Monday, March 15, 2010

ஸ்பெஷல் டெலிவரி

((Thanks: Image from Funnyhub.com))
குழந்தைகளுக்கு, இப்படியும் ஒரு pacifier - சூப்பி ....... !!!   நம்மை விட வெட்டியா நிறைய பேர் யோசிப்பாங்க போல.

இந்த வாரம், என் மகள், செல்லத்தின்  பிறந்த நாள் வருகிறது.
சென்ற ஆண்டு கொண்டாட்டத்தின் போது,  அழகான கேக்கை  நேர்த்தியாக வெட்டினாள்.
வெட்டியபின், ஆர்வமாக தனது முதல் பிறந்த நாள் கேக்கை , அவள் சார்பில் யார் வெட்டினார்கள் என்று கேட்டாள்.  "அம்மாவா? அப்பாவா?"
எனது பதில்:  "Dr.Lampkin"
மகள் செல்லம்: "டாக்டர்?"

ம்ம்ம்மம்மம்ம்ம்ம்............. மாவு கிரைண்டர் சுத்தி  - (நான் கொசுவத்தி சுத்துரதை விட்டு நாள் ஆச்சு)  - ஒரு mini-flashback.

மார்ச் 17 இரவுக்குள், பிரசவ வலி வந்து டெலிவரி ஆகவில்லை என்றால், 18 ந் தேதி காலை மருத்துவமனையில் (Texas) வந்து அட்மிட் ஆகி கொள்ளும் படி, டாக்டர் எழுதா ஒப்பந்தம் போட்டு இருந்தார். அதன் படி, பிரசவ வலியோ பரபரப்போ இல்லாமலே  போய் அட்மிட் ஆகி இருந்தேன். 

ஊரில் இருந்து என் அம்மாவோ அத்தையோ உதவிக்கு வர முடியவில்லை..  என் கணவரும் நானும் சமாளித்து கொள்ளலாம் என்று கடவுள் மேல் உள்ள நம்பிக்கையில் இருந்து விட்டோம்.

காலையில் வந்து சோதித்து பார்த்த டாக்டர்,  C-section (cesarean) surgery தான் திட்டவட்டமாக சொல்லி,  "இப்போ நான் மற்ற patients கவனிக்க போக வேண்டும். 12 மணிக்கு என்னுடைய மதிய உணவு நேரம். சீக்கிரமா சாப்பிட்டு விட்டு வந்து லஞ்ச் டைம்ல சர்ஜரி செய்ய வருகிறேன்" என்று ஏதோ மதிய சாப்பாட்டுக்கு அப்புறம்  பாயாசம்/ரசம் குடிக்கிற  மாதிரி சொல்லி விட்டு போனார்.   சர்ஜரி - எனக்கு சர்ஜரி -  அவருக்கு லஞ்ச் டைம்  - கிர்ர்ரர்ர்ர்.........

நர்ஸ் நிறைய Formality Forms எல்லாம் ஒரு File இல் வைத்து, என் கையெழுத்துக்காகவும் என் கணவரின் கையெழுத்துக்காகவும் வந்தாள். ஒரு பார்ம் எடுத்து படிக்கலாம் என்று பார்த்தால், "இந்த மேஜர் சர்ஜரிக்காக கொடுக்கப்படும் Spinal anesthesia பற்றியும் அதற்கு உள்ள disclaimer பற்றியும் இருந்தது.
"உங்கள் முதுகு தண்டு வடம் அருகே கொடுக்கப்படும் இந்த மருந்தால், உங்கள் கால்கள் இரண்டும் செயல் இழந்து போனால், கம்பெனி பொறுப்பு எடுக்காது. இல்லை, நீயே செயல் இழந்து ஒரேயடியா போயிட்டே என்றாலும் கம்பெனி பொறுப்பு எடுக்காது" என்ற ரீதியில் பல மிரட்டல் தகவல்கள். சர்ஜரிக்கு போகும் முன்னால், இது ரொம்ப அவசியமா   என்று நொந்து கொண்டேன்.

கண்ணை மூடி, ஒரு நிமிடம் கடவுளை நினைத்து கொண்டு மார்க் செய்யப் பட்டிருந்த எல்லா இடங்களிலும் கையெழுத்து போட ஆரம்பித்தேன்.
நர்ஸ் கரிசனையுடன்,   "படித்து பார்த்து விட்டு கையெழுத்து போடணும்" என்றாள்.
"படிச்சு பார்க்கலாம் தான். அதை படிச்சிட்டு புரிஞ்சது புரியாததை பத்தி கவலைப் பட வேண்டாமே என்று பார்த்தேன்.
படித்து விட்டு, நான் கையெழுத்து போட மாட்டேன் என்று சொன்னால், இதில் எழுதி இருப்பதை மாற்றி எழுத போகிறீர்களா? இல்லை கையெழுத்து போடவில்லை என்றாலும் சர்ஜரி செய்ய போகிறீர்களா?" என்று கேட்ட என்னைப் பார்த்து பரிதாப சிரிப்பு சிரித்தாள்.
"ஒரு பேப்பர் மட்டும்  மிஸ்ஸிங்"
"என்ன பேப்பர்" என்று நர்ஸ்  கேட்டாள்.
"அப்படி ஒரு நிலைமை  எனக்கு நேர்ந்தால் -  என் கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் -  கம்பெனி பொறுப்பு ஆகாது என்றும் எழுதி வைத்து இருக்கலாம்."
என் கணவர், "இந்த நேரத்திலும் உனக்கு இப்படி எல்லாம் தோணுது பாரு" என்றார். என் கவலை எனக்கு.

