Thursday, August 26, 2010

பாப் கார்ன்

நான் சமையல் குறிப்பே எழுதுவது இல்லை, என்று சில பதிவர்கள் குறைப் பட்டுக்கொண்டார்கள்.  (தொழில் தர்மம் கருதி, பெயர்கள் தரப்படவில்லை.......  யம்மா, என்னா பில்ட்-அப்பு!)  அப்படி நான் எழுதாததால்,  என் சமையல் படு கேவலமாக இருக்கும் போல என்று நினைப்பில் எனக்கு கமென்ட் வேறு முந்தைய பதிவுகளில் போட்டு உள்ளார்கள்.  அவ்வ்வ்வ்.....
இல்லைப்பா..... நான் நல்லாவே சமைப்பேன்..... (உண்மை.... உண்மை..... உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.) Fancy யாதான் எதுவும் சமைக்கத் தெரியாது.  தென் தமிழ்நாட்டுப் பக்கம் உள்ள சமையலில் அசத்துவது போல மற்ற வகை சமையலில் பிரமாதப்படுத்த தெரியாது.  அவ்வளவுதான்...

மேலும்,  பதிவுலகில்  போட்டியே வைத்து களைகட்டும் அளவுக்கு சமையல் ராணிகள் கலக்குறாங்க......

இருந்தாலும்,  வித்தியாசமான இந்த ரெசிபி, எனக்கு கிடைத்ததும் என்னால் உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.   "எந்திரன்" ஸ்பெஷல் என்றும் வைத்து கொள்ளுங்களேன்.....  இந்த ஸ்பெஷல் பாப்கார்ன் செய்வது எப்படி என்று பார்ப்போமா?
இனிமே யாரும் என்னை சமையல் குறிப்பு எதற்கு எழுத மாட்டேங்கறீங்க என்று சொல்லக்கூடாத அளவுக்கு இந்த ரெசிபி பண்ணிடும் என்று நினைக்கிறேன்.  

தேவையான பொருட்கள்:

 ஒரு சின்ன மர டேபிள் அல்லது ஸ்டூல்
ஐந்தில் இருந்து பத்து செல் போன்கள்
(டிப்ஸ்)  அந்த செல் போன்களின் நம்பர்கள் தெரிந்து இருப்பது நல்லது.
ஐந்து அல்லது ஆறு - நன்கு காய்ந்த சோளம் (பாப்கார்ன் செய்வதற்கு ஏற்ற முறையில்)

ஸ்டார்ட் த மூஜிக்:

மர டேபிள் எடுத்து நடுவில் வைத்து கொள்ளவும்.
மூன்று அல்லது நான்கு செல் போன்கள் எடுத்து அரணாக நடுவில் சுற்றி வைக்கவும்.
செல் போன்கள் மத்தியில் உருவாகும் வட்டத்தில் (இடத்தில்)  பாப் செய்ய வேண்டிய கார்ன் எடுத்து வைக்கவும்.
கையில் இருக்கும் மற்ற செல்போன்கள் உதவியுடன்,  டேபிள் மேல் இருக்கும் செல் போன்களுக்கு டயல் செய்யவும்.
ரிங் சத்தம் கேட்கட்டும்.  missed கால் ஆக போகட்டும். எடுத்து பதில் பேச வேண்டாம்.
பட் பட் என்று பாப்கார்ன் வெடித்து ரெடி ஆகிவிடும்.
எடுத்து சாப்பிட்டு விடவேண்டியதுதான்.

என்ன ஒரு மாதிரியாக என்னை பார்க்கிறீங்க?
கீழே உள்ள வீடியோவில் செய்முறை தெளிவாக உள்ளது.
    



இந்த அளவுக்கு microwave radiation வெளிப்படும் செல் போன் என்று தெரிகிறதல்லவா?  அவசியத் தேவைகள் தவிர செல் போன் உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது, மக்களே!!!  அது மட்டும்  அல்லாமல் பாக்கெட்டிலும் அதிக நேரம் வைத்து இருப்பது நல்லது அல்ல.....  வேறு ஏதாவது வெடித்து உடம்புக்குள்ளே பாப்கார்ன் ஆகப்போகுது...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

மேற்கொண்டு ஆய்வுகளுக்கு:

Senate Hearing on Cell Phones and Brain Cancer:
  http://www.youtube.com/watch?v=npK5HSxukyA

Wikipedia: 
http://en.wikipedia.org/wiki/Mobile_phone_radiation_and_health

Environmental Health:
http://environment.about.com/od/environment/a/cell_phones.htm

141 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சித்ரா இப்போ perfect ஆக அப்பா வழிக்கு வந்தாச்சு .
நகைச்சுவையுடன் நல்ல கருத்தும் .
எண்ணை பாக்கெட்டுடன் கொடுக்கிற ,கொடுமைப் படுத்தற ஓசி பாப் கான் போட்டு பொரித்தால்
இன்னும் சுவையாக இருக்கும் .

முகுந்த்; Amma said...

சித்ரா,

இந்தியாவில செல்போன் இல்லாம எதுவும் இல்ல.

செல்போன் டவர் கிட்ட வீடு இருந்தா கான்சர் வரும்னு ரிசர்ச் பன்னி கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா, இந்தியாவில பத்து தப்படிக்கு ஒரு செல்போன் டவர் இருக்கு. அதுக்கு பக்கதிலயெ வீடுகளும் இருக்கு. என்னத்த சொல்ல

சிங்கக்குட்டி said...

