இப்பொழுது தான், ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்து விட்டு, எனக்கு வந்த தொடர் பதிவு அழைப்புகளுக்கு வணக்கம் சொல்லி விட்டு வந்து பார்த்தால், அதற்குள் முகுந்த் அம்மா, இன்னொரு அழைப்புக்கு பத்திரிகை வைத்து விட்டார்கள்.
http://mukundamma.blogspot.com/2010/03/love-in-heathrow.html
பெண் பார்த்த / போன அனுபவத்தை பத்தி எழுதணுமாம்.
பெண் பார்க்கும் படலம் இல்லை. ஆனால். சந்தித்த விதம்:
நெல்லை மண்ணின் மகளாகிய சித்ரா தேவியை எனது மாமன் மகன், பிரவீன் மணப்பதாக பெரியோர்களால் முடிவெடுக்கப்பட்டு இருந்தது. நான் பிரவீனை காதலிக்கவில்லை என்றாலும், வெறுக்கவில்லை.
பிரவீனின் தாயின் வெடுக் பேச்சுக்களும் தீராத வம்புகளும் என் உள்ளத்தை நெருடாமல் இல்லை. பயம் என்று இல்லை - என்றாலும் விருப்பமில்லை.
நம்புங்க. அப்பொழுது, அதிகம் பேசாமலும், அதிர்ந்து பேசாமலும் இருக்க பழகி விட்ட எனக்கு , துணிந்து பேச பக்குவம் இல்லாததால், மனதுக்குள் புழுக்கம். பிரவீனின் நல்ல மனதையும் காயப் படுத்த தோன்றாத என் மனதில், குழப்பங்களுக்கு பஞ்சமில்லை.
உறவினர் ஒருவரின் திருமணம் செல்ல, நெல்லை எக்ஸ்பிரஸ் ஏறி அமர்ந்த அந்த நல்ல நாளில், பிரவீனும் குடும்பத்தினரும் உடன் இருந்தனர். அடுத்து நடக்கவிருக்கும் திருமணமாக, எங்கள் இருவரையும் முன் நிறுத்தி பெரியவர்களின் பேச்சு ஆரம்பித்தது. தமிழ் வார இதழை கையில் வைத்து கொண்டு, படிப்பது போல வெறித்த பார்வையுடன் ஒதுங்கி அமர்ந்தேன். பிரவீன், இதை கவனிக்காமல் இல்லை. எப்பொழுதும் நான் பிடி கொடுக்காமல் பேசுவதில் தயங்கி போய் இருந்தவன், இன்று புரிந்தோ புரியாமலோ அவனும் அமைதியாக ஒதுங்கி அமர்ந்தான். ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தை தாண்டும் போது, தண்ணீர் தருவது போல அருகில் வந்து, "கட்டிக்குவ இல்லியா?" என்றதும், காதில் விழாதது போல தண்ணீர் குடித்து விட்டு முகத்தை திருப்பி கொண்டேன்.
ரயில், சாத்தூர் நிலையத்தில் நின்ற இரண்டு நிமிடங்களில், பரபரப்புடன் இருவர் ஏறி கொண்டனர். தோழமையாய் பிரவீன் அருகில் அமர்ந்து விட்டு, ரயில் சிநேக பார்வையுடன் அறிமுகம் செய்து கொண்டனர். தற்செயலாக, வார இதழில் இருந்து பார்வை விலக்கி, புதிதாக வந்திருந்த இருவர் பக்கமும் செலுத்திய அந்த தருணத்தில் - இருவரில் ஒருவர் , தன் பார்வையை என் பக்கம் எதேச்சையாக திருப்ப --------- சிலிர்த்தது தேகம் மட்டும் இல்லை, உள்ளமும். அருகில் அப்பாவியாய் இருந்த பிரவீனை பார்த்ததும், ஏதோ தவறு செய்வது போல மனம் குறுகுறுத்தது. குனிந்து கொண்டேன்.
கண்களால் தூண்டிலை போட்டவரிடம், என் கயல் விழிகள் மாட்டிகொண்டன. மீண்டும் மீண்டும் சிக்கினேன் - தப்பினேன். இனி அந்த பக்கம் திரும்பவே கூடாது என்று அறிவு உத்தரவிட்டதும், என் மனம் ஏக்கத்துடன் போராடி கொண்டிருந்தது. என் கையில் வைத்து இருந்த வார இதழை, பிரவீன் கேட்க, கொடுக்க நிமிர்ந்தவள், மெல்லிய புன்னகையுடன் அருகில் அமர்ந்து இருந்தவரை நோக்கினேன். "ஹலோ" என்ற ஒலி காதில் விழுந்து, இதய பூட்டுக்களை உடைத்து எறிந்தது. சந்தோஷப் புயல் சூறாவளியாய் உருவெடுக்க, முத்தாய்ப்பாய் பதில் "ஹலோ" சொன்னேன். அதன் பின், இருவரும் பேசவில்லை. தேவையும் இல்லை. ஆனால், நான்கு விழிகளில் நவரச உணர்வுகளும் காதல் மொழியும் வழிந்த வண்ணம் இருந்தன.
