Friday, February 26, 2010

பதின்ம வயதினிலே ........!!!

என்னுடைய கிரிக்கெட் தொடர் பதிவை பாத்துட்டு, கண்டிப்பாக நான் பதின்ம வயது தொடர் பதிவையும் எழுதியே தீரணும் என்று ஆசைப்பட்டோ ஆசைபடமலோ கேட்டு கொண்ட திரு. V. ராதாகிருஷ்ணன் சாருக்கு, நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். மத்தவங்க என்ன சொல்லணுமோ,  அவருக்கு தனியா ஆட்டோவில மெசேஜ் அனுப்பிடுங்க.
(warning: இது கண்டிப்பாக மொக்கை பதிவு கிடையாது - அப்படி என்று நினைக்கிறேன்.)

பள்ளி:
அது வரைக்கும் - ஆசிரியர்களை  பார்த்தால் கிலி - இப்பொழுது,  ஆசிரியர்களை பார்த்தால் கிண்டலாக மாறியது.

கவலைகள்:
அது வரைக்கும் - குச்சி ஐஸ் கிடைக்காமல் போவது வாழ்க்கை பிரச்சினை என்று இருந்தது - இப்பொழுது,  பத்தாம் க்ளாஸ் பரீட்சை நல்லபடியாக எழுதுவதுதான் வாழ்க்கையின் முக்கிய பிரச்சினையாய் ஆகியது.

கதை:
அது வரைக்கும் - குழந்தைகளுக்கேற்ற புராண கதைகளை, கண்கள் விரிய வியந்து கேட்க தோன்றியது  -  இப்பொழுது, புரணி கதைகளில் கூட ஆர்வம் வந்தது.

கொஞ்சல்:
அது வரைக்கும் - மற்றவர்கள், குழந்தையாய்   கொஞ்ச, அழகாய் சிரித்தவள் - இப்பொழுது,  மற்ற குழந்தைகளை கொஞ்சி அழகாய் சிரிக்க ஆரம்பித்தாள்.

பொருள்:
அது வரைக்கும் - சவ்வு மிட்டாய், தேன் மிட்டாய், அப்பள பூ வாங்கியவள் - இப்பொழுது, மல்லிகை, ஒற்றை ரோஜா பூவை விரும்பி வாங்க நேரம் வந்தது.

அம்மா:
அது வரைக்கும் - அவளிடம் பெருமையுடன் பார்த்த விஷயங்களை - இப்பொழுது,  அம்மா கவலையுடன் பார்க்க ஆரம்பித்தாள்.

சினிமா:
அது வரைக்கும் -  heroine போடுற கலர் டிரஸ், வளையல், கம்மல், ஹேர்-கிளிப் என்று இருந்த கவனம் - இப்பொழுது,  hero பக்கம் திரும்பியது. ஹி,ஹி,ஹி,ஹி.....

மழை:
அது வரைக்கும் - மழையில் நனைஞ்சு காகித கப்பல் விட்டு கொண்டு இருந்தவள் -------இப்பொழுது,  காகித "கடிதங்கள்" வர ஆரம்பிக்கவும் மழையில் நனையாமல் பதுங்க  ஆரம்பிக்கிறாள். ...............  :-(

நிலா:
அது வரைக்கும் - நிலாவை கண்டு சோறு உண்ணும்  வேலைகள் முடிந்து - இப்பொழுது,  நிலாவை கண்டு கனவு காணும் வேளைகள் வந்தன.

உருவம்:
அது வரைக்கும் - 1 ஆக  இருந்தவள் - இப்பொழுது,  8 ஆகிய மர்மம். .

சரிதானே?

77 comments:

வால்பையன் said...

me the first!

ராமலக்ஷ்மி said...

//சரிதானே?//

ரொம்பச் சரி.

ரொம்ப ரொம்ப அருமை.

Paleo God said...

