நண்பர் மகேஷ், ஒரு புதிய சைனீஸ் restaurant போய்விட்டு வந்தார். அவரிடம் நாங்கள் அந்த restaurant பத்தி கேட்ட பொழுது உணவை பற்றி விவரித்து சொன்னார். உணவு ஐட்டங்களின் விலை பற்றி ஒரு நண்பர் கேட்க, அதற்கு மகேஷ், "மோசம் இல்லை. எனக்கு ஒரு M.T., சாப்பாட்டிற்கு பணம் கொடுத்து விட்டான்" என்றார்.
அவர் உணவுக்கு தண்டம் அழுத நண்பர் உண்மையிலேயே M.T. - Management of Technology இல் டிகிரி வாங்க, படிக்க வந்தவர்.
அவரை "மங்குனி தோழன் - M.T." என்று பொருள்பட சொல்லியதும் சிரித்தோம்.
அப்படியே எங்கள் கேலி பேச்சும் வெட்டி சிந்தனையும் மற்ற "பொருத்தமான டிகிரி" பற்றிய ஆராய்ச்சிக்கு தாவியது. எங்கள் குழுவின் கண்டுபிடிப்புக்கள்:
கீழே குறிப்பிட்டுள்ளவை - நண்பர்கள்/தெரிந்தவர்கள் படித்து வாங்கிய degreeயும் அதற்கேற்ப, அவர்களுக்கென்றே அமைந்த அர்த்தமுள்ள வாழ்க்கை அம்சங்களும்:
சாந்தியின் அம்மா:
M.Sc. - Mother of Seven Children
விஜயின் கண்டிப்புக்கார தந்தை:
M.A. - மிரட்டல் அதிகாரி.
ராமனின் "எதையோ சொல்ல நினைத்து எதையோ பேசி மற்றவர்களை தூங்க வைக்கும்" மாமா:
B.A. - Boring ஆசாமி.
மணியின் நக்கல் அடிக்கும் தந்தை:
M.A.B.L. - மாட்டிக்கிட்ட அனைவரிடமும் பயங்கர லொள்ளு.
Thesis எழுதும் நினைப்பிலேயே இருந்து, மற்ற காரியங்களில் சொதப்பும் நண்பர் சந்தீப்:
Ph.D. - Permanent Head Damage
எந்த கருத்து விவாதத்திலும் உடனே பின்வாங்கி விடும் நண்பர், பாஸ்கர்:
M.S. - Man to surrender.
மூன்று முறை காதலில் தோற்ற நண்பரின் தம்பி:
M.B.B.S. - மறுபடியும் பல்புமேல பல்பு சாருக்கு
காரியம் முடியும் வரை நட்பு பாராட்டிவிட்டு, பின் மறைந்து போகும் நபர் ஒருவர்:
M.B.A. - மொட்டை, பன், ஆப்பு
தோழியின் அண்ணன், வக்கீல் கருணா:
B.B.L. - buckets and buckets of lies/லொள்ளு
ஒரு அலட்டல் "மங்கம்மா":
M. Phil. - முடியாத Philmu (எப்பவும் "film" காட்டுறது)
ஒண்ணும் இல்லாத மேட்டர்ல கூட, எதிர்ப்பார்ப்பை ஏத்தும் பேச்சு கொண்டவர்:B.E. - build-up for everything/எல்லாத்துலேயும்.
எல்லா விஷயத்துக்கும் ஒரு கதை, ஒரு உவமை, ஒரு விளக்கம் கொடுக்கும் ஆசிரியை தோழி:
M.Ed. - Miss Examples' directory (e-d)
வெட்டி பேச்சு சித்ரா:
B.Com. - Bachelor of Comedy
அல்லது - Bachelor of Complete மொக்கை (co-m)
பி.கு.:
பி.கு.:
தமிழ் பட விமர்சகர், ஜெட்லி:
M.C.A. - மொக்கை சினிமாக்களின் analyst
கொசுறு தகவல்:
என் கணவர், சாலமன், "கொஞ்சம் வெட்டி பேச்சு" ப்லாக் பார்த்துவிட்டு:
என் கணவர், சாலமன், "கொஞ்சம் வெட்டி பேச்சு" ப்லாக் பார்த்துவிட்டு:
"Followers??? ஏன் இத்தனை பேர் என் பொண்டாட்டியை "துரத்திட்டு" வாராங்க? "
B.Com. கொடுத்த பதில்:
"உங்களுக்கு போட்ட மொக்கையை பதிவுலகத்தில் போட்டேன். அதான்! "
சாலமன்: "அப்போ நீ இந்த பக்கம் ஓடுறேனா, நான் அந்த பக்கம் ஓடுறேன். ஏன் அவளை, இப்படி எழுத விட்டேன்னு என்னையும் சேர்த்து துரத்த போறாங்க...."
