Showing posts with label சினிமா டிவி. Show all posts
Showing posts with label சினிமா டிவி. Show all posts

Monday, January 23, 2012

சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....

இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம்,  பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால்,   எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த ஒரு அவசர பதிவு.
இதை காமெடியா எழுதி, எப்படி சிரிக்கிறது?   மத்தவங்க நம்ம பார்த்து சிரிக்காம இருக்கணுமே ..... மனசு கேட்கலைப்பா.....

சென்ற வாரம் மட்டும்,  மூன்று வெவ்வேறு  நிகழ்வுகளின் மூலம், இந்திய வெளிநாட்டினரின் பார்வையில் வேறு விதமாக பார்க்கப்பட்டு வந்து இருக்கிறது. 

ஒரு பக்கம், உக்ரனியன் ( Ukranian) பெண்கள் , இந்தியாவுக்கு எதிராக போர் கொடி - நிஜமாகவே தேசிய கொடியை - தூக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டு இருக்கிறார்கள். 


இந்தியாவுக்கு முதல் முறையாக வந்த அமெரிக்க டிவியில் முத்திரை பதித்துள்ள பெண்மணி  - பெரும்புள்ளி -  ஓப்ரா - Oprah Winfrey - இந்திய வருகையின் போது, சில விஷயங்களில் கடுப்பாகி அதுவே, இந்தியாவுக்கு முதலும் இறுதியுமான வருகை என்று சொல்லி இருக்காங்க. 

அப்புறம் , நோர்வே நாட்டில் இருந்து கொண்டு, இந்திய முறைப்படி குழந்தை வளர்ப்பில் ஈடுபட்ட இந்திய தம்பதியினரிடம் இருந்து அவர்களது இரண்டு குழந்தைகளையும் , நோர்வே அரசாங்கமே வாங்கி வேறு குடும்பத்தினரிடம் வளர்க்க சொல்லி விட்டது.  இப்பொழுது, இந்திய அரசாங்கத்தின் தலையீட்டால் , குழந்தைகளை அதன் பாட்டி தாத்தாவிடம் ஒப்படைக்க சொல்லி  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 



இது வரை,   இந்தியாவின் கலாச்சாரத்தை ... இல்லை, இல்லை,  தமிழ்நாட்டு கலாச்சாரத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து கொண்டு மற்ற நாடுகளை - அவர்களின் பழக்க வழக்கங்களை -  எண்ணங்களை - சுதந்தரத்தை  - கலாச்சாரத்தை குறை கூறி கேட்டதுண்டு.  

ஆனால், சென்ற வாரம் தான்,  பல வெளிநாட்டினர் , இந்தியாவின் கலாச்சாரத்தை - மக்களின் நடவடிக்கைகளை - பின் தங்கி இருக்கும்  சில பழக்க வழக்கங்களை  - அலசி ஆராய்ந்து பேசியதை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்,  செய்திதாட்களிலும்  ஆங்கில பதிவுகளிலும் முதன் முறையாக பார்த்தேன்.  

அவற்றில் குறிப்பாக, வெளிநாட்டினரால்  எழுப்பப்பட்ட கேள்விகளை ,   இங்கே தொகுத்து தந்து இருக்கிறேன். 


வெளிநாட்டினரும்  மதித்து வந்த இந்தியாவின் பாரம்பரியம், திடீர் என்று வில்லங்கத்தனமாக  பார்க்கப்படுவது ஏன்?  இது வரை இருந்து வந்த  புரிதலை தவறாக,  இந்தியர்களே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டதால் தானா? 

இந்தியர்கள்,  இந்திய  நாட்டில் கூட சரியாக கடைப்பிடிக்காத பழக்க வழக்கங்களை, வெளிநாட்டில் வந்ததும் கடைப்பிடிப்பதன் காரணம் என்ன? 

David Hawks என்பவர் எழுப்பிய கேள்வியில்,   இந்தியர்கள் Developed countries வந்த பின்னும் Developing countries உள்ளது போலவே உள்ள அணுகுமுறையில் , தங்களை மாற்றி கொள்ளாமல் இருப்பது எதனால்?  


பெரும்பாலான இந்தியர்கள்,  "the glass is half  full" - என்ற மனப்போக்குடன் இந்தியாவையும் - " the glass is half empty"  - என்ற மனப்போக்குடன் வெளிநாட்டினரையும் மதிப்பிடுவது எதற்கு? 


 இந்தியர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்கு என்று ஒரு இந்தியாவை அங்கே உருவாக்கிக் கொள்வதில் தான் கவனமாக இருக்கிறார்களே தவிர,  இருக்கும் நாட்டின் நல்ல கருத்துக்களை - பண்புகளை - ஏற்று கொள்ள தயக்கம் காட்டுவது ஏன்?  

"ஊரோடு ஒத்து வாழ்" என்ற முறையை இந்தியாவில் கடைப்பிடித்தாலும்,   அதையே வெளிநாட்டில் வரும் போது அங்கே உள்ள விதிமுறைகளை, குறிப்பாக , அரசாங்க விதி முறைகளை   தெரிந்து கொள்ள - புரிந்து கொள்ள - எந்த வித முயற்சியும் எடுக்காமல்,  கிணற்றுத் தவளைகள் ஆகவே இருப்பதன் காரணம் என்ன? 

பரந்த மனப்பான்மையுடன் இல்லாமல், ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே தங்களை வைத்துக் கொள்வதேன்? 
இந்தியர்களுக்கு தங்கள் நாடு பெருமையானது என்பது போல், மற்றவர்களும் தங்கள் நாட்டை  பெருமையாக நினைப்பார்கள் என்பதை மறந்து,  அவர்களை கேலி பேசுவதேன்?

பெரும்பாலான இந்தியர்கள்,  hypocrites (இதற்கு தமிழ் வார்த்தை தேடினால், ஆசாரகள்ளன் என்று ஆங்கில - தமிழ் அகராதி காட்டுகிறது)  ஆகவே இருக்க வேண்டிய அவசியம் ஏன்? 

இப்படியாக நிறைய விவாதித்துக் கொண்டே போனாங்க.... 

திருவிளையாடல் நக்கீரன் மாதிரி ஒரே பீலிங்க்ஸ்சு  ஆஃப்  இந்தியாவா ஆயிடுச்சு.... ..... இந்தியாவை குறித்து, வெளிநாட்டில் பெருமையாக பேசினால் அதை கேட்டு பெருமைப்படும் முதல் ஆளும் நான் தான். அதே சமயத்தில்,  யாராவது குறைவாக  குற்றங்குறையுடன் பேசி விட்டால், அதை கேட்டு வருத்தப்படும் முதல் ஆளும் நான் தான்.....  ஃபீல் பண்ண போற அடுத்த ஆள், நீங்க தான்னு தெரியும்..... அதான் உங்க காதுல விஷயத்தை போட்டு விட்டேன்.


