ஒரு வழியாக, கிடுகிடு ......வெடவெட..... குளிர் - வெண்பனி எல்லாம் குறைந்து, வசந்த காலம் எங்க கிரமாத்தில எட்டி பார்க்க ஆரம்பிச்சிட்டுது.... எங்கே பார்த்தாலும் அழகு அழகா மலர்களும், பறவைகளும் ....... சூப்பரோ சூப்பர்!
எங்க வீட்டு மரங்களில் குறிப்பாக இப்போ நிறைய பறவைகள் கூடு கட்ட ஆரம்பிச்சு இருக்குது....
கார்டினல் எனப்படும் சிவப்பு நிற பறவைகளும், Blue Jay எனப்படும் நீல நிற பறைவகளும் நிறைய பார்க்கிறேன்.
Red Cardinals:
Blue Jays:
நம்ம ஊரு போகி பண்டிகையில் "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்று சொல்லி வீட்டை புது பொலிவுடன் தயார் படுத்துகிற மாதிரி, வசந்தம் வரும் போது, "Spring Cleaning" என்று சொல்லி வீட்டை தயார் படுத்துவாங்க.... ஒன்றரை ஆண்டுகள் முன்னால் தான், இங்கே ஒரு வீட்டை வாங்கி, எங்க கிராமத்து அத்தியாத்தை தொடங்கி விட்டோம். அதனால், நானும் இந்த வருடம் வசந்த கால சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கியாச்சு....
வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலில், ஏதோ குப்பை மாதிரி தெரிய - அதை சுத்தப் படுத்த அருகில் சென்ற பொழுதுதான் தெரிந்தது, அது குப்பை அல்ல - பறவையின் கூடு என்று.
எங்கள் வீட்டு ஜன்னல்:
நல்லவேளை, அவசரப்பட்டு கலைக்காமல் இருந்தேன். ஆர்வ கோளாறில், உள்ளே எட்டி பார்த்தேன். வெள்ளை அல்லது பிரவுன் நிறத்தில், கோழிமுட்டையே பார்த்து பழகியவளுக்கு, இது என்ன புதுசா ஒரு நிறத்துல முட்டை இருக்குதே என்று பார்த்து ஆச்சர்யப்பட்டேன். இது எந்த பறவையின் முட்டையாக இருக்கும் என்று காத்து நின்று கண்டு பிடிச்சேன்.
இந்த புகைப்படத்தை எடுத்தது நானே: சூப்பர் என்று சொல்லுங்கப்பா....!
நான் எதிர்பார்த்த அழகு பறவைகள் எல்லாம் மரங்களில் கூடுகள் கட்டி இருக்க, ஒரு சாதாரண ராபின் என்ற பறவை எங்க வீட்டு ஜன்னலை அழகு படுத்தி இருக்கிறது. சந்தோசம் தாங்கல..... அந்த மகிழ்ச்சியைத்தான் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Robin Bird:
சின்ன வயதில், எங்கள் தாத்தா பாட்டிம்மா வீட்டில் தான் இந்த மாதிரி குருவி கூடுகளை பார்த்த ஞாபகம். இப்போ, எங்க வீட்டிலேயும் ............ சூப்பரோ சூப்பர்! எங்க குட்டீஸ்களும் நாங்களும், மாத்தி மாத்தி, ஜன்னலுக்கு உள்புறம் நின்று கொண்டு அந்த கூட்டை வேடிக்கை பார்ப்பது தான் நல்ல பொழுதுபோக்காக இருக்குது.... பிரவுன் பறவைக்கு ப்ளூ முட்டைகள்..... ஹையா..... Beauty of nature!
தாய்பறவை இரை தேட சென்ற பொழுது, அவசரமாக நான் கிளிக்கியது:
ஆமாம், இந்த மகிழ்ச்சியான நேரத்திலேயும் ஒரு டவுட்டு ...... செல் போன் டவர் வந்து குருவிகளை அழித்து விட்டன என்று சொல்றாங்க..... ஆனால், எங்க ஊரில செல் போன் டவர்ஸ் இருக்கின்றன - குருவிகளும் இருக்கின்றன. பல நிற பறவைகளும் அழகு படுத்துகின்றன. அப்படின்னா, எங்கேயோ லாஜிக் இடிக்குதே.... ஒருவேளை.... கூடு கட்ட இடம் - வீட்டமைப்பு மற்றும் மரங்கள் - இல்லாமல் நகரங்களில் மட்டும் காணாமல் போச்சோ? சரியா சாப்பாடு கிடைக்கலியோ? போக்குவரத்து சப்தங்களிலும் நெரிசல்களிலும் பயந்து தொலைந்து போச்சோ? காகங்கள் மட்டும் எப்படி தப்பி பிழைக்கின்றன - ஐந்து ரூபா "கோழி" பிரியாணி வந்த பின்னும்? ம்ம்ம்ம்ம்ம்.......
House Sparrow:
இன்றைய தேதிக்கு, எங்க கிராமத்துல இன்னும் வசந்தம் இருக்குது..... பறவைகளின் கூடுகள் இருக்கின்றன..... நான் எங்க வீட்டு ராபின் (Robin) குருவி கூட்டை ரசிக்க போறேங்கோ!
நன்றி: பறவைகளின் படங்கள்: கூகிள் அக்கா.