Monday, March 8, 2010

இதுதானே என் "white" ..........

சர்வதேச மகளிர் தின ஸ்பெஷல்... சக்தி 2010 - என் முதல் கட்டுரையாக  இந்த பதிவு   வெளியாகியது.
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!  
யூத்புல் விகடன் 


" நான்கே வாரங்களில் ............. மென்மையான  - மாசு மருவற்ற - நாசுக்கான  - சிகப்பழகு........ தரும் கிரீம்"
விளம்பரத்தில், ஏற்கனவே சிகப்பாய் இருக்கிறவங்க அந்த கிரீம் போட்டு, மேலும் சிகப்பழகை பெற்று கொள்கிறார்கள். கோதுமை மாவு முகம், கிரீம் போட்டு மைதா மாவு முகமாய் மாறுகிறது. 

வெட்டி பேச்சின் சந்தேகங்கள் - எண்ணங்கள் :

1.  முகத்துக்கு  மட்டும்  போட்டு கொள்கிற facial cream - முக அழகு கிரீம் - என்று சொல்றாங்களே ......
முகம் மட்டும் வெள்ளையா இருந்து,  கை கால், உடல் எல்லாம் வேற நிறத்துல இருந்தா பார்க்க எப்படிங்க இருக்கும்?
அழகாகவா இருக்கும்? பாண்டா கரடி மாதிரி இருக்காது?

2.  தன் நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை எல்லாம் முகங்கள் (மட்டும்) வெள்ளையாய் சிகப்பாய் இருக்கிறவங்களுக்கு  மட்டும் தான் வருமா?  சிகப்பழகுடன்  தன் நம்பிக்கை ஊட்டும் கிரீம் ............ ஓ!

3. சிகப்பு மட்டும் தான் அழகா?  இதை official ஆ எப்பொழுது  அறிவித்தார்கள், எங்கு அறிவித்தார்கள், எப்படி அறிவித்தார்கள் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா.

4.  சிறிய வயதில்,  african, mongolian, caucasian என்று பல races - இனங்கள் இருப்பதாக பள்ளியில் சொல்லி கொடுத்தார்கள். இப்படி எல்லோரும் கிரீம் உபயோகிக்க ஆரம்பித்தால், எல்லோருமே caucasian race போல வெள்ளையாய் மாறி விட்டு, மற்ற இனங்கள் அழிந்து விடுமே........

5. நல்ல வேளை - 1947 க்கு முன்னாலே, நிறைய பெண்கள் இந்த சிகப்பழகு கிரீம்  வாங்கி உபயோகிக்கவில்லை. அப்புறம், "வெள்ளையனே வெளியேறு!" என்று  அடையாளம் தெரியாமல், குழப்பம் ஏற்பட்டு, நம் இந்திய பெண்மணிகளையும்  சேர்த்து நாட்டை விட்டு அனுப்பி இருப்பாங்க.

கண்மணிகளே,  எல்லோருமே மாடல் அழகிகள் மாதிரி இருந்தால்தான் வெற்றி என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை.  சிகப்பழகு தரும் தன் நம்பிக்கை  கப்பலில் பயணம் செய்யும் போது, வெயிலில் போய் விட்டு சிறிது கறுத்தாலும் உடனே, அந்த  கப்பல் மூழ்கி கவலையில் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து புலம்ப வேண்டியதுதான்.
சுத்தமாய், நேர்த்தியாய் திருத்தமுடன் இருப்பது அழகு. நிறம் மட்டுமே அழகை தந்து விடாது. 

கண்ணாடியில் பார்க்கும் போது, முகம் சுளிக்காதீர்கள். நிலாவில் கூட குறை உண்டு. அதை பெரிது படுத்தி நாம் ஒதுக்குவது இல்லையே.  முழு நிலவின் ஒளியில், குறைகள் மறைந்து போகும்.  சாதிக்க வேண்டிய சக்தியின் ஒளியில், உங்கள் குறைகளை ஒதுக்கி வைத்து பாருங்கள்.

ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற ஒவ்வொரு அம்சம் தேவை.
சிகப்பழகு, வெற்றி கட்டடத்துக்கு அஸ்திவாரம் இல்லை. உறுதியான கட்டடத்தின்  பல வர்ணங்களில் ஒன்று  மட்டுமே.
 நம் திறமைகளிலும் வாய்ப்புகளை சரியாக உருவாக்கி பயன் படுத்தி கொள்வதிலும்,  இறை அருளிலும்  நம்பிக்கையுடன் உற்சாகமாய் இருப்பதிலும் , பலமான அஸ்திவாரம் அமைய வேண்டும். தோல்விகளை கண்டு மிரளாமல், சோர்ந்து போகாமல் முன்னேறி வர வேண்டும்.
 
