Tuesday, March 23, 2010

என்னை மெருகேற்றிய மனிதர்கள்


நான் ஆண்களை வெறுப்பவள் அல்ல. சிலர் என் ரசனைக்கு உரியவர்கள் - சிலர் என் பாராட்டுக்களுக்கு உரியவர்கள் - சிலர் என் மரியாதைக்கு உரியவர்கள் - சிலர் என்னை செதுக்கியவர்கள் - சிலர் என் சந்தோஷ சிரிப்புக்கு உரியவர்கள் - சிலர் என் ஜொள்ளுக்கு உரியவர்கள் - இப்படி................ 

எனது முந்தைய பதிவை படித்து விட்டு,  அதில் உள்ள நகைச்சுவை பிடிப்பை உணர்ந்து, அத்தனை பேரும் சிரித்து கொண்டார்களே தவிர, ஒருவர் கூட சண்டை போட்டு கொண்டு, தேவையில்லாத விவாதத்துக்கு வரவில்லை.  அனைவருக்கும் நன்றி. 

நான் சந்தித்ததில் - பழகியதில் - படித்ததில்/கேள்விப்பட்டதில்  - என்னுள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய சில முக்கியமான ஆண்களை பற்றி ----- இந்த பதிவில் எழுதுகிறேன்.
இன்று நான்,  நானாக இருப்பதற்கு இவர்கள் என் வாழ்வில் - என் சிந்தனையில் - என் மனதில் உண்டாக்கிய பாதிப்புகளே காரணம்.  I thank my Lord for each and every one of them.
                       

திரு.பொ.ம.ராசமணி.
Mr. Po.Ma. Rasamani


நான் செய்த தப்பை,  நான்  பெரிது படுத்தாமல், என்னுடைய உறவினர் ஒருவர் செய்த சின்ன தவறை பெரிது படுத்தி கோபத்தில், நான்  பொங்கி கொண்டிருந்த போது -  அவர் ஒரு புன்னைகையுடன்:

" ஒரு வலைக்குள் மீன் போய்  மாட்டும்  - அந்த வலைக்கு, மீன் வலை என்று பெயர்.
ஒரு வலைக்குள் விலங்கு  போய் மாட்டும்  - அந்த வலைக்கு, விலங்கு  வலை என்று பெயர்.
ஒரு வலைக்குள்  மனிதன் போய் இருப்பான் - அந்த வலைக்கு கொசு வலை என்று பெயர்.
மனிதன் எப்பொழுதுமே, தன்னை விட தன் சூழ்நிலைகளையும் மற்றவர்களையும்,  குற்றம் சொல்லி  காரணம் காட்டி  பேசுவதில் கில்லாடிகள்." என்று மட்டும் சொல்லிவிட்டு சென்று விட,  என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

இன்றும்,  எந்த மனிதரோடும் பிரச்சினை வரும் போது, முதலில் என் தவறு என்ன என்று ஆராயும் மனப்பக்குவத்தை தந்தவர்.
50 வருடங்களுக்கு மேலாக, தன் நகைச்சுவை பேச்சினாலும் எழுத்துக்களாலும்,  "சிரிப்பு தரும் சிந்தனைகள்" தந்தவர்.
இவரை பற்றி தனியாய் ஒரு பதிவு பின்னொரு நாளில்.................!!!
 

 Dr.அன்டோ ராஜ்குமார்.
Dr. Anto Rajkumar

M.B.B.S.,   D.P.M., M.D. (Psychiatry) -  ஒவ்வொரு டிகிரி வாங்கும் போதும் ஒரு கோல்ட் மெடலும் சேர்த்து  வாங்கி,  ஒரு நல்ல மனோதத்துவ மருத்துவராக, சின்ன வயதிலேயே CMC, வேலூரில் கலக்கி கொண்டிருப்பவர்.  சுனாமிக்கு பிறகு  பாதிக்கப்பட்ட மக்கள் நடுவில்,  இவர்  நடத்திய ஆராய்ச்சி கட்டுரையும் மற்றும் சில research articles, British Journal of Psychiatry யில் வெளி வந்திருக்கின்றன. பல international conference சென்று கருத்தரங்கில் பங்கு பெற்று வந்திருக்கிறார்.

 இதை பற்றியெல்லாம் தற்பெருமையுடன் பேசாமல்,   Psychiatry department cricket team (CMC) -  முந்தைய வருட சாம்பியன் ஆன Pharmacy cricket  (CMC) அணியுடன் மோதி  - எப்படி அவரும் அவரது அணியினரும் விளையாடி  ஜெயித்தார்கள் என்பதை  ஒரு உலக கோப்பை வென்ற ஆர்வத்துடன் விவரித்து கூறியது, என்னை ஆச்சர்யப்பட வைத்தது.  தன் தொழிலே வாழ்க்கை என்று இருக்காமல்,  தனது மனதுக்கு பிடித்த - ஆர்வத்துக்குரிய - விளையாட்டில்  சந்தோஷப்படுவதை கண்ட பொழுது - பெரிதாக ஒன்றும் சாதிக்காமலே, என்னுள் குடியிருந்த என் கர்வம்,  என்னை விட்டு விலகி சென்றது.