ஒரு வழியாக டாக்டருக்கு  லஞ்ச் டைம் வந்தது - அப்படியே எனக்கு  சர்ஜரி டைம் வந்தது.  என் கணவர் முகத்தில் மகளை பார்க்க போகிற சந்தோஷம். எந்த கவலை ரேகையும் அவர் முகத்தில் தெரியவில்லை.
Dr.Lampkin என்ன சாப்பிட்டார் என்று தெரியவில்லை. பயங்கர சந்தோஷத்தில் இருந்தார். அவரை விட இரட்டிப்பு சந்தோஷத்தில், எனக்கு anesthesia கொடுத்த டாக்டர் இருந்தார்.  உதவிக்கு இருந்த இரண்டு நர்ஸ்களும் ஒரே  கலகல.  எல்லோரும்,  முந்திய தினம் பார்த்த  கவ்பாய் (cowboy) டிவி ஷோ பற்றி பேசி சிரித்து கொண்டு இருந்தார்கள்.  என் கருத்தையும் கேட்க மறக்கவில்லை.  ஏதோ "coffee time with Anu"  நிகழ்ச்சி மத்தியில் இருப்பது போல உணர்வு. ஆபரேஷன் தியேட்டர் போல இருக்கவில்லை.
எனக்காக என்னை தவிர வேற யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை.

டாக்டர், சர்ஜரி மேஜையில் கலக்கத்துடன் படுத்து இருந்த  என் அருகில் கூர்மையான கத்தியுடன் வந்ததும்,
" சித்ரா ரெடியா? இன்று உன் மகள் பிறக்கும் நாள்.  நீதான் பர்த்டே கேக். கட் பண்ண போறேன். பர்த்டே சாங் பாடலாமா?" என்றார். எல்லோரும் சத்தமாக சிரிக்கும் சத்தம் கேட்டது - அதில் என் சிரிப்பும் இருந்தது.
ஒரு நிமிடம் கண்களை மூடினேன். எவ்வளவு கவலை பட்டு டென்ஷன் ஆக பரபரப்பாக இருக்க வேண்டிய நேரத்தை, டாக்டர் எப்படி மாற்றி விட்டார்!  எல்லாம் நல்ல படியாக நடந்தது.  எனக்கும் யாரும் இல்லாமல் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு போய் இருந்தது.

ஒவ்வொரு வருடமும் என் மகளின் பிறந்த நாள் கேக் பார்க்கும் போது Dr.Lampkin  கமென்ட் நினைவுக்கு வந்து சிரிப்பேன்.  என் மகன், செல்வம்  பிறந்த வேளையிலும்  - மீண்டும் யாரும் உதவிக்கு வர இயலாது இருந்த போதும்  - டென்ஷன் ஆகாமல், என் மகன் பிறக்கும் நாள் பார்ட்டிக்கு - நானே மீண்டும் பர்த்டே கேக் ஆக -  மருத்துவமனைக்கு உற்சாகமாக சென்றேன்.  சர்ஜரி நல்ல படியாக நடந்தது, கடவுள் அருள்.

 எந்த பிரச்சினையையும் பதட்டம் இல்லாமல் அணுகவும், அதில் இருக்கும் தனித்தன்மையை கண்டு ரசிக்க சிரிக்க பழகி கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.  (உடல், மன) வலியும் வேதனையும் அந்த அந்த நிமிடங்களுக்கு உரியவை.  வலிக்குமே என்று கவலைப்படுவதும், வலித்ததே என்று புலம்புவதும் கவலைகளின் இருப்பிடம்.    டென்ஷன் இருட்டில், எல்லாமே அரண்டு மிரண்டு பயங்கரமாக தெரிகிறது.    நகைச்சுவை ஒளியில் பார்த்தால் வெளிச்சமாக, பாசிடிவ் ஆக தெரிகிறது.


HAPPY BIRTHDAY, CHELLAM!
இந்த ஐம்பதாவது  பதிவு உனக்கு ........  செல்லம்!

109 comments:

நட்புடன் ஜமால் said...