 







Monday, February 21, 2011

டிவி பார்க்குற ரவுசு

சொந்த செலவுல, என்  தமிழ் ஆர்வத்துக்கு  சூனியம் வச்சிக்கிட்ட மாதிரி, ஆகி போச்சு.... 
அமெரிக்காவுல இப்போ, விஜய் டிவி - ஜெயா டிவி - கலைஞர் டிவி எல்லாமே டிஷ் நெட்வொர்க்கில் தெரியுதுன்னு சொல்லி, ஒரு ஆர்வ கோளாறுல  நானும் தமிழ் மெகா பாக் ஆர்டர் பண்ணிட்டேன்.  ரெண்டு நாளா,  எங்க வீட்டு குட்டீஸ்கிட்ட - அம்மா மட்டும் தான் டிவி பார்க்கலாம்.... நீங்க ரெண்டு பெரும் விளையாட போங்க - அப்படியே டிவி பார்க்கணும்னா, அம்மா பார்க்கிற ப்ரோக்ராம் தான் பார்க்கணும் - என்று அம்மா பவர் use பண்ணி புது ஆர்டர் தெரியாமல் போட்டுட்டேன் ...  இப்போ "பே" னு முழிக்கிறேன்.



 "நோ, ஒளிஞ்சிருக்கும் பற்சிதைவு!"
"ஆக்குமே, சகல நோய்க்கும் complete stop."
"வளர்ந்தாங்க இரட்டிப்பு மடங்கு அதிகமா."
"பத்து ஸ்கின் ப்ரோப்ளம் - நோ டென்ஷன்!"

அப்படின்னு புது தமிழில் என்னை நானே கரைத்துக் கொண்டிருந்த நேரத்துக்கு -  வந்துச்சே,  complete ஸ்டாப்.

 என் எட்டு வயது பொண்ணு,  என்ன மாதிரி அமெரிக்கன் டிவி சேனல் தேர்ந்து எடுக்கிறாள், என்ன மாதிரி அமெரிக்க டிவி நிகழ்ச்சிகள் பார்க்கிறாள் என்று மிகவும் கவனமாக இருக்கும் நான், தமிழ் டிவி விஷயத்தில் மட்டும்,  மூளையை அடகு வச்சுட்டேன்.  ஆனால், அவள் அப்படி இல்லையே..... நான் போட்ட ரூல்ஸ் எல்லாத்தையும்,  எனக்கே திருப்புறா!

இக்கரைக்கு அக்கரை "பச்சை":

 
சினிமா காமெடி சீன்:

"ஏம்மா, இந்த ஆளு அடி வாங்கிகிட்டு இருக்காரு?  அடிக்கிறது தப்பில்லையா?"
"இது காமெடி!"
"ஒரு ஆளை அடிக்கிறதுதான் காமெடியா?"
"இந்த ஆளு அடி வாங்குறதுதான் காமெடி."
"அவர் bad guy யா?"
"இல்லை, அவர்  good  guy ."
"அப்போ,  அவரை அடிக்கிறவங்க bad guys ஆ?"
"இல்லை,  அவங்களும் good guys ."
"நல்ல பிள்ளைனா, யாரையும் அடிக்க கூடாதுன்னு சொன்னீங்க..."
"......................???????!!!!!!!!!.........."

சினிமா பாடல்கள்: 

"அம்மா,  இப்படித்தான் இந்தியாவில எப்போ பார்த்தாலும் guys ,  yucky ட்ரிங்க்ஸ் (டாஸ் மார்க் ஐட்டம்ஸ்)  ரோடுலேயே எடுத்துக்கிட்டு,  பொண்ணுங்களை disturb பண்ணிக்கிட்டே இருப்பாங்களா?" 
"...............????????!!!!!!!........."
 

 "எங்க எழுந்து போற?"
"தம்பியோட விளையாட போறேன். நீங்கதானே அமெரிக்கன் டிவி சேனல்ஸ்ல MTV எல்லாம்  நான் பார்க்க கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க.... நீங்க,  இந்தியன் MTV songs பார்த்துக்கிட்டு இருக்கீங்க.... நான் தான் பார்க்க கூடாதே...." 
"..............????????!!!!!!!!!........"

விளம்பரங்கள்: 

"அம்மா, இந்தியாவில லுக் (look ) க்குத்தான் அதிகம் importance  கொடுப்பாங்க போல..."
"அப்படியெல்லாம் இல்லை.... எதற்கு அப்படி சொல்றே?"
 " எப்போ பாரு..... ஷாம்பூ, சோப்பு,  டூத் பேஸ்ட், fairness cream commercials (விளம்பரங்கள்) தான் மாத்தி மாத்தி வந்து கிட்டே இருக்குது." 
"............????????!!!!!!!!......."


டிவி ஹோஸ்ட்:

"அம்மா,  தமிழ்ல பேசு ... நல்லா தமிழ்ல பேசுன்னு என்கிட்டே சொல்றீங்களே.... பாருங்க..... அவங்களுக்கும் நல்லா தமிழ் பேச தெரியல...."
"..............???????????!!!!!!!!!........."


 ரியாலிட்டி கேம் ஷோ:

" அம்மா,  அவங்களோட talents க்கு challenging (சவாலாக) கேம்ஸ் வைக்காமல்,  எதற்கு அவங்களை silly  யாக  (சின்ன புள்ளத்தனமாக)  காட்டுற மாதிரி கேம்ஸ் கொண்டு வராங்க?"
"..............??????????!!!!!!!!!........" 


ரெண்டு நாளா, தாங்க முடியல என் ரவுசு - புலம்புனாங்க குட்டீஸ் நல்லா. 
எனக்கு வீட்டு ப்ரோப்ளம் - நோ டென்ஷன்.
ஆனால் ஆக்குமே,  குட்டீஸ் அப்பாக்கிட்ட கம்ப்ளைன் - எஸ் டென்ஷன். 
பண்ணிட்டாரே சப்போர்ட், குட்டீஸ்க்காக, என் கணவர். 
ஆக.... கட் ஆயிடுச்சு, என் தமிழ் டிவி  டைம். 
சொல்லிட்டாரே,  குட்டீஸ் முன்னால, நோ தமிழ் டிவி. 

அதுவரை, நான் என்ன பண்றது?  முன்பு ஒரு பதிவில நான் சொல்லி இருந்த மாதிரி: 

எழுதுவேன் பாரதியார் பாடல்களை நான் இப்படி:

தமிழ் language போல் அறிந்த யாம் language களில்
காணோம் எங்கும் sweetaa;

சொல்லும்போது red தமிழ் country என்று - பாயுது
காதினிலே honey வந்து .....

பாப்பா விளையாடு ஓடி -
பாப்பா ஆகாது ஓய்ந்திருக்க நீ!

கண்ணம்மா விழிச்சுடர் hot தான் -
sun ஆ? moon ஆ?