ஹி ஹி ஹி, பாவம் உங்க பதி :-) (இது பாப் கார்ன்-க்கு)

//தென் தமிழ்நாட்டுப் பக்கம் உள்ள சமையலில் அசத்துவது//

வாவ் சித்ரா என் இனம்மம்மா நீ...!

இந்த சமையல் சுவைக்கு, உலகின் எந்த சமையலும் வராது...! கொடுத்து வச்சவரு உங்க பதி :-) (இது சமையலுக்கு)

நன்றி!

சௌந்தர் said...

உங்களை யார் சமையல் குறிப்பு எழுத சொல்லியது அவர்கள் அட்ரஸ் கொடுங்க

சௌந்தர் said...

எப்படி செல் போன் வைத்து பாப் கார்ன் செய்து சாபிடலாம் சொல்லியே சித்ரா(அக்கா) வாழ்க வாழ்க

settaikkaran said...

இம்மாம் பெரிய விசயத்தை செமத்தியான நக்கலோட, சுருக்குன்னு சொல்லிட்டீங்களே! சபாஷ்! :-)

Pavithra Srihari said...

naanae enna da recipeaa nu vaaya polandhuttu vandhaa .. nenju vedikkaadha korai thaan ... facebook la video share pannikitten ..thanks

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல ரெசிப்பி..

Jerry Eshananda said...

MMMMMMMMM............

என்னது நானு யாரா? said...

///மர டேபிள் எடுத்து நடுவில் வைத்து கொள்ளவும்.
மூன்று அல்லது நான்கு செல் போன்கள் எடுத்து அரணாக நடுவில் சுற்றி வைக்கவும்.///

என்னாடா இது! இந்த மதுரைக்கு வந்த சோதனை! சித்ரா அக்கா நல்லா தானே இருந்தாங்க. மற எதாவது கழண்டுபோச்சான்னு நினைக்க வெச்சிட்டீங்க, இந்த வரிகளை படிக்கிறப்போ!

அப்புறம் தான் தெரியுது, நம்ப பாணியில உடல் ஆரோகியத்தை பத்தி எழுதியிருக்கீங்கன்னு!

நல்ல தகவல். மக்களே! அவசியமானதுக்கு மட்டும் செல்ஃபோன்ல பேசுங்கப்பா!

என் வலைபக்கம் எதுன்னு தேடறவங்களுக்காக http://uravukaaran.blogspot.com (எல்லாம் ஒரு விளம்பரம் தான்! முறைக்காதிங்க அக்கா)

ப்ரியமுடன் வசந்த் said...

useful post!thank you

a said...

சூப்பர் ரெசிபி....

செல்போன், மைக்ரோஓவன் எல்லாம் பாக்கும்போது என்னோட பிரண்ட் ஒருத்தர் பண்ணுன அலம்பல் ஞாபகம் வருது.......

அவருடைய செல்போன் தண்ணியில் விழுந்து விட்டது. அதை சரிபண்ண ஓவென்ல வச்சி சூடு பண்ணியிருக்கார்.......... படார்ன்னு வெடிச்சிடுச்சி...

எல் கே said...

en chitra ippadi ?? avvvvv

Madhavan Srinivasagopalan said...

Valuable information.

Thanks

ஜெயந்த் கிருஷ்ணா said...

சித்ரா அக்கா வாழ்க...

சமையல் குறிப்பு எழுத வற்புறுத்தியவர்கள் ஒழிக...

ஜோதிஜி said...

ஹாலிவுட் பாலாவுக்கு அடுத்து நக்கலுக்கே என்றே ரசிப்பது உங்கள் தளத்தை தான்.

குசும்பு சித்ரான்னு கூப்பிடலாமா?

கண்ணா.. said...

அருமையான குறிப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.. பகிர்விற்கு நன்றி...

இதேபோல் செல்போன் மூலமாக வெண்ணீர் வைப்பது எப்படி என்பதையும் சொல்லி கொடுத்தால் பதிவுலகம் பயனைடையும் :))

அருண் பிரசாத் said...

கிளப்பி விட்டுடீங்களா! போச்சு இதுக்கு மேல செல்போனையோ பாப்கார்னையோ பாத்தா இந்த கிளிப்தானே காத்துல வரும்

அமுதா said...

இப்படி பண்ணினால் கேஸ் சிக்கனப்படுத்தலாம்... மின்சாரம் சேமிக்கலாம்... எப்பூடி :-)

நகைச்சுவையுடன் கருத்து சொல்லியதற்கு வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

அறிய அரிய தகவல்

Anonymous said...

ஓகே நா பாப்கார்ன் செய்றேன்.. கொஞ்சம் உங்க செல்போன குடுங்க.

அமுதா கிருஷ்ணா said...

மிக அவசியமான அட்வைஸை லைவாக சொன்னதுக்கு தாங்ஸ்ப்பா...

நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌ம்.. ந‌கைச்சுவையாக‌ தெளிவுப‌டுத்திவிட்டீர்க‌ள்..

ஜோதிஜி said...

அறிய அரிய தகவல்

பின்னோக்கி இது ரொம்ப அக்கிரமம்.

vasu balaji said...