சிரிப்பு சித்ரா

சிந்தனை சித்ரா

இப்போ

செண்டி சித்ரா

---------------

நெகிழ்வாய் இருந்திச்சிங்க

எங்கள் பிரார்த்தனையும் வாழ்த்துகளும் குழந்தைக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

உங்கள் செல்லத்தின் பிறந்த நாளுக்கும், உங்களின் 50-க்கும் வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

50க்கும் வாழ்த்துகள்.

எப்பூடி ... said...

அப்புறமா வாசிச்சு கமண்டு போடுறன்.

புலவன் புலிகேசி said...

குழந்தைக்கு என்னோட வாழ்த்தை சொல்லிருங்க சித்ரா..

Anonymous said...

குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மைதிலி கிருஷ்ணன் said...

முதல்ல அந்த குழந்தை படம் பார்த்தவுடனே தூக்கி வாரி போட்டுடிச்சு.. இப்படியும் ஒண்ணா?? அப்புறம் தான் தெரிஞ்சுது அது pacifier ன்னு .. அப்பாடான்னு இருந்தது. இப்ப தான் நானும் இதே மாதிரி சில forms la கையெழுத்து போட்டுட்டு வந்தேன்.. போகிற இடத்தில் ஏதாவது ஆச்சுன்னா யுனிவெர்சிட்டி பொறுப்பல்ல அப்படின்னு. எதுக்கு தான் இப்படி நம்மளுக்கு பீதிய கிளப்புராங்களோ.. கலக்கல் பதிவு.. செல்லத்துக்கு என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. உனக்கு உன்னோட 50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

♠ ராஜு ♠ said...

உங்க பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
:-)

r.selvakkumar said...

சித்ரா எனக்கு Dr.Lampkinஐ உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

சிசேரியன் ஆபரேஷனை ஏதோ ஒரு பர்த்டே பார்டி நடந்ததை போல எழுதியுள்ளதும் கலகலவென்று எழுதியிருப்பது அசத்தல்.

♠ ராஜு ♠ said...

அட 50 ஆ..?
அடிச்சு ஆடுங்க மேடம்.

asiya omar said...

செல்லத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,அரை சதத்தை Dr.Lampkin நினைவோட கொண்டாடியாச்சு.எனக்கும் இனிமே Dr.Lampkin -ஐ மறக்க முடியாது.பாராட்டுக்கள்.

நாஞ்சில் பிரதாப் said...

ஹஹஹஹ... சூப்பர் டாக்டர்... இது ஒருவகையான மருத்துவம் கூட பேஷ்யன்ட்டோட
ஸ்டெரஸ்சை குறைச்சு அவங்களை அறுவைசிகிச்சைக்கு தயார் பண்றது... நம்மூர் இது பண்றாங்களான்னு தெரில..... உங்கள் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சேட்டைக்காரன் said...

//அப்படி ஒரு நிலைமை எனக்கு நேர்ந்தால் - என் கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் - கம்பெனி பொறுப்பு ஆகாது என்றும் எழுதி வைத்து இருக்கலாம்."//

எப்படியெல்லாம் யோசிச்சிருக்கீங்க? :-))))

எறும்பு said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
:)

அப்படியே அந்த சூப்பி ஒண்ணு வாங்கி அனுப்புங்க. நல்லா இருக்கு.

Uma said...

Our heartfelt wishes are with you! Congratulations on your 50th & Sincere Birthday wishes to chellam!

பாலாஜி said...

"எந்த பிரச்சினையையும் பதட்டம் இல்லாமல் அணுகவும், அதில் இருக்கும் தனித்தன்மையை கண்டு ரசிக்க சிரிக்க பழகி கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டேன். "

நல்ல வரிகள்

ஜெய்லானி said...

///ஆர்வமாக தனது முதல் பிறந்த நாள் கேக்கை , அவள் சார்பில் யார் வெட்டினார்கள் என்று கேட்டாள். "அம்மாவா? அப்பாவா?"
எனது பதில்: "Dr.Lampkin"
மகள் செல்லம்: "டாக்டர்?"//

என்னை கவர்ந்த வரிகள், டீச்சர்!!!

கண்ணா.. said...

உங்கள் செல்ல மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

50 அடிச்சு...புல் ஃபார்ம்ல இருக்கற உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

என் மனைவி பிரசவத்தின் போது இதைவிடவும் சிக்கலான நிலை. ஆனால் அதையும் நல்லபடியாக செய்துகொடுத்த திருநெல்வேலி ராமலெட்சுமி ஆஸ்பத்திரியின் டாக்டர். மதுபாலா அவர்கள் ஞாபகம்தான் எனக்கு வருகிறது.

நல்ல பதிவு :)

முகிலன் said...

நல்லா இருக்கு டீச்சர்.

செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

எங்க வீட்டுலயும் எபிட்யூரல் போடுறதுக்கு முன்னாடி இப்பிடித்தான் ஒரு நானூறு பார்ம்ல கையெழுத்து வாங்கினாங்க. நாங்களும் படிச்சிப் பாக்கலை. அப்புறம் படிச்சிப் பாத்து மனசு மாறிடுச்சின்னா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

என்னுடைய பிரார்த்தனையும் வாழ்த்துகளும் குழந்தைக்கு.

பித்தனின் வாக்கு said...

// இந்த நேரத்திலும் உனக்கு இப்படி எல்லாம் தோணுது பாரு" //
அதானே, எடக்கு மடக்கு பார்ட்டிதான்.
// எந்த கவலை ரேகையும் அவர் முகத்தில் தெரியவில்லை //
அப்படி சொல்லதே அம்மா, அப்பக் கவலையைக் காட்டி உங்களை மேலும் வருத்தப் பட வைக்கக்கூடாதுன்னு சமாளித்துருப்பார்.
சிறந்த தன்னம்பிக்கை கட்டுரையாக மாற்றிவிட்டீர்கள். நல்ல டாக்டர்.
குழந்தைக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். நன்றி

பித்தனின் வாக்கு said...

50க்கும் வாழ்த்துகள்.

இது எப்ப சொல்லவேயில்லை, நான் அட்வைஸ் எல்லாம் பார்த்து 60 என்றுதானே நினைத்தேன்.

சரி சரி பிறந்த நாளுக்கு ஒரு பல்செட்டும்,வாக்கிங் ஸ்டிக்கும் பிரசண்ட் பண்றேன்.

பித்தனின் வாக்கு said...

50 ஆவது பதிவா? நான் வயசுன்னு நினைத்தேன். சரி கூல்டவுன். 50க்கு வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

உங்கள் செல்லத்தின் பிறந்த நாளுக்கும், உங்களின் 50-க்கும் வாழ்த்துக்கள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!

குழந்தைக்கும்..
ஐம்பதாவது பதிவுக்கும்.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்.

மைதீன் said...

செல்லத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்,50 வது பதிவுக்கும் வாழ்த்துக்கள். அந்த டாக்டர் என் மனதை கவர்ந்து விட்டார் அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

மெல்லினமே மெல்லினமே said...

chellakuttikku piranthanaal vaazhthukkal thozhi!

மெல்லினமே மெல்லினமே said...

chellakuttikku piranthanaal vaazhthukkal thozhi!

ஜெட்லி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

Vishy said...

செல்லத்திற்கு அன்பு முத்தங்கள்.. நல்ல பதிவு..

On the funnier note.. உங்களுக்கு டெலிவெரி ஆனதுக்கப்புறம் டாக்டர் solomon ஓட அடி ம்டியில கைய வைக்கலயே? C section, Anaesthesia, Epidural etc எல்லாம் கொடுத்து delivery பண்ணினதுக்கப்புறம் bill அனுப்புறாய்ங்களே.. அதச் சொன்னேன்..

நாடோடி said...

ஒரு சென்டிமென்ட் பதிவைக் கூட உங்களால் தான் இப்படி எழுத முடியும்..உங்கள் செல்லத்துக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

மேடம் 50 பதுக்கு, பாப்பா பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள்..

S Maharajan said...

"உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
"ஆப் செஞ்சுரி அடித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்"

ஸ்ரீராம். said...

ஒரு கஷ்டமான அனுபவத்தை நீங்கள் உணர்ந்த பாணியிலேயே சொல்லி சாதாரணமாக சொல்லி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
குழந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஐம்பதாவது இடுகைக்கும் வாழ்த்துக்கள்.

KVR said...

உங்கள் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஐம்பதாவது பதிவுக்கும் வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

வழக்கம்போல!! செல்லத்துக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பெயரே செல்லம்தானா அல்லது செல்லப்பெயரா?

வானம்பாடிகள் said...

குழ்ந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 50வது இடுகை கிஃப்டா:)). அதற்கும் வாழ்த்துகள்

Jaleela said...

50 ஆவது பதிவு வாழ்த்துக்கள்.

உங்கள் செல்லத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சிரிப்பு நகைச்சுவையாவே உங்கள் டெலிவரியுமா?

பர்த்டே கேக்க‌ டாக்டர் உங்களை டென்ஷனாக்காம‌ வித்தியாசமா யோசிக்க வைக்கனும் என்று சூப்பரா சொல்லி இருக்கார்

நாஸியா said...

செல்லத்துக்கு வாழ்த்துக்கள்!

நன்றி சித்ரா.. உங்க பதிவு என்னை தயார்படுத்திக்க உதவும்.. :)) ரொம்ப ரொம்ப நன்றி

goma said...

அதன் படி, பிரசவ வலியோ பரபரப்போ இல்லாமலே போய் அட்மிட் ஆகி இருந்தோம்.