கொலை பண்ண உனக்கு பாரதியார் பாட்டுத்தான் கிடச்சுதானு, யாரும் என் கிட்ட கேட்காதீங்க.
"முதல்ல,  அவங்கள நிப்பாட்ட சொல்லுங்க.... அப்புறம், நான் நிப்பாட்டுறேன்!"


என்ன நினைப்புல டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கிறார்கள் என்று தெரியல.... வியாபாரம் மட்டும் தான் உள்நோக்கமோ?  நிச்சயமாக தமிழ் மொழி வளர்ப்பு திட்டம் இல்லை - தமிழ் கலாச்சாரம் காப்பு திட்டமும் இல்லை.  தனியார் தொலைக்காட்சி எல்லாம் அரசியல் கட்சிகள் பிடியில் இருக்கிறதன் காரணம் மட்டும் புரியுது....  தமிழ் மக்கள், தங்கள் பொழுதை எல்லாம் இப்படி கழிச்சிட்டாங்கன்னா, அவங்க நிம்மதியா அரசியல் பண்ணலாம் பாருங்க... எந்த தமிழ் மகனும் கேள்வி கேட்க மாட்டாங்க.....நாட்டு நிலைமையை கண்டு பொங்கி எழ மாட்டாங்க......  ஜூப்பரு!

  
என்ன சொல்ல வர்ற?  ஒண்ணும் புரியல என்று  நினைக்கிறவங்களுக்காக:
எனக்கும் இந்த போஸ்டர்ல இருக்கிற மாதிரி,  தமிழ் டிவி நிகழ்ச்சிகள் பற்றி ஒண்ணும் புரியல:  (கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.  அதற்கு உங்கள் மம்மி டாடி பர்மிசன் தேவையில்லைங்கோ!"



பி.கு. 
தமிழர் என்பதன் முதல்  அடையாளமே, தமிழ் மொழிதானே.... அது படுகொலை செய்யப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமே..... பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு பொங்கி எழப் போகிறோமோ? 

Wednesday, January 20, 2010

பல தமிழ் சினிமாக்களில் என்னத்த "காட்டுறாங்க?"



இங்கே,   ஒவ்வொரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கும் rating உண்டு.
அந்த அந்த நிகழ்ச்சிக்கு தனி தனி rating...... எந்த எந்த rating உரிய நிகழ்ச்சிகள் அதிகம் இருக்கிறதோ அதற்கு ஏத்த மாதிரி, தனி தனி சேனல். வசதி பண்ணி கொடுத்துருக்காங்க. பிறகு, விடிய விடிய டிஸ்னி சேனல் பாத்துட்டு, "என்னது, மின்னி மௌசு ரெக்கார்டு டான்சு, கடைசி வரை ஆடலனு",  சில "ஜொள்னா" பார்ட்டி அப்புறம் புலம்ப கூடாது பாருங்க.

TV viewers உக்கு , நிகழ்ச்சிகளின் theme, content, scenes, violence, உபயோகப் படுத்தும் வார்த்தைகள் (language usage) போன்று சில அம்சங்களை வைத்து rating கொடுத்து,  "இந்த அம்சங்கள் இந்த படங்களில் அல்லது நிகழ்ச்சிகளில் இருக்கு. தொட்டாசிணுங்கி உனக்கு பிடிக்கிலைனாலும் சரி,  உன் புள்ள குட்டி வம்சத்துக்கு ஆகாதுனாலும் சரி - சேனலை மாத்து. இந்த கருமாந்தரத்தை தான் எப்ப போடுவாங்கன்னு  பாக்க உக்கார்ந்துருக்கேன் என்பவர்களே , என்சாய் மக்கா என்சாய்..." அப்படிங்கறாங்க.

Y - for all ages
Y7 - for ages 7 and up
PG - Parental guidance
PG 13 - for children under age 13, parental guidance is needed to watch the program.
Y14 - for ages 14 and up
TV R - Restricted audiences only.
TV MA - for matured audiences only

survey சொல்லுதுங்க:  எட்டு ஒம்பது வயசு வரையிலாவது  பெருவாரியான சின்ன புள்ளைங்க  எல்லாம் அமெரிக்காவிலே ஒழுங்கா அவங்க வயசுக்கு ஏத்த நிகழ்ச்சிகள் தான் டிவில பாக்குறாங்களாம். சர்தாங்க.

எங்க வீட்டில், M TV போன்ற சேனல் எல்லாம் பொண்ணுக்கு பத்து வயதுக்கு மேல தான் என்று ரூல் போட்டாச்சு. அவ வகுப்பில் மொத்தமே ஒம்பது பேர்தான். எல்லோருக்கும் வீட்டில் அந்த ரூல் போல. இது வரை, "அவள் மட்டும் பாக்குறா..... இவன் மட்டும் பாக்குறான்" என்று சொல்லி பாக்கணும்னு கேக்கலை. ஆனால்..........
என் மகள்,  US டிவியில் பார்க்கும் நிகழ்ச்சிகள், அவள் வயதுக்கு உரியதுதானா என்று மெனக்கெடும் என் ரேடார் மூளை, தமிழ் சேனல் நிகழ்ச்சிகள் பார்க்கும் போது ஏனோ கும்மி அடிக்க போய்க்கிட்டு இருந்துச்சு. இப்போ?

கொடுமை கொடுமைன்னு தமிழ் படம் பாக்க போனா, அங்கேயும் ரெண்டு கொடுமை அவுத்து போட்டுட்டு (அட, தலை முடியைதாங்க, நீங்க வேற.....) ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்!

தமிழ் படம் interest வந்துச்சுனா, நம்ம மாதந்தோறும் கப்பங் கட்டி  அழுவுற இருபத்து அஞ்சு டாலர் பழுத்துருமே என்று  அவளை - ஐந்து வயது  செல்லத்தை, சன் டிவி யில் ஒரு தமிழ் படம் பாக்க என்னுடன் உக்கார வச்சுட்டேன்.

"உனக்கு எதுவும் புரியலைனா என்ட்ட கேளு. நான் explain பண்றேன். நீ பேசுற தமிழ் மாதிரியே தான் இருக்கும். சில சமயம், சீரியஸா அல்லது லோக்கல் டச் ஓட பேசும்போது உனக்கு புரியாம போச்சுனா சொல்லு. உனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் கேளு."
"சரிம்மா."

என்னுடைய கடைசி அஞ்சு வார்த்தைகள் என்னை பந்தாட போவுது னு தெரியாம சொல்லிட்டேன்.
1,2,3 ............. டிங் டிங் டிங் .......... மூவி ஸ்டார்ட்ஸ் : டைம்: மதியம் 2:45 மணி.

"அம்மா, இப்படித்தான் நீங்க ஷாப்பிங் போகும் போது பயந்து கிட்டே போவீங்களா?"
"இல்லமா, இது சினிமா. நிஜத்தில் இப்படி எல்லாம் அதிகம் நடக்காது."
"அம்மா, யார் இவன்? எதுக்கு தாத்தா மாதிரி ஆளை எல்லாம் இவன் அடிக்கிறான்?"
"இவன் bad guy. அப்படிதான் அடிப்பான்."
" யாரையும் அடிக்க கூடாதுன்னு இந்தியாவில் சொல்லி தர மாட்டாங்களா?"
"இவன் bad guy மா. யார் பேச்சும் கேக்க மாட்டான்."

