Tuesday, August 17, 2010

மொழி மொழியாம் பழமொழியாம்

 ஓர் நண்பரின் அப்பா, கலகலப்புக்கு பஞ்சம் இல்லாதவர். பழைய கால விஷயங்களையும் கிண்டல் அடிப்பார்.  இன்றைய நிலவரங்களையும் நன்கு விமர்சிப்பார். அவருடன் பேசும் போது, நேரம் போவதே தெரியாது.

"அரசன் அன்று கொல்வான் - தெய்வம் நின்று கொல்லும்."   - பழைய மொழி.
நேர்மையாய் இருக்கும் அதிகாரிகளைத் தான் தமிழக  அரசு,  இன்று "கொல்கிறது" ..........
'இன்றைய அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா,'  என்ற மக்களின் எண்ணப்போக்கும் காரணமோ?

நியூஸ்:
http://timesofindia.indiatimes.com/city/chennai/IAS-crusader-refuses-to-give-up-fight-against-corrupt-forces/articleshow/6238906.cms

அப்படியே,  பழமொழிகள் பற்றி பேச்சு வந்தது.  அவர், "அந்த காலத்தில, பல சமயங்களில் (எல்லா நேரங்களிலும் அல்ல  என்று தெளிவுபடுத்தி கொண்டு) ,    அறிவில் முதிர்ந்தவர்  யோசித்ததை - புரிந்து கொண்டதை  -  அப்படியே பால பாடமாக மற்றவர்கள் மனதில் ஏற்றி விடுவார்கள்.    "ஏன்? எதற்கு?" என்று கேட்க   விடாமல்,   " இப்படி எல்லாம் கேள்வி கேட்டால், சாமி கண்ணை குத்திரும்!" என்று சொல்லி பயமுறுத்தி அடக்கி விடுவார்கள்.  அதற்கும் அடங்கவில்லை என்றால், இருக்கவே இருக்கு "கொள்ளி வாய் பிசாசு" மற்றும் "மல்லிகைப்பூ கேட்கும் மோகினி பேய்," என்றார்.

சில பழமொழிகள் மற்றும் "எதிர்" பழமொழிகள் சுட்டிக் காட்டி,  எப்படியெல்லாம் குழப்பி உள்ளனர் என்று விளக்கினார்.
அவரவர் தங்கள் வசத்திக்கேற்ப - சூழ்நிலைக்கேற்ப - பொருள் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

*   தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
அஞ்சு வயசுல, அண்ணன் தம்பி; பத்து வயசுல, பங்காளி.

*  தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை.
   தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேற.

* அகன்று இருந்தால் நீண்ட உறவு;  கிட்ட இருந்தால் முட்ட பகை.
சொந்தம் உதவுற மாதிரி, பந்தம் இல்லாதவன் உதவுவானா? 

*  நாலடி  என்றாலும் தனக்கு என்று ஒரு இருப்பிடம் இருக்கணும்.
அசை போட்டு விழுங்குவது,  மாடு; அசையாமல் விழுங்குவது,  வீடு.

*  ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை பண்ணு.
வாய்மையே வெல்லும். (Honesty is the best policy)

*  அஞ்சினவனுக்கு யானை; அஞ்சாதவனுக்கு பூனை.
பூனைக்கு மணியை கட்டுவது யார்?

*  புலி, பசித்தாலும் புல்லை தின்னாது.
 பசி வந்தால், பத்தும் பறந்து போம்.

*  வாய் உள்ள பிள்ளை, பிழைக்கும்.
நுணலும் (தவளையும்) தன் வாயால் கெடும்.

*  கடவுள் அமைத்த மேடை.  நாம் அதில் ஆடுகிறோம்.
ஆடத் தெரியாதவள்,  மேடை கோணல் என்றாளாம்.

*  கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.
 பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.

*   நாய் வாலை நிமிர்த்த முடியாது.
 அடிக்க அடிக்க,  அம்மியும் நகரும்.

*  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் நிற்கிறாள்.
ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே.

*  பெண்ணின் மனதையும்  கடலின் ஆழத்தையும்  கண்டது யார்?
ஆழம் தெரியாமல், காலை விடாதே!

