Approaching everything in life with a sense of humor - a blessing - given by God through my father's genes.
Thursday, January 7, 2010
சவாலே சமாளி.
இன்னைக்கு நான், "The Economist" Jan.2nd to 8th issue படிச்சிட்டு இருந்தேன். அட, நம்புங்க.
அதில் ஒரு கட்டுரையில் என் கவனத்தை ஈர்த்த வரிகள்: "If the empowerment of women was one of the great changes of the past 50 years, dealing with its social consequences will be one of the great challenges of the next 50"
"கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடந்த மிக பெரிய மாறுதல்களில் ஒன்று பெண்களுக்கு அதிகாரம் கிடைத்தது என்றால், அதனால் ஏற்படும் சமுதாய பின்விளைவுகளை எதிர்கொள்ளுதல், அடுத்து வரும் ஐம்பது ஆண்டுகளில் வரும் பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும்."
வீட்டில், தாய் தந்தை இருவரும் வேலைகளுக்கு போய் விடுவதால், சிறு வயதிலேயே குழந்தைகள் தன்னிச்சையாக செயல் பட பழகி கொள்வதும் அவர்களது emotional உணர்வுகளை அவர்களே சமாளிக்க பழகி கொள்வதும் சமுதாயத்தில் இன்னும் சில வருடங்களில் அதன் பாதிப்பு தெரியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
வெஸ்டேர்ன் கல்ச்சர் என்று ஏளனமாக பாக்கப்படும் நாட்டில் இந்த மாதிரி கரிசனம்........ பெண்களுக்கு வந்த இந்த மாற்றத்தால் குழந்தை வளர்ப்பு எப்படி பாதிக்கப் பட்டிருக்கு என்றும் அதை மேலும் பாதிக்க படா வண்ணமும் பெண்கள் தொடர்ந்து வீட்டுக்கு வெளியில் சாதிக்க உதவும் வகையில் எப்படி சமுதாயம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கட்டுரை கருத்து தெரிவிக்கிறது.
கொசுறு செய்திகள்:
அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியில் பெண்களை விட அதிக ஆண்களே வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்ப பட்டிருக்கிறார்கள்.
சில அமெரிக்க கம்பனிகள், பெண்கள் ரெண்டு மூன்று நாட்கள் வீட்டில் இருந்தே ஆபீஸ் வேலை பார்க்கும் வசதி செய்து தந்து உள்ளன.
பல கம்பனிகள், தங்கள் ஆபீஸ் பில்டிங்கில் குழந்தைகள் கேர் சென்டர் திறந்து வைத்து இருக்கின்றன. பெண்கள் அங்கு வேலை பாத்து கொண்டே, குழந்தைகளையும் கவனித்து கொள்ள வசதியாக.
இந்த சலுகைகள் அந்த பாதிப்பை நல்ல வழியில் திசை திருப்பும் என்று நம்புகிறார்கள்.
படிச்சிட்டு, இது சீரியஸ் மேட்டர். இதை வச்சு காமெடி கீமெடி பண்ணா tragedy ஆயிடும்னு விட்டுட்டேன்.
இது பெண்களின் சாதிக்கும் பலத்துக்கும் ஆண்களின் ஒத்துழைப்பு பலத்துக்கும் உள்ள சவால்.
இந்தியாவிலும் எந்த மாதிரி போய்கிட்டு இருக்கு என்று தெரிஞ்சுக்கணும்.
பின்னூட்டத்தில், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
66 comments:
இன்னும் ரொம்ப நாளாகுங்க அந்த அளவுக்கு ஆகறதுக்கு. முன்னிக்கு இப்ப பரவால்ல, அவ்வளவுதான்.
பிரபாகர்.
ஆரோக்கியமான மாற்றத்துக்கு இன்னும் 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் .காரணம்
பழைய தலைமுறை பக்குவமாய் விலகிக் கொள்ள அல்லது விடுபட 25 ஆண்டாவது வேண்டாமா?
