Thursday, February 4, 2010

சந்தோஷ நடை போடு!



சென்ற வார இறுதியில், ராக்கி மலை தொடரில் (Rocky Mountains Range) உள்ள Colorado Springs and Manitou Springs என்ற ஊர்களுக்கு செல்வது என்று முடிவு செய்து, பயணத்தை துவங்கினோம். இங்குதான் 14,110 அடி கடலுக்கு மேல் உள்ள Pikes Peak என்ற மலை இருக்கிறது. அதான்ப்பா, நம்ம ஊட்டி மலை
(about 7500 ft above sea level) மாதிரி கிட்ட தட்ட ரெண்டு மடங்கு உயரம்.

வீட்டை விட்டு கிளம்ப தயாராகி கொண்டிருந்த போது, தோழி ஒருத்தி கூப்பிட்டு,
"weather forecast பார்த்தாயா? இன்னைக்கு ராத்திரியில் இருந்து snow storm. பன்னிரண்டு இன்ச்  வரை snowfall எதிர் பார்க்குறாங்க. நீங்க கண்டிப்பாக போக வேண்டுமா? பார்த்து கொள்ளுங்கள்" என்று எச்சரிக்கை மணி அடித்தாள்.
"பெட்டிகளை load பண்ணிக்கிட்டு இருக்கோம். போலாம்னு முடிவு பண்ணிட்டோம்."
"புள்ளைங்களையும் கூட்டிகிட்டா?"
"கைலாசத்துக்கு போறதுன்னு இருந்தா, கூண்டோடு - குடும்பத்தோடு போகலாம்னுதான்."
"நீங்க ஒரு லூசு குடும்பம்," என்றாள்.

Airport அடையும் வரை பனிக்கான அறிகுறி இல்லை. "சித்ரா அண்ட் குடும்பம், பத்திரமா உள்ளே போயிட்டாங்களா, அட, அதற்குதான் நான் waiting," என்று பனி காத்திருந்தது போல, gate அருகே வந்து சேரவும், கொட்ட ஆரம்பித்தது. United Airlines, Denver செல்லும் flight service, பனிமழை காரணமாக ரத்து செய்து விட்டதை அறிவித்தது. அடுத்தவன் எப்படி ஆனா நமக்கு என்ன, நம்ம flight service என்ன சொல்றான் என்ற "உயர்ந்த" மனுஷித்தன உள்ளத்தோடு, நாங்கள் செல்ல விருந்த Southwest airlines, கவுன்ட்டர் இல் விசாரித்தேன். இரண்டரை மணி நேரம் flight delay செய்திருப்பதாக சொன்னார்கள்.
"அது போதுங்க. வண்டியை கிளப்புனா சரிதாங்க," என்று நன்றி சொல்லி விட்டு வந்து விட்டேன்.

நீங்கள் யாராவது இரண்டரை மணி நேரங்களை airport உள் ஒரு ஒண்ணரை வயது வாண்டு பயலை  சமாளித்து கொண்டு, இருந்து இருக்கிறீர்களா?
இல்லை என்பவர்களுக்காக:

             "அடம் பிடிச்சா தாங்க மாட்ட;
              அசந்து போயி  தூங்க மாட்ட;
              ஓடும்   பாரு,  ஒரே இடத்தில்  நிக்க  மாட்ட."

ஒரு வழியாக, இரண்டரை மணி நேரத்தில், வாட்ச் ஐ இருநூறு தடவை பாத்த பிறகு, போர்டிங் டைம் வந்தது.

விமானம் take-off ஆனதுமே,  நம்ம வாண்டு, டம்ளர் கையில் எடுத்து, அதில் இருந்த பாலை கொட்டி சிரித்தான். 
 கொட்டிய பாலையும் என் அசட்டு தனத்தையும் துடைத்து விட்டு உட்கார்ந்த பொழுது:
pilot செய்த அறிவிப்பு: "வெளியில் பாருங்கள். எவ்வளவு snowfall என்று. வேற நாள் எதுவும் கிடைக்காமல், இப்படி ஒரு நல்ல நாளை, பயணம் செய்ய தேர்ந்தெடுத்த உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்" என்று நக்கலாக அறிவித்தார்.  சூழ்நிலை மறந்து, சிரித்தேன்.
அவர் மீண்டும், "நாம்  29,742 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறோம். என்னை நம்பாதவர்கள், வெளியில் ஒரு measuring tape கொண்டு சென்று இங்கிருந்து தரைக்கு உள்ள தூரத்தை அளந்து பார்த்து கொள்ளலாம்" என்று சொல்ல, அனைவரும் என்னுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். 
பத்திரமா தரை இறங்கி விடுவோமா என்ற கவலை இருக்க வேண்டிய நேரத்தில்,  டென்ஷன் இல்லாமல், அந்த பைலட் கிண்டலாக எதையாவது அப்போ அப்போ சொல்லி கொண்டே வந்தார்.   காமெடி ஷோ மாதிரி என்ஜாய் செய்தோம். 

நகைச்சுவையின் வலிமையையும் பயனும்,  நமக்கு இந்த மாதிரி நேரங்களில் தான் புரிகிறது..

கடவுள் அருளால், நல்ல படியாக விமானம் தரை இறங்கியது.   வானம் பனி அழுகையை நிறுத்தி, தன் முழு நிலா முகம் காட்டி சிரித்து கொண்டு இருந்தது. வானமும், அந்த பைலட் அடித்த ஜோக்ஸ் கேட்டிருக்கும் போல.