* குட்ட குட்ட குனிகிறவன், முட்டாள்.
பொறுத்தார்,  பூமி ஆள்வார்
(அப்போ, முட்டாள் தான் பூமி ஆள்வார்களா? அவ்வ்வ்.......)

எனக்கு, பம்மல் கே சம்பந்தம் படத்தில் வரும் பஞ்ச் வசனம்தான் ஞாபகம் வந்தது: "பழமொழி சொன்னா
ஆராயக்கூடாது. அனுபவிக்கணும்." 

சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனிதன்.


பி.கு.:  மாதவன் சார் அனுப்பியது:  லிஸ்டுல இதுவும் உண்டு..
"ஊக்கமது கைவிடேல் --  முயற்சியுடையார்  இகழ்ச்சியடையார்." and exactly opposite to
"கிட்டாதாயின் வெட்டென மற."91 comments:

LK said...

hahaha super

LK said...

superee

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு.

ஆடுமாடு said...

இப்படி யோசிக்கவே இல்லையே

நல்லாருக்கு.

சங்கவி said...

பழமொழி அனைத்தும் கலக்கல்....

//ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை பண்ணு.//

இது ஆயிரம் பேரிடம் போய் சொல்லி கல்யாணம் செய் என்பது மருவி இப்படி ஓர் பழமொழி உருவாகியதாக தகவல்....

தமிழ் அமுதன் said...

இனிமே ஆராச்சும் பழமொழி சொல்லுவாங்க..?

அருண் பிரசாத் said...

//பழமொழி சொன்னா
ஆராயக்கூடாது. அனுபவிக்கணும்.//

Repeattaeeee....

நாடோடி said...

ப‌ழ‌மொழிக‌ளுக்கு எதிர் ப‌ழ‌மொழிக‌ள் ந‌ல்லா இருக்கு.. :)

கே.ஆர்.பி.செந்தில் said...

எனகென்னமோ நீல வண்ணத்தில் உள்ளவைதான் பிடித்திருக்கிறது..

அண்ணாமலை..!! said...

நல்ல இடுகைங்க!
சூழ்நிலைக்குத் தகந்த மாதிரி தேவையான பழமொழியைக் கைக்கொள்ள வேண்டியதுதான்!
:)

ரமேஷ் said...

ஹஹ்ஹஹ்ஹா..பழமொழி, எதிர்மொழி எல்லாமே சூப்பருங்க...

Madhavan said...

லிஸ்டுல இதுவும் உண்டு..
"ஊக்கமது கைவிடேல் -- முயர்ச்சியுடையார் இகழ்ச்சியடையார்." and exactly opposite to
"கிட்டாதாயின் வெட்டென மாற "

Jaleela Kamal said...

சித்ரா நலமா?

எப்படி இவ்வளவு தத்துவ உறைகள்.

ரொம்ப நல்ல இருக்கு

Anonymous said...

simply superb chitra

ரஹீம் கஸாலி said...

பழமொழிகளின் எதிர் மொழிகள் அருமை. அப்படியே பழமொழிகள் பற்றிய என்னோட பதிவையும் படியுங்கள் சகோதரி.
பழமொழிகளும் புது மொழிகளும்

ரஹீம் கஸாலி said...

பழமொழிகளின் எதிர் மொழிகள் அருமை. அப்படியே பழமொழிகள் பற்றிய என்னோட பதிவையும் படியுங்கள் சகோதரி.
பழமொழிகளும் புது மொழிகளும்

Balaji saravana said...

சூப்பர் சித்ரா!
வழக்கம் போல வித்தியாசமா சிந்தித்து கலக்கிட்டீங்க!
என் பங்குக்கு,
"கழுதையானாலும் காலைப்பிடி"
"மதியாதார் தலைவாசல் மிதியாதே"

சேட்டைக்காரன் said...

நல்ல தொகுப்பு!

பம்மல் சம்பந்தத்தில் கமல் சொன்ன "பழமொழி சொன்னா அனுபவிக்கணும்; ஆராயக்கூடாது,’ என்பதே இன்னும் கொஞ்ச நாட்களில் பழமொழியாகி விடும்!

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்! அப்படீன்னா முயற்சியில்லார் இகழ்ச்சி திருவான்மியூரா? :-))

ஈரோடு கதிர் said...