அறிந்த வயது முதல் பழகிய ப்ரவீனுடன் எனக்கு இல்லாத தேடல் ஒன்று, ஐந்தே நிமிடங்களில் அறிமுகமான ஒருவரிடம் இருப்பதை கண்டு, என்னை நானே திட்டி கொண்டேன். ஒரு வழியாக, என்னை என் மாமாவே அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இறைவன் எனக்கென்று வைத்திருந்த வரமாய், சாலமன். திடீர் என்று கலகலப்பாக மாறினேன். அனைவரிடமும் பேசினேன், சிரித்தேன். எனக்குள் வந்த மாறுதலை பிரவீன் கவனித்து இருக்க வேண்டும்.
"சித்ரா, இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாள்" என்று உரக்க சொன்னான். வெட்க சிரிப்புதான், என் பதில்.
அந்த வெட்கத்தையும், முதல் முதலாய் அடையாளம் கண்டு கொண்டான்.
இரவு உணவுக்கு பின், வாசல் அருகே நின்று கொண்டு, வேகமாக முகத்தில் அடித்து கொண்டிருந்த காற்றில், என் பயங்களை தொலைத்து கொண்டு, சந்தோஷ வானில் சிறகடித்து - கனவுகள் காண நின்றேன். பிறருக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. அந்த உணர்வுகளை, அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே, அதன் வீரியம் புலப்படும்.
பிரவீன் அருகில் வந்தான். "சித்ரா, உனக்கு சாலமனை ரொம்ப பிடித்து இருக்கிறது. அவருக்கும் உன்னை ரொம்ப பிடித்து இருக்கிறது போல. அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறார்." என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான்.
இப்பொழுது, எனக்கு குற்ற உணர்வு மேலோங்க, "பிரவீன், என்ன சொல்லவென்றே தெரியவில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. உளறாதே" என்றேன்.
"இல்லை சித்ரா. எனக்கு, உன் மேல் வைத்து இருக்கும் அன்பை வெளிக்காட்ட தெரியவில்லை. ஆனால், உன் உணர்வுகள் ஒவ்வொன்றையும் எனக்கு புரிந்து கொண்டே இருக்கும். இன்று உன் முகத்தில் இருக்கும் சந்தோஷம், எனக்கு புதிது. இன்னும் அழகாக தெரிகிறாய். "
என் கண்களில் நீர்த்துளிகள். பிரவீனின் இந்த நல்ல உள்ளத்தையும் அன்பையும் நான் ஏன் இன்று வரை புரிந்து கொள்ள முயலவில்லை? இந்த நொடியில் புரிந்த பின்னும், அவன் மேல் காதல் உணர்வு ஏன் என்னுள் துளிர்க்கவில்லை?
பருவத்தை குறை சொல்வதா? காரணம் தெரியவில்லை.
பிரவீனின் பெரு முயற்சியால், எதிர்த்து கொண்டிருந்த வீட்டு பெரியவர்களின் சம்மதத்துடன், ஆறு மாதங்களுக்கு பின், சாலமன் + சித்ரா திருமணம் நடந்தேறியது. வெறும் ரயில் சிநேகம் என்று இருக்க வேண்டியது, காதல் பயணங்கள் முடிவதில்லை என்று தொடர வருகிறது. பிரவீன், இரண்டு வருடங்களுக்கு பிறகு, தூரத்து உறவான இன்னொரு அத்தை பெண்ணை திருமணம் செய்து கொண்டு நெல்லையிலேயே வளமையுடன் இருக்கிறார்.
பிரவீனை கணவனாக கண்டு கொண்டு நேசிக்க போராடி தோற்று இருக்கிறேன். ஆனால், இன்று ஒரு அண்ணனாய் அடையாளம் கண்டு கொண்டு, பாசத்தால் அவனுடன் உரிமையுடன், இப்பொழுதும் பழக முடிகிறது. பிரவீனை திருமணம் செய்து இருந்தால் கூட, இந்த மரியாதையும் மதிப்பு மிக்க அன்பும் பாசமும் அவர் மேல் வைத்து இருப்பேனா என்பது சந்தேகமே. சில சமயங்களில், உறவு மாறி வரும் போது, ஆழமான அன்பு, அழுத்தமாய் இதயத்தில் கோவில் கட்டி விடுகிறது.