மறு நாள் காலை,  Pikes Peak. அங்குள்ள Cog train மூலமாக செங்குத்தாக மலை உச்சிக்கு செல்ல, டிக்கெட்ஸ் வாங்கி கொண்டு அமர்ந்தோம். அமர்ந்த ஐந்து நிமிடங்களில், ஐந்து ரயில் சிநேகங்கள், அறிமுகம் ஆயினர்.  கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பேசி கொண்டு சென்றோம்.
ஒன்றரை மணி நேரம்,  ரயில் வேகத்தில் கரைந்தது.

மலை உச்சிக்கு போனதும், ரயிலை விட்டு இறங்கினால், தலை சுற்றல், காது அடைப்பு, ஒரு கிர்ர்ரர்ர்ர்ர் உணர்வுகள். நமக்கு மட்டும்தான் இப்படி என்று "ஞே" என்று முழித்து கொண்டு, உதவி கேட்க திரும்ப, கிட்டத்தட்ட எல்லோரின் முகத்திலும் அதே பேமுழி தான்.

எங்கள் guide, "14000 அடிகளுக்கு மேல இருப்பதால், oxygen போதுமான அளவு இல்லாமல், இப்படி தோன்றும். எங்களுக்கு அடிக்கடி வந்து பழகி விட்டதால் வித்தியாசம் தெரியாது," என்றார்.
இதெல்லாம் முதலேயே சொல்ல கூடாதா?
மேல வந்தது, மூச்சு முட்டுனா எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளத் தானா? என்று பதிலுக்கு கேக்க நினைத்து வந்த வார்த்தைகள் கூட கப்சிப்.  பேச்சு, மூச்சு ரெண்டுக்கும் oxygen எவ்வளவு தேவை என்று புரிந்தது. அடுத்த முறை, சாப்பாடு மூட்டை கட்டி கொண்டு வரேனோ இல்லையோ, ஒரு oxygen cylinder முதுகில் கட்டி கொண்டு வரணும்.
 scenic mountain view ஏரியா பக்கம் போனால்................. அழகு - பனி மலை தொடரின் அழகு - அப்படி ஒரு அழகு.
இப்பொழுது, என் முகத்தில் தெளிவு. அழகை சுவாசித்து கொண்டு இருந்தேன்.

அப்பொழுது,  ஐந்தாறு பேர்கள் வந்து நின்றார்கள். அவர்கள் முகத்தில் பெருமிதம் - சாதித்து விட்ட மகிழ்ச்சி. நாங்கள் ரசிக்கும் அதே காட்சி, அவர்கள் கண்களுக்கு இன்னும் பல மடங்கு அதிக ரசனைக்குரியதாக தோன்றுவது நன்கு தெரிந்தது. பேச்சு கொடுத்தோம். அவர்கள், trekkers. அந்த மலையை, நடந்தே ஏறி வந்ததாக சொன்னார்கள்.
கண்கள் விரிய, "எத்தனை நாட்கள் ஆகியது?" என்று கேட்டேன்.
"நாட்களா? எங்களுக்கு எட்டு மணி நேரங்கள் ஆனது. இன்னும் fit ஆக இருக்கும் குழுவினர் என்றால், ஆறு மணி நேரங்களில் வந்து இருப்பார்கள்" என்றார்கள்.
லூசு பய புள்ளைக. ...................

wait a minute for 5 minutes:

என் தோழி, எங்களை லூசு குடும்பம் என்று சொல்லியது நினைவுக்கு வந்தது.
பனி புயல், ஒண்ணரை வயது புயல், எல்லாவற்றையும் கண்டுகொள்ளாமல், நாங்கள் இங்கு வந்தது, அவளுக்கு லூசுத்தனமாக தெரிந்தது. இவர்கள், இந்த குளிரில் - பனியில் -   நடந்து மலை ஏறியது, எனக்கு லூசுத்தனமாக தெரிகிறது.

மண்டைக்குள்  மணி அடிக்குதே -  டிங், டிங், டிங், டிங்..............
வாழ்க்கையில் பிரச்சினை மலைகளை, நாம் எப்படி பார்க்கிறோம்?
புயல் வந்திரும், எதுவோ நடந்திரும் என்று பயந்து வீட்டில் இருந்து கொண்டே புலம்ப போகிறோமா?
துணிந்து அடுத்த அடி எடுத்து வைத்து, comfort zone விட்டு வெளியில் வந்து, அழகை ரசிக்க போகிறோமா?
'ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி' னு, ஒரு சவாலா ஏத்துக்கிட்டு, இந்த trekkers மாதிரி மலைகளை துச்சமாக எண்ணி ஏறி மிதித்து விட போகிறோமா?
அவர் அவர்களுக்கு முடிந்த வரையில், தெரிந்த வகையில், தன் நம்பிக்கையோ தெய்வ நம்பிக்கையோ கொண்டு, மலை ஏறி விட்டால் ............. அழகு!
 "ஞே" முழி போய், "ஞான" முழி மலையில் எனக்கு வந்தது.