.....’தோம்’ன்னா எத்தனை பேர்? சித்ரா...

டெலிவரி மேஜையில் அடித்த கூத்து சூப்பர்.

அன்புத்தோழன் said...

நீங்க ஒரு கலக்கல் பேர்வழிங்க... அதெப்புடி உங்களால மட்டும் இப்டிலாம்!!! ஹா ஹா... இப்டியே என்றும் கல கலன்னு குதூகலத்துடன் இருக்க இறைவன் கிட்ட வேண்டிகிட்டு, உங்களை தாயாக பெற குடுத்து வைத்த குழந்தை செல்வத்துக்கு அன்பான அணைப்புடன் பிறந்த நாள் வாழ்த்தையும், அரைசதத்தை எட்டிய உங்கள் பதிவு உலக வெற்றி தொடர, விரைவில் சதமடிக்கவும் வாழ்த்துக்கள்...

goma said...

சித்ரா பெத்த செல்லமே !உன் பிறந்த நாளுக்கு என் அன்பான ஆசியும் வாழ்த்துக்களும்

goma said...

சிரிப்பென்ற சொல்லுக்கு சித்ரா...
ஆனாலும் அநியாயம் .குழந்தை படத்தை இப்படிய்ய்ய்ய்யா..

விக்னேஷ்வரி said...

பிரசவ வேதனையக் கூட அழகா நகைச்சுவையா சொல்ல முடியுமா... க்ரேட் சித்ரா.

ஏதோ மதிய சாப்பாட்டுக்கு அப்புறம் பாயாசம்/ரசம் குடிக்கிற மாதிரி சொல்லி விட்டு போனார்.

அப்படி ஒரு நிலைமை எனக்கு நேர்ந்தால் - என் கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் - கம்பெனி பொறுப்பு ஆகாது என்றும் எழுதி வைத்து இருக்கலாம்

ஏதோ "coffee time with Anu" நிகழ்ச்சி மத்தியில் இருப்பது போல உணர்வு. //

ரொம்ப ரசித்து சிரித்த வரிகள்.

உங்கள் செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகளும், எங்கள் செல்லத்துக்கு 50 வது பதிவிற்கான வாழ்த்துகளும்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

வாழ்த்துகள்..:)

இதைக்கூட நகைச்சுவையாய் சொல்ல உங்களால எப்படி முடியுதோ..:))

குழந்தைக்கும் வாழ்த்துகள்..:)

--

அந்த படம், அடேங்கப்பா...:))

ஜெஸ்வந்தி said...

செல்லத்துக்கு என் வாழ்த்துக்கள். கேக் எனக்கும் வருகுதா?
அட, அதுக்குள்ளே 50 பதிவு எழுதி விட்டாயா? வாழ்த்துகள் சித்ரா.
இவர்கள் செர்ஜுரிக்கு முன்பு கொண்டு வரும் பத்திரங்களைப் படித்தால் இரத்த அழுத்தம் அதிகமாகி செர்ஜெரி செய்ய முடியாமலே போய் விடும். நானும் நீ செய்ததுபோல் கண்ணை மூடிக் கொண்டு தான் கையெழுத்திடுவேன்.

Dr.Rudhran said...

well written. my love and best wishes to the baby. may god be with her.

தமிழ் உதயம் said...

எனக்காக என்னை தவிர வேற யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை.

அழகா ரெண்டு வரில சொல்லிட்டீங்க.
இது தானே யதார்த்தம். பிறப்பு முதல் இறப்பு வரைக்கான வாழ்வியல் தத்துவமும் இது தானே.

உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

bahurudeen said...

arumaiyaana kalakkalaana, santhoshamaana, nekizhchchiyaana pathivu- vaazhththukkal

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உங்கள் செல்லத்தின் பிறந்த நாளுக்கும், உங்களின் 50-க்கும் வாழ்த்துக்கள் . அப்றம் அந்த பிறந்தநாள் கேக்கு அனுப்பவே இலையே மறக்காமல் அனுப்பிடுங்க.

மீண்டும் வருவான் பனித்துளி

திருவாரூரிலிருந்து சரவணன் said...

எக்கோவ்...அங்கயும் இப்படியெல்லாம் டாக்டர் இருக்காரா... அது எப்படி நீங்க இருக்கும்போது அவரு பெரிய மொக்கையா போட்டாரு. ஆனா நல்ல டாக்டருக்கு இவரு சூப்பர் உதாரணம். ஆக மொத்தத்துல இப்போ நீங்க மூணாவது ஜென்மம் எடுத்து வந்துருக்கீங்க. எல்லா சந்தோஷத்துக்கும்வாழ்த்துக்கள்.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

//(உடல், மன) வலியும் வேதனையும் அந்த அந்த நிமிடங்களுக்கு உரியவை. வலிக்குமே என்று கவலைப்படுவதும், வலித்ததே என்று புலம்புவதும் கவலைகளின் இருப்பிடம்//

ரொம்ப ஆழமான விசயத்தை எளிமையா ஆனால் அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள்

முதல் குழந்தைக்கும் , ஐம்பதாவது குழந்தைக்கும் என் வாழ்த்துக்கள்.

