Sunday, August 15, 2010

சோகம் என்றாலும் சிரிப்பு

கடந்த சில நாட்களாக பயணங்கள் ........ இன்ன பிற வேலைகள்......
பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை.  மீண்டும், பழையபடி பதிவுலகம் பக்கம் உலா வர சிறிது நாட்கள் ஆகும் போல தெரிகிறது.  ஆனால், நிறைய விஷயங்கள் உண்டு. அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன். 

  "இடுக்கண் வருங்கால், நகுக...." என்ற வள்ளுவர் வாக்கு, எந்த அளவுக்கு நடைமுறைக்கு உதவும் என்று யோசித்தது உண்டு.  வாழ்க்கையில்,  சில சமயங்களில்  அதை கடைப்பிடித்த போது,  உண்மையில் சூழ்நிலையின் இறுக்கம் குறையத்தான் செய்கிறது.   தாமும்  உறுதியாய் நின்று,  மற்றவர்களின் மேல் தங்களின்  கவலைகளின் தாக்கம் விழாமல் வைக்க  ,    நகைச்சுவை உணர்வு  நன் மருந்தாக  அமைந்து விடுகிறதே!


சவுண்டு பார்ட்டி: 

ஒரு கட்டிடத்தில் இருந்து 15 அடிகள் கால் தவறி  கீழே விழுந்து விட்ட ஒரு தோழியின் தந்தையை (தமிழ் நாட்டில் இருந்து  அமெரிக்கா  வந்தவர்)  காண,  ஒரு மருத்துவமனையின் Surgical ICU வுக்குள் நுழைந்தோம்.  முதுகு தண்டில்,  எலும்புகள் சில பகுதிகளில்  நொறுங்கி விட்டதால்,  இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்து முடிந்து இருந்தது.  முதல் surgery மட்டுமே ,  பத்து மணி நேரங்களுக்கு மேலாக நடந்தது.   வலியின் மிகுதியில் சத்தம் கொடுத்துக் கொண்டு  இருந்தவரை  பார்க்கும் போது, பாவமாக இருந்தது.
ஆதரவுடன் கரம் பற்றி, "அங்கிள், ரொம்ப வலிக்குதா?" என்று கேட்டேன்.
 அவர் ஒரு புன்னைகையுடன் எங்களை பார்த்து,  "இல்லைம்மா. வலிக்கல. சும்மாவே இருக்கோமே என்று அப்போ அப்போ கொஞ்சம் சவுண்ட் விட்டு கொண்டு இருக்கேன்,"  என அந்த நேரத்திலேயும்  அவர் சிரித்துக் கொண்டே சொன்ன போது, அவருடன்  சேர்ந்து எல்லோரும் சிரித்தோம்.


முயற்சி திருவினையாக்கும்: 

ஒரு நண்பரின் மனைவி, கடலை மாவில் ஏதோ இனிப்பு செய்து (முயற்சி செய்து!!!!) கொண்டு இருந்தார்.  அவரிடம்,  "என்ன ஸ்வீட் செய்யப் போறீங்க?" என்று நான் கேட்டதும்,
எந்த வித பதட்டமும் இல்லாமல்,  "சித்ரா, நான் இப்போவே பெயர் வைக்கப் போறதில்லை.... கூழ் மாதிரி வந்தா,  பேசன் (besan = கடலை மாவு) கீர் ;  இளக்கமாக வந்தால், பேசன்  பர்பி;  கட்டியாகிப் போச்சுனா, மைசூர் பாக்.  அதையும் மீறி, கல்லு மாதிரி  ஆகி விட்டது என்றால்,  இருக்கவே இருக்கு எங்கள் வீட்டுக் குப்பை கூடை.  எந்த ஸ்டேஜ்ல வரப் போவுது தெரியாம கிண்டிக் கிட்டு இருக்கேன். கொஞ்சம் பொறுங்க."
(கடைசியில்,  மைசூர் பாக்குக்கும் கல்லுக்கும் இடைப்பட்ட ஒரு புது பக்குவம் வந்தது என்பது வேற விஷயம்! எண்ணிப் பார்த்துட்டேன். என் பற்களின் எண்ணிக்கை குறையவில்லை.  தப்பிச்சேன்டா, சாமி! அந்த இனிப்புக்கு, நாங்க வைத்திருக்கிற பெயர்:  "கல்"லூர்  பாக் )


