சில சமயம், நண்பர்களுடன் சீரியஸ் ஆக பேசி கொண்டு இருக்கும் போது கூட , intention இல்லாமலே, ஏனோ காமெடி டைம் ஆகி விடுகிறது.
எனக்குதான் BLOGGOTOPICTIS நோய் தாக்கி விட்டதா? ( (எல்லா விஷயங்களையும் Bird's eye view மாதிரி Blogger's eye கண்ணோட்டத்துடன் பார்க்க வைக்கும் நோய்)
இல்லை, வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், இருக்கும் கவலைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், positive ஆக வைத்திருக்க உதவும் நகைச்சுவை உணர்வில் அதிகமாக focus செய்ய ஆரம்பித்து விட்டேனா என்றும் தெரியவில்லை. ம்ம்ம்ம்ம்ம்.........
எங்கள் தோழி, தேன்மொழியை நாங்கள் தேனா என்று அழைப்போம். ஒரு சமயம், மற்றொரு நண்பருடன் பேச, தொலைபேசியில் அழைத்து இருந்தார்.
"ஹலோ"
"ஹலோ! நான் தேனா பேசுறேன்."
"ஹலோ, நீங்கள் தேனா (honey) பேசுங்க. இல்லை, பாலா (milk) பேசுங்க. முதலில் யார்னு பேரை சொல்லிட்டு பேசுங்க."
..... இன்னொரு சம்பவத்தையும் நான் கண்டிப்பாக சொல்லணும்.
நானும், அந்த புது பெண்ணும், குழந்தையுடன் உள் அறையில் இருந்த நண்பரின் மனைவியை காண உள்ளே சென்றோம்.
நான்: "எப்படி இருக்கீங்க?"
தோழி: "இப்போ, பரவாயில்லை, சித்ரா."
நான்: "ரொம்ப கஷ்டமாக இருந்ததா?"
தோழி: " ஆமாம், வலி தாங்க முடியாம இருந்தது. "
நான்: " அப்படித்தான் இருக்கும்ப்பா... இது ஈஸினு யாரும் சொல்லலியே."
தோழி: "அதாங்க..... சேர்த்தே இரண்டையும் எடுத்துடுங்க என்று டாக்டர் கிட்ட சொன்னேன். கேட்க மாட்டேனுட்டார். இப்போ, நான் கொஞ்சம் recover ஆகி இருக்கும் நேரம், திரும்ப அடுத்ததுக்கும் போகணும்."
புது பொண்ணு: "அப்படியா? எப்போ?"
தோழி: "அடுத்த வாரம், டாக்டர் வர சொல்லி இருக்கிறார்."
புது பொண்ணு: "இந்தியாவுல இப்படி எல்லாம் விட மாட்டாங்க..... என்ன அமெரிக்காவோ? ஒரு குழந்தை பிறந்து, ஒரு மாதம் ஆகி போச்சு...... இன்னும் இரண்டாவதை டெலிவர் பண்ணலைனா என்ன அர்த்தம்? டெலிவரி date முடிஞ்சும் இப்படி இருக்கிறது, குழந்தைக்கு நல்லது இல்லை. உங்களுக்கு பாருங்க, மறுபடியும் வலி, வேதனை...... எல்லாம்."
தோழி: "ஓ, நீங்க டெலிவரி பத்தி கேக்குறீங்களா? சரியா போச்சு. நான் போன வாரம் பிடிங்குன பல் பத்தி சொல்றேன். இன்னொரு பல்லை, அடுத்த வாரம் எடுக்கப் போறாங்க.... டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"
நான்: "நியாயமான கேள்வி. அவரவர் வலி அவரவர்க்கு."
எனக்கே எனக்கா? இப்படி நண்பர்கள், எனக்கே எனக்கா? ...........
இன்னும் எத்தனை பேர், இப்படி உலகத்துல கடவுள் படைத்து விட்டிருக்காரோ? அதில் எத்தனை பேர் , எனக்கு நண்பர்களாகப் போகிறவர்கள் என்றும் எழுதி இருக்கிறதோ? ம்ம்ம்ம்ம்ம்ம்........
தம்பட்டம் தாயம்மா: "எப்படி சித்ரா, வழக்கம் போல...... புலம்புற மாதிரியே, நல்லா பெருமை அடிச்சிக்குற?
நீ நடத்தும்மா!"
78 comments:
vaara muthal naalil sirika vaithatharkku nandri
Thank you, LK!
வெட்டியாகப் பேசினாலும் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது தோழி!