பொறாமை என்ற மாசு நீக்கி -  பயம், கவலை, தயக்கம் என்ற மருக்களை அகற்றி - புன்னகை என்ற மென்மை தவழ - உங்களுக்கென்று தனித்துவமாய் இருக்கும் திறமைகளை ஆர்வமாய் வளர்த்து கொண்டு  - அழகாய் வெற்றி பெற வாருங்கள்.

"குறை ஒன்றும் இல்லை ........கண்ணே......."

50 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

அருமை, நல்ல பதிவு. அந்த 5 - வது பாயிண்ட் ஹா.......ஹா........

goma said...

நான் நாலடி பத்தரை அங்குலம்தான் ...இதுவரை என் உயரத்தைப் பற்றி உயர்வாகத்தான் எண்ணி வருகிறேன்.
.
எல்லோரையும் தலை நிமிர்ந்து நான் பார்க்கிறேன் ,எல்லோரும் என்னைப் பார்க்கும் பொழுது தலை குனிந்து பணிவுடன் நிற்கின்றனர்.

goma said...

இதுதானே என் HIGHT

முந்தைய பின்னூட்டத்துக்கு ஹெடிங்

Jaleela Kamal said...

சித்ரா உங்களுக்கே உண்டான நகைசுவையில் அட்வைஸ அள்ளி தெளிச்சிட்டீங்க.


இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

சக்தி 10 னில் வெளி வந்துள்ளதுக்கு வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

மகளீர் தின நல் வாழ்த்துகள்.

-----------------

ரொம்ப நாளா எனக்கு சில சந்தேகங்கள் ...

நல்லவங்களை வெள்ளை உள்ளமுன்னு சொல்றாங்க

கெட்டவர்களை கருப்பு ஆடுன்னு சொல்றாங்க

இன்னும் இது போல நிறைய சந்தேங்கள் ...

அன்புத்தோழன் said...

இது தானே என் white னு தலைப்ப வெச்சுட்டு வெயிட்டான பல கருத்துக்கள் சொன்ன உங்களுக்கும்.... இன்னும் பல கலர்களில் ஆண்களின் வாழ்வை கலர்புல்லாக்கி முழுமை பெற செய்து கொண்டிருக்கும் மங்கையர் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.....

ராமலக்ஷ்மி said...

அருமை:)! விகடனிலே ரசித்துப் படித்தேன்.


//உங்களுக்கென்று தனித்துவமாய் இருக்கும் திறமைகளை ஆர்வமாய் புத்துணர்வுடன் வளர்த்து கொண்டு - அழகாய் வெற்றி பெற வாருங்கள்.//

சிறப்பான கருத்து. அருமையான அழைப்பு. வாழ்த்துக்கள் சித்ரா!

Dr.Rudhran said...

good one, again

vasu balaji said...

இதுல வேற ஆம்பிளை சிவப்பழகு பெண் பிள்ளை சிவப்பழகுன்னு அதிலயும் ஜெண்டர் வந்திருக்காமே:))

திவ்யாஹரி said...

நகைச்சுவையாய் ஒரு நல்ல advaice.. கலக்குங்க தோழி.. மகளிர் தின வாழ்த்துக்கள்..

Romeoboy said...

கடைசி பார அருமை .

நாடோடி said...

பலருக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற பதிவு...

settaikkaran said...

"சிவாஜி" படத்துலே ரஜினி வெள்ளையாகிற மாதிரி ஏதாவது க்ரீம் இருக்குங்களா? இப்பெல்லாம் கண்ணாடியைப் பார்த்தா எனக்கே பயமாயிருக்குங்கோ!

Priya said...

5-ல் எழுதி இருப்பது சூப்பர், சித்ரா!

//புன்னகை என்ற மென்மை தவழ‌//.....நானும் இதையேதான் நினைக்கிறேன்!

எம்.எம்.அப்துல்லா said...

சபாஷ்.

Santhappanசாந்தப்பன் said...

"வெள்ளையனே வெளியேறு"‍ன்னு தான சொன்னங்க!

வெள்ளச்சகளே வெளியேறுன்னு சொல்லலியே! நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க! பொண்ணுங்கள அப்டி சொல்ல மாட்டோம். ஹிஹி...

எல்லா கருப்பு, வெள்ளை, பச்சை, மஞ்ச கலர்ல உள்ள எல்லா மகளீர்க்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

SUFFIX said...

