Wednesday, July 28, 2010

பேட்டி வாங்கலியா பேட்டி.....!!!



"எல்லா புகழும் இறைவனுக்கே!"


வலைப்பதிவில், இப்பொழுது ஒரு சுற்று வந்து கொண்டு இருக்கும்,  "பதிவுலகில் நான் - பேட்டி" fever - அங்கே சுத்தி - இங்கே சுத்தி, "அமைதிசாரல்" வழியாக எனக்கும் வந்துருச்சு.... 


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


சித்ரா .......   அன்புடன்  சித்ரா -  பண்புடன் சித்ரா  -  பிரியமுடன் சித்ரா  - பாசத்துடன் சித்ரா -  நேசத்துடன் சித்ரா  - சிரிப்புடன் சித்ரா  - வியப்புடன் சித்ரா - அடக்கத்துடன் சித்ரா - அலட்சியத்துடன் சித்ரா - வீரத்துடன் சித்ரா - தெம்புடன் சித்ரா  -  வம்புடன் சித்ரா - கம்புடன் சித்ரா  - வெறுப்புடன் சித்ரா - கசப்புடன்  சித்ரா -  கோபத்துடன் சித்ரா  -  எரிச்சலுடன் சித்ரா  -  கண்ணீருடன் சித்ரா -  ஏக்கத்துடன் சித்ரா  - நக்கலுடன் சித்ரா - ஆப்புடன் சித்ரா - கொழுப்புடன் சித்ரா  ........ இப்படி ஏதாவது அடைமொழியோடு வரலாமா என்று கூட யோசித்தேன்.  அப்புறம்,  ஒன்றுடன் மட்டும் வேண்டாம் - இதுல கொஞ்சம் அதுல கொஞ்சம் என்று இருக்கலாமே என்று ......... அப்படியே  வலைப்பதிவில்  "தோன்றி" விட்டேன். 



2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அதுதான் உண்மையான பெயர் என்று சொன்னால்? இல்லை, அது பொய்யான பெயர் என்று சொன்னால்? இல்லை, உண்மையான பெயர் வச்சுக்கிட்டு பொய்யான பெயர் என்று சொன்னால்? இல்லை, பொய்யான பெயர் வச்சுக்கிட்டு, அதான் உண்மையான பெயர் என்று சொன்னால்?  அப்போ என்ன செய்வீங்க????.... அப்போ என்ன செய்வீங்க.....????

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
தடாலடியாக ஏதாவது செய்யலாம் என்ற அதிரடி நடவடிக்கை.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
என்னது? என் வலைப்பதிவு பிரபலமா?  கூகுள் நியூஸ்ல வந்த போது, நான் லீவ்ல போயிட்டேன் போல.... மிஸ் பண்ணிட்டேனே!

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
எல்லாமே என் சொந்த சரக்கா? இல்லை மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்ததா   என்று நேரிடையாகவே கேட்டு இருக்கலாமே.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இந்த பேட்டிக்கு கூட கேள்விகளுடன் நீங்கள் அனுப்பிய $1000 செக், இன்றுதான் பேங்க்ல டெபாசிட் ஆகிவிட்டதாக செய்தி வந்தது.... அதான் உடனே, பதில் சொல்றேன். 


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
வலைப்பதிவுக்கும் audit ரிப்போர்ட் , income tax ரிப்போர்ட் உண்டு என்பதை, உங்கள் கேள்விகள் மூலம் தெரிந்து கொண்டேன். 


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
அந்த பீலிங்க்ஸ் எல்லாம்,  தமன்னாவும் அனுஷ்காவும் தூய தமிழில் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு காட்டிக்கலாம் என்று காத்துக்கிட்டு இருக்கேன்....

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பில் கேட்ஸ்....அவர்தான் முதலில் பாராட்டணும்னு நினைத்தாராம், அதற்குள் ஒபாமா முந்திக்கொண்டு பாராட்டி விட்டார்.  இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி,  கொஞ்சம் லேட் ஆக வந்தாலும், லேட்டஸ்ட் ஆக வந்து பாராட்டி விட்டு போனதை மறக்க முடியாது. 