சுவாரசியமான பகிர்வு


||ஈவது மறவேல்.
ஏற்பது இகழ்ச்சி||

இது பழமொழியா!!??

வானம்பாடிகள் said...

//ஈவது மறவேல்//

ஈவது விலக்கேல்:)

அமைதிச்சாரல் said...

சூப்பர்ப்பா..

ஜெய்லானி said...

//"பழமொழி சொன்னா
ஆராயக்கூடாது. அனுபவிக்கணும்." //

இதை சொல்லி தப்பிச்சிட்டீங்க . இல்லாட்டி 2001 கேள்வி கேட்டிருப்பேன்..ஹி..ஹி..

ஹுஸைனம்மா said...

நல்ல ஆராய்ச்சி!!

கண்ணா.. said...

//நாய் வாலை நிமிர்த்த முடியாது.
அடிக்க அடிக்க, அம்மியும் நகரும்//

இது டாப்பு.... நல்லா ஆராய்ஞ்சுருக்கீங்க பழமொழியை :))))))))))

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

super

வித்யா said...

:)))

அப்புறம் டெம்ப்ளேட் நல்லாருக்கு சித்ரா.

Saran said...

இங்க போய் கொஞ்சம் பாருங்க...
http://onlyjalli.blogspot.com/2010/08/blog-post_17.html

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு சித்ரா:)!

திகழ் said...

கலக்கல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

Super

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கிட்டாதாயின் வெட்டென மாற//
மற..என வந்திருக்க வேண்டும்..
வழக்கம்போல உங்கள் ஸ்டைலில் கலக்கிட்டீங்க

கும்மாச்சி said...

சித்ரா நல்லாத்தான் கலக்குறீங்க, நல்ல பார்ம்ல இருக்கீங்க போல.

senthil1426 said...

சூழ்நிலைக்குத் தகந்த மாதிரி தேவையான பழமொழியைக் கைக்கொள்ள வேண்டியதுதான்

senthil1426 said...

சூழ்நிலைக்குத் தகந்த மாதிரி தேவையான பழமொழியைக் கைக்கொள்ள வேண்டியதுதான்

ப.செல்வக்குமார் said...

சரி சரி ..
பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.
ஆனா இங்க அதைத்தானே செஞ்சிருக்கீங்க ..

பதிவுலகில் பாபு said...

நாம எல்லா பழமொழிகளையும் முன்னயே கேட்டிருந்தாலும்..பழமொழி.. அதுக்கு எதிர் பழமொழின்னு போட்டிருக்கறது ரொம்ப நல்லா இருக்கு..

ரசிக்கும்படியான பதிவு..

வெறும்பய said...

//பழமொழி சொன்னா
ஆராயக்கூடாது. அனுபவிக்கணும்.//

Repeattaeeee...

அரைகிறுக்கன் said...

இது வெட்டிப் பேச்சா தெரியலையே. ரொம்ப யோசனை பண்ணுன மாதிரி தெரியுது.

சசிகுமார் said...

அருமை அக்கா வழக்கம் போல கலக்கல்.

நட்புடன் ஜமால் said...

தத்துவ உளறல் - இரண்டுமே ஒன்று தானே (எப்பூடி)

Gayathri said...

suuuuuuuuuuuuuuuuupper...

Anonymous said...

//"பழமொழி சொன்னா
ஆராயக்கூடாது. அனுபவிக்கணும்."//

:) அதானே

VELU.G said...

நல்ல சிந்தனையான பகிர்வு

ஸாதிகா said...

சிரித்து ரசித்தேன்.

ப்ரின்ஸ் said...

இருபுறம் கருக்குள்ள பட்டயமா !! ...nice

Jay said...

Thanks for sharing dear..good job..!

என்னது நானு யாரா? said...

அம்மாடி! என்னமா ஆராயிச்சி செஞ்சு எழுதி இருக்கீங்க. Really Superb! உங்களுக்கு பழமொழி பொன்னம்மான்னு பட்டம் தர்றேன். மறுக்காம ஏத்துக்கோங்க.

புதுசா கடை திறந்திருக்கேங்க. சரக்கெல்லாம் எப்படி இருக்குன்னு பாக்க அழைக்கிறேன். கட்டாயம் வாங்க!

எட்வின் said...

