http://tamiluthayam.blogspot.com/2010/07/blog-post.html
இந்த தலைப்பில் எவ்வளவு அருமையாக அவர் எழுதி இருக்கிறார் என்று அந்த பதிவை வாசிக்கும் உங்கள் அனைவருக்கும் தெரிந்து விடும். எல்லா கோணங்களிலும் அவர் யோசித்து எழுதி விட்டதால், இந்த தலைப்பை நாம இப்படிக்கா இந்த டீ கடை பெஞ்ச்ல உக்கார்ந்துக்கிட்டு, சூடாக ஒரு வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமா? (யம்மா, இந்த எந்திரன் காய்ச்சல் வந்ததில் இருந்து, திரும்பவும் ஒரு ரவுண்டு ரஜினி படங்களைத்தான் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு இருக்கேன்....... சிவாஜி படத்துல, அந்த பஜ்ஜி சீன் பத்தி சொன்னாலே அதிருதுல........ ஹையா.... அதிலும் பணம் டீலிங்தான்...... ஆரம்பமே, இந்த தலைப்புக்கு அமர்க்களமா அமைந்து விட்டது........... கூல்!)
அவர் தந்து இருக்கும் தலைப்பு: பணம் குறித்த எனது அனுபவம் வைத்து ஒரு பகிர்வு.
என்னதான் மாமா, பாட்டிம்மா, தாத்தா என் கையில காசு கொடுத்தாலும், அப்பாவோட சட்டைப் பையில - பெல்ட் பாக்கெட்ல - காசு "சுட்டு" வாங்கி தின்ன குச்சி ஐஸ் taste தனிதான்.... சரி, சரி....... விட்டா, அப்படியே நம்ம வண்டவாளத்தை எல்லாம், நானே ஒரு flow ல பதிவுலக தண்டவாளத்தில் ஏற்றி விட்டுருவேன் போல.
(சித்ரா, அடக்கி வாசி.......!!!)
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...... எதற்காக இந்திய ரூபாய் நோட்டுல காந்தி தாத்தா சிரிக்கிற மாதிரி படம் போட்டு இருக்காங்க? நம்ம நாட்டுல, ஒருவர் செய்ய வேண்டிய வேலையை - official கடமையை - அவர் செய்யாமல் இருக்கும் போது, அவரை திட்டி - அடிச்சு - துவைச்சு - அதை செய்ய வைக்காமல் - அவருக்கு அஹிம்சை முறையில், பணம் கொடுத்து - படிய வைத்து - அந்த வேலையை செய்ய வைக்க வேண்டும் என்று நமக்கு நினைவு படுத்தவா? யார் கண்டா? இருக்கலாம்.....
அப்புறம்...... பணம் வந்தால், ஒருவருடைய குணம் மாறிடும் என்று சொல்றாங்க..... இல்லைப்பா, ஒருவருடைய உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை அவருக்கு கொடுத்து பாருங்க, இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்க வேற, literal மீனிங் இல்லைப்பா..... பணம் அதிகம் சேரும் போதோ, இல்லை, பணம் ஒருவரை விட்டு போகும் போதோதான், நான் பலரின் உண்மையான குணங்களை கண்டு புரிந்து கொண்டு இருக்கிறேன்..... இது, புகழுக்கும் பொருந்தும்.....
டீக்கடை பெஞ்ச்ல உக்கார்ந்துகிட்டு பழைய தினத்தந்தி பேப்பர் நியூஸ் படிக்கலைனா எப்படி?
திடீர் பணக்காரர்கள் குறித்து, நான் எனது சித்தப்பாவுடன் வெட்டி பேச்சு பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது அவர், தமிழ்நாட்டுல lottery ban வருவதற்கு முன் திருநெல்வேலி பேப்பர்ல வந்த ஒரு நியூஸ் பத்தி சொன்னாங்க.......
திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த ஒருவருக்கு, ஒரு முறை lottery ல சில லட்சங்கள் பரிசாக கிடைச்சுச்சாம். அப்போ நிருபர், "இனி என்ன செய்யப்போறதா இருக்கீங்க?" என்று கேட்டதற்கு,
" ஒரு டீச்சர்க்கோ டாக்டர்க்கோ லாட்டரி பரிசு விழுந்தா, அவங்க செய்யுற வேலையை - பார்க்குற தொழிலை விட்டுருவாங்களா? எனக்கு தெரிந்த தொழில், பிச்சை எடுக்கிறதுதான். lottery பணம் வந்துட்டுனு அதை விட்டுற முடியுமா? ஆனால், ஒண்ணு மட்டும் நிச்சயம் சார்..... எனக்கு ஏற்கனவே ரெண்டு பொண்டாட்டி. இந்த பணம் வந்துட்டே என்று மூணாவது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்," என்று நியூஸ்பேப்பர்ல நிஜமாகவே பேட்டி கொடுத்து இருந்தாராம். அவருக்கு ரொம்ப தங்க மனசு......
அப்புறம், எனக்கு பிடித்த சில பணம் குறித்த quotes - புதுமொழிகள் - பாத்துட்டு இன்றைய வெட்டி பேச்சை முடிச்சிக்கலாமா?
Every day I get up and look through the Forbes list of the richest people in America.
If I'm not there, I go to work. ......... Robert Orben
It is pretty hard to tell what does bring happiness; poverty and wealth have both failed.
......... Kin Hubbard
I finally know what distinguishes man from other beasts: financial worries. ........ Jules Renard
There's no reason to be the richest man in the cemetery (grave). You can't do any business from there.
..........Colonel Sanders (KFC)
A man explained inflation to his wife thus: 'When we married, you measured 36-24-36. Now you're 42-42-42. There's more of you, but you are not worth as much.' .......... Joel Barnett.
75 comments:
hmm
en puthu veetuku vaagna
kavisolaai.blogspot.com
///நான் இன்னும் millionaire ஆகவில்லை.... ஆன பின்னாலே, அதை பத்தி ஒரு புத்தகமே போடுறேன்... அந்த புத்தகத்தை, நீங்க உங்கள் பணம் கொடுத்து வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்//
எனக்கு மட்டும் ஒ.சி க்கு
தரனும் அக்கா --
Quotes ரொம்ப புடிச்சிருக்கு ...
அதிலும் பிச்சைகாரன் வார்த்தைகள் எதார்த்தம் .
இரண்டு கல்யாணத்துக்கு மேல் செய்யவேண்டும் என்றால் அவன் அரசியல்வாதியாக அல்லவா இருக்கணும் ///
அதென்ன இந்தியாவின் கடைசி டீக்கடையில் டீயையே காணவில்லை. வெறும் பொட்டிக்கடைக்கு டீக்கடை போர்டு மாட்டி விட்டிருக்காங்க.
Quotes.. Super
\\இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க....... \\
நிஜம்தான்.
வழக்கம் போல கலகல பதிவு. அருமை.
துட்டு குறித்து சுவையான அரட்டை கச்செரி நடத்திய உங்களுக்கு ஒரு ஷொட்டு!
good post:)
///பணம் அதிகம் சேரும் போதோ, இல்லை, பணம் ஒருவரை விட்டு போகும் போதோதான், நான் பலரின் உண்மையான குணங்களை கண்டு புரிந்து கொண்டு இருக்கிறேன்..... இது, புகழுக்கும் பொருந்தும்.....///
தத்துவ ராணி கலக்கிட்டீங்க! எப்பவும் போல இந்த முறையும் சூப்பர் பதிவு! ஆங்கில பொன்மொழிகள் சூப்பரோ சூப்பர். கலக்குங்க!
Robert obren + பிச்சைக்காரன் பேட்டி, எவ்வளவு வித்தியாசம்!
//அவருக்கு அஹிம்சை முறையில், பணம் கொடுத்து - படிய வைத்து - அந்த வேலையை செய்ய வைக்க வேண்டும் //
லஞ்சத்துக்கு என்னமா புது விளக்கம் கொடுக்கிறீங்க?! ஹி ஹி..
சூப்பர் பதிவு சித்ரா!
தத்துவம் அருமை சித்ரா..
பணம் புகழ் இரண்டையும் பற்றி அழகா சொன்னீங்க
//அப்பாவோட சட்டைப் பையில - பெல்ட் பாக்கெட்ல - காசு "சுட்டு" வாங்கி தின்ன குச்சி ஐஸ் taste தனிதான்....//
ஹா ஹா ஹா என் இனமடா நீ..