Solomon :
சாலமன்:

மேற்கண்ட படத்தில் இருக்கும் இவர் சாலமன்.  எனக்கு காதலிக்க கற்று தரும் முன், பெரிய பெரிய காதல் காவியங்கள் கூட அபத்தமாக தெரிந்தது.
எனது ஆத்மார்த்தமான ரசிகர் -  உண்மையான விமர்சகர் - ஆருயிரில் கலந்துள்ள நண்பர் - உற்சாகமாக சுக துக்கங்களில் பங்கு எடுத்து கொள்பவர் -  என்னை எனக்கு அடையாளம் காட்டியவர்.  நாங்கள் சந்தித்தது, எனக்கு இறைவன் தந்த வரம்.

SAINT FR.DAMIEN:

ஹவாய் தீவுகளில் ஒன்றான மொலோகோய் தீவில் ஒதுக்கப்பட்டு வாழ்ந்து வந்த சுமார் 8000 தொழு நோயாளிகளுக்கு நடுவில்  வாழ்ந்து   சேவை செய்து  வந்தார். அவர்களில் ஒருவராக தானும் இருந்து அடிப்படை தேவைகளை செய்து கொடுத்து வந்த அவருக்கும் தொழு நோய் தாக்கி இறந்தார்.  மேலும் விவரங்களுக்கு: 
http://en.wikipedia.org/wiki/Father_Damien

 ஒரு சின்ன உதவி,  நண்பருக்கு செய்ததை  கூட பெரிதாக  நினைத்து கொண்டு, என்னை நானே ஒரு சுய நீதிமானாக (self-righteous person) பாராட்டி கொண்டிருந்தேன்.    தன்னலமற்ற சேவை செய்ய, தன்னையே அர்ப்பணித்த இந்த புனிதரின் உயரிய உள்ளம், என்னை யோசிக்க வைத்தது. நிறை குடம் தளும்பாது என்பதை புரிந்து கொண்டேன்.

  ரஜினிகாந்த்:


இவரையும் -  இவர் படங்களையும் -  இவர் நடிப்பையும் - இவர் கொள்கைகளையும் பலர் பலவிதமாக விமர்சிக்கலாம். எனக்கு எதுவுமே முக்கியம் இல்லை. விமர்சிப்பவர்கள் -  தங்களின்  அறுபதாவது  வயதிலும்,  அந்த ஸ்டைல் லுக்கில் இருந்து கொண்டு விமர்சிக்கட்டும்.
சிறு வயதில், எந்த உற்சாகத்தோடு இவர் படங்களை பார்த்தேனோ, அதே உற்சாகத்தோடு இன்றும் பார்க்கிறேன். விசில் அடிக்க தெரியாத நான், ஒரு umpire விசில் வாங்கி வைத்து இருக்கிறேன். கூட்டத்தோடு கூட்டமாக ஆட்டம் போட்டு, விசில் அடித்து கலகலக்க.  அவரது ஒவ்வொரு படத்தையும்,  இங்குள்ள தியேட்டரில்,  பல நூறு மைல்கள் பயணித்து சென்று,  பார்க்கும் போது  எனக்குள் இருக்கும் சிறுமி குதூகலத்துடன் வெளி வந்து, என்னை மீண்டும் பால்ய காலத்துக்கு அழைத்து செல்கிறாள்.  I never miss my childhood.

 DAVE BARRY:


Pulitzer Prize (1988) வாங்கிய அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் (humor columnist). The Miami Herald தின பத்திரிகையில், 1983 - 2005 தொடர்ந்து எழுதி வந்தவர். பல புத்தகங்களும் நாவல்களும் எழுதி இருக்கிறார். 
Barry has defined a sense of humor as "a measurement of the extent to which we realize that we are trapped in a world almost totally devoid of reason. Laughter is how we express the anxiety we feel at this knowledge."
தன் வீட்டு அடுப்படியில் இருந்து நாட்டு அரசியல் வரை -  எந்த வரைமுறைக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாமல் -  தன் கருத்துக்களை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவதில் கில்லாடி.
இவரின் பார்வையில் உலக - சமூதாய  பிரச்சனைகளை பார்க்க ஆரம்பித்த பின், உலகம் - எனக்கு அவ்வளவு மோசமானதாக தெரியவில்லை.


 என் உடன் பிறவா சகோதரர், செல்வகுமார் அண்ணன்,   தன் வேலைப்பளு மத்தியிலும் நேரம் ஒதுக்கி,   எனக்கு  கரிசனையுடன் அறிவுரை கூறுபவர்.  எனக்கு  இருக்கும் வேலைகளை காரணம் காட்டி கொண்டு இருக்காமல், மற்றவர்களுக்கு தேவையான என் நேரத்தை ஒதுக்க  நான், இவரிடம் கற்று கொண்டேன்.

இவர்கள் தவிர,  எனக்கு நிறைய கற்று கொடுத்த, என் அருமை நண்பர்களின்  பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஒருவர் பெயர் சொல்லி, ஒருவரை விட்டு விட எனக்கு பிடிக்காத காரணத்தாலும்  -  பதிவின் நீளம் கருதியும், இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.128 comments:

நட்புடன் ஜமால் said...

