2003 - "அவள் என் காதலை எப்படியும் புரிந்து கொண்டு ஏற்று கொள்வாள்."
2004 - "அவள் என்னை காதலிக்கிறாள். எனக்கு அது போதும்."
2005 - "அவள் பெற்றோர் சம்மததுக்காக காத்திருக்கிறோம்."
2006 - "காதலித்தவளையே எல்லோரின் ஆசிர்வாதங்களுடன் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்."
2008 - "என்னவள், என் மகன், என் வேலை னு சந்தோஷமா வாழ்க்கை போயிட்டு இருக்கு."
2009 - "காதலிக்கும் போது, அப்படி இப்படி னு சொல்லுங்க. இப்போ, எல்லா வேலையையும் என் ஒருத்தி தலை மேல தூக்கி போட்டுட்டு, நீங்க ஹாய்யா உக்கார்ந்து டிவி பார்த்து கிட்டு இருங்க. இவர் என் பின்னால லோ லோ னு சுத்துனப்போ இப்படிதான் எதையும் கண்டுக்காம இருக்க போறேன்னு சொல்லி இருந்தா, இவர் இருந்த பக்கம் திரும்பி பார்த்திருக்க மாட்டேன். "
எங்கள் நண்பர் ஒருவரின் காதல் புளி ரசம் சொட்டும் கல்யாண வாழ்க்கை நல்லா புரிஞ்சிருக்குமே......
என்னவோ தெரியலை, மக்கா. கல்யாணத்துக்கு முன்னால் காதல் கத்திரிக்காய் னு கூவுரவங்க நிறைய பேர், கல்யாணம் ஆன பின்னால, கிலோ என்ன விலைனு கேக்க ஆரம்பிச்சுடுறாங்க ......
இருக்கிற வேலை வெட்டி, அம்மா அப்பா, பொறுப்பு பருப்பு எல்லாத்தையும் துடப்பை கட்டை மாதிரி கதவுக்கு பின்னால வச்சுட்டு, ஒருத்தர் பின்னால ஒருத்தர், ஒருத்தர் கனவுல ஒருத்தர் சுத்தி சுத்தி டூயட் பாட வேண்டியது. கல்யாணத்துக்கு அப்புறம், அது துடைப்ப கட்டை இல்லை, அதான் குத்து விளக்கு என்று மண்டைக்குள்ள மணி அடிக்க, பொண்டாட்டி ஆன காதலி - கனவு கன்னி ரோல் போய், டி வி சீரியல் கதாநாயகி ரேஞ்சுக்கு ஆகி போறா. ஐயோ பாவம்!
நான் காலேஜ் படிக்கும் போது, ஒருத்தன் ஒரு தாளில், அழகா படம் வரைஞ்சு:
"மாதத்துக்கு ஒரு அமாவாசை - உன்னை
காணாத நாள் எல்லாம் எனக்கு அமாவாசை தானே."
என்று எழுதி என்கிட்டே கொடுத்தான்.
இந்த கிறுக்கலையும் அதை எழுதிய கிறுக்கனையும் பாத்தேன்.
காதுக்குள்ளே நோ மூசிக் - மண்டைக்கு மேல நோ பல்பு - உடம்புக்குள்ள நோ மின்சாரம் - மனசுக்குல நோ சிலிர்ப்பு - அட போடா போக்கத்தவனே, என்று அந்த தாளை அவன்கிட்டே திருப்பி கொடுத்துட்டு திரும்பி பாக்காம போயிட்டேன். இப்போ அந்த அமாவாசைக்கு பொறந்தவன், வேற பௌர்ணமி வெளிச்சத்தில். ஆனால், தன் நிலவை சரியாக பாக்காமல், இன்னும் மொட்டை மாடியில் நின்னுக்கிட்டு, வேறு நிலவுகளுக்கு ராக்கெட் விட்டு கொண்டிருக்கிறதா சொல்லிக்கிறாங்க. நான் தப்பிச்சேன்டா, சாமி.
என் தோழிகளில் சிலர், கல்யாணத்துக்கு முன்னால, கற்பனை காதலனையோ கணவனையோ நினைத்து காதல் கவிதை எழுதி வைப்பாங்க - காலேஜ் படிக்கிறப்போ. நமக்கு காதல் படங்கள், காதல் கவிதை எல்லாம் அபத்தம் என்று நினைச்ச டைம். பிரக்டிகலா இல்லைன்னு ஒரு நினைப்புதான். கிண்டல் பண்ணுவேன்.
"நீ காதலிக்கும் போது உனக்கு புரியும்" என்று திட்டுவாங்க. அப்போ சாபம் கொடுக்கிற மாதிரி வாழ்த்துனாங்க போல.
முந்தைய கவிதையாயினி ஒருத்தியை சமீபத்தில் சந்திச்சப்போ, உன் latest கவிதை சொல்லுனு கேட்டாக்க, அதையெல்லாம் எழுத ஏதுடி மூடு, நேரம்னு சொல்றா. அட பாவி! பாலா இருந்தப்போவே கடைஞ்சு வெண்ணை எடுக்க அலைஞ்சவங்க ....... இப்போ தயிர் பானையே போட்டு உடைக்கிறாங்களே.
இந்த கிறுக்கலையும் அதை எழுதிய கிறுக்கனையும் பாத்தேன்.
காதுக்குள்ளே நோ மூசிக் - மண்டைக்கு மேல நோ பல்பு - உடம்புக்குள்ள நோ மின்சாரம் - மனசுக்குல நோ சிலிர்ப்பு - அட போடா போக்கத்தவனே, என்று அந்த தாளை அவன்கிட்டே திருப்பி கொடுத்துட்டு திரும்பி பாக்காம போயிட்டேன். இப்போ அந்த அமாவாசைக்கு பொறந்தவன், வேற பௌர்ணமி வெளிச்சத்தில். ஆனால், தன் நிலவை சரியாக பாக்காமல், இன்னும் மொட்டை மாடியில் நின்னுக்கிட்டு, வேறு நிலவுகளுக்கு ராக்கெட் விட்டு கொண்டிருக்கிறதா சொல்லிக்கிறாங்க. நான் தப்பிச்சேன்டா, சாமி.