ஏற்கனவேஇங்க செல்ஃபோன் ஆட்டய போடுவாங்க. இனி பாப்கார்ன் கடைக்காரனும் சேர்ந்து போடுவான்:))

Chitra said...

நாய்க்குட்டி மனசு said...

சித்ரா இப்போ perfect ஆக அப்பா வழிக்கு வந்தாச்சு .


...... ரொம்ப சந்தோஷமாக இருக்குதுமா! You made my day.... Thank you.

Chitra said...

முகுந்த் அம்மா said...

சித்ரா,

இந்தியாவில செல்போன் இல்லாம எதுவும் இல்ல.

செல்போன் டவர் கிட்ட வீடு இருந்தா கான்சர் வரும்னு ரிசர்ச் பன்னி கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா, இந்தியாவில பத்து தப்படிக்கு ஒரு செல்போன் டவர் இருக்கு. அதுக்கு பக்கதிலயெ வீடுகளும் இருக்கு. என்னத்த சொல்ல


......என்ன கொடுமைங்க இது?

Chitra said...

சிங்கக்குட்டி said...

ஹி ஹி ஹி, பாவம் உங்க பதி :-) (இது பாப் கார்ன்-க்கு)


..... ரெண்டு செல்போன் எண்ணிக்கை குறையுது..... கிடைச்சதும், செஞ்சு பாத்துட வேண்டியதுதான்..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

Chitra said...

சௌந்தர் said...

எப்படி செல் போன் வைத்து பாப் கார்ன் செய்து சாபிடலாம் சொல்லியே சித்ரா(அக்கா) வாழ்க வாழ்க


..... விஜயகாந்த் சார் மாநாடு அந்த பக்கம், பா..... அவர் தான் செல் போன் வெளிச்சத்துல surgery செய்தவர்.... !!!

Chitra said...

சேட்டைக்காரன் said...

இம்மாம் பெரிய விசயத்தை செமத்தியான நக்கலோட, சுருக்குன்னு சொல்லிட்டீங்களே! சபாஷ்! :-)

.....இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே......

Chitra said...

Thank you, Pavithra....!

Thank you, Muthuletchumi akka....!

Thank you, Jerry....!

Chitra said...

என்னது நானு யாரா? said...

என் வலைபக்கம் எதுன்னு தேடறவங்களுக்காக http://uravukaaran.blogspot.com (எல்லாம் ஒரு விளம்பரம் தான்! முறைக்காதிங்க அக்கா)


...... என் கமென்ட்ஸ் பாக்ஸ், பில்போர்டு ரேஞ்சுக்கு ஆகி போச்சே! rent ஒழுங்கா கொடுத்துடுவீங்கல?

Chitra said...

Thank you, Vasanth.

Chitra said...

வழிப்போக்கன் - யோகேஷ் said..

.....செல்போன், மைக்ரோஓவன் எல்லாம் பாக்கும்போது என்னோட பிரண்ட் ஒருத்தர் பண்ணுன அலம்பல் ஞாபகம் வருது.......


...... உங்களுக்கும் அப்படி ஒரு நண்பரா?

Chitra said...

LK said...

en chitra ippadi ?? avvvvv


..... ஏன் இப்படி ஒரு கமென்ட்? வீடியோ பாக்கலியா?

Chitra said...

Thank you, Madhavan.


Thank you, வெறும்பய. (nice name!)

Chitra said...

ஜோதிஜி said...

ஹாலிவுட் பாலாவுக்கு அடுத்து நக்கலுக்கே என்றே ரசிப்பது உங்கள் தளத்தை தான்.

குசும்பு சித்ரான்னு கூப்பிடலாமா?


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

Chitra said...

கண்ணா.. said...

அருமையான குறிப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.. பகிர்விற்கு நன்றி...

இதேபோல் செல்போன் மூலமாக வெண்ணீர் வைப்பது எப்படி என்பதையும் சொல்லி கொடுத்தால் பதிவுலகம் பயனைடையும் :))


.......ஒரு ரெசிபி போட்டும், திருந்த மாட்டாங்க போல. மீண்டும் ரெசிபியா? பதிவுலகம் உங்களை மன்னிக்காது .....

Chitra said...

அருண் பிரசாத் said...

கிளப்பி விட்டுடீங்களா! போச்சு இதுக்கு மேல செல்போனையோ பாப்கார்னையோ பாத்தா இந்த கிளிப்தானே காத்துல வரும்


...... ஏதோ நம்மால முடிஞ்சது....

Unknown said...

:-))))))))

Chitra said...

அமுதா said...

இப்படி பண்ணினால் கேஸ் சிக்கனப்படுத்தலாம்... மின்சாரம் சேமிக்கலாம்... எப்பூடி :-)

நகைச்சுவையுடன் கருத்து சொல்லியதற்கு வாழ்த்துக்கள்.


..... இது நல்ல ஐடியாவாக இருக்கே!

Chitra said...

பின்னோக்கி said...

அறிய அரிய தகவல்


..... பீலிங்க்ஸ்?????

Chitra said...

இந்திரா said...

ஓகே நா பாப்கார்ன் செய்றேன்.. கொஞ்சம் உங்க செல்போன குடுங்க.