டன் டன் டன் டன் .......டான்.............. டன டன டன் டன் டன் .......... டான்.
hero entry:

"இவன் யார் மா? இவனும் ஷாப்பிங் பண்றவங்களை, ஷாப் வச்சுருக்கிரவங்களை அடிக்க போறானா?"
"இல்லமா. படத்தை பாரு."
" இவனும் அடுத்தவனை அடிக்குறான், அம்மா. ஒரு தாத்தாவை அந்த ஆளு அடிச்சதுக்கு, அவன் கூட வந்த people எல்லாரையும் அடிக்கிறான்."
" இவன் நல்லவங்களை அடிக்க மாட்டான். only bad guys."
" so, he is a good bad guy."
"good bad guy?"
"yes. bad guy னா, நல்லவங்களை அடிக்குறான். good bad guy னா, கெட்டவங்களை அடிக்குறான். என்ன ஆனாலும், அடிக்குறது தப்புன்னு நீங்கதானே நான், அலீசை அடிச்சப்போ சொன்னீங்க."

(இந்த பொறுப்புள்ள அம்மாவின் பருப்பு ரொம்பவே நேரம் கெட்ட நேரத்துல வேகுது.)
"ஆமாம்.......... good bad guy னே வச்சுக்க."

சண்டை முடிஞ்சு item song: அடிதடி முடிஞ்சு அதிரடி நடனம்: கும்மாங் குத்து முடிஞ்சு டப்பாங்  குத்து.

"அம்மா, இந்த பொண்ணு good bad guy ஓட girl friend ஆ?"
"இல்ல. சும்மா டான்ஸ் ஆடுவா. அப்புறம் போய்டுவா."

ஒரு தோழியின் அப்பா சொன்ன வில்லங்க கமெண்ட் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது: முந்தி எல்லாம், வில்லன் முன்னாலே தான் ஆடுறதுக்கு இப்படி பொண்ணு ஒண்ணு வரும். காபரே டான்ஸ் னு பாப்போம். இப்போ ஹீரோ வுக்கு தான் அந்த மச்சம். அடுத்து யாருக்கு அந்த அதிர்ஷ்டமோ?

- வெட்டி பேச்சின் ஆருடம்: சன் pictures போற வேகத்துக்கு, அவங்க தயாரிப்பில் வர  படங்களை பாக்க போறவங்களுக்கு தியேட்டரில் நேரில் வந்து, ஒரு அம்மணி அப்படி ஆடிட்டு போக வழி பண்ணிடுவாங்க. இப்போவே சன் டிவி இல் ராஜா யாரு ராணி ஆறு நிகழ்ச்சியில் முன்னோட்டம் விட்டு பாத்துட்டாங்க.

"நான் போன வாட்டி தாத்தா பாட்டி பாக்க ஊருக்கு போனப்போ இப்படி யாரும் dress பண்ணி பாக்கலை."
"நானும் பாக்கலை."
"இவ ஷாப்பிங் பண்ணவே இந்த டிரஸ் லதான் வந்தாளா?"
"தெரியலை. சும்மா வந்து, டான்ஸ் ஆடிட்டு போயிருவா."
" பாவம் அந்த பொண்ணு. அவளுக்கு டிரஸ் சின்னதா போனப்புறம், அவங்க அம்மா பெரிய சைஸ் டிரஸ் வாங்கி தரலை."
"இல்ல, அவ டான்ஸ் ஆட மட்டும் அப்படி டிரஸ் போட்டு இருக்கா...."

தன் ஷர்ட் ஐ தூக்கி லேசாக மேலே சுருட்டி வைத்து கொண்டு, sofa மேல் ஏறி குதித்தாள்.

"sofa மேல ஏறி குதிக்காத. ஷர்ட் ஐ இழுத்து விடு. அசிங்கமா வயித்தை எல்லாம் காட்ட கூடாது."
"அம்மா, இந்தியாவில் எல்லா அம்மாவும் தன் பொண்ணு கிட்ட இப்படி சொல்ல மாட்டாங்கனு நினைக்கிறேன். பாருங்க, அந்த பொண்ணுக்கு அவங்க அம்மா அப்படி சொல்லலை."
"சரி விடு. இந்தியாவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. என் பொண்ணு செய்ய கூடாது. எங்கே இருந்தாலும் சரி. புரிஞ்சுதா?"
"ஓகே. Whatever!"

அட கண்றாவியே, படம் இன்னும் கதை (??) பக்கம் எட்டி கூட பாக்கல. அதுக்குள்ளேயே இப்படி, இங்கே நம்ம கதை கந்தல் ஆகுதே!
alert............... ஓய்ங்.........ஓய்ங்........... ஓய்ங்............. சைரன் சத்தம் உள்ளுக்குள் கேக்குதே.......
TV remote எடுத்து gun மாதிரி தற்காப்புக்கு  ரெடியா வச்சுக்கிட்டேன்.

"அம்மா, இந்த good bad guy, நிஜமா good guy தான். பாருங்க, அந்த பொண்ணு ஹிப், டம்மி, பெல்லி பட்டன் எல்லாம் தெரியுதுன்னு தன் கையை வச்சு மூட பாக்குறார்."

Attack............Charge............... TV remote gun shoot: change the channel:
click. click. click.

"Wonder Pets.... Wonder Pets....... TV Rating Y" tv show க்கு மாறுது எங்கள் நிகழ்ச்சி.
சுபம். டைம்: மதியம் 3 மணி.

பின்குறிப்பு:
இப்போ தமிழ் படம், sun tv, நான் மட்டும் ஏதோ திருட்டு "தம்" அடிக்குற குட்டி பையன் மாதிரி - என் பொண்ணுக்கு தெரியாம அப்போ அப்போ பாக்குறேன். நமக்கு பதினெட்டு வயசுக்கு மேல ஆனதில் இந்த சலுகை பாருங்க. ஹி,ஹி,ஹி.....



Saturday, November 21, 2009

சினிமாவை அல்ல, சினிமா விமர்சனங்களை விமர்சிக்கலாமா?




ஏதாவதொரு சினிமாவை விமர்சிக்கலாமா என்று வெட்டியாக சிந்தித்து கொண்டிருந்த போது, சினிமாவை அல்ல, சினிமா விமர்சனங்களை விமர்சிக்கலாமா என்று தோணுச்சு..........