எங்களுடன் பேசி கொண்டிருந்தவர்,
"உங்களுக்கு தெரியுமா? 12000 அடிகளுக்கு மேலே மரங்கள்   இந்த மலையில் வளர்வது இல்லை. மரங்கள், மனிதர்களை விட புத்திசாலிகள் என்று நினைக்கிறேன். இங்கு வருடந்தோறும், marathon race நடைபெறும். 12000 அடிகளுக்கு மேலே, oxygen குறைவாக இருப்பதால், நடப்பதே கடினமாக இருக்கும் போது, ஓட வேண்டும் என்றால் ..............  பெரும்பாலோர், அந்த உயரத்துக்கு மேலே, ஒரு மைல் ஓடுவதற்கு அரை மணி நேரம் கூட எடுக்கலாம். ஆனாலும், இத்தனைக்கும் மத்தியில்,  ஒருவர் 3 1/2 மணி நேரத்தில் மேல ஏறி கீழே ஓடி வந்து record வைத்து இருக்கிறார்."
கிட்டத்தட்ட நாங்கள் வந்த ரயில் வேகத்தில், அவர் ஓடியே மேலே ஏறி இறங்கி இருக்கிறார். 
எனக்கு மீண்டும், கிர்ர்ரர்ர்ர்ர்.........!!!

என்னை என் தோழி, ஆச்சர்யமாக பார்க்கிறாள். நான், trek செய்து வந்த இந்த புது நண்பர்களை ஆச்சர்யமாக பார்க்கிறேன். அவர்கள், marathon race இல் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்களை, ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.  
ஒரே மலை - ஒரே காட்சி. எப்படி ஏறி வருகிறோம் என்பதில் தான் மேட்டர் இருக்கிறது.

நம் வாழ்க்கையில் குறுக்கிடும் மலைகள் -  
பயந்துக்கிட்டு, புலம்பிக்கிட்டு இருந்தால் -  மலை அளவு, மலைக்க வைக்கும். 
கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் - உங்களுக்கு சுத்தமா இல்லைனாலும் பரவாயில்லை -  அது அதிகமாக  இருக்கிறவங்க துணையுடன்,  சிரிச்சிகிட்டே தைரியமாக சிகரங்களை தொடுங்கள். 
அழகு - அழகு - எல்லாமே வெற்றி தரும் கொள்ளை அழகு!


71 comments:

அண்ணாமலையான் said...

நல்ல படியா போய்ட்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள்...

Unknown said...

கலக்கல் பயண விவரிப்பு.. கூடவே தத்துவமும்..

உணர்ச்சிவசப்பட்டு பேரை சொல்லிட்டிங்களோ??

பஃபலோவுக்கு எப்ப திரும்பி வந்திங்க?

Unknown said...

சாரி சித்ரா, வேறொருத்தரோட ப்ளாக்னு நெனச்சி அந்த கமெண்ட் போட்டுட்டேன்.. ஹி ஹி ஹி..

எங்க வீட்டுல ஒரு 13 மாச வாண்டு இருக்கு.. மே மாசம் இந்தியா போறோம். ஏர்ப்போர்ட்ல என்ன பாடு படப்போறோமோ தெரிய்லை..

Romeoboy said...

\\"கைலாசத்துக்கு போறதுன்னு இருந்தா, கூண்டோடு - குடும்பத்தோடு போகலாம்னுதான்//

நல்ல தத்துவம் ..

Romeoboy said...

\\என் தோழி, எங்களை லூசு குடும்பம் என்று சொல்லியது நினைவுக்கு வந்தது//

இப்படி உண்மைய போட்டு இப்படியா சந்தையில் உடைகிறது ?? இருந்தாலும் உங்க தைரியத பாராட்ட இருக்க முடியல.

ஜெய்லானி said...

முயற்சி திருவினை ஆக்கும். வாழ்த்துக்கள்.

Romeoboy said...

\\ "அடம் பிடிச்சா தாங்க மாட்ட;
அசந்து போயி தூங்க மாட்ட;
ஓடும் பாரு, ஒரே இடத்தில் நிக்க மாட்ட."

படிக்கும் போதே கண்ணை கட்டுதே.. என்னோட பையன் என்ன சேட்டை செய்வான்னு தெரியல :(

Romeoboy said...

\\பத்திரமா தரை இறங்கி விடுவோமா என்ற கவலை இருக்க வேண்டிய நேரத்தில், டென்ஷன் இல்லாமல், அந்த பைலட் கிண்டலாக எதையாவது அப்போ அப்போ சொல்லி கொண்டே வந்தார்.//

அவருக்கு என்ன டென்ஷன் இருக்குமோ !!!

Romeoboy said...

\\கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் - உங்களுக்கு சுத்தமா இல்லைனாலும் பரவாயில்லை - அது அதிகமாக இருக்கிறவங்க துணையுடன், சிரிச்சிகிட்டே தைரியமாக சிகரங்களை தொடுங்கள்//

தத்துவம் எல்லாம் பின்னுறிங்க...

எறும்பு said...

மூச்சு முட்ட சுத்தி பாத்ருகீங்க..
:)

எறும்பு said...

\\என் தோழி, எங்களை லூசு குடும்பம் என்று சொல்லியது நினைவுக்கு வந்தது//
குடும்பமேவா!!!??
:)

எறும்பு said...

\\என் தோழி, எங்களை லூசு குடும்பம் என்று சொல்லியது நினைவுக்கு வந்தது//
குடும்பமேவா!!!???
:)

goma said...

பனியில் சருக்கியது போல் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ஓடியது உங்கள் பயண அனுபவம்

எத்தனை இன்பம் படைத்தாய் இறைவா என்று தோன்றுகிறது.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. படங்கள் அருமை.

