Thursday, February 18, 2010

"பாடும் பட்டு புடவை".

சுவரமாதுரி ...................இது ஏதோ புது தமிழ்  சினிமா பட நாயகி, இப்போதான்  போஜ்புரியில் இருந்து வந்து இறங்கி இருக்காங்க என்று நினைத்து விடாதீர்கள். இது அடுத்த மெகா பட்ஜெட் படத்தில், ஒரு டூயட் பாடலில், கதாநாயகி உடுத்த போகும்  "பாடும் பட்டு புடவை".   

அன்னைக்கு ஹிந்து பேப்பர் படிச்சா, நியூஸ் -  "‘singing silk saree’  embedded with eight micro speakers on its border has caught the fancy of many silk traders down South. 

எப்படிங்க, இப்படி எல்லாம் ரூம் போட்டு (இதுக்கு ரூம் இல்ல, ஒரு மாடி வீடே கட்டி) யோசிச்சி புதுசு புதுசா புடவையில் புதுமை புகுத்துறாங்க?   ஆந்தராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் டவுன்ல, மிளகாயை கடிச்சிக்கிட்டே யோசிச்சா இப்படியெல்லாம் ஐடியா வருதுன்னு, இதை டிசைன் பண்ண பி.மோகன் சொல்லி இருக்கார். 

புடவைக்குள்ள எட்டு மைக்ரோ ஸ்பீக்கர்ஸ்.  அப்புறம், முந்தானையில் ஒரு சின்ன டிஜிட்டல் ம்யுசிக் பிளேயர். இது இருநூறு பாடல்கள் வரை non-stop ஆ நான்கு மணி நேரத்துக்கு பாடுமாம். திருவாளர் மோகன் அவர்கள்,  2-GB memory chip இந்த சேலைக்குள் வைத்து இருக்கிறார்.  இந்த ஐடியா சரியா வர ரெண்டு மாதமா மண்டையை சொரிஞ்சிக்கிட்டேன் என்று மண்டை சொரிஞ்ச விஷயத்தை அவரே ஹிந்து பேப்பர்ல சொல்லி இருக்கார்.  படிச்சு பாருங்க.

இந்த புடவை டிசைன் ரைட்ஸ் வாங்கி வச்சிருக்கிற திரு. ஷிவா என்ன சொல்றார்னா, "இந்த புடவைக்கு நிறைய ஆர்டர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பட்டு கடல் (கடை)களில் இருந்து வருதாம். ஆர்டர் எடுத்து மாளலை" என்று புலம்புற மாதிரி பெருமை அடிச்சிக்கிறார். 

இந்த புடவையை டிசைன் பண்ணவங்க, ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அவர்களின் தீவிர பக்தர் என்பதால் அவருடைய musical compositions இந்த புடவையில் கேக்குற மாதிரி சேர்த்து விட்டிருக்காங்க. இந்த புடவை  கட்டிகிட்டா  மகாலச்சுமி மாதிரி இருக்குமாம். 
மகாமேரிகளும், மகாபாத்திமாக்களும் கவனிக்க  -  உங்களுக்கு ஸ்பெஷல் ஆர்டர்ல வேற பாடல்கள் வருது.

திருவாளர் மோகன், எதையாவது செஞ்சு கண்டுபிடிச்சி, இந்த பெண்களை எப்படியாவது ஒழுங்கா சாரி கட்ட வச்சுரணும்னு முயற்சி எடுத்துகிட்டே இருக்கிறார். போன வாட்டி,  சின்ன LED bulbs பொருத்துன ‘lighting sarees’
கொண்டு வந்தார். பளிச் பளிச் ஐடியா. இது கிண்டல் அல்ல. நிஜம்.
கல்யாண சீசன் டைம்ல,  பொழுது சாயுற நேரத்துல, பளிச் பளிச்னு இருட்டுல தெரிஞ்சா போக வேண்டிய கல்யாண மண்டபம் வந்துடுச்சுன்னு கார்,  பைக்  அப்படியே ஏத்திடாதீங்க. அப்புறம்,  மணப்பெண் போய் சேர்ந்துட்டானு சொல்லி கல்யாணத்தை கருமாதியா மாத்திடுவாங்க.

இவர் இதற்கு முன் நெய்து தந்த சந்தனகட்டை சேலைகளுக்கு ரொம்ப மவுசு இருக்காம். அந்த சந்தன மணம், சேலையில் permanent ஆ இருக்குமாம்.  அதான், எங்க தெருவுல இருந்த மீனாட்சி பாட்டி, அவங்க மருமகளை, "கட்டையில போறவளே" னு அடிக்கடி சொன்னாங்க போல. நான் கூட மருமகளை இப்படியெல்லாம் திட்டுறாங்களே என்று அவங்களை தப்பா நினைச்சிட்டேன்.