பின் குறிப்பு: இந்த பதிவில் வரும் சித்ரா தேவி நான் தான் என்றும் - சாலமன் , எனது கணவர் சாலமன் தான் என்றும், பிரவீன் எனது மாமன் மகன் தான் என்றும் - நீங்கள் நினைத்து கொண்டு வாசித்து இருந்தால் கம்பெனி பொறுப்பு எடுக்காது. நிச்சயமாக இது எங்கள் காதல் கதை அல்ல. ஏப்ரல் முதல் தேதி என்று நினைவு படுத்தி கொள்கிறேன்.
ஆட்டோ அனுப்புகிறவர்கள், என்னை தொடர் பதிவுக்கு அழைத்தவருக்கு அனுப்புமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள்.
(நன்றி: stills - சுப்ரமணியபுரம் படம்)
114 comments:
எங்களுக்கு ஏற்கனவே காது குத்தி கடுக்கன் போட்டாச்சுல்ல....
அதானே பார்த்தேன்!!!
ரொம்ப சீரியசா போகும்போதே
மைல்டா ஒரு டவுட் வந்திச்சு........
ஆனாலும் ஏமாந்திட்டேன்.
அனுப்பி விட்டேன் முகுந்த அம்மாவுக்கு ஒன்றுக்கு நாலு ஆட்டோவாய்:))!
சான்ஸே இல்ல... நீங்க நீங்கதான்!
என்னமா எழுதி இருக்கிங்க!இல்ல என்னமா ஏமாத்தி இருக்கிங்க.
எனக்கும் கூட இந்த தொடர் பதிவுக்கு அழைப்பு வந்து இருக்கு. உங்களையும் கூப்பிடலான்னு நினைக்கிறேன். அப்போதாவது உண்மையான பெண் பார்த்த கதையை எழுதுங்க, சரியா சித்ரா?
சித்ரா காதல் கதை உண்மையோ பொய்யோ படிக்க சுகமாய் இருக்கிறது .என்னையும் அழைத்திருக்கிறார் .என்னால் எழுத இயலும் என தோணவில்லை.
தக்காளி, மங்கு நீ எப்பவுமே கரெட்ரா?
கடைசீல கதை , திரை கதை , வசனம் , முசிக் பை சித்தரா அப்படின்னு போட்டா இன்னும் பொருத்தமா இருக்கும்
அட இப்படி ஏமாத்திட்டீங்களே...
அம்புட்டும் ரீலா? சரியா போச்சு
கதை, திரைக்கதை, வசனம், டைரக்சன் - சித்ராதேவியா. ரெம்ப சந்தோஷம். அடுத்த படம் எப்போ.
நா ஏமாறல. மீசைல மண் ஒட்டல.
ஏப்ரல் ஃபூல் நாளைக்குத்தானே..
நான் இன்னைக்கே படிச்சிட்டேன்ல..
கம்பேனி பொறுப்பு எடுத்துதான் ஆகணும் !!
நல்லா எழுதி இருக்கீங்க சித்ரா.
கதை நல்லா போச்சி...வில்லன் வரலியேனு பார்த்தேன்..அதான் நீங்களே கதைக்கு வில்லனா மாறிட்டீங்களே..
ரூம் போட்டு யோசிச்சீங்களோ....
அமெரிக்காக்கு ஆட்டோ வராதுங்கற தைரியத்துல என்னெல்லாம் பண்ணுறாங்க....
:))
நல்லாதானே போய்கிட்டு இருந்தது
நானாதான் ஏமாந்துடேன்னா!
(நீங்க ஏமாத்தலை அக்கா)
:)).எல்லாருமே நல்லவைங்களா இருந்தாய்ங்களா. நம்ப முடியலை:))
நம்பமுடியவில்லை...முடியவில்லை... வில்லை..ல்லை..லை...ஐ...
செல்லாது..செல்லாது.....இது உண்மை கதை தான்,"உண்மையை ஒத்துக்கிற வரைக்கும் விடமாட்டோம்....கூட்டுரா பஞ்சாயத்த."
அது சரி இன்னிக்கே கிளம்பிட்டிங்களா. நாளைக்கித்தானே ஏப்ரல் முதல் தேதி.
இருந்தாலும் எல்லோரையும் ஒரு வழி பண்ணிட்டிங்க.
எப்படியெல்லாம் கலாய்க்கறாங்க.
கடைசி வரை உங்களை நம்பிபிபிபிபிபிபி...........இந்த பதிவை படிச்சு கடைசியில.....இப்டி பண்ணீட்டீங்களே...சித்ரா...........கற்பனையா இருந்தாலும்....கதை சூப்பர்!
ஏம்ப்பா எவ்வளவு அருமையான காதல் கதைன்னு நினச்சா இப்படி ஏப்ரல் பூல் ஆக்கிடீங்களே.