என் தோழிகளில் சிலர், கல்யாணத்துக்கு முன்னால, கற்பனை காதலனையோ கணவனையோ நினைத்து காதல் கவிதை எழுதி வைப்பாங்க - காலேஜ் படிக்கிறப்போ. நமக்கு காதல் படங்கள், காதல் கவிதை எல்லாம் அபத்தம் என்று நினைச்ச டைம். பிரக்டிகலா இல்லைன்னு ஒரு நினைப்புதான். கிண்டல் பண்ணுவேன்.
"நீ காதலிக்கும் போது உனக்கு புரியும்" என்று திட்டுவாங்க. அப்போ சாபம் கொடுக்கிற மாதிரி வாழ்த்துனாங்க போல.
முந்தைய கவிதையாயினி ஒருத்தியை சமீபத்தில் சந்திச்சப்போ, உன் latest கவிதை சொல்லுனு கேட்டாக்க, அதையெல்லாம் எழுத ஏதுடி மூடு, நேரம்னு சொல்றா. அட பாவி! பாலா இருந்தப்போவே கடைஞ்சு வெண்ணை எடுக்க அலைஞ்சவங்க ....... இப்போ தயிர் பானையே போட்டு உடைக்கிறாங்களே.
ஒரு சமயம், என் நண்பர்கள் ரவுண்டு-அப் சந்திப்பில், ஒருத்தர் உணர்ச்சி வசப்பட்டு, இந்த க்ரூப்புல யாரவது காதலிச்சிருக்கீங்களா? இருந்தா, என் வலி உங்களுக்கு புரியும், என்றார். நம்ம சொக்காரவங்க, "ஆமாடா" என்று சொன்ன பேரு எல்லாம் அவங்க அவங்க கல்யாணத்துக்கு முன்னால டாவு அடிச்சா பேரா இருந்துச்சு.
தன் பொண்டாட்டியை காதலிச்சு கல்யாணம் பண்ணுனவன் கூட அர்த்தம் (??!!) உள்ள, இல்லா சிரிப்பை சிரிக்குராக.
நான் மட்டும் தான், "காதலிச்சி இன்னும் முடிக்கலை" என்று சாலமன் ஐ நினைச்சி சொன்னா, வேற்று க்ரஹத்து ஜந்து ஒண்ணு, UFO crash ஆகி இவங்க முன்னால நின்னு, "கியாங் சியாங்கி கி கி கூய்ந்ச்சி..." னு பேசுராப்புல முறைச்சி பாத்தாங்க.
தன் பொண்டாட்டியை காதலிச்சு கல்யாணம் பண்ணுனவன் கூட அர்த்தம் (??!!) உள்ள, இல்லா சிரிப்பை சிரிக்குராக.
நான் மட்டும் தான், "காதலிச்சி இன்னும் முடிக்கலை" என்று சாலமன் ஐ நினைச்சி சொன்னா, வேற்று க்ரஹத்து ஜந்து ஒண்ணு, UFO crash ஆகி இவங்க முன்னால நின்னு, "கியாங் சியாங்கி கி கி கூய்ந்ச்சி..." னு பேசுராப்புல முறைச்சி பாத்தாங்க.
ஆயிட்டா, அப்படி ஆயிட்டா இப்படி ஆயிட்டானு புலம்பாதீங்க. அழகு, உருவம், பருவம் பாத்து வரது, லவ் (love) இல்ல மக்கா, அதுக்கு பேரு லஸ்ட் (lust) .
கல்யாணத்துக்கு அப்புறம், அன்பு, பாசம், பரிவு, நேசம், அக்கறை, புடலங்காய் னு இருந்தாலும், புருஷனோ பொண்டாட்டியோ புலம்புறதுக்கு எரிச்சல் படுறதுக்கு, என்ன காரணம்ங்க? எல்லாம் இருந்தும் ஏதோ மிஸ்ஸிங் மாதிரி தோணுதுல. அதான் - அதான் - அதேதான் - கணவன் மனையின் ஆத்மார்த்தமான காதல் உணர்வுகள். இதில், ஒரு கை ஓசை கூடாது.
கல்யாணத்துக்கு அப்புறம், அன்பு, பாசம், பரிவு, நேசம், அக்கறை, புடலங்காய் னு இருந்தாலும், புருஷனோ பொண்டாட்டியோ புலம்புறதுக்கு எரிச்சல் படுறதுக்கு, என்ன காரணம்ங்க? எல்லாம் இருந்தும் ஏதோ மிஸ்ஸிங் மாதிரி தோணுதுல. அதான் - அதான் - அதேதான் - கணவன் மனையின் ஆத்மார்த்தமான காதல் உணர்வுகள். இதில், ஒரு கை ஓசை கூடாது.
நான் போன பதிவில் போட்ட, "முத்தம் போதாதே" கவிதைக்கு என்ன குறைச்சல்? ரெண்டு புள்ளைங்களை பெத்த புறகும் இப்படி காதல் தோய தோய புருஷனை நினைச்சி கவிதை எழுதினேன். unpublished comments சிலவற்றில், "உங்களுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி, இப்படி எழுதுறதுக்கு" என்று சொன்னாப்புல. எவனையோ காதலிக்குறேன் என்று நினைச்சி கல்யாணத்துக்கு முன்னாலே கவிதையில் சொன்னா ஓகேவாம்.. கட்டி இருக்கிறவனை காதலிக்கிறேன் என்று சொல்ல, தைரியம் வேணுமாம். நல்லாத்தான் ஓட்டுறாங்க. அதுலேயும் ஒருத்தர்: "சித்ரா, கவிதை படிச்சிக்கிட்டே வந்தேன். கடைசியில் நல்ல twist. உங்க கணவருக்குள்ள கவிதைன்னு." அடங்கொப்புரானே! பின்ன நான் யாரை நினைச்சி அவ்வளவு அனுபவிச்சு ரசிச்சு எழுதினேன்னு நினைச்சாவுக? இது வில்லங்க பேச்சுடா, டோய்.