சரி, மறுபடி "பாடும் புடவை" கச்சேரிக்கு  வருவோம்.
"ஒரு புடவை நெய்து முடிக்க, பத்து பேர் சேர்ந்து ராப் பகலா உழைச்சா, ஒரு மாதம் ஆகுதாம்."
வர ஆர்டர்களை சமாளிக்க எத்தனை பத்து பேருக்கு வேலை கொடுக்கணும்? யாரங்கே, நம்ம ஆளுங்க இன்ஜினியரிங் படிச்சிட்டு வேலைக்கு வெயிட் பண்றவங்களை, உடனே தர்மாவரம் அனுப்புங்க. அடுத்த IT industry அங்கே தான் கொடி (சேலை) கட்டி பறக்க போகுது.

ஆமாம், மோகன் சார், பெண்களுக்கு மட்டும் இப்படி டிஜிட்டல் கலக்கல் ஆடைகள் னு சொன்னா, உங்கள் ஆண் வர்க்கம் பீலிங்க்ஸ் காட்டுறாங்க. அப்படியே பட்டு வேஷ்டிகளில்,  சட்டைகளில் இப்படி சேர்த்து விட்டுட்டீங்கனா, அவங்க பாட்டுக்கு,  பாட்டு கேட்டுகிட்டு இருப்பாங்க பாருங்க - பொண்டாட்டி பாட்டு காதில் விழாது.  அப்புறம், அந்த பல்புகள் சேர்க்க மறக்காதீங்க. தண்ணி அடிச்சிட்டு ஆட்டம் போடும்போது, அந்த அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரி பளிச் பளிச்.

இங்கே இன்னொரு அன்பர், பட்டாடைகள் கட்டுரவங்களுக்கு மட்டும்தான் இந்த ஜிகினா ஜிகினா டிஜிட்டல்  வேலையா என்று வன்மையா கண்டித்து consumer court எல்லாம் போறேன் என்கிறார். விரைவில், உங்கள் ஜீன்ஸ் டி-ஷர்ட்களில்  ......... பளிச் பளிச் னு லைட் அடிக்க , "சுர்ருங்குது , உர்ருங்குது" னு பாட்டு கேக்கலாம். ரோடுல பொண்ணுங்க இப்படி நடக்க ஆரம்பிச்சா நமீதா, ரகசியா, முமைத் கானுக்கு என்ன  வேலைகள் என்று, பஸ் ஸ்டாப் பஸ் ஸ்டாப் ஆ போய் காத்து கிடக்கும் ஒரு ரோடு சைடு ரோமியோ, ஜொள்ளுகிறார்.

   ஆந்த்ராவுக்கே எல்லா பெருமையும் லாபமுமா என்று தமிழ்நாடு நினைக்குது.  எப்பொழுது   திருப்பூர் பனியன்கள் அண்ட் ஜட்டிகள் போடும்  கம்பனிகள், டிஜிட்டல் யுகத்துக்கு வர போகிறார்கள்?
"நாக்க மூக்க, நாக்க மூக்க ...."   பளிச், பளிச்......

 International Science Innovation conference 2010 இல்,  இந்திய விஞ்ஞானியின் பேச்சில் இருந்து:  "டெக்னாலஜி............ டெக்னாலஜி........எங்க ஊரு, M.R.ராதா சார்  சுட்டி காட்டியது போல -  "நீங்க நீராவியில் ரயில் விடுறதுக்கு முன்னாலேயே , நாங்க அதுல இட்லி அவிச்சோம்ல "....... நாங்க, யாரு? டெக்னாலஜிக்கே  டெக்னாலஜி கத்து கொடுக்கிறவங்க. நீங்க iphone, iMAC, ipod னு சின்ன சின்ன பொருளா உருவாக்கிட்டு இருங்க. நாங்க,  iSari, iJatti, iPalich னு ........... எப்பூடி?"

ஆமாம், இந்த மாதிரி புடைவைகளைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் அந்த தாய்குலங்கள் யார்? துட்டை கையில் வைச்சுக்கிட்டு என்ன செய்ய என்று தெரியலையே என்று திருதிருன்னு முழிக்கிற, கஷ்டப்பட்ட பெண்களோ?   இல்லை, " FM ல, CD ல,  போன்ல பாட்டு கேட்டு  கொண்டு இருக்கேனே. நான் கட்டி இருக்கிற புடைவையிலேயே பாட்டு கேக்க முடியவே முடியாதா?" என்று வாழ்க்கையில் அடுத்த வேளைக்கு எதில் பாட்டு கேக்க போகிறோம்னு தெரியாத  பாவப்பட்ட அபலை  பெண்களோ? 
இங்கே எத்தனை உயிர்களுக்கு சோத்து பாட்டுக்கே வழியை காணோம். காசை கொண்டு எந்த பாட்டுல  போடுறாங்க பாருங்க.