"பால்" சோறு:

 பார்டிக்காக உணவு தயாரித்து கொண்டு இருந்த தோழிக்கு உதவியாக அவளது அம்மாவும் நானும் இருந்தோம். அப்பொழுது அங்கே தன் குழந்தைக்கு சோறு ஊட்ட வந்த இன்னொரு தோழி,  சூடான சாதம் எடுத்து தட்டில் போட்டு விட்டு,  fridge உள்ளே இருந்த கிண்ணத்தில் இருந்ததை எடுத்து சாதத்தில் ஊற்றிய பின் தான்,  தான் எடுத்தது தயிர் இல்லை,  மீதியான தோசை மாவு என்று தெரிந்து கொண்டாள்.  அப்பொழுது தோழியின் அம்மா, " என்னம்மா இது?  தோசை மாவுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கே?" என்று கேட்டார்கள்.    இவள்  முகம் கோணாமல் - சளைக்காமல் - சட்டென்று, " ஆன்ட்டி,  நான் வெளுத்ததெல்லாம் தயிர் என்று நினைக்கிற நல்ல மனசு உள்ளவ. வித்தியாசம் தெரியல," என்று பதில் சொன்னதும் எல்லோரும் சிரித்து விட்டோம்.

சுவாசத்தில் கலப்பாயே: 

என் அமெரிக்க தோழி ஒருத்திக்கு  கொஞ்சம் depression .  ஒரு
change of place க்காக எங்கள் வீட்டுக்கு வந்த பொழுது,   Jaya Max இல் சில பாடல்களை, அவளுடன்  சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தேன்.   தொடர்ந்து வந்த மூன்று பாடல்களில்,   ஹீரோ ஆசையுடன் முத்தமிட நெருங்குவதும், ஹீரோயின் மேடம் முகத்தை திருப்பி கொண்டு விலகி விடுவதுமான வழக்கமான சீன்கள்.  அதை கவனித்த தோழி, "ஹீரோக்கள்  முத்தமிட வரும் முன் , வாய் துர்நாற்றத்துக்கு ஏதாவது செய்து இருக்கலாம்.  ஹீரோயின்கள்   சகிக்க முடியாமல் எப்படி டீசன்ட் ஆக  விலகி விலகி போகிறார்கள்," என்று சொன்ன பிறகு தான், ஒரே விஷயம், அடுத்தவர் பார்வையில் -  வேறு அர்த்தத்தில் -  எப்படி எல்லாம் தெரிகிறது  என்று நினைத்து சிரித்தேன். அவளுடைய depression நேரத்தில், எப்படி பேசுவது - எதை பற்றி பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் அது வரை இருந்த இரண்டு பேரும்,  அதன் பின் பல விஷயங்களை பற்றி பேச ஆரம்பிக்கவும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது. 


காதல் அணுக்கள் - neutron- electron: 

நண்பர் ஒருவர்,  ஒரு மாதமாக  சரியாக சாப்பிடாமல் - தூங்காமல் - இரவு பகல் - சனி ஞாயிறு - என்று ஒரு  Human Health  research project இல் மூழ்கி, அவரது லேப் வேலையே  (lab work ) கதி என்று இருந்தார்.  அதன் பின்னும்  அவர் எதிர்பார்த்து இருந்த ரிசல்ட் வராததால், வெறுத்து போய்விட்டார். மீண்டும்  இப்படி வொர்க் செய்ய  வேண்டுமே என்ற எரிச்சல் வேறு.
வீட்டுக்கு வந்ததும்,  மிகவும் ஆதரவாக அவர் மனைவி, " நீங்கள் கொஞ்சம் நேரம் டிவி பார்த்து கொண்டு, சோபாவில் ரிலாக்ஸ் செய்ங்க.   நான் காபி கொண்டு வரேன்," என்றார்.
அந்நேரம்,   நமீதா பாடல் ஒன்று தமிழ் சேனலில் ...... கோபமும் எரிச்சலுமாய் வந்து எங்களோடு  உட்கார்ந்தவர், நமீதாவை பார்த்து விட்டு சத்தம் போட்டு சிரித்தார்.
"செல்களை (cells)  மொத்தமாக பார்த்தால், ரிலாக்ஸ் ஆகிறது.  அதே,   ஒற்றை ஒற்றை செல்லாய் பார்த்து cell research செய்து fail ஆகிவிட்டால்,  stress அதிகம் ஆகி விடுகிறது," என்று சொல்லி சிரித்தார்.


