மீண்டும் வணக்கங்கள்:
என்னை குறித்து கடந்த சில நாட்களாக - ஈமெயில் வழியாகவும் - போன் மூலமாகவும் - facebook messages மூலமாகவும் நலம் விசாரித்த அனைத்து பதிவுலக நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்துச்சு.
கடந்த இரண்டு வாரங்கள் - எப்பப்பா....
புயல் அடிச்சுது......
பேய்மழை அடிச்சுது ......
மரங்கள் விழுந்துச்சு ......
வேலிகள் பறந்துச்சு......
வெள்ளம் வந்துச்சு.....
இன்டர்நெட் தொடர்பு போச்சு.....
தொலைபேசி தொடர்பு போச்சு....
கரண்ட் கட் ஆச்சு.....
எல்லாம் "old is gold" technology style தான்....
நோ டிவி - நோ ப்ளாக் - நோ facebook - நோ போன் - நோ ஸ்கூல் -
in fact , இவை இல்லாமல் இருந்தால் கூட, உலகம் எப்போவும் போல தான் இருக்குது. இவை எல்லாம் தாண்டி உலகம் எப்படி இருக்குது என்று தெரிஞ்சிக்க முடிஞ்சுது.
அதிசயம் என்னவென்றால், நோ கம்ப்ளைன் - நோ புலம்பல் - நோ அழுகை.
ஆனால், ஒண்ணு மட்டும் சொல்றேன். போதுமான அளவுக்கும் மேலே மழை பார்த்து விட்டோம். மெல்ல சாரல் அடிக்கும் மழையில், அழகு தெரிகிறது. ரசிக்க முடிகிறது. இப்படி புயல் மழை வந்தால், ஒதுங்கி இருக்கத்தான் செய்கிறது. பயமுறுத்துகிறது. இன்னும் ஒரு மாதத்துக்கு மழை மட்டும் இல்லை, மழை பற்றிய கவிதைகள் - மழையில் காதல் பழுத்துரிச்சு; கத்திரிக்காய் புழுத்துருச்சு என்றெல்லாம் வருகிற கவிதைகள் பக்கத்தில் கூட வருவதாக இல்லை. மழை கவிஞர்கள்: மன்னிக்கவும்!
போர்டு கேம்ஸ் எடுத்து வச்சு , குட்டீஸ் கூட விளையாடுறது. (வெளியில் அடிச்ச புயல் காத்திலேயும் மழையிலேயும் அங்கே போய் விளையாட அனுப்ப முடியல) -
சீக்கிரமே தூங்க போறது. ஒரே ஒரு பிரச்சனை - அதிகாலையில் சீக்கிரமே முழிப்பு தட்டிடும். திரும்பவும் அதிகால ஆதிகால வாழ்க்கை தொடர்ந்துச்சு.
மாறுதல்கள் - எப்படி இருந்தாலும் - வித்தியாசமா இருக்கிறது, ஒரு விதத்தில், நல்லாத்தான் இருந்துச்சு. பயந்த மாதிரி எதுவும் இல்லை.
சொல்ல மறந்துட்டேனே.... எங்க வீட்டில் கூடு கட்டி இருந்த பறவையின் கூடு, புயல் காற்றில் கீழே வந்து விழுந்து கிடந்தது. அது இருந்த இடத்தில், மீண்டும் எடுத்து வைத்தோம். கீழே புல் தரையில் விழுந்து கிடந்த இரண்டு பறவை குஞ்சுகளையும் தேடி கொண்டு வந்து வைத்தோம். ஒன்று மட்டும் கிடைக்கவே இல்லை. என்ன ஆச்சோ தெரியல. மற்ற இரண்டும் வளர்ந்து, பறந்து போக ஆரம்பிச்சிடுச்சு.
எங்கள் வீட்டுப் பகுதியில் தான் முதலில் எல்லாவற்றையும் சரி செய்தார்கள். ஏதாவது சொல்லணும் போல இருக்குது. ஆனால், தன்னடக்கம் தடுக்குது.
இன்டர்நெட் connection வந்ததும், பதிவு பக்கம் வரலாம் என்று நினைத்தேன். ரோம் நகரம் பத்தி எரிந்துகிட்டு இருந்த போது, நீரோ மன்னன் fiddle வாசித்து கொண்டு இருந்த மாதிரி, ஊரே நொந்து நூடுல்ஸ் ஆகிக்கிட்டு இருந்த போது, சித்ரா பதிவு வாசித்து கொண்டு இருந்தாளாம் என்று நாளை வரலாறு சொல்லாக்கூடாது பாருங்க...... ஹி, ஹி, ஹி, .....
