இது ஒரு சினிமா விமர்சனம். முதல் முறையாக நானும் விமர்சனம் எழுதுறேன்.
சன் டிவி promote செய்த படங்களிலேயே, மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் மக்கள் பார்த்த படம் -
"கதவை திற - எல்லோரும் பார்க்கட்டும்"
இதில், தன் புளப்பை சாமியார் வேலையில் பார்த்தவரை ஹீரோவாக முதலில் எல்லோரும் கருதி, இறுதியில் அவர் தான் வில்லன் என்பது கிளைமாக்ஸ் காட்சியில் தெரிய வர, நல்ல ட்விஸ்ட். சாரி, சஸ்பென்சை சொல்லி தொலைச்சிட்டேன். இந்த முடிவு தெரியாமல்தான், நிறைய பேர் - படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், இந்தியாவில் வாழும் இந்தியர்கள், வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் எல்லோரும் கத்தை கத்தையாய் பணத்தை கொடுத்து புண்ணியம் தேடிக்கிறேன் என்று சொல்லி, அவர் பாவத்தில் பங்கு வாங்கிக்கிட்டார்களாம். ஆன்மிகத்தை வைத்து கல்லா பெட்டி நிரப்பி கொண்டிருந்தவரே இப்போ மற்றவர்கள் கல்லா நிரப்புவதற்கு காரணம் ஆகி விட்டார் என்ற ஒரு வரி கதையை, கிளுகிளுப்பூட்டும் காட்சி நிறைந்த ஒரு பிட் படத்தில் காட்டி அசத்தி இருப்பது டைரக்டர் திறமையா, இல்லை சன் டிவி திறமையா என்று தெரியவில்லை. யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை. அதான் கேட்கிறேன்.
கேமரா மேன் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆங்கே ஆங்கே காட்சி தெளிவு இல்லாமல், ஆன்மிகத்தில் அமைதி தேடி, அந்த தலைவரிடம் ஏமாந்து போனவர்களின் புத்தி மாதிரியே இருந்தது.
படத்தை வேறு டிவியில் போட்டு விடுவார்களோ என்ற பயத்தில் சுட சுட தந்ததால், சென்சார் - ரேட்டிங் - எதை பற்றியும் கவலை படாமல் எல்லோரும் பார்க்கலாம் என்ற நியதியில் வெளியாகி இருக்கிறது.
இத்தனை நாள் அடித்த கூத்து, ஏன் திடீர் என்று அம்பலத்தில் வந்தது என்ற அசிங்கமான பின்னணி காரணங்கள் - யார் யார் எந்த சொத்து பத்து படுக்கை பிரச்சினையில் எதிரிகளாய் மாறினார்கள் என்று அடுத்த பாகத்தில் வெளியிடுவதாக தகவல் சொல்லி வருகிறார்கள். இல்லை, மக்கள் மேலும் ஏமாறக் கூடாது என்ற நல் எண்ணத்தில் ஒரு புண்ணியவான் படம் எடுத்து விட்டான் என்றும் சர்ச்சை எழுந்து உள்ளது.
சும்மா டிவி சீரியலில் பார்த்ததையே பார்த்து போர் அடித்து போய் இருந்த தாய் குலங்களுக்கும் - நாட்டு நடப்பை பத்தி பேசுனா ஆட்டோ வருது , ஆனால் இதை பத்தி பேசுனா நல்லா இருக்கு என்ற எல்லா குலங்களுக்கும் - காவியே அது பொய்யடா, அது ஏமாற்றும் ஒரு பையடா என்று சொல்லும் நாத்திக குலங்களுக்கும் - இந்த கசமுசா பேச்சுக்கள் நல்லா அவலாக அமைந்து உள்ளது. எனக்கும் ஒரு பதிவு கணக்காச்சு.
மொத்தத்தில் இந்த படம் - இரண்டு வாரங்களுக்கு எல்லோருக்கும், நல்ல பொழுது(தை)போக்கும் அம்சம் உள்ள படம்.
சரி, போட்டிக்கு வருவோம் -
இந்த படம் மறக்க எத்தனை நாட்கள் ஆகும்?