//ஒருவருடைய உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை அவருக்கு கொடுத்து பாருங்க, இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க.......//
இதில் அடிபட்ட அனுபவம் பெரும்பாலும் அனைவருக்குமே இருக்கும்.
ரொம்ப யதார்த்தமா சொல்லியிருக்கீங்க.. பிச்சைக்காரனோட ஸ்டேட்மென்ட் நல்ல யதார்த்தம்..
அந்த பிச்சைகாரன் சொன்னதில் உள்ள எதார்த்தம்...நீங்கள் சொன்ன அந்த தத்துவங்கள் அனைத்தும் அருமை அக்க...கலகலா இருக்கு
உங்க ப்ளாக் ல ஓட்டு போடுறதுக்கு பணம் தருவீங்களா?
டீக்கடை பெஞ்சு நல்லா இருந்தது..
Quotes super
சித்ரா....
எங்களுடன் இங்கே இணையுங்கள்...
superstar_rajini@googlegroups.com
உங்கள் வழக்கமான ஸ்டைலில் அசத்தி இருக்கீங்க
//I finally know what distinguishes man from other beasts: financial worries. ........ Jules Renard //
இந்த கோட் ரொம்ப பிடிச்சிருக்கு :)
aha..arumai..padika padika yellam purintha mathiri...nandri...1st time to your wonderful space... do visit my site at your convenience..following you.
பணம் பத்தும் செய்யும்; இது பழமொழி
பணம் பத்தும் செய்யும்; பதினொண்ணும் செய்யும்-இது புதுமொழி!
nowadays money doesn't speak and that goes without saying! :-)
பட்டாசு... அருமை பத்தி சித்ரா...
போகிற போக்கில் தத்துவத்தை அள்ளி வீசியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.நன்றாக ரசித்தேன்.
quotes are all excellent Chithra. congrats. Have a nice time.
நீங்க சொன்ன எதுவும் எனக்கு புரியல ஆனா கடைசி படம் எல்லாத்தையும் புரிய வச்சிடுச்சி...
attakaasam .... comedyaava pala unmaigalai solliteenga ... loved reading every bot of it ... awesome
//ஒருவருடைய உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை அவருக்கு கொடுத்து பாருங்க, இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க.....//
உண்மை
சிரி சிரி,,,சித்ரா...எப்போதும்போல் கலகலப்பு...
உளறல்கள்ன்னு சொல்லிக்கிட்டாலும் தத்துவமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.
டீ இன்னும் வரலை.....
ரொம்ப நல்லாயிருந்துச்சுங்க உங்க அரட்டை
ஆமா டீக்கடைக்கு காசு குடுத்துட்டீங்களா?
'நான் இன்னும் millionaire ஆகவில்லை.... ஆன பின்னாலே, அதை பத்தி ஒரு புத்தகமே போடுறேன்... அந்த புத்தகத்தை, நீங்க உங்கள் பணம் கொடுத்து வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். இப்போ, பணம் குறித்த எனது வெட்டி பேச்சு கருத்துக்களை மட்டும் பார்க்கலாமா?"
சரி சரி ஆனா புக் நீங்க எனக்கு ஓசியில் தர வேண்டும் நான் உங்க தோழி அல்லவா ?
லாட்டரி அடிச்சா பிச்சைகாரன் பேட்டி சூப்பர் சித்ரா ..எப்போதும் போல கலக்கல் பதிவு தான் ..
'நான் இன்னும் millionaire ஆகவில்லை.... ஆன பின்னாலே, அதை பத்தி ஒரு புத்தகமே போடுறேன்... அந்த புத்தகத்தை, நீங்க உங்கள் பணம் கொடுத்து வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். இப்போ, பணம் குறித்த எனது வெட்டி பேச்சு கருத்துக்களை மட்டும் பார்க்கலாமா?"
சரி சரி ஆனா புக் நீங்க எனக்கு ஓசியில் தர வேண்டும் நான் உங்க தோழி அல்லவா ?
லாட்டரி அடிச்சா பிச்சைகாரன் பேட்டி சூப்பர் சித்ரா ..எப்போதும் போல கலக்கல் பதிவு தான் ..
'நான் இன்னும் millionaire ஆகவில்லை.... ஆன பின்னாலே, அதை பத்தி ஒரு புத்தகமே போடுறேன்... அந்த புத்தகத்தை, நீங்க உங்கள் பணம் கொடுத்து வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். இப்போ, பணம் குறித்த எனது வெட்டி பேச்சு கருத்துக்களை மட்டும் பார்க்கலாமா?"