காதல், ஒரு பக்க கதையா? வேறு ஒருத்தரை கல்யாணம் பண்ணியும், ஒரு நிமிஷம் நினைவலையில் வந்து வந்து போக.
காதல், சிறுகதையா? கல்யாணத்தில் முடிந்து விட.
காதல், தொடர்கதையா? வேற ஆள கல்யாணம் ஆன பின்னும், அதையே நினைச்சி தொடர்ந்து உருக.
காதல், மர்ம கதையா? கள்ள காதலாகவும் உருவெடுக்க.
காதல் - கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிகிட்டவுக மேல வரணும். கன்னி தீவு சிந்துபாத் கதை மாதிரி............. நீளணும்.........!
91 comments:
machchaan..
ennadi aachchu unakku..??
super KUTTI-IDLI fro SARAVANA BHAVAN..
2003 -2009... ada en katha...unakku eppadi therinchuthu...super Chitra..kaamaththu paalla thodangi kaadhal paalukku vanthutta.. ezhuthil oru vegam/kobam theriyuthu...nalla advice..keep it up.
innum yezhudhunga.....
பாலாய் இருக்றப்போ வெண்ணைய் எடுக்க அலைஞ்சவன் தயிபானையை போட்டு உடைக்கிறான்.......அருமையா போட்டு உடைச்சிட்டீங்க......
அதகளம் செய்து இருக்கீங்க
காதல்ல ஒரே நிலையில் இருக்க இயலாது என்பதே நிதர்சணம்(நான் கண்டதுன்னு வச்சிக்கோங்க)
----------------
சுவாசம் உள்ளவரை உள்ள நேசமே - காதல்
//கன்னி தீவு சிந்துபாத் கதை மாதிரி............. நீளணும்.........!//
அப்ப அவரை (சாலமன்) ஒரு வழி பண்ணாம விட போறது இல்லை.......ம் நடக்கட்டு.
//காதலிக்கும் போது, அப்படி இப்படி னு சொல்லுங்க. இப்போ, எல்லா வேலையையும் என் ஒருத்தி தலை மேல தூக்கி போட்டுட்டு//
நான் இப்போவே சொல்லிட்டேன்..நீதான் எல்லா வேலையையும் பார்க்கனும்ன்னு :))
//கல்யாணத்துக்கு முன்னாலே கவிதையில் சொன்னா ஓகேவாம்.. கட்டி இருக்கிறவனை காதலிக்கிறேன் என்று சொல்ல, தைரியம் வேணுமாம்//
அதானே... நீங்க எழுதுங்க சித்ரா டீச்சர்...
பிரவுதேவாவுக்கு இந்தப்பதிவு பார்சல்ல்ல்ல்ல்ல்..
டீச்சர் உங்களுக்கு அந்த அமாவாசை கொடுத்த லெட்டரை ஏன் திரும்பக்கொடுத்தீங்க? அந்தமாதிரி லெட்டர்ஸ் எவர்க்ரீன் காமெடி. எப்ப படிச்சாலும் சிரிக்கலாம். எங்கிட்டகூட ஒரு லெட்டர் இருக்கு...
வருங்கால ரங்கமணிக்கு கிப்டா கொடுக்கப்போறேன்...
மஷ்..
சரவண பவன்
குட்டி இட்லி சாப்பிட்டு பாத்திருக்கியா..??
குட்டி குட்டி batter-bakes..
உள்ளே வெள்ளை
வெளியே மஞ்சள்..
The colour mix..,the composition
and the contour will be EXTRA-ORDINARY..
சாம்பாரில் தோய்ந்த கன்னங்கள் அது..
காரம்..மணம்..குணம் அனைத்தும்
நிறைந்தது.
and ரொம்ப முக்கியமான் விஷயம்
the speed at which it is stomached..
easily digested and absorbed by your intestines.
always floating and yet rooted..
.......................................................
அந்த மாதிரி இருந்தது இந்த படைப்புன்னு
சொல்ல வந்தா
என் face book சோத்து சட்டியில்( my inbox)
கை விட்டு என்ன சொல்ல வர்ரன்னு என்னயவே
கலாய்க்கிறியா நீனு..??
பயமாகிவிட்டதடீ எனக்கு..
இது நாள் வரை எல்லாம்
சரியாத்தானே போய் கொண்டு இருந்தது..??
என் மௌனங்களைப் புரிந்து
கொள்பவளுக்கு என்
வார்த்தைகள் புரியாமல் போனதன் மர்மம் என்ன..??.
.............................................................
மீண்டும் சந்திப்போம்
இயந்திர உலகத்தில் காதலும் அடி பட்டு போகிறதோ ........
சூப்பர் பதிவு..
கல்யாணத்துக்கு முன்னாலயும் காதலிச்சி கல்யாணம் ஆகி ஆறு வருசம் ஆகியும் கொஞ்சம் கூட குறையாம காதலிச்சிக்கிட்டு இருக்கிற ஒரு ஜோடிய எனக்குத் தெரியும். அவரு கூட ப்ளாக்கரு தான். என்னவோ முகிலனின் உளறல்களோ பிதற்றல்களோன்னு எழுதிக்கிட்டு இருக்காரு.. :)))
MASH..
C what this RAAMSAAMI-DUBBI said..
The chronological history
belongs to her it seems..
oh..my JEEZ..AND CHEESE
SHE utters without giving any pain to words..
kept on laughing reading her comment..
nice rae..for all the love with which u have written..