ஒரு நாள் ஒரு நிமிடம் பிடிக்கும் ரசிக்கும் விஷயங்கள் கூட வேறொரு நாள் வேறொரு நேரம் பிடிக்காமல் போய்விடுகிறது. இல்லையா?  நான் Texas இல் இருந்த போது,  ராதாகிருஷ்ணன், கார்த்திக், ராஜேஷ், ராமலிங்கம், ராஜ் மோகன் என்று நண்பர்கள் பட்டாளத்துடன் கேலியும் கிண்டலுமாய் ரசித்து பார்த்த படம்: விஜயகாந்தின் "நரசிம்மா". அதே படத்தை சமீபத்தில் K TV யில் போட்ட போது பத்து நிமிடத்துக்கு மேல பாக்க முடியலை. அப்போ படத்தை பற்றி என்ன சொல்வது? சரியான வாண்டு பட்டாள நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக பாக்க வேண்டிய படம். Award rangekku அலசி ஆராயும் நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய படம்.

பலருக்கு, சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம் - ஒரு mass entertainment.
சிலருக்கு, அது ஒரு educational சாதனம் - documentary.
சிலருக்கு, அது ஒரு கலை அம்சம் - award தரம்.
சிலருக்கு, அது ஒரு மொக்கை - ஜாலிக்கு மட்டும்.
சிலருக்கு, அது கனவுலகின் திறவுகோல் - fantasy.

எதிர்பார்ப்புகள் மாறுபடுகின்றன.  மொக்கை படம் என்று தெரிந்தாலும், படம் பாக்க போகிறவர்களும் இருக்கிறார்கள். They will have fun somehow. சூப்பர் படம் மட்டும்தான் பாப்பேன் என்று சொல்லி, ரொம்ப எதிர்பாத்து, படம் பாத்து நொந்து போகிறவர்களும் இருக்கிறார்கள்.



சிலர் விமர்சனம் என்ற பெயரில் மொத்த கதையும் சொல்லிடுறாங்க. படத்தில் யார் யார் செத்து போறா - யார் கொலை பண்ணா...... இது எப்படி இருக்கு? ஒரு வேளை, படத்தில் சொல்லிக்குற மாதிரி வேற எதுவும் இல்லையோ? படிக்கும் நமக்கு, இப்ப சினிமா கதை கேக்க வந்தேனா, சினிமா எப்படி இருக்குனு கேக்க வந்தேனா என்று குழம்பி விடும்.

ஒரு award பட  நடிகையிடம்  குலுக்கல் ஆட்டத்தையும், குலுக்கல் ஆட்ட நடிகையிடம்  award range நடிப்பையும் எதிர் பார்த்து விமர்சிக்க மாட்டார்கள்தானே? நமீதாவை ஆட்டத்துக்காக  ரசிப்பவர்களால்,  அவர் serious ஆ நடிக்க (???) ஆரம்பித்து விட்டால் எப்படி ரசிக்க முடியும்?

ஒரு நாள் எங்கள் வீட்டில் வைத்து ஹோம் தியேட்டரில் "முத்து" படம் பாத்து கொண்டு இருந்தோம்.
ரஜினிக்கு  வயது என்னவா இருந்தா என்ன? ரஜினி ரஜினிதான்.  மீனா மட்டும் இல்லை, மீனா பேத்திக்கு கூட,  அவர் ஜோடியா நடிப்பார்.  ரஜினி, ஒரு hospital இல் ICU  or life supportil இருப்பார். அப்போ, மீனாவோட பேத்தி, டீனா ஒரு நர்சா வந்து, ரஜினி மேல லவ் ஆகி, "தில்   தானா, தில்   தானா.  இன்னும் உங்களுக்கு தில் தானே..." என்று பாடுவாங்க. அதையும் அப்போ என்னை மாதிரி ரசிகர்கள் ரசிப்பார்கள், ஹி,ஹி,ஹி,........... 

மீண்டும், முத்து படத்துக்கே வருவோம்:
"தில்லானா தில்லானா" பாடல் ஆரம்பிக்கவும், நான் ரஜினி மேல் வைத்த கண்ணை எடுக்கவில்லை.  மீனா,  ஏன் குறுக்கே குறுக்கே வாராங்க என்று இருந்தது எனக்கு.
என் கூட படம் பாத்து கொண்டிருந்த ஒரு ஜொள்ளு பார்ட்டி, "மீனா, இந்த பாட்டில் சூப்பர் அப்பு!" என்றார்.
வேறு இரண்டு லொள்ளு பார்ட்டிகள், "13 தான். " "இல்ல இல்ல, 16 தான்" என்று argue பண்ணி கொண்டு இருந்தார்கள். சத்தம் பெரிதாகவே, என்ன என்று கேட்டேன்.
"சித்ரா, திரும்ப அந்த பாட்டை முதல இருந்து போடுங்க" என்றார்கள்.
"எதுக்கு"
"நான் மீனா தொப்புளுக்கு 13 தடவைதான் close-up என்கிறேன். இவன் 16 தடவை என்கிறான். யார் correctunu சரி பாக்கணும்."

ஒரே மீனாதான். ஒருவர் மீனா முகத்தை பாத்து ஜொள்ளு வடிக்கிறார். மற்ற இரண்டு பேர் மீனாவின் belly button tunnel இல் train விட்டு கொண்டு இருந்தார்கள். அதே சமயம் யாரோ ஒருவர் நிச்சயமாக மீனா ஏன் இப்படி ஒரு ஆட்டம் போடணும்னு முகம் சுளித்து இருந்திருக்கலாம். படம் எடுப்பவர்கள் தங்களால் முடிந்த மட்டும் எல்லார் ரசனையும் cover பண்ண முயற்சிதான் பண்ண முடியும். வேறு என்ன? (இன்னும் போன paragraphil மீனாவோட மிடில் dentukku எத்தனை முறை close-up என்று அங்கேயே stuck-up ஆனவர்கள், மீண்டும் அந்த பாட்டை பார்த்து விடை தெரிந்து கொள்ளவும்.)

தன் சொந்த எதிர்பார்ப்பை வைத்து விமர்சிப்பவர்கள், "இது என் சொந்த கருத்து. இது என் சொந்த விருப்பு வெறுப்பு. என் எதிர்பார்ப்புக்கு இவ்வளுவுக்குதான் வந்திருக்கு." என்று சொல்லிட்டா நல்லா இருக்கும்.