அருமையான பதிவு, விகடனில் பிரசுரமானது அறிந்து மிக்க மகிழ்ச்சி சித்ரா. வாழ்த்துக்கள். Keep it up!!

சொல்லச் சொல்ல said...

சரியாச் சொன்னீங்க!

கண்ணா.. said...

இனிய மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்..

என்ன இருந்தாலும் தன்னம்பிக்கை ஊட்டுற க்ரீமை இப்பிடி தாளிச்சுருக்க வேண்டாம்....

ஹுஸைனம்மா said...

கோமாக்கா, தலைப்பு(ம்) சூப்பர்!!

சித்ரா, நேற்றே விகடனில் பார்த்தேன். வாழ்த்துக்கள்!!

சாருஸ்ரீராஜ் said...

சித்ரா அருமையான பதிவு

மகளிர் தின வாழ்த்துக்கள்

எறும்பு said...

I am not able to copy paste comment...

valakamaana nagaichuvai + 1tea spoon advice..

:0

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என் அம்மம்மா '' யானை கறுப்பானாலும் ஆயிரம் பொன் '' என்பாள். நல்ல நேரத்தில் நல்ல அறிவுரை சித்ரா.

தமிழ் உதயம் said...

பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு. ஆனா இத படிச்சிட்டு, அவங்க அத எப்படி எடுத்துக்க போறாங்க. ஆரோக்யமான சிந்தனையா எடுத்துட்டா அவங்களுக்கு ஆரோக்யம்.

அண்ணாமலையான் said...

kalakkal

வேலன். said...

மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி...கட்டுரை வழக்கம்போல் மிக அருமை...வாழ்க வளமுடன்,வேலன்.

மைதீன் said...

நிறம் எத்தனையோ பெண்களின் திருமணத்திற்கு தடையாய் உள்ளது. அற்புதமான பதிவு .பெண்கள் தின வாழ்த்துக்கள்.நன்றி

பெசொவி said...

மிகச் சரியா சொல்லியிருக்கீங்க......மகளிர் தினப் பதிவு நானும் போட்டியிருக்கேன், வந்து படியுங்க!

Deepan Mahendran said...

சித்ரா மேடம், மகளிர் தின வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.

Jerry Eshananda said...

நாங்கெல்லாம் "fair and lovely" வச்சு படத்த வோட்டிக்கிட்டு இருக்கோம்,பொழப்பை கெடுத்துப்புடாதீக.

மங்குனி அமைச்சர் said...

மேடம் இத மொக்கைக்காக எழுதினிங்கன்னா ஒகே.!!!
இல்லைன்னா..........................................
மகளிர் தினம் ?????????????????????????????????

டி.வி விளம்பரங்கள்..

ஒரு ட்ரெயினில் பெண் டிக்கெட் பரிசோதகர் வருகிறார்..ஒரு இளைஞனிடம் டிக்கெட் கேட்கும் போது அன்று அவன் பல்துலக்கிய பற்பசையின் வாசம் அவரை இழுக்கிறது..அந்த இளைஞனை தன்னுடன் இழுத்துச் சென்று விடுகிறார்..(எதற்கென்று சொல்லத்தேவை இல்லை).


காரில் ஒரு பெண் வருகிறாள்..சிக்னலில் அவள் அருகில் வந்து நிற்கும் இளைஞனிடமிருந்து வரும் "body spray" வாசத்தால் தன் மொபைல் என்னைக் கொடுத்து தொடர்பு கொள்ளச் சொல்லிவிட்டு போகிறாள். (எதற்கு?)

ஒரு பெண்ணை அடைய பலர் போட்டி போடுகின்றனர்.. அதில் கேவலமான தோற்றம் உடைய ஒருவன் வாயிலிருந்து வரும் மின்ட் வாசனையால் அவனிடம் போய் விடுகிறாள் அந்த பெண்.

ஒரு இளைஞன் தன் பெண் நண்பியுடன் தனித்திருக்கும் வேளையில் இன்னொரு பெண் தோழிக்கு "STD" போன் போட்டு அவளுடன் உறவு வைத்துக்கொள்வதர்க்கு idea கேட்கிறான்..அந்த பெண்ணும் அதற்கு ஆலோசனை சொல்லி கூட்டிகொடுக்கிறாள்..