ஆனாலும் அந்த ,எதிர்கால சூழ்நிலையில் கருத்துக்கள் எப்படி எப்படி மாறுமோ
பெண்கள் திமிறிக் கொண்டு முன்னேறுகிறார்கள்...அதுதான் அனைவரும் முழு மனதோடு சந்தோஷமாய் ஏற்றுக் கொள்வதற்கு முட்டுக்கட்டையாய் நிற்கிறது
present madam
சித்ரா ப்ளாக் யாரோ ஹாக் பண்ணிடங்கள ?? இல்ல ப்ளாக் மாறி வந்துட்டேனோ ?? சீரியஸ் மேட்டரா இருக்கே , அதும் சித்ரா ப்ளாக்ல ??
கோமா மேடம், எல்லோரும் திமிறி கொண்டு முன்னேறுகிறார்கள் என்று சொல்ல முடியாது. வேறு வழி இல்லமால் வேலைக்கு போகிறவர்களும் இருக்கிறார்கள்.
அமெரிக்க கலாச்சாரம் நம்மளோடது மாதிரி இல்ல. நம்ம ஊர்ல ரெண்டு பேரும் வேலைக்குப் போனா, தாத்தா,பாட்டி(குழந்தையின்) இருப்பாங்க.அவங்க பார்த்துப்பாங்க. அமெரிக்காவுல இது கொஞ்சம் கம்மி.
mother center எங்க அலுவலகத்திலேயும் இருக்கு.
//இந்த சலுகைகள் அந்த பாதிப்பை நல்ல வழியில் திசை திருப்பும் என்று நம்புகிறார்கள்.//
may be true.
//ஆரோக்கியமான மாற்றத்துக்கு இன்னும் 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் .காரணம்
பழைய தலைமுறை பக்குவமாய் விலகிக் கொள்ள அல்லது விடுபட 25 ஆண்டாவது வேண்டாமா?//
பழைய கட்டிடத்தை அல்ட்டரேஷன் செய்யும்போது பாதியில் பார்த்தால் பல நஷ்டங்கள் தெரியும். அது உண்மையும் கூட அல்ட்டரேஷன் வேலைகள் நன்றாக நடந்து முடிந்த பின்னால் மட்டுமே விளைவுகள் (ஃபினிஷிங்) தெரியும்.
எல்லோர் வீடுகளிலும் தாத்தா பாட்டியின் உதவி கிடைக்கும் வகை இல்லை, பெருமாள் சார். சில தோழிகள் வீட்டில் இந்த பிரச்சனை வெவ்வேறு காரணங்களால் இருக்கு.
நம் நாட்டில் பெண்கள் வேலைக்கு போவது புதிது இல்லை. முற்காலத்தில் ராஜா ராணிக்கு சாமரம் போட கூட சென்று இருக்கிறார்கள். பெரும்பாலோர், திருமணம் பிள்ளை பேறு என்றதும் வீட்டை மட்டும் கவனிக்க ஆரம்பித்தார்கள். இன்றைய சூழ்நிலையில் அது இயலாத காரணமாக பலருக்கு இருப்பதால், இதனால் பாதிக்கப் படும் குழந்தைகள், பிற்காலத்தில் எப்படி பட்டவர்களாக வளர்ந்து சமுதாயத்தை மாற்றுவார்கள் என்பது தான் கேள்வி.
well said, நல்லா சொன்னீங்க..மேஜர் சுந்தரராஜன் மாதிரி தமிழ் ட்ரான்ஸ்லேஷனோட சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்....
\\ ராஜா ராணிக்கு சாமரம் போட கூட சென்று இருக்கிறார்கள்//
சாமரம் போட்டு அவங்க வீட்டுக்கா போயிருப்பாங்க?? அந்தப்புறத்துக்கு தானே போயிருப்பாங்க.