தேன் மிட்டாய், ஜவ்வு மிட்டாய்..ஹும்ம் ஆறாப்பு படிக்கும்போது சாப்பிட்டது ஜவ்வுதான் மொதல்ல கட்டிய வாட்ச்..

கலக்கல்..:))

angel said...

அது வரைக்கும் - குச்சி ஐஸ் கிடைக்காமல் போவது வாழ்க்கை பிரச்சினை என்று இருந்தது - இப்பொழுது, பத்தாம் க்ளாஸ் பரீட்சை நல்லபடியாக எழுதுவதுதான் வாழ்க்கையின் முக்கிய பிரச்சினையாய் ஆகியது.


sure

Unknown said...

//(warning: இது கண்டிப்பாக மொக்கை பதிவு கிடையாது - அப்படி என்று நினைக்கிறேன்.) //

நானும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்

//மழை:
அது வரைக்கும் - மழையில் நனைஞ்சு காகித கப்பல் விட்டு கொண்டு இருந்தவள் -------இப்பொழுது, காகித "கடிதங்கள்" வர ஆரம்பிக்கவும் மழையில் நனையாமல் பதுங்க ஆரம்பிக்கிறாள். ............... :-(
//

நல்ல வேளை ஒரு எழுத்து மாறியிருந்தா அர்த்தமே மாறியிருக்கும்.. :))

மங்குனி அமைச்சர் said...

ஹையோஓஒ நீங்க ச்கூலுகெல்லாம் போயிருகிங்கல்லாஆஆஅ, சவ்வு மிட்டாய், தேன் மிட்டாய் சாபிடுருங்கல்லாஆஆஅ , சினிமாலாம் பாதிரிக்கிங்கல்லாஆஆஅ , மழை லெல்லாம் கப்பல் விட்ருகிங்கல்லாஆஆஅ (அப்பாடா இந்த "ங்கல்லாஆஆஅ " -வ டைப் பண்றதுக்குள்ள தாவு தீந்து போச்சு )

Dr.Rudhran said...

nicely written.. what is purani?

திருவாரூர் சரவணா said...

சின்ன வயசு அனுபவங்களை ரொம்ப அழகா எழுத்துல கொண்டுவந்துருக்கீங்க. அனேகமா இது பெரும்பாலான தாய்க்குலத்து அனுபவமா இருக்கும்னு எனக்கு தோணுது.சரிதானே...

தத்துபித்து said...

///Dr.Rudhran said...
.. what is purani?///

purani means gossip.
.

Prabu M said...

//அது வரைக்கும் - மற்றவர்கள், குழந்தையாய் கொஞ்ச, அழகாய் சிரித்தவள் - இப்பொழுது, மற்ற குழந்தைகளை கொஞ்சி அழகாய் சிரிக்க ஆரம்பித்தாள்//

இது அழகு!!

// இப்பொழுது, hero பக்கம் திரும்பியது. ஹி,ஹி,ஹி,ஹி....//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!! :))

//மல்லிகை பூவை விரும்பி வாங்க நேரம் வந்தது.//
மல்லிகைப் பூ வாங்க நேரம் வந்தது சரி... வாங்கிக் கொடுத்தது யாருன்னு சொல்லலையே :)

மொத்ததில் அழகான பகிர்வு அக்கா..
ரசித்துப் படித்தேன் மூன்று முறை.... ரிப்பீட் ஆடியன்ஸ்...ஹி ஹிஹி!!

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த உருவம் மேட்டர் ஹா....ஹா....ஹாஸ்யம், கலக்குறீங்க.

Prabu M said...

டாக்டர்.... புரணி தெரியாதா??
புறம் பேசுதல், கிசு கிசு அந்த வகையறா...

இராகவன் நைஜிரியா said...

// //(warning: இது கண்டிப்பாக மொக்கை பதிவு கிடையாது - அப்படி என்று நினைக்கிறேன்.) //

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை.. அப்படின்னா எனக்கான இடம் இது இல்லை...