ஓஹோ! பெருசுங்க இப்பிடி தான் மாத்தி மாதி திட்டிக்குவாங்க போல இருக்கு அந்த காலத்தில. நல்ல பகிர்வு

தெய்வசுகந்தி said...

super chitra!!!!!!

GEETHA ACHAL said...

ஆஹா...அருமையான ஒப்பீடு...ஒவ்வொரு பழமொழிக்கும் அப்படியே oppositeஆக இன்னொரு பழமொழி...சூழ்நிலைக்கு ஏற்றாவாறு சொல்லிக்க வேண்டியது தான்....சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...

பிரவின்குமார் said...

அனைத்தும் அருமையாக இருந்தது... நல்ல பகிர்வு.. நானும் இப்படிதான் ஒருநாள் யோசித்து பழமொழிகளையும் வலைமொழிகளையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போட்டுள்ளேன்... அவசியம் எப்படியிருக்குனு படித்து சொல்லுங்க.. மேடம்... ”கனிமொழியும், கணினிமொழியும் - ஓர் ஒப்பீடு”
http://dpraveen03.blogspot.com/2010/08/blog-post.html

Mrs.Menagasathia said...

very nice chitra!!

சிங்கக்குட்டி said...

அருமை, கலக்கலான இடுகை.

ஹி ஹி ஹி எப்படித்தான் யோசிக்கிரீங்களோ!.

உங்களுக்கு ஒரு தொடர் பதிவு அழைப்பு http://singakkutti.blogspot.com/2010/08/blog-post_18.html

நீங்கள் இன்னும் அந்த தொடரை எழுத வில்லை என்றால் நேரம் கிடைக்கும் போது எழுதவும்.

malgudi said...

உடன்பாடு-முரண்பாடு பழமொழிகள் சூப்பர்.

நசரேயன் said...

நல்ல ஆராய்ச்சி

Riyas said...

soooper...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

superungo

Ananthi said...

ஆஹா.. எவ்ளோ பெரிய விஷயம்.. எளிமையா சொல்ல்லிட்டீங்க...
///* குட்ட குட்ட குனிகிறவன், முட்டாள்.

பொறுத்தார், பூமி ஆள்வார்
(அப்போ, முட்டாள் தான் பூமி ஆள்வார்களா? அவ்வ்வ்.......)///

நல்ல கேள்வி தான்...
குட்ட குட்ட குனிவது... முட்டாள் தனமா எடுத்துக்க வேண்டாமே..
எதிர்க்கும் வலிமை இல்லாதவன் கூட குனியலாம்...

சுசி said...

//"பழமொழி சொன்னாஆராயக்கூடாது. அனுபவிக்கணும்." //

இதுவே ஒரு பழமொழியா மாறிடும்.. எதிர் காலத்துல.

அஹமது இர்ஷாத் said...

சூப்ப‌ருங்க‌ சித்ரா..ந‌ல்ல‌ ப‌திவு

Priya said...

சூப்பர் சித்ரா!

dineshkumar said...

வணக்கம் சித்ரா
பழமொழிகளின் பலவிதம் ரொம்ப ரசித்தேன்
http://marumlogam.blogspot.com

asiya omar said...

யோசிக்க வைத்து விட்டது எதிர்மொழி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அடேங்கப்பா.. எத்தன பழமொழிகள்.. ஆஹா.. அருமை அருமை.

கலாநேசன் said...

நல்லாருக்கு.

ஸ்ரீராம். said...

ஹா...ஹா... என் பங்குக்கு ரெண்டு...!


The pen is mightier than the sword....

Action speaks louder than words...

==========

Many hands make the work lighter

toomany cooks spoil the broth...

தாராபுரத்தான் said...

பழம்...மொழிகள்..

சௌந்தர் said...

எதிர் மொழி நல்ல இருக்கு அப்போ பழமொழி எல்லாம் பொய்யா?...

வேலன். said...

நல்ல தொகுப்பு...

வாழ்க வளமுடன்,
வேலன்.

ஜெரி ஈசானந்தன். said...

// ."ஊக்கமது கைவிடேல் //
டாஸ்மாக் விளம்பரத்துக்கு இதை பயன்படுத்தலாமே.நல்லாருக்குல

Bala said...