சரி சரி ஆனா புக் நீங்க எனக்கு ஓசியில் தர வேண்டும் நான் உங்க தோழி அல்லவா ?
லாட்டரி அடிச்சா பிச்சைகாரன் பேட்டி சூப்பர் சித்ரா ..எப்போதும் போல கலக்கல் பதிவு தான் ..
quotes எல்லாமே சூப்பர்
சுருக்கமா அழகா சொல்லிட்டீங்க ... நானும் ஏதாவது எழுதி சமாளிக்கணுமே..!
பணத்தில் இருக்கும் காந்தி தாத்தாவுக்கு நிங்கள் கொடுத்த விளக்கம் அநியாயத்துக்கு லஞ்சத்துக்கு சப்போர்ட் செய்ய்து.தத்துவங்கள் விளக்கங்கள் அருமை.(என்னை பத்தி தெரியுமுன்னா பணம் கொடுங்கள்)
MONEY IS ALWAYS THERE BUT THE POCKET IS CHANGE
NICE
நீங்களும் ஏதோ நன்றாக எழுதுவது மாதிரிதான்..!!!!தோணுது.!?
இன்னும் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.
எதற்கும் ஏதாவது தெரியவில்லையெனில் தயங்காமல் என்னைக் கேட்கவும்.(மில்லியனர் ஆன பின்பு பணம் எண்ண,அதை வைத்து ஏதேனும் பண்ண)
Very interesting post...Hope you having a great time dear...
அருமை
இந்த வார டீக்கடை பெஞ்ச்ல கொஞ்சம் சீரியசான டாப்பிக்கா இருக்கே...ஆனா சீரியஸ் பதிவு...சிரியஸ் பதிவு எதுன்னாலும் பின்றீங்க...போங்க..யதார்த்தமான பதிவு
பணம்-காந்தி-அஹிம்சை.. சிந்திக்க வைக்கிறது!
பணம்-குணம்-புகழ்.. ரொம்பச் சரி!
பணம்-லாட்டரி-பேட்டி.. :))!
Quotes.. அருமை.
ஆனால், ஒண்ணு மட்டும் நிச்சயம் சார்..... எனக்கு ஏற்கனவே ரெண்டு பொண்டாட்டி. இந்த பணம் வந்துட்டே என்று மூணாவது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்,"
பணத்தை விட அவருக்கு கல்யாணம் அவ்வளவு பயம் போல!
காந்தி மேட்டர் - சூப்பர் சித்ரா
இப்போ காசு தேவைன்றீங்களா, தேவை இல்லைன்றீங்களா?
தத்துவ உளறல்ஸ்....அபாரம்...ரசித்தேன்
பாவம் காந்தி தாத்தா என்ன செய்தார்...சிரிச்சா தப்பா என்னா....நல்ல பதிவு...
கலக்கல் பதிவு.
பணம் குறித்த மிகவும் சுவையான பதிவுதான் இது. (பணம்னா பிணம் மட்டுமா வாயைப் பிளக்கும்...?நாங்களும்தான்.அட்லீஸ்ட் மனசுக்குள்ளயாவது பெருமூச்சு விடாத ஆள் யார் இருக்கா?)
//நம்ம நாட்டுல, ஒருவர் செய்ய வேண்டிய வேலையை - official கடமையை - அவர் செய்யாமல் இருக்கும் போது, அவரை திட்டி - அடிச்சு - துவைச்சு - அதை செய்ய வைக்காமல் - அவருக்கு அஹிம்சை முறையில், பணம் கொடுத்து - படிய வைத்து - அந்த வேலையை செய்ய வைக்க வேண்டும் என்று நமக்கு நினைவு படுத்தவா? யார் கண்டா? //
வேதனைப் படவைக்கும் உண்மை.
எதார்த்தமே...உன் பெயர்தான் சித்ராவா....????
என்ன பதிவா இருக்கட்டும் அதை சொல்லும் ரசனை இருக்கே...வாவ்.... சித்ராவுக்கு நிகர் சித்ரா தான்...! பணம் சேரும் போதும்....போகும் போதும்....மனிதர்களை அறியலாம்....