இராகவன் நைஜிரியா said...

// நிலா:
அது வரைக்கும் - நிலாவை கண்டு சோறு உண்ணும் வேலைகள் முடிந்து - இப்பொழுது, நிலாவை கண்டு கனவு காணும் வேளைகள் வந்தன. //

ம்... அது ஒரு கனாக்காலம்.

இராகவன் நைஜிரியா said...

// பள்ளி:
அது வரைக்கும் - ஆசிரியர்களை பார்த்தால் கிலி - இப்பொழுது, ஆசிரியர்களை பார்த்தால் கிண்டலாக மாறியது. //

நமக்கெல்லாம் பத்தாவது படிக்கிறவரை கிலிதாங்க.

vasu balaji said...

இதும் நல்லாத்தானிருக்கு:))

Radhakrishnan said...

மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க, அழைப்பை ஏற்றமைக்கு மிக்க நன்றி. அன்றும் இன்றும் என என்றும் உங்கள் சந்தோசம் நிலைத்து நிற்கட்டும்.

தமிழினிமை... said...

rudhran ji...!!
purani is GOSSIP..

Muruganandan M.K. said...

"அது வரைக்கும் - 1 ஆக இருந்தவள் - இப்பொழுது, 8 ஆகிய மர்மம்."
மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல ஒரு ஆய்வு. எதையும் மிஸ் பண்ணவில்லை சித்ரா. ஆனாலும் உங்களிடம் நிறைய சுவாரசிய விடயங்கள் எதிர்பார்த்தேன்.

Romeoboy said...

பள்ளி:
அது வரைக்கும் - ஆசிரியர்களை பார்த்தால் கிலி - இப்பொழுது, ஆசிரியர்களை பார்த்தால் கிண்டலாக மாறியது.

உண்மை.. :)

Unknown said...

நல்லா இருக்கு..., ஆனா இது எல்லாம் பொதுவான விஷயங்கள் தான.., உங்க ஸ்பெஷல் எதும் இல்லயா

சங்கர் said...

////முகிலன் said...
//மழை:
அது வரைக்கும் - மழையில் நனைஞ்சு காகித கப்பல் விட்டு கொண்டு இருந்தவள் -------இப்பொழுது, காகித "கடிதங்கள்" வர ஆரம்பிக்கவும் மழையில் நனையாமல் பதுங்க ஆரம்பிக்கிறாள். ............... :-(
//

நல்ல வேளை ஒரு எழுத்து மாறியிருந்தா அர்த்தமே மாறியிருக்கும்.. :))////

நானும் அதே தான் நினைச்சேன் ('ங்' தானே அந்த எழுத்து?)

தமிழ் உதயம் said...

வித்தியாசமான முறைல எழுதி அசத்திட்டீங்க.

கும்மாச்சி said...

சினிமா:
அது வரைக்கும் - heroine போடுற கலர் டிரஸ், வளையல், கம்மல், ஹேர்-கிளிப் என்று இருந்த கவனம் - இப்பொழுது, hero பக்கம் திரும்பியது. ஹி,ஹி,ஹி,ஹி.....
சித்ரா ரொம்ப உண்மையெல்லாம் சொல்லியிருக்கிங்க

settaikkaran said...

ஆஹா! எனக்கும் இந்தத் தொடர்பதிவு வேலை பாக்கியிருக்கு! கொஞ்சம் டிப்ஸ் கொடுத்திருக்கீங்க! :-)

சசிகுமார் said...

சுவாரஸ்யமான பதிவு. தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நாடோடி said...

//இப்பொழுது, மல்லிகை பூவை விரும்பி வாங்க நேரம் வந்தது.///
இது தான் கொஞ்சம் இடிக்கிது..மல்லிகையா?..ரோஜாவா? என்று.

எல் கே said...

naala eluthi irukenga

க ரா said...

கலக்கல். பின்றிங்க.

Ramesh said...