நல்ல கட்டுரை சித்ரா, பின்னூட்டம் மற்றும் கருத்துக்களில் இருந்து நாம் நல்ல முடிவுகளை எட்டலாம். பெண்கள் வேலைக்குப் போவது அவர்களின் குடும்பத் தேவைகள் மற்றும் அவர்களின் விருப்பங்கள் பொறுத்து. எல்லா கனவன் மற்றும் பொற்றேர்கள் இப்போது ஆதரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது பிரச்சனை இல்லை. குழந்தைகள் காப்பகம், நர்சரிஸ் மற்றும் தாத்தா பாட்டிமாரும் புரிந்து கொண்டு ஆதரவு தருகின்றனர். ஆனாலும் இப்படி வளரும் குழந்தைகள் ஒரு டிடார்ச்சுடு லைப் வாழ்வது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
/////இப்படி வளரும் குழந்தைகள் ஒரு டிடார்ச்சுடு லைப் வாழ்வது நடந்து கொண்டுதான் இருக்கின்றது//////.
சரியா சொன்னிங்க, பித்தன் சார். அதுதான் பொறுத்து இருந்து பார்க்க வேண்டிய விஷயம். பல குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே "emotional maturity" வந்துடுது.
Romoeboy - Romeo பார்வையில் அலசிட்டார்.
எதுக்குங்க வம்பு. நான் எதாவது சொல்லப் போக. வேண்டாம் விட்டுடுங்க. ஜீட்..
//சிறு வயதிலேயே குழந்தைகள் தன்னிச்சையாக செயல் பட பழகி கொள்வதும் அவர்களது emotional உணர்வுகளை அவர்களே சமாளிக்க பழகி கொள்வதும் சமுதாயத்தில் இன்னும் சில வருடங்களில் அதன் பாதிப்பு தெரியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.//
சமாளிக்கிறர்களா, அடக்கிக்கொள்கிறார்களா இல்லை வேறுவிதமான வடிகால்கள் தேடிக்கொள்கிறார்களா என்பது தான் முக்கியமான பிரச்சனையே
சங்கர், கரெக்டா பாயிண்ட் பண்ணிட்டீங்க. காலம் தான் பதில் சொல்லணும்.
//சில அமெரிக்க கம்பனிகள், பெண்கள் ரெண்டு மூன்று நாட்கள் வீட்டில் இருந்தே ஆபீஸ் வேலை பார்க்கும் வசதி செய்து தந்து உள்ளன.
பல கம்பனிகள், தங்கள் ஆபீஸ் பில்டிங்கில் குழந்தைகள் கேர் சென்டர் திறந்து வைத்து இருக்கின்றன. பெண்கள் அங்கு வேலை பாத்து கொண்டே, குழந்தைகளையும் கவனித்து கொள்ள வசதியாக.//
இப்ப இந்தியாவிலும் இதே போன்ற சலுகைகள் நிறைய தர ஆரம்பிச்சு இருக்காங்க சித்ரா.
//இது பெண்களின் சாதிக்கும் பலத்துக்கும் ஆண்களின் ஒத்துழைப்பு பலத்துக்கும் உள்ள சவால்.//
பெண்கள் இந்த சவாலை சமாளிச்சுடுவாங்க. இந்த காலத்து ஆண்கள் 99% ஒத்துழைத்தசுட்டுதான் இருக்காங்க. குழந்தைகளும் இந்த சூழ்நிலையோட வாழ பழகியாச்சு :)
social consequences தான் கண்கூடாகத் தெரிகிறதே.. raising divorce rates in India.. புரிதல் மேம்பட இன்னும் சில வருடங்கள் ஆகும். IT Sectorல் “கட்டவிழ்த்து விட்டவர்கள்” போல திமிறிக் கொண்டு செல்வதாக கேள்விப்பட்டேன்.. unfortunately, அதில் பெருப்பாண்மை பெண்களாம் !!
விஷி, குழந்தைகள் நலன் குறித்துதான் என் கரிசனமும். மத்தவங்க - அவங்க இஷ்டம்னு செய்றதை பத்தி நாம என்ன சொல்ல முடியும்?
சில நல்ல தகவல்கள் பகிர்ந்து கொண்டீர்கள். இன்னும் தகவல்கள் சொல்லியிருக்கலாம்.
இந்தியாவில் rescession effect சற்று குறைகிறது. முன்பு இருந்தது போல் வேலை இழப்பு அதிகம் இல்லை. Recruitment கொஞ்சமாய் துவங்கி உள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை பெண்கள் வேலைக்கு செல்வதால் அவர்களுக்கு தான் வீட்டிலும், வெளியிலும் வேலை பளு அதிகம். இதன் மூலம் சில repurcussion வரவே செய்யும். It is a big topic.
