Monday, March 8, 2010

ice skating

ice skating  -  ஆசை யாரை விட்டது?
ice-skating மற்றும் me-skating. 
வழுக்கி விழலாம் வாங்க ............

கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்:

நமக்கு  icy ரோடுல நடந்து போனாலே, வழுக்கும். இதுல, காலில் கத்தி பொருத்தப் பட்ட ஷூஸ் போட்டு வழுக்கு என்று   அனுப்பிவிட்டா, ஒரே சொய்ங் தான்.  Ice rink arena ல நம்மை உள்ளே அனுப்பிட்டு, நாம வழுக்கி போய் கீழே விழுறதை பாத்து ரசிச்சு சிரிக்க ஒரு நண்பர் கூட்டம், அந்த வளைவை சுத்தி நிக்குது. நம்மை வச்சு காமெடி ஷோ நடத்த, நாமே  கூட்டம் சேர்க்கிற கொடுமைனு நினைச்சிக்கிட்டேன்.  ஆனால், முதல் இரண்டு மூன்று தடவைதான் சிரிப்பு சத்தம் எல்லாம். அப்புறம், ஒரே அறிவுரை மழைதான்.  ice rink ல முன்ன பின்ன இறங்காத நண்பர் -   கோக் குடிக்கும் போது கூட,  ஐஸ் கட்டிகள்  போட்டு குடிக்காதவர் - அவர் கூட மாறி மாறி கொடுத்த டிப்ஸ்....... அடேங்கப்பா..........  சும்மா சொல்லக் கூடாது - பாசக்கார பய புள்ளைக!
  ஆறுதலான  விஷயம் என்ன என்று  கேட்டால்:  வழுக்கி விழுந்த  பொண்ணுனு,   என் கணவர்   கை விடாம,  நான்  கீழே விழும் போதெல்லாம், தூக்கி விட்ட கை கை கொடுத்த தெய்வம் அவர்.  மனுஷன் சளைக்காமல் - முக்கியமா சிரிக்காம - உதவி செய்தார் பாருங்க.  அட, அட, அட.........
 
ஆடத் தெரியாதவள், மேடையை குறை சொன்னது போல......

உள்ளே நுழையும் முன், எனக்கு மூளை சலவை செய்தவர்கள் பகிர்ந்த கூற்று:
" அங்கே பாருங்க. எவ்வளவு சின்ன பிள்ளைகள் எல்லாம் தைரியமா போகுது. நீங்க, சும்மாவே தைரியமான ஆளு. (எப்படா, நான் அப்படி சொன்னேன்? இன்னுமா உலகம் என்னை நம்புது? உசுப்பேத்தி விடுறதுக்கு ஒரு அளவே இல்லையா?)  கொஞ்சம் நேரம் அப்படியே, அந்த கைப்பிடி பிடிச்சிக்கிட்டு பழகிட்டு, அது பக்கத்திலேயே கை விட்டுட்டு போங்க. விழுகிற மாதிரி இருக்கும் போது, எட்டி அந்த கம்பியை பிடிச்சிக்கோங்க. அவ்வளவுதான். பயம் இல்ல."
கேக்கும் போது நல்லாத்தான் இருந்தது. அங்கே போனா................. நல்லாவே இல்லை.

வழுக்கு தரையில், வழுக்கும்னு தெரிந்தே வழுக்குவதற்கு  என்றே, மூளை மழுங்கி,  வழுக்க வந்தவளுக்கு இந்த வழுக்கலும் வேணும், இன்னமும் வழுக்கி விழ  வேணும்............ அவ்வ்வ்வ்வ்.........

முதல் கோணல் - சாரி, விழல் - முற்றிலும் விழல்:

வலது காலை வச்சு உள்ளே நுழைந்த உடனேயே .......... ணங் என்று ஒரு அடி - ஒரு  அதிர்வு - ஒண்ணும் புரியவில்லை. ice rink ல குப்புற விழவில்லை - மல்லாக்க விழுந்து கிடந்தேன். எழும்ப முயற்சி செய்தால், இல்லாத ஊருக்கு வழி கேட்ட மாதிரி, காத்தை பிடிச்சு - கை அந்தரத்துல fiddle வாசிக்குது. அட பாவிகளா! நிற்கும் போது பக்கத்தில  இருந்த கைப்பிடி கம்பி, இப்போ எட்டாக் கனி போல உயரத்தில் தெரிந்தது.
 