.....நான் இப்போதான் உங்க கிட்ட கேக்கலாம்னு நினைச்சேன்.

Vidhya Chandrasekaran said...

பல்லில்லாதா பாட்டி கூட பார்க்கலாம்.
செல்லில்லாத பார்ட்டியைப் பார்க்கவேமுடியாது:)

Chitra said...

அமுதா கிருஷ்ணா said...

மிக அவசியமான அட்வைஸை லைவாக சொன்னதுக்கு தாங்ஸ்ப்பா...


..... You are welcome! No mention! Its ok! No problem. You bet!

Unknown said...

நகைச்சுவையாகவே செல்போன் யூசேஜ் பத்தி கருத்து சொல்லியிருக்கீங்க.. நல்லாயிருக்கு.. ஆமா சமையல் குறிப்பு ஏதோ சொல்றதா சொல்லியிருந்தீங்க??

Chitra said...

நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌ம்.. ந‌கைச்சுவையாக‌ தெளிவுப‌டுத்திவிட்டீர்க‌ள்..


...... நன்றி.... நன்றி.... நன்றி....

Chitra said...

ஜோதிஜி said...

அறிய அரிய தகவல்

பின்னோக்கி இது ரொம்ப அக்கிரமம்.


.....அதானே? என்னன்னு கேளுங்க.

Chitra said...

வானம்பாடிகள் said...

ஏற்கனவேஇங்க செல்ஃபோன் ஆட்டய போடுவாங்க. இனி பாப்கார்ன் கடைக்காரனும் சேர்ந்து போடுவான்:))


..... அடடா .... இதை யோசிக்கல பாருங்க!!!

Chitra said...

வித்யா said...

பல்லில்லாதா பாட்டி கூட பார்க்கலாம்.
செல்லில்லாத பார்ட்டியைப் பார்க்கவேமுடியாது:)

.... இனி "பார்ட்டி"க்கு பாப் கார்ன் ஆர்டர் பண்ண தேவை இல்லை....

Chitra said...

பதிவுலகில் பாபு said...

:-))))))))

...:-)

Ramesh said...

உங்கள் சமையல் குறிப்பு சூப்பர்...உங்களுக்கு Fancy யா சமைக்கத் தெரியலையா...நீங்க சமைக்கிற முறையே Fancyயாதானே இருக்கு.....பாவம் உங்க வீட்டுக்காரர்...நீங்க சமையல் பண்ற முறைய பாத்துட்டே...ரொம்ப பயந்து போயிருப்பாரு இல்லீங்களா...ஆனா செம மேட்டருங்க....கிளைமேக்ஸ்ல ஒரு கருத்தும் சொல்லி இருக்கீங்க..நல்லா இருக்குங்க....

Chitra said...

பதிவுலகில் பாபு said...

நகைச்சுவையாகவே செல்போன் யூசேஜ் பத்தி கருத்து சொல்லியிருக்கீங்க.. நல்லாயிருக்கு.. ஆமா சமையல் குறிப்பு ஏதோ சொல்றதா சொல்லியிருந்தீங்க??


..... அதாண்ணே இது!

Mahi_Granny said...

நிஜமாகவே புதிய சமையல் குறிப்பு என்று நினைத்தேன். ஆனால் அதையும் விட உபயோகமான தகவல். சித்ராவின் ஸ்டைல்

VELU.G said...

ஆத்தாடி இதுல இம்புட்டு விஷயம் இருக்கா?

நேத்து எங்க ஊட்டுக்காரி சொன்னத வாங்கிட்டு போகலைன்னு, ஆத்தா பாத்த பார்வையில செல்போனே கருகிப்போயிடுச்சு, அவியலக்கூட யூஸ்பண்ணிக்கலாமா?

Butter_cutter said...

vettipeachu akka nalla karuthai solli irrukienga

Butter_cutter said...

vettipeachu akka nallakaruthai solli irrukirenga

Sukumar said...

ஹி..ஹி.. நல்ல சமையல் குறிப்பு.. ஆனா இது உண்மையானு சந்தேகமா இருக்கு...

Anonymous said...

பாப்கார்ன் காரமாகவும்,சுவீட்டாகவும் ருசித்தேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்பாக சமைக்க வாழ்த்துக்கள்..

மோகன்ஜி said...

சமையல் குறிப்பு சொல்ல போறீங்க,ஏதாவது தெரிஞ்சுகிட்டு வீட்ல செய்து அசத்தலாம்னு,நம்ம்ம்ம்..பி வந்தேன்.
ஹஹா!சொல்லிக்குடுக்குற மாதிரியே வந்து எமாத்திட்டியே தங்கச்சி.
செல் போன வச்சி பாப் காரன் சுடுறான்களாம்.நாங்கல்லாம் பாப்கார்ன வச்சிக்கிட்டு செல் போனையே சுடுவமில்ல!
சுபெர்ப் சித்ரா! நெஜமாவே ஒரு சமையல் குறிப்பு அடுத்த வாட்டி பதியறீங்க.சொல்லிட்டேன்.என்னா நையாண்டி?என்னா பில்டப்பு!!ஹஹா

அம்பிகா said...

ஹா... ஹா...ஹா...
நகைசுவையாக தோன்றினாலும், சிந்திக்கவைக்கும் பதிவு.

வினோ said...

சித்ரா நல்ல போஸ்ட்..