உண்மை, மோகன்குமார். சில பெண்கள் சிரிக்க நேரமின்றி மறந்து விடுகிறார்கள். அந்த பாதிப்பு குழந்தைகளிடம் தெரியத்தான் செய்யும்.
மாற்றம் ஒன்றே மாறாதது...
விளைவுகள் மாறிக்கொண்டே இருக்கும்
மாற்றங்கள் மாறவில்லை என்றாலும்
::))
குழப்பிட்டீங்களே, பட்டறை. நன்றி. :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சுரேஷ் சார்.
//சில அமெரிக்க கம்பனிகள், பெண்கள் ரெண்டு மூன்று நாட்கள் வீட்டில் இருந்தே ஆபீஸ் வேலை பார்க்கும் வசதி செய்து தந்து உள்ளன.
பல கம்பனிகள், தங்கள் ஆபீஸ் பில்டிங்கில் குழந்தைகள் கேர் சென்டர் திறந்து வைத்து இருக்கின்றன. பெண்கள் அங்கு வேலை பாத்து கொண்டே, குழந்தைகளையும் கவனித்து கொள்ள வசதியாக.//
என்னோட சொந்தக்காரங்க ரெண்டு மூணு பேர் அங்கே இருக்காங்க
அவங்க வீட்டில் இருந்து வேலை செய்றதாகச் சொன்னாங்க
அது பரவாயில்லைனு நினைக்கிறேன்.. குழந்தைகளோட இருந்து கிட்டே வேலைபார்க்கிறது
திமிறிக் கொண்டு என்பதன் அர்த்தம்...பெண்களை வளர விடாமல் அடக்கிவைக்க முயல்கிறார்கள்.ஆனாலும் தடைகளை உடைத்தெரிந்துவிட்டு..திமிறிக் கொண்டுதான் முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைக்கிறாள்...[குழந்தைகளைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் பொழுது திமிறிக் கொண்டு ஓடினான் என்று சொல்வதில்லையா
சித்ரா,
அடுத்த தலைமுறை தமிழ்நாட்டுக் குழந்தைகளின் நிலை கஷ்டம்தான். அவர்கள் அப்பா அம்மா கவனிப்பு இல்லாமல் வளரும் அபாயம் பெருருருருருருருகி வருகிறது.
இப்போ புரிஞ்சிக்கிட்டேன், கோமா மேடம். தெளிவு படித்தியதற்கு நன்றி.
செல்வா அண்ணன் சார், சரிதான். என்னதான் தாத்தா பாட்டி வளத்தாலும் தாய் தந்தை அன்பு விசேஷம் ஆனது. இந்த generation, தாத்தா பாட்டி ஆகும் போது நிலைமை என்ன? பொருளாதார நிலையை பெருக்க தெரிந்தவர்களுக்கு பாசத்தை புரிய வைக்க தெரிந்திருக்குமா? சரியா சொன்னீங்க.
என்னவோ சொல்றீங்க...!
எங்களுக்கு ஒன்னும் பிரச்சினை கிடையாது...
புள்ளைங்க(பெண்கள்) வேல பாக்கட்டும்.நாங்க வீட்டை கவனிச்சிக்கிறோம்..!
:-) :-)
அப்புறம் பெண்ணாதிக்கம் ஒழிகன்னு நாங்க எப்போ கொடி பிடிக்கிறது
:-) :-)
எதுவானாலும்..
பெண் என்பதை விடுத்து தாய் எனுமிடத்து குழந்தைகளைப்பற்றி எண்ணும் போது.. எதிர்காலம் மனசுக்கு கஸ்டமாக இருக்கும்.
பெண்ணியம் வாழ்க
இந்தியாவில் அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு அநியாய சலுகை. ஒரு இடுகை போட்டு புலம்பியிருந்தேன். மற்றபடி ஒரு பாசிடிவ் அப்ரோச்சும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதைக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்கவேணாம். சீட்டிலிருந்து வேலை பார்த்தால் போதும் என்பதுதான் நிலமை
தாய் குலங்களையும் தந்தை குலங்களையும் வெறுக்காமல் குல கொழுந்துகள் உருப்படனும். அவ்வளவுதான்.