//பயந்துக்கிட்டு, புலம்பிக்கிட்டு இருந்தால் - மலை அளவு, மலைக்க வைக்கும்.//

அழகு.

//கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் - உங்களுக்கு சுத்தமா இல்லைனாலும் பரவாயில்லை - அது அதிகமாக இருக்கிறவங்க துணையுடன், சிரிச்சிகிட்டே தைரியமாக சிகரங்களை தொடுங்கள்.//

அழகு அழகு.

//எல்லாமே வெற்றி தரும் கொள்ளை அழகு!//

வழி மொழிகிறேன் சித்ரா:)!

vasu balaji said...

என்னதான் வாண்டு இம்சை பண்ணாலும் வேட்டைக்காரன் பாட்டை உல்டா பண்ணி நக்கலடிச்சது கண்டிக்கத்தக்கது.:).

CS. Mohan Kumar said...

கடைசி பாராவில் சொன்ன கருத்து அருமை. Hope you had a nice time & memorable trip.அதான் கொஞ்ச நாளா ஆளை காணுமா?

தமிழ் உதயம் said...

உங்களது சந்தோஷத்தை, உங்களது பயத்தை, உங்களது சாகச பயணத்தை- பகிர்ந்து கொண்டதில் உண்மையிலேயே எங்களுக்கு பெரு மகிழ்ச்சி தான்.

திருவாரூர் சரவணா said...

தமிழ்நாட்டுல குற்றாலத்தை விட்டு வேற எங்கயும் போகாத என்ன மாதிரி ஆளுங்களை வாயப்பொளந்துகிட்டு படிக்க வெச்ச பதிவு. இந்த குளிருல நாங்க அங்க வந்தா வாயைப் பொலந்துடமாட்டோம்ல?


//ஒரு வழியாக, இரண்டரை மணி நேரத்தில், வாட்ச் ஐ இருநூறு தடவை பாத்த பிறகு,//

கின்னஸ் ரெக்கார்டுக்கு அனுப்பிருவோமா?

பித்தனின் வாக்கு said...

// "நீங்க ஒரு லூசு குடும்பம்," என்றாள். //
இந்த உண்மை அவங்களுக்கு எப்படி தெரிந்தது. நல்ல பயணம். நல்ல புகைப்படம். இன்னும் படங்கள் போட்டியிருந்தால் நாங்களும் பார்த்து இருப்போம். நல்லா நகைச்சுவையாக சொல்லியிருக்கின்றீர்கள். நீங்க தைரியமான பொண்ணு என்று தோழிக்கு தெரியாதா? நெல்லையைப் பற்றி சொல்லவில்லையா?. நன்றி சித்ரா. சாலமன் சார் நலமா?

Unknown said...

ஹ்ம்ம்..., நல்லா நகைச்சுவையாக சொல்லி இருக்கிங்க.. அந்த தோழி கிட்ட சொல்லிட்டிங்களா திரும்ப வந்துடிங்கன்னு..,

Prathap Kumar S. said...

//ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.
ஒரே மலை - ஒரே காட்சி. எப்படி ஏறி வருகிறோம் என்பதில் தான் மேட்டர் இருக்கிறது.//

ஆஹா...என்ன தத்துவம் என்ன தத்துவம் .வாழ்க்கைத்துத்துவத்தையே புட்டு புட்டு வச்சுட்டீங்களே டீச்சர்... மலையேறி சாதனைப்படைத்து சித்ரா டீச்சர் வாழ்க...

இன்னும் நிறைய படங்கள் போட்டிருக்கலாம்...

Chitra said...

எல்லோருக்கும் நன்றி. படங்கள் நிறைய போடலாம் என்று நினைத்தேன். ரொம்ப நீளமாக பதிவு தெரிஞ்சுது. அப்புறம், மக்கள் படிக்காம மலை ஏறிட்டாங்கனா ............. அதான். அடுத்த முறை, பேச்சை குறைச்சுக்கிட்டு, படங்கள் நிறைய போட முயற்சிக்கிறேன்.

நாடோடி said...

நல்ல பகிர்வு..நகைச்சுவையுடன் பயணத்தை அனுபவித்ததை அழகாக எழுதியுள்ளீர்கள்..

தமிழினிமை... said...

ரொம்ப philosophical..
இடுகை..
............................
அடிநாதம் மட்டுமே
comedy...
மற்றபடி எல்லாமே
refined and refreshing
thoughts on life...
...........................
ஆதலினால்
வாழ்க்கையை
காதல் செய்வீர்
மானுடரே..!!
அதன் அழுக்கோடும்
அழகோடும்..
கூடவே அதிகப்படியான
plus symbols-சோடும்..
(positive thoughts..)
you have to be positive in all ways..
except in your HIV test -lab report..
...............................................
இதுதான்
உன் கருத்தாக இருந்தது
என எண்ணத் தோணுது..
அதனை கொடுத்த விதமே என்னை
மகிழ்வுக்குள்
அமிழ்த்தி எடுக்கிறது..
...........................................
வாழ்க்கை எப்படி
வேண்டுமானாலும் பார்க்கப் படலாம்..
"அவ்வளவு பெரிய வெள்ளை
பரப்புக்கு நடுவே கருப்பு புள்ளி
அத்தனை சிறிய கருப்பு புள்ளியைச்
சுற்றி அவ்வளவு பெரிய வெள்ளை பரப்பு
என எப்படி வேண்டுமானாலும்..
உன் பார்வை என்னை அசத்துகிறது..
உன் எழுத்தின் மேலும் உன் எண்ணங்களின்
மேலும் ஒரு தீராத மதிப்பை உண்டு பண்ணுகிறது..
......................................................
throughout u had been very positive-ல..
life shud be viewed only with this high powered lenses..
அதனை நீ மற்றவர்கள்
மேலும் பாய்ச்ச முற்பட்டிருப்பது
ஒரு நனி சிறந்த அனுபவம்..
.......................................................
we have alwyas talked about
RADIATING HAPPINESS
THROUGH OUR WORDS AND DEEDS
in our personal chats..
that has been accomplished here..
.....................................................
மீண்டும் வருவேன் என்னோடு..
உனக்காய்..
உன் எழுத்துக்காய்..!!