சாலமன்: "அப்போ நீ இந்த பக்கம் ஓடுறேனா, நான் அந்த பக்கம் ஓடுறேன். ஏன் அவளை, இப்படி எழுத விட்டேன்னு என்னையும் சேர்த்து துரத்த போறாங்க...."
59 comments:
சி.சி.வ.வ.தா.மு
//M.T. - Management of Technology இல் டிகிரி வாங்க, படிக்க வந்தவர்.
அவரை "மங்குனி தோழன் - M.T." //
ஆஹா... ஆரம்பிச்சுட்டேளா?? ம்ம் நடத்துங்கோ.
//மணியின் நக்கல் அடிக்கும் தந்தை:
M.A.B.L. - மாட்டிக்கிட்ட அனைவரிடமும் பயங்கர லொள்ளு. //
//எந்த கருத்து விவாதத்திலும் உடனே பின்வாங்கி விடும் நண்பர், பாஸ்கர்:
M.S. - Man to surrender.//
//காரியம் முடியும் வரை நட்பு பாராட்டிவிட்டு, பின் மறைந்து போகும் நபர் ஒருவர்:
M.B.A. - மொட்டை, பன், ஆப்பு //
//ஒரு அலட்டல் "மங்கம்மா":
M. Phil. - முடியாத Philmu (எப்பவும் "film" காட்டுறது)//
//வெட்டி பேச்சு சித்ரா:
B.Com. - Bachelor of Comedy
அல்லது - Bachelor of Complete மொக்கை (co-m)//
இதெல்லாம் ஓகே... ஆனா, இது கொஞ்சம் உறுத்துது...
//ஒரு வருடமாக வேலை தேடி கொண்டிருக்கும் நண்பரின் தம்பி:
M. Tech. - மிஞ்சினது தேஞ்சி போன செருப்பு (te-ch)//
பாவம் இல்லையா அவர்... அவரை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்துதல் நன்றல்லவோ!
//சாலமன்: "அப்போ நீ இந்த பக்கம் ஓடுறேனா, நான் அந்த பக்கம் ஓடுறேன். ஏன் அவளை, இப்படி எழுத விட்டேன்னு என்னையும் சேர்த்து துரத்த போறாங்க...." //
ஹா...ஹா...ஹா... சூப்பர்.........
B.E ல P.Hd வாங்கிய சித்ரா வாழ்க வாழ்க.
சிரிப்பு திலகமுன்னு எக்ஸ்ட்ரா ஒரு பட்டமும்.
ஐயோ! பாவமுன்னு சாலமன்ஸுக்கு ஒரு பட்டமும்
கொசுறு ...
உங்கள் குழுவினரின் பல்கலைக்கழகம் தரும் பட்டங்களை ரசித்தேன்:))!
முன்பு சுஜாதா இதே போல (அவர் நண்பர் உருவாக்கிய) சிடுமூஞ்சி அகராதி என்று ஏதோ ஒரு பத்திரிகையில் எழுதினார்.
அதிலிருந்து சில---
மகாத்மா காந்தி - ஊருக்கு ஒரு தெருவுக்கு பெயர் வைக்க இறந்தவர்
ஆபிச்சுவரி (இரங்கற்பா) - தாமதப் புகழ்ச்சி
அன்னை - தியாகத்தின் மறுபெயர், அன்பின் வடிவம், மாமியார் ஆகும் வரை.
அதே போல தங்கை சித்ராவின் இந்த நையாண்டி ஆனந்தவிகடன், குமுதம் ரேஞ்சு பத்திரிகைகளில் வெளிவந்தால் தமிழகமே துள்ளும்.