பொருளாதாரம் பெருகும் போது ஈகோ பெருகாமல் இருக்கணும், சார்.
தாய் குலங்களும் தந்தை குலங்களும் வேலை வேலை னு அலைஞ்சிட்டு (செய்யுறாங்களோ என்னவோ, அது வேற விஷயம்), வீட்டு வேலையை வேலைக்காரிக்கிட்ட - குழந்தை வளர்ப்பை வேற ஆள்கிட்ட - னு முக்கிய வேலைகளில் கோட்டை விட்டுற கூடாது. சரிதானே, பாமரன் சார்.
அதுசரி...இது பத்தி நமக்கு ஒன்னும் தெரியாது....
jetli, I thought of starting a discussion forum in my blog. its going on good. ஒண்ணும் சொல்லாம போனால் எப்படி?
எனக்கும் இது நம்ம சித்ராக்கா ப்ளாக்தானா என சந்தேகம் வருகிறது
மிகபெரிய விஷயத்தை விவாத பொருளாக எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
//சிறு வயதிலேயே குழந்தைகள் தன்னிச்சையாக செயல் பட பழகி கொள்வதும் அவர்களது emotional உணர்வுகளை அவர்களே சமாளிக்க பழகி கொள்வதும் சமுதாயத்தில் இன்னும் சில வருடங்களில் அதன் பாதிப்பு தெரியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.//
பெண்கள் வேலைக்கு போவதால் குழந்தை வளர்ப்பில் பாதிப்பு இருக்கும் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது. சிறு மாற்றம் வேண்டுமானால் இருக்கலாமே ஓழிய பெரிய பாதிப்பு ஓன்றும் இருக்காது
இதில் எத்தனை குழந்தைகளுக்கு எமோஷனல் உணர்வுகளை சமாளிக்க பெற்றோர்கள் உதவுகிறார்கள் என பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
குழந்தைகள் கொடிகளை போல் வளர்கிறார்கள். பெற்றோர்கள் அதன் வேர்களை தாங்கி நிற்கும் தளம் அவ்வளவுதான். மற்ற படி கொடிகள் எதை பற்றுகிறதோ அதன் போக்கிலேயே வளர்கிறது/வளர்கிறார்கள்.
லெமூரியன்.// என்னவோ சொல்றீங்க...!
எங்களுக்கு ஒன்னும் பிரச்சினை கிடையாது...
புள்ளைங்க(பெண்கள்) வேல பாக்கட்டும்.நாங்க வீட்டை கவனிச்சிக்கிறோம்..!//
வீட்டு வேலை ஒன்னும் அவ்ளோ ஈசி இல்ல சார் .
சித்ரா மேடம்
//இது பெண்களின் சாதிக்கும் பலத்துக்கும் ஆண்களின் ஒத்துழைப்பு பலத்துக்கும் உள்ள சவால்.//
ஆண்கள் ஒத்துழைப்பு எல்லா விதத்திலயும் குடுக்கணும் , மாச பட்ஜெட் சம்பளத்துல (மனைவியின் சம்பளம் )மட்டும் இருக்ககூடாது - இது என் கீழ் வீட்டு அனுபவம் .
நல்ல ஆழமான விடயத்தைத் தொட்டிருக்கிறீர்கள்.சித்ரா. உங்கள் பதிவுகளிலிருந்து மாறுபட்டு நிற்கிறது.அதற்கு முதலில் வாழ்த்துகள். வெளிநாடோ, உள்நாடோ ,தாய் வேலை செய்வதன் விளைவை முழுக் குடும்பமும் அனுபவிக்க வேண்டித் தான் இருக்கிறது. Economist இல் நீங்கள் படித்த வரிகள் அத்தனையும் உண்மை.
வெளிநாட்டில் அதன் பாதிப்பு மிக்க அதிகம். ஏனெனில் அவர்கள் பாட்டா,பாட்டிகளின் உதவி இல்லாதவர்கள்.