இப்போவே செல் போன் எடுத்து என் விட்டுல கூப்பிட்டு சொல்றேன் எனக்கும் பாப்கார்ன் செய் தெரியுமுன்னு.. :)

க.பாலாசி said...

அடடா காமடியும் அதுவழியா சொன்ன மெசேஜ்-ம் சரிதானுங்க... கொஞ்சம் ஜாக்ரதையாத்தான் இருக்கணும்போல...

Anonymous said...

எப்படி சித்ரா இப்படியெல்லாம் சிரிச்சிகிட்டே சித்தரவதை பண்றீங்க... நாங்க பரவாயில்லை பாவம் அவர்....ஹ்ம்ம்ம்

Jey said...

சமையல் குறிப்புன் நன்று. மிகவும் எளிமையா சொல்லி இருக்கிரீர்கள்..., என்னிடம் ஒரு செல்போன்தான் உள்ளது அதை வைத்து இந்த பாப்கார்ன் பொறிக்க ஆலோசனை வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொல்கிறேன்...

சாந்தி மாரியப்பன் said...

அப்பாடா.. இனிமே வாயு அடுப்பு, மின்சாரம் இல்லாமலேயே பாப்கார்ன் சாப்பிடலாம். மிச்சமிருக்கிற ரெசிப்பிகளையும் எடுத்துவிடுங்க :-))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

செல்போன்கள் வெளியேற்றும் கதிர்களின் அபாயத்தை 'உங்கள் பாணியில் வெளிப்படுத்தியிருப்பது நன்று.

தொடரட்டும் கலகலப்பான வெட்டிப்பேச்சு

Unknown said...

அன்பிற்கினிய தோழியே..,

சமையல் குறிப்பு என்றவுடன் எங்கே நம்ம ஊர் மானத்தை விமானத்தில் ஏற்றிவிடுவீர்களோ என்று பயந்தேன்.

ஆனால் எல்லோருக்கும் தெரிய(புரிய) வேண்டிய பாடம் இது. நல்ல பதிவு.

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்..ச.ரமேஷ்.

சத்ரியன் said...

// யம்மா, என்னா பில்ட்-அப்பு!//

இப்பிடித்தான் நெனைச்சிக்கிட்டு படிக்க ஆரம்பிச்சேன்.

படத்தை பாத்துட்டு பயந்தே போயிட்டேன் தெரியுமா?

சைவகொத்துப்பரோட்டா said...

பாப் கார்ன் செய்முறை இவ்ளோ சுலபமா!! :))

கண்ணகி said...

முதலில் ஏதோ நகைச்சுவை என்றுதான் நினைத்தேன்....அதன் சீரியஸ்னஸ் பிற்குதான் தெரிகிறது..அய்யோ...பயமாய் இருக்குது...பத்துநிமிடம் பேசினால் காது எனக்கு சூடான உணர்வைத்தரும்...அதனால் ரொம்ப நேரம் பேசமாட்டேன்...இதப்பார்த்ததும் மறுபடியும் அய்யோ அம்மா..

சுசி said...

ஹஹாஹா..

வெடிச்சாலும் மொபைல விட மாட்டோம் :))

நட்புடன் ஜமால் said...

நான் முன்பே சொல்லியிருந்தது போல்

இது சிரிக்க மட்டுமுள்ள இடமல்ல சிந்திக்கவும் தான்

நல்ல கருத்து சித்ரா - சொன்ன, படித்த யாராவது பின்பற்றுவார்களா ??? தெரியாது - இருப்பினும் நல்ல விடயம்

Download Gprs said...

ஹாய் சித்ரா....நான் உங்கள் தளத்தை இன்றுதான் பார்த்தேன்.....முழுவதுமாக உங்கள் பதிப்பை படிக்க வில்லை பிறகு படிக்கலாம் என்று இருக்கிறேன் ...படித்துவிட்டு என்னுடைய கருத்தினை எழுதுகிறேன் ....இது என்னுடைய தளம்....முடிந்தால் நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெருவியுங்கள் ....உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் தள உறுபினர்களுக்கும் தெரியபடுத்துங்கள்...நன்றி

http://downloadgprs.blogspot.com

praveenjce02@gmail.com

சசிகுமார் said...

இது ரொம்ப ரொம்ப ரொம்ப , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

இந்த சமையல் சுவைக்கு, உலகின் எந்த சமையலும் வராது...!

செல்வா said...

//தென் தமிழ்நாட்டுப் பக்கம் உள்ள சமையலில் அசத்துவது போல மற்ற வகை சமையலில் பிரமாதப்படுத்த தெரியாது. அவ்வளவுதான்..///
இப்படி சொல்லிட்டு அமெரிக்காவுல இருக்குறீங்க ..
ஏன்னா தமிழ்நாட்டுல இர்ந்ததானே சமைக்கத் தெரியும் அப்படின்னு சொல்லிக்கரக்காக.. எப்பவாவது தமிழ்நாடு வந்தா அமெரிக்க உணவு நான் நல்ல சமைப்பேன் அப்படின்னு சொல்ல வேண்டியது .. இதே வேலையா போச்சு உங்களுக்கு ..

Jayanthy Kumaran said...

OMG...its real shocking to know this harsh truth...!!! Still, we pretend to be the same...Thanx chitra for creating awareness to all...!!!