தமிழினிமை... said...

i always love colour..
it makes a gloomy place radiant..
and if we take your blog..,
its embedded with comical elements
and so there is nothing wrong in
filling it with more colour..
...............................................
எதுக்கு சொன்னேன்னா..
இந்த புதிய சொருகலுக்கு
என்னுடைய அபினந்தனங்கள்..!!
அதாம்ப்பா..
இந்த புகைப்படங்கள்
ஏத்தியிருப்பதை
பற்றி சொல்கிறேன்..
.....................................
இதை தொடரவும்..
உனக்கு பிடிக்குதோ இல்லையோ..
just continue with this..
add more pictures
which will make a reader happy..
.........................................

ஹேமா said...

சித்ரா,எந்த இக்கட்டான தருணத்தையும் உங்கள் நகைச்சுவை சுலபமாக்கிவிடும்.அழகான பயணக்கட்டுரை.

யார் சொன்னா உங்களை "லூசு"ன்னு.
ம்ம்ம்....கவனிச்சுக்கிறேன்.

ISR Selvakumar said...

பயணக் கதையில் நைசாக வாழ்க்கை தத்துவங்களை ஜில்லென்று நுழைத்து, அலுப்பு தெரியாமல் எழுதியுள்ள சாமர்த்தியத்தை இரசிக்கிறேன்.

தமிழினிமை... said...

...................................
//ஒரே மலை - ஒரே காட்சி. எப்படி ஏறி வருகிறோம் என்பதில் தான் மேட்டர் இருக்கிறது.//
......................................
//அவர் அவர்களுக்கு முடிந்த வரையில், தெரிந்த வகையில், தன் நம்பிக்கையோ தெய்வ நம்பிக்கையோ கொண்டு, மலை ஏறி விட்டால் ............. அழகு!//
.....................................
//அடுத்தவன் எப்படி ஆனா நமக்கு என்ன, நம்ம flight service என்ன சொல்றான் என்ற "உயர்ந்த" மனுஷித்தன உள்ளத்தோடு, நாங்கள் செல்ல விருந்த Southwest airlines, கவுன்ட்டர் இல் விசாரித்தேன்//
..........................................
//என்னை என் தோழி, ஆச்சர்யமாக பார்க்கிறாள். நான், trek செய்து வந்த இந்த புது நண்பர்களை ஆச்சர்யமாக பார்க்கிறேன். அவர்கள், marathon race இல் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்களை, ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.
ஒரே மலை - ஒரே காட்சி. எப்படி ஏறி வருகிறோம் என்பதில் தான் மேட்டர் இருக்கிறது.//
-this is ACCEPTANCE..
and one mans food had always been other mans poison..
the lines have well established your thoughts with full justice..
i loved these lines ..bcoz i personally sink with it..
nandri for making me buy it rae..
.......................................
THESE WERE MY PICKS OF THE BLOG..
...................................
NANDRI FOR A WONDERFUL RENDERING..
which not only was cool but also opened a PANORAMIC VIEW ON LIFE..
...................................
Nandridaa dei..!!!

malar said...

பதிவும் சூப்பர்....

அதெல்லாம் விட இந்த கம்மெண்ட் சூப்பர்


''''''எல்லோருக்கும் நன்றி. படங்கள் நிறைய போடலாம் என்று நினைத்தேன். ரொம்ப நீளமாக பதிவு தெரிஞ்சுது. அப்புறம், மக்கள் படிக்காம மலை ஏறிட்டாங்கனா .............''''

சாருஸ்ரீராஜ் said...

பயண அனுபவம் படிக்க சுவாரஸ்யமா நகைசுவையாக இருந்தது , வேட்டைகாரன் பாட்டு ரொம்ப நல்லா இருந்தது

நசரேயன் said...

// "அடம் பிடிச்சா தாங்க மாட்ட;
அசந்து போயி தூங்க மாட்ட;
ஓடும் பாரு, ஒரே இடத்தில் நிக்க மாட்ட."
//

அடுத்த பஞ்ச் டயலாக் தயார்

நசரேயன் said...

//அடுத்த முறை, பேச்சை குறைச்சுக்கிட்டு, படங்கள் நிறைய போட முயற்சிக்கிறேன்//

இதை நான் வன்மையா கண்டிக்கிறேன், பேச்சு குறைய ௬டாது

சிவகாசி ராம்குமார் said...

super very nice reading travel

பத்மநாபன் said...