- (அ) ஒரு மாதம் (ஆ) ஒரு மூன்று மாதம்
இந்த படம் தந்த பாடம், எத்தனை பேருக்கு புரிந்து இருக்கும்?
- (அ) ஒரு ஐந்து பேர் (ஆ) ஒரு பத்து பேர்
இதே போல உள்ள அடுத்த நியூஸ், இன்னும் எத்தனை நாட்களில் வரும்?
- (அ) - வருடத்துக்கு ஒன்று என்றால் சுவாரசியம் இருக்கும்.
(ஆ) - இன்னும் இரண்டு வருடமாவது வேண்டாமா? - முதல் வருடம், ஒருவனை தலையில் தூக்கி வச்சு கொண்டாடணும். மறு வருடம், அவன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றணும்.
அந்த நேரத்தில் பலிகடா ஆகப் போகும் நடிகை யார்?
- (அ) பத்து வருடம் முன் பிரபலமாக இருந்த ஒரு நடிகை.
(ஆ) வளரத் துடிக்கும் - ரெண்டு படத்தில் தலை காட்டின நடிகை.
விடைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள். தினமும் சன் நியூஸ் பாருங்கள். செய்தியையும் உங்கள் விடைகளும் சரியாக இருந்தால், சன் நியூஸ் இலவசமாக அந்த exclusive video அனுப்பி வைப்பார்கள்.
60 comments:
இதுக்கு விமர்சனம் வேறயா....
சுவாமி கில்மனாந்தா தமிழ்நாட்டு மக்களை
காப்பாத்து......
இந்த மாதிரி ஒரு விமர்சனத்தை நான் இதுவரை படித்ததில்லை. அருமை அட்டகாசம், இதில் இருந்து உங்களின் இன்னொரு முகத்தை தெரிந்துகொண்டோம்.
விடைகளுக்கு பதில் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லையே :(
சொல்ல வேண்டியதை அழகாகச் சொல்லி,இடிக்க வேண்டியதை இடி போல் இடித்து சூப்பரோய்!!!!!
மீடியாவை இதைவிட ’போட்டுத் தாக்கு’பண்ண யாராலும் முடியாது.....சும்மா பின்னி பெடல் எடுத்து விட்டீர்....இன்றைய இந்த வார இந்த மாத கலக்கல் பதிவு இதுதான்
நீங்களும் இது பற்றி எழுதியாச்சா?
அடுத்தவன் படுக்கையறையை எட்டிப் பார்த்துப் படமாக்கி , அதை நம்முடைய family room இல் ஒளி பரப்பும் ஊடக தர்மத்தை என்ன சொல்வது? உலகெங்கும் மத குருமார்கள் நடத்தும் காம லீலைகளுக்கு அளவில்லைதான். ஆனால் அதைப் படம் பிடித்து, தணிக்கை செய்யாமல் குழந்தை, குட்டிகளும் பார்க்கும்படியாக நம் வரவேற்பறையில் படம் காட்டுவது அநாகரிகமான செயல். இதுதானா தமிழனின் தர்மம்? மஞ்சள் பத்திரிகைக்கும், சன் டிவிக்கும் என்ன வித்தியாசம்?
நக்கலா இருந்தாலும் சமூக அக்கறையோடதான் விமர்சனம் எழுதியிருக்கீங்க.பதிவுலகத்துல எல்லாரும் நித்தமும் நித்திய கேடியைப் பத்தி எழுதுற சூடு குறைந்த பிறகுதான் நான் இது பத்தி கட்டுரை எழுதலாம்னு இருக்கேன்.கூட்டத்துல தொலைஞ்சுடக்கூடாதுல்ல.
அக்கா...இதெல்லாம் இருக்கட்டும்...சந்தடி சாக்குல என்னைய அண்ணான்னு சொல்லி உங்க வயச குறைச்சுக்க பார்த்தீங்கிளா?...நான் ரொம்ப சின்ன புள்ளையாக்கும்.
நான் இமயமலை அப்படி இப்படின்னு சொன்னீங்க. ஒருத்தர் இமயமலைக்குப் போயிட்டு அப்பப்ப வாயைக்கொடுத்து மாட்டிக்கிறது போதாதா...நான் ஏற்கனவே பல இடத்துல வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டியிருக்கேன். அந்த அனுபவத்துல சொல்றேன். அவ்வளவு சீக்கிரம் பெரிய வில்லங்கத்துல மாட்டிக்காதமாதிரிதான் குரல் கொடுப்பேன்.
அதி விரைவில் இளைய பாரதத்துல நித்திய கேடி மட்டுமில்லாம வேற சில கேடிங்களைப்பத்தியும் என் பார்வை என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.
படம் ஹிட்
உலக இணைய வரலாற்றில் முதன்முறையாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்! ஆனால், என்ன அநியாயம்? இந்தப் படத்தின் திருட்டு சி.டி.க்கள் பர்மா பஜாரில் தண்ணிபட்ட பாடாகி விட்டதே? படம் ஓடுமா? :-(((
வெயிட் செஞ்சு பாப்போம்
ஒரு சாமியாரின் லீலைகளை அம்பலமாக்குவதாகச் சொல்லிக்கொண்டு, நீலப்படங்களை ஒளிபரப்பி, ஒரு சினிமா பார்க்கிற மனநிலைக்குத் தள்ளி, மொத்த தமிழகத்தையும் புத்தி மழுங்கச் செய்த சன் டிவியை நையாண்டி செய்திருக்கிறது கட்டுரை.
மீடியாக்களின் சுய சென்சார் பற்றி திண்ணமாக முடிவெடுக்கக் கூடிய கட்டம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.
நீ மட்டும் தான் இத பத்தி இன்னும் எழுதலன்னு சந்தோஷப்பட்டுகிட்டிருந்தேன்.... நீயுமா..ஆ ...ஆ.. உன்னையும் விட்டுவைக்கலையா அய்யா சாமி .. (வடிவேலு ஸ்டைல படிக்கவும்) போதும்மா.. சைக்கிள் காப்புல.. புந்து விளையாடுற.. கெட்டிகாரி..வாசகர்களுக்கிட்ட கேட்ட கேள்வி ஒருபக்கம் இருக்கட்டும்.. நீ எப்படியும் இத ஒரு மாசம் மறக்கமாட்ட .. நீ மறந்தாலும் இவிங்க யாரும் உன்ன மறக்க விடமாட்டங்க.. நல்ல சினிமா.. நல்ல விமர்சனம்... காட்ச்சிகள் தெளிவா இல்லையா?? கவலைபடாத...இன்னொரு டேக் எடுத்திடுவோம்...
விமர்சனம் ஜூப்பரு. சினிமா வரலாற்றில் இதுதான் முதன் முதலில் தொல்லை
காட்சியில் வெளி வந்ததாம்.
:(
உங்களின் பதிவு அர்த்தமுள்ளதுதான். இருந்தாலும் இந்த நிகழ்வை அனைவரும் சீக்கிரம் மறக்க வேண்டிய ஒன்று. இதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துவது மாதிரியான பதிவுகள் வேண்டாமே பீளிஸ். இனி அந்த மனிதர்களை கடவுள் பார்த்துக்கொள்வார்.
அக்கா பின்னிட்டீங்க :)
எப்படி யோசிக்கிறீங்க?
எனக்கு ரொம்ப பிடிச்சது க்ளைமேக்ஸைப் போட்டு உடச்சுட்டதா ஃபீலிங்ஸ் விட்டு இந்த சஸ்பென்ஸ் தெரியாம பலபேர் ப்ல கோடியை ஹீரோ கால்ல வந்து கொட்டுனாங்களாம் என்று வெச்சிருக்கீங்களே அதான் மெகா ஹிட்...
Superb akka...
இதுக்கும் ஒரு மீடியாவின் website -ல subscription பண்ணா full வீடியோ பார்க்கலாமாம்.. அவன் செஞ்சது அநியாயம் தான்.. இது என்ன நியாயமா? என்ன பண்ணாலும் பணம் பண்ணிடுறானுங்க.. இவனுங்க ரொம்ப நல்லவங்க(?).. உங்க விமர்சனம் வித்தியாசமா இருக்கு சித்ரா.. நன்றி..
நல்லவேளை நான் ஊர்ல இல்லை.
இல்லாட்டி குடும்பத்தோட உக்காந்து பார்க்க நேரிட்டிருக்கும். சன் டீ வி புண்ணியத்தில்.
விமர்சனம் நல்லா இருக்கு.. எல்லாரும் சொல்ற மாதிரி திருட்டு விசிடி சாஸ்தியாயிருச்சே .. படம் ஓடுமா??
என்ன பண்றது? இன்னிக்கு கதவைத் திற காற்று வரட்டும், ஜெபம் பண்ணு, முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள்னு சொல்றவனுகளுக்குத்தான் பொழப்பு நடக்குது..
குண சித்திர கதா பாத்திரங்கள் நடித்த இந்த குடும்ப காவியம்,"பிச்சுகிட்டு"ஓட வாழ்த்துகள்.
// இந்த படம் தந்த பாடம் எத்தனை பேருக்கு புரிந்து இருக்கும்?//
யாருக்கு புரிந்ததோ இல்லையோ " சா" எழுத்தாளருக்கு புரிந்திருக்கும். " சா" எழுத்தாளர் யார் என கண்டுபிடிப்பவர்களுக்கு " கிம்-கி-டுக் வீட்டின் பின்புறம் சில காலிகோப்பைகள்" நாவல் பரிசு.
ரோசா வோட கமெண்ட் படிச்சிட்டு இன்னும் சிரிச்சிகிட்டிருகேன் ... வயிறு வலிக்குது... அம்மா... அம்மா..
யக்கா, இன்னும் ஒரு கேள்வி சேர்த்துக்கலாமே
இது பற்றி எத்தனை பதிவுகள் இதுவரை வந்திருக்கும்
அ) 500 -1000
ஆ) 1000 - 5000
இ) 5000 - ∞
:))
சன் டிவி ,தினகரன் இந்த படத்தை இலவசமாக மக்களுக்கு காட்டி நித்யானந்தா புண்ணியத்தை தேடிகிட்டாங்க,சென்னை பர்மா பசாரில் கேசட் விற்று தீர்ந்து டிமாண்ட் ஜாஸ்தியாம்,சன் டிவியின் வெளியீடு படக்கேசட்கள் கூட அப்படி விற்பனையாகலையாம்.சித்ரா எதற்கும் ஜாக்கிரதை,இதைப்பற்றி எழுதினவங்க தான் இப்போதைய வி.ஐ.பி.
இதை பத்தி எழுதாத பதிவர்கள் எண்ணிக்கைத்தான் அதிகமாகிறது... ரொம்ப பாதிக்க பட்டிருப்பாங்களோ...?
சன் டிவி அவனின் முகத்திரையை கிழித்தது சரி.... நீலப்பட ரேஞ்சிற்கு பரபரப்பை கூட்டி வியாபார தந்திரத்தை புகுத்தியதுதான் தவறு
சித்ரா விமர்சனம் நல்லா இருக்கு , இன்னும் கொஞ்ச நாள் வரைக்கும் இதுவே தலைப்பு செய்தியா இருக்கும் அப்புறம் அதை பற்றிய நினைவு இல்லாமல் போய்விடும்... வழக்கமாக நடக்கும் தொடர்கதை தான் .
என்னத்த சொல்ல:(
உஸ்ஸ்ஸ்..... அப்பா........ முடியல, எங்க போனாலும் இதே பேச்சு, இப்படியே போச்சுன்னா வர்ற அகாடமிக் இயர் சிலபஸ்ல இதை சேர்திடுவாங்க போல இருக்கே ?
கலைஞரின் பிள்ளைகளுக்கே வராத தைரியம், மாறன் சகோதரர்களுக்கு வந்ததை, தனியாக சொல்லி பாராட்டி இருக்கலாம்.
ஊடகங்களுக்கு இருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பென்பது அர்த்தமற்றதாகிவிட்டது:( ! வியாபாரமே முக்கிய நோக்கமென்றாகிவிட்டது!
சித்ரா டீச்சர் டென்ஷன் ஆகக்கூடாது. ஆசிரமத்துல இதெல்லாம் ஜகஜ.
விடையெல்லாம் நோட் பண்ணிட்டேன்... அடுத்து புட்டேஜ்க்காக வெயிட்டிங்க....:))
ஆஹா விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கே! எது எப்படியோ நித்யானந்தா எல்லார் பிளாகிலும் இடம் புடிச்சுட்டார். உங்க கேள்விகளுக்கு என் சின்ன அறிவுக்கு எட்டிய பதில்
இந்த படம் மறக்க எவ்வளவு நாள் ஆகும்?
அடுத்து ஏதாவது ஹாட் நியூஸ் கிடைச்சவுடனயே மறந்துடுவோம்ல.
கேள்வி2: இப்போ நிறையா பேருக்கு பாடம் புரிஞ்சா மாதிரி இருந்தாலும் இன்னொரு ஆனந்தா வந்தவுடன் புரிஞ்சதெல்லாம் மறந்துடும்
கேள்வி3: ஒரே சமயத்தில் ரெண்டு சாமியார் நியூஸ் வந்ததுல வடநாட்டு சாமிய பத்தின நியூஸ் அமுங்கிடுச்சு. அதனால ஒன்னு சூடு தணிஞ்சதும் அடுத்தது வந்துச்சுன்னா நமக்கும் பிளாக் நிரப்ப மேட்டர் கிடைச்சா மாதிரி இருக்கும்.
கேள்வி4: எப்படியும் ஏதாவது ஒரு நடிகை அல்லது ஒரு பிரபலம்தான் சிக்குவார்
கஷ்டப்பட்டு கேள்விக்கு பதிலெல்லாம் சொல்லியிருக்கேன். பரிசை அனுப்பிடுங்க :-)
வடையை...ஸாரி விடையை உங்களுக்கு அனுப்பி விடுகிறேன் :)
சித்ரா டீச்சர்,உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் பதிவெழுதிவெழுதி விட்டு இறுதியில் choose the correct answer போல் வினாவும் எழுப்பி நல்ல டீச்சரேதான் என்று மேலும் மேலும் உறுதிப்படுத்திவிட்டீர்களே:)
கீழே உள்ள இரண்டு வலைபக்கங்களும் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவில் இருந்து எழுதப்படுகின்றன.
இவர்கள் தங்களால் முடிந்தவரை நித்யனந்தவைப்பற்றி கடந்த ஒரு வருடமாக மக்களை எச்சரித்த வண்ணம் இருந்தனர்.
இதை எழுதுபவர்களும் கமெண்ட்ஸ் எழுதுபவர்களும் மடத்தில் நடப்பவை பற்றி முன்பே அறிந்து வெளியில் வந்த சீடர்கள். நித்தியானந்தா மடத்தைப்பற்றி ஏராளமான ரகசிய தகவல்கள் உள்ளன.
1) http://nithyananda-cult.blogspot.com/
2) http://guruphiliac.blogspot.com/
அட நீயுமா! இந்த விடயத்தை சீக்கிரம் பதிவுலகம் மறந்து சகஜ நிலைக்கு வரட்டும். ஏமாற்றுகிறவன் ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பான். மற்றவர்கள் தங்கள் மூளையைத் தீட்டட்டும்.
எல்லா மதத்திலேயும் , எல்லா இடத்திலேயும் யோக்கியர்களும் உண்டு அயோக்கியர்களும் உண்டு. ஒரு விஷயத்தை, sensational news ஆக்கி, ஒரு ethics இல்லாமல் நிகழ்ச்சியை காட்டியதை நாம் கண்டிக்கத்தான் வேண்டும். மறந்து போவதால் மட்டுமே ஒரு விஷயம் விலகி சென்று விடாது. That shows our self-denial. ஏமாறுவது என்பது, தெரிந்தும் புரியாமல் செய்யும் காரியமாக இருக்கலாம். ஒரு செயலை அப்படியே தவறு என்று புரிந்தும் கண்டிக்காமல் ஏற்று கொள்வது, நம்மை நாமே ஏமாற்றி கொள்வது.
சித்ரானந்தா?????!!!!!
சித்ரா மேடம் சூப்பர். கேள்விகளெல்லாம் வெகு சூப்பர்..[ எந்த தைகிரியம் நோக்கு வசனமாக பேசுரோமா]
இல்ல பெருமாள் சார் - அது சித்ராபோதானந்தி.
இப்டி ஒரு விமர்சனம் நான் இதுவரை படிக்கலீங்க.
செம காமடிதான் போங்க.
நச்சென்று விமர்சனம்..!! திருந்துமா நம்ம சனம்?
காவி பொய்யில்லை..பொய்யர்கள் சில பேர் காவி அணிகிறார்கள்.. எல்லா மதத்திலும்.. குறிப்பாக வெள்ளை மதத்தில்..சில பல பொய்யர்கள் இருக்கிறார்கள்..அது தெரிந்தாலும்..அதை இது போல் எந்த ஊடகமும்..வெளிப்படுத்துவதில்லை..நாத்திகம் பேசுவது தப்பில்லை..அது எல்லா மதத்துக்கும் எதிராக இருக்க வேண்டும்..குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் எதிராக பேசுவது அல்ல நாத்திகம்..
மத கொள்கைகள் உண்டு என்றும், இல்லை என்றும் கூறுபவர்கள் எல்லோரும் சேர்ந்து பேசும் ஒரு விஷயமாக தான் இது மாறி இருக்கிறதே தவிர, ஆக்க பூர்வமாக செயல் படுத்தும் தீர்வு வருமா? வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. இது காவிக்கு மட்டுமோ வெள்ளைக்கு மட்டுமோ என்று பிரிவு கிடையாது. அந்த அர்த்தத்தில்தான், சொல்லி இருக்கிறேன்.
இதைப்பற்றி எழுதாத ப்ளாக் இல்லை போல....
சாமீயாரின் அந்தரங்கமாகட்டும் - அதை சன் டிவியும் ஒளிபரப்பட்டும். ஆனால் செய்தியில் அதை வெளியிடடு அனைவரையும் நெளிய வைக்க வேண்டுமா? தனியே சிறப்பு செய்தி என்று போட்டுவிட்டு -குழந்தைகள் -சிறுவர்கள் இதை பார்க்கவேண்டாம் என டைட்டில்போட்டு ஒளிபரப்பியிருக்கலாமே? சாதாரண மேட்டர்என நினைத்துப்பார்த்து நீலப்படம் அளவிற்கு ஒளிபரப்பிய சன்டிவிக்கு இது தேவையா? நல்ல கட்டுரை சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
ஹி ஹி,இதையும் சேர்த்துக்கோங்க,பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது.வழமை போல யாரோ எடுத்த படத்தை "சன் பிக்சர்ஸ் வெளியீடு" என்று வெளியிட்டாலும் தயாரிப்பாளர் யார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி!!
சரி தான் Objective டைப் கேள்வி எல்லாம் கேக்குறீங்க!! இதனால தான் உங்களை சில பேர் டீச்சர்ன்னு சொல்றாங்களா? :))
:)
:)
Romba well said and Dhillana pathivu Chitra...
congrats...
// இந்த படம் மறக்க எத்தனை நாட்கள் ஆகும்? //
குறைஞ்சது 6 மாசம் தாங்கும்ங்க.
// இந்த படம் தந்த பாடம், எத்தனை பேருக்கு புரிந்து இருக்கும்? //
எனக்கு புரியலீங்க. புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி.
//இதே போல உள்ள அடுத்த நியூஸ், இன்னும் எத்தனை நாட்களில் வரும்?//
6 மாசத்துக்கு ஒன்னு வந்தா நல்லாருக்கும்.
//அந்த நேரத்தில் பலிகடா ஆகப் போகும் நடிகை யார்?//
இப்போ பேமஸா இருக்க நடிகை வந்தா இன்னும் நல்லாருக்கும்.
வீடியோ எங்க ? வீடியோ எங்க ?
:-) enna koduma ithu! ithukkum oru reviewvaa?? bt good 1!
உங்கள் நடை சர சர வென உள்ளது.. ஒரே மூச்சில் நகைச் சுவையுடன் படித்து முடித்து விட்டேன்..
அப்புறம் விடைகளைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அது அந்த அண்ணாமலையானுக்கே வெளிச்சம்...
நன்றி...
இனி தைரியமாக கதை வசனம் நீங்க எழுதலாம், பயங்கர லொள்ளு .. ஹ..ஹ..
ada... ithu kooda nalla irukku... vettaikkaranukku mathiri deela nodeela potti vaikkalam. allathu ulaga tholakkachchikalil muthal muraiyaga.... appadinnu oru friday evening podalam... naangalum parpomulla... (friday leave... hi... hi...)
தங்களுக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகவும், நாசூக்காகவும், எழுதியிருக்கிறீர்கள். நடந்த சம்பவம் கொடுமையே :(
அட இங்கேயும் ஒரு புதுக்கட்டுரை ஆரம்பிச்ச்சாசா..
வெளுத்து வாங்கிட்டீங்க போங்க
இப்ப நித்யானந்தா மூலமாக சன் டீவிக்கு ஒரு பிளாட்பார்ம் கிடைத்தது
இதை மறக்க
எத்தனை மாதம் ஆகப்போகுதோ,
ரோசவுட கமெண்ட் ஹி ஹி
இப்ப வட நாட்டிலும் கான் சாமியார்கள் வந்துவிட்டாகளாம்
super Chitra
வன்மையாக எதிர்க்கிறேன்.
10 வரிகளுக்கு மிகாமல் எழுதுன்னு டைப் கொஸ்டினாக இல்லாமல் மல்ட்டிபில் சாய்ஸ் ச்சூஸ் த கரெக்ட் ஆன்ஸ்ர்னா எப்பூடி?
அருமை.வித்தியாசமா திங்க் பண்ணியிருக்கீங்க...
நமக்கெல்லாம் ஒரு பதிவு லாபம் என்பதைத் தவிர எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை...
இப்பமே மறந்துட்டு வேலையைப் பார்க்கப் போயாச்சு..
இனி பேப்பர்காரன் வேலை..
ஹாட் நியூஸ்...ரஞ்சிதா தற்கொலை முயற்சி...
poor girl we pity her whatelse can we do chitu?
தற்போது லைசென்ஸ் இல்லாமல் நடக்கும் பெரும் பணம் குவிக்கும் தொழில்... நான்கு. 1. அரசியல் 2. ரியல் எஸ்டேட் 3. ஆன்மீகம் 4. விபசாரம்.
25 வயது சாமியார் பிரம்மச்சரியம் பேசும்போதே இந்த சமூகத்திற்கு சந்தேகம் பிறந்திருக்க வேண்டும். அப்படி சந்தேகம் எழாமல் எல்லாவற்றையும் நம்புகிற புத்தியின் காரணமாகத்தான் அடுத்தவன் படுக்கையறையில் என்ன நடக்கிறது என பார்க்கும் ஆர்வமுள்ள சமூகமாக நாம் மாறிப்போயிருக்கிறோம்.
நிச்சயமாக நித்தியானந்தா தண்டிக்கப்படுவார். அவர் பாலியல் குற்றம் புரிந்ததற்காக அல்ல. அவர் பிராமணராக பிறக்காமல் போனதற்காக.
இன்னும் ஜெயேந்திரனும், தேவனாதனும் 'மாமூல் வாழ்க்கை' கெடாமல் சகல அந்தஸ்த்துகளோடு சுற்றி வருகிறன்றன.
- சென்னைத்தமிழன்
இன்னும் என்ன எல்லாம் தொலைக்காட்சியில்
வரப்போகுதோ
ஆஹா நீங்களுமா ?அருமை வாழ்த்துக்கள் !
Post a Comment