ம்ம் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா... கலக்கல் தொடரட்டும்

Menaga Sathia said...

ரொம்ப அருமை..

நட்புடன் ஜமால் said...

1ஆக இருந்தவர் 8ஆக மாறியது - :)

ஹீரோ - :) :) உண்மை சொன்னதுக்கு

------------------

இருந்தாலும் சித்ரா-ஜீ இப்படி சீரியஸாவெல்லாம் பதிவு போடக்கூடாது - சீக்கிரம் வழமையான சிரிப்புகளோடு வாங்க.

ரிஷபன் said...

இதைக் கூட வித்தியாசமா போட்டிருக்கீங்க..

டவுசர் பாண்டி said...

புது மாடல், புது விளக்கம் ,பழைய நெனப்பு , கலக்கல் தாம்பா !!

ISR Selvakumar said...

டாக்டர்,
உங்களப் பத்தி உங்களுக்குத் தெரியாம, இல்லாததையும் பொல்லாததையும் எங்கிட்ட சித்ரா சொன்னா அதுதான் புரணி.

சித்ரா
நி.இ.மொ.ப.இ

தமிழினிமை... said...

நல் நிழல் தரும் சாலையோரம்..
ஒரு மழை தூறும் மாலை வேளையில்..
அன்பில் அதி தீவிரமான ஒரு தோழியுடன்
(guess who and who could it be )
குடைகளற்று ..கை கோர்த்து நடப்பது போல் இருந்தது பதிவு..
ரொம்ப இயல்பு..
=============================
நாயர் அண்ணாச்சி முகநூலில் சொன்னது போல்..,
மனதிலிருக்கும் சில மந்திரங்களை ..
மாயச்சொற்களால் பெண்கள் வரைவது சிரமம்..
யதார்த்தத்தைக் கலைக்காமல்
உண்மையுடன்..அதே சமயம்
with iotas of comedy..
தமிழில் பெண்கள் எழுதுவது சிரமம் என்றே
தோணுது..ஆனால் என் தோழி வல்லவள்..
உம்ம்ம்...ம்ம்ம்ம்ம்...
============================
u had the mettle to follow the queue
வாழ்த்துகள்...டா..!!
===========================

தமிழினிமை... said...

You can add some colour daa..
by posting some pictures..
u cud have even taken things from mylus tagging today in fb..
add some more colour makkaa..
the page is drab and bland at times..
for a person who had choosen comedy as the genre....,i think its not that bitter an option to add pictures..
bloggers with serious thoughts too add a lot of colour to their works..
hope u do it in ur future creations..
nalladhu...!!!
=============================================

ISR Selvakumar said...

//என் தோழி வல்லவள்..//
தமிழ்இனிமை சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்.

தமிழினிமை... said...

ண்ணா..,
இப்ப நீங்க சொன்னதுக்கு பேர் ஏமி..??

ISR Selvakumar said...

பாவில் ஆரம்பித்து டுவில் முடிவது.

Unknown said...

//நானும் அதே தான் நினைச்சேன் ('ங்' தானே அந்த எழுத்து?)
//
கரெக்டா சொல்லீட்டீங்க சங்கர்.. :))

Chitra said...

முகிலன் - என்னே பாசம்! வேற என்ன எழுத்து இருக்கு? :-)

Chitra said...
This comment has been removed by the author.
ஜெட்லி... said...

யக்கா கலர் கண்ணை அடிக்குது....
வித்தியாசமா எழுதி இருக்கீங்க....
சினிமா பற்றி எழுதியதை ரசித்தேன்....

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு.

ஆதி மனிதன் said...

// அம்மா:
அது வரைக்கும் - அவளிடம் பெருமையுடன் பார்த்த விஷயங்களை - இப்பொழுது, அம்மா கவலையுடன் பார்க்க ஆரம்பித்தாள்.//

அப்பாவை விட்டுட்டீங்களே?