நாய்க்குட்டி மனசு said...

சிசேரியனை பிறந்த நாள் கேக் வெட்டியதாக கூறியது. நல்ல கற்பனை. மயக்க மருந்து கொடுத்து நினைவு வரும் வரை பதைத்திருந்தது அந்தக் காலம். மரத்து போக வைத்து பிறந்த குழந்தையை பெற்றவளை முதலில் பார்க்க வைப்பது இந்தக் காலம்.

ஸாதிகா said...

///என் மகன் பிறக்கும் நாள் பார்ட்டிக்கு - நானே மீண்டும் பர்த்டே கேக் ஆக - மருத்துவமனைக்கு உற்சாகமாக சென்றேன்.///சித்ரா,உங்களுகே உரித்தான பாணியில் அழகுற விவரித்து இருப்பது எனக்குள்ளும் கொசுவத்தியை சுற்றிவிட்டது.நானும் மூன்றுமுறை பர்த்டே கேக் ஆகிப்போனேன் என்பதும்,டாக்டர் சொல்வதை கேட்டு நான் நடந்ததைவிட எனது நட்பான் டாக்டர் நான் சொன்னதை கேட்டு எனக்கு சிசேரியன் செய்ததை இப்பொழுதும் நினைத்தாலும் சிரிப்புவருகிற்து.

உங்கள் செல்லத்திற்கு என் அன்பு வாழ்த்துக்களும்,இனிய பிரார்த்தனைகளும்.

வரதராஜலு .பூ said...

செல்லத்திற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

டாக்டரோட அப்ரோச் உங்கள ரிலாக்ஸ் பண்ணிடிச்சி. நல்லதொரு அப்ரோச்

50க்கு வாழ்த்துக்கள்

வேலன். said...

சகோதரியின் 50 ஆவது பதிவிற்கும் குழந்தையின் பிறந்தநாளுக்கும் அன்பு வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்,வேலன்.

Mrs.Menagasathia said...

நெகிழ்வாக இருந்தது இந்த பதிவு!!

50வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!!

தங்களின் அன்பு செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! எப்படி கொண்டாடினீங்கன்னு வந்து சொல்லுங்க....

☀நான் ஆதவன்☀ said...

:)))) ஸ்பெஷல் தான்.

சரி குழந்தை போட்டோவை போட்டிருக்கலாம்ல

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//இந்த ஐம்பதாவது பதிவு உனக்கு ........ செல்லம்! //

என்னுடைய இந்த 33 ஆவது ஓட்டும், 61ஆவது கமேன்ட்டும் உனக்கே செல்லம்..

ஒரு பெண்ணின் மிக வலியான தருணத்தைக் கூட மிக நகைச்சுவையாக விளக்கி தன்னம்பிக்கை விளக்கை ஏற்றி நிறுத்திவிட்டீர்.. சத்தியாமாக என் மனதில் நின்று விட்டீர்.. உங்கள் பிள்ளைகள் குடுத்து வைத்தவர்கள்..(சத்தியமாக நின்று கை தட்டுகிறேன்..)..

உலகிலேயே மனிதனுக்கு அதிகப் படியான வலி தரும் தருணம் பிரசவம் தானாம்.. அது அதற்க்கு அடுத்த வலியை விட இரண்டு மடங்கு அதிகமாம்..

இந்த பெண்மைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

பிறந்த நாள் வாழ்த்துகள் எங்கள் செல்லத்திற்கு..

வாழ்க..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//ஏதோ "coffee time with Anu" நிகழ்ச்சி மத்தியில் இருப்பது போல உணர்வு. //

நிஜமாகவே நல்ல நகைச்சுவை..

ரிஷபன் said...

50 வது பதிவுக்கு கல கல வாழ்த்துகள்.
நகைச் சுவையுடன் சீரியஸ் மேட்டரைச் சொல்லும் கலை.. ஆஹா..

இராமசாமி கண்ணண் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் செல்லத்துக்கு. வாழ்த்துக்கள் உங்களின் ஐம்பாதவது பதிவுக்கு.

நசரேயன் said...

செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், சாலமன் அண்ணாச்சி பிறந்த நாளுக்கு சொன்னதை இப்பவும் சொல்லிகிறேன். அப்புறம் போட்டோ நீங்க சின்ன வயசிலே எடுத்ததா?

Deivasuganthi said...

குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. texasல எங்க இருக்கீங்க. நான் Austinல இருக்கிறேன்.

Ammu said...