BLOGGOTOPICTIS - புதுசா இருக்கு!!!
நீங்க நல்லா எழுதுறீங்கன்னு ஒரு நண்பர் சொல்ல ..
ரொம்ப நன்றிங்கன்னு சொல்லிட்டு .. எல்லாத்தையும் படிப்பீங்களான்னு கேட்டேன் ...
அவரு ஆமாங்க எல்லாத்திலையும் உங்க பின்னூட்டம் நல்லருக்குன்னார்....
ஹா ஹா ஹா... சித்ரா.. சூப்பர்..
நீங்க தேனா இருங்க, இல்ல பாலா.. இருங்க... சூப்பர் அப்பு சூப்பர்.. :D :D
உங்கள் கூட இருந்தாலே... எல்லாரும் இப்படி தான் நகைச்சுவையா பேசுவாங்க போல இருக்கு!!
மீண்டும், தம்பட்டம் தாயம்மா வந்ததுல ரொம்ப சந்தோசம்... :-))
//positive ஆக வைத்திருக்க உதவும் நகைச்சுவை உணர்வில் அதிகமாக focus செய்ய ஆரம்பித்து விட்டேனா என்றும் தெரியவில்லை. ம்ம்ம்ம்ம்ம்.........// ஆமா, உண்மைதான்.
ஒருவகையில் இதுவும் நல்லதுதான்.
எனக்கு பல்வலிகுது
நாமள சுத்திதான் நகைசுவை இருக்கு வேற எங்கேயும் போக தேவையில்லை
அந்த நோய் உங்களுக்கும் வந்திடுச்சா?... :)
அந்த நோய்தானா அது? எனக்கும் ஒரு 2 மாசமா இருக்கு.
//டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"//
செம டைமிங் காமெடி...
எல்லாம் சரி, BLOGGOTOPICTIS வியாதி வந்தா எந்த டாக்டரைப் போய்ப் பார்க்கணுமுன்னு சொல்லாம விட்டுட்டீங்களே! இது நியாயமா? :-)
Its interesting Chitra...
Keep it up...
எப்படிங்க சித்ரா உங்களால மட்டும் இப்படி தேனா பாலா காமெடி பண்ண முடியுது?
ரொம்ப ரசிச்சேன் :)
//பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"//
“அந்த தெய்வத்துக்கே கஷ்டம்னா யார்கிட்ட சொல்ல?”ங்கிற சிவாஜி டயலாக்தான் ஞாபகம் வருது. அதுவும் அதே டோன்ல சொல்லிப்பாத்தா...
உங்களைப் பாத்தவுடனே எல்லாரும் “சிரி”யஸா ஆகிடுவாங்க போல!!
Nice Chitra
Funny
:))
//டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"//
செம டைமிங் காமெடி...
ரொம்ப ரசிச்சேன் :)
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா
super
ரசித்துப் படித்தேன்
பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"//
என்ன ஒரு தத்துவம் நல்ல நகைசுவை
எப்படிங்க இப்படியெல்லாம். தெயவ சோதனையா எல்லோரும் உங்க கிட்டேயே இப்படி மாட்டுறாங்க!
அந்த பல்வலி டயலாக் ரொம்ப கலக்கலுங்கோ!
பதிவு சுட சுட போட்டிருக்கேன். படிச்சு பாத்து கருத்து சொல்லுங்க!
உங்க காமெடி பீஸ்கள் வர வர சிரிச்சு தாங்க முடியலை.இது மாதிரி எழுத எல்லாருக்கும் வராது.
பால் போல மனம் இருக்கற நீங்க தேன் போல தித்திக்கும் பதிவுகள் போடுங்க நான் தான் படிக்கா ரெடியா இருக்கேன் இல்லையா ஹி ஹி ..உங்க பதிவு எப்போதும் போல சூப்பர் ..நன்றி
தேனா? பேசுறது ஆமாங்க நான் தேனா தான் பேசுறேன் :) :) :)
-------------
சிரிப்புக்கு பஞ்சமில்லைன்னு தலைப்பு வச்சிருக்கலாம் உங்கள் ப்லாக்குக்கு
திங்கள் கலையில.. செம பதிவு... நல்ல இருக்கு சித்ரா... நன்றி...
//டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"///
ha ha ha ha ha ha ha ha ha ha ha ha .. this is ur style.
நான் பயந்தே போயிட்டேன்
SUPER AKKA
சரி இப்ப எப்படி இருக்கீங்க வியாதின்னு சொன்னவங்களை நலம் விசாரிகாம போகக்கூடாது...ஹா..ஹ..