விட்ட கதையை தொடர்ந்து சொல்றேன். கரண்ட் மற்றும் இன்டர்நெட் தொடர்பு எல்லாம் சரி பண்ணாங்களா...... அப்புறம், கரண்ட் - போன் - இன்டர்நெட் வராத ஒரு நண்பரின் குடும்பம் எங்க வீட்டில் வந்து தங்கி இருந்தாங்க. அவங்க ஏரியாவில் சரி செய்ததும் கிளம்பி போனாங்க. அதுவரை, நல்லா டைம் பாஸ் பண்ணோம். நாள் பூரா, சூப்பர் அரட்டை கச்சேரி தான்.
முதலில் புயல் ஏன்டா வந்துச்சுன்னு நினைச்சேன். ஆனால், அது வர வரைக்கும் - நான் உண்டு - என் குடும்பம் உண்டு - என் வலை உலக பொழுதுபோக்கு உண்டு என்று குறுகிய வட்டத்தில் இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. இருக்கிற வாழ்க்கையை - ஆசிர்வாதங்களை மதிக்கிறது - மற்றவர்களுக்கு உதவுறது - குடும்பத்தோட ஜாலியா டிவி தொல்லை இல்லாமல் லூட்டி அடிக்கிறது என்று புது பொலிவை அடையாளம் காட்டிவிட்டு சென்று இருக்கிறது.
ஒரே நிமிஷத்தில், இயற்கை நினைச்சா - - லோ லோ னு ஓடி சம்பாதிச்சு சேர்த்து வைக்கிற வாழ்க்கை - நாம பெருசா நினைச்சு, கட்டி காப்பாத்திக்கிட்டு நிற்கிற விஷயங்கள் எல்லாம் அழிஞ்சு போய்டும் என்று புரிஞ்சிக்கிட்டேன். நம்ம control ல ஒண்ணுமே இல்லை. ஆமாம்ப்பா.....
இந்த மாதிரி வெள்ள சமயங்களில் விளையாடுகிற காய்ச்சல் - வாந்தி - சரியா எங்க வீட்டிலேயும் கதவை தட்டி, குட்டி மகனிடம் ஆஜர் போட்டுட்டு போச்சு. இப்போதான் சரி ஆச்சு.
நேத்து, என் கணவர் கேட்டார். " வருகிற Sunday , "Mother's Day". இரண்டு வாரங்களாக tough and rough time. எல்லோரையும் நல்லா கவனிச்சிக்கிட்ட. சூப்பர் அம்மா என்று பெயர் எடுத்தாச்சு. உனக்கு என்ன வேண்டும்?"
"Right now, I am super tired. Mother's Day அன்று, நான் பொறுப்புள்ள அம்மா என்று நினைக்க விடாதீங்க..... நோ cooking - நோ caring - நோ mothering . அம்மா வேலைக்கு, அன்னைக்கு எனக்கு லீவு வேண்டும்," என்று சொல்லி விட்டேன். எப்பூடி!
அப்புறம், இந்த வார இறுதியில் Michigan பக்கம் யாராவது போனீங்க என்றால், இரண்டே வாரங்களுக்கு பூத்து குலுங்கும் Tulip மலர்களுக்கு என்று Festival ஒன்று Holland என்ற ஊரில் நடக்கும். அதை பார்க்க மறக்காதீங்க. சில வருடங்களுக்கு முன், "Mother's Day Sunday" அன்னைக்கு அங்கு சென்று இருந்தோம்.
பொதுவாக, மே மாதத்தில் இரண்டாவது வாரத்தில் தான் கொண்டாட்டங்கள் நடைபெறும். வெள்ளை நிறத்தில் இருந்து deep purple வரை உள்ள பல வண்ணங்களில் - மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என்று - tulip மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
Holland, Michigan - Tulip Festival: http://www.tuliptime.com/
Dutch மக்கள் பலர் அங்கே வந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். ஊரில் கட்டடமைப்பு - பழக்க வழக்கங்கள் எல்லாம் டச் ஸ்டைல் தான். திருவிழா கொண்டாட்டங்களில், ஆயிரக்கணக்காக நடனக் கலைஞர்கள் ஊருக்கு நடுவில் உள்ள ஒரு பூங்காவில் கூடி டச் பாரம்பரிய நடனங்கள் ஆடி காட்டுவார்கள். சூப்பர்!
Clog எனப்படும் மர ஷூஸ் போட்டு கொண்டு ஆடியது அருமையாக இருந்துச்சு.
மனதை கொள்ளை கொண்ட அழகு மலர்கள் - நடனங்கள் கண்டு ரசித்து கொண்டாடிய அன்னையர் தினத்தை மறக்க முடியாது.
தென்றல் வருடுவதும் புயல் அடிப்பதும் வாழ்க்கையில் சகஜம் போல. எல்லாம், நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் வாழ்க்கை கடந்து போய் கொண்டு இருக்கிறது.
படங்கள்: நன்றி: கூகுள் புயல்.