65 comments:

மீன்துள்ளியான் said...

வெட்டி பயலுக .. வழக்கம் போல் நக்கல் தெறிக்கிறது . இந்த புடவைய விஜய் TV நிகழ்ச்சிகளில் கலந்துக்க சொல்லிடுவாங்க போல

அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க. எள்ளல் கலந்த நடை.

ISR Selvakumar said...

மீன்துள்ளியான்,
புடவை புரோமட்டர்கள் ஏதாவது டிவி நிகழ்ச்சியை குத்தகைக்கு எடுத்தால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. டிவி நிக்ழ்ச்சிகள், செய்தித்தாள் செய்திகள் வழியாக ஒரு இன்டைரக்ட் மார்க்கெட்டிங் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது விளம்பர அரசியல். வேறொரு சந்தர்ப்பத்தில் அதைப் பற்றி பேசலாம்.

சித்ரா,
மகாலச்சுமிகள் - மகாமேரிகள் - மகாபாத்திமாக்கள் வார்த்தைப் பிரயோகங்களை இரசித்தேன். சுவாரசியம் புடவைகளில் இல்லை. அதைக் கட்டும் பெண்களிடம் உள்ளது என்பது என் கருத்து. என்னுடைய சமீபத்திய ஜொள்ளு சாதா காட்டன் புடவையில் விண்ணைத் தாண்டி ஈர்க்கும் த்ரிஷா. பாடும் புடவை, எல்.இ.டி புடவைகள் எல்லாம் பண விரய பம்மாத்துகள். பணத்தின் அருமை தெரியாதவர்கள். (வேண்டாம்..காது நுனி சூடாகி நான் டிராக் மாறுகிறேன்)

நகைச்சுவை எழுத்தாளர்கள் அரிதாகிக் கொண்டிருக்கிறார்கள். நீ சரியான டிராக் பிடித்தால் பெரிய கலகல ரைட்டராக வருவது திண்ணம்.

ஆரூர் சரவணா said...

//எப்படிங்க, இப்படி எல்லாம் ரூம் போட்டு (இதுக்கு ரூம் இல்ல, ஒரு மாடி வீடே கட்டி) யோசிச்சி புதுசு புதுசா புடவையில் புதுமை புகுத்துறாங்க?//

இந்த கற்பனைக்கு இதெல்லாம் போதாது. தமிழ் நாட்டுல புதுசா கட்டுற சட்டசபை கட்டிடத்து உச்சியில போய் சிந்திக்கிறார்னு நினைக்கிறேன்.
******
//புடவைக்குள்ள எட்டு மைக்ரோ ஸ்பீக்கர்ஸ். அப்புறம், முந்தானையில் ஒரு சின்ன டிஜிட்டல் ம்யுசிக் பிளேயர். இது இருநூறு பாடல்கள் வரை non-stop ஆ நான்கு மணி நேரத்துக்கு பாடுமாம்.//

இதெல்லாம் ஹோம் மேக்கருக்காகவா இல்ல இதுவே ஹோம் தியேட்டரா?
******
ஆனா என்ன மாதிரி சில ஆளுங்க தனிமையும் நிசப்தமும் போதும்னு நூலகத்துல போய் ஒதுங்குரவங்களுக்கு ஒண்ணும் கவலை இல்லை.

அண்ணாமலையான் said...

பிரமாதமா எழுதுன உங்களுக்கு வலையுலக சார்பா அதே புடவைய பரிசளிக்க நிதி திரட்டப்படுகிறது....

ராமலக்ஷ்மி said...

பாடும் புடவையை நல்லாப் பிரிச்சுக் காயப் போட்டுட்டீங்க சித்ரா. பதிவு அருமை.

தத்துபித்து said...

அது சரிக்கா, எப்புடி துவைக்கிறதாம்?
(சில ரங்கமணிகளுக்கு கொண்டாட்டம் ).

Unknown said...

அப்ப புடவைய கட்டுறது தவிர மத்த எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்னு சொல்லுங்க..

vasu balaji said...

திட்டும் புடவை வருதாம் ஆட்டோல:))

goma said...

இன்னும் கொஞ்ச நாளில்
சன் டீவி கலஞர் டீவி யில் படவைகளுக்கான சூப்பர் சிங்கர் மெகா போட்டி ..

.அதற்கான ஜட்ஜஸ் மும்தாஜ்,அசின் ,பிசின்...

.சாரி கட்டுதோ இல்லையோ சும்மா களை கட்டும் பாருங்க....

நட்புடன் ஜமால் said...

அவங்க ரூம் அல்லது புது வீடு கட்டி யோசிச்சாய்ங்கன்னா நீங்க ஹெலிக்காப்ட்டர்ல போய் அந்த வீட்டு மேலேயே இறங்கி இப்படியெல்லாம் யோச்சிருக்கீங்க ...