உங்கள் மலைப்பான மலைபயணம் நல்ல பதிவு.
''சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு '' என்று நடந்து ஏறியவர்களை நீங்கள் பார்த்த வியப்பு எங்களுக்கும் தொற்றிக்கொண்டது.
பனிபொழிவுகளோடு, சிரிப்பு மழைகளையும் பொழிந்துள்ளீர்கள் நம்ம உதகையை நினைவு படுத்தியமைக்கு சிறப்பு நன்றி...

செ.சரவணக்குமார் said...

பயண அனுபவங்கள் அருமை டீச்சர்.

க ரா said...

நல்ல பதிவு சித்ரா.

ஜெட்லி... said...

பயண கட்டுரை நன்று....
நல்லா என்ஜாய் பண்ணி இருக்கீங்க....
எப்போ இமயமலை ஏற போறீங்க??

suvaiyaana suvai said...

interesting Chitra,My dream place Colorado!!

Mythili (மைதிலி ) said...

Thanks for sharing your experience at the Colarado. BTW When did you become a reporter?? Good that you combined both. I was eager to see a Pikes Peak Photo. Was it the last one??

Unknown said...

Chitra...great trip..and even greater lesson for life...good ..good..

Unknown said...

Chitra...great trip..and even greater lesson for life...good ..good..

butterfly Surya said...

Thanx for sharing.

நட்புடன் ஜமால் said...

துவக்கத்திலேயே உண்மையோடு மலையேற கிளம்பியாச்சி

அந்த ஏர்போர்ட் காட்சி விவரிப்பு ‘ஹோம் அலோன்’ பார்ட் 5 பார்த்த மாதிரி இருந்திச்சி

[[சிரிச்சிகிட்டே தைரியமாக சிகரங்களை தொடுங்கள்]] அழகு-அருமை

மதுரை சரவணன் said...

nalla payana katturai. mika arumai.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி...

நாஸியா said...

ஆஹா.. ஜியாக்ரஃபி க்ளாஸ்ல கேள்விப்பட்ட இடங்களை நேர்ல பார்த்துட்டு வந்தீங்களா...எனக்கும் ஆசையா இருக்கே..

பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி.... அப்படியே அங்க போயிட்டு வந்த மாதிரி இருந்தது

மீன்துள்ளியான் said...

பயண அனுபவம் ரெம்ப த்ரில்லிங் .. அழகு இருக்கிற இடத்துல ஆபத்து இருக்கு அப்படிங்கறது இதுக்கும் பொருந்தும் போல

SUFFIX said...

சித்ரா கலக்கிட்டீங்க, பயண் அனுபவம், இடையிடையே நகைச்சுவை, தத்துவம், எல்லாமே சூப்பர். தங்களைப் போலவே நகைச்சுவை உணர்வுள்ள பைலட்!! ஆகா ஆகா...பகிர்விற்கு நன்றி.

Thenammai Lakshmanan said...

நன்றிம்மா சித்ரா உன்னை மாதிரி ஒரு தன்னம்பிக்கை பார்ட்டி எங்கள் பக்கத்துலயே இருக்கையிலே நாங்க எல்லாதடைகளையும் தாண்டி சிகரம் தொட மாட்டமா என்ன

S.A. நவாஸுதீன் said...

என்ன ஒரு அழகான பயணக்கட்டுரை. சிரமங்கள் அனைத்தையும் ரசனையோடு ஏற்றுகொண்டதுமில்லாமல் அதே ரசனை துளியளவும் குறையாமல் இடுகையில் தந்திருக்கின்றீர்கள்.

படங்கள் குறைவாக இருப்பது தான் இந்த இடுகைக்கு நல்லது. இல்லையேல் இத்தனி விரிவாக சுவாரசியமான இடுகை கிடைத்திருக்காது. (படங்கள் ஸ்பெஷல் இடுகை ஒன்று தனியாக போடவும்). நாங்களும் ஆக்சிஜன் சிலிண்டரோடு வருகிறோம்.

///கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் - உங்களுக்கு சுத்தமா இல்லைனாலும் பரவாயில்லை - அது அதிகமாக இருக்கிறவங்க துணையுடன், சிரிச்சிகிட்டே தைரியமாக சிகரங்களை தொடுங்கள்.///

இதைப்படித்த பிறகு கண்டிப்பா எல்லோருக்கும் அப்படித்தான் தோனும்.

குளிர்ச்சியான, ரம்யமான பகிர்வு சித்ரா. வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நாஞ்சில் பிரதாப் said...
//இன்னும் நிறைய படங்கள் போட்டிருக்கலாம்... //

எனக்கும் அப்படியே தோன்றியது.

//அதான். அடுத்த முறை, பேச்சை குறைச்சுக்கிட்டு, படங்கள் நிறைய போட முயற்சிக்கிறேன்.//

இரண்டும் சேர்ந்தே இருக்கட்டும்:)!

அன்புத்தோழன் said...

அடடா.... எப்புடிங்க இப்டி.... ஒரு வழியா total familyum மலையேரிட்டீங்க.... ஹ்ம்ம்.... அந்த ப்ளேன் டிரைவர் நம்ம சொந்த கார பய புள்ளையோ...?


பஞ்ச ஒன்னு ஒன்னும் அப்டியே நின்னு விலாடுது... ஹா ஹா... மொத்ததுல மேட்டரோட மேசேஜ் சேத்து செம்ம போஸ்ட்....