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
முந்தைய கேள்விகளுக்கு உள்ள பதில்களை படித்து விட்டு,  நீங்கள் என்னை பற்றி என்னவெல்லாம் சொல்லி திட்டுகிறீர்களோ - அத்தனையும் நான் இல்லை.... நான் இல்லை.... நான் இல்லை...... என்று சொல்கிறேன்...  நம்புங்க.... சார், நம்புங்க.... மக்கா, நம்புங்க..... மேடம், நம்புங்க..... மச்சி, நம்புங்க...... தோழா, நம்புங்க..... தோழி, நம்புங்க..... 
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...... 

 பி.கு:  
பதிவுலக நண்பர்கள் -   "warrior " தேவா, விஜய் மற்றும் சௌந்தர் இணைந்து நடத்தும்,  பதிவர்களுக்கான புதுமையான  பல்சுவை கொண்ட  வலைப்பதிவு: "கழுகு"  .  அதில், சென்ற வாரம் , என்னையும் ஒரு பதிவராக மதித்து ஒரு பேட்டி எடுத்து போட்டு இருந்தார்கள்.

http://kazhuhu.blogspot.com/2010/07/blog-post_26.html

அந்த மொக்கை பதில்களையும் வாசித்து விட்டு, மொத்தமாக என்னை "திட்டிக்" கொள்ளவும்.  அந்த பேட்டி வாங்கினால், இந்த பேட்டி இலவசம்.   நன்றிகள் பல. 

ஆமாம், பேட்டி மேல பேட்டி - என்ன விசேஷம்ங்கறீங்களா?  Tasty Appetite, Jay  - என்னையும் "The Versatile Blogger"
அப்படின்னு சொல்லிட்டாங்கப்பா.....!!  ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..... 

 

87 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) எக்கோ எஃபெக்ட்டோட ஆரம்பிச்சு சூப்பரா இருக்கு..இலவசப்பேட்டியும் படிச்சாச்சு..

தமிழ் உதயம் said...

மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்ததா என்று நேரிடையாகவே கேட்டு இருக்கலாமே. ////

அமெரிக்காலயும் எழுதி கொடுக்கிறாங்களா.

கே.ஆர்.பி.செந்தில் said...

இப்படியெலாம் வெட்டியா பேசினா வேற வழியில்லாம உங்களை பிரபல பதிவர்ன்னு சொல்லிட்டோம்...
அந்த மண்டப முகவரி குடுக்க முடியுமா?

சே.குமார் said...

//அன்புடன் சித்ரா - பண்புடன் சித்ரா - பிரியமுடன் சித்ரா - பாசத்துடன் சித்ரா - நேசத்துடன் சித்ரா - சிரிப்புடன் சித்ரா - வியப்புடன் சித்ரா - அடக்கத்துடன் சித்ரா - அலட்சியத்துடன் சித்ரா - வீரத்துடன் சித்ரா - தெம்புடன் சித்ரா - வம்புடன் சித்ரா - கம்புடன் சித்ரா - வெறுப்புடன் சித்ரா - கசப்புடன் சித்ரா - கோபத்துடன் சித்ரா - எரிச்சலுடன் சித்ரா - கண்ணீருடன் சித்ரா - ஏக்கத்துடன் சித்ரா - நக்கலுடன் சித்ரா - ஆப்புடன் சித்ரா - கொழுப்புடன் சித்ரா ....//

Ithuthaan engalukku theriyumey?
Eppudi??????
ha... haaaaa... ha....

அமுதா கிருஷ்ணா said...

என்ன ஒரு வில்லத்தனம்...

ஜெய்லானி said...

//வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?//
-
-
-
-
-
ஹா..ஹ.. இனி பேட்டின்னு ஒரு பயபுள்ள கூட வரமாட்டான். என்னா வில்லதனம்..தாங்கல சாமீ

தமிழ் அமுதன் said...

பேட்டின்னு படிக்க வந்தா சேட்டை பண்ணி இருக்கீங்க...!

but நல்லாஇருக்கு...!:)

சௌந்தர் said...