எத்தனை ஆட்டோ வரப்போகுதோ, பயம்மா இருக்கு?
ரொம்ப டவுட்டாவே இருந்ந்துச்சு. கடைசில கிளியர் ஆய்டுச்சு. இருந்தாலும் காதல் வார்த்தைகள் சான்ஸே இல்ல.
அடக்கடவுளே ! என்னங்க ட்விஸ்ட் இது.. ! நடுவில், இது கதையாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் வந்தது.. இருப்பினும் உங்களின் எழுத்து நடை அந்த சந்தேகத்தை அமுக்கி போட்டுவிட்டது.. !
அம்மணி நானெல்லாம் ரொம்ப அப்பாவிங்கோ. ஏமாந்துதான் போயிட்டேன்.அதுக்குன்னு ஏப்ரல் பூல்னா
ஒத்துக்க மாட்டேன். எனக்கு எங்கூட்டுல காது குத்தாம உட்டதுக்கு உங்களைப்போல நல்லவிங்க இருக்கும் போது நானெதுக்குங்க கவலைப்
படப்போறேன்
அன்புடன்
சந்துரு
ஸ்ஸ்சப்பா..... இப்போவே கண்ணா கட்டுதே...... என்ன கொடும இது.... ஹ ஹ...
ஏங்க இதுலையுமா உங்க trade marka prove பண்ணனும்... யாராதும் என்ன கொஞ்சம் கைத்தாங்களா அப்டியே கூட்டு போயி ஒரு ஜூஸ் வங்கி குடுங்கப்பா.... முடில... ஹ ஹ....
கதை நல்லாருந்துச்சு.... ஆனா உங்க கதைன்னு நம்பி கடைசி வர ஒரு வரி கூட விடாம படிச்சேன் தெர்யுமா..... இப்புடி பண்ணிட்டீங்களே...
கொஞ்சம் புகையுற மாதிரித் தெரியுதே!!!
ஜெரி ஈசானந்தன். said...
செல்லாது..செல்லாது.....இது உண்மை கதை தான்,"உண்மையை ஒத்துக்கிற வரைக்கும் விடமாட்டோம்....கூட்டுரா பஞ்சாயத்த."
ரிப்பீட்டேய்!!
அம்பூட்டு உண்மையாகவா தோணுது? ....ம்ம்ம்ம்......feelings........ உண்மை தாண்டி வருவாயா? ஹா,ஹா,ஹா.....
அக்காவுக்கு ரெண்டு ஆட்டோ பார்சல்.
சரண்: ண்ணா...நம்ம சித்ரா டீச்சர் உண்மை சொல்றாங்களா?...இல்ல...ஏப்ரல் ஃபூல் செய்யுறாங்களா?
மனசாட்சி:அது தெரியாமத்தான் நானும் குழம்பிகிட்டே இருக்கேன்.
அதானே பார்த்தேன்.. என்னமோ இடிக்குதேன்னு.. எனிவே உங்களுக்கு நல்லாவே எழுத வந்திருச்சு..
தமிழ், இந்தி,ஆங்கில மொழிகளிலே எடுக்க வேண்டிய படம், சாலமன் அண்ணாச்சிட்ட சொல்லி படமா எடுக்க முயற்சி எடுக்கவும்.. காசு வாங்காம டைரக்ட் பண்ணிதாரேன்
//இன்னும் அழகாக தெரிகிறாய்.//
ஹீஹீஹீ இதைப்படிச்சப்புறம் தான் எனக்கு புரிஞ்சுது இது ஒரு டூப்பு கதைன்னு...யார்கிட்ட...
அந்த பிரவீண் கேரக்டரை நாங்க
"அந்த ஏழு நாட்கள்" படத்துலயே பார்த்துட்டோம்...நம்மகிட்டயேவா...???
//கும்மாச்சி said...
அது சரி இன்னிக்கே கிளம்பிட்டிங்களா. நாளைக்கித்தானே ஏப்ரல் முதல் தேதி.//
// தேவன் மாயம் said...
கொஞ்சம் புகையுற மாதிரித் தெரியுதே!!!//
சித்ரா,காதல் கதை உண்மையோ பொய்யோ படிக்க சுகமாய் இருக்கிறது
கடைசி வரிகளை நம்பவும் முடியவில்லை..நம்பாமலும் இருக்க முடியவில்லை. (முதலில் பின்னூட்டங்கள் படித்து விட்டுதான் பதிவைப் படித்தேன்..!)
அடப்பாவமே...இப்படியா எங்களை ஏமத்துவது...விருவிருப்பாக படித்து கொண்டு இருந்தேனே...சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...