நம்ம ஆளு உதவியால எழும்பி நின்ற அடுத்த நிமிடமே, ணங்.......................!!! விடாக் கொண்டன் - கொடாக் கொண்டன்  பாணியில், பல முறை "எழு முன் -  விழு பின்"  கதை தொடர்ந்தது. எழுந்தது விழத்தானோ, விழுந்தது எழத்தானோனு  இலக்கிய கேள்வி எல்லாம்,  அடி வாங்கிய தலைக்குள் எழுந்தது - இல்லை விழுந்தது.

களவும் கற்று மற:

நான் நின்று கொண்டிருந்த நேரத்தை விட,  ஐஸ் தரையோடு தரையாய் உருண்டு கொண்டிருந்த நேரம் தான் அதிகம். அந்த angle ல இருந்து பாத்தப்போதான், மேல உள்ள டிஸ்கோ பிளாஷ் லைட்ஸ், பலூன்ஸ், பளிச் பளிச் strobe லைட்ஸ் அழகு எல்லாம் இன்னும்  நல்லா தெரிந்தது. எங்கே எங்கே எல்லாம் லைட்ஸ் வைத்து இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய முடிந்தது.   ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், கீழே விழுந்து அடி வாங்கினேன். பட்ட இடத்திலேயே அடி பட்டேன். அடி வாங்கிய இடங்களில்,    வலி போக ஒரு வாரம் ஆச்சு. ஆனாலும், மனதுக்குள் இன்னும் ஒரு சந்தோஷம். மக்களே, நானும் ice skating பண்ணி (????!!!)  இருக்கேன்.


என்ன இருந்தாலும், இதுக்கெல்லாம் அசந்து விடும் ஜென்மமா நான்?   விழுந்து விடுவோமோ என்ற பயமும் - விழுந்து விட்டால் எல்லோரும் சிரிப்பார்களே என்ற வெட்கமும் - கீழே விழுந்தால் வலிக்குமே என்ற தயக்கமும் இத்தனை நாட்கள், நான் முயற்சி செய்ய தடையாய் இருந்தன.  விழுந்தாச்சு, எல்லோரும் சிரிச்சாச்சு, வலி என்னனு தெரிஞ்சாச்சு.  தடைகள் உடைஞ்சு போயே போச்சு.   இனி என்ன?   நிச்சயம், திரும்பவும் வாய்ப்பு கிடைக்கும் போது  போவேன்.  அடுத்த முறையாவது, விழாமல் நிற்க கற்று கொள்ள வேண்டும். அப்புறம் skating எப்படி செய்ய வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும்.

இப்படித்தான், பல விஷயங்களில் நாம் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம்.  முதல்  அடி எடுத்து வச்சுட்டா - அப்புறம், ஒரே சொய்ங்................!!!

55 comments:

ஜெட்லி... said...

அடுத்த தடவை விழாமல் நிற்க வாழ்த்துக்கள்....:))

க ரா said...

முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும். கலக்குங்க சித்ரா.

Anonymous said...

முதல்ல உங்க ரோட்ல்ல நடங்க பழகுங்க பிறகு icy ரோட்ல்ல நடக்கலாம்

Thenammai Lakshmanan said...

எப்பவுமே எதிலுமே முதல் அடிதான் கஷ்டம்.. எடுத்து வைச்சுட்டா தடுமாறியாவது முன்னேறிட மாட்டமா சித்ரா... நல்லா இருக்கு.. அடி அதிகமோ.. இல்லடா வலி அதிகமோ.. ஹிஹிஹி

திருவாரூர் சரவணா said...

பொதுவாவே எல்லாருக்கும் ஸ்டார்டிங் டிரபிள்தான். முயற்சி, வலி இருந்தாலும் பலன் தரும். நடத்துங்க... இல்ல, விழாம சறுக்குங்க....

சைவகொத்துப்பரோட்டா said...

முடிவில் சொன்ன தத்துவம் ஜூப்பரு :))

Jerry Eshananda said...