"Laughing faces do not mean that there is absence of sorrow;  but it means that they have the ability to deal with it." ....... William Shakespeare. 
 A great sense of humor can make the dull moments, brighter.  


80 comments:

Unknown said...

நீண்ட நாட்களாக ஆளைக் காணுமேன்னு பாத்தா ஊர் சுற்றுகிறீர்கள்..

அடிக்கடி வந்து போங்க.. இங்க வெட்டி பேச்சுக்கு ஆள் குறையுது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

சித்ராவை நீண்ட நாள் கழித்து பார்ப்பதில் மகிழ்ச்சி

butterfly Surya said...

Welcome back..

நல்லாயிருக்கு..

நட்புடன் ஜமால் said...

மற்றவர்களின் மேல் தங்களின் கவலைகளின் தாக்கம் விழாமல் வைக்க]]

ரொம்ப முக்கியமான விடயம்

Anonymous said...

மீண்டும் வரவேற்கிறேன் சித்ரா.. கலக்க ஆரம்பிங்க..

நாடோடி said...

Welcome back,.

அந்த ‌"க‌ல்"லூர் பாக்குக்கு ரோடு ரோல‌ர் தேவைப‌ட‌லியா?.. :)

Hai said...

வழக்கம் போலவே சிரிப்புதான்.

Pavithra Srihari said...

one of the best posts chitra ka ... loved reading it .. read it like 3 4 times ... superb ... andha cell sema semaa

ஹுஸைனம்மா said...

எங்களையும் சிரிக்க வச்சுட்டீங்க!! நன்றி.

Anonymous said...

கலக்கல் சித்ரா :)))
"கல்"லூர் பாக் செம காமெடி!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழக்கம் போலவே சிரிப்புதான்.

அமுதா கிருஷ்ணா said...

ஓ ஊர்சுத்துவதால் தான் ஆளை காணோமா..பதிவு வழக்கம் போல் கலக்கல்...

dheva said...

சிரிப்பு... ஒரு உன்னத மருந்து...! வாழ்வினி பக்கங்களை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சுமமே......

எல்லா துன்பமான நேரங்களையும் ஒரு நகைச்சுவை எளிதாக வென்றுவிடும்.....! நகைச்சுவையாய் போற போக்கில் இது ஒரு பெரிய மேட்டர் இல்லப்பா என்று நல்ல கருத்தை விதைத்து சென்றிருக்கும் சித்ராவிற்கு நமஸ்காரங்கள்....!

லீவு இருந்தாலும் அடிக்கடி பதிவு போடுங்க..சித்ரா...ur site is Happy site.. i can say that...>!

சௌந்தர் said...

நல்ல சிரிப்பு வருது.. இப்படி போகும் இடம் எல்லாம் சிரித்து கொண்டு எங்களை மறந்து விடாதீர்கள்

சாந்தி மாரியப்பன் said...

செம ஸ்வீட் கல்லூர்பாக். ஹா..ஹா..ஹா.

Jey said...

kalakkal cocktail

Asiya Omar said...

சோகம் என்றாலும் சிரிப்பு இங்க இல்லபா சிரிப்போ சிரிப்பு.

ISR Selvakumar said...

என் தங்கை மீண்டும் வந்துவிட்டாள்... அவள் நண்பர்களும், அவளைப் போலவே எளிதாக வாழ்வை அணுகுவதைக் கண்டு வியக்கிறேன்.

Ramesh said...

சரியா கலந்த காக்டெயில் மேட்டர்ஸா இருக்கே...ரொம்ப நல்லா இருக்குங்க...நீங்களும் இதுக்கு ஒரு டைட்டில் வெச்சி...தொடர்ந்து எழுதினா என்ன...(வாரம் ஒரு முறை அல்லது இரு முறை என்ற கணக்கில்).

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

welcome madam

ரசிகன் said...