-----------------

சேலைய வாங்காமலே துவச்சி காய போட்டுட்டீங்க

சிரிப்புக்கும் பஞ்சமில்லை ...

தமிழ் உதயம் said...

இங்கே எத்தனை உயிர்களுக்கு சோத்து பாட்டுக்கே வழியை காணோம். காசை கொண்டு எந்த பாட்டுல போடுறாங்க பாருங்க. ///////
உண்மையை சொல்லி விட்டீர்கள். ஆனா அதுக்கென்ன பண்ண முடியும்.

இருக்கிறவங்க முடிஞ்சுகிறாங்க... இல்லாதவங்க.?

அப்புறம் இந்தியா இப்படி தான் இருக்கும்.
அதான் சகிச்சுக்காம்ம USA போயிட்டீங்களா.

Chitra said...

AMMU: (via e-mail)


"கூந்தல் இருக்க மகராசி அள்ளி முடிஞ்சாங்கற மாதிரி

பாட்டு கேக்கற மகராசி பட்டு அணிஞ்சா ன்னு நெனச்சிக்க வேண்டியதுதான்.

பெண்களுக்கு உடைகள் மீதும், நகைகள் மீதும் மோகம் இருக்கும் வரை, திருவாளர் மோஹன் போன்றவர்கள் மண்டையைச் சொரிஞ்சு பெட்டியையும் நிரப்பிக்கலாம்..."

சாருஸ்ரீராஜ் said...

சித்ரா எப்படி இவ்வளவு நகைசுவையா எழுதுறிங்க , நீங்க எதும் ரூம் போட்டு யோசிச்சிங்களா என்ன... ரொம்ப நல்லா இருக்கு

Vishy said...

புடவை கட்றவங்க பாடறது (பாடா படுத்தறது) பத்தாதுனு புடவையும் பாடுதாமா.. கொஞ்சம் ஆம்பளைங்க நிலைமையை யோசிச்சுப் பாருங்க..

சரி புடவையில் இந்த பாட்டெல்லாம் வந்தா என்ன ஆகும்னு யோசிச்சுப் பாருங்க

கட்டிப்புடி கட்டிப்புடிடா..
கண்ணா என் சேலைக்குள்ளே கட்டெறும்பு..
போனா போகுது புடவை பறக்குது..

சும்மா இருக்கற ஆம்பளைங்கள உசுப்பேத்தறதே இவனுங்க வேலையாயிருக்குது...

சங்கர் said...

//தத்துபித்து said...
அது சரிக்கா, எப்புடி துவைக்கிறதாம்? //

சபாஷ் சரியான கேள்வி, நானும் கேட்கிறேன்

நாடோடி said...

புடவையை வெளிவருவதற்குள் கிழிச்சி தொங்க விட்டுட்டீங்க..பார்த்துங்க வண்டி அனுப்பிற போறாங்க..

டவுசர் பாண்டி said...

//இந்த புடவை கட்டிகிட்டா மகாலச்சுமி மாதிரி இருக்குமாம்.//

இத்த கட்டிக்குனு , நம்ப ஏரியா பக்கம் வந்தா , கற்பூரம் காமிக்க இப்பவே வாங்கி வைச்சிடேம்பா !!
( தயவு செய்து , பகலில் வரவும் , எங்க ஏரியா ஆளுங்க , ராத்திரி அவங்களே சாமி ஆடுவாங்கோ )

Dr.Rudhran said...

i like your perception."இங்கே எத்தனை உயிர்களுக்கு சோத்து பாட்டுக்கே வழியை காணோம். காசை கொண்டு எந்த பாட்டுல போடுறாங்க பாருங்க."

ஜெட்லி... said...

எனக்கு என்னமோ இது ரெக்காட் டான்ஸ்
ஆளுங்களுக்கு கரெக்ட்ஆ இருக்கும்னு தோணுது.....
விட்டா இனிமே முதுகு பின்னாடி மானிட்டர்
வச்சே தூணி வரும் போல.....

Mohan said...

வழக்கமான கலகலப்பு....

பித்தனின் வாக்கு said...

நல்லா சொன்னீங்க சித்ரா, புடவையில் டீ வீ சீரியல் பாக்கிற மாதிரி கொண்டு வந்தா இன்னும் சேல்ஸ் பிச்சிக்கும். நன்றி சித்ரா.

வேலன். said...

ஏங்க ஏற்கனவே ஆரம்பிச்சாங்கனா அவ்வளவுதான்.இதுலே பாட்டுவேறேயா...சரிதான்்...வாழ்க வளமுடன். வேலன்.

Vidhya Chandrasekaran said...