நல்லாவே விளையாடுறீங்க..[எழுத்தில்.]

Ramesh said...

வந்து போன தடம் மட்டுமே இப்போது தலைப்பில் நான்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹஹ்ஹா.. வாழ்க்கையில் பல அடிபட்டவங்க சொல்ற தத்துவம் ந்னு சொல்வாங்களே அது இது தானோ.

நானும் இது போல மனாலி போனப்ப விழுந்து எழுதிருக்கேன் :)

settaikkaran said...

இதெல்லாம் சென்னைவாசிங்க சர்வசாதாரணமாப் பண்ணிருவாய்ங்க! மழைக்காலத்துலே எக்மோர் ஸ்டேஷனிலேயும், மாம்பலம் ரங்கநாதன் தெருவிலேயும் நம்மாளுங்க பேலன்ஸ் பண்ணி நடப்பாங்க பாருங்க! அதை பீட் பண்ண எந்த விளையாட்டாலேயும் முடியாது! :-))

நட்புடன் ஜமால் said...

எத்தனை பேர தள்ளிவிட்டீங்க

அதை பற்றி ஏன் எழுதலை

அடுத்த பதிவா சரி சரி ;)

ராமலக்ஷ்மி said...

//அந்த angle ல இருந்து பாத்தப்போதான், மேல உள்ள டிஸ்கோ பிளாஷ் லைட்ஸ், பலூன்ஸ், பளிச் பளிச் strobe லைட்ஸ் அழகு எல்லாம் இன்னும் நல்லா தெரிந்தது. எங்கே எங்கே எல்லாம் லைட்ஸ் வைத்து இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய முடிந்தது.//

விழுந்தாலும் அந்த அனுபவத்தில் கிடைத்த நன்மை என்னன்னு ஆராய்ச்சி செஞ்ச இந்த angle ரொம்பப் பிடிச்சுது:))!

//இப்படித்தான், பல விஷயங்களில் நாம் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம். முதல் அடி எடுத்து வச்சுட்டா - அப்புறம், ஒரே சொய்ங்................!!!//

அருமையானதொரு தன்னம்பிக்கைப் பதிவு சித்ரா!

பொருத்தமான தலைப்புகளையும் ரசித்தேன்:)!

பித்தனின் வாக்கு said...

பார்த்தும்மா. அடிகிடி பட்டுடடப் போகுது. ஜாக்கிரதையாக பழகுங்கள். விழனும் என்று இருந்தால் அங்க மட்டும் இல்லை நம்ம பாத்ரூமில் கூட விழ வாய்ப்பு உண்டு, கவனமாக செய்யவும். நல்ல பதிவு. வழுக்கி விழுந்தவள் என்ரு கை கெடுத்த தெய்வம். ஒரு தடவை கை கெடுத்து மாட்டியவர்தான சாலமன் அண்ணாச்சி. அதுனாலதான் தைரியமா கை கெடுக்கும் கையா மாறிட்டாரு.
எப்படி இருக்கார்? நன்றி சித்ரா.

ISR Selvakumar said...

எந்த ஊரில், எந்த இடத்தில் என்ற தகவல் மிஸ்ஸிங். பல்டி அடித்ததில் எழுத மறந்து போயிடுச்சு போலருக்கு.

கடந்த மாத துபாய் பயணத்தில், இரு முறை ஸ்கேட்டிங் ரிங் போய்விட்டு வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வந்தேன். உள்ளே இறங்கவேண்டும் என்றே தோன்றவில்லை.

அதனால் சித்ராவின் தைரியத்தை மெச்சி (சம்மர் வந்துவிட்டதால்)ஒரு குச்சி ஐஸ் வழங்குகின்றேன்

Vishy said...

அய்யய்யோ.. நான் நேரில இல்லாம போயிட்டேனே.. அட தூக்கி விடறதுக்குங்க :)

video போட்டா இன்னும் நல்லா இருந்திருக்கும் :)

funny thing aside.. நான் ஒரு முறை (well ஒரே முறை தான்) roller skating முயன்ற பொழுது வாங்கிய விழுப்புண்கள் இன்னும் நினைவில் உள்ளது.. முழங்கால் உயர சின்னஞ்சிறுசுகளெல்லாம் தூக்கி விட உதவிக்கு வர நெலமை ரொம்ப மோசமாயிருந்துச்சு.. ஆனா I started appreciating things better.. சிறு குழந்தையின் முதல் நடை, முதல் முறை balance இழக்காத சைக்கிள் பயணம்.. இப்படி எத்தனையோ matter of fact ஆக நாம் எடுத்துக்கொள்ளும் விஷயங்களுள் விடா முயற்சி புதைந்துள்ளது.