//அன்புடன் சித்ரா - பண்புடன் சித்ரா - பிரியமுடன் சித்ரா - பாசத்துடன் சித்ரா - நேசத்துடன் சித்ரா - சிரிப்புடன் சித்ரா - வியப்புடன் சித்ரா - அடக்கத்துடன் சித்ரா - அலட்சியத்துடன் சித்ரா - வீரத்துடன் சித்ரா - தெம்புடன் சித்ரா - வம்புடன் சித்ரா - கம்புடன் சித்ரா - வெறுப்புடன் சித்ரா - கசப்புடன் சித்ரா - கோபத்துடன் சித்ரா - எரிச்சலுடன் சித்ரா - கண்ணீருடன் சித்ரா - ஏக்கத்துடன் சித்ரா - நக்கலுடன் சித்ரா - ஆப்புடன் சித்ரா - கொழுப்புடன் சித்ரா ....//

போதும் போதும் போதும்........

sandhya said...

சித்ரா செம்ம கலக்கல் பேட்டி தான் ..நல்லா இருக்கு உங்க" பதிவுலகத்தில் நான் " பேட்டி

சௌந்தர் said...

எல்லாம் அந்த பேட்டிக்கு வாங்க...
கழகு

சௌந்தர் said...

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்//

இங்கு கோமாளி ஓரு பதிவர் இருக்கிறார் வந்து பாருங்க கோவம் வந்தா வரும்

பின்னோக்கி said...

மொத கேள்விக்கு பதிலயே இன்னும் படிச்சு முடிக்கலை... தலை சுத்துது :)

Balaji saravana said...

ஸ்..ஸபா... முடியல, இப்பவே கண்ண கட்டுதே!

வித்யா said...

:))

Mahi_Granny said...

முதல் கேள்விக்கான பதில் தான் அசத்தல் . பேட்டி வாரத்தில் உங்க பங்குக்கு நீங்களும் கலக்கீட்டீங்க super pictures

ஜெரி ஈசானந்தன். said...

ரசித்தேன்..

மங்குனி அமைசர் said...

உங்கள சொல்லி குத்தம் இல்லை மேடம் , இந்த தொடர் பதிவுக்கு உங்க பேர (உடனே ஸ்டார்ட் பண்ணிடாதிங்க ) அட்வைஸ் பண்ண அமைதிச்சாரளுக்கு கோவில் கட்டி கும்பாபிசேகம்பண்ணனும்

அமுதா said...

/*கம்புடன் சித்ரா ...*/
ஐயோ!!! இதுக்காகவே சொல்லிடறேன் சூப்பர் பேட்டி

Madhavan said...

//9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பில் கேட்ஸ்....அவர்தான் முதலில் பாராட்டணும்னு நினைத்தாராம், அதற்குள் ஒபாமா முந்திக்கொண்டு பாராட்டி விட்டார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கொஞ்சம் லேட் ஆக வந்தாலும், லேட்டஸ்ட் ஆக வந்து பாராட்டி விட்டு போனதை மறக்க முடியாது. //

ம்ம்ம்.. நடத்துங்க நடத்துங்க..

S Maharajan said...

அசத்தல் பேட்டி

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

போயிட்டு அப்புறமா வாரேன்.

அண்ணாமலை..!! said...

/////
சித்ரா ....... அன்புடன் சித்ரா - பண்புடன் சித்ரா - பிரியமுடன் சித்ரா - பாசத்துடன் சித்ரா - நேசத்துடன் சித்ரா - சிரிப்புடன் சித்ரா - வியப்புடன் சித்ரா - அடக்கத்துடன் சித்ரா - அலட்சியத்துடன் சித்ரா - வீரத்துடன் சித்ரா - தெம்புடன் சித்ரா - வம்புடன் சித்ரா - கம்புடன் சித்ரா - வெறுப்புடன் சித்ரா - கசப்புடன் சித்ரா - கோபத்துடன் சித்ரா - எரிச்சலுடன் சித்ரா - கண்ணீருடன் சித்ரா - ஏக்கத்துடன் சித்ரா - நக்கலுடன் சித்ரா - ஆப்புடன் சித்ரா - கொழுப்புடன் சித்ரா ........////

"லொள்ளுகளுடன் சித்ரா"-வை
விட்டுட்டீங்களே! :)

சுசி said...

ரெண்டு பேட்டியுமே படிச்சாச்சு..

அசத்தல்தான் போங்க.

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு :))))

நாஞ்சில் பிரதாப் said...