திவ்யாஹரி said...

மலை உச்சிக்கு போனதும், ரயிலை விட்டு இறங்கினால், தலை சுற்றல், காது அடைப்பு, ஒரு கிர்ர்ரர்ர்ர்ர் உணர்வுகள். நமக்கு மட்டும்தான் இப்படி என்று "ஞே" என்று முழித்து கொண்டு, உதவி கேட்க திரும்ப, கிட்டத்தட்ட எல்லோரின் முகத்திலும் அதே பேமுழி தான்.//

குழந்தை என்ன பண்ணுச்சி.. உங்களுக்கே இப்படினா குழந்தை பாவம் தோழி.. நகைச்சிவை உணர்வோடு பகிர்ந்து கிட்டதுக்கு நன்றி தோழி.. //அடம் புடிச்சா// சரியான காமெடி..

Vishy said...

nice travel blog post.. very well written.. I guess Anto is spot on when he asked you add photos to your posts. The pictures make the blogpost more interesting. You should compile your blog posts as a book.

Chitra said...

Thank you very much, all of you.

என் குழந்தைகளின் மேல் கரிசனம் கொண்டு கேட்ட திவ்யாவுக்கு:
oxygen குறைவாக இருந்ததால், குழந்தை சோர்ந்து தூங்கி விட்டான். ஒரு பிரச்சினை இல்லை. :-)

R.Gopi said...

\\ "அடம் பிடிச்சா தாங்க மாட்ட;
அசந்து போயி தூங்க மாட்ட;
ஓடும் பாரு, ஒரே இடத்தில் நிக்க மாட்ட."//

அசத்தல்.... நான் என் பையனை பார்த்து பாடும் பாடல் ஏறக்குறைய இதே சாயலில் தான் இருக்கும்.... அவ்ளோ வாலு.....

\\கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் - உங்களுக்கு சுத்தமா இல்லைனாலும் பரவாயில்லை - அது அதிகமாக இருக்கிறவங்க துணையுடன், சிரிச்சிகிட்டே தைரியமாக சிகரங்களை தொடுங்கள்//

நம்மளுக்கு கொஞ்சம் இல்லீங்கோ... ஜாஸ்தியாவே இருக்கு....

\\என் தோழி, எங்களை லூசு குடும்பம் என்று சொல்லியது நினைவுக்கு வந்தது//

நீங்கள் ஓகே... அதுக்காக குடும்பமேவா சித்ரா!!?? (சும்மா... டமாசுக்கு.....ஹீ...ஹீ...ஹீ..)

//ஒரு வழியாக, இரண்டரை மணி நேரத்தில், வாட்ச் ஐ இருநூறு தடவை பாத்த பிறகு,//

ராக்கெட் விட்டாச்சாக்கும்.....

//ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.
ஒரே மலை - ஒரே காட்சி. எப்படி ஏறி வருகிறோம் என்பதில் தான் மேட்டர் இருக்கிறது.//

அண்ணாமலைய பார்த்தவங்களுக்கு மத்த எல்லா மலையும் ஜூஜூபி....... இது எப்படி இருக்கு!!!

வாழ்த்துக்கள் சித்ரா... பயணம் சூப்பர் போல இருக்கு....

தலைவரை பற்றி ஒரு தொடர் எழுத ஆரம்பித்து முதல் பாகம் இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது... வந்து பாருங்களேன்...

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1) http://jokkiri.blogspot.com/2010/02/2020.html

தமிழினிமை... said...

i second vishy chiththu..
--------------------------
as usual enjoyed the comment section and especially S.A . NAVASUDEENs..
always looking for his comments..
--------------------------
look at MEEN THULLIYAAANs perspective..
very much varied and this is life..
---------------------------
thaenakkaa..
we r here as well as in FACE BOOK to give u the required amont of BOOST..
----------------------------------
loved the pilot more than you..
i missed him the last time..when i sketched out my comment
very positive and i can imagine his
US accent flowing in the ears in a very stylish and in a hilarious way..
-----------------------------
wondeful padhivu..
and u too have started touching summits in
your blog world..
-------------------------------
vaazhka valamudan daa..!!
---------------------------------

ஹுஸைனம்மா said...

//ஒரே மலை - ஒரே காட்சி. எப்படி ஏறி வருகிறோம் என்பதில் தான் மேட்டர் இருக்கிறது.//

வாழ்க்கைத் தத்துவம்.

எல்லாமே நல்லபடி நடந்ததால் சுபம்.

ரிஷபன் said...

நம் வாழ்க்கையில் குறுக்கிடும் மலைகள் -
பயந்துக்கிட்டு, புலம்பிக்கிட்டு இருந்தால் - மலை அளவு, மலைக்க வைக்கும்.
கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் - உங்களுக்கு சுத்தமா இல்லைனாலும் பரவாயில்லை - அது அதிகமாக இருக்கிறவங்க துணையுடன், சிரிச்சிகிட்டே தைரியமாக சிகரங்களை தொடுங்கள்.
அழகு - அழகு - எல்லாமே வெற்றி தரும் கொள்ளை அழகு!
அப்படியே வழிமொழிகிறேன்.. ரசிச்சி படிச்ச பதிவு.

butterfly Surya said...

என் வலையின் இணைப்புக்கு நன்றி சித்ரா.

டவுசர் பாண்டி said...