என்னமோ தெரியல, பழமொழின்னு கேட்டாலே நடிகை "காந்திமதி" அக்காதான் ஞாபகத்துக்கு வராங்க... :))))))))

மனோ சாமிநாதன் said...

பழமொழிகள், எதிர்மொழிகள் எல்லாமே அருமை!!

கமலேஷ் said...

இன்னைக்கி உங்க கையில பழமொழி சிக்கிட்டா?/
எல்லாமே நியாயமான கேள்விதான் சகோதரி. நம்மள ரொம்பதான் குழப்புறாங்க...

///எனக்கு, பம்மல் கே சம்பந்தம் படத்தில் வரும் பஞ்ச் வசனம்தான் ஞாபகம் வந்தது
: "பழமொழி சொன்னாஆராயக்கூடாது. அனுபவிக்கணும்." ///

தலைவர் படத்தை தப்பா சொல்றீங்கன்னு நினைக்கிறன். அந்த வசனம் " வசூல்ராஜா M .B .B .S "என்பதாய் ஞாபகம்

Madhavan said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

கிட்டாதாயின் வெட்டென மாற//
மற..என வந்திருக்க வேண்டும்..

வழக்கம்போல உங்கள் ஸ்டைலில் கலக்கிட்டீங்க//

'மற' என்பது 'மாற' என வந்துவிட்டது.

நன்றி Sathish kumar.

செந்தில்குமார் said...

கல்வெட்டுகளில் பதிக்க வேண்டியவை
இந்த பழமொழிகள் சித்ரா

நல்ல தொகுப்பு

Anonymous said...

பழமொழி சொன்னா அனுபவிப்பாங்க..
நீங்க ஆராய்ச்சியே பண்ணிட்டீங்க..
நல்லா இருக்கு.

கண்ணகி said...

"பழமொழி சொன்னா
ஆராயக்கூடாது. அனுபவிக்கணும்.

ஹா..ஹா...அனுபவிச்சுட்டோம்..

ரசிகன் said...

சூழ்நிலைக்கேற்ப பழமொழிகள். தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்குத்தான்.நல்லாயிருக்குங்க:)

சே.குமார் said...

ம்ம்ம்... தனியா அறை போட்டு யோசிப்பீங்களோ..?
பழமொழிகள் அதற்கு எதி பழமொழிகள் எல்லாம் அருமை.

எப்பூடி.. said...

இப்பெல்லாம் எதிர்வினை ப்ளாக்கில ரொம்ப கூடிப்போச்சு, நீங்க பழமொழிக்கே எதிர்வினையா? சூப்பர் :-)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

: "பழமொழி சொன்னா
ஆராயக்கூடாது. அனுபவிக்கணும்." //

இதுதான் சூப்பர்ப் சித்து..

Anonymous said...

lol... Interesting... :-)

ரிஷபன் said...

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்; ஆராயக்கூடாது
யார் சொன்னது? ஆராய்ஞ்சதாலதான் இவ்வளவு கிடைச்சிது..

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

சூப்பர்.இந்த பழமொழி பார்த்தீங்களா?
’ஙப் போல் வளை!!’

அதென்ன ’ஙப் போல் வளை!!
தமிழில எவ்வளவு வளைசலா..ஒடிசலா..ஞ..ஓ..இ..
எல்லாம் இருக்கு?
அதை கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்க, சித்ரா!!

ஆர்.ஆர்.ஆர்.

அமைதி அப்பா said...

இனி பழமொழி யார் சொன்னாலும்,
அதற்கு எதிர் மொழி என்னன்னு, யோசிக்க வச்சிட்டீங்க மேடம்.

ஒ.நூருல் அமீன் said...

முரண்களின் சங்கமமாய் ஒரு வித்தியாசமான சரம் தொடுத்துள்ளீர்கள் சகோதரி!

பத்மா said...

அருமை சித்ரா ..நீரும் நெருப்பும் தேவை தானே

Chitra said...

Thank you everyone for your wonderful support!

Anonymous said...

நல்ல கலெக்சன் :)))

Yoganathan.N said...

"To every action there is always an equal and opposite reaction"

அது மாதிரி ஆகிவிட்டது நம் முன்னோர்களின் பழமொழிகள். :)

சேலம் தேவா said...

நீங்கதான்க்கா பழமொழிய பத்திசூப்பரா எழுதியிருக்கீங்க!!