சாலம்ஸூ பேரை போட்டு விட வேண்டியது தானே

ஹையா! அண்ணாவும்

:)

நட்புடன் ஜமால் said...

டேவ் பெர்ரி ஷாருக் போல இருக்கார்

Ramesh said...

்ம்ம் அசத்தல் . கடைசியில் நான் இருப்பேன் எண்டு யோசித்தன் ஹிஹிஹி

அன்புடன் அருணா said...

நல்ல பகிர்வு!

சைவகொத்துப்பரோட்டா said...

புதிய அறிமுகங்களுக்கும் நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்

settaikkaran said...

புத்தகங்கள் சொல்லித்தராத பாடங்களை நட்புவட்டாரம் கற்றுத்தருகின்றது. சுவாரசியமான பதிவு!

பத்மா said...

நல்லா இருக்கு சித்ரா .நேத்து எங்க வீட்டுக்கு வரவே இல்ல ஏன்? ரொம்ப பிசியா

Rajalakshmi Pakkirisamy said...

//டேவ் பெர்ரி ஷாருக் போல இருக்கார்///


ssssssssssssss........

PriyaRaj said...

pls collect ur award from my blog

S Maharajan said...

(ஒரு சந்தேகம்) ராஜாமணி சார் பையன் "அன்டோ பிரவீன் ராஜ்குமார்"ஆ அது (என் வகுப்பு தோழன்)
உங்களுக்கு சமாதானபுரமா?

Alarmel Mangai said...

தினம் தினம் தன்னுடைய குறும்புகள் மூலம் பொறுமையைக் கற்றுத் தரும் செல்வக் குட்டிப் பையனை மறந்துட்டீங்களே, சித்ரா!
அந்தக் குட்டிப் பையன் கோவிச்சுக்கப் போறான் :)
அம்மு

Chitra said...

பெயரை போட்டு விட்டேன், ஜமால். சரியா?

Chitra said...

ரமேஷ், அன்புடன் அருணா, சைவகொத்து பரோட்டா - நன்றிகள் பல.

Chitra said...

T.V. ராதாகிருஷ்ணன் சாருக்கும் பத்மாவுக்கும், நன்றிகள் பல.

Chitra said...

உண்மைதான் சேட்டைக்காரன் , நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் சொல்லி தரும் பாடங்கள் சுவாரசியமானது.

Chitra said...

Thank you very much, Priyaraj. You are so sweet!

Chitra said...

ராஜலக்ஷ்மி மேடம் - ஹா,ஹா,ஹா,ஹா.....

Chitra said...

மகாராஜன், ஆமாங்க ஆமா............!!!
உங்கள் வகுப்பு தோழனை சந்தித்தீர்களா?

Chitra said...

இப்பொழுது மணி: இரவு 12:00 - இன்னும் தூங்காமல், லூட்டி அடித்து கொண்டு இருக்கும் எங்கள் வீட்டு வாண்டு பற்றி ...........தனி பதிவுதான் போட வேண்டும், அம்மு.

Madhavan Srinivasagopalan said...

//ஒருவர் பெயர் சொல்லி, ஒருவரை விட்டு விட எனக்கு பிடிக்காத காரணத்தாலும்... //

என்னதான் சொன்னாலும் ஏழு பேரைப் பத்தி சொல்லிட்டு இப்படி ஒரு 'statement '...? லாஜிக் இடிக்குதே..

Chitra said...

மாதவன், மேலே சொல்லப்பட்டிருக்கும் இவர்கள் - என் நண்பர்கள் பட்டியலில் வருவதில்லை என்று அர்த்தம். :-)

Asiya Omar said...

அருமையான பகிர்வு,அப்படியே சந்தடி சாக்கில சகோ.சாலமனையும்யும் போட்டு அசத்திட்டீங்க.திரு.ராசாமணி உங்க அப்பா தானேப்பா.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு,வழக்கம் போல, நான் லேட். புது அறிமுகங்கள் நன்று. சாலமன் சார் நல்லா இருக்கார்.

vasu balaji said...

நல்ல அறிமுகங்கள்:)

S Maharajan said...

//உங்கள் வகுப்பு தோழனை சந்தித்தீர்களா?//

இல்லியிங்க கிட்டதட்ட பதினைந்து வருடங்கள் ஆகிறது

dheva said...

நல்ல பதிவு சித்ரா....! கண்டிப்பா... தேர்வு செய்து தான் போட்டிருப்பீங்க....! ம்ம்ம் அடுத்த வருசம் நீந்த எழுதுற பதிவுல என்னோட போட்டோவையும் போடுற மாதிரி ஏதாவது செய்யணும்...!!! (ஆசை தோசை அப்பளம் வடை... உங்க போட்டோ எல்லாம் யாரு போடுவாண்ணு நீங்க கத்துறது எனக்கு நல்லாவே கேக்குது)

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப தேங்க்ஸ் மேடம் , என்னோட ரெகுஸ்ட்ட ஏத்துகிட்டு என் பேர போடாம விட்டதுக்கு , என்னக்கு இந்த மாதிரி பப்ளிசிட்டி எல்லாம் புடிக்காது ஹி... ஹி... ஹி... (உஸ்,...... அப்பா எபடிஎல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு )

செல்ல நாய்க்குட்டி மனசு said...

you have done an intelligent job chitra, by mentioning the inner zone people.
rajini fan !?! me too .