துவைச்சு தொங்க போட்ருக்கீங்க:)

நல்ல பதிவு. நல்ல ப்ளோ ரைட்டிங்கல.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மகா மேரி மகா பாத்திமா :))

கடைசி பாரா சரியா கேட்டீங்க் யாரு அதெல்லாம் வாங்கி கட்டறா..?

கண்மணி/kanmani said...

அதெல்லாம் சரிங்க.இனி ராவோட ராவா ஓடிப் போய் கோயில்ல திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு இது சரி வருமா?காட்டிக் கொடுத்துடாதோ?
அது சரி வால்யூமை ம்யூட் பண்ற பட்டன் இல்லாமயா போயிடும்?

சைவகொத்துப்பரோட்டா said...

ஆஹா...கிளம்பிட்டாங்கையா...நம்ம தலையில துண்டு போடாம விட மாட்டானுவ போல.
வழக்கம்போல் உங்கள் நகைச்சுவை கலந்த எழுத்து நடை :))

settaikkaran said...

ஆஹா! நேத்துக்கூட ஒரு அம்மணி ரோட்டுலே தனியாப் போயிட்டு இருக்கும்போது "வரவு எட்டணா,செலவு பத்தணா,அதிகம் ரெண்டணா, கடைசியில் துந்தனா...துந்தனா,"னு பாட்டுச்சத்தம் கேட்டுது. சரிதான், எஃப்.எம்.ரேடியோ போலிருக்குன்னு நினைச்சேன். மேட்டர் இது தானா? புடவைப்பாட்டா? :-))

ஆதி மனிதன் said...

பாத்து நல்ல பாட்டா பதிவு பண்ண சொல்லுங்க புடவையில. "கட்டி புடி, கட்டி புடிடா" கன்னாலானு அது "பாட்டு"க்கு பாடி வச்சு அப்புறம் ஏதாவது ரசாபுசம் ஆயிடபோவுது.

விக்னேஷ்வரி said...

சித்ரா,
நல்ல பயனுள்ள தகவல் சொல்லிருக்கீங்க எனக்கு.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் டவுன்ல, மிளகாயை கடிச்சிக்கிட்டே யோசிச்சா இப்படியெல்லாம் ஐடியா வருதுன்னு, இதை டிசைன் பண்ண பி.மோகன் சொல்லி இருக்கார்.

இந்த ஐடியா சரியா வர ரெண்டு மாதமா மண்டையை சொரிஞ்சிக்கிட்டேன் என்று மண்டை சொரிஞ்ச விஷயத்தை அவரே ஹிந்து பேப்பர்ல சொல்லி இருக்கார்.

இங்கே இன்னொரு அன்பர், பட்டாடைகள் கட்டுரவங்களுக்கு மட்டும்தான் இந்த ஜிகினா ஜிகினா டிஜிட்டல் வேலையா என்று வன்மையா கண்டித்து consumer court எல்லாம் போறேன் என்கிறார். விரைவில், உங்கள் ஜீன்ஸ் டி-ஷர்ட்களில் ......... பளிச் பளிச் னு லைட் அடிக்க , "சுர்ருங்குது , உர்ருங்குது" னு பாட்டு கேக்கலாம். ரோடுல பொண்ணுங்க இப்படி நடக்க ஆரம்பிச்சா நமீதா, ரகசியா, முமைத் கானுக்கு என்ன வேலைகள் என்று, பஸ் ஸ்டாப் பஸ் ஸ்டாப் ஆ போய் காத்து கிடக்கும் ஒரு ரோடு சைடு ரோமியோ, ஜொள்ளுகிறார். //

ஒருவரின் கண்டுபிடிப்பில் உங்களுக்கு ஏனிந்த ஏளனம். நகைச்சுவைக்காக என்றாலும் அடுத்தவரின் திறமையை அளவுக்கதிகமாக கிண்டலடிக்கும் போது சிரிப்பு வரவில்லை. கோபமாகவே உள்ளது.

இங்கே எத்தனை உயிர்களுக்கு சோத்து பாட்டுக்கே வழியை காணோம். காசை கொண்டு எந்த பாட்டுல போடுறாங்க பாருங்க. //
ஏங்க, பலரும் செருப்பு கூட இல்லாம நடந்து போறாங்களேன்னு நீங்க உங்க காரை வித்துட்டீங்களா....
அவரவர் விருப்பம் சித்ரா.

பதிவுலகமே சண்டைகளால் சிதறிக் கொண்டுள்ளது. இதையும் அப்படி நினைச்சிடாதீங்க. உங்கள் பதிவின் மீதான என் பார்வை மட்டுமே. மத்தபடி நாம தோஸ்த்துதான். :)

Prathap Kumar S. said...