எல்லா நிகழ்ச்சிகளும் ரசிக்கும் படியா இருந்துச்சு:))

Anonymous said...

veluthadhu ellam paalu sariyana commedy chitra....

ராம்ஜி_யாஹூ said...

wcb, nice

ராம்ஜி_யாஹூ said...

wcb, nice

அமைதி அப்பா said...

சோகத்திலும் சிரிப்பு நன்று.

சசிகுமார் said...

//மீண்டும், பழையபடி பதிவுலகம் பக்கம் உலா வர சிறிது நாட்கள் ஆகும் போல தெரிகிறது.//

இந்த டெம்ப்ளேட் மாற்றியதில் இருந்து தான் இது போல் நடக்கிறது, இந்த டேம்ப்லேட்க்கு ராசி இல்லை அக்கா மாத்திடுங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)) எல்லா இடத்துலயும் இசை இருக்குன்னு ஜோக் வருமே அதுபோல சிரிப்பையும் பாக்கறீங்க.

"உழவன்" "Uzhavan" said...

சொன்னது வள்ளூவனாச்சே... எபோதுமே நகைச்சுவை உணர்வோடு இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் :-)

Vidhya Chandrasekaran said...

Best medicine:)

hamaragana said...

அன்புடன் வணக்கம் சிரிப்பு மிக நன்று..

Anonymous said...

ரொம்பநாளா ஆளைக்காணோமேன்னு பாத்தேன்

ஆடுமாடு said...

ரசித்தேன்.

சுசி said...

வந்ததுமே என் ஆய்ளை கூட்டி விட்டிங்க சித்ரா.. சிரிக்க வச்சு :))

நசரேயன் said...

//அடிக்கடி வந்து போங்க.. இங்க வெட்டிபேச்சுக்கு ஆள் குறையுது..//

ஆமா ...ஆமா

ராஜவம்சம் said...

நிகழ்வுகள் எல்லாம் (சோகத்திலும் கூட)
ரசிக்கும்படியாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

செல்வா said...

//அவர் ஒரு புன்னைகையுடன் எங்களை பார்த்து, "இல்லைம்மா. வலிக்கல. சும்மாவே இருக்கோமே என்று அப்போ அப்போ கொஞ்சம் சவுண்ட் விட்டு கொண்டு இருக்கேன்," ///
ஐயோ .. என்னாலையும் சிரிப்பா அடக்க முடியல ..?

அன்பரசன் said...

:):):)
பதிவின் தலைப்பை பாருங்க.

Unknown said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

Jerry Eshananda said...

கலாட்டா களை கட்டுது.

Menaga Sathia said...

எல்லோரையும் சிரிக்க வைச்சுட்டீங்க..நீண்டநாள் கழித்து பதிவு போடுவதில் மகிழ்ச்சி...

Prathap Kumar S. said...

நம்மைச்சுற்றியே பல காமெடிகள் நடக்கிறது. வாழ்க்கையே டிராஜிடியா பாரக்காம காமெடியா பார்த்து வாழ கத்துக்கனும்...:))

கண்ணா.. said...

சோக சிரிப்பை நல்லாவே எழுதிருக்கீங்க :)))

அப்புறம் எந்திரன் பர்ஸ்ட் டே தானே??!

சிங்கக்குட்டி said...

கலக்குங்க சித்ரா, அருமையான இடுகை :-)

பி.கு:- " ‌"க‌ல்" ஏம்மா ஏன், வேற பெயர் வைக்க கூடாதா? நல்ல வேலை "கள்" என்று வைக்கவில்லையே :-)

மாதேவி said...

எனக்கும் நீண்ட நாட்களின் பின் சற்று நேரம்கிடைத்தது சிரித்தேன்.

எப்பூடி.. said...

பதிவு எப்போதும்போல சூப்பர், அதெல்லாம் இருக்கட்டும் எந்திரனை வரவேற்க தயாராகிவிட்டீர்களா ? .

Gayathri said...

ஹா ஹா அடிக்கடி எழுதுங்க அக்க ....

வருண் said...