Detroit இல் உள்ள என் தோழி ஒருத்தி, எந்த தமிழ் படம் என்றாலும் DVD யோ VCD யோ, உடனே இந்தியன் stores இல் இருந்து rent பண்ணிட்டு வந்து பார்ப்பாள். பாக்கும்போதெல்லாம், "சே, இந்த படத்தை போய் ஏன்தான் எடுத்துட்டு வந்தேனோ? தாங்க முடியவில்லை. இப்படியா படம் எடுக்கிறது?" என்று புலம்பிக்கொண்டே, remote control உதவியுடன், 1/2 மணி நேரம், 3/4 மணி நேரத்தில் மொத்த படத்தையும்  பாத்து விடுவாள். இதை கவனித்து வந்த அவள்  கணவர், ஒரு முறை அவளிடம் இருந்து remote control ஐ எடுத்து மறைத்து விட்டு, "முழு படத்தையும் ஒரு சீன் விடாம பாரு. அப்போதான், இந்த தமிழ் பட addiction போகும்" என்று shock treatment கொடுத்தார். இப்போ அவள் வருடத்திற்கு 3 தமிழ் படங்கள் பார்த்தாலே அதிகம் என்று நினைக்கிறேன். அந்த 3 படங்களும் மற்றவர்களின் விமர்சனத்தையோ ரசனையை பொறுத்தோ தான் முடிவு செய்ய்படுகிறதோ?



opinion வேறு; விமர்சனம் வேறு.  opinion comes from one's ரசனை.  ரசனை  என்பது ஒருவருக்கொருவர் மாறுபடுவது. ஒருவரின் விருப்பு, வெறுப்பு, interest, புலமை, mood, நட்பு வட்டம் போன்று பல அம்சங்கள் ஒருவரின் ரசனைக்கு ஆணி வேர்களாகின்றன. விமர்சனம் - சுய விருப்பு வெறுப்பு இல்லாமல் நடு நிலைமையுடன் சொல்வது.
 

ஒரு படத்தை விமர்சிப்பதற்கு நிறைய சினிமா அம்சங்களை பற்றி ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம், காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டரில் போய் படம் பாத்து அவஸ்தை பட்டிருக்க வேண்டும். "பார்த்ததும் படித்ததும், ஜெட்லி சார்" மாதிரி. அவரோட ஒரு கட்டுரையில் : அங்கே பார்த்த படம் சக்கரக்கட்டி என்று நினைக்கிறேன், நிறைய பேர் அதை மொக்கை படம் என்று சொன்னார்கள் இருந்தும் நான் போய் படம் பார்த்தேன் அது ஏன் என்றால் எப்படி அவளோ கேவலமா படம் எடுத்துங்கானு தெரிஞ்சிக்கதான்."  இதை படிச்சிட்டு இன்னும் சிரித்து கொண்டு இருக்கிறேன். 


அப்படி இல்லாமல், என்னை  மாதிரி ஆட்கள் comment அடிப்பதற்கு பேரு விமர்சனம் இல்லை - படத்தை கலாய்க்கிறது. right?

Monday, November 9, 2009

Sun Tv யில் comedy என்று comedy பண்றாங்க

தமிழ்நாட்டில் எது ஏதோ செய்ய சுதந்தரம் இருக்கு. ஆனால் உண்மையாக comedy touch ஒட ஒரு criticism செய்ய எந்த அளவு சுதந்தரம் இருக்கு? Ethics, manners, பண்பு என்ற பெயரில் நிறைய comedians' கைய வாய கட்டிதான் போட்டிருக்கு. அரசியல், நாட்டு நடப்பு, சினிமா பற்றியும் அதில் சம்பந்த பட்டவர்களை பற்றியும்  பொதுவாக ஜோக் or comedy track இல் கொண்டு வரலாம். குறிப்பிட்டு பேசுனா, மவனே உன் கதை கந்தல் தான். ஆனால், Canada, USA, Europe போன்ற நாடுகளில் இருக்கும் stand-up comedians க்கு உள்ள நக்கல், தைரியம், உரிமை இன்னும் தமிழ் நாட்டிற்கு வரவில்லையோ என்று தோணுகிறது.

 Sun TV in  "அசத்தப் போவது யாரு?" நிகழ்ச்சியில் உள்ள மதுரை முத்து செய்வதுதான் stand-up comedy என்று ஒரு
 low-standard  set செய்யப் பட்டுள்ளது. குமுதம், விகடன் மற்றும் SMS இல் வரும் ஜோக்குகளை நின்னுகிட்டு தொகுத்து வழங்குவது  மட்டும் stand-up comedy அல்ல. மதுரை முத்து போன்றவர்களின்  comedy யாவது ஒரு கதையில் சேத்துக்கலாம். ஆனால் அந்த நிகழ்ச்சியில் நான்கு வயது ஐந்து வயது பிள்ளைகளை கொண்டு வந்து சுட்டி டிவி நிகழ்ச்சிக்கு போக வேண்டியதை இந்த நிகழ்ச்சிக்கு கொண்டு வந்து, அதுவும் stand-up comedy தான் என்பது, கொஞ்சம் ஓவரா தெரியுது. இதுல, அசத்தல் அசட்டு மன்னன், மதன் பாப்புக்கும் சன் டிவி க்கும் என்ன ஒப்பந்தமோ? 'என் முதுகை நீ சொறிஞ்சு விடு, உன் முதுகை நான் சொரியிறேன்' என்று கொசுக்கடி தொல்லை தாங்க முடியலை.

அதுதான் stand-up comedy என்றால்,   Russel Peters (Canada),  Carlos Mencia (USA), Seinfeld (USA) போன்றவர்கள் செய்யும் stand-up comedy யை என்ன என்பது? ஒரு வேளை, இங்கு கிண்டல் செய்யப்படுபவர்களும் இனத்தவர்களும் அவர்களை போன்றோர் காமெடி செய்யும் போது அதை personal ஆக எடுத்து கொள்ளாமல் ரசித்து சிரிப்பதனால், அவர்கள் சுதந்தரமாக காமெடி செய்கிறார்களோ?

சன் டிவி  "காமெடி டைம்" நிகழ்ச்சியில், என்னவோ இதுவரை தமிழ் திரையுலகில், வடிவேலு வந்து கதவு தொறக்கிற வரைக்கும் காமெடி மடம் அடைச்சி கிடந்த மாதிரி சீனு விடுறாங்க. நாகேஷ் போன்றவர்கள் செய்தது  எல்லாம் காமெடி இல்லையாம். நாகேஷ் போன்றோர்,  நம்மை அதுவும் காமெடினு ஏமாத்தி கிட்டு இருந்ததை சன் டிவி கண்டு புடிச்சுட்டாங்க. திரை உலகில் காமெடி கண்டு புடிச்ச வைகை புயலுக்கே அந்த நிகழ்ச்சிய dedicate  பண்ணிட்டாங்க.

ஒருவாட்டி, மே மாதத்தில், அன்னையர் தின சிறப்பு படமாக, "நந்தா" படத்தை போட்டாங்க பாருங்க. செம காமெடி. அந்த பட climax இல் மகனை புரிஞ்சிக்காம புது வாழ்க்கைக்கு தயாராகிற மகனை, அம்மாவே விஷம் வச்சு கொன்னுடுறாங்க. வாழ்க சன் டிவி! அன்னையர் தினத்தை எதுக்காக கொண்டாடுராங்கனு சொல்லிட்டாங்க, அப்பு. அம்மாவுக்கு புடிச்ச மாதிரி நடக்கலைனா, உனக்கு அம்மாவே சங்கு ஊதிருவா. அதுனால அவக்கிட்ட வச்சுக்காத என்று அன்னை அன்பின் பெருமையை  அந்த படத்தை போட்டு காட்டிட்டாங்க.