//மகாமேரிகளும், மகாபாத்திமாக்களும் கவனிக்க - உங்களுக்கு ஸ்பெஷல் ஆர்டர்ல வேற பாடல்கள் வருது.//

ஹஹஹ நல்ல டைமிங்...

டெக்னாலஜீ உள்ளாடைகள்னு ராமராஜ், சங்குமார்க் உள்ளாடை கம்பெனிகள் விளம்பரம் பண்றதை நினைச்சுப்பார்த்தேன் அவ்வ்வ்வ்வ்.....
சாரியோடவே போகட்டும் எங்களுக்கு இதெல்லாம் தேவையில்லை... ஏன் சித்ரா டீச்சர் பீதியை கிளப்புறீங்க...

pattchaithamizhan said...

aka..... arumaiyaaga ulladhu:)

மங்குனி அமைச்சர் said...

நல்லவேள மேடம் உங்க பிளாக் அட்ரஸ் என் wife - க்கு தெரியாது.
ஆமா இது வஞ்சபுகழச்சி அணி தானே

திவ்யாஹரி said...

வெட்டி பேச்சுன்னு பேர் வச்சிட்டு பயனுள்ளதா தான் சொல்றிங்க.. good post.

பாலாஜி சங்கர் said...

""""அந்த பல்புகள் சேர்க்க மறக்காதீங்க. தண்ணி அடிச்சிட்டு ஆட்டம் போடும்போது, அந்த அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரி பளிச் பளிச்."""


பல்பு வாங்குறது என்பது இதுதானா
நல்ல எள்ளல் நடை

Jerry Eshananda said...

சித்தேன்,அந்த எம்.ஆர் .ராதா மேட்டர் நல்ல காமெடி

Jerry Eshananda said...

சகோதரி,விக்னேஸ்வரி அவர்களது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

Thenammai Lakshmanan said...

//மகாமேரிகளும், மகாபாத்திமாக்களும் கவனிக்க - உங்களுக்கு ஸ்பெஷல் ஆர்டர்ல வேற பாடல்கள் வருது//

HAHAHA THIS IS OUR REAL HUMOUR CHITRA.....
KALAKURE DA

Thenammai Lakshmanan said...

//அப்புறம், அந்த பல்புகள் சேர்க்க மறக்காதீங்க. தண்ணி அடிச்சிட்டு ஆட்டம் போடும்போது, அந்த அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரி பளிச் பளிச்.//

RENDAVATHU HUMOUR ITHU DA...HAHAHA

க ரா said...

நல்ல நகைச்சுவை நடை சித்ரா. இப்ப மனசு கிடந்து அடிச்சிக்குது எங்க வீட்டு தங்கமணி இந்த பதிவ பாத்தூரகூடாதுன்னு.

suvaiyaana suvai said...

புடவைக்கு விளம்பரம் எத்தனை புடவை கிடைத்தது:) இன்ட்ரஸ்டிங்கா எழுதியிருக்கீங்க!

Paleo God said...

படிக்கலைங்க..:( படிச்சிட்டு பதில் போடறேன்..:)

malar said...

நல்ல பதிவு...

தூரமாக இருந்தாலும் எழுதும் அறிந்திருக்கும் விசயங்கள் எல்லாம் சூப்பர்.

பணம் இருக்க கூடியவர்கள் வாங்கி கொள்வார்கள் இல்லாதவர்கள்.....

பணம் இருக்க கூடியவர்கள் வாங்கியும் ஆகனும் அப்போது தான் நாட்டில் பணம் புழக்கதில் வரும்.கோடிகணக்கில் சம்பளம் வாங்குபவர்களுக்கு இது என்ன பெரிய விசயமா?


சிக்கன் இல்லாத கஞ்சி பிரியாணி சூப்பர்...

Mythili (மைதிலி ) said...

சித்ரா... பவம் டீ அந்த மோகன். எதோ வயித்து பொழப்புக்காக இப்படி எல்லாம் பண்றார். அதுல மண் அள்ளி போட்டுடாதே. பணம் இருக்கவுங்க தானே வாங்கறாங்க. போன போகட்டும். சமையல் பண்ணும்போதே பாத்திரங்கள்ள T.V program பார்க்கிற மாதிரி யாரவது டிசைன் பண்ணினா நல்லா இருக்கும்.

Radhakrishnan said...

உலகில் எல்லா துறைகளிலும் இதுபோன்று நடந்து கொண்டுதானிருக்கிறது சித்ரா. தொழில்நுட்பத்தில் எளியோர் எல்லாம் தெரியார்.

நசரேயன் said...

//"பாடும் பட்டு புடவை"//

ஏன் சாலமன் அண்ணாச்சி வாங்கி கொடுக்கலையா?

Anonymous said...

