இது வழக்கமான பதிவு இல்லைங்க... இது ஒரு சுய பெயர் புராண பதிவு. இப்போ அதற்கு என்ன அவசரம் என்று கேட்கிறீங்களா? நம்ம பதிவுலக நட்பு வட்டத்தில் இருந்து, ராஜியும் இளங்கோவும் "பெயர் காரணம் தொடர்பதிவு" என்ற பெயரில், என் பேருக்கு கேள்விகள் கேட்டு இருக்காங்க....
என்ன பதிவு, ஒரு பேருக்காவது ஒப்பேத்த என்ன பதிவு போடலாம் என்று நினைத்த பொழுது, இந்த பேர் பதிவே சரியாக இருக்கும்னு முடிவு பண்ணிட்டேன்.
ராஜி: வணக்கம், சித்ரா.
சித்ரா: வணக்கம், ராஜி.
இளங்கோ: வணக்கம், சித்ரா. நாங்க இரண்டு பேரும், ஒவ்வொரு கேள்வியிலும் "பேரு" வைத்து கேட்கப் போறோம். நீங்க பதில் சொல்லணும்னு கேட்டுக்கிறோம்.
சித்ரா: வணக்கம், இளங்கோ. சரிங்க...
ராஜி: சித்ரா என்பது உங்கள் சொந்த பெயரா? இல்லை பதிவிற்காக வைத்த பெயரா?
சித்ரா: சித்ரா, என் சொந்த பெயர். அதுவே நல்லாத்தானே இருக்குது - பதிவுக்கென்று ஒரு பெயர் எதற்கு வாடகைக்கு எடுக்கணும் என்று சித்ரா என்ற என் சொந்த பெயரிலேயே எழுதுகிறேன்.
இளங்கோ: உங்களுக்கு சித்ரா என்ற பெயர் வைக்க தனிப்பட்ட காரணம் உண்டா?
சித்ரா: விசேஷமான சித்ரா பௌர்ணமி அன்று நான் பிறந்ததால், எங்க வீட்டில் எனக்கு சித்ரா என்றே பெயர் வைத்து விட்டதாக எங்க அப்பா சொல்லி இருக்காங்க.
நிறைய குழந்தைகளுக்கு நட்சத்திரம் பார்த்து பேரு வைப்பாங்களாம். எனக்கு நிலவு பார்த்து பேரு வச்சிட்டாங்க....
ராஜி: பெயர் காரணத்துக்கும் ஒரு பில்ட் அப்பு..... சரியா போச்சு! உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில், உங்கள் பெயர்?
சித்ரா: சித்து.
இளங்கோ: இதுதான் நீங்கள் பதிவுலகிற்கு தரும் முதல் பேர் சொல்லும் பேட்டியா?
சித்ரா: இல்லை... முன்பு ஒன்றிரண்டு மொக்கை பேட்டி கொடுத்து இருக்கேன்.
ராஜி: உங்களுக்கு நிறைய பட்டப் பெயர்கள் உண்டு என்று கேள்விப்பட்டேன். அவற்றில் உங்களுக்கு வித்தியாசமாக தோன்றும் பெயர் எது?
சித்ரா: குயீன் குல்னார். (Queen Gulnar) இந்த பெயர் எனக்கு ஏன் வந்துச்சு ....எதுக்கு வந்துச்சுன்னு தெரியல... ஆனால், சின்ன வயசுல இருந்து என் கூடவே இருக்குது...
இளங்கோ: பதிவுலகில் நல்ல பெயர் வாங்க ஏதாவது டிப்ஸ் கொடுக்க முடியுமா?
சித்ரா: நான் பத்து டாலர் டிப்ஸ் ஆக கொடுத்தால் போதுமா?