இருப்பதில் பெரிய காமெடி:
சன் டிவி நிறுவனம் படம் தயாரிப்பார்களாம்.
அவர்களே TV இல்  advertise  செய்வார்களாம்.
சினிமா promotional publicity க்காக அந்த படத்தில் நடித்தவர்களின் பேட்டிகளை சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒளிபரப்புவார்களாம்.
அந்த படத்தின் பாடல்களையும் "சிறப்பு கண்ணோட்டம்" என்ற பெயரில் போட்டு கொள்வார்களாம்.
Top 10 மற்றும் Super 10 நிகழ்ச்சிகளில் இந்த படங்களே முதல் இடம் வகிக்குமாம்.
போதா குறைக்கு Sun TV news இல் கூட இந்த படங்களின் ஆர்ப்பாட்டமான success stories தான். அதே ஊர்கள் - அதே theaters - அதே ஆட்டம் - அதே கருத்துக்கள் (ஆஹ், நல்லா இருக்கு; படம் superu னு அழுது வடியற மூஞ்ச வச்சிட்டு சொல்வாங்க பாருங்க......) - I think,  ஆட்கள் கூட அதே ஆட்கள் - அதே கூட்டம். இருக்கலாம், யார் கண்டா?
படம் வெளி வந்து மூணு நாலு மாதத்தில், "இந்திய தொ(ல்)லை காட்சிகளில் முதன்  முறையாக, சட்டியிலிருந்து  வந்த சில மாதங்களே ஆன, super (s)hit ஊசி போன வடை (படம்)" என்று உக்கார்ந்தா நிமிர்ந்தா வர ஒவ்வொரு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றிலும் சிறப்பு படங்களாக  போட்டு விடுகிறார்கள். டிவி இல் சீக்கிரம் வரும் என்று தெரிந்தும், சூடா வடை சாப்பிட்டாத்தான் நல்லா இருக்கும் என்பது போல், மறுபடியும் மக்கள் SUN PICTURES  அடுத்த படத்திற்கு படை எடுத்து போவதை காட்டுகிறார்கள். சரியா போச்சு, போங்க. நாங்க நம்பிட்டோம்.......

இதைல்லாம் விட மிக பெரிய comedy, இந்த படங்களுக்கு, "திரை விமர்சனம்" வேறு. அந்த அம்மா, அதே make-up, அதே பேச்சு, அதே விமர்சன வார்த்தைகள், அதே உணர்ச்சியற்ற முக பாவனைகளுடன் புன்னகைத்து  விமர்சனம் என்ற பேரில் comedy பண்ணும் பாருங்க....... அனேகமாக ஒரே விமர்சன format with filling the blanks for actors, directors, movie names and technicians. அந்த அந்த படத்துக்கு உள்ளதை fill-up பண்ணி கொடுத்திட்டா, அந்த அம்மா வந்து ஒப்பிச்சிட்டு போயிருவாங்க. அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட முழு படத்தையும்  போட்டுறாங்க.

இந்த அம்மாவுக்கு நேர் மாறா நமக்கு புடிச்ச styla திரை விமர்சனம் பண்ண விஜய் டிவி யில் ஆள் இருந்தார். - ஜெகன்.
"Reel paadhi - Real paadhi" என்ற  programmil கலக்கி கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியை பற்றி எனக்கு சொல்லிய என் நண்பர், ராதாக்ரிஷ்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் வீட்டில் விஜய் டிவி இல்லாத குறையை Youtube பாத்து கொண்டது. நம்ம திரை உலக கண்மணிகளுக்கு அந்த விமர்சனங்கள் பொறுக்கலை. கண்டனம் தெரிவித்து மிரட்டி அந்த நிகழ்ச்சியை நிறுத்த வைத்து விட்டார்கள். அவங்க படங்களை ஜெகன் அருமையாக அறுத்து ஆராய்ஞ்சு விமர்சனம் பண்ணியதற்கு தண்டனையாக "அயன்" படத்தில் ஜெகனுக்கு ஒரு வேடம் கொடுத்து, இவர் வயிற்றை அறுத்து  சாக வைத்து விட்டார்கள். என்ன கொடுமை, சார், இது?

மேல சொன்னவை அனைத்தும் என் கருத்து, என்னோட "feelings" யா.  ஏதோ தமிழ் சேனல் வருதேன்னு, மாசம் $30 தண்டம் அழறதிலே புலம்பிட்டேன். என் கண்ணா, அப்ப சன் டிவி, கே டிவி யை எடுத்திறவா என்னும்போது, எப்பாவது போடற ரஜினி படங்களுக்காகவும்  தப்பி தவறி போடற நல்ல programs க்காகவும் வேண்டாம்னுட்டேன். பாருங்க, சன் டிவி அகராதிப்படி, ரஜினி எழுபதுகளில் மட்டும் நடித்தார். அதுவும் ஆறு  படங்கள்: அன்னை ஒரு ஆலயம், காளி, அன்புக்கு நான் அடிமை, ரங்கா, தங்க மகன், ராணுவ வீரன். அத தாண்டி வர மாட்டேங்குறாங்க.  அது  என் பிரச்சினை. சன் டிவி ரசிகர்கள், அந்த காமெடி நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆதரவு கொடுத்து ரசிக்க அவர்களுக்கு முழு சுதந்தரம் உண்டு டோய்........Anyway, சன் டிவி இல் செத்து கொண்டிருக்கும் ரியல் காமெடிக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு அவர்களது ரீல் காமெடி தான் காமெடி என்று புகுத்துவதை வருத்தத்துடன் பார்த்து கொண்டிருக்கிறேன்.  "சாகடிக்கப்பட்ட" திரை விமர்சகர், ஜெகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக:






Friday, November 6, 2009

என்ன சொல்லி நான் எழுத....







நான் இந்த blog எழுத ஆரம்பித்த போது எடுத்து கொண்ட theme:


என் வாழ்க்கையில் நடந்த, நான் கேள்விப்பட்ட, என்னை பாதித்த (?!), என்னை யோசிக்க (??!!) வைத்த விஷயங்கள் மற்றும் நான் சந்தித்தவர்களுள் எனக்கு interesting ஆக தோன்றிய personality or characters பற்றி எழுத வேண்டும். இவற்றின் அல்லது இவர்களின்  மூலமாக நான் கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடங்களையும் ரசித்து சிரித்த தருணங்களையும் வேடிக்கை அனுபவங்களையும்  நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.


When you see the lighter side of life, you know that life is funny and silly too.
"உன்னால் முடியும் தம்பி" - சிலர் இந்த உற்சாக வார்த்தைகளை வேத வாக்காகவே எடுத்து கொண்டு முடித்து காட்டுகிறார்கள். அவர்கள் முடித்த பின் ...........????!!!!!!

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான். இருந்தாலும்...............????!!!!
தன்னம்பிக்கை மனஷனுக்கு  தேவைதான். அதுக்காக அதை ஒரேயடியாய் நம்பி உள்ளதும் போச்சு கொய்யால என்று இருக்க முடியுமா? 
"If you don't have anything nice to say about anybody, then say nothing."  But it is so hard to keep quiet at times.