தமிழ் உதயம் said...

அதே உற்சாகத்தோடு இன்றும் பார்க்கிறேன். விசில் அடிக்க தெரியாத நான், ஒரு umpire விசில் வாங்கி வைத்து இருக்கிறேன். கூட்டத்தோடு கூட்டமாக ஆட்டம் போட்டு, விசில் அடித்து கலகலக்க. அவரது ஒவ்வொரு படத்தையும், இங்குள்ள தியேட்டரில், பல நூறு மைல்கள் பயணித்து சென்று, பார்க்கும் போது எனக்குள் இருக்கும் சிறுமி குதூகலத்துடன் வெளி வந்து, என்னை மீண்டும் பால்ய காலத்துக்கு அழைத்து செல்கிறாள்.நானும் ரஜினி வெறியன். முதல் நாள் முதல் ஷோ, மண்டையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட படம் பார்த்த அனுபவமுண்டு. எனது பதினான்காவது வயதில் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி, அதை பிளாக்கில் விற்ற அனுபவமும் உண்டு.

அண்ணாமலையான் said...

அது சரி

Prathap Kumar S. said...

ரஜீனிதான் கொஞ்சம் இடிக்குது........ இந்த இடத்தில் தேவைதானா???

Chitra said...

ஆசியா, சுதா(பித்தன்) அண்ணாச்சி, பாலா (வானம்பாடிகள்) சார் - மிக்க நன்றி.

Chitra said...

மகாராஜன், அன்டோவிடம் உங்களை பற்றி சொல்லி இருக்கிறேன்.

விலெகா said...

நீங்கள் ரஜினியை பற்றி சொன்ன விதமும் சொன்னவையும் அப்படியே வழிமொழிகிறேன் ., மற்றபடி நேற்று வாரிவிட்டு இன்று அதை மாற்றிகொள்வது என்பது எப்பவும் போல ......

Chitra said...

நிச்சயம் செய்வீர்கள், தேவா. வாழ்த்துக்கள்.

Chitra said...

பப்ளிசிட்டி பிடிக்காதா அமைச்சரா? அதான் மங்குனியாய் இருக்கிறார் போல......

Chitra said...

rajini fan !?! me too .

.......... Great!

Chitra said...

தமிழ் உதயம் சார்: அட, அட,...... கலக்கல்!

Chitra said...

அண்ணாமலையான், பிரதாப் - Thank you very much.
பிரதாப், He keeps me to be in touch with my child-like nature. :-)

திருவாரூர் சரவணா said...

இவர்களைப் பார்த்து நாங்கள் மெருகேருகிறோமோ இல்லையோ SAINT FR.DAMIEN: பற்றி படித்ததும் எங்கள் கர்வமெல்லாம் ஒழிந்தது.

சாலமன் அண்ணாச்சியைப் பார்க்கும்போது எங்கள் ஊர் வி.ஐ.பி ஒருவர் போலவே இருக்கிறார். அது சரி...ஏழு பேர் ஒரே மாதிரி உலகத்துல இருப்பாங்க அப்படின்னுநம்புவோம்.

Chitra said...

விலெகா,
இரண்டு நாட்களுக்கு முந்தைய பதிவு: தொடர்பதிவு கலாட்டா. (சிரியஸ்)
இன்றைய பதிவு: உண்மையில் என்னுடைய குணாதிசயங்களை மெருகேற்ற செய்தவர்கள். (சீரியஸ்)

Chitra said...

சரவணன்: உண்மை. SAINT Fr.Damien பற்றி வாசித்து ஆச்சர்யப்பட்டு போனேன்.


/////அது சரி...ஏழு பேர் ஒரே மாதிரி உலகத்துல இருப்பாங்க அப்படின்னுநம்புவோம். ////

நம்புங்க. இவர், அவர் இல்லை. :-)

வால்பையன் said...

சாலமோன் மட்டும் தான் ரொம்ப அப்பாவியா தெரியிறாரு!,

செய்யக்கூடாத தப்ப செஞ்சிட்டா மாதிரி கண்ணுல ஒரு முழிப்பு தெரியுது!

:)

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா....... உங்களுக்கு என்று தெரியுமே, தெரியுமே...... தெரியவில்லை என்றாலும் தெரிய வச்சிடுவீங்களே, வால்!

வால்பையன் said...

நானும் போட்டோவுல அப்படி தான் முழிப்பதா நண்பர்கள் சொல்வாங்க!

ஒரு ஆம்பளையோட மனசு ஒன்னொரு ஆம்பளைக்கு தான் தெரியும்!

:)

கண்ணா.. said...

அசத்தல் பதிவுங்க...நேத்து பண்ணிய பாவத்திற்கு இன்னைக்கு பரிகாரம் தேடிட்டீங்க...