@@@ஹுஸைனம்மா
//பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"//
“அந்த தெய்வத்துக்கே கஷ்டம்னா யார்கிட்ட சொல்ல?”ங்கிற சிவாஜி டயலாக்தான் ஞாபகம் வருது. அதுவும் அதே டோன்ல சொல்லிப்பாத்தா...
உங்களைப் பாத்தவுடனே எல்லாரும் “சிரி”யஸா ஆகிடுவாங்க போல!!
ரிப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்
"டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"
ஆட... ஆமால்லே.எப்படி முடியும்.வெட்டிபேச்சாக இருந்தாலும் சிரிப்பை தருகிறது.பாரட்டுகள் சகோதரி
சூப்பர் :))
very nice chitra , i like your positive approach.
பதிவு தேனா இருக்கு சித்ரா:)!
ஹி ஹி ஹி சூப்பர்.
நிறைய பேருக்கு இப்போ அந்த நோய் இருக்குபோல?
செம கலகலப்புப்பா :-))))))
நான் இப்பொழுதுதான் பிளாகோடாபிக்ஸ் நோயிலிருந்து விடுபட்டு வருகிறேன்.....உங்களுக்கு இது எந்த ஸ்டேஜ்?
:-)))))
ha ha super chitra!!
எங்க போனாலும் ப்ளாக்கோமேனியாவா ரைட்டு நடத்துங்க :)
ஹஹஹஹ... தேனா பேசுறேன்...செம காமெடி... :))))))
ரசித்துப் படித்தேன்..அருமையா இருக்குங்க..
டேய் முனியாண்டி.. மாயாண்டி.. நாகப்பா.. எல்லாரும் வாங்கடா.. சித்ரானு ஒரு பொண்ணு பதிவுங்குற போ்ல மொக்கை பண்றது தாங்க முடில.. கொஞ்சம் இன்னானு கேட்டுட்டு வருவோம்..
நகைச்சுவை எப்பவும்போல
கலக்குது சித்ரா.
ரொம்பவும் ரசித்-தேன்
வாழ்த்துக்கள்.
அப்பரம் ஒரு விசயம் எங்கூருப்பக்கம் தேனா-ன்னா கெட்டவார்த்தைங்க.
Chitra,
sariyana comedy..ennaiku kalaila naan padicha mudhal pathivey ungaluthu thaan..arumai.
///டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?///
பக்கத்துல இருக்குற யாரயாச்சும் புடிச்சு கடிக்க வேண்டியதுதான்..!
இப்போ நீங்க கடிக்கல அதேபோல ..!
;))
நல்ல நகைச்சுவை பதிவு நன்றி..!
பல் மேட்டர் சூப்பர்..
ஹா ஹா ஹா
எனக்கும் இந்த BLOGGOTOPICTIS வியாதி இருக்காம் ஆனா முத்துரதுக்குள்ள... சர்ஜரி பண்ணனும்னு டாக்டர் சொல்ராரு
தேனா பாலா... superb!
பல்லு பிடிங்கின கதை ரொம்ப ரஸமாய் இருந்தது......
நல்ல நோய் தான் போங்க..
LOL!!!!!!!
உங்க ராசி போல மேடம், இந்த தேனு , பாலு பல்லூபுடுந்குரது எல்லாம் உங்கள் பக்கத்துலே நடக்குது
ஆஹா என்ன ஒரு சுவாரஸ்யமாக ஹா ஹா ஹா
அருமையான கலக்கல் காமெடி சித்ரா மேடம்.
உங்க பல்ல எப்ப பிடுங்குவாங்க...
இந்த மாதிரி காமெடியா முடிஞ்சா பரவாயில்லையே... நான் ஒரு முறை சாதாரணமா பேசினது வம்புல கொண்டு பொய் விட்டுடுச்சு.பிரபல அரசியல் தலைவர் ஒரு ..................ரை செருப்பால அடிச்சுட்டதா செய்திகள் பரவிய நேரம். என்னோட உயரதிகாரி (?) புது செருப்பு வாங்கியிருந்தார். இது ..................ரை அடிக்கவா என்று நான் கேட்டதும் அவர் பொங்கி விட்டார்.
காரணம் வேறொன்றுமில்லை. அவருக்கு பண உதவி செய்யப்போவதாக சொல்லியிருந்த ஒரு நபரை அடிக்கவா இந்த செருப்பு என்று நான் கேட்டதாக தவறாக புரிந்து கொண்ட உயரதிகாரி என்னை வார்த்தைகளாலேயே வருத்தெடுத்து விட்டார்.