பிறந்த நாள் காணும் செல்லக் குட்டிக்கு அன்பு முத்தங்கள் ;
எல்லாவற்றையும் positive ஆகப் பார்க்கும் என் அன்புத் தோழி சித்ராவுக்கு வாழ்த்துக்கள்...

padma said...

wow chitra u are a darling .nice post and best wishes to u and kutty.

பிள்ளையாண்டான் said...

அரைசதத்துக்கும், செல்லத்துக்கும் வாழ்த்துக்கள்!

எப்பூடி ... said...

அந்த டாக்டர் நூறு வருடம் நன்றாக இருக்க வாழ்த்துக்கள், அதேபோல செல்லம் பலநூறு பிறந்தநாள் கொண்டாட வாழ்த்துக்கள்.அதேபோல நீங்களும் பல்லாயிரம் பதிவுகள் எழத வாழ்த்துக்கள்.

நீச்சல்காரன் said...

பாப்பாவுக்கு என்னோட வாழ்த்துக்களை சொல்லிருங்க சித்ராக்கா

Ananthi said...

chitra..valakkam pol arumai... ;) ;) enjoyed it ma..

enakku ennoda flash back gnabagam vadhiruchu.. :D :D

sema narration.. thumbs up !!

Ananthi said...

Happy Birthday to Chellam.. ;) ;)

மயில்ராவணன் said...

அட்வாண்ஸ் பர்த்டே வாழ்த்துக்கள்....வாழ்க பல்லாண்டு

சுசி said...

உங்க செல்லத்துக்கு எங்களோட வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

பத்மநாபன் said...

உங்கள் செல்ல மகளுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .
அட , ரசனை குறையாமல் 50 பதிவுகள் .. பாராட்டுகள் ... வாழ்த்துக்கள்

thenammailakshmanan said...

சித்தூ முதல்ல 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ..கை கொடு ..!!

ரெண்டாவது செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் அன்பு முத்தங்களும் ...

அட அப்போ நான் கூட பர்த்டே கேக்கா ..எனக்கும் ரெண்டு பையன்களும் சிசேரியன் தான் .. நல்லா இருக்கே இது கூட ..

நல்ல பதிவு டா

பிரபு . எம் said...

WOW half century!! great akka
வாழ்த்துக்கள் அக்கா....

பாப்பாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இடுகை அட்டகாசம்.... நெகிழ்ச்சியாக இருந்தது....

அன்புடன் மலிக்கா said...

அன்புச்செல்லதுக்கு என் அன்பான வாழ்த்துக்களோடு முத்தங்கள்..

50.க்கும் வாழ்த்துக்கள்

ரோஸ்விக் said...

பாப்பாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...


நகைச்சுவை பட கூறியிருக்கிறீர்கள். :-)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

ஹுஸைனம்மா said...

50 இன்னும் நாட் அவுட்டாகத் தொடர்ந்துகொண்டிருக்க வாழ்த்துக்கள்!!

சசிகுமார் said...

உங்களுடைய 50 வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், இப்பெல்லாம் எங்கயும் நார்மல் டெலிவரி இல்லைங்க, சிசேரியன் தான்

அஷீதா said...

"அப்படி ஒரு நிலைமை எனக்கு நேர்ந்தால் - என் கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் - கம்பெனி பொறுப்பு ஆகாது என்றும் எழுதி வைத்து இருக்கலாம்."
என் கணவர், "இந்த நேரத்திலும் உனக்கு இப்படி எல்லாம் தோணுது பாரு" என்றார். என் கவலை எனக்கு.//Chancae illinga...eppadi ellam yosikireenga...he he he ...grt.

Congrats on ur 50th post.

திவ்யாஹரி said...

wish many more happy returns of day to chella kutty..

திவ்யாஹரி said...

//எந்த பிரச்சினையையும் பதட்டம் இல்லாமல் அணுகவும், அதில் இருக்கும் தனித்தன்மையை கண்டு ரசிக்க சிரிக்க பழகி கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டேன். (உடல், மன) வலியும் வேதனையும் அந்த அந்த நிமிடங்களுக்கு உரியவை. வலிக்குமே என்று கவலைப்படுவதும், வலித்ததே என்று புலம்புவதும் கவலைகளின் இருப்பிடம். டென்ஷன் இருட்டில், எல்லாமே அரண்டு மிரண்டு பயங்கரமாக தெரிகிறது. நகைச்சுவை ஒளியில் பார்த்தால் வெளிச்சமாக, பாசிடிவ் ஆக தெரிகிறது.//

எனக்கு ரொம்ப தேவையான அறிவுரை இது.. மிக்க நன்றி சித்ரா.. 50க்கு வாழ்த்துக்கள்..

karthik said...

பதிவுகள் அருமை

திவ்யாஹரி said...

50 வது ஓட்டு நான் தாங்க சித்ரா..

ராமலக்ஷ்மி said...