அப்புறம் சாலமன் அண்ணாவை போட்டோவில் பார்த்தது சந்தோஷம். ஆனாலும் மாட்டிகிட்டோமேங்கற அப்பாவி களை முகத்தில் தெரியத்தான் செய்யுது..

// asiya omar said...
திரு.ராசாமணி உங்க அப்பா தானேப்பா.//

நெஜம்மாவா....??!

அவரின் நகைச்சுவை பேச்சு பத்திரிக்கையிலும், ரேடியோவிலும் கேட்டு ரசித்திருக்கிறேன். அதான் கேட்டேன்....

அப்புறம் நீங்க சமாதானபுரமா..... இன்னைக்குதான் தெரிந்து கொண்டேன்.

Chitra said...

ஆமாம், கண்ணா! What a small world!

கண்ணா.. said...

அதான் உங்ககிட்ட இயல்பாவே நகைச்சுவை உணர்ச்சி இருக்குறது ஓவ்வொரு பதிவிலேயும் அழகா தெரியுது....

Chitra said...

ரொம்ப நன்றி, கண்ணா. அப்பாவின் மறைவிற்குப் பின் (நவம்பர்), என் எழுத்தில் அவரை காண்கிறேன் - வாழ்கிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

திரு.பொ.ம.ராசமணி அவர்கள் பலமுறை என் பள்ளிக்கு பட்டிமன்றத்திற்கு வந்திருக்கிறார்.

SUFFIX said...

நல்ல உள்ளங்களை அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி சித்ரா. மேற்கோள் காட்டிய விடயஙக்ள் அருமை. நல்ல நட்பு கிடைப்பது மிகப் பெரிய பாக்கியமே. வாழ்த்துக்கள். சாலமன் தி கிரேட்டை போட்டோவுடன் அறிமுகப்படுத்தியதற்கு ஸ்பெஷல் சபாஷ்!!

SUFFIX said...

’DAVE BARRY’ இவருடைய எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும், இங்கே ’அரப் நியூசி’ல் முன்னர் வந்து கொண்டிருந்தது.

Chitra said...

உழவன் சார், உங்கள் கமென்ட் கண்டு மகிழ்ச்சி.

Chitra said...

Thank you, Shafi. Dave Barry's style of writing is hilarious. He stopped writing his column since 2005.

ஆர்வா said...

வலைகள் பற்றி சொல்லி என்னையும் உங்க "வலை"த்தளத்தில் வளைச்சிட்டீங்க.. அருமை..

Chitra said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
"வலை" - என்னை யோசிக்க வைத்து மாற்றியுள்ளது. :-)

Menaga Sathia said...

சூப்பர்ர் சித்ரா!!

முகுந்த்; Amma said...

பிடித்த ஆண் இனம் தொடரில், தங்களின் பழைய பதிவை போல இதுவும் கலக்கல். புதிய விஷயங்கள் நெறைய தெரிந்து கொண்டேன். நல்லா இருக்கு.

அன்புத்தோழன் said...

உங்களை சுற்றி நிறைய நல்ல உள்ளங்களை தந்திருக்கிறான் இறைவன்....

இதே குதூகலத்துடன் மெருகேறிக்கொண்டே போக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

Radhakrishnan said...

பல நல்ல உள்ளங்களை கண்டு கொண்டேன். ஒவ்வொருவரும் வியப்பில் ஆழ்த்துகிறார்கள். மிக்க நன்றி சித்ரா.

வருண் said...

The best part of your post is that you dare to say loudly that you are a Rajni fan right from your heart!

Not many I know openly say that like you do though they like Rajni more than you do- more or less for the same reasons you have mentioned!

After all we all have the freedom of expression at least in our own blog! Let us be truthful to our own feelings and heart first rather than pleasing the world!

"When I know about myself, should I worry about what other people think of me?" kind of attitude is something appreciable, imho!

Mythili (மைதிலி ) said...

சித்ரா, உன்னோட அப்பா, தம்பி இவங்கள நேர்ல பாக்க முடியாவிட்டாலும் படத்திலாவது இன்று பார்க்க முடிந்தது. உன்னோட தம்பியோட கிளாஸ் மேட்ஸ் வேற ப்ளாக் ல இருக்காங்க போலிருக்கே?? வாழ்த்துக்கள் தொலைந்த நண்பர் திரும்ப கிடைத்தவருக்கு. நல்ல பதிவு சித்ரா.. அம்மு சொன்ன மாதிரி செல்வத்தையும் சேர்த்திருக்கலாம். செல்வா குமார் அண்ணாவையும் சேர்த்திருப்பது மிகவும் அருமை. I could see the influence arranged in correct order from அப்பா to உன் எழுத்துக்கு ஊக்கமளிக்கும் செல்வா வரை. என்னோட வாழ்த்துக்கள் என்றென்றும் உன்னுடன் சித்ரா. உன்னோடு இணைந்து ப்ளாக் வாழ்கையில் பயணம் செய்வது ரொம்ப சுகமாக இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு சித்ரா.