//"நாம் 29,742 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறோம். என்னை நம்பாதவர்கள், வெளியில் ஒரு measuring tape கொண்டு சென்று இங்கிருந்து தரைக்கு உள்ள தூரத்தை அளந்து பார்த்து கொள்ளலாம்" என்று சொல்ல, அனைவரும் என்னுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.//

தனியா சிரிச்சேங்க !! நீங்க எப்பவாவது தனியா சிரிச்சி இருக்கீங்களா ? திடீர்ன்னு யார்னா வந்து பாத்தா நம்பள லூசுன்னு நெனைப்பாங்கோ !! ( இதுல நெனைக்கரது வேறையா ? ) ரொம்ப எதார்த்தமா இருக்கு , சூப்பர் !!

கண்ணா.. said...

//நகைச்சுவையின் வலிமையையும் பயனும், நமக்கு இந்த மாதிரி நேரங்களில் தான் புரிகிறது..//

மிக ரசித்த வரிகள்...

பதிவு வழக்கம்போல் உங்கள் நகைச்சுவை தொனியில் அருமையாக...


காலேஜ் டேஸை போலவே லேட் அட்டணன்ஸ்....
:)

வேலன். said...

பாளையங் கோட்டை சகோதரி...அப்படியே நம்ப பதிவு பக்கமும் வந்துவிட்டு செல்லலாமில்ல...பதிவு அருமை(உங்கள் தளத்தைபற்றி இன்றுதான் டவுசர்பாண்டி -அதே கண்கள்-சொன்னார்) வாழ்க வளமுடன், வேலன்.

ஆதி மனிதன் said...

//வாழ்க்கையில் பிரச்சினை மலைகளை, நாம் எப்படி பார்க்கிறோம்?
புயல் வந்திரும், எதுவோ நடந்திரும் என்று பயந்து வீட்டில் இருந்து கொண்டே புலம்ப போகிறோமா?
துணிந்து அடுத்த அடி எடுத்து வைத்து, comfort zone விட்டு வெளியில் வந்து, அழகை ரசிக்க போகிறோமா?//

நம்மூர்ல மார்கழி மாசத்து குளிருக்கே இழுத்து போத்திக்கிட்டு ஒன்னு வீட்ட விடு வெளியே வராம தூங்குவோம். அல்லது காதுல பஞ்ச அடிச்சுக்கிட்டு வாக்கிங் போவோம்.

அதுல மேலை நாட்டவர்களை கண்டிப்பா பாராட்டியே தீரனும். அந்த அந்த கால நேரங்களுக்கு தகுந்தாற்போல் அனுபவிப்பதில் அவர்கள் உண்மையில் கெட்டிக்காரர்கள்.

YUVARAJ S said...

good description. keep writing!

you can reach me at:

http://encounter-ekambaram-ips.blogspot.com/

happy blogging

பின்னோக்கி said...

பனிக்குவியலா ? இத எல்லாம் சினிமால மட்டும் தான் பார்த்துருக்கோம்.

வாலை சாமாளித்த அனுபவம் இருக்குங்க எனக்கு.

Santhappanசாந்தப்பன் said...

அனுபவம், காமெடி கொஞ்சம் கம்மி... தத்துவம் கொஞ்சம் தூக்கலுங்கோவ்!

Priya said...

உங்க‌ ஒண்ணரை வயது வாண்டு பயலின் பெயர் என்ன தோழி? உங்க பயணத்தைவிட இரண்டரை மணி நேரங்கள் (உங்க மகனோடு) ரசனையானதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ம்ம்... சீக்கிரத்தில் ட்ரிப் போட்டோஸ் போடுங்க‌!

Jaleela Kamal said...

மலை உச்சிக்கு போனதும், ரயிலை விட்டு இறங்கினால், தலை சுற்றல், காது அடைப்பு, ஒரு கிர்ர்ரர்ர்ர்ர் உணர்வுகள். நமக்கு மட்டும்தான் இப்படி என்று "ஞே" என்று முழித்து கொண்டு, உதவி கேட்க திரும்ப, கிட்டத்தட்ட எல்லோரின் முகத்திலும் அதே பேமுழி தான்.//

திவ்யா ஹரி சொன்னதை தான் சித்ரா நானும் யோசித்தேன்,

ரொமப் அருமையான பயணக்கட்டுரை வழக்கம் போல நகைச்சுவையுடன் ரொம்ப அருமையாக இருந்தது.

/திகிலா இருந்தாலும் தில்லா போய் வந்து எழுதியிருக்கீங்க./

//இன்று தான் உங்கள் பதிவை படிக்க எனக்கு நேரம் கிடைத்தது.
/
/படங்கள் அதிகமாக எதிர் பார்த்தேன்/

யாசவி said...

//நீங்கள் யாராவது இரண்டரை மணி நேரங்களை airport உள் ஒரு ஒண்ணரை வயது வாண்டு பயலை சமாளித்து கொண்டு, இருந்து இருக்கிறீர்களா?
இல்லை என்பவர்களுக்காக:

"அடம் பிடிச்சா தாங்க மாட்ட;
அசந்து போயி தூங்க மாட்ட;
ஓடும் பாரு, ஒரே இடத்தில் நிக்க மாட்ட."//


சேம் ப்ளட் :)

cheena (சீனா) said...

ஆஃபீஸ் போகணும் அப்புறம் அவ்ந்து மெதுவாப் படிக்கிறேன் - சரியா - சாரிம்மா