Chitra said...

அப்பா. இந்த உலகம் விட்டு நீங்கிச் செல்லும் வரை, என்னை சிறு குழந்தையாகவே பார்த்தார்.

நசரேயன் said...

//
கொஞ்சல்:
அது வரைக்கும் - மற்றவர்கள், குழந்தையாய் கொஞ்ச, அழகாய் சிரித்தவள் - இப்பொழுது, மற்ற குழந்தைகளை கொஞ்சி அழகாய் சிரிக்க ஆரம்பித்தாள். //

கவுஜையா இருக்கே

ஜெய்லானி said...

// //(warning: இது கண்டிப்பாக மொக்கை பதிவு கிடையாது - அப்படி என்று நினைக்கிறேன்.) //

நீங்க என்ன அப்படி பட்ட ஆளா !!!

Prathap Kumar S. said...

//heroine போடுற கலர் டிரஸ், வளையல், கம்மல், ஹேர்-கிளிப் என்று இருந்த கவனம் - இப்பொழுது, hero பக்கம் திரும்பியது. ஹி,ஹி,ஹி,ஹி.//

டீச்சர் யாரந்த hero...ஹி,ஹி,ஹி...

காகித கடிதங்கள் உங்களுக்கு வந்துச்சா-? சுமாரா எத்தனை வந்துருக்கும்? யாருக்காவது பதில் எழுதினிங்களா? சும்மா ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்,, :)

simply Superb...

சுசி said...

ரொம்ப சரிதாங்க சித்ரா..

சூப்பரா எழுதி இருக்கீங்க..

Chitra said...

ஹலோ பிரதாப், பரவாயில்லை....... நீங்க பொது அறிவு வளராம கொஞ்சம் அப்படியே இருந்தா, எனக்கு நல்லதுன்னு தெரியுது. ஹி,ஹி,ஹி,ஹி.....

பனித்துளி சங்கர் said...

ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க . மிகவும் அருமை !

Chitra said...

அனைவருக்கும் நன்றி.

suvaiyaana suvai said...

Nalla irukku

Unknown said...

//Chitra said...
முகிலன் - என்னே பாசம்! வேற என்ன எழுத்து இருக்கு? :-)//

மழை:
அது வரைக்கும் - மழையில் நனைஞ்சு காகித கப்பல் விட்டு கொண்டு இருந்தவள் -------இப்பொழுது, காகித "கடிதங்கள்" வர ஆரம்பிக்கவும் மழையில் நனையாமல் பதுக்க ஆரம்பிக்கிறாள். ............... :-(

Vishy said...

அழகான பதிவு என்று சொல்வதை விட, மிக ரசனையான பதிவு என்று சொல்ல வேண்டும்.. “வெயிலோடு விளையாடி” பாட்டில் நம் இளைய வயதினை கண்முன் நிறுத்தியிருப்பார், கவிஞர் முத்துக்குமார்.. உங்கள் பதிவைப் படித்தபின்பும் அப்படித்தான் உணர்கிறேன்..

படித்த உடனே உதட்டில் சிரிப்பு உட்காரும்.. நாமே உட்கார்ந்து யோசித்தால், ஒவ்வொரு பகுதியும், கவிதையாக உறுப்பெரும்.. நன்றி சித்ரா..

Jaleela Kamal said...

சித்ரா ரொம்ப அருமையான அனுபவங்கள், எல்லாம் உண்மைய சொல்லி இருக்கீங்க.


//உருவம்:
அது வரைக்கும் - 1 ஆக இருந்தவள் - இப்பொழுது, 8 ஆகிய மர்மம்//


//ஹா ஹா இது எல்லாருக்கும் பொருந்தும்..//


அப்படியே நாஞ்சிலாருக்கு பொது அறிவ வளர்க்க எத்தனை கடிதம் வந்தது சொல்லிடுங்க அவர் இப்ப தான் கடிதம் எழுத ஆரம்பித்து இருக்கிறார்.