Chitra said...

Mrs.Menagasathia, Mukund amma, Ramalakshmi akka: Thank you very much!

Chitra said...

அன்புத்தோழன், V. ராதாகிருஷ்ணன் சார் - உண்மை. இந்த நல்ல உள்ளங்களால்தான் நான் மிளிர முடிகிறது. இறைவனுக்கு நன்றி. :-)

Chitra said...

Life is too short to worry about anything. When we spend time worrying - we waste away our time to appreciate the blessings in our life. :-)

Chitra said...

Yes, Mythili. These people influenced me a lot. There are many more ......! I thank our Lord for blessing me to have wonderful people around.

Unknown said...

நல்ல பதிவு..

என்னைப்போலவே நீங்களும் ரஜினி ரசிகர் என்பதை என் பதிவில் நீங்கள் போட்ட பின்னூட்டத்திலிருந்தே தெரிந்து கொண்டேன்..

இங்கே உங்களை மெருகேற்றிய மனிதர்களில் அவரையும் பார்த்ததும் மகிழ்ச்சி.

வேலன். said...

கலக்கிட்டீங்க சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கலக்கிட்டீங்க சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அடடே! பா.ரா. அம்மா! தாயே! ஆண்களைப் பற்றி யாராவது எழுதுங்கோ ! என்று கெஞ்சிக் கேட்டதால் நிச்சயம் இந்தத் தலைப்பில் எழுத வேண்டும் என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் சித்ரா. நேரந்தான் கிடைக்கவில்லை.
அட! நீயும் ரஜினி விசிறியா? சபாஷ்!.

ஜெய்லானி said...

//DAVE BARRY:தன் வீட்டு அடுப்படியில் இருந்து நாட்டு அரசியல் வரை - எந்த வரைமுறைக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாமல் - தன் கருத்துக்களை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவதில் கில்லாடி.
இவரின் பார்வையில் உலக - சமூதாய பிரச்சனைகளை பார்க்க ஆரம்பித்த பின், உலகம் - எனக்கு அவ்வளவு மோசமானதாக தெரியவில்லை//


உங்கள் பதிவுகளை படிக்கும் போது கிடைக்காத விடை இதில் உள்ளது. நகைச்சுவை உணர்வு உங்கள் ரத்தத்துடன் கலந்துள்ளது. வாழ்த்துக்கள் !!

அ.ஜீவதர்ஷன் said...

தலைவரை ஞாபகபடுத்தியதற்கு நன்றிகள், அறுபது வயதில் தலைவரை விமர்சிக்க சொன்னீர்களே அந்த பாயின்ட் சூப்பர்.

Romeoboy said...

இதை போன பதிவில் சொல்லி இருந்தா எங்களுக்கு ஒரு மொக்கை பதிவை படிக்காமல் இருந்த சந்தோசத்தில் இருந்து இருப்போம்ல.

விவரிப்பு எல்லாம் அருமை :)

நசரேயன் said...

சாலமன் அண்ணாச்சி ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்காவ

நசரேயன் said...

கொஞ்ச ஆணி அதிகமா இருந்தா பின்னூட்ட போட்டியிலே ௬ட இடம் கிடைக்காது போல இருக்கு

நசரேயன் said...

திரு.பொ.ம.ராசமணி ஐயாவை எங்க ஊரு பட்டிமன்றத்திலே பார்த்து இருக்கேன்.

malar said...

நீங்கள் எந்த் பதிவு போட்டலும் அதில் பல நல்ல விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

நல்ல பதிவு...

நேசமித்ரன் said...

சும்மா அதிருதில்ல

கலக்கிட்டீங்க வாழ்த்துகள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சித்ரா
ரொம்ப சூப்பர்மா..
பொ. ம. ராசாமணி சார்..., சாலமன், ரஜினி காந்த், செல்வா அண்ணா...
இவங்கள பத்தி குறிப்பிட்டிருந்த அனைத்தும் அருமை... ஏன் இதை மட்டும் எடுத்து காட்டி சொன்னேன் என்றால், இவர்கள் எல்லாம் எனக்கும் நன்கு பரிச்சயம்
ஆனவர்கள் என்பதால்.. ;)

எப்பவும் போல, உங்கள் பதிவை ரசித்தேன்.. வாழ்த்துக்கள்.. :) :)

Thenammai Lakshmanan said...

சித்ரா அடுத்தடுத்து கலக்கல் பதிவுகள் அருமை..செல்வாவும் இருக்கிறார்

நல்லா இருக்கு சித்து ..வாழ்க...

புலவன் புலிகேசி said...

:))

நாடோடி said...

தொடர்ச்சியில் கலக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்..

ஹுஸைனம்மா said...

சித்ரா, திரு.பொ.ம.ராசமணி அவர்கள் உங்கள் தந்தை என்பது இன்ப அதிர்ச்சி!! அதான் நகைச்சுவை சும்மா சரளமா விளையாடுது உங்ககிட்ட!! சின்ன வயசில சாரோட பேச்சை ரசிச்சிக் கேட்டதுண்டு.

டேவ் பெர்ரி பார்க்க ஷாருக் மாதிரிதான் இருக்கார்.