அழகா சொல்லிட்டீங்க... ::)) பிரதாப் மாதிரி நானும் நிறைய பத்திரமா வெச்சிருக்கேன்.:)) தங்கமணிதான் அத பாத்துகறாங்க..சில சமயம் ஏங்க..இவ்ளோ அழகா இருக்காங்களே ஏன் வேண்டாம்னு சொன்னீங்கன்னு கேக்கும்போதுதான்.. காதலோட முழு அர்த்தமும் விளங்குது..:)))
\\"மாதத்துக்கு ஒரு அமாவாசை - உன்னை
காணாத நாள் எல்லாம் எனக்கு அமாவாசை தானே."......//
ச்சே எவ்ளோ ஒரு காதலோட அந்த பையன் வந்திருக்கான்....
இந்த பொண்ணுங்க மனசு கல் மனசுப்பா.......! :-) :-) :-) :-)
\\என்னவோ தெரியலை, மக்கா. கல்யாணத்துக்கு முன்னால் காதல் கத்திரிக்காய் னு கூவுரவங்க நிறைய பேர், கல்யாணம் ஆன பின்னால, கிலோ என்ன விலைனு கேக்க ஆரம்பிச்சுடுறாங்க ......//
பிரக்டிகலா நெறைய பாக்றதுதான்...!
\\கவிதைக்கு என்ன குறைச்சல்? ....//
அதானே??? என்ன குறைச்சல்???
யாருப்பா அது??? எங்க ஊரு புள்ளைய கலாய்க்கிறது???
:-( :-( :-(
\\காதல் - கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிகிட்டவுக மேல வரணும். கன்னி தீவு சிந்துபாத் கதை மாதிரி............. நீளணும்.........!...//
சரி..! அப்படியே ஆகட்டும்..!
பாலோ பண்றோம்..! :-) :-)
ரொம்ப பிடிச்சிருக்கு சித்ரா இந்த இடுகை. சில இடங்களில் ரொம்ப அருமையான விஷயங்களை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.
லஸ்ட், ஒரு கை ஓசை - நிதர்சனம்.
///காதல் - கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிகிட்டவுக மேல வரணும். கன்னி தீவு சிந்துபாத் கதை மாதிரி............. நீளணும்.........!////
இது சித்ரா டச். க்ளாஸ்
தங்கள் கருத்து நன்றாக உள்ளது
நெசமாத்தான் சொல்லுதியலோ... கட்டிகிட்ட பொறவு பலபேரு இப்டித்தான் ஆயிட்தாஹலோ.... என்னதான் இருந்தாலும் வெட்டிபேச்சுனு ப்ளாக் வெச்சுகிட்டு.... வெளுதுகட்டுதிய போங்க.... பலபேருக்கு சாட்டையடி கொடுத்தாப்ல நச்சுனு நாலு வார்த்த சொல்லிபுட்டிய... வருங்காலத்துக்கு ஒதவும் மைண்ட்ல வெச்சுக்றேன்.... நென்ப தாங்க்சுங்கோ...
நல்லா அனலைஸ் செஞ்சு எழுதியிருக்கீங்க சித்ரா, திருமணத்திற்குப் பின் பல சுமைகளை சுமக்கும்போது காதல் கொஞ்சம் பின் தள்ளப் படுவது உண்மையே, அதற்காக காதலை இழப்பது மிக மிகத் தவறு. ஜமால் கூறியது போல் சுவாசம் உள்ள வரை விசுவாசமான காதலை சுவாசிப்போம்!!
//நான் போன பதிவில் போட்ட, "முத்தம் போதாதே" கவிதைக்கு என்ன குறைச்சல்?//
அதானே.... என்ன குறைச்சல்....
யார்றா அது குறை சொன்னது...பாருங்க நம்ம சித்ராக்காக்கு கோவம் வந்துட்டு...
:)
"love after marriage" நல்ல சப்ஜெக்ட் நிறைய பேசலாம்.
நல்ல பதிவு.
//நாஞ்சில் பிரதாப் said...
எங்கிட்டகூட ஒரு லெட்டர் இருக்கு...
வருங்கால ரங்கமணிக்கு கிப்டா கொடுக்கப்போறேன்...//
டேய்....டேய்....வேண்டாம்....இப்பிடி அண்ட புளுகு புளுகாத..
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது..
இப்பிடி சந்தடி சாக்குல உன்னையும் ஒருத்தி லவ் பண்ணி லட்டர் கொடுத்தான்னு சொன்னா நாங்க நம்பிருவமாக்கும்..
போடா டேய்...போய் பிள்ள குட்டிய படிக்க வைக்குற வழிய பாரு...
//நாஞ்சில் பிரதாப் said... எங்கிட்டகூட ஒரு லெட்டர் இருக்கு...
வருங்கால ரங்கமணிக்கு கிப்டா கொடுக்கப்போறேன்...//
//பலா பட்டறை said... தங்கமணிதான் அத பாத்துகறாங்க..//
உங்களுக்கெல்லாம் ரொம்ப தைரியம்ப்பா... காதலிச்சவ கிட்ட கொடுக்க பயந்தது மாதிரி இப்ப நம்ம வூட்டம்மா கிட்ட காண்பிக்கவும் பயந்துகிட்டு அத்தல்லாம் ஒளிச்சு வச்சிருக்கேன்.
கலக்கிட்டீங்க சித்ரா.
கண்ணா.. said...
//நாஞ்சில் பிரதாப் said...
எங்கிட்டகூட ஒரு லெட்டர் இருக்கு...
வருங்கால ரங்கமணிக்கு கிப்டா கொடுக்கப்போறேன்...//
டேய்....டேய்....வேண்டாம்....இப்பிடி அண்ட புளுகு புளுகாத..
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது..
இப்பிடி சந்தடி சாக்குல உன்னையும் ஒருத்தி லவ் பண்ணி லட்டர் கொடுத்தான்னு சொன்னா நாங்க நம்பிருவமாக்கும்..
போடா டேய்...போய் பிள்ள குட்டிய படிக்க வைக்குற வழிய பாரு..//
//
இது என்னங்க எங்க தொடர் கதைய விட தல சுத்துது.. ஆமா நாஞ்சிலுக்கு கல்யாணம் ஆயிருச்சா, இல்லையா?