R.Gopi said...

மாற்றங்கள் மிக அழகாக தொடுக்கப்பட்டுள்ளன இந்த மாலையில்...

வாழ்த்துக்கள்...

ஆடுமாடு said...

//அது வரைக்கும் - சவ்வு மிட்டாய், தேன் மிட்டாய், அப்பள பூ வாங்கியவள் - இப்பொழுது, மல்லிகை, ஒற்றை ரோஜா பூவை விரும்பி வாங்க நேரம் வந்தது//

கூட, ஆரஞ்சுவில்லைய சேர்த்திருக்கலாமே?

நல்லாருக்கு.

அன்புத்தோழன் said...

எப்படி இருக்கீங்க சித்ரா...? கொஞ்ச நாள் ஆப்சென்ட் ஆய்ட்டு வந்து பாக்ரதுகுள்ள இவ்ளோ மாற்றமா.... புது டெம்ப்ளேட்டு நல்லாருக்கு.... அத விட பதிவு ரொம்ப நல்லாருக்கு.... சிம்புளா சொல்னும்னா colorful கனவுகள்.... நம்மள மாத்ரி மனசுலேந்து பேசற ஆள்கலுக்குலாம் ஆயிசு கெட்டியாம் ஹா ஹா.... இதுபோல் என்றும் இனிமை காண வாழ்த்துக்கள்...

Chitra said...

எல்லோருக்கும் தேங்க்ஸ் பா. நான் பதின்ம வயது feelings சொன்னேன். அதுக்கு, இப்படி பாராட்டி உசுப்பேத்துறீங்களே. நிஜமாவே, நான் நல்லா எழுதி உருப்பட்டுருவேனோ என்று ஒரு "பயம்" வந்துடுச்சுப்பா.

அன்பு தோழா, "நம்மள மாத்ரி மனசுலேந்து பேசற ஆள்கலுக்குலாம் ஆயிசு கெட்டியாம் ஹா ஹா...." அப்படின்னு சொல்லிட்டு என்ன சிரிப்பு? ஓ, சந்தோஷ சிரிப்பா? சரி, நானும் சிரிச்சுக்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா....

வெங்கட் said...

ரொம்ப நல்லா இருக்கு..
உங்க சரளமான நடை
ஆச்சரியம் அளிக்கிறது..!
கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல்
எழுத உங்களை போன்ற சிலரால்
மட்டுமே முடியும்..
இது இந்த பதிவை மட்டும் மனதில் வைத்து
சொல்லவில்லை. எல்லா பதிவிற்கும் சேர்த்தே..

Mythili (மைதிலி ) said...

சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாததுனால ( பதின்மம்-teenageaa ??, புரணி-gossip) கொஞ்சம் வெயிட் பண்ண வேண்டியதா போச்சு.. கமெண்ட்ஸ் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். நல்லா அழகா சுருக்கமா சரியாக சொல்லிருப்பது மிகவும் பிடித்திருந்தது. அந்த கம்மர் கட் மிட்டாய விட்டது மனசுக்கு (மிக .. மிக மிக ...) வருத்தமா இருந்த்தது. "1 ஆக இருந்தவள் - இப்பொழுது, 8 ஆகிய மர்மம்" இன்னும் இதுக்கு அர்த்தம் புரியல.. நான் ஒரு மக்கு பிள்ளைன்னு நினைக்கிறேன்... மொத்தத்தில் ஆஹா...

கண்ணா.. said...

ஒகே...நீங்களும் ஜீப்ல ஏறியாச்சா..?

ஆபிஸ்ல ஆணி அதிகம்.. அதனால கொஞ்சம் லேட்

வழக்கம் போல் சரவெடி...

:)

கண்மணி/kanmani said...

ஹிம்ம்ம்ம் எல்லாம் புரியுது

//உருவம்:
அது வரைக்கும் - 1 ஆக இருந்தவள் - இப்பொழுது, 8 ஆகிய மர்மம்.//


தான் புரியலை..:))))

வேலன். said...