Money is the material created by humanbegings, but now controlling the human begings....
சித்ரா மேலே சொல்லியிருக்கத திரும்ப திரும்ப படிங்க....எந்திரன் படம் 1 லைன் ஸ்டோரி அது.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
"பணம் என்னடா பணம்!"//
தலைப்பே போதும் மேடம்!
மிக நன்று.
//ஒருவருடைய உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை அவருக்கு கொடுத்து பாருங்க, இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க....... ///
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா
தத்துவ உளறலா??
யார் சொன்னது??
முத்துக்கள் அத்தனையும்.
// எந்திரன் காய்ச்சல் வந்ததில் இருந்து, திரும்பவும் ஒரு ரவுண்டு ரஜினி படங்களைத்தான் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு இருக்கேன்//
நீங்களுமா?
//சிவாஜி படத்துல, அந்த பஜ்ஜி சீன் பத்தி சொன்னாலே அதிருதுல.......//
இருக்காதா பின்ன.
ரொம்ப ரசனையா சொல்லப்பட்டப் பதிவு மேடம். நகைச்சுவை இழையோட சிலபேருக்கே சொல்ல வரும். உங்களுக்கு அது அருமையா சொல்ல வருது.
ஏழைகள், பணத்துக்காக எதுவேணா செய்யும் ஒரு நிலைக்கு ஆளாகிறாங்க.
பணக்காரங்களும், பணம் சம்பாரிக்க எல்லாக் கெட்ட வழியிலும் போகத்தான் செய்றாங்க.
மிடில்-க்ளாஸ்ல உள்ளவங்க போதுமான பணம் இல்லததால், பணம் தேவைப்படுகிற, நண்பர், உறவினருக்கு உதவமுடியாமல் பல மிஸண்டர்ஸ்டாண்டிங்க்கு ஆளாகி நிம்மதியிழக்கிறார்கள்.
தனிப்பட்ட ஒரு மனிதன் பணத்தை துச்சமா மதிக்கலாம்தான். ஆனால் இளமையில் அப்படியிருந்தவங்களும் காலப்போக்கில் மாறத்தான் செய்றாங்க. இதுபோல் மாறுகிற நண்பர்களைப் பார்த்து இன்னும் வியந்துகொண்டுதான் இருக்கேன்.
அதனால் பணம் என்னடா பணம் பணம் குணம்தானடா நிரந்தரம்னு சொல்வதெல்லாம் காலப்போக்கில் மாறத்தான் செய்யுது.
பணப்பற்றாக்குறையால் வயதான பெற்றோர்களுக்கு தேவையான "பெரிய" மருத்துவ உதவிகள்கூட செய்ய முடியாமல் அவர்களை இயற்கையின் விதிப்படி சாகவிடுபவர்கள் எல்லாம் நம்மில் இருக்கத்தானே செய்றாங்க?
பணம் கொஞ்சம் சீரியஸான மேட்டர்தான்னு நெனைக்கிறேன்.
பணம்தான் மனிதனின் குணத்தையே மாத்துது சித்ரா ! பணமே வாழ்வானால் ஆபத்துத்தான் !
//இல்லைப்பா, ஒருவருடைய உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை அவருக்கு கொடுத்து பாருங்க, இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்க வேற//
நாங்க எல்லா அனுபவிச்சுட்டோம்.
அப்புறம்...... பணம் வந்தால், ஒருவருடைய குணம் மாறிடும் என்று சொல்றாங்க...//
கண்டிப்பாக இல்லைங்க..நான்சொல்வதை நீங்க நம்பலைன்னா...எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துப்பாருங்க..அப்புறம் இந்த பக்கம் வரன்னானு பாருங்க...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Quotes எல்லாம் சூப்பர்.
பழம்பெரும் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றது...
"பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்...
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்...
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்???"
இந்த தலைப்பை நாம இப்படிக்கா இந்த டீ கடை பெஞ்ச்ல உக்கார்ந்துக்கிட்டு, சூடாக ஒரு வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமா?
////
சரி சரி சூடா ரெண்டு பஜ்ஜி சொல்லுங்க .........
விட்டா, அப்படியே நம்ம வண்டவாளத்தை எல்லாம், நானே ஒரு flow ல பதிவுலக தண்டவாளத்தில் ஏற்றி விட்டுருவேன் போல.