போடா டேய்...போய் பிள்ள குட்டிய படிக்க வைக்குற வழிய பாரு..//
இங்கயுமா..????::))))
உண்மையைச் சொல்லப்போனால், சங்ககாலந்தொட்டு, இன்றுவரை, மனைவியைப் பற்றியயும் தாயைப் பற்றியும் எந்த பெரும்புலவரும் பாடவில்லை......அதே போல் கணவனைப் பற்றி எந்த பெண்பாற்புலவர்களும் பாடவில்லை..... காதலன், காதலி இவர்களைப் பற்றிய பாடல்கள் அத்தோடு நின்று போனது. " இலக்கியத் தென்றல் அடியாரின் "மனைவி" என்ற நூல் நான் மிகவும் ரசித்தது.
நல்ல பதிவு....வாழ்த்துக்கள்
@ பலா பட்டறை
நாஞ்சிலுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா...ஆக வில்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது..
ஆனால் இங்கே அமீரகத்தில் பிலிப்பைன் மற்றும் இந்திய சாயல் கலந்த பல குழந்தைகளை பார்த்துள்ளேன் என்று மட்டும் சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்.
திகட்ட திகட்ட காதலிக்க வாழ்த்துக்கள். இந்த பதிவுக்கு ஒரு வோட்டு என்னுது..
:)
இன்னும் சில கமென்ட் போடலாம்ன்னு நெனச்சப்ப கரெண்ட் போய்டுச்சு..now back 2 comments
//unpublished comments சிலவற்றில், "உங்களுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி, இப்படி எழுதுறதுக்கு" என்று சொன்னாப்புல//
இப்படி சொன்னவருக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்திங்க..
அதையே அடுத்த பதிவுல சொல்ற உங்களுக்கு அதை விட தைரியம் ஜாஸ்தி :))
//நாஞ்சில் பிரதாப் said... எங்கிட்டகூட ஒரு லெட்டர் இருக்கு...
வருங்கால ரங்கமணிக்கு கிப்டா கொடுக்கப்போறேன்...//
//பலா பட்டறை said... தங்கமணிதான் அத பாத்துகறாங்க..//
ஏண்ணா ரெண்டு பேரும் சைடு கேப்புல கஸ்டமர் இல்லாத ஆட்டோ ஓட்டுறீங்களே :)
//சொக்காரவங்க//
இதுக்கு என்னங்க அர்த்தம? எல்லா ஊர்காரங்களுக்கும் புரியுற மாதிரி எழுதுனா நல்லா இருக்கும்.. :)
சித்ரா நல்லா எழுதியிருக்கிங்கள். வாழ்த்துக்கள்
அருமையான, வாஸ்தவமான வரிகள்.... ஒவ்வொரு காதலரும் யோசிக்க வேண்டிய விஷயங்கள்....
ஆனால் ஒன்று, முதல் பாராவில் வரும் கதையில், பெண்களின் பக்கம் நின்று, கல்யாணத்திற்க்குப் பிறகு, ஆண்கள் மட்டுமே மாறிப் போகிறார்கள் என்று சொல்ல வருகீறிர்கள் என்று நினைக்கிறேன்..... பல ஆண்களின் புலம்பல்களையும் கேட்டுப் பாருங்கள்...
கள்ள வோட்டு போட முடியுமான்னு தேடிட்டு இருக்கேன்...
நன்றாகச் சொன்னீர்கள் சித்ரா. இப்போ நேரமில்லை. பின்னர் வருகிறேன்.
//பொண்டாட்டி ஆன காதலி - கனவு கன்னி ரோல் போய், டி வி சீரியல் கதாநாயகி ரேஞ்சுக்கு ஆகி போறா//
செம உதாரணம்...சூப்பருங்க
//டேய்....டேய்....வேண்டாம்....இப்பிடி அண்ட புளுகு புளுகாத..பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது..//
வே கண்ணா... உம்மைப் அட்டு பிகரு கூட லைன் அடிக்கலையேங்கற ஆதங்கத்துல பேசக்கூடாது. எல்லாரையும் உம்ம மாதிரி இத்துபோன பர்சனாலிட்டி நினைச்சிராக்கும்... வேணும்னா ஸ்கேன் பண்ணி அனுப்பறேன், சித்ரா டீச்சர் பதிவுல வந்து கும்மி அடிக்கவேணாம்னு பார்க்குறேன்...
//எங்க தொடர் கதைய விட தல சுத்துது.. ஆமா நாஞ்சிலுக்கு கல்யாணம் ஆயிருச்சா, இல்லையா?//
என்னபார்த்தா தெரிலயா ஷங்கர்ஜீ... பச்சப்புள்ளைங்க...
//இப்போ அந்த அமாவாசைக்கு பொறந்தவன், வேற பௌர்ணமி வெளிச்சத்தில்.//
இந்த வரிகளை மிக ரசித்தேன் டீச்சர். எதார்த்தமான விஷயத்தை அருமையான நடையில் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பகிர்வு.
தமிழ்மணம் பட்டையை இணைக்கவில்லையா? டீச்சர்.
//இங்கே அமீரகத்தில் பிலிப்பைன் மற்றும் இந்திய சாயல் கலந்த பல குழந்தைகளை பார்த்துள்ளேன் என்று மட்டும் சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்//
வே...யாரு லோட யார் தலைல கட்டவைக்கப் பார்க்கிறீரு...
பர்துபாய் பக்கம் வந்துராதயும்.... உம்மை போலீஸ் தேடிட்டி இருக்கு...
பிலிப்பைன்சுக்கும், இந்தியாவுக்கும் இடைல நல்லுறவு ஏற்படுத்றேன்னு சொல்லி நீருபண்ண காரியம் இங்க சிரிப்பா சிரிக்குது...