***தான் எடுத்தது தயிர் இல்லை, மீதியான தோசை மாவு என்று தெரிந்து கொண்டாள். ***

In practice, this is harder than figuring out "salt" or "sugar" (You could get few crystals and taste it). I believe labeling them is not a bad idea, (like labeling chemicals). Also, while cooking, some people I know, wear goggles just like chemists do in lab, in order to avoid hot oil spills into your eyes (while adding e.g. curry leaves or kaduku uLunthu in boiling/hot oil) . Seriously, cooking is not much different from working in a chemistry lab. If you are not careful, you can set your kitchen in fire and, also you can explode your pressure cooker if the safety valve is too old or your "weight" got stuck or got clogged for some reason. I know people have met with pretty dangerous accidents with the pressure cooker cooking!

அம்பிகா said...

நல்ல கலகல பதிவு.
அதிலும் அந்த பெரியவரின் நகைச்சுவை.... சான்ஸே இல்லை.

ReeR said...

வெட்டிப் பேச்சுல உங்கள முந்த முடியாது...

கலக்குறிங்க போங்க ....
========================
மன்னிக்கவும்...

வெட்டிப் பேச்சு சித்ரா -நீங்கள், எங்களது வம்புச் சண்டையில் பதியப்பட்டுள்ளீர்.

பார்வைக்கு

http://forum.padukai.com/post8629.html#p8629



உங்களுக்கு எதிர் பதமாய் தோன்றினால் ...

எங்கள் வலையில் பின்னுட்டம் விடவும்

இவன்
படுகை.காம்

ReeR said...

"Laughing faces do not mean that there is absence of sorrow; but it means that they have the ability to deal with it." ....... William Shakespeare.

சிரிப்பிற்குள் மறைந்திருக்கும் மனக்குறை/கவலை என்னவோ?

1 2 3 எண்ணிப் பாருங்க முடியலையா,

விடுங்க

நம்ம பாளையங்கோட்டை ஜெயில்ல ஆள் குறையுதாம்ம்ம்ம்


சிரிங்கப்பா....

அக்கா மூட் அவுட்ல இருக்காம்ல....

புலவன் புலிகேசி said...

marakama adikadi eluthunga chitra

அருண் பிரசாத் said...

உங்கள் சேவை பதிவுலகத்துக்கு தேவை. சீக்கிரம் வாங்க

Unknown said...

//அடிக்கடி வந்து போங்க.. இங்க வெட்டிபேச்சுக்கு ஆள் குறையுது..//

ஆமா ...ஆமா//

Yes yes

தெய்வசுகந்தி said...

welcome back chitra!! நான் சிரிச்சுட்டே படிச்சுட்டிருக்கிறேன். என் பொண்ணும், பையனும் எதுக்கு சிரிக்கறீங்கன்னு கேக்கறாங்க!! எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆஹா.. வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க..

நா எப்போ வருவேன்..எப்டி வருவேன்.. யாருக்கு தெரியாது.. ஆனா கரெக்டா வரவேண்டிய நேரத்துக்கு வரவேண்டிய இடத்துக்கு கரெக்டா வந்துடுவேன்..

ஹா ஹா ஹா ஹா..

மின்மினி RS said...

அன்புள்ள சித்ராக்கா.. எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளாச்சி.. கொஞ்ச நாளா ஆளே காணோம்.. மறுபடியும் வந்தாச்சா.. வாங்க வாங்க.. வந்ததுமே அசத்திட்டீங்க..

சோகமா இருக்கக்கூடாதென்று எல்லோரையும் கலகலக்க வைக்கிறீங்களே.. உங்களுக்கு பெரிய மனசு..

பவள சங்கரி said...

தலைப்பே சூப்பர். ரொம்ப practical ஆ இருக்கீங்க .

Unknown said...

ஹா..ஹா..ஹா.

pichaikaaran said...

வாய் விட்டு சிரித்தேன் . இடுக்கண் வந்ததால் அல்ல . வெட்டிபேச்சு பதிவின் நகைச்சுவையால் . அடிக்கடி பதிவிடுங்கள் . பதிவிட மேட்டர் கிடைக்காத நாட்களில் மற்ற வேலைகளை கவனியுங்கள்

Anonymous said...

இன்று செம வெரையிட்டியான விருந்து சமைச்சு போட்டுட்டீங்க..

ஸ்ரீராம். said...