S Maharajan said...

//திரு.ராசாமணி உங்க அப்பா தானேப்பா.//

எனக்கு ஒரு டவுட் இருந்தது,ஆனா
"அன்டோ" வையே நான் பார்த்து பல வருஷம் ஆச்சு.
நீங்க "செல்வன் கிளாச்சிக்" வீடோ அப்படின்னு நினைத்தேன்.
இனி எதற்கு மேடம் "அக்கா" என்று உரிமையோடு அழைப்பேன்.

ஆடுமாடு said...

//திரு.பொ.ம.ராசமணி//


ஐயோ, இவர் பேச்சுல/ காமெடியில கலக்குவாரே.

பாளை. சேவியர் காலேஜ்ல படிக்கும்போது அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

நன்றிக்கா.

பனித்துளி சங்கர் said...

அருமையான சிந்தனை . கலக்கலான பதிவுதான் .

உங்களின் ஒவ்வொரு பதிவும் மற்றொரு பதிவை பின்னுக்குத் தள்ளும் வகையில் மிகவும் அருமையாக இருக்கிறது .

பகிர்வுக்கு நன்றி !

Unknown said...

நல்லதொரு வித்தியாசமான பகிர்வு .. நன்றி..
www.myownscribblings.blogspot.com

துபாய் ராஜா said...

மெருகான பதிவு.

Jaleela Kamal said...

கலக்கலான பகிர்வு சித்ரா

ஜெட்லி... said...

திரு.பொ.ம.ராசமணி பற்றி விரிவாக படிக்க காத்து இருக்கிறேன்....
சாலமன் சார் பத்தி நீங்க சொல்றது ஓகே...
அவர் என்ன சொல்றாரு....உங்ககிட்ட மாட்டிக்கிட்டு
முழிக்கிற மாதிரி இல்ல போட்டோ இருக்கு..... :))

தக்குடு said...

அருமையான பகிர்வு. நம்ம ஊர் பொண்ணா நீங்க??...:)

Paleo God said...

I like this post very much..:))

Mr.S is so cute.. :)

ஸ்ரீராம். said...

அசத்திட்டீங்க..... அப்பாவை விட்டுட்டீங்களே..

Chitra said...

Sriram: First photo: he is my father. :-)

ஸ்ரீராம். said...

First photo in my post is of my father's. :-)"//

ஓ....இதை நான் முன்பே யூகித்திருக்க வேண்டும். மன்னிக்கவும்

திவ்யாஹரி said...

மற்றவர் கேட்டு பின் சொல்லுவது போல இல்லாமல்.. இவர் என் அப்பா என்று ஒரு வரியாவது சொல்லி இருக்கலாம்.. இவர் என் அப்பா என்று சொல்வதில் உள்ள பெருமை வேறெதிலும் இல்லை என நினைக்கிறேன் .. நானும் ரஜினி ரசிகை தான்.. நீங்களுமா சித்ரா..

திவ்யாஹரி said...

//ஸ்ரீராம். said...
First photo in my post is of my father's. :-)"//
ஓ....இதை நான் முன்பே யூகித்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.//

சித்ரா முன்னமே சொல்லி இருக்க வேண்டும்..

கண்மணி/kanmani said...

சித்ரா எல்லாத்தையும் விட சாலமன் பத்தி சொன்னதுதான் டாப்.
இன்னும் பலநூறு வருஷம் இதே காதலுடன் வாழ வாழ்த்தும் கண்மணி

பஹ்ரைன் பாபா said...

""" பல நூறு மைல்கள் பயணித்து சென்று, பார்க்கும் போது எனக்குள் இருக்கும் சிறுமி குதூகலத்துடன் வெளி வந்து, என்னை மீண்டும் பால்ய காலத்துக்கு அழைத்து செல்கிறாள்""

உண்மை....

"" தங்களின் அறுபதாவது வயதிலும், அந்த ஸ்டைல் லுக்கில் இருந்து கொண்டு விமர்சிக்கட்டும்.""

அது....

இந்த ஒரு வரிக்கே உங்களுக்கு ஆயிரம் பூங்கொத்து குடுக்கலாம்..

சத்ரியன் said...

சித்ரா,

உண்மைதான். நம்மையறியாமலே பலர் நமக்குள் இடம் பிடித்துக்கொள்கிறார்கள்.

நல்லதொரு பகிர்வு.

Asiya Omar said...

சித்ரா உங்களுக்கு ஒரு அவார்ட் தந்து இருக்கிறேன்.என் ப்ளாக்கில் பெற்றுக்கொள்ளவும்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல வித்தியாசமான பார்வை. வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

திரு.ராசாமணி உங்க அப்பா , அவர் உங்கள் மனசெல்லாம் மூச்செல்லாம் அவர் தான் அப்ப்டி இருக்க போய் தான் ஓவ்வொரு விஷியத்திலும், நல்ல பகிர்வு + கலக்கல் நகைச்சுவையுடன்.. பதிவுகள்,

Jaleela Kamal said...