இன்னைக்கு என்ன ஒரே உளறல் என்று கேக்கிறீங்களா? 

Z தமிழ் டிவி இல் ஒரு தமிழ் படம், "யாருக்கு யாரோ" வந்ததாம். அந்த படத்தின் ரெண்டு பாடல்களை பார்த்தேன். என்ன சொல்லி அந்த பாடல்களை justify பண்ணுவது என்று தெரியாமல் உளறி கொண்டு இருக்கிறேன். I am trying to be polite. but..........................
ரெண்டு பாடல்களுக்கே இப்படினா, படம் முழுதும் மிஸ் பண்ணிட்டேனே.......
ஹீரோ: யாரை பற்றியும் எதை பற்றியும் கவலை படாத சங்கம் தலைவர்:  
"நைஞ்ச தளபதி":  Sam Anderson



heroine: "இப்போதான் தூங்க வந்தேன்,  அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா?" புகழ்: 
                                 விடியா மூஞ்சு அழகி:  Varnica
costumes: Muniyaandi and sons Textiles, கையிருப்பான்பட்டி 
choreography: மூணாம் கிளாசை மூணு முறை படித்த மாணவனும் மாணவியும். நோஞ்சான்பட்டி மிடில் ஸ்கூல், நோஞ்சான்பட்டி.
(video) cameraman: சாரி, வீடியோ காமெராவை tripodil வச்சுட்டு ஆளு எஸ்கேப் ஆயிட்டார்.
producer cum director cum audience: 
               நொந்த நூடுல்ஸ்சன் 
ஹான் ............. வந்திருச்சி!
திருவாளர்  சாம் அன்டேர்சன் அவர்களே, எனது எல்லா கவலைகளையும் மறக்க வைத்ததற்கு நன்றி. 
எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏதாவது இருந்திருந்தாலும் அதை ஒழிக்க உதவியதற்கு நன்றி. 
மனம் விட்டு சிரிக்க வைத்ததற்கு நன்றி. நீங்கள் இன்னும் இது போல நிறைய படங்கள் நடித்து மக்களை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும். 
மக்களே, இப்போ நீங்களும் என்ஜாய்................... இதற்கு முன் பாத்திருந்தாலும், மீண்டும் காண தூண்டும்...... This is entertainment!




(ராசாத்தி ....)


(நெஞ்சம் மகிழும்....)
ஆமாம், இந்த படம் ரிலீஸ் ஆச்சா? எத்தனை நாட்கள் ஓடியது? எத்தனை பேர் பார்த்தார்கள்? படத்துக்கு எவ்வளவு வசூல் ஆச்சு? producers and distributors போட்ட காசை எடுத்தாங்களா? ஐயோ, எனக்கு கவலையாய் இருக்கே.......கவலைகளுக்கு உடனடி நிவாரணி:  இருங்க, ஒரு நிமிஷம் திரும்ப அந்த ரெண்டு பாட்டுகளையும் பாத்துட்டு வந்திடுறேன். என் friend, அமுதா தமிழினி, "சித்ரா, ஏன் இந்த தற்கொலை முயற்சி?" என்று துபாயில் இருந்து அலறுவது கேட்குது..........."அன்டேர்சன் அண்ணா, தமிழ் நாட்டு சினிமா ரசிகர்கள் மிச்சம் மீதி இருக்குறவங்களை உங்க கையில் புடிச்சி கொடுத்திட்டேன்."



Friday, October 23, 2009

பாரதியார் பாட்டு - டி.வி. விளம்பர தமிழில்......

எல்லா வேலையும் முடித்து விட்டு, கொஞ்சம் அக்கடான்னு சன் டிவி பாக்கலாம்முன்னு உக்கார்ந்தா, 90s இல் popularaa  இருந்த actor (act????or) Abbas, 2 bucketsai கையில் வச்சுகிட்டு என்னை பாத்து, "நீங்க உங்க toiletil என்ன செய்றீங்க?" னு கேட்கிறார். நான் காதில்  கேட்டது சரிதானா என்று என் மகள், செல்லத்திடமும் செக் செய்தேன். அவளும் Abbas அப்படிதான் கேட்டதாக சொன்னாள். Toiletil வேற என்ன செய்வாங்க? ஏன்  இந்த கேள்வி?  இவரை கனவு ஹீரோவாக ரசித்தவர்கள் முகம் எப்படி போயிருந்துக்கும் என்று பாக்க தோணியது. ஹ,ஹ,ஹ,....

அதன் பிறகு, இந்த advertisementsil வரும் தமிழ் கொலையை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.
இது கொலையே இல்லை வெறும் suicide தான் என்று,  தமிழ் போலீஸ் case file எ close பண்ணீட்டாங்கனு நினைக்கிறேன். யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை:

"நோ, ஒளிஞ்சிருக்கும் பற்சிதைவு!"
"ஆக்குமே, சகல நோய்க்கும் complete stop."
"வளர்ந்தாங்க இரட்டிப்பு மடங்கு அதிகமா."

இதுதான் இனி future தமிழ் என்றால், எதிர் கால சந்ததியருக்காக நம் தமிழ் பொக்கிஷங்களை மாற்ற வேண்டி வருமே. எப்படியும் கலைஞர் அடுத்த projecta இதை கொண்டு வருவார். translation வேலைக்கு ட்ரை பண்றேன் நான் இப்ப. புரிஞ்சுக்கோங்க, எனக்குதான் அது. தமிழ் நெல்லை இல்ல; தமிழ் சென்னை இல்ல; தமிழ் கொங்கு இல்ல; தமிழ் மதுரை இல்ல; தமிழ் வியாபாரம் இது. தமிழர் வாயர் இளிச்ச. கோனார் உரை தமிழ் பண்ணுவார் என்ன? எல்லோரும் போவாங்க தமிழ் tuition. நுனி நாக்கு தமிழ் பேசும் டிவி தொகுப்பாளினிகள் teachers. Nameetha ஆவாங்க Principal. எழுதுவேன் பாரதியார் பாடல்களை நான் இப்படி:

தமிழ் language போல் அறிந்த யாம் language களில்
காணோம் எங்கும் sweetaa;

சொல்லும்போது red தமிழ் country என்று - பாயுது
காதினிலே honey வந்து .....

பாப்பா விளையாடு ஓடி -
பாப்பா ஆகாது ஓய்ந்திருக்க நீ!

கண்ணம்மா விழிச்சுடர் hot தான் -
sun ஆ? moon ஆ?

சொல்லுங்க இப்ப: எனக்குதான் வேலைனு! இப்ப தொடக்கத்தில் Abbas கேட்ட கேள்விக்கு பதில்: நாங்க என்ன செய்ரோமுன்னு ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க தமிழை toiletil நாறடிக்க விட்டுட்டீங்க......