கடவுளால் ஆசிதிர்வதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களையும் சிரிக்க வைத்து தானும் சந்தோசமாக இருந்து....காணும் ஏஎல்லாவற்றிலும் மகிழ்ச்சியையே கண்டு.....சந்தோசமாக வாழ்வை மாற்றிக் கொள்கிறார்கள்....
நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.
கடவுளால் ஆசிதிர்வதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களையும் சிரிக்க வைத்து தானும் சந்தோசமாக இருந்து....காணும் ஏஎல்லாவற்றிலும் மகிழ்ச்சியையே கண்டு.....சந்தோசமாக வாழ்வை மாற்றிக் கொள்கிறார்கள்....
நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.
எல்லாமே ப்ளாக்கர் கண்ணோட்டத்தில :) :) :) அய்யோ அய்யோ :) :)
மல்லாக்க படுத்து யோசிச்சா கூட இப்டிலாம் தோணாதே??
காமடிலாம் நல்லாத்தான் இருக்கு...
ஆனா உங்க போட்டோவை பார்த்தாதான் கொஞ்சம் பயமா இருக்கு
:-)
அடேயப்பா! மென்மையான நகைச்சுவை
நானும் ஒரு 'BLOG'GARD ஆனப்புறம் இப்போதான் உங்க வலைப்பதிவை பார்த்தேன்.உடனே follower ஆயிட்டோம் இல்ல!
:-))))))))))))))))))))))))))))))))))
அடேயப்பா! மென்மையான நகைச்சுவை
நானும் ஒரு 'BLOG'GARD ஆனப்புறம் இப்போதான் உங்க வலைப்பதிவை பார்த்தேன்.உடனே follower ஆயிட்டோம் இல்ல!
ஹா ஹா ஹா.
ரக்ஷ்ச பந்தன் வாழ்த்துக்கள் சகோதரி...வாழ்க வளமுடன்.
வேலன்.
BLOGGOTOPICTIS
அசத்தல் சித்ரா....
தேனே...பாலே....மானே... தேனே.... பொன்மானே.... இதுவும் பட்டையை கிளப்பிய நகைச்சுவை....
டெலிவரியையும், பல் பிடுங்கியதையும் குழப்பியது சூப்பர் காமெடி....
நல்ல காமெடி படித்தேன் ரசித்தேன் அட நானும் நெல்லை மாவட்டம் தாங்க
நெல்லை நடேசன்
அமீரகம்
தேனா..? பாலா..?
உங்க பிளாக்குங்க!
(உண்மை வெறும் புகழ்ச்சியில்லை!)
:)
டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"
I laughed out loud reading this sentence... Thanks very much for the fun!!! Looking for the next post...
கலக்கலா இருக்கு.. நகைச்சுவையான பதிவு.. சூப்பர்..
Happy Raksha Banthan.....
//"தோழி: "ஓ, நீங்க டெலிவரி பத்தி கேக்குறீங்களா? சரியா போச்சு."//
அட, இது என்னங்க..
ரெண்டாவதா பிறந்த நான் கூட ரொம்ப லேட்டாதான் பிறந்தேனாம்...எங்க அம்மா சொல்லியிருக்காங்க...எங்க அண்ணன் பிறந்து நாலு வருஷம் கழிச்சு...!!
ஹி..ஹி...
நகைச்சுவையான பதிவு..!
இனிமே சித்ராங்கிற பேர மாத்திர வேண்டியதுதான்.. கலகல சித்ரா..ஓகேவா..
I am not able to control my laugh by readin this topic... :)...Unga approach enakku pidichu irukku....:)
ஹாஅ ஹா எப்படி சித்ரா இவ்வ்ளவு வெட்டி பேச்சு சுவரசிய்மாச்சு,,
ஹிஹி
பல் வலியும் , டெலிவரியும்,,, ஹி
புது டெம்லேட் டிசைன் நல்ல இருக்கு,
சிரிச்ச மாளலை... டெலிவரிக்கும் பல்லுக்கும் முடிச்சுப் போட்டு... என்னவோ போங்க
//டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"//
எப்படிங்க இப்படி எல்லாம்? வாய்விட்டுச் சிரித்தேன். :)
:DDDD
BLOGGOTOPICTIS -> nalla peru vachirukeenga..... nalla vela intha noi peravathu "phobia" la mudiyala...
Post a Comment