சில சமயங்களில், உறவு மாறி வரும் போது, ஆழமான அன்பு, அழுத்தமாய் இதயத்தில் கோவில் கட்டி விடுகிறது. //
சத்தியமான வார்த்தைகள்
நான் சத்தியமா உண்மை கதைனு நினைச்சேன்.....
ஆனா ரயில் லவ்ஸ் கொஞ்சம் ஓவர்ஆ பீல்
பண்ணும் போது கூட கேஸ் பண்ணல.....
முதல்லயே தெரிஞ்சுடுச்சி சித்ரா இல்லைன்னு
ஒரே சந்திப்பில் காதலா சித்ராவுக்கா?
நாளைக்குத்தானே ஒன்னு அம்புட்டு அவசரமா?
யப்பா நல்லாத்தான் கலாய்க்கிறீங்க சித்ரா அக்கா.
அம்புட்டும் உண்மைன்னு நினைச்சேன் அட சித்து ஏமாத்திபிட்டியா நான் ஏமாறல ஏமாறல ஏமாறல...:)))
:))
கற்பனையா இருந்தாலும்....கதை சூப்பர்!
////நான் சத்தியமா உண்மை கதைனு நினைச்சேன்.....
ஆனா ரயில் லவ்ஸ் கொஞ்சம் ஓவர்ஆ பீல்
பண்ணும் போது கூட கேஸ் பண்ணல.....////
...ஜெட்லி, நான் நல்லா ரீல் விடுறேன். அடுத்து "மண்ணை தாண்டி வருவாயா" டைரக்ட் பண்ண அழைப்பு வந்திருக்கு.
ஏன் இந்தக் கொலைவெறி
//இன்னும் அழகாக தெரிகிறாய்.//
ஹீஹீஹீ இதைப்படிச்சப்புறம் தான் எனக்கு புரிஞ்சுது இது ஒரு டூப்பு கதைன்னு...யார்கிட்ட...
........பிரதாப், ரீல் விடும் போது, ஒண்ணு ரெண்டு சேத்து சுத்துறதுதான். ஹி,ஹி,ஹி,ஹி.....
அம்புட்டும் உண்மைன்னு நினைச்சேன் அட சித்து ஏமாத்திபிட்டியா நான் ஏமாறல ஏமாறல ஏமாறல...:)))
........தேன் அக்கா, நீங்க ஏமாறலை என்று நானும் "நம்பிட்டேன்"....... ஹா,ஹா,ஹா,ஹா.....
சித்ரா பேசாமல் கதாசிரியராக போலாம்,நம்பவும் முடியலை,நம்பாமல் இருக்கவும் முடியலை.
நம்புற மாதிரி இருக்குல. என் உண்மை கதையை விட, எனக்கே இது பிடிச்சு இருந்துதுனா பாத்துக்கோங்க....... ஹா,ஹா,ஹா,ஹா.....
சொல்லுங்க சித்ரா.........உண்மையும் பொய்மையும் கலந்து தானே இந்த கதை. கதைக்கு ஒரு கருவேண்டும். பாதி உண்மை பாதி பொய். சரி தானே
இந்த கதையில் வந்த பெயர்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே.......!!!
ஹஹா ஹா ஹா.... கலக்கிட்டீங்க.... கதையின் போக்கில் கொஞ்சம் யூகிக்க முடிந்தாலும் ஒரு கற்பனைக் கதை எவ்வளவு கற்பனைகளைக் கிளப்பிவிட்டது தெரியுமா!! தொடர்ச்சியாக இடுகைகள் வந்தாலும் எல்லாத்திலும் உங்க டச் வெச்சு சுவாரஸ்யப் படுத்திடுறீங்க..... ரசித்துப் படித்துப் பின் சிரித்தேன்...... :)
நீங்கள் சொல்லிவிட்டால் நாங்கள் ஏமாற தயாராக இல்லை...படமும் பதிவும் அருமை சகோதரி....வாழ்க வளமுடன்்.வேலன்.
வேலன் சார், நம்பிட்டு, இப்படி கூட சொல்லி s ஆகலாமா?
இவ்வளவு அறிவா பேசும் சித்ராவா, கண்டவுடன் காதல் எனும் வலைக்குள் விழுந்தது என்று ஒரு ஏமாற்றமே வந்தது சித்ரா. உண்மையில்லை என்று நீங்கள் சொன்னாலும், இது “உண்மை பாதி, கறபனை பாதி கலந்த் கலவை” போலத்தான் தெரியுது.
// "கட்டிக்குவ இல்லியா?" என்றதும், காதில் விழாதது போல தண்ணீர் குடித்து விட்டு முகத்தை திருப்பி கொண்டேன் //
Naa kooda nambittaen.. :P :P superrrrrrrrr chitra...
kalakkal..!
நல்ல வேளை இன்னும் 12 நிமிஷம் இருக்கு ஏப்ரல் 1க்கு .நான் ஏமாறல.....ஏமாறல....ஏமாறல...ஏமாறல.