ராஜி: பதிவுலகில், கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு பேர் பெற்று இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
சித்ரா: ஒருவர், தன் பதிவில் வெளிப்படுத்தும் கருத்து சுதந்திரத்தின் எல்லை கோடு, அடுத்தவரின் சகிப்புத்தன்மையை பொறுத்தது என்ற வரைமுறைக்குள் இருக்கிறது.
இளங்கோ: இப்போ நிறைய பதிவர்கள் வந்து இருக்காங்க. அவர்கள் சார்பாக ஒரு கேள்வி:
எப்பொழுது ஒரு பதிவர், பிரபல பதிவர் என்று பேரு எடுத்துட்டார்னு தெரிந்து கொள்வது?
சித்ரா: தமிழ்மணத்துல விரைவில், பிரபல பதிவர்களின் பெயர்கள் பட்டியல்கள் வாரா வாரம் வெளியிடப் போவதாக ஒரு ரகசிய செய்தி வந்து உள்ளது. அதன்படி, இனி
இந்த வார முன்னணி ப்ராப்ள (problem) பதிவர் பட்டியல் : அந்த அந்த வாரம் பதிவுலக சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டு பிரபலமாகும் பதிவர்களின் பெயர்கள் இருக்கும்.
இந்த வார முன்னணி "ப்ரா"பல பதிவர் பட்டியல்: அந்த அந்த வாரம் நடிகைகளின் படங்களை போட்டு, அவர்களின் ப்ரா பலத்தில் பிரபலமாகும் பதிவர்களின் பெயர்கள் இருக்கும்.
வேறு எந்த எந்த பிரிவில் எல்லாம் பிரபலப் பதிவர்கள் பட்டியல் போடணும் என்று புதிய பதிவர்கள், தமிழ்மணத்துக்கு "பரிந்துரை" செய்து எழுதி அனுப்பலாம். அப்படி வரும் பட்டியல்களில் ஒன்றிலாவது உங்கள் பெயர் அங்கே இருந்தால் மட்டுமே, நீங்கள் பிரபலமான பதிவர் என்று தெரிஞ்சுக்கலாம்...
ராஜி: அந்த கேள்விக்கு, உங்களுக்கு பதில் தெரியாது என்பதை நேரிடையாகவே சொல்லி இருந்து இருக்கலாம்... ம்ம்ம்ம்..... நீங்க நிறைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுறீங்க. ஆனால், சர்ச்சைக்குரிய பதிவுகள் என்றால் அப்பீட்டு ஆகிவிடும் பதிவர் என்று பேர் எடுத்து இருக்கீங்களே....
சித்ரா: சர்ச்சைக்குரிய பதிவுகள் - பிரச்சனைகள் என்றால் நானும் ஜீப்ல ஏறிடுவேன். இந்த பக்கம் வம்பு தும்பு வந்தால், அந்த பக்கமாக எஸ்கேப் ரூட் போட்டு தப்பிச்சு போய்டுவேன். பின்ன என்னங்க? நான் என்ன ....இந்தியா - பாக்கிஸ்தான் எல்லையில சண்டை போடவா பதிவுலகுக்கு வந்தேன்? நாலு பதிவுகள் வாசித்தோமா - நாலு வோட்டுக்கள் போட்டோமா - அருமை, :-) , சூப்பர், வாழ்த்துக்கள் என்று நாலு பின்னூட்டங்கள் போட்டோமா - என் ப்லாக்ல, வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ பதிவுகள் போட்டோமா என்று போய்க்கிட்டே இருக்கத்தானே வந்தேன். ஹி,ஹி,ஹி,ஹி.....
இளங்கோ: பேருதான் பெத்த பேரு கேள்விகணைகளில் உங்களிடம் கடைசியாக ஒரு கேள்வி. நீங்கள் பிரபல பதிவரா? இல்லையா?
சித்ரா: ஆ .... ஆ...... ஆஆஆ ...... (நாயகன் கமல் ஸ்டைலில் ஆ க்களை வாசித்து கொள்ளவும். நன்றி.)
