Sunday, January 10, 2010

கண்ணா... Happy Birthday, Kanna!

சாலமன் ........... கண்ணா என்று நான் அன்பாய் அழைப்பவர்................என் ஆருயிர் கணவர் ............ ஜனவரி 12, பிறந்த நாள் கொண்டாடுபவர்.
 HAPPY BIRTHDAY,  கண்ணா!

"சாலமன்  பாவம்" என்றும், "சாலமனுக்கு  கண்டம் திருநெல்வேலியில் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்திருக்கு. தெரியாமா போய் மாட்டிகிட்டார் " என்றும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் சிலர்.. ................

நம்பினா நம்புங்க ........ பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம், கல்யாணத்துக்கு முன் சரியான கட்டுப்பெட்டி சித்திரமாக தான் இருந்தது. (எனக்கே இதை இப்போ நம்ப முடியலை. நீங்க நம்பவா போறீங்க?)

அம்மாவின் கரிசனையுள்ள கண்டிப்புக்கும் ஊராரின் பொல்லாப்புக்கும் மதிப்பு கொடுத்து, பயம் கலந்த அடக்க சுந்தரியாக வளர்ந்தேன்.  (யாரது அங்கே? "அப்போ அடக்கம் கிலோ ஒரு ரூவாக்கு கிடச்சுதோ என்னவோனு கேட்டது?"  அப்படியெல்லாம் கேக்கப்படாது......)

ஊரில் நாலு பேர் நாலு விதமா பேசிட்டாலே, உலகம் பூரா நம்ம விஷயம் நாறி போச்சுன்னு நினைச்ச கூட்டத்தில் இருந்தவ நான்.  (அவங்க மனதில் இருக்கும் துர்நாற்றம் அவங்க வாயில் வீசுது. அது நம்ம கவலை இல்லன்னு ஒதுக்கிட்டு  போக இப்போ புரியுது.)

அந்த பக்கம் மதுரை, இந்த பக்கம் கன்னியாகுமரி, ஒரு பக்கம் தூத்துக்குடி, மறு பக்கம் குற்றாலம்  - தாண்டாத "உலக" வரைபடத்துக்குள் இருந்தேன். (இப்போ profile photo பின்னால் இருக்கும் மேப் என்ன சொல்லுது என்று யாரும் தலையை சொரிய வேண்டாம். இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.)

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரம்  சாலமன் உடன்  பார்த்து பேசி பழகும் வாய்ப்பு இல்லாமல் இருந்தேன். திருமணத்துக்கு முன் தினம் தான்,  ஹலோ சொன்னதோடு சரி. (அதனால்தான் கல்யாணம் நடந்ததோ? நியாமான கேள்வி.)

கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள்,  Eric Clapton பற்றியும் Martin Scorsese பற்றியும் இன்டர்நேஷனல் அரசியல் பற்றியும் சாலமன் பேச ஆரம்பித்தார். ரஜினியையும் தமிழ் நாட்டு அரசியலையும் நம்மூரு மசாலா பட டைரெக்டர்களையும்   தாண்டி பார்த்திராத நான், அமைதியாய் இருந்தேன்.
தெளிந்த நீரோடையாய் சலனமின்றி என் முகம் - அறியாமையில் .
தமிழ் படத்தில் வருமே: முக்கிய கதா பாத்திரத்தின் முகத்தில் எரி மலை வெடிக்கும், கடல் கொந்தளிக்கும். அப்படி அவர் முகம், அதிர்ச்சியில் - அப்படித்தான் எனக்கு தோன்றியது.
ஒரு ஆப்ப சோப்பையை கட்டிகிட்டோமேனு  அவர் உள்ளுக்குள்ள feel பண்ற மாதிரி இருந்துச்சு.  அழுகுணி நடிகை மாதிரி அழ தோணுச்சி.
(டொயெங் டொயெங் ..... வீணை மூசிக் கேட்டுச்சு. சோக பாட்டு  டைம்.)

ஆனால் அவர், ஒரு புன்முறுவலுடன், என்னை பாத்து - ஆமாங்க, இந்த அசடை பாத்து:
"I love you" என்று சொல்லிவிட்டு நெத்தியில் முத்தம் இட்டார்.
ரொம்பவும் பொறுமையாக, "எனக்கு தெரிந்ததை பிடிச்சதை சொல்றதை விட, உனக்கு பிடிச்சதை சொல்லு. கேக்குறேன்." என்றார். இப்போ நிஜமாவே என் கண்ணில் தண்ணீர்.
(ஸ்டாப் த  டொயெங் டொயெங் வீணை மூசிக். இது,  டூயட் டைம் .... டூயட் டைம்..... டூயட் டைம்......)

கொஞ்சம் கொஞ்சமாக என் ஆர்வத்தை தூண்டும் விதமாக நடந்து கொண்டு, என் குறுகிய உலகத்தின் எல்லை கோடுகளை பெரிதாக்கினார். அடடா, உலகம்னா பாளையங்கோட்டையில் எனக்கு  தெரிந்த நாலு தெருக்கள் மட்டும் இல்ல, தமிழ் சினிமா உலகம் மட்டும் அல்ல, அதையும் தாண்டி  ரசிக்க தெரிஞ்சுக்க இவ்வளவு விஷயங்கள் இருக்கானு ஆச்சர்யப்பட்டேன்.

அவருக்கு, நான் இதயம் என்றால், நண்பர்களும் புத்தகங்களும் இரண்டு கண்கள் என்பதை சில நாட்களிலேயே புரிந்து கொண்டேன். (என் மூளை அப்போ அப்போ  வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சிரும் போல.....நல்ல வேளை - நான் அவர் மூளை இல்லை.)

 தன் நண்பர்களை அறிமுகப் படுத்தி வைத்தார். ஒரு இள வயது ஆண் மகனை பார்த்து புன்னகைத்தாலே, அது காதல்தான் - ஒரு ஆணுடன