//////
ha ha
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...... எதற்காக இந்திய ரூபாய் நோட்டுல காந்தி தாத்தா சிரிக்கிற மாதிரி படம் போட்டு இருக்காங்க? நம்ம நாட்டுல, ஒருவர் செய்ய வேண்டிய வேலையை - official கடமையை - அவர் செய்யாமல் இருக்கும் போது, அவரை திட்டி - அடிச்சு - துவைச்சு - அதை செய்ய வைக்காமல் - அவருக்கு அஹிம்சை முறையில், பணம் கொடுத்து - படிய வைத்து - அந்த வேலையை செய்ய வைக்க வேண்டும் என்று நமக்கு நினைவு படுத்தவா? யார் கண்டா? இருக்கலாம்.....
///
யார் கண்டா? இருக்கலாம்.....
nalla pathivu
thanks
nellai nadesan
inflation explanation.. thaaru maaru... sema kalakkal.. :DDD
meendum serika vachitenga chitra....eppadi ippadi ellam mudiyuthu.....
பணம் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் உண்மையே.
மில்லியனராகி புக் போட்டு வித்து காசு சம்பாதிக்கறதுக்கு, புக் போட்டு காசு சம்பாதிச்சு மில்லியனராகலாம் இல்லை?
எப்படி ஐடியா?
hai டீச்சர் எப்படியிருக்கீங்க நலமா?
பணம் பணமுன்னு ஏதோ எழுதியிருக்கீங்களே அப்படின்னா யின்னா,அதக்கொஞ்சம் அனுப்பிவைங்கோ டீச்சர் எப்படியிருக்குமுன்னு பாக்கனும்போலகீது..
//Every day I get up and look through the Forbes list of the richest people in America.
If I'm not there, I go to work//
nice
பணம் என்னடா பணம் அப்படின்னு தலைப்ப பாத்தா ஆம்பளைங்கள் குறி வைச்சு எழுதின மாதிரி இருக்குது... ஹ ஹ ஹா ஹா :)
'டி' ய விட்டுட்டீங்களே... பொம்பளங்க எல்லாம் பணம் விஷயத்தில ரொம்ம்ம்ம்ப ஜாக்கிரதைன்னு சொல்ல வறீங்களா?
எப்படியோ வழக்கம் போலவே உங்க பாணியில ஒரு கலக்கல். அதுவும் கடைசி Joel Barnett ன் Quote தான் ஹைலைட்டே. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே :)
//நம்ம நாட்டுல, ஒருவர் செய்ய வேண்டிய வேலையை - official கடமையை - அவர் செய்யாமல் இருக்கும் போது, அவரை திட்டி - அடிச்சு - துவைச்சு - அதை செய்ய வைக்காமல் - அவருக்கு அஹிம்சை முறையில், பணம் கொடுத்து - படிய வைத்து - அந்த வேலையை செய்ய வைக்க வேண்டும் என்று நமக்கு நினைவு படுத்தவா? யார் கண்டா? இருக்கலாம்.....//
நீங்க சொன்ன பிறகு எனக்கு கூட கரெக்டா இருக்கிற மாதிரி தோனுது.
:((
Thank you very much for the wonderful support! May God bless you all!
Dear Chitra Mam,
Panam irukura ellaru solara orea word
"panam ennada panam"
nicee
Dear Chitra Mam,
Panam irukura ellaru solara orea word
"panam ennada panam"
nicee
வெட்டிப் பேச்சுன்னு சொல்லி இப்ப ரொம்ப தத்துவப் பேச்சா போச்சி... கலக்குங்க
வணக்கம்
பணம் மனிதனை பிணம் தின்ன எத்தனிக்கும்....
குணம் மனிதனை குடிதனில் ஆழ்த்திடும் மாரும்லோகம் அம்மா இது
உண்மைதான் சித்ரா...ஒருவரை முழுமையாக அறிய பணத்தை கொடுத்தும் பிடிங்கியிம் பார்த்தால்தான் தெரியும்..
தினதந்தியில் வந்த அந்த லட்சாதிபதியின் பேட்டி ம்ம்ம்...இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிரார்கள் சித்ரா.....
//உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை அவருக்கு கொடுத்து பாருங்க, இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க.....
யோசிக்க வச்சுட்டீங்களே
Post a Comment