சித்ரா...காதல் கல்யாணத்த்ற்கு முன்னமோ பின்னமோ அது உணர்வோடு கலந்த மன அதிர்வோடு நெருங்கி உண்மையாய் இருந்தால் காலம் முழுக்கத் தொடரும்.அழிவில்லாமல் உடல்கள் அழிந்தபோதும் வாழும்.
உங்கள் நகைச்சுவையால் 3 நிமிடங்கள் வாசிக்கும் எங்களையே அதிர வைக்கிறீர்கள்.உங்கள் வீடு என்ன பாடுபடும்.அப்போ காதலும் கூடும்தானே.கணவரோ குழந்தைகளோ உங்களைப் பார்த்து முகம் சுழிக்க மனம் வருமா !
காதலின் இரண்டு பக்கத்தை, சரியாக சொல்லிவிட்டீர்கள் சித்ரா. .
டீச்சராக நல்ல பாடம். சூப்பர் தோழி.
வாழ்க்கைக்கு தேவையான நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கீங்க. நீங்க சொன்னத நோட் பண்ணிக்குறேன். நீங்க சொன்னத எல்லாரும் பண்ணுனா, டைவர்ஸ் எல்லாம் குறைஞ்சுடும்.
ஜோக்கா எழுதியிருக்கீங்கன்னு சொல்ல மறந்துடுச்சு. சொல்லிட்டேன். அதுவும் அந்த கன்னித்தீவு எடுத்துக்காட்டு ரொம்ப நல்லா இருந்துச்சு. ufo வும் அருமை. கவிதையில் டிவிஸ்ட்டா ! :) சரியா உங்களை கிண்டல் பண்ணியிருக்காங்க.
//"மாதத்துக்கு ஒரு அமாவாசை - உன்னை
காணாத நாள் எல்லாம் எனக்கு அமாவாசை தானே."
ஏங்க ஒரு வளர்ற சயிண்டிஸ்ட சாகடிச்சுட்டீங்களே ? :)
கட்டுரையில் சொல்லியிருக்கும் விஷயம் உண்மைதான்.காதலனே கணவனானால் திருமணத்திற்குப் பிறகு காதல் தொடராமை. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்றால் கணவன் மீது காதல் உருவாகாமை,(இரு பாலருக்கும் பொருந்தும்.) இதுவே பல குடும்பங்களில் பூகம்பம் ஏற்படக் காரணம்.
பதிவு சூப்பர்..
ஒருவனுக்கு ஒருத்தி மட்டும் எனும் நம் பண்பாட்டு தத்துவத்தை , நவீன சங்க கட்டுரையாக அழகாக வடித்துள்ளீர்கள் ...
சென்ற பதிவில் உள்ள நேர்மையான கவிதைக்கு , சிலருக்கு ஏற்பட்ட கொஞ்சம் (கொஞ்சுண்டு) கோணல் புரிதல்களை நேர் படுத்த வந்த
இந்த கட்டுரை நல்லபதிவு ...
கொஞ்சம் :) :) முந்தானை முடிச்சு திரை படத்தில், கடைசி காட்சி .. நேரம் குறித்து கொடுக்க ஒருவர் வந்து கொண்டு இருப்பார்
பாக்யராஜ் , நேரமாவது , குறிக்கிறதாவது என்று தீவிரமாக இருப்பதை பார்த்து , வந்தவர் மங்களா என்று தம் மனை நோக்கி ஓடுவார் ..
அது போல் , உங்கள் கட்டுரை ,கல்யாணமான ஆண்கள் அனைவரையும் தத்தம் மனை நோக்கி மங்களா , மங்களா என்று ஓடவைத்திருக்கும் , வைக்கும் ..
ஆண்களுக்கும் ''பசலை '' வரவைக்கும் அருமையான பதிவு
ரொம்ப அழகா எழுதுறீங்க.
முதல் வரியில ஆரம்பிச்சா கடைசி வார்த்தை வரைக்கும் ஒரே மூச்சா படிக்கிறமாதிரி இருக்கு.
தொடர்ந்து எழுதுங்க.......
கலக்கலான பதிவு.
அசத்தீட்டிங்க போங்க.
காதல் என்பது கல்யாணம் வரைனு ரொம்ப பேரு பாடிக்கிட்டு இருப்பாங்க. அந்த வரியை மாத்தி பாடச் சொன்னவிதம் அருமை.
காதல் என்பது காலம் உள்ளவரை.
//நீ கல்யாணத்துக்கு முன்னால காதலிக்கலனாலும் ஒண்ணும் குடி முழுகி போகாது மக்கா, ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம் காதல் நெருப்பு தணலின் சூடு குறையாம கட்டிக்கிட்டவகுள ரசிச்சி காதலிங்க.//
நல்லா சொன்னிங்க....
super chithra:-)
Noothkku nooru unmai....
Keep it up...
காதலை பத்தி நிறைய ஆராய்ச்சி செஞ்சு இருக்கீங்க போல.
\கல்யாணத்துக்கு அப்புறம், அன்பு, பாசம், பரிவு, நேசம், அக்கறை, புடலங்காய் னு இருந்தாலும், புருஷனோ பொண்டாட்டியோ புலம்புறதுக்கு எரிச்சல் படுறதுக்கு, என்ன காரணம்ங்க? எல்லாம் இருந்தும் ஏதோ மிஸ்ஸிங் மாதிரி தோணுதுல./
ஆமாங்க மச்சினிச்சி எல்லாம் ரொம்ப சின்ன பொண்ணுகளா இருக்காங்க :(
ஆகா இந்த மேட்டரை வைத்து ஒரு பதிவு போடலாம் போல இருக்கு. சரி முயற்ச்சிக்கின்றேன். நல்ல கருத்துக்கள் நன்றி.
இது வெட்டிபேச்சு இல்ல மக்கா... ரொம்ப சுட்டிப் பேச்சு... :-))
நல்ல கருத்துள்ள இடுகை. தொடருங்கள். ஏற்கனவே வரிக்கு வரி எல்லாரும் பாராட்டி விட்டதால்.... நான் ஓடி விடுகிறேன். :-)
Pakkathil Irukkum pothu varum Kaadhal Unarvu
Thoorathil Irukkum pothu varum Kaadhal Unarvai vida Kuraivu.