இதில் உண்மை - நெல்லை எக்ஸ்பிரஸ், சாத்தூர் மற்றும், கோவில்பட்டி என்ற ஊர்கள் மட்டுமே. :-)
super chitra.
கனவாக இருந்தாலும்! நினைவு திரும்ப விருப்பம் இல்லை! தொடரட்டும் கனவு----------
இப்படிக்கு
பிரவீன் (தம்பி)
ஹா,ஹா,ஹா,ஹா.....
பிரவீன் அண்ணா.....!!!!
ரீல்....நல்லாவே இருக்குது.
ரொம்ப நல்லா இருக்கு, சந்தேசமா இரும்மா, அதுபோதும். கதை என்றாலும்,கற்பனை என்றாலும், நிஜத்தில் கனவன் மனைவிதானே. இதுவும் உண்மை என்று வைத்துக் கொள்வேம். ஆமா இதுக்கு அப்புறம் சாப்பாடு,விருந்து எல்லாம் எப்ப போடுவீங்க?. நல்லா இருக்கு சித்ரா. நன்றி.உங்களுக்கு இல்லை சாலமன் சாருக்கு. அவர்தானே கதைக்கு ஹீரோ. ஹா ஹா
I think I read this in akilan's paavai viLakku,
பொய்யை மெய்போல் சொல்வதுதான் கதை!
இல்லை! மெய்யையும் பொய்போல் சொல்லுவதும் கதைதான்!
நிச்சயமாக இது ரெண்டில் ஒண்ணுதான் உங்க கதை! எந்தவகைனு எனக்குத் தெரியும்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?
சித்ரா, ஒரு சின்ன டவுட்டு, பல்பு தனி தனியா தானே குடுப்பீங்க..
எப்ப இருந்து இப்படி மொத்தமா கூப்பிட்டு, குடுக்க ஆரம்பிசீங்கப்பா..??
இருந்தாலும்,,, கலக்கல் காதல் கதை..
கடைசியா ஒரு தரம் கேக்குறேன்..
ஒன்னும் அவசரம் இல்ல... நல்ல யோசிச்சு ல்லுடாம்மா.....:P :P :P
"அது நீங்க இல்லயா....ஆ ஆ ஆ ஆ ஆ.... [மீதி Echoo]" :D :D :D
என்னை நன்கு தெரிந்து - புரிந்து கொண்ட தோழி ஆனந்திக்கு,
நான் என் நெருங்கிய நண்பர்களிடம், எப்படி விளையாடுவேன் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு வருடங்களுக்கு முன், நான் உங்களுக்கு கொடுத்த பல்புக்கு, இது jujubi matter என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல. இத்தனை அருமையான நண்பர்கள் பதிவுலகில் எனக்கு கிடைத்ததும், என் குரங்கு வால்த்தனம் எட்டி பார்த்து விட்டது. இந்த childish விளையாட்டுக்களை என்னால் விட முடியவில்லை. என்ன செய்ய? செய்ய.............. (echo)
நான் அவள் இல்லை. என் கணவர், அந்த சாலமன் இல்லை. எனக்கு பிரவீன் என்ற அத்தை பையனும் இல்லை. போதுமா, ஆனந்தி.
சரி சரி.. இப்போதைக்கு அக்கௌண்டில் வச்சிக்கறேன்..
டவுட்டு வந்த திரும்ப வரேன்.. ;) ;)
Hello Chithra,
முதல் வாட்டி வர்றேன் உங்க ப்ளாகுக்கு. நீங்க ரொம்ப சென்ஸிபிள் ப்ளாக்கர்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன். ஆனால் பாருங்க கதை கன ஜோரா போயிண்டு இருந்ததா, திடீர்ன்னு ஒரு சறுக்கு. ” ஆனால், இன்று ஒரு அண்ணனாய் அடையாளம் கண்டு கொண்டு, பாசத்தால் அவனுடன் உரிமையுடன், இப்பொழுதும் பழக முடிகிறது” இங்கே தான் டவுட்டு. கடைசியில் பார்த்தா ஏப்ரல்ஃபூல்ஸ் ஸ்பெஷல்.. பேசாம இன்னிக்கி தமிலிஷ் பக்கம் போகாம இருந்தா தலை தப்பிச்சுடும்ன்னு நினைக்கிறேன். வெரி ஆஃப் தி டூ மச் ஐ ஸே!