//அன்புடன் சித்ரா - பண்புடன் சித்ரா - பிரியமுடன் சித்ரா - பாசத்துடன் சித்ரா - நேசத்துடன் சித்ரா - சிரிப்புடன் சித்ரா - வியப்புடன் சித்ரா - அடக்கத்துடன் சித்ரா - அலட்சியத்துடன் சித்ரா - வீரத்துடன் சித்ரா - தெம்புடன் சித்ரா - வம்புடன் சித்ரா - கம்புடன் சித்ரா - வெறுப்புடன் சித்ரா - கசப்புடன் சித்ரா - கோபத்துடன் சித்ரா - எரிச்சலுடன் சித்ரா - கண்ணீருடன் சித்ரா - ஏக்கத்துடன் சித்ரா - நக்கலுடன் சித்ரா - ஆப்புடன் சித்ரா - கொழுப்புடன் சித்ரா ....//


மொக்கையுடன் சித்ரா வை மட்டும் வுட்டுப்புட்டீங்க...:))

சைக்கிள்கேப்புல கழுகுல வந்த பேட்டிக்கு பப்ளிசிட்டி கொடுத்தது பிளாக் தந்திரம்.

அருண் பிரசாத் said...

அடா, அடா, அடா...

ஒவ்வொரு பதிலும் காமெடி வெடி

சத்ரியன் said...

யெக்கா,

உங்க ஊருக்கு வர ஷேர் அட்டோ கிடைக்குமா?

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

என்னங்க பேட்டி குடுக்க சொன்னா போட்டி போட்டு கடிச்சி வச்சிருக்கீங்க.. ரத்தக் களரியா இருக்கு...பாதிக்கப்பட்ட வாசகர்கள் சங்கம் கெஞ்சி கேட்டுகிட்டதால நிவாரண மருந்துகள் இத்துடன் அனுப்பி வைக்கிறேன்.

கண்ணா.. said...

கலக்கல் பேட்டி.... ஓண்ணு படிச்சா ஓண்ணு ஃப்ரியா.??!!!

//பில் கேட்ஸ்....அவர்தான் முதலில் பாராட்டணும்னு நினைத்தாராம், அதற்குள் ஒபாமா முந்திக்கொண்டு பாராட்டி விட்டார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கொஞ்சம் லேட் ஆக வந்தாலும், லேட்டஸ்ட் ஆக வந்து பாராட்டி விட்டு போனதை மறக்க முடியாது. //

என்னாது இவங்கெல்லாம் உங்க பதிவையும் பார்த்து பாராட்டுனாங்களா?!! ஸேம் ப்ளட் என் பதிவையும் பாத்துட்டு முதமுதோ இவிய்ங்கதான் பாராட்டுனாய்ங்க...

:))

அமைதிச்சாரல் said...

//இந்த பேட்டிக்கு கூட கேள்விகளுடன் நீங்கள் அனுப்பிய $1000 செக், இன்றுதான் பேங்க்ல டெபாசிட் ஆகிவிட்டதாக செய்தி வந்தது.... அதான் உடனே, பதில் சொல்றேன்.//

பொய்யி..பொய்யி.. $100000 அனுப்புனேன். ரெண்டு முட்டையை கேக் செய்ய எடுத்துட்டு மிச்சத்தைமட்டும் வெளியில சொல்றாங்க :-)).

@ மங்குனி அமைச்சரே.. கோயிலுக்குள்ள ஆளுயரத்துல தங்கச்சிலையும் வைக்கணுமாக்கும். ஏன்னா, சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கேன் :-))

அம்பிகா said...

ஸ்ஸ்ஸ்...அப்பா....
தாங்க முடியல சித்ரா.
\\- வம்புடன் சித்ரா - கம்புடன் சித்ரா \\
இனிம யாராவது பேட்டி கேப்பாங்களா?-

ஹேமா said...

சித்ரா....எல்லாத்திலயும் சேட்டைதானா !முடிலப்பா!

பார்வையாளன் said...

so sweet answeres...enjoyed....

V.Radhakrishnan said...

நகைச்சுவை உணர்வுடன் அழகாக எழுதப்பட்ட பதில்கள். ரசித்தேன்.

ப.செல்வக்குமார் said...