கவலைகள்:
அது வரைக்கும் - குச்சி ஐஸ் கிடைக்காமல் போவது வாழ்க்கை பிரச்சினை என்று இருந்தது//

சகோதரிக்கு இல்லாத ஐஸ்கிரீமா...குச்சி ஐஸ் என்ன கப் ஐஸ்கிரீமே போதும் என்கின்ற அளவிற்கு தருகின்றேன்.

வாழ்க வளமுடன்,]
வேலன்.

ஹுஸைனம்மா said...

சொன்ன மாதிரியே மொக்கையா இல்லை!! வித்தியாசமாக, பதின்ம வயதில் பார்வை வித்தியாசமாவதை அழகாச் சொல்லிருக்கீங்க!!

Thenammai Lakshmanan said...

ஒன்னு எட்டு ஆனதும் அம்மா கவலைப்பட்டதும்தான் ரொம்ப யதார்த்தம் சித்ரா

vasu balaji said...

இந்த இடுகை யூத்ஃபுல் விகடனில் வந்திருக்கே. முதல்னு நினைக்கிறேன்:). பாராட்டுகள்.
http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp

Jerry Eshananda said...

ரசித்தேன்,நீங்க சூடம் அணைச்சு சத்தியமே பண்ணினாலும் சத்தியமா இது மொக்கை தாங்கோ.......

SUFFIX said...

வாவ் கலக்கியிருக்கீங்க சித்ரா, எதார்த்தமான அவ்வயது உணர்வுகளை, வித்யாசமாக எழுதி அசத்தியிருக்கிறீர்கள், விகடனில் பிரசுரமானது அறிந்து மகிழ்ச்சி. மேலும் வளர வாழ்த்துக்கள்.

பித்தனின் வாக்கு said...

நிறைய கேக்கனும் போல,

உங்க ஊருல இன்னமும் குச்சி ஜஸ் எல்லாம் விக்கறாங்களா, (பால் ஜஸ்,ஆரஞ்சு ஜஸ், சேமியா ஜஸ்).
உருவம் எட்டுதானா சந்தோகமா இருக்கு.
ஆகா வழக்கம் போல கலக்கல் பதிவு சித்ரா, நீங்க அண்ணாச்சின்னு சொன்னாலும், பதிவுலகில் அக்காதான். அவ்வளவு நல்லா எழுதுகின்றீர்கள். நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் சித்ரா

அருமையான நினவுகள் - அசை போட்டு ஆனந்தித்து - வித்தியாசமான நடையில் எழுதப்பட்ட இடுகை - படித்தேன் ரசித்தேன் - மகழ்ச்சி

மழையில் ஒதுங்குவது - இறுதித் தேர்வு பயம் - ஒற்றை ரோஜா - அம்மாவினைக் கவலைப்பட வைத்தது - சினிமா ஹீரோ - கனாக்காலம் - ஒன்று எட்டாகியது - இவை எல்லாமே இயற்கையான ப்தின்ம வயது மாற்றங்கள்

மறுமொழிகள் - ராகவன் - மொக்கை - அன்புடன் அழைத்த வெ.ராவின் மறுமொழி - சிறப்பு நினைவுகள் கேட்கும் பேநாமூடி - ம்ம் இன்னும் எத்தனைய்யோ - அருமையான் மறுமொழிகள்

நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா

priyamudanprabu said...

சினிமா:
அது வரைக்கும் - heroine போடுற கலர் டிரஸ், வளையல், கம்மல், ஹேர்-கிளிப் என்று இருந்த கவனம் - இப்பொழுது, hero பக்கம் திரும்பியது. ஹி,ஹி,ஹி,ஹி.....

///

HA HA

செந்தில்குமார் said...

அவ்வளவும் உண்மைதானே சித்ரா..