செல்வா said...

அட சாமி .. இவ்ளோ எபாக்டா செல்போன் இருக்கு ..?

Riyas said...

VERY NICE CHITRA AKKA...

எப்பூடியெல்லாம் யோசிக்கிறாங்க அவ்வ்வ்வ்வ்

Menaga Sathia said...

நல்ல பதிவு+ரெசிபி...உங்களால மட்டும்தான் இப்படிலாம் எழுதமுடியும்னு நிருபிச்சுட்டீங்க...

Anonymous said...

சமையல் இளவரசி சித்ரா வாழ்க ..சூப்பர் பதிவு ..ஹி ஹி இனிமே பாப்கார்ன் இப்பிட்யும் செஞ்சு சாப்பிடலாமே ..

பவள சங்கரி said...

சூப்பர் ரெசிபிங்க சித்ரா. சிரிக்கவும்......சிந்திக்கவும்.... நன்றி

ராஜவம்சம் said...

எந்தவொரு விசயத்தையும் நகைச்சுவை உணர்வுடன் சொன்னால் அந்த செய்தி மக்களின் மனதில் சுலபமாக பதியும் என்ற உங்கள் என்னத்திற்க்கு வெற்றி.

நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்.

Nithu Bala said...

nagaisuvaiyoda oru periya vishayatha sollitenga..rombha nalla irundhathu recipe..hehehe..
appuram ungalukku samaika theriumnu nambitten, nambitten, nambitten..unmayavey nambitten Chitra.

சி.பி.செந்தில்குமார் said...

நல்லெண்ணய் சித்ராவுக்கு மார்க்கெட் அவுட்,ஆனா இந்த நல்ல எண்ண சித்ராக்கு எப்பவும் நாட் அவுட்டு 22 ஓட்டா?அடி தூள்தான்

GEETHA ACHAL said...

முதலில் எதோ காமெடி என்று நினைத்தேன்...அப்புறம் வீடியோ பார்த்தும் பயந்துவிட்டேன்...பகிர்வுக்கு நன்றி..

Priya said...

மிக சிறந்த விஷயத்தை சூப்பரா உங்க ஸ்டைலில் சொல்லிட்டீங்க சித்ரா.

எட்வின் said...

செல்ஃபோன்ல இத்தன வில்லங்கமா... கண்டிப்பா பலபேர யோசிக்க வச்சிருக்கும் உங்க விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த பதிவு.

RAJA RAJA RAJAN said...

நல்லா தான் இருக்கு...!

அருமை... அருமை...!

http://communicatorindia.blogspot.com/

க ரா said...

நான் சமையல் குறிப்பே எழுதுவது இல்லை, என்று சில பதிவர்கள் குறைப் பட்டுக்கொண்டார்கள்.
----
நான் வருத்தபடலைங்க.. எனக்கு தெரியும் உங்க வீட்டுல சமையல் சாலமன் சார்ன்னு.. ஆனா நீங்க வெண்ணீர் நல்லா போடுவீங்கன்னு கேள்வி பட்டேன்.. அது உண்மையா :)

க ரா said...

இந்த அளவுக்கு microwave radiation வெளிப்படும் செல் போன் என்று தெரிகிறதல்லவா? அவசியத் தேவைகள் தவிர செல் போன் உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது, மக்களே!!! அது மட்டும் அல்லாமல் பாக்கெட்டிலும் அதிக நேரம் வைத்து இருப்பது நல்லது அல்ல..... வேறு ஏதாவது வெடித்து உடம்புக்குள்ளே பாப்கார்ன் ஆகப்போகுது...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....
மேற்கொண்டு ஆய்வுகளுக்கு:
----
அருமையான குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி :)

ராமலக்ஷ்மி said...

ந்ல்ல பகிர்வு.

பகிர்ந்த விதம் ’பட் பட் பட பட’ பாப்கார்ன்:))!

DREAMER said...

செல்ஃபோன் இவ்வளவு பயங்கரமானதா..! ஆச்சர்யமான தகவல்... பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

Jerry Eshananda said...

Dangerous Recipe.

dheva said...

அது சரி..... சமையல் குறிப்போடு..செல்போனில் இருக்கும்...விபரீதமும்...
அட்டகாசம் போங்க....

சும்மா சமையல் குறிப்பு எழுதினால் வயிறுதான்...உங்கள் குறிப்பால் அறிவுக்கு விருந்து.....வாழ்த்துக்கள்...!

வெற்றி நமதே said...

கலக்கிட்டிங்க சித்ரா (அக்கா(OPTIONAL )). உங்க வயசு தெரியாது அதான். ஹ ஹ ஹ. வயச சொல்லுவிங்களா ?

ஹேமா said...

சமையல்ன்னு சொல்லி சிந்திக்க வச்ச பதிவு.அசத்துறீங்க சித்ரா.

Lingeswaran said...

Ungalukku nalla nagaichuvai unarvu...! Kalakkunga...

ஜெய்லானி said...

ஈஸியாதான் இருக்கு ஆனா ஐஞ்சி , போன் பத்து போனை முதல்ல எங்கே சுடனும் , யார்கிட்ட சுடனும் ..ஹி..ஹி..

ம.தி.சுதா said...