பிள்ளைகள் செய்யும் தப்புக்களை ஒரு தாயால் மிக இலகுவாகக் கண்டு கொள்ள முடியும். அதை முளையிலேயே கிள்ளியெறிய சந்தர்ப்பம் கிடைக்கும். அதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். மற்றும் வேலை செய்து களைப்புடன் வீடு வரும் போதும் அவர்களுக்கு பிள்ளைகளுடன் சேர்ந்து இருக்கும் நேரம் குறைந்துவிடுகிறது.இதனால் பிள்ளைகளின் மனக் கவலைகளை உடனுக் குடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம்களும் குறைகிறது. இதன் விளைவுகள் நிச்சயம் வருங்கால சமுதாயத்தில் எதிரொலிக்கத் தான் செய்யும்.
வெளிநாட்டில் கணவர்கள் வீட்டு வேலைகளை ( சமையல் உட்பட ) மனைவியுடன் பகிர்ந்து கொண்டு இதன் விளைவுகளைக் குறைக்கிறார்கள். இந்தியாவில் நம்மவர்களிடையே இது மிக அரிது என்று தான் நினைக்கிறேன்.
நமக்கு காமெடி தாங்க நல்லா வரும் ......
சித்ரா ஜாலிய விட்டுவிட்டு சீரியஸ் மேட்டருக்கு தாவிட்டிங்க போல....
இந்திய நிறுவனங்களும் அலுவலகத்திலேயே டே கேர் செண்டர் வைத்துக் கொடுத்தால் மிகவும் நல்லது. முன்பு ஒரு ஆர்ட்டிக்கிள்ல் காருக்குள்ளேயே பிள்ளைகளை விட்டு விட்டு அலுவலகம் செல்வதாகப் படித்தேன். அது கண்டிப்பாக பிள்ளைகளின் மன நிலையை பாதிக்கும்.
இங்கயும் பெண்கள் முன்னேறிகிட்டிருக்காங்க..ஆனா அங்க உள்ள அளவு வருமான்னு தோனல...
//பின்னூட்டத்தில், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.//
பெரியவங்க பேசுற இடத்திலே இந்த சின்ன பையன்னு என்ன வேலை.. நான் கருத்துதான் சொல்லுறேன் நம்புங்க
பிரச்சனைகளில் பிறந்து, பிரச்சனைகளிலேயே வாழ்ந்து, பிரச்சனைகளினாலயே இறப்பது தான் மனிதர்களின் நியதி. சவாலே சமாளி என்பதெல்லாம் மிகப் பெரிய வார்த்தை. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பொருந்தி வராத வார்த்தை.
Amudha Thamizh: வாழ்க்கை மிகவும் எளிமையானது. இங்கே தீர்வுகள் இருக்குமளவுக்கு சிக்கல்கள் கிடையாது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணப்பொழுதும் புதுமையானது, சுவாரசியமானது. ரசித்து அனுபவித்து வாழ வேண்டியது. மாறுபட்ட பரிணாமங்களை ஒவ்வொரு நிமிடத்துளியும் அறிமுகம் செய்யும் இந்த வாழ்க்கை மிகவும் இனிமையானதொன்று. இங்கு துன்பமும் இனிமையே... -selva annaa WALLla RAGHAV ezhdhiyadhu...
In the past 50 years the women from middle class and upper class has started to work,but the lower class women are working from king's samaram time.
ஏம்மா எதோ யூஎஸ்லேந்து 5லட்சம் பேர் வேலைபோய் இந்தியா வாராங்கலாமே ,உண்மையா?
நீங்க எப்போ வருவீங்க?
பெண்களின் வளர்ச்சிக்கு ஆண்களின் உதவியும் உந்துதலும் கிடைக்காமல் இல்லை.என்றாலும்...!
காப்பகக் குழந்தைகளின் மனதில் ஏக்கமும் சேர்ந்தேதான் வளர்கிறது.
சித்ரா,
50 வருஷத்துக்கு பிறகு....இருந்தா அப்போ கருத்துச் சொல்லவா?