நல்ல பட்டங்கள். உங்களின் காமெடிக்கு எம் காம் கூடக் கொடுக்கலாம். மாஸ்டர் ஆப் காமெடிஸ்.
நல்ல விளக்கங்கள். ஆமா பல்கழைக டாக்டர் பட்டத்திற்க்கு விளக்கம் இல்லை. அதை வைச்சுட்டு நம்ம துண்டு கோஷ்டிக பண்ற அலும்பு தாங்க முடியல்லை.
சாலமன் அண்ணாச்சி மறுபக்கம் ஓடுவது,துரத்துவர்களிடம் இருந்து தப்பிக்க அல்ல. உங்களிடம் இருந்து தப்பிக்க, அப்புறம் உங்க பிளாக் வேற பார்த்தாரா?. ஏன் வீட்டுல பண்ற காமெடி பத்தலையா?. ஹா ஹா ஹா.
நன்றி சித்ரா? அனைவரும் நலமா?
அந்த M.Sc - ஹா...ஹா..... பின்னுறீங்க B.Com....... :))
\\Ph.D. - Permanent Head Damage//
இது தான் டாப் . ஹா ஹா ஹா
//M.C.A. - மொக்கை சினிமாக்களின் analyst //
நான் ஏன் எம்.சி.ஏ படிச்சேன்னு ரெண்டு வருஷமா
யோசிச்சேன்...இப்ப பதில் தெரிஞ்சிடிச்சு!!
ஆனாலும் இந்த மொக்கை தான் கொஞ்சம் இடிக்கிது...
ரைட்....நடத்துங்க...
ஹீஹீஹீ... உக்காந்து யோசிப்பிங்களோ டீச்சர்... உங்க கணவர் அடித்த கமெண்ட் சூப்பர்...
கலக்குறீங்க அக்கா......
எல்லாமே சூப்பரு.. சாலமனை நெனச்சா பாவமா இருக்கு...
வெட்டி பேச்சு சித்ரா:
B.Com. - Bachelor of Comedy
அல்லது - Bachelor of Complete மொக்கை (co-m)
சூப்பர்
///உங்களுக்கு போட்ட மொக்கையை பதிவுலகத்தில் போட்டேன். அதான்!///
அதுகுள்ளேயா ? இன்னும் எவ்வளவோ இருக்கே.பட்டம் தர நீங்க ஒரு காலேஜே திறக்கலாம்.
சித்ரா B.Com
எப்போ எம்.காம் பண்ணப் போறீங்க?
பிளாக்லே பின்னப் போறீங்க?
நீங்க ஒரு டபுள் MA (MahA MokkAi)சும்மா தமாசு..தமாசு..எப்படி? நங்களும் பட்டம் தருவோம் இல்ல.
நடத்துங்க:))
உங்க கணவரின் கமெண்ட்தான் டாப்பு.. எல்லாத்தையும் தூக்கி சாப்டுட்டு..
:)))))))
கொஞ்சம் வெட்டி பேச்சு, I.T.I
இனி தளபதி(மொக்கைக்கு) இவுங்கதான்
சூப்பருங்க..
உங்க ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப நல்லவங்க.
//"Followers??? ஏன் இத்தனை பேர் என் பொண்டாட்டியை "துரத்திட்டு" வாராங்க? "
B.Com. கொடுத்த பதில்:
"உங்களுக்கு போட்ட மொக்கையை பதிவுலகத்தில் போட்டேன். அதான்! "
சாலமன்: "அப்போ நீ இந்த பக்கம் ஓடுறேனா, நான் அந்த பக்கம் ஓடுறேன். ஏன் அவளை, இப்படி எழுத விட்டேன்னு என்னையும் சேர்த்து துரத்த போறாங்க...." //
உலகம் புரிஞ்ச ஆசாமிதான். ஆனா நாங்க ரெண்டு குரூப்பா பிரிஞ்சு ரெண்டு பக்கமும் துரத்துவோம்ல.
******
ஆனா நான் காலேஜ்ல படிக்கும்போது புரோபசர்கள் ரெண்டுபெர்கிட்ட இருந்து வித்தியாசமா ரெண்டு திட்டு வாங்கினேன்.