முதல் வருகைக்கு நன்றி. கருத்துக்கு ரொம்ப நன்றி. ரீல் விடும் போது, அப்படி இப்படி சேத்து சுத்திட்டேன். நீங்க, அண்ணன் பாசம் அது இதுனு பீல் பண்ணி இருப்பீங்க என்று தெரியாம போச்சே...... தொடர் பதிவுகள் எழுதும் போது, I like to think outside the box. பிளஸ் எனக்கு கொஞ்சம் விளையாட்டு குணம் டூ மச் என்று நினைக்கிறேன். ஹி,ஹி,ஹி,ஹி.....
அதானே.. அட இது என்ன புது கதையாயிருக்குதேன்னு பார்த்தேன்.. இத்தனைக்கப்புறமும் இந்த உலகம் உங்களை நம்புதே...
சித்ரா - அடுத்த அவதாரத்திற்கு தயார்.. கதை, திரைக்கதை, வசனகர்த்தா.. வெள்ளித்திரைக்கு எப்போ போரீங்க?
கலக்கல்ஸ்ங்க ...செம சூப்பரா எழுதியிருக்கீங்க...!!!
(உண்மைய சொல்லுங்க, இந்த கதைல எவ்வளவு தூரம் நிஜம் ?)
Anything Special Mrs.Chitra, you writing story Well. Keep it up.
காமடி பண்ணலேயே
Hello Good Morning! ;)
வணக்கம் சித்ரா
அருமையான வரிகள்
எழுத்துக்கு தேவையான ஒன்று(கற்பனை)அதை சரியாக கையாண்டு உள்ளிர்கள்
அட இப்படி ஏமாத்திட்டீங்களே அந்த வரிசையில் நானும் லேசா.........
கலக்கல்.புருவத்தை நிமிர்த்தி அப்புறம் பணிய வைத்துவிட்டீர்கள் சித்ரா.
எல்லாமே ரீலா அய்யோ சாமி அப்படியே ஒரு காதல் படம் பார்த்தமாதிரி இருக்கு. என்னால் நம்பவே முடியல. அனுபவித்தால் மட்டுமே இது போல் எழுத முடியும் உண்மையை சொல்லுங்க
படிக்க நல்ல சுகமானதாக இருந்தது.நன்றி. இன்று தான் இந்த பக்கம் வந்தேன் என்னை கவந்துவிட்டது. நிங்களும் வந்து கதை நடையில் வந்து பாருங்க.
சசிகுமார், நீங்க வேற நான்கு தமிழ் படங்கள் (லவ்) பார்த்து நொந்து இருந்தால் கூட, இப்படி ரீல் விட முடியும். ஹி,ஹி,ஹி,ஹி.....
இன்னைக்குனு பார்த்து கொஞ்சம் தாமதமாக வந்தேன் . இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் .
நிறைய தமிழ்சினிமா பாப்பீங்களோ!
காதல்கதை நல்லாஇருந்திச்சி.
ஆனாலும், அநியாயத்துக்கு ஏமாத்தீட்டீங்களே!
அட இப்படிக்கூட கதை சொல்லலாமோ...?
ஆமா எல்லாத்தையும் கொட்டிட்டு கடைசியா மாத்தப் பாக்கிறீங்களா? நியாயாமா?
இன்னுமா இந்த கதையை என் சொந்த கதை என்று உலகம் நம்புது? அவ்வ்வ்வ்......
Paravaillaiye!
unga adutha padathukku ippavey poojai pottachu
Er.Ganesan/Coimbatore
ச்சே நான் ரொம்ப சீரியசா படிச்சு தொலைச்சுட்டேன்:((( .. ஆனால் உங்கள் எழுத்துகளில் வேறு ஒரு வடிவத்தை புகுத்தி அசதி உள்ளீர்கள்.
அடடா, பொசுக்குன்னு இப்படி சொல்லிடிங்களே!
2ம் திகதி படித்த என்னையும் ஏப்ரல் முட்டாளாக்குவது என்ன நியாயம்.
மிகச் சுவார்ஸ்மாக இருந்தது உங்கள் பதிவு.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
(நான் போட்ட பின்னூட்டத்தைப் படிப்பதற்கு F13 பட்டனைப் பிரஸ் பண்ணவும்.)
Uzhavan, அஸ்கு புஸ்கு..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
ஆட்டோ அங்க வரனும்னா விசா எடுக்கனுமா?
என்னா ஒரு அலும்பு.....?
;)
அருமையான எழுத்து.! சேட்டைன்னு நீங்க சொன்னாலும்...