ஒண்ணுமில்லை.. இன்னிக்கு என் மகன் நாலு தப்படி தவழ்றதை பாத்து ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன் :)

நாடோடி said...

உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்கிட்டங்க் போல..

கண்ணா.. said...

அக்கா,

மீண்டும் நல்ல பதிவு....

உங்களுக்கு பில்டிங் ஸ்டாராங்கு...பேஸ்மட்டம் தான் கொஞ்சம் வீக்குன்னு நினைக்கிறேன்

:))

vasu balaji said...

எதயும் ப்ளான் பண்ணித்தான் பண்ணணும். ப்ளான் ரெம்ப மிக்கியம். கத்திமேல நடக்கறதுன்னு சும்மாவா சொன்னாங்க:))

பின்னோக்கி said...

வாழ்க்கையில வழுக்கி விழுறதுன்றது இது தானா ?. டேஞ்சரஸ் கேம் பார்த்து.

பஹ்ரைன் பாபா said...

இனிமே எல்லாம் அப்டித்தான்...........!

பனித்துளி சங்கர் said...

கலக்குறீங்க .வாழ்த்துக்கள் !

தமிழ் உதயம் said...

கடைசி பாரா அற்புதம்.
ice skating க்கு மட்டுமல்ல. மொத்த வாழ்க்கைக்கும் பொருந்தக் கூடிய சிந்தனைகள்.

SUFFIX said...

ஒஹ், அடுத்த முறை வெற்றி தான்!!

ஹுஸைனம்மா said...

ஒரே சமயத்துல சிரிக்கவும் வச்சு, சிந்திக்கவும் வக்கிறீங்க பாருங்க!!

கண்மணி/kanmani said...

இதுக்குப் பேருதான் சொ.செ.சூ ஆஹ்ஹா:)))
அடுத்தமுறை வழக்காமல் வழுக்கி விழாமல் வழுக்க....வாழ்த்துக்கள்

goma said...

விழுந்து விடுவோமோ என்ற பயமும் - விழுந்து விட்டால் எல்லோரும் சிரிப்பார்களே என்ற வெட்கமும் - கீழே விழுந்தால் வலிக்குமே என்ற தயக்கமும் இத்தனை நாட்கள், நான் முயற்சி செய்ய தடையாய் இருந்தன. விழுந்தாச்சு, எல்லோரும் சிரிச்சாச்சு, வலி என்னனு தெரிஞ்சாச்சு. தடைகள் உடைஞ்சு போயே போச்சு. இனி என்ன? நிச்சயம், திரும்பவும் வாய்ப்பு கிடைக்கும் போது போவேன். அடுத்த முறையாவது, விழாமல் நிற்க கற்று கொள்ள வேண்டும். அப்புறம் skating எப்படி செய்ய வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும்.

இப்படித்தான், பல விஷயங்களில் நாம் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம். முதல் அடி எடுத்து வச்சுட்டா - அப்புறம், ஒரே சொய்ங்................!!!

ஒரு கலையை எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அழகாக விவரித்திருக்கிறீர்கள்..

அப்படியே ஒரே சொய்ங்...கில்
ஆர் ஏ புரம் சென்னையில் வந்து விழுங்கள் பார்க்கலாம்....தூக்கி விட, நான் காத்திருக்கிறேன்

கலகலப்ரியா said...

=))...

மங்குனி அமைச்சர் said...

ஹலோ என்னங்க நீங்க எல்லா வண்டியும் வோட்ரிங்க , காமெடி வண்டி , சீரியஸ் வண்டி , கவிதா வண்டி சே.. சாரிங்க டங்கு சிலிபாயிருச்சு கவித வண்டி அப்புறம் சமையல் வண்டி ? நமக்கு மொக்க வண்டிய தவிர எதுவும் வோட்ட வரமாட்டேங்குது

மங்குனி அமைச்சர் said...

