மாட்டாங்க :) இப்ப எல்லாம் டி வீ தான் :)
நீங்கள் நண்பர்களுடன் கொண்டாடியது உண்மையிலயே மகிழ்ச்சி தான்

அலைகள் பாலா said...

சூப்பர்....

பவள சங்கரி said...

யதார்த்தமான கட்டுரைம்மா....வாழ்த்துக்கள்.

priyamudanprabu said...

திருவிழா கூட்டத்தில் காணாமல் போன சிறுமி போல கண்களில் நீருடன் திகைத்து நின்ற முதல் தீபாவளியை மறக்க முடியாது
///

AAMANGA..

priyamudanprabu said...

தீபவாளி கொண்டாடப்படும் மதமோ - மதம் சொல்லும் காரணமோ அப்பொழுது அவர்களுக்கு தெரிவதில்லை. குடும்பமும் பாசமும் - அவர்களை முதன் முதலாக பிரிந்த ஏக்கமும் தான் தெரிகிறது. தனி மரம் தோப்பாகாது. ஆனால், எல்லோரும் சேர்ந்து வரும் போது .......... ஆஹா...... ! ஒவ்வொரு வருடமும் தீபாவளி - எங்கள் மனதிலும் - வீட்டிலும். பட பட பட பட............... கல கல கல கலகலப்புக்கு பஞ்சம் இல்லையே

.////////

MM ARUMAIYA SONNINGA

priyamudanprabu said...

http://www.ladiesspecial.com/IssueDisplay.asp?BookId=33
இந்த மாதம் "லேடீஸ் ஸ்பெஷல்" பத்திரிகையில் வெளியான எனது கட்டுரை
///
வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

// தனி மரம் தோப்பாகாது. ஆனால், எல்லோரும் சேர்ந்து வரும் போது .......... ஆஹா......//
சூப்பர் ஐடியாவா இருக்கே சித்ரா........ !!!

"உழவன்" "Uzhavan" said...

அழகான கட்டுரை.. வாழ்த்துகள்!

Unknown said...

beautiful kolam:)

தமிழ்க்காதலன் said...

அன்பு அக்கா.., தாமதமான வருகைக்கு வருந்துகிறேன். தீபாவளிக்காக ஊருக்குப் போய்விட்டு இப்போதான் வந்தேன். உங்கள் பதிவு எனக்கு இன்னொரு தீபாவளி கொண்டாட தூண்டுகிறது. நீங்கள் விருந்து வைத்திருக்கும் இலையைப் பார்த்ததும்...அச்சச்சோ.... எச்சில் ஊறுது. உடனே சாப்பிட ஆசை. அவ்வளவு அழகு. தனி மரங்களை தோப்பாக்கி துயரம் நீக்கி சந்தோசம் தந்த உங்கள் உயர்ந்த உள்ளம் பாராட்டுக்குரியது. நலமே மலர்க. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

goma said...

ஒரே ட்ரஃபிக் ஜாம்....
முண்டி அடிச்சுட்டு வந்து வாழ்த்துச் சொல்றேன்.....ஆட்டொக்ராஃப் ப்ளீஸ்

ஆனந்தி.. said...

சத்தியமா சொல்றேன் சித்ரா..உங்க பதிவில் எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு இது...ஒரு தன்னம்பிக்கை மற்றும் பாசிடிவ் பக்கத்தை அழகா உணர்த்தி இருந்திங்க...rock u !!

Unknown said...

super madam, innum neraya varusam nalla kondadunga

செல்வா said...

மதங்களைக் கடந்த தீபாவளி ., நல்லா இருக்கு அக்கா ..
உங்க கட்டுரை பத்திரிக்கையில் வந்ததில் ஆச்சர்யம் இல்லை ..

Thenammai Lakshmanan said...