--
ரசிச்சு படிச்சேன்..:)
அடிக்கடி இப்படி எழுதுங்க சித்ராஜி.:)
nice post chitra...
chancee illa ... enna emaathu .. nambi mosam poittomae
சித்ரா அக்கா, கதை சூப்ப்ப்ப்ப்ப்பர்..:) கதை அளக்கர்துல நம்ப ஊர்காரங்களை யாராலும் அடிச்சுக்க முடியாது....;)
பாவமா முகத்தை வச்சுண்டு இருக்கும் எங்க சாலமன் அண்ணாவை நினைச்சாதான் சிரிப்பா வருது, தினமும் நீங்க எப்படியெல்லாம் அவரை கலாய்க்கறீங்களோ!!!!...:) nice post
அடேங்கப்பா..... நீங்க இவ்வளவு பெரிய லொள்ளு பார்ட்டின்னு தெரியாம போச்சே !! படு சுவாரஸ்யமா போன perfect love story-ஐ இப்படி அநியாயமா பொட்-னு போட்டு ஒடச்சிட்டீங்களே :)
April 1st வாசிக்கலைன்னாலும், I should accept - I was perfectly bowled over !! Very funny :)
நல்ல பதிவு சித்ரா.. கடைசியில் டிஸ்கியைப் படிக்கும் வரை உண்மைக் கதை என்று நினைத்திருந்தேன் :))
oops.. இங்கே பெரிய கும்மியே நடக்குதே :)) மற்ற பதிவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தை யோசித்தால் 97 பின்னூட்டங்கள் சரி தான். தொடருங்கள் :)
இந்த மாதிரி பரபரப்பா கதை இருந்தால் தானே, "பொண்ணு பார்த்த/பார்க்க போன தொடர் பதிவு" interesting ஆ இருக்கும்னு நினைச்சேன். ஏப்ரல் 1 ஒட்டி வந்தது வசதியா போச்சு.
வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள் பல. கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிகள் பல பல. வோட்டு போட்டவர்க்கும் பரிந்துரை செய்தவர்க்கும் நன்றிகள் பல பல. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
ஏமாத்திப்புட்டீங்களே !!
ஏப்ரல் 4 ஆம் தேதி படித்ததால் உசாராக இருக்கவில்லை.
சாரி டீச்சர் நான் லேட்டு. கலக்கிட்டிங்க போங்க.
happy easter chitra
Thank you for your wishes, Padma.
// இந்த childish விளையாட்டுக்களை என்னால் விட முடியவில்லை. என்ன செய்ய? செய்ய.............. (echo) //
அய்யே அதை விட்டால் நீங்க சித்ரா என்பதை எங்களால் நம்ப முடியாது. பெரிய விஷயங்களைக் கூட கிண்டலாக,நகைச்சுவையாக சொல்லும் உங்கள் ஸ்டைல் அருமை. அதை எல்லாம் மாத்திக்கிக்க வேண்டாம்.
தற்போதைய பதிவுலக எழுதப்படாத விதிக்கு - அது என்ன விதி என்பவர்கள் பதின்ம வயது தொடர்பான எனது பஞ்ச ரத்தின இடுகையைப் (படிக்காதவர்கள்) பார்வையிடவும் - அந்த விதிக்கு முரண்பட்டிருக்கிறதே இது டூப்பு என்றுதான் முடியும் என ஆரம்பத்திலேயே கணித்து விட்டேன். எனினும் சுவாரசியமாக இருந்தது. வாழ்த்துக்கள்.
நாங்க ஏமாறமாட்டோமுல்ல.[அதெல்லாம் வெளியே சொல்லலாமா]
கதைக்கு காலில்லைன்னாலும் சோக்கா நடந்துச்சி.
அடடா நூத்தி ஏழா என்னது இந்தப் புள்ளகிட்ட ஏமாற்ன்னே எல்லாம் பிறப்பெடுத்து இருக்காங்களா ஹஹஹாஹ்
சித்ரா அக்காகிட்ட, ஏமாந்தவங்க லிஸ்டு பெரிசாகிகிட்டே போகுது....:)LOL
ஐயோ........ ஏதோ chit fund கம்பெனி கிட்ட பணம் கொடுத்து ஏமாந்தவங்க மாதிரி சொல்லிட்டீங்களே...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா......
யக்கா, கதை சூப்பரா இருக்குன்னு சொல்ல வந்தா டிஸ்கில சொதப்புறீங்க. இருங்க, ஃப்ளைட் அனுப்புறோம். இல்லை, ராக்கெட். ;)
சித்ரா நெஜமாவே நம்பி ரொம்ப ஸ்வாரஸியமாக படித்தேன் , கடைசியிலே இப்படி முடித்து விட்டீங்கலே
.... பெரிய பதிவா இருக்கு ஓவ்வொரு முறை வந்தும் படிக்க நேரமில்லாமல் திரும்பிவிடுவேன்,
சரி இன்று எப்படியாவது படிக்கனும் என்று , ரொம்ப சின்சியரா படிச்சேன்... ஹி ஹிஹி
ஹலோ எவ்வளவு நாள்தான் லவ் பன்னுவிக, கொஞ்சம் பத்து பதிவு போடுங்க
Post a Comment