ஜலீலா அக்கா, ஆசியா ஒமர், ஜெய்லானி, பிரியா ராஜ் மற்றும் மின்மினி எல்லோரும்: Sunshine Award கொடுத்தார்கள்.
SASHIGA ஒரு விருது: Blog Loving Award கொடுத்தார்கள். நன்றி.
மேலும், SASHIGA அவர்கள் - பின்னூட்டம் பற்றிய தொடர் பதிவுக்கும், சங்கவி அவர்கள் - பேருந்து காதல் தொடர் பதிவுக்கும் எழுத அழைப்பு கொடுத்து இருந்தார்கள்.
நான், ப்லாக் எழுத வந்த புதிதில் பேட்டி கொடுத்தது.
http://konjamvettipechu.blogspot.com/2009/11/blog-post_04.html
அதற்கு அப்புறம், இப்பொழுதுதான் பேட்டி கொடுக்க நேரம் வந்தது:
விருது வழங்கிய குழுவினர் மற்றும் தொடர் பதிவு குழுவினர் : வாழ்த்துக்கள், சித்ரா!
சித்ரா: நன்றிகள் பல.
சங்கவி: பேருந்து காதல்???
சித்ரா: மகளிர் பேருந்தில் போய், மகளிர் கல்லூரியில் படித்தவள். மகளிருடன் தோழமையுடன்தான் பழகி இருக்கிறேன்.
சங்கவி: நல்லது. பொதுவாக வரும் பேருந்து காதல் பற்றி உங்கள் கருத்து?
சித்ரா: There is difference between lust and love. அது எத்தனை பேருக்கு புரிந்து, காதல் வந்து இருக்கும் என்று தெரியவில்லை.
சங்கவி: பேருந்து காதல் இல்லைனா பேருந்து கலாய்த்தல் பற்றி?
சித்ரா: நான் போன பேருந்தில் வந்த டிரைவர்கள், தாத்தா வயதை உடையவர்கள். அவர்கள் எங்களுக்கு அறிவுரை வழங்கிய வேகத்துக்கு, பேருந்தையும் ஓட்டி இருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம்.
சங்கவி: கண்டக்டர்கள்?
சித்ரா: ரெண்டு ஆட்கள் மாற்றி மாற்றி வருவார்கள்.
ஒருவருக்கு: நிச்சயமா மூல வியாதி. இல்லைனா, அந்த நேரம் அவர், ஐஸ்வர்யா ராய் அவர்களை தீவிரமாக காதலித்து விட்டு, காதல் தோல்வி ஆகி இருந்திருக்க வேண்டும். எப்பொழுதும், முகத்தை உர் என்று வைத்து இருப்பார். ஒரே, லொள், லொள், லொள் மயம்தான்.
அடுத்தவருக்கு: பவுடர் டப்பா கிட்ட, முகத்தை தாண்டி வருவாயா என்று கேட்டு, முகத்தை விட்டு ரெண்டு இன்ச் நீளத்துக்கு இருக்கிற மாதிரி போட்டு வருவார். சென்ட் bottle என்ற பெயரில் ஏதோ ஒரு நாத்த திரவத்தை அடித்து விட்டு வர - நாங்க மூக்கை பிடித்து விட்டு உட்கார்ந்தால், இறங்க வேண்டிய ஸ்டாப் வரும் வரை மூர்ச்சையாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலைதான் பெரிதாக இருந்தது.
சித்ரா: நான் இதற்கு எல்லாம் உழைப்பது இல்லை. இது அன்புடன் கொடுக்கப்படுவது.
ஆனால், அடுத்து நீங்கள் தரும் விருதை, கலைஞர் அவர்களுக்கு நடக்க போகும் அடுத்த (97,634 வது?) பாராட்டு விழாவில் வைத்து கொடுத்தால் , நீங்களே சமைத்து தரும் பிரியாணியை சாப்பிடும் அளவுக்கு சந்தோஷப் படுவேன்.
ஜெய்லானி: நீங்கள் ஏன் யாருக்கும் விருது வழங்குவது இல்லை.