உங்கள் செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

//" சித்ரா ரெடியா? இன்று உன் மகள் பிறக்கும் நாள். நீதான் பர்த்டே கேக். கட் பண்ண போறேன். பர்த்டே சாங் பாடலாமா?" என்றார். எல்லோரும் சத்தமாக சிரிக்கும் சத்தம் கேட்டது - அதில் என் சிரிப்பும் இருந்தது.//

உங்களைப் போலவே அந்த டாக்டரும்.

//நகைச்சுவை ஒளியில் பார்த்தால் வெளிச்சமாக, பாசிடிவ் ஆக தெரிகிறது.//

நன்றி சித்ரா! ஐம்பதாவது பதிவுக்கும் என் வாழ்த்துக்கள்!

கண்மணி/kanmani said...

//டென்ஷன் இருட்டில், எல்லாமே அரண்டு மிரண்டு பயங்கரமாக தெரிகிறது. நகைச்சுவை ஒளியில் பார்த்தால் வெளிச்சமாக, பாசிடிவ் ஆக தெரிகிறது.//

நித்தி அப்ஸ்கேண்ட் ஆனதால் நாந்தான் தத்துவ பதிவுன்னு பார்த்தா யூ டூ சித்ரா

கண்மணி/kanmani said...

என் கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் - கம்பெனி பொறுப்பு ஆகாது என்றும் எழுதி வைத்து இருக்கலாம்."

அம்பூட்டு நல்லவளா;ஆ நீயி.....:))

கண்மணி/kanmani said...

ஹாப்பி பர்த்டே செல்லம்

பேரே செல்லமா இல்லை அம்மா செல்லமா?

க.பாலாசி said...

//எனக்காக என்னை தவிர வேற யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை.//

நீங்களே கவலப்பட்டதா எனக்கு தெரியல....

யப்பா சாமீ..........

பின்னோக்கி said...

வழக்கமான சிரிப்புடன் படித்தேன். குழந்தைக்கு வாழ்த்துக்கள். அனுபவம் அருமை.

sarusriraj said...

50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்
தங்கள் குழந்தைக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வித்யா said...

வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் செல்லத்துக்கும்.

Sridevi said...

Congratulations on your 50th Blog Chitra. Happy Birthday Chellam!!!

Mrs.Menagasathia said...

உங்களை தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன்.தொடரவும்.

http://sashiga.blogspot.com/2010/03/blog-post_17.html

ஜெரி ஈசானந்தா. said...

i wish you many more happy returns of the day chellam.
jerry uncle.
madurai.

PrinceR5 said...

எழுதவேண்டியதை எல்லோரும் எழுதியாச்சு நான் என்ன எழுத. இங்க மட்டும் இல்ல என்னோட ப்ளாக் லையும் தான் இந்த பதிவை படித்ததும் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது நம்முடைய வாழ்வில் நம்மை மாற்றிய நிகழ்வுகளையும் பிறருக்கு பயன்படும் படி பகிர்ந்துகொள்ளலாம் என்று. நெகிழ்வாய் இருந்திச்சிங்க நன்றி சித்ரா .

Chitra said...

என் மகள், செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் நன்றிகள் பல.
எனக்கும் வாழ்த்து சொல்லி, மேலும் எழுத ஊக்குவிக்கும் உங்கள் அன்புக்கும் நன்றிகள் பல.

முரளிகுமார் பத்மநாபன் said...

என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், குழந்தைக்கும் உங்களுக்கும்.

Madhavan said...

//"என் கணவர் முகத்தில் மகளை பார்க்க போகிற சந்தோஷம்'
& "என் மகன் பிறக்கும் நாள் பார்ட்டிக்கு.." -//

oops.. knowing the gender of the baby (before borth) is an offence here.

Interesting (one of the) chapters or your autobiography.

Chitra said...

It is the mother's choice to know the gender of the baby in USA. Usually, she comes to know by 5th or 6th month of her pregnancy. If she chooses not to know about the gender, the medical staff should try their best to keep it as a secret.

Priya said...

சித்ரா, நான் ரொம்ப லேட்டா வந்திருக்கேன்;(
முதல உங்க செல்லத்துக்கு என் அன்பான வாழ்த்துக்களும் முத்தங்களும்!
உங்க 50வது பதிவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

வாழ்க்கையில நடக்கிற எதையுமே ரொம்ப கேஷுவலா பார்க்கிறது நல்லதுதான். அதை நீங்க எழுதியிருக்கிற விதம் ரொம்ப நல்லா இருக்கு!

SUFFIX said...

டாக்டர்க், நர்ஸ்களும் வெட்டிப் பேச்சா? ஹி ஹி..

SUFFIX said...

செல்லத்திற்குபிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

George H said...

Good one..Chitra..

சே. குமார் said...

நெகிழ்வான பகிர்வு அக்கா...

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பகிர்வு...

குட்டிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...