அடுத்து, ஒரு லிப்ட்..அதில் body spray பயன் படுத்திய ஒருவர் சென்ற பிறகு இன்னொரு இளைஞன் வருகிறான்..ஒரு அழகியும் வருகிறாள்..ஏற்கனவே "body spray" பயன்படுத்தியவன் சென்றுவிட்டாலும் அந்த வாசனை இருப்பதால் அவளுக்கு மூடு வந்து, லிப்டை நிறுத்தி அந்த இளைஞனுடன் இன்பம் அனுபவித்து விட்டு வெளியேறுகிறாள்........................(தப்பாக
இருந்தால் இதை எடிட் செய்து விடுங்கள் )

(நன்றி மர்மயோஹி )

கொஞ்சம் இல்லா ரொம்ப ரொம்ப யோசிங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!??????????????????????
இதையெல்லாம் மாத்த ட்ரை பன்னுங்க

Chitra said...

உண்மையில், இந்த அவல நிலை பற்றி யாரிடம் முறையிட. .... இந்த விளம்பரங்களை கண்டும், காணாமல் இருக்கும் பொது மக்களிடமா? இந்திய பண்பாடு என்று அலறும் நேரத்தில், இப்படியும் நாங்கள் விளம்பரம் எடுத்து வியாபாரம் செய்ய முடியும் என்று இருக்கும் மக்களிடமா? இவை எல்லாம், எங்களுக்கு காசு பெருகும் வழிகள் என்று இருக்கும் தொலை காட்சி நிறுவனங்களிடமா? இந்த மோகத்தில் மூழ்கி கொண்டிருக்கும் இளைய சமூதாயத்தினரிடமா?

..... மங்குனி அமைச்சருக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

Chitra said...

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

அ.ஜீவதர்ஷன் said...

பச்சை மஞ்சள் சிவப்பு தமிழன் நான்....... இதில வெள்ளைய காணோமே

அரங்கப்பெருமாள் said...

எது நல்லது,எது சிறந்த்தது என விளம்பரதாரர்கள் நிர்ணயம் செய்கிறார்கள்.

மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மணி.

நசரேயன் said...

உள்ளேன் டீச்சர் .. வருகை பதிவேட்டில் குறித்து கொள்ளவும்

PalaniWorld said...

உங்கள் வலைதளத்திற்கு நான் புது வாசகன் .நானும் நெல்லை மண்ணில் பிறந்து தலைநகர் டெல்லியில் வசிப்பவன் .உங்கள் வலைதளம் போன்று தளங்களை பார்க்கும் போது அடேய் அப்பா மக்கள் என்னமாய் யோசிக்கறாங்க என வியப்படைகிறேன்

Prathap Kumar S. said...

சூப்பர் டீச்சர்... கருப்புத்தான் எனக்குப்புடிச்சு கலரு...

பத்மநாபன் said...

உள்ளத்தின் வெள்ளையே உண்மையான வெள்ளை என்று நகைச்சுவையாகவே நல்லா வெளுத்து வீட்டிர்கள் ... பளிச் வெள்ளை பதிவு.
இதுல ''கோதுமை மாவு கோமாளி வேஷ'' சில மகனீர்களும் உண்டு.
அப்புறம்
உங்களுக்கும் மற்றும் உங்கள் வலைப்பூ வழியாகவே அனைத்து மகளீர் பதிவாளர்களுக்கும் '' மகளீர் தின நல்வாழ்த்துக்கள்.''( கூட்டம் சேர்ற இடத்திலேயே வாழ்த்த சொல்லீருவோம் )

Unknown said...

//நசரேயன் said...
உள்ளேன் டீச்சர்..வருகை பதிவேட்டில் குறித்து கொள்ளவும்//

நானும் நானும்..

Anonymous said...

5 ஆவது பாயிண்ட் படிச்சு வாய்விட்டு சிரிச்சேன்

புலவன் புலிகேசி said...

உங்களை யாருங்க இப்புடில்லாம் யோசிக்க சொல்றது...?

Thenammai Lakshmanan said...

வாழ்த்துக்கள் சித்ரா

பின்னோக்கி said...

ஆமாங்க. வெள்ளையா இருந்து நாம என்னத்த கண்டோம். சே அடுத்த பிறவியிலாவது கருப்பா பொறக்கணும்.

Unknown said...

என்னமா யோசிக்கறீங்க ...... நல்லாருக்கு....

geethappriyan said...

பதிவு ரொம்ப நல்லா இருந்தது,மகளிர் தின வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

//அழகாகவா இருக்கும்? பாண்டா கரடி மாதிரி இருக்காது? //

படமும் போட்டிருந்தால் நல்லாஇருந்து இருக்கும். நல்ல ரசனை உங்களுக்கு,

ரிஷபன் said...

கலர்புல் மேட்டர்!