@ ஜெய்லானி said...
உங்களிடம் தானே தண்ணிக்குள் விழுந்த போன் எல்லாம் தாராங்களாம் பின்னர் ஏன் சுட வேணும்... சகோதரா..

ம.தி.சுதா said...

அக்கா மிகவும் அருமையான சமையல் குறிப்பு.. நன்றிகள் உரித்தாகட்டும்... நேரம் கிடைத்தால் (கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு...) என்ற தலைப்பில் உள்ள என் அக்கம்
http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_26.html
ல் உள்ளது பாருங்கள்.

ISR Selvakumar said...

சில நேரம் தியேட்டர்ல படம் பார்க்கும்போது, லெஃப்டுல ஒருத்தர், ரைட்டுல ஒருத்தரன்னு பேசி நம்மையே பாப்கார்ன் ஆக்கிடுறாங்க.

ஆரம்பத்தில் உண்மையிலேயே சமையல் குறிப்போன்னு பதறிட்டேன். நல்ல வேளை உபயோகமான தகவலை, சுவையான பாப்கார்ன் போல பரிமாறிவிட்டாள் என் தங்கை!

எம் அப்துல் காதர் said...

நல்ல பதிவு சித்ராக்கா!!

ஜெய்லானி said...

//ஆனா ஐஞ்சி, போன் பத்து போனை முதல்ல எங்கே சுடனும்
..ஹி..ஹி.. //

போனை நாலு கார்னர்லையும் நெருப்புல காட்டி சுட்டுக்கிட்டா,, பாப்கார்ன் தன்னால ரெடி பாஸ் க்கி..க்கி..!!

Alarmel Mangai said...

அம்மா தாயே,

இப்படியெல்லாம் ரெசிப்பி கொடுத்து பி.பி ஏற்ற வேண்டாம்.

இனி என்னை செல் போனில் அழைத்தால்
இருக்கு சொல்லிட்டேன்..:))))))))))))

Unknown said...

super.

வேலன். said...

பாப்கார்ன் மட்டும்தானா....இன்னும் வேறுஎதும் செய்யமுடியாதா? கொஞ்சம் பார்த்து அதையும் பதிவிடுங்களேன.(வீட்டுக்காரம்மாகிட்ட இதை சொல்லி இன்னும் இரண்டு செல்போன் வாங்கிடலாம்)
வாழ்க வளமுடன்.
வேலன்

ஸ்ரீராம். said...

செல் ஃ போனைப் பார்த்தாலே பயமா இருக்கு. ரயில்லயோ வேற எங்காவதோ பக்கத்துல இருக்கறவன் வெங்காய வெடி எடுத்துட்டு போனாக் கூட போரிஞ்சிடும் போல இருக்கே... ஐயோ...

அன்பரசன் said...

பாப்கார்ன் நல்ல டேஸ்ட்

RVS said...

இங்கு உயர்ந்தரக செல்ஃபோனால் பொறித்த பாப்கார்ன் கிடைக்கும் அப்படீன்னு எவனாவது போர்டு போட்டுட போறானோன்னு எனக்கு பயம்மா இருக்கு... ம்...ம்...

அன்புடன் ஆர்.வி.எஸ்.
http://mannairvs.blogspot.com

movithan said...

நகைச்சுவைப் போர்வைக்குள்,நல்ல விழிப்புணர்வுப் பதிவு.

நன்றி.

NADESAN said...

நல்ல பதிவு அக்கா
நிறைய ரசித்தேன்
வாழ்க வளமுடன்
அன்புடன்
நெல்லை நடேசன்
துபாய் அமீரகம்

Mythili (மைதிலி ) said...

மைக்ரோ வேவின் bad effects பற்றி அதில் ரிசர்ச் செய்யும் நான் எழுதுவதை விட சாதாரண மக்களுக்கு புரியுற மாதிரி அழகா சொல்லியிருக்க... சமையல் கலை வாழ்க.

Anonymous said...

World's best blog post!!!! B-) Funny and informative!!! B-) En arivuk kangalaith thirandhuvitteergal!!!

தினேஷ்குமார் said...

வணக்கம்
சிரிக்கவும் வைத்து எல்லோரையும் சிந்திக்கவும் வச்சுட்டிங்க பெரியவர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் போலா
ஒரு கலக்கு கலக்கிட்டிங்க போங்க..
நான் வேற இப்பதான் வேலையிலிருந்து வந்தேன் என்னடா சமைக்க்கலாம்னு யோசிச்கிடே உங்க ப்ளாக் பார்த்தா சரி ஏதோ நல்ல டிஷ்தான் சொல்றிங்கனு குறிப்பெடுக்க நோட்டெல்லாம் எடுத்து வச்சு ரெடியா இருந்தனே போச்சு போச்சு இன்னைக்கும் ஹோட்டல்லதானா.......

பத்மா said...

kalakkals

புல்லாங்குழல் said...

சித்ரா ஸ்டெய்ல் ரிசிப்பி. சூப்பர்வித்தியாசமான இடுகை.பயனுள்ள தகவல்.

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

அருமையான குறிப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.. பகிர்விற்கு நன்றி....!இன்னும் செல்போன் வைத்து வடை சுடுவது எப்படி? என்று பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.!
பதிவுலகத்துக்கு புதியவன்,எங்க பக்கத்தையும் வந்து பாருங்க...!
http://vetripages.blogspot.com/

எப்பூடி.. said...