//அப்போ என்ன செய்வீங்க????.... அப்போ என்ன செய்வீங்க.....????///
அப்படியே திரும்பி ஓடிடுவேன் ..!!!

க.பாலாசி said...

அய்யோ ஆத்தா முடியல...

ப.செல்வக்குமார் said...

//அந்த பீலிங்க்ஸ் எல்லாம், தமன்னாவும் அனுஷ்காவும் தூய தமிழில் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு காட்டிக்கலாம் என்று காத்துக்கிட்டு இருக்கேன்....///
சரியா சொன்னிங்க அக்கா ....!! ஏன்னா நம்மளுக்கு நிகரானவங்க கூடத்தானே சண்டை போட முடியும் ..!!

சரண் said...

//எல்லாமே என் சொந்த சரக்கா? இல்லை மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்ததா என்று நேரிடையாகவே கேட்டு இருக்கலாமே.//

இதுநாள் வரை மண்டபத்து சரக்குதான் ஓடிகிட்டு இருக்குதா?

சின்ன அம்மிணி said...

கலக்குங்க. பேட்டின்னதும் வயிறு கொஞ்சம் கலங்கித்தான் போச்சு :)

அன்புடன் அருணா said...

பிரபல பதிவராயிட்டீங்க சித்ரா!!!கலக்க்கல்ஸ்!

Gayathri said...

ஒரு ஒரு பதிலும் உங்க திருதேமார்க் குசும்பு ஹா ஹா நலருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல் சித்ரா :))

நாடோடி said...

இவ்வ‌ள‌வு அமொண்ட் வாங்கி கொண்டு போடும் உங்க‌ளுடைய‌ பேட்டியை நாங்க‌ இல‌வ‌ச‌மா ப‌டிச்சாச்சி...ஹி..ஹி..

ரமேஷ் said...

நல்ல இருக்கு உங்களை நீங்களே எடுத்துக்கிட்ட பேட்டி..

சி. கருணாகரசு said...

அப்ப.... நீங்க நல்லெண்ணை சித்ரா இல்லையா?

Mrs.Menagasathia said...

//சித்ரா ....... அன்புடன் சித்ரா - பண்புடன் சித்ரா - பிரியமுடன் சித்ரா - பாசத்துடன் சித்ரா - நேசத்துடன் சித்ரா - சிரிப்புடன் சித்ரா - வியப்புடன் சித்ரா - அடக்கத்துடன் சித்ரா - அலட்சியத்துடன் சித்ரா - வீரத்துடன் சித்ரா - தெம்புடன் சித்ரா - வம்புடன் சித்ரா - கம்புடன் சித்ரா - வெறுப்புடன் சித்ரா - கசப்புடன் சித்ரா - கோபத்துடன் சித்ரா - எரிச்சலுடன் சித்ரா - கண்ணீருடன் சித்ரா - ஏக்கத்துடன் சித்ரா - நக்கலுடன் சித்ரா - ஆப்புடன் சித்ரா - கொழுப்புடன் சித்ரா ........ இப்படி ஏதாவது அடைமொழியோடு வரலாமா என்று கூட யோசித்தேன். அப்புறம், ஒன்றுடன் மட்டும் வேண்டாம் - இதுல கொஞ்சம் அதுல கொஞ்சம் என்று இருக்கலாமே என்று ......... அப்படியே வலைப்பதிவில் "தோன்றி" விட்டேன். // ஹா ஹா இனி ஒருத்தர் கூட உங்கள பேட்டி எடுக்கமாட்டாங்க.அசத்தல் பதில்கள்...

Ananthi said...

ஹா ஹா ஹா.. முடியல சித்ரா.. அதெப்படி..
எல்லா கேள்விக்கும் இப்படி அசராம பதில் போட்டீங்க...??
ஹ்ம்ம்ம்.. இப்படி தான் பிரபலம் ஆனிகளா..?? :D :D :D
ஐ... உங்க ட்ரேட் சீக்ரெட் தெரிஞ்சு போச்சே.. தெரிஞ்சி போச்சே..!!! :-)))

எல்லா பதிலும் சூப்பர் சித்ரா.. உங்க ஸ்டைல்-ல கலக்கிட்டீங்க..
தொடர்ந்து, பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்..!!