Kaadhalai Thedum pothu sugama irukku. Kaadhalukkul Moolgivittaal Sugam Therivathillai.
நல்ல கருத்துக்களை நகைச்சுவையோடு நீங்க சொல்லும் விதம் அருமை சித்ரா. முந்தைய பதிவில் சொன்ன ஆடையில் கண்ணியம் வேண்டும் என்பதாகட்டும், இதில் சொல்லும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதாகட்டும் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல மென்மையாகச் சொல்லிருக்கீங்க!!
//பாலாய் இருக்றப்போ வெண்ணைய் எடுக்க அலைஞ்சவன் தயிர்பானையை போட்டு உடைக்கிறான்// உண்மைதான்!!
//காதல், கல்யாணத்தில் "முடிஞ்சிருச்சா"?//
க்ளாஸ்!!
//இப்போ அந்த அமாவாசைக்கு பொறந்தவன், வேற பௌர்ணமி வெளிச்சத்தில்.//
//பொண்டாட்டி ஆன காதலி - கனவு கன்னி ரோல் போய், டி வி சீரியல் கதாநாயகி ரேஞ்சுக்கு ஆகி போறா//
நீ கல்யாணத்துக்கு முன்னால காதலிக்கலனாலும் ஒண்ணும் குடி முழுகி போகாது மக்கா, ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம் காதல் நெருப்பு தணலின் சூடு குறையாம கட்டிக்கிட்டவகுள ரசிச்சி காதலிங்க.
எவனையோ காதலிக்குறேன் என்று நினைச்சி கல்யாணத்துக்கு முன்னாலே கவிதையில் சொன்னா ஓகேவாம்.. கட்டி இருக்கிறவனை காதலிக்கிறேன் என்று சொல்ல, தைரியம் வேணுமாம்.
உங்க கோபம் நல்லாவே தெரியுது. வரிகள் ஒவ்வொன்றும் அருமை. நல்ல பதிவு. keep it up.
Super post Chitra :)
நேசிப்பதைச் சொல்லக் கூட எத்தனை விமர்சனங்கள்.. ஆனாலும் ஒன்று.. எல்லா மனுசங்களும் ஒரே மாதிரி இல்லன்னு நமக்குத் தெரியாதா.. பாவம்.. மத்த நோய் மாதிரி மனநோய்க் காரங்களையும் அனுதாபமா விட்டுருவோம்.. நேசிக்கவே நேரமில்லாதப்ப இவங்கள கவனிக்க ஏது நேரம்?!
வரிகள் ஒவ்வொன்றும் அருமை. நல்ல பதிவு.
ரொம்ப...ரொம்ப...அழகான பதிவு! நேசம் மறப்பதில்லை நெஞ்சம்! நேசமுடன் இருப்பவர்களை
காலம் கூறு போட்டு விட முடியாது! உங்கள்
இடுகையைப் படித்தவுடன் எனக்கு சாவியின் “விசிறி வாழை” ஞாபகம் வந்து விட்டது!!
ரொம்ப ரொம்ப அழகான பதிவு கலக்கி இருக்கீங்க தோழி...வாழ்த்துக்கள்...தொடருங்கள்...
இப்ப ஓட்டு மட்டுமே.. பிறகு வாறன் சித்ரா..
nice post,.
அருமையான விஷயங்களை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க!!!
//நான் தப்பிச்சேன்டா, சாமி.//
என்னோவோ அவரு தான் தப்பிச்ச மாதிரி தோணுது
//நீ கல்யாணத்துக்கு முன்னால காதலிக்கலனாலும் ஒண்ணும் குடி முழுகி போகாது மக்கா, ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம் காதல் நெருப்பு தணலின் சூடு குறையாம கட்டிக்கிட்டவகுள ரசிச்சி காதலிங்க. அவ ஆழி மாதிரி
ஆயிட்டா, அப்படி ஆயிட்டா இப்படி ஆயிட்டானு புலம்பாதீங்க. அழகு, உருவம், பருவம் பாத்து வரது, லவ் (love) இல்ல மக்கா, அதுக்கு பேரு லஸ்ட் (lust) .//
நான் குறிச்சிகிட்டேன் இந்த தத்துவத்தை
//
கல்யாணத்துக்கு அப்புறம், அன்பு, பாசம், பரிவு, நேசம், அக்கறை, புடலங்காய் னு இருந்தாலும், புருஷனோ பொண்டாட்டியோ புலம்புறதுக்கு எரிச்சல் படுறதுக்கு, என்ன காரணம்ங்க? எல்லாம் இருந்தும் ஏதோ மிஸ்ஸிங் மாதிரி தோணுதுல. அதான் - அதான் - அதேதான் - கணவன் மனையின் ஆத்மார்த்தமான காதல் உணர்வுகள். இதில், ஒரு கை ஓசை கூடாது.
//
இதையும் தான்
// கட்டி இருக்கிறவனை காதலிக்கிறேன் என்று சொல்ல, தைரியம் வேணுமாம்//
கை தட்டிகிறேன்
//
கன்னி தீவு சிந்துபாத் கதை மாதிரி............. நீளணும்.........!
//
தினத்தந்தியிலே தேடிகிட்டு இருக்காங்க உங்களை
ஏங்க 60 கமண்டுன்னா, 30 கமெண்ட் இருக்கும்; மீதம் முப்பது பதிவரே அதுக்காக பதில் சொன்னதா இருக்கும்; எப்படிங்க நீங்க ஒரு பதிலும் சொல்லாமலே 60 comments இருக்கு!!
பதிவு?? அருமை !!