இந்த செல்போன கண்டு பிடிச்சவனை............... :-)

ஹுஸைனம்மா said...

அப்போ, இப்ப செல்ஃபோன் பயன்படுத்துறதைக் நிறுத்திட்டீங்களா இல்லை குறைச்சுகிட்டீங்களா?

குட்டிப்பையா|Kutipaiya said...

நான் பாப்கார்ன் சாப்பிடறதயே விட்டுறலாமா’னு பாக்றேன் :) :)

ஸாதிகா said...

பாப்கார்ன் சாப்பிடுற ஆசையே போச்சு சிதரா

ஜெயந்தி said...

அருமையான சமையல் குறிப்பு. சமையல் குறிப்பக்கூட சித்ரா தவிர யாராலயும் இந்த மாதிரி எழுத முடியுமா?

vinu said...

appuram onnu kekka maranthuttean salt neenga potteengala illaiya

Unknown said...

Hi Chitra,

Mudhal mudalaaka inge vandhirrukiren...Romba nalla katuraihal yeluthureega!!

Sameena@www.myeasytocookrecipes.blogspot.com
www.lovelypriyanka.blogspot.com

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

’அவனி’ல் ஆசையாய்,
பொரிக்குமந்த பாப்கார்னை,
எவன் பேச்சைக் கேட்டோ,
’செல்லி’ல் பொரிக்க வைத்தீர்?
கொறிக்கவே சுவையான அத்தீனி,
நொறிக்கிடும் பல்லில் படாது இனி!!!


அன்பன்,

ஆர்.ஆர்.ஆர்.

சிநேகிதன் அக்பர் said...

அட சமையல் குறிப்புன்னு வந்தா. பெரிய செய்திக்குறிப்பாவுல்ல இருக்கு. ரொம்ப நன்றிங்கோவ்.

தாராபுரத்தான் said...

அதிரைவத்த சமையல் குறிப்பும்மா..

அண்ணாமலை..!! said...

என்னாங்க இது! இதைத்தான் இதயத்துக்குப் பக்கத்துல
வச்சுக்கிட்டு நாம எப்போதும் அலையுறமா??
இதயம் 'டரியல்' ஆகி விடப்போகிறது!

ஒரு குறிப்புன்னாலும் , திருக்குறிப்பா சொன்னீங்க!

Thenammai Lakshmanan said...

அடப் பாவி சித்து அன்னைன்னு நீ எனக்கு ஃபோன் பண்ணபோது சுமார் ரெண்டு மணி நேரத்துக்கு எங்க வீட்டுப் பக்கம் இருந்த ட்ரான்ஸ்ஃபார்மர் வெடிச்ச விஷயம் இதுதானா..:))

குந்தவை said...

சித்திரா... ரெம்பவும் ரசித்தேன்.
அருமையான விஷயத்தை அமர்களமா எழுதியிருக்கீங்க.

Asiya Omar said...

அட சித்ரா எப்ப இந்த ரெசிப்பி கொடுத்தீங்க.இனிமேல் யாரும் கேட்பாங்க,உங்க ரெசிப்பி எப்போ?

Jayanthy Kumaran said...

Hy Chitra,
Thanx for stopping by n for your motivating comments...:)
sure, will send you the recipe for rumali roti...its my fav too...!
Have a wonderful day...!!!

Best Regards,
Jay

அரசூரான் said...

அக்கா, ஆர்வ கோளாருல ஆரோ செல்போன வெச்சு வேற ரெச்சிப்பி ஏதுமுண்டான்னு பின்னூட்டத்துல கேட்டு இருக்காங்க, அவங்களுக்கு ஏதோ என்னால முடிஞ்ச உதவி... கிளிக்கி பார்த்துக்க சொல்லுங்க

http://urbanlegends.about.com/library/bl_cook_egg_cell_phones.htm

Jaleela Kamal said...

சித்ரா பதிவு நகைச்சுவையா இருந்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

kashyapan said...

கை பேசியின் பயன்பாட்டை மட்டுமே உணர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்முறை விளக்கம் உண்மையிலேயே மரண பயத்தை உருவாக்கிவிட்டுள்ளது.சமூகப் பயனுள்ள இடுகை.137 பெர் பின்னூட்டமிட்டுள்ளார்கள் என்பது ஆவணப்பரடுத்தப்பவெண்டிய ஒன்றாகும்---காஸ்யபன்.

Unknown said...

Hi Akka,

ennoda blogil serthathukaha natri..nall comments eludi ennai encourage pannratharkaahavum..Thanx...

sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

Chitra said...

Thank you all for your wonderful support!

வருண் said...

***நான் சமையல் குறிப்பே எழுதுவது இல்லை, என்று சில பதிவர்கள் குறைப் பட்டுக்கொண்டார்கள்.**

உங்க ரெசிப்பி எல்லாம் "patent" செய்ய வேண்டிய அளவுக்கு தரமானவை, ராயல்ட்டி கொடுத்துத்தான் அவைகளை வாங்கமுடியும்னு அவங்களுக்கு தெரியாதுபோல, பாவம்! :)))

செந்தில்குமார் said...

ம்ம்ம்... சித்ரா

எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கமுடியுது

தகவல் ம்ம்ம்ம்....