ஏன்னா...இன்னும் 10 வருஷ காலத்துக்குப் பிறகு குழந்தை பெத்துக்குவாங்களா என்பதே விவாதத்திற்கு விட வேண்டிய அவசியத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துட்டீங்களே.
இந்தியாவுல இந்த அளவுக்கு இல்லன்னாரும் சில கார்ப்பெரட் கம்பெனிகள் பண்றதுண்டு ஆனா ரொம்ப குறைவு, இப்பத்தான் பொண்ணுங்க வேலைக்கே போக ஆரம்பிச்சுருக்காங்க. நீங்க சொன்னமாதிரி வரனும்னு இங்க ரொம்ப வருடம் டீச்சர்...
முதல் முறையாக முழுமையாக அத்தனை பின்னூட்டங்களையும் பொறுமையாகப் படித்தேன்.. பதிவை விடவும் கூடுதலாய் இடையிடையே உங்கள் கருத்துக்கள் நிறைய யோசிக்க வைத்தன. இது ஒரு சவால்தான் இந்தியாவில் .. அதுவும் எனக்குத் தெரிந்த தமிழ் நாட்டில்.. வேலைக்கு வருகிற பெண்களிடம் பேசினால் கிடைக்கிற அபிப்பிராயங்கள் பல நேரங்களில் தூக்கி வாரிப் போடும் அளவு அதிர்ச்சி.. நாம் நம் மன நலன் போஷிக்க வேண்டிய கட்டத்தில்தான் இன்னும் இருக்கிறோம்..
தமிழ்ப்பெண்கள்
Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/
Foolowers100 ஐ தானியமைக்கு வாழ்த்துக்கள் மேடம். உங்களோட வளர்ச்சி "வி"வேகமானது !!
வாழ்த்துக்கு மிக்க நன்றி, கேசவன் சார். நான் இப்போதான் கவனிச்சேன். சந்தோஷமா இருக்கு.
100வது Followers, வாழ்த்துக்கள் சித்ரா!!
thanks, SUFFIX
//வெளிநாட்டில் கணவர்கள் வீட்டு வேலைகளை ( சமையல் உட்பட ) மனைவியுடன் பகிர்ந்து கொண்டு இதன் விளைவுகளைக் குறைக்கிறார்கள். இந்தியாவில் நம்மவர்களிடையே இது மிக அரிது என்று தான் நினைக்கிறேன்//
//ஜெஸ்வந்தி சரியாக சொல்லி இருக்கிறார்,
நம் நாட்டவரிடம் ஈகோ ஜாஸ்தி.
குழந்தைகள் சிறு வயதிலேயே குழந்தைகள் தன்னிச்சையாக செயல் பட பழகி கொள்வதும் அவர்களது emotional உணர்வுகளை அவர்களே சமாளிக்க பழகி கொள்கிறார்கள்.
//வீட்டு வேலை ஒன்னும் அவ்ளோ ஈசி இல்ல சார் .
//
//இது பெண்களின் சாதிக்கும் பலத்துக்கும் ஆண்களின் ஒத்துழைப்பு பலத்துக்கும் உள்ள சவால்.//
மதார் அருமையாக சொல்லி இருக்காங்க.
சித்ரா திடீருன்னு இப்படி ஒரு சீரியஸான சவாலை சமாளிக்க சொல்லி எல்லா மண்டையும் கொடையிரீங்க.. இதிலும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவைதான்
இருவரும் வேலைக்குச் செல்லும்,
ஆயாவின் இரவல் உறவில் வளரும்
குழந்தைகளின் வளர்ச்சி சற்று,
மாற்று கம்மியாகத்தான் இருக்கிறது.
தாத்தா,பாட்டி எங்கு இருக்கிறார்கள்?
அவர்கள் தான் முதியோர் இல்லத்தில்
முடங்கி விட்டார்களே!
நெத்தியடி, ராமமூர்த்தி சார்.
அட, நம்புங்க.
///
சரி ஆசை படுரீக
நம்பிட்டேன்
பெண்கள் வேலைக்கு செல்லட்டும் . ஆண்கள் வீட்டில் வீட்டு வேலைகள் செய்யட்டும் . Divya
Post a Comment