சித்ரா,
எழுதியவுடன் இதை படிச்சிட்டு வோட்டு போட்டு என் கமெண்ட் போட ஒரு ரெண்டு நாள் கழிச்சு வந்தா 62 கமெண்ட் எனக்கு முன்னாடி... நான் சொல்ல விரும்பிய எல்லாத்தையும் அக்கு வேற ஆணி வேற சொல்லியிருக்காங்க.. அதையே சொல்லி போர் அடிக்கலை நானும்... ஆனா நிறைய சிரிச்சேன்... இன்னும் எழுதுங்க...
remba interesting aha thaan eluthiyirukiingka!!
அது சரி.. நானும் என் கணவருக்கு ஒரு கவிதை எழுதுறேன் கூடிய சீக்கிரம்
Chitra...we take this as the most important lesson for our life...Happy Anniversary...Many more Happy returns...Anto & Brinda
தோழி இந்த வார டரியலில் இந்த பதிவைத்தான் டரியலாக்கிருக்கேன்
This is definitely one of your best blog posts.. kudos..
என்னைப் பொருத்தவரை
காதல் - இந்த ஊரு sitcom.. ரொம்ப யோசிக்காம சிரிச்சுட்டு போய்டே இருக்கலாம். ஒரு சீசனுக்கும் அடுத்த சீசனுக்கும் தொடர்பு இருக்கனும்னு அவசியம் இல்லை.
கல்யாணம் - நம்ம ஊரு mega serial.. emotional drama..
என்னங்க உங்கள் பதிவு சூப்பர்.நீங்கள் பட்டிமன்ற பேச்சாளரோ?
உங்கள் பதிவு என்னை கவர்ந்த்தால் பல முறை படித்த்தேன்.
பிள்ளைகலுக்கு பரீட்ச்சை காரணமாக பின்னூட்டம் போடமுடியவில்லை.
//கன்னி தீவு சிந்துபாத் கதை மாதிரி............. நீளணும்.........!//
superb chittu
nadaththummaa ...!!!
//கல்யாணத்துக்கு முன்னால் காதல் கத்திரிக்காய் னு கூவுரவங்க நிறைய பேர், கல்யாணம் ஆன பின்னால, கிலோ என்ன விலைனு கேக்க ஆரம்பிச்சுடுறாங்க// ......
100% true
சூப்பர் :)
சித்ரா க்ளாப்ஸ், க்ளாப்ஸ், க்ளாப்ஸ், சூப்பர் டூப்பர் பதிவு,
எல்லா நடைமுறை உண்மைகளை புட்டு புட்டு (சாப்பிடும் புட்டு இல்ல) வைத்து இருக்கீங்க.
பதிவுக்கு பின்னாடி பதிவுலக நண்பர்களின் கமெண்ட் சூப்பர்.
னாயிருக்கு நல்ல நகர்வு
வாழ்த்துகள் சித்ரா
நல்லாயிருக்கு நல்ல நகர்வு
வாழ்த்துகள் சித்ரா
நல்லா எழுதி இருக்கீங்க..
சூப்பரா சொன்னீங்க சித்ரா. கரெக்ட்.
அட..., என்னங்க ரொம்ப அசால்ட்டா பெரிய விஷயம்லாம் சொல்லிடிங்க...
உங்களுக்கு தைரியம்னு தான சொன்னாங்க... அத ஏன் பப்ளிஷ் பண்ணல
//ஒருத்தர் பின்னால ஒருத்தர், ஒருத்தர் கனவுல ஒருத்தர் சுத்தி சுத்தி டூயட் பாட வேண்டியது. //
சித்ரா,
எனக்குத்தான் வாய்ப்பே இல்லாம போச்சி.
(அட, கல்யாணத்துக்கு முன்னாடி டூயட் பாட முடியாத போனத சொல்றேங்க)
//காதல் - கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிகிட்டவுக மேல வரணும். கன்னி தீவு சிந்துபாத் கதை மாதிரி............. நீளணும்.........!//
சித்ரா,
இந்த அறிவுரையெல்லாம் முப்பதுக்கு முன்ன எங்க உறைக்குது?
very true.. n a very interesting read!! :) keep posting!
உங்கள் நகைச்சுவை கலந்த அனுபவ பதிவிற்கு சின்ன அவார்டு வந்து பெற்று கொள்ளுங்கள்.
" பிடிச்ச பொண்ண கட்டினாலும்.. பிடிக்காத பொண்ண கட்டினாலும்.. மொத்ததுல எந்த பொண்ண கட்டினாலும்.. கல்யாணத்துக்கு அப்புறம் காதலுக்கு நோ கியாரண்டி.." ... இது என் கருத்து மட்டுமல்ல நு நினைக்கிறேன்..
முதன் முறையாக உங்கள் வலைப்பதிவில் பின்னூட்டமிடுகிறேன். முத்தம் போதாதே கவிதையையும் வாசித்துவிட்டே. இங்கே காதலுக்கும் காதலிப்பவர்களுக்குமான இலக்கணம் ரெம்ப க்ளிசேத்தனமாகத்தான் இருக்கிறது. இன்னார் காதலிக்கலாம் இன்னவயதுவரைதான் காதலிக்கலாம் என்று அபத்தமாக. உங்கள் கண்கள் இரண்டால் பதிவில் சொல்லியது புனைவோ நிஜமோ அதில் ஒரு ஆத்மார்த்தாமான வெளிப்பாடு இருந்தது.
பதிவை வாசித்தபோது எனக்குள் தோன்றிய கவிதை
கரைய
கரைய
நிறையும்
காதல்
நிறைய
நிறைய
கரையும்
காமம்
அட போங்க என்ன சொல்லுறது
அருமையா இருக்கு இந்த பதிவு
இப்பத்தான் படிச்சேன்
பலபேர்கிட்ட இதேபோல நான் பேசி இருக்கேன் ஆன இப்படி எழுத தோணலை/ வரல . வரிக்கு வரி பாராட்டுக்கள்
உங்க பதிவுகள்ல இது பெஸ்ட்..
(ODDUM PODDUDEN)
Post a Comment