அந்த போடோல ரைட் சைடு மூனாவதா நிக்கிற பையன் (ஆண்டவா அது பொண்ணா இருக்க கூடாது போடோல சரியா தெரியல ) நான்தாங்க.

Vidhya Chandrasekaran said...

விழுந்த இடத்துக்கு ஒன்னுமில்லயே.. அங்க கல்வெட்டு வச்சுருங்க. இன்னும் பேமஸாயிடும்:)

மைதீன் said...

மருந்து இனிப்பு கலந்து குடுக்கற மாதிரி,நல்ல எழுதியிருக்கீங்க!

வேலன். said...

ஆமா...படத்தில் நீங்க எங்க இருக்கீங்க...உங்களை வட்டம் போட்டு காட்டியிருக்கலாமே...்வாழ்க வளமுடன்,வேலன்.

Senthil Kumar said...

//எப்படா, நான் அப்படி சொன்னேன்? இன்னுமா உலகம் என்னை நம்புது? உசுப்பேத்தி விடுறதுக்கு ஒரு அளவே இல்லையா?

சூப்பர்

Anonymous said...

//எப்படா, நான் அப்படி சொன்னேன்? இன்னுமா உலகம் என்னை நம்புது? உசுப்பேத்தி விடுறதுக்கு ஒரு அளவே இல்லையா?

சூப்பர்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

திருச்சியில் ஆதிகுடி என்று ஒரு ஹோட்டல்.100 வருடன்களுக்கு மேல் பழமையான ஹோட்டல் அது! அங்கு பாதாம் ஹல்வா பிரசித்தம்!அந்த பாதாம் ஹல்வாவை வாயில் போட்டது தான் தெரியும்! சர்ரென்று வழுக்கி உள்ளே போய் விடும்! அது போல, உங்கள் ICE SKATING ல் ஒரு அருமையான தத்துவம்
படித்தவர் மனத்துள் சர்ரென்று வழுக்கிக் கொண்டுப் போய் விட்டது!!!

Unknown said...

Chitra... romba thunichal than ungallukku..to try ice skating...Congrats..(Had tried it once in 2003 with kids at Qatar..somehow managed to follow instructions..and avoid falling..but was just slowly walking around..like a toddler)

Romeoboy said...

ஹா ஹா ஹா விழுவதில் கூட காமெடி பண்ணலாமா

அ.ஜீவதர்ஷன் said...

நீங்களும் எவளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது, அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

நசரேயன் said...

நீங்க கீழே விழுந்தும் மைதானத்துக்கு சேதாரம் ஏதும் இல்லை !!!

அன்புடன் மலிக்கா said...

ஆகா விழுந்தீங்களா அதைபார்க்கக்கொடுத்துவைக்கலையே!
அதையும் ஒருகிளிக் போடக்கூடாதா?

நாங்களும் முதலில் விழுந்து எழுந்தோம் யாரும் சிரிச்சாங்களான்னு
தெரியலை! ஆனா இப்ப சூப்பராக கத்துக்கிட்டோமுல்ல விழாம நடக்க.[அட ரோட்டுல நடகிறதைத்தான்]

Prathap Kumar S. said...

டீச்சர்... ஸ்கேட்டிங்ல வழுக்கலாம் தப்பில்லை...வாழ்க்கைலதான் வழுக்ககூடாது.
துபாய்ல கூட இருக்கு..ஆனா அதுக்கு காசு கொடுக்கனுமாமே..நாம என்னிக்கு காசுகொடுத்து போயிருக்கும்.... ஹீஹீஹீ

Mythili (மைதிலி ) said...

இந்த மாதிரி வழுக்கல் விளையாட்டுக்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. வாய்ப்புகள் தான் வந்ததில்லை.. வாழ்கயிலத்தான் புதுப்புது துறைகள்ல கலை வைத்து விட்டு வழுக்கிக்கொண்டு இருக்கேன்.. மெல்ல எழுந்து நடந்து விடுவேன்னு நம்பிக்கை இருக்கு... தள்ளி விட்டது நீ தான்.. எனக்கு மட்டும் தான் தெரியும் அது.. உன்னுடைய நண்பர்கள் சரியான அட்வைஸ் தான் கொடுத்திருக்காங்க... அந்த அனுபவம் இல்லைன்னா இந்த இடுகை இல்ல.. ஒரே... கல்லுல... ரெண்டு.. மங்கா.. ஆ..ஆ..ஆ...
நல்லா ரசிக்கும் படியான பதிவு...