//எப்பொழுது திருப்பூர் பனியன்கள் அண்ட் ஜட்டிகள் போடும் கம்பனிகள், டிஜிட்டல் யுகத்துக்கு வர போகிறார்கள்?
"நாக்க மூக்க, நாக்க மூக்க ...." பளிச், பளிச்......//

:)

சூப்பர். அடுத்த தரவை இந்தியா வரும்போது இந்த புடவை ஒண்ணு வாங்கிட வேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

சரிங்க.இனி ராவோட ராவா ஓடிப் போய் கோயில்ல திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு இது சரி வருமா?காட்டிக் கொடுத்துடாதோ?
அது சரி வால்யூமை ம்யூட் பண்ற பட்டன் இல்லாமயா போயிடும்?// ithu!!!!

Prabu M said...

வணக்கம் :)
இந்தவார வலைச்சர ஆசிரியர் ஜெர்ரி அவர்களின் அழகான அறிமுகங்களால் நாளும் வித்தியாசமான எழுத்துக்களால் திளைத்து வருகிறோம்.... உங்களின் யதார்த்த நடை ரொம்பவே அழகு :)

//இங்கே எத்தனை உயிர்களுக்கு சோத்து பாட்டுக்கே வழியை காணோம். காசை கொண்டு எந்த பாட்டுல போடுறாங்க //பாருங்க.//

அக்கறையான வரிகள் :)
ரொம்ப சந்தோஷம் அக்கா உங்கள் அறிமுகம் கிடைத்ததில்... தொடர்கிறேன் உங்களை

புலவன் புலிகேசி said...

//ஆந்தராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் டவுன்ல, மிளகாயை கடிச்சிக்கிட்டே யோசிச்சா இப்படியெல்லாம் ஐடியா வருதுன்னு, இதை டிசைன் பண்ண பி.மோகன் சொல்லி இருக்கார். //

ஹா ஹா ஹா...குசும்புதான் உங்களுக்கு...

வேற யாரு ஆசப்படப் போறா..அதே காச வச்சிக்கிட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம கஷ்டத்துல இருக்கறவனங்கதான்...

Paleo God said...

அடேங்கப்பா! பதிவு கலக்கல், பின்னூட்டங்கள் கலக்கலோ கலக்கல், கடைசியா பின்னூட்டங்கள் படிச்சிட்டு பதில் போடறதுல ஒரு சுவாரஸ்யம் இருக்குங்க..:)) பை த பை புடவை பற்றி எனக்கு நாலேட்ஜ் கம்மி..:) கான்செப்ட் கலக்கல்.

//இங்கே எத்தனை உயிர்களுக்கு சோத்து பாட்டுக்கே வழியை காணோம். காசை கொண்டு எந்த பாட்டுல போடுறாங்க பாருங்க//

உண்மைதாங்க.:(

SUFFIX said...

ஏற்கனவே பட்டுப்புடைவை கழுகிறதில்லைன்னு ஆண் வர்க்கம்ஸ் கம்ப்ள்யிண்ட் இருக்கு, இதிலெ இவ்ளோ தில்லாங்கடி வேலையெல்லாம் செஞ்ச புடவையா? இனி பிடித்த பாடல்களை புடவையில் கேட்டு மகிழலாம், என்னவோ போங்க...

கண்ணா.. said...

//இங்கே எத்தனை உயிர்களுக்கு சோத்து பாட்டுக்கே வழியை காணோம். காசை கொண்டு எந்த பாட்டுல போடுறாங்க பாருங்க. //

நச்ன்னு சொல்லிட்டீங்க.....

இதுபோல தேவையில்லாத விஷயங்களை மார்கெட்டிங் உத்திக்காக தொடர்ந்து அறிமுகபடுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்...:(

சத்ரியன் said...

என்னத்தைச் சொல்ல? சரி விடுங்க. அப்பிடியாவது நம்ம அம்மணிங்க சாரி(saree) கட்டுவாங்களான்னு பாப்பம்.

ஹேமா said...

சித்ரா...உங்க நகைச்சுவை எது எதையெல்லாம் தொட்டு வருது.அருமையா சிரிக்க வைக்கிறீங்க தோழி !

Matangi Mawley said...

enna koduma ithu!! :) aanaa write up is gr8!!

அன்புத்தோழன் said...

அவிங்க ஏற்கெனவே கட்டுன ஊட்டுல உக்காந்து யோசிக்ராய்ங்கனா, நீங்க ஊடு கட்டில யோசிக்றீங்க... ஹா ஹா.... ;-))

இதனால் சில நவீன யுவதிகள் தாங்கள் திட்ட நினைக்கும்போதெல்லாம் inbuilt memory இல் விதம் விதமா திட்டுவதை ரெகார்ட் செஞ்சு வெச்சு எப்போலாம் திட்ட தோணுதோ அப்போலாம் விதம் விதமா ப்ளே பண்ணி திட்டலாம் (எப்படி எல்லாம் கண்டுபுடிச்சு விதம் விதமா ஆப்பு வெக்ராய்ங்கய்யா இந்த அப்பாவி ஆண் வர்கத்துக்கு)....