தனது துன்பங்களை நகைச்சுவையுடன் அணுகுவது நல்ல நடைமுறை... சில சமயம் உடனே முடியா விட்டாலும் சில நாட்கள் கழித்து நினைத்துப் பார்க்கும்போது அவை சிரிப்பான கணங்களாக மாறியிருக்கும். பகையான கணங்கள் கூட நகையான கணங்களாக மாறியிருக்கும்.

Mahi_Granny said...

தொடர்ந்து (கொஞ்சம் இல்லை) நிறைய பேச மேட்டர் சேர்த்து வைச்சு இருக்கீங்க போல . சீக்கிரம் வாங்க

Thenammai Lakshmanan said...

"Laughing faces do not mean that there is absence of sorrow; but it means that they have the ability to deal with it." ....... William Shakespeare.
A great sense of humor can make the dull moments, brighter.
//
நைஸ் வேர்ட்ஸ்.. தாங்ஸ்டா சித்து

ஜெய்லானி said...

@@@ சசிகுமார்--//மீண்டும், பழையபடி பதிவுலகம் பக்கம் உலா வர சிறிது நாட்கள் ஆகும் போல தெரிகிறது.//

இந்த டெம்ப்ளேட் மாற்றியதில் இருந்து தான் இது போல் நடக்கிறது, இந்த டேம்ப்லேட்க்கு ராசி இல்லை அக்கா மாத்திடுங்க //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

சத்ரியன் said...

// " ஆன்ட்டி, நான் வெளுத்ததெல்லாம் தயிர் என்று நினைக்கிற நல்ல மனசு உள்ளவ. //

சித்ராக்கா,

நானும் அப்படித்தான் வெளுத்ததெல்லாம் பால்ன்னு......!

Anonymous said...

தமிழ் ப்ளாக் வழியாக ஆங்கில கூகிள் விளம்பரங்கள் வரவைக்கலாம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க கூகிள் வழியா
Free Google Adsense Training In coimbaotre Tamilnadu India
Free Web Design Training In coimbaotre Tamilnadu India
Free SEO Training In coimbaotre Tamilnadu India

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நாளா ஆளைக் காணமுன்னு பார்த்தா நீண்ட பகிர்வுடன்...
புது டெம்ப்ளட் நல்லாயிருக்கு. பதிவைத் தவிர பக்கத்து ஏரியாவில் உள்ள எல்லாம் தெரியலை... கொஞ்சம் பாருங்க.

ராமலக்ஷ்மி said...

//
"Laughing faces do not mean that there is absence of sorrow; but it means that they have the ability to deal with it." ....... William Shakespeare.
A great sense of humor can make the dull moments, brighter. //

உண்மைதான் சித்ரா.

அத்தனை பகிர்வும் அருமை:))!

சிநேகிதன் அக்பர் said...

நல்ல நகைச்சுவை. கவலை மறந்து சிரிக்க வைத்தது.

தாராபுரத்தான் said...

வாம்மா..

Prapa said...

எங்கள பக்கமும் வந்து கொஞ்சம் எட்டி பாருங்க , என்னாத்த வெட்டி முறிக்கிறம் ஏன்னு.... ஹீ ஹீ

Chitra said...

Thank you very much for your nice comments - likes - parinthurais.

பாலா said...

நல்ல பகிர்வு...

செந்தில்குமார் said...

சிரிப்பை நிருத்த முடியவில்லை
கலக்கள் சித்ரா

கண்ணகி said...

சிரிசிரி...சித்ரா...

பத்மா said...

கலக்கல் சித்ரா

Anonymous said...

கலக்கல் பதிவு ..நான் வர லேட் ஆ போச்சு சாரி ..கல்லூர் பாக் சூப்பர் ...உங்க நண்பர்களும் உங்களை போல கலக்கல்ஸ் தான் இல்லே ?

madrasdada@gmail.com said...

விருப்பமும் நேரமும் இருப்பின் படித்துப்பார்க்கவும்
http://madrasdada.blogspot.com/

குந்தவை said...

// நான் இப்போவே பெயர் வைக்கப் போறதில்லை....

எனக்கும் இந்த கொள்கை உண்டு. he..he...

அணில் said...

அன்பும் நகைச்சுவை உணர்வும் இருப்பவரிடம் பேசினாலே போதும் பாதி கவலைகள் ஓடிவிடும். உம்மனா மூஞ்சியை யாருக்குத்தான் பிடிக்கும்.