சாலமன் சார் எங்கோ நல்ல பார்த்த முகம் போல இருக்கு.
உங்களை அடையாளம் காட்டியவர், அவருக்கு என்ன நல்ல உள்ளம். வாழ்த்துக்கள். அப்பரமா உங்கள் வாண்டை பற்றியும் எழுதுங்க..

Jaleela Kamal said...

//டேவ் பெர்ரி ஷாருக் போல இருக்கார்//

சகோ.ஜமால் சொல்வது சரிதான். ஷாருக்கான் போல தான் இருக்கார்..

ஸாதிகா said...

//சிலர் என் ரசனைக்கு உரியவர்கள் - சிலர் என் பாராட்டுக்களுக்கு உரியவர்கள் - சிலர் என் மரியாதைக்கு உரியவர்கள் - சிலர் என்னை செதுக்கியவர்கள் - சிலர் என் சந்தோஷ சிரிப்புக்கு உரியவர்கள் - சிலர் என் ஜொள்ளுக்கு உரியவர்கள் - இப்படி................
//சித்ரா அருமையான் வரிகள்.அதைவிட அருமையான் தேர்வுகள்

☀நான் ஆதவன்☀ said...

நல்ல பதிவுங்க :)

Menaga Sathia said...

pls collect ur award from my blog

http://sashiga.blogspot.com/2010/03/blog-post_27.html

ஜெய்லானி said...

#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

########

Jerry Eshananda said...

படித்தேன்,தெரிந்தேன்,அந்த முதலாமவர் பற்றிய பதிவுக்கு காத்திருக்கிறேன்.

Jerry Eshananda said...

saloman looks cool and brite and gentle too.

மின்மினி RS said...

அன்புள்ள சித்ரா அக்கா.

நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்துள்ளேன்.. நம் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்

உங்கள் கருத்துக்களை வேண்டி உங்கள் மின்மினி

தாராபுரத்தான் said...

அழகான பதிவு.. வணக்கம்மா.

அன்புடன் மலிக்கா said...

அருமையான பதிவு. அப்படியே அண்ணாத்தேவையும்போட்டு அசத்திட்டீங்க சூப்பர்....

அம்பிகா said...

அருமையா இருக்கு சித்ரா.
நல்லா எழுதியிருக்கீங்க.

மின்மினி RS said...

சித்ரா அக்கா, உங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கியுள்ளேன். பெற்றுக் கொள்ளுங்கள்.

தேவன் மாயம் said...

சித்ரா!! ஒரு பெரிய திருவிழாக் கூட்டத்தையே கூட்டி விட்டீர்கள்!!! பொறாமையா இருக்கே!!

prince said...

//எனக்கு இருக்கும் வேலைகளை காரணம் காட்டி கொண்டு இருக்காமல், மற்றவர்களுக்கு தேவையான என் நேரத்தை ஒதுக்க நான், இவரிடம் கற்று கொண்டேன்.///---பிடித்த வரிகள் இவை. அநேகமா நான் பார்த்த பெண்களில் ஆண்களின் மனதை சரியாக புரிந்தது கொண்டது நீங்களாக தான் இருக்கும். அருமையான பதிவு அக்கரையான பின்னூட்டங்கள் நன்றி ..

பின்னோக்கி said...

அருமையான மனிதர்களை அடையாளம் காட்டியது அழகு.

ப.கந்தசாமி said...

ரொம்ப, ரொம்ப,நன்றாக இருக்கிறது. நிச்சயமாக இது உங்கள் கதைதான் என்று நினைக்கமாட்டோம் என்று உங்கள் கம்பெனிக்கு உத்திரவாதம் கொடுக்கிறோம்.

Chitra said...

இது என் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அல்ல. என் வாழ்வின் நிஜங்கள். :-)

Unknown said...

Chitra..Good work..

pichaikaaran said...

இந்த பதிவை இப்பத்தான் படித்தேன்..
வழக்கமா உங்க பதிவுகள் புன்னகைக்க வைக்கும்.. இந்த பதிவு லேசா கண்கலங்க வைத்த்து..
நம்மை சுற்றி எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படும் நெகிழ்ச்சியே இதற்கு காரணம்..
இது போன்ற பாசிடிவ் கருத்துக்களை படிக்கும்போது , எழுதியவரின் ஆக்க பூர்வ சிந்தனை படிப்பவரின் தொற்றிக்கொள்ளும்..
நல்லோரை காணலும் நன்றே, நல்லோரை நினைப்பதும் நன்றே, நல்லோரை பற்றி படிப்பதும் நன்றே

Ramesh said...

அருமையான நினைவு கூர்தல்.. அவர்களும் மிகவும் மகிழ்வார்கள்.. இதனைப் படித்து..

Mohi said...

I am from Shengottai, Thirunelveli district. I am one of a big fan of you father. His sense of humor is awesome. Do you happen to have any of his audio or video speeches. I have heard him speaking in our school twice. After 30 years I can vividly remember his speech and unique style. I really want to hear his voice.

Thank you
Mohideen

Chitra said...

Thank you very much. I feel honored to receive your comment. Appa’s books are available. But I don’t have any audio cassette with me. Will check with my family in Tirunelveli