பத்மநாபன் said...

கலரும் பார்த்து , டிசைனும் பார்த்து , இனி பாட்டும் கேட்டு பார்த்துட்டு தான் செலக்சன் ..... ம . குல திலகங்களே
நாங்க படற பாட்டையும் கேளுங்க ....

சசிகுமார் said...

புடவைக்கு பெயர் போன நம் தாயகத்தில் அந்த புடவையிலே பல அற்புதங்கள் செய்து உள்ள அந்த கலைஞனுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள், நல்ல பதிவு தொடர்ந்து எழுதி பல சாதனைகள் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//சச்சிதானந்த சுவாமிகள் அவர்களின் தீவிர பக்தர் என்பதால் அவருடைய musical compositions இந்த புடவையில் கேக்குற மாதிரி சேர்த்து விட்டிருக்காங்க. //

*********

நான் “தளபதி”யோட பக்தன்... எனக்கு “புலி உறுமுது இடி இடிக்குது வேட்டைக்காரன்” பாட்டு போட்ட புடவை கிடைக்குமா...

//அப்படியே பட்டு வேஷ்டிகளில், சட்டைகளில் இப்படி சேர்த்து விட்டுட்டீங்கனா, அவங்க பாட்டுக்கு, பாட்டு கேட்டுகிட்டு இருப்பாங்க பாருங்க - பொண்டாட்டி பாட்டு காதில் விழாது. அப்புறம், அந்த பல்புகள் சேர்க்க மறக்காதீங்க. தண்ணி அடிச்சிட்டு ஆட்டம் போடும்போது, அந்த அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரி பளிச் பளிச்.//

சித்ரா.... என்னா டெர்ரர் ஐடியாப்பா.... யப்பா...

//"நீங்க நீராவியில் ரயில் விடுறதுக்கு முன்னாலேயே , நாங்க அதுல இட்லி அவிச்சோம்ல "....... நாங்க, யாரு? டெக்னாலஜிக்கே டெக்னாலஜி கத்து கொடுக்கிறவங்க//

ஹா...ஹா...ஹா.... நீங்க மகா பெரிய வேலைய எல்லாம் பண்ண சொல்ல... நாங்க இங்க ஆவில “கொழா புட்டு” ரெடி பண்ணுவோம்..

//இங்கே எத்தனை உயிர்களுக்கு சோத்து பாட்டுக்கே வழியை காணோம். காசை கொண்டு எந்த பாட்டுல போடுறாங்க பாருங்க. //

நகைச்சுவையா சொல்லிட்டு இருந்த இந்த இடுகை, சித்ராவின் அசத்தலான சிந்தனையுடன் முடிந்தது பாராட்டத்தக்கது...

வாழ்த்துக்கள் சித்ரா...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கல்யாண சீசன் டைம்ல, பொழுது சாயுற நேரத்துல, பளிச் பளிச்னு இருட்டுல தெரிஞ்சா போக வேண்டிய கல்யாண மண்டபம் வந்துடுச்சுன்னு கார், பைக் அப்படியே ஏத்திடாதீங்க. அப்புறம், மணப்பெண் போய் சேர்ந்துட்டானு சொல்லி கல்யாணத்தை கருமாதியா மாத்திடுவாங்க. //

ஹா ஹா ஹா...குசும்புதான்

Asiya Omar said...

இந்த இடுகைக்கு அப்புறம் பாடும் பட்டு இன்னும் பிரபலமாயிடுச்சாமே ! ரொம்ப ரசித்து படித்தேன்.

Jaleela Kamal said...

சித்ரா இப்ப தான் உங்களை நினைத்து கொண்டு உங்கள் பதிவை படித்து கொன்டு இருக்கேன், நீங்கள் என் பதிவில் பதில் போட்டு இருக்கிறீர்கள்

Jaleela Kamal said...

சித்ரா பட்டு புடவைய பற்றி நல்ல வழக்கம் போல காமடி கலந்த உங்கள் எண்ணத்தை பதிவாக போட்டு விட்டீர்கள்.நல்லவே துவைத்து விட்டீர்கள்,

ரொம்ப அருமையான பதிவு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப தேங்க்ஸ், எங்க ஆத்துகாரர் கிட்ட இந்த கல்யாண நாளுக்கு என்ன கேக்கருதுன்னு மண்டைய ஒடைச்சுட்டு இருந்தேன். நல்ல சமயத்துல சொன்னேள். தேங்க்ஸ் மாமி (எங்க ஆத்து மாமா உங்க மேல கேஸ் போட்டா நான் பொறுப்பில்ல கேட்டேளா)