சித்ரா: நமக்கு வாங்கித்தான் பழக்கம். இன்னும் கொடுக்க ஆராம்பிக்கவில்லை. எல்லாம் என் பிறந்த நாள் கொண்டாட்டம் வரும் போது, வச்சுக்கலாம் என்று இருக்கேன். பக்கா அரசியல்வாதி பேச்சு என்று நினைக்காதீர்கள். 2016 இல் நானும் முதல் மந்திரி ஆனாலும் ஆய்டுவேன். தமிழ் நாட்டு அரசியல் சொல்லி தந்த பாடம் #10234
சித்ரா: ஒரே வாரத்தில் ஆறு விருதுகளை வாங்கிய எனது படத்தை வைத்து மூன்று நாட்களுக்கு பூஜித்து வந்தால், சீக்கிரம் ஒரு விருது பெற்று கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று பதிவர் சாஸ்த்திரம் சொல்கிறது.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், இன்னொரு பதிவரும் சித்ரா என்ற பெயரில் இருக்கிறார் - பின்னூட்டம் இடுகிறார். ஆனால், நான் தான் profile photo வுடன் வலம் வருகிறேன். குழப்பங்களை தவிர்க்க, சொல்லி விடுகிறேன்.
ஆசியா ஒமர்: சித்ரா, உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல.
மின்மினி: கொஞ்சம் இல்ல, ஓவரா - ஓவரா இருக்கு. தாங்க முடியல.
SASHIGA: பின்னூட்டங்கள் பற்றி?
சித்ரா: வாழ்த்துரை போன்றது. எனக்கு வரும்:
:-) முதல், மிகவும் நீ......ண்..... ட..... கமென்ட் வரை எல்லாவற்றையும் விரும்பி படிப்பேன். ஒன்று தெரியுமா? தமிழிஷ் ஓட்டு மற்றும் தமிழ் மணம் பரிந்துரை, மொய் எழுதுற மாதிரி. வாழ்த்துரை சொல்கிறவர்கள் எல்லாம், மொய் எழுதுவது இல்லை. மொய் எழுதுகிறவர்கள் எல்லாம், வாழ்த்துரை சொல்வது இல்லை. பலர், வாழ்த்துரையும் சொல்வது இல்லை, மொய்யும் தருவது இல்லை. இருந்தாலும், வரும் அனைவருக்கும் என் நன்றிகள் பல தெரிவிக்கிறேன்.
SASHIGA: நீங்கள்????
சித்ரா: நான் வாழ்த்துரை (பின்னூட்டம்) வழங்கும் இடம் எல்லாம், மொய் எழுதும் நோட்டு இருந்தால் மொய் கொடுக்காமல் வருவது இல்லை. சிலர், எங்கே வைத்து இருக்கிறார்கள் என்று தேட வேண்டியது இருக்கிறது. சிலர், மொய் வேண்டாம். நீங்கள் வந்ததே போதும் என்று இருக்கிறார்கள். எங்கே ஓட்டு பட்டை, எங்கே பரிந்துரை - அது இல்லாமல், சும்மா வாழ்த்திவிட்டு எனக்கு திரும்பி வர என் மனதுக்கு "கஷ்டமா" இருக்குனா பாத்துக்கோங்க.
உங்கள் "நல்ல" மனது புரிந்து விட்டது, சித்ரா. வாழ்த்துக்கள். உங்கள் பதிவுலக வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை அருமையா சொல்லி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி. :-) நடத்துங்க, நடத்துங்க......... நல்லா இருக்குதுங்க. ரொம்ப எதார்த்தமாக இருக்கு, சித்ரா. அசத்தல். மனதை நெகிழ வைத்து விட்டீர்கள், சித்ரா. நல்ல கவிதை - சாரி, பேட்டி. சே, நீங்கள் எங்களுக்கு எழுதும் பின்னூட்டம் படித்து படித்து ..... எங்களுக்கும் அப்படியே பேச வருது, சித்ரா .......
சித்ரா: :-)))