சுசி said...

செம காமடி.. சிரிச்சத்துக்கு சாரி சித்ரா..

நான் பசங்கள கூட்டி போறதோட சரி.
வழுக்கி விழ தயாரில்லை..

நீங்க ரொம்ப தைரியசாலிதான்.

எட்வின் said...

நீங்களும் விழுந்து எங்களயும் விழ வச்சிட்டீங்க... சிரிப்பில.

வாழ்த்துக்கள்.

நெல்லை உங்கள் ஊர் என்பதறிந்து மகிழ்ச்சி

prince said...

தோல்விகளை தோற்கடித்து வெற்றி விடியலை நோக்கி பயணிக்க வாழ்த்துக்கள் ....படையெடுக்கும் அனைத்து கஜினி (சித்ஜினி) களுக்கும் ..தலைப்பை பார்த்ததும் தம்பட்டம் அடிக்க எழுதிருக்காங்களோ என நினைத்தேன்...நிச்சயமாக இல்லை என படித்ததும் தெரிந்து கொண்டேன். தன்னம்பிக்கையூட்டும் பதிவு

அன்புத்தோழன் said...

naa kuda indha maadhri vilundhu silra vaarirken.... ha ha.... But adhu ordinary skating dhaan..... imagine panni paarunga 6 adi aambala, thaka thimi thaa potu vilundhu vaarradha..... mulu neramum tharaiya aaraaichi panradhulaiye pochu..... aada theryaadhavanukku meda konalndra maadhri shoe sarilla machanu sonnadhu ippo kuda nenacha siripu varudhu.....

But good message in the end.... next attempt ku all the best.... marakkama fotos podunga.... he he.....

சசிகுமார் said...

இது ஒரு சின்ன மேட்டர், ஆனா அதையே ரசித்து மற்றவர்களும் ரசிக்கும் வண்ணம் எழுதி உள்ள உங்களின் திறமைக்கு ஒரு சல்யுட்

மரா said...

தானே விழுந்த தானைத் தலைவின்னு பட்டம் குடுத்தரலாமா?..... :)

Asiya Omar said...

ice skating -கில் பிள்ளைகளை விட்டுட்டு மால் வலம் வந்ததுண்டு,நானும் கொஞ்சம் ஸ்கேட்டிங் பண்ணி கற்பனை செய்து பார்த்தேன்,நான் சுழன்று சுழன்று ஸ்கேட்டிங் செய்ததில் மற்றவங்களுக்கு தலை சுற்றி விட்டதாம்.

Paleo God said...

உங்களுக்கே தெரியாமல் ஒரு கவிதை எழுதிட்டீங்க

//வழுக்கு தரையில், வழுக்கும்னு தெரிந்தே வழுக்குவதற்கு என்றே, மூளை மழுங்கி, வழுக்க வந்தவளுக்கு இந்த வழுக்கலும் வேணும், இன்னமும் வழுக்கி விழ வேணும்....//

வாழ்துகள்..:)

ஜெய்லானி said...

nice :-)))

cheena (சீனா) said...

அன்பின் சித்ரா

நகைச்சுவையின் உசம் - முதல் முயற்சியின் விளைவு ஒரு இடுகை - நல்லாவே இருக்கு - நருமை - யாரொ ஒருவர் மறுமொழியிலே சொன்ன மாதிரி - வழுக்கௌம் போதெல்லாம் கை கொடுத்து உதவும் கரம் முதன் முதலில் கை கொடுத்த சாலமனுடையது.

முழுவதும் படித்தேன் - ரசித்தேன் - மறு மொழிகள் உட்பட

நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா

குடந்தை அன்புமணி said...

நல்ல அனுபவமுங்க...

Unknown said...

ஹா ஹா ஹா...........

Unknown said...

i read this today only through some other link.