சித்து கலக்கிட்ட போ..:)) நல்ல தீபாவளி.. நான் ஒரு கருவிதான்.. உன் எழுத்துக்குத்தான் வலிமை அங்கே..:))

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் அருமையான பதிவு சித்ரா!
'லேடீஸ் ஸ்பெஷலில் இது வெளி வந்ததற்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!
உங்கள் வயதில் நான் இங்கு இருந்தபோது, இப்படித்தான் பண்டிகைகளின் போது தனிமையால் வாடும் நண்பர்களை விருந்துக்கு அழைப்பது வழக்கம். அதெல்லாம் உங்கள் கட்டுரையைப்படித்ததும் உடனேயே நினைவுக்கு வந்து விட்டது!

குட்டிப்பையா|Kutipaiya said...

லவ்லி!

ரொம்ப பாசிடிவ்வான அப்ரோச்!

culinary tours worldwide said...

v nice thanksssssss dear chitra

ஜெயந்தி said...

நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது தனி சந்தோஷம்தான்.

Gayathri said...

சுப்பர் அக்கா உங்கா மனப்பான்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு..நெஜம்மா உங்க மேல மதிப்பும் மரியாதையும் கூடிருக்கு..

Hats off to you

ம.தி.சுதா said...

அக்கா பதிவுலகைத் தான் ஆட்டிப் படைக்கிறிங்கள் என்றால்... பத்திரிகையையும் கலக்கிறிங்க போல இருக்கே... வாழ்த்தக்கள்..

ஆர்வா said...

வாழ்த்துக்கள். ஆமா ஏன் பின்னூட்டங்களுக்கு பதில் போட மாட்டேங்குறீங்க.. ஓ.. நீங்க பிரபல பதிவர் இல்லையா.. மறந்திட்டேன்..(எப்பிடி மாட்டிவிட்டேன் பார்த்தீங்களா)

R.பூபாலன் said...

சித்ராக்கா..... முடியலக்கா.....எப்படி இப்புடிலாம்....!!!!!தீபாவளிக்கு சேர்ந்த பலகாரங்கள் எல்லாம் ஸ்டாக் இருக்கா...?
காலி பண்ணிடிங்களா..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரு நல்ல நட்புக்கு நடுவில் மதம் ஒரு தடையாக இருக்க முடியுமா, என்ன?

“ஆரண்ய நிவாஸ்”

Kurinji said...

valthukkal, ungal blog nandgaga ullathu.

vimalanperali said...

மனித மனதுள் மனிதன் புக இது மாதிரியான கொண்டாட்ட மனப்பான்மைகள் கொஞ்சம் தேவைப்படுகிறதுதான்.

Free computer tips said...

Nice

Suni said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

அமைதி அப்பா said...

காலம் கடந்து படித்த மிக அற்புதமான பகிர்வு. உங்களுக்கு என்னுடைய பாராட்டுகள் மற்றும் நன்றி.

பித்தனின் வாக்கு said...

எனக்கு மெயில் வந்த அன்றே படித்து விட்டேன், கமெண்ட போட முடியவில்லை. நல்ல பதிவு. அனைவரும் நலமா?

Unknown said...

meeeeeeeeeeee

the first

deepa,kayathiri,vaalthukkal

athvathu

deepavali,

karthi thepa valathukal...

Ahamed irshad said...

:)

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_20.html

Prasanna said...

Superb experience :)

VELU.G said...

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நட்சத்திர வாரத்தில் இன்னும் அதிக பிரகாசத்துடன் மின்ன வாழ்த்துக்கள் சித்ரா.

அருமையான அறிமுகம்.

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள் சித்ரா.

கலகலப்ரியா said...

நட்சத்திர வாழ்த்துகள் சித்ரா..! :)

மாதேவி said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.

Subramanian Vallinayagam said...

i know its too late to post a comment. but i want to appreciate u to make u and ur surrounding happy. nice to read this post.

ம.தி.சுதா said...

அக்கா வாழ்த்தச் சொல்ல ஊடி வந்தேன் தங்கள் பதிவு என்னை தடக்க வைத்துவிட்டது அதனால் இங்கே வாழ்த்துச் சொல்லிப் போகிறேன்...
தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/