அதிகமா விதண்டா வாதமா பேசுறத பார்த்துட்டு, "அய்யய்யோ...இவன் பேசுறதுல பி.ஹெச்.டி வாங்கிட்டு வந்துருப்பானோ..."அப்படின்னு ஒரு புரொபசர் சொன்னார்.
மூணு வருஷமும் காலேஜுக்கு ஒரே ஒரு நோட்டை எடுத்துட்டு போனது தெரியாத இன்னொரு புரொபசர், நான் அக்கவுண்ட்ஸ் பேப்பர்ல நிறைய மார்க் எடுத்தாதா நம்பி நோட்டை எடுத்து பார்த்துட்டு பழங்கால கல்வெட்டை ஆராய்ச்சி பண்றவங்களுக்கு கூட புரியாத மாதிரி எழுதியிருக்கியே...ரொம்ப நல்லா இருக்குப்பா உன் வேலை...அப்படின்னு சொன்னார்.
ஆனா நான் படிச்ச B.Com படிப்புக்கு ரொம்ப நல்லா ஒரு விளக்கம் கொடுத்துட்டீங்க.இப்படியே தொடரட்டும் உங்க டீமோட பணி.
மூன்று முறை காதலில் தோற்ற நண்பரின் தம்பி:
M.B.B.S. - மறுபடியும் பல்புமேல பல்பு சாருக்கு //
சிரிப்புத்தான்.......ரசித்தேன்!!
ok bcom..nadathunga..
:)
ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
நல்ல வேளை! நான் இன்னும் MBA முடிக்கலே! இதுக்குத் தான் உங்களை மாதிரி நாலு எழுத்துப் படிச்சவங்க கிட்டே(B.Com) எதையும் கேட்கணும்கிறது. :-)
ஆளுக்கேத்த பட்டங்கள் இப்படி ஈசியாக பட்டம் கிடைக்கும் பொழுது இன்னும் followers கூடிடுவாங்க சித்ரா.டிகிரிக்கு ஒரு டிக்ஸனரியே போடலாம் போல் தெரிகிறது.
//ஒண்ணும் இல்லாத மேட்டர்ல கூட, எதிர்ப்பார்ப்பை ஏத்தும் பேச்சு கொண்டவர்:
B.E. - build-up for everything //
நீங்களும் B.E.தான், சாதாரண விஷயத்தையும் சிரிக்கச் சிரிக்கச் சொல்றதில!!
:))))) எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க :)
வலைஉலக நண்பர்களுக்கு, அவர்களின் எழுத்தின் தரத்திற்கேற்ப-
ஏதாவது பட்டங்கள் கொடுத்திருக்கீங்களா
சித்ரா....பயமாத்தான் இருக்கு.எங்க எல்லாருக்கும்கூட என்னாச்சும் வச்சிடுவீங்க
நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து.
வச்சிட்டீங்களோ யாருக்குத் தெரியும் !
சித்ரா,எப்படிஎல்லாம் யோசிக்கறீங்க!!பதிவைப்பார்த்துவிட்டு ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்
அப்பாடா...எங்க எங்கெலெக்கெல்லாம் பட்டம் கொடுத்திட்டுங்களோ என்று விழுந்தடித்துக்கொண்டு வந்து பார்த்தேன்.. அப்பாடா... எங்க பேர் எல்லாம் லிஸ்டில் இல்ல...நாங்க எஸ்கேப்... வாழ்க வளமுடன், வேலன்.
விரைவில் M.com. பட்டம் பெற என் வாழ்த்துக்கள் தோழி!
சாலமனை நினைத்தால் பாவமாக இருக்கிறது. Followers இடமிருந்து தப்பினாலும் காலத்துக்கு சித்ராவிடமிருந்து தப்ப முடியாதே.! இப்போ தான் ஏன் ப்ளாக் போட்டுக் கொடுத்தார் என்று புரிகிறது. '' தான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெறட்டும்' என்ற உயர்ந்தஎண்ணம்.
ரசிக்க வைத்தது..
பிரியாவின் வாழ்த்து பலிக்கட்டும்,அப்புறம் உண்மையிலேயே சீரியஸா,ஒரு பட்டம் கொடுக்குறேன்,நீங்க ஒரு......v.k.c
வலைக்குயில் சித்ரா.
saw it late. beautiful.