சாருஸ்ரீராஜ் said...

சித்ராவில் இத்தனை வகையா ? ஆ சுப்பரா இருக்கு....

ராஜ நடராஜன் said...

சிரிப்புடன் சித்ரா!

எதுகை மோனையா நல்லாயிருக்கே!

அரைகிறுக்கன் said...

///பேட்டி வாங்கலியா பேட்டி.....!!!///
நானு படிச்சேன் வாங்க வர்லீங்க.

இராமசாமி கண்ணண் said...

:)

ஸ்ரீராம். said...

தொடர்பதிவு வா...ர...மா?

dheva said...

ஒரு விசயம் உருப்படியா சொல்லவா.....சிரிச்சுகிட்டே படிச்சேன்.....சிரிச்சேன்...படிச்சு முடிச்சேன்....இன்னமும் சிரிச்சுகிட்டே இருக்கேன்......


கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் சித்ரா....! வாழ்த்துக்கள்!

ஆமா யாரு வாரியர் தேவா? கிருபானந்த வாரியார் சொந்தக்காரா?

Karthick Chidambaram said...

கலக்கல் :))))

நியோ said...

அதிரடி சரவெடி ...மொத்தத்தில் தீபாவளி பேட்டி...
அப்புறம் ...
என்னோட சொந்த ஊர் பணகுடி ...
திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் போற வழியில வள்ளியூருக்கு அடுத்ததாய் ...

வால்பையன் said...

வழக்கம் போல் கலக்கல்

நசரேயன் said...

//பில் கேட்ஸ்...//

யாரு .. யாரு ?

Tamil Online Job : படுகை.காம் said...

"நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இந்த பேட்டிக்கு கூட கேள்விகளுடன் நீங்கள் அனுப்பிய $1000 செக், இன்றுதான் பேங்க்ல டெபாசிட் ஆகிவிட்டதாக செய்தி வந்தது.... அதான் உடனே, பதில் சொல்றேன்."

======================

இன்னாங்க அக்கா........ இந்த $100 சேத்து பேங்க்-ல போட்டுட்டு எங்க வலை தளத்திலும் ஒரு பேட்டி கொடுக்க வர்ரீங்களா...

இவன்
படுகை.காம்

கலகலப்ரியா said...

கலக்ஸ்...

வெறும்பய said...

அசத்தல் பேட்டி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present madam

ஜெயந்தி said...

காசுபோட்டு வாங்குனதவிட இலவசம் நல்லாயிருக்கு.

ஜெஸ்வந்தி said...

ha ha haa அசத்தல்.

சசிகுமார் said...

நான் ஏற்கனவே நெனச்சேன். இது போல தான் ஏதாவது பண்ணி வைப்பீங்கன்னு

பித்தனின் வாக்கு said...

"லொள்ளுகளுடன் சித்ரா"-வை
விட்டுட்டீங்களே! :)
repeataiiiiiii
nakkal naiyandi chitra added.
pasathudan chitra, panpudan chithra, appuram soloman sir mattum koopidum chithu.
ithu ellam miss aki vittathu.

Riyas said...

அப்பப்பா தல சுத்துது... என்னால முடியல்ல

Riyas said...

அப்பப்பா தல சுத்துது... என்னால முடியல்ல

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் பேட்டிங்க சித்ரா.. நான் படித்த சுயபுராணங்களில் இது தான் அல்டிமேட். மெய்யாலுமேங்க. :)

சிவன். said...

முடியல, நீங்க நடத்துங்க சித்ரா மேடம்.....

தாராபுரத்தான் said...

அன்புடன் அப்பா...

தக்குடுபாண்டி said...

anushka photo toppu tukker..:)

சந்ரு said...

அசத்தலான பேட்டி... இந்த பேட்டிக்கு பின்னராவது கொழுப்புடன் சித்திரா என்று போடலாம். நல்ல பெயர்

thenammailakshmanan said...

கொஞ்சம் நஞ்சம் நக்கல் இல்ல்லிங்கோ மேடம்.. சூப்பர்ர்ரூஉ உங்க அக்காவான எனக்கு பெருமை மேல எருமை மேயுது..:)))

கலாநேசன் said...

ஹா ஹா ஹா. என்ன ஒரு கொலைவெறி. நடக்கட்டும் நடக்கட்டும்.

ரிஷபன் said...

’சித்திர’ எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்!

எப்பூடி.. said...

லேட்டாகத்தான் பார்த்தேன், கலக்கலாக இருக்கிறது.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அட ஆள விடுங்கடா சாமி... இந்த அக்கா ரொம்ப கலாய்க்கிறாங்கப்பா...

மாதேவி said...

கலக்கல் சித்ரா.

asiya omar said...

இந்த அருமையான பேட்டிக்கு பொட்டி பொட்டியாக தரலாம்.

Matangi Mawley said...

Ultimate interview ponga! :D superubbu!

அரசூரான் said...

நான்: எச்சூச்மி மேடம், இந்த அட்ரஸ்-ல (கொஞ்சம் வெட்டிப் பேச்சு) பதிவு எழுதுரவங்க எங்க இருக்காங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

சித்ரா: ஏன்யா, இவங்கள தெரியாதா, இவங்க பேரு "திண்ணை சித்ரா" (பின்ன திண்ணைல உட்காந்து தான வெட்டிப் பேச்சு பேச முடியும்), வெண்ணையா பதிவு எழுதுவாங்க, இப்பிடியே லெப்ட்ல போயி ரைட்டுல திரும்பினா திண்ணை தூங்கி தெரு வரும், அங்க ஒரு வீட்டுலதான் திண்ணை இருக்கும், கொஞ்சம் இல்ல நிறையவே வெட்டிப் பேச்சு பேசிகிட்டு ஒரு அம்மா இருப்பாங்க, போய் பாருங்க.

நான்: ஏம்மா, பாளையங்கோட்டைலேருந்து எஸ்கேப் ஆகி அமெரிக்கா போயிட்டாங்க, அங்க போயும் வெட்டிப் பேச்சு, கழுகு பேட்டி, பதிவுலகில் நான்னு சிரிப்பு குண்ட போடுராங்கன்னு பதிவுலகமே சிரிப்பா சிரிச்சு தேடிகிட்டு இருக்கு, நீ என்னமோ திண்ணை வெண்ணை-ன்னு போம்மா

சித்ரா: எல்லாத்தையும் படிச்சுட்டுதான் இவன் அட்ரஸ் கேட்குரானா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நான்: எச்சூச்மி சார், இந்த அட் ரஸ்-ல (கொஞ்சம் வெட்டிப் பேச்சு) பதிவு எழுதுரவங்க எங்க இருக்காங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

வேலன். said...

அன்புடன் சித்ரா - பண்புடன் சித்ரா - பிரியமுடன் சித்ரா - பாசத்துடன் சித்ரா - நேசத்துடன் சித்ரா - சிரிப்புடன் சித்ரா - வியப்புடன் சித்ரா - அடக்கத்துடன் சித்ரா - அலட்சியத்துடன் சித்ரா - வீரத்துடன் சித்ரா - தெம்புடன் சித்ரா - வம்புடன் சித்ரா - கம்புடன் சித்ரா - வெறுப்புடன் சித்ரா - கசப்புடன் சித்ரா - கோபத்துடன் சித்ரா - எரிச்சலுடன் சித்ரா - கண்ணீருடன் சித்ரா - ஏக்கத்துடன் சித்ரா - நக்கலுடன் சித்ரா - ஆப்புடன் சித்ரா - கொழுப்புடன் சித்ரா .//

இன்னும் ஏதோ ஒன்று குறைகின்றதே...? என்ன அது? ஞாபகம் வரட்டும் சொல்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்குங்க சித்ரா உங்கள் பதில்கள்.

Indhira said...

பேட்டி படிச்சிட்டேன்..
உங்களை 'தாராளமா' பாராட்டனும்..
விலாசம் தரீங்களா??

சி.பி.செந்தில்குமார் said...

aஅடேங்கப்பா,84 கமெண்ட்ஸ் ஆகிடுச்சா?100 வந்தா பார்ட்டி வைக்கவும்

ராமலக்ஷ்மி said...

அடைமொழிகள்:))!

சேலம் தேவா said...

இனிமே பேட்டின்னாவே வேட்டி அவுர்றமாதிரி சிரிப்பு வரும்போல!!!