சூப்பரு!
superunga b.com..
சாலமன் அண்ணாச்சி .. அப்படியே தமிழ்மண கருவிபட்டையும் இணைத்து கொடுங்க
ஜெட்லி MCA - நல்லாவே யோசிச்சிருக்கிங்க:)
என் கணவர், சாலமன், "கொஞ்சம் வெட்டி பேச்சு" ப்லாக் பார்த்துவிட்டு:
"Followers??? ஏன் இத்தனை பேர் என் பொண்டாட்டியை "துரத்திட்டு" வாராங்க? "
B.Com. கொடுத்த பதில்:
"உங்களுக்கு போட்ட மொக்கையை பதிவுலகத்தில் போட்டேன். அதான்! "
சாலமன்: "அப்போ நீ இந்த பக்கம் ஓடுறேனா, நான் அந்த பக்கம் ஓடுறேன். ஏன் அவளை, இப்படி எழுத விட்டேன்னு என்னையும் சேர்த்து துரத்த போறாங்க...."
///////////
haa haa
அது என்னமோங்க கனவனை பற்றி எழுதும் போது மட்டும் நல்ல நகைசுவை உணர்வு வந்துவிடுகிறது
மங்குனித்தோழரும் மொட்டை ஆப்பு பன்னும் ரொம்ப சூப்பர் சித்ரா
உங்க டிகிரி(என்னைப் பொறுத்தவரை)
B.L - Bachelor of Lollu ( or Laugh)
நல்லாத்தான் இருக்கு பட்டங்கள் ரசித்தேன்.
40, வது ஓட்டு போட்டுட்டேன்.
/என் கணவர், சாலமன், "கொஞ்சம் வெட்டி பேச்சு" ப்லாக் பார்த்துவிட்டு:
"Followers??? ஏன் இத்தனை பேர் என் பொண்டாட்டியை "துரத்திட்டு" வாராங்க? "
B.Com. கொடுத்த பதில்:
"உங்களுக்கு போட்ட மொக்கையை பதிவுலகத்தில் போட்டேன். அதான்! "
சாலமன்: "அப்போ நீ இந்த பக்கம் ஓடுறேனா, நான் அந்த பக்கம் ஓடுறேன். ஏன் அவளை, இப்படி எழுத விட்டேன்னு என்னையும் சேர்த்து துரத்த போறாங்க...." / /
என்னா ஒரு பட்டமுங்க. புத்தம் புதிய பட்டமான
M.M.A.பட்டம் கொடுக்கிறேன் உங்களுக்கு..
//M.Sc. - Mother of Seven Children
//
ஆங்கிலப் படத்துக்கு டைட்டிலாவே வைக்கலாம் போல
phd பட்டம் குடுக்கலாம் உங்களுக்கு :)
நல்ல இருந்தது...
கலக்கல்:)
மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் சுவாரஸ்யமான பதிவு, பிரமாதம் உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஸுப்பர்..சிசி..:))
நல்ல பட்டங்கள்.ரசிக்க வைத்த பதிவு .வாழ்த்துக்கள் .
Unakku naan B.P.T pattam koduththiruken... ithu bachelor of phyisio-therapy kattayamaa illa.. ennanu neeye guess pannikko... nallaa kalakalappaa irunthathu chitra.. nice.
வெட்டி பேச்சு சித்ரா:
M.Com : Master of Comedy........
சித்ராக்கா,
வீடு கட்டும்போதே இதுக்குன்னு ஒரு ரூம் சேத்து கட்டி வெச்சிருக்கீங்களோ...?
//ஒண்ணும் இல்லாத மேட்டர்ல கூட, எதிர்ப்பார்ப்பை ஏத்தும் பேச்சு கொண்டவர்:
B.E. - build-up for everything/எல்லாத்துலேயும்.
பாவங்க B.E படிச்சவங்க(நானும்). ரசித்தேன் அருமை.
சித்ரா ரொம்ப நாளைக்கு பிறகு இப்ப தான் இதுக்கெல்லாம் உங்கள் மூலமா ஒரு விளக்கம் தெரிந்து கொண்டேன்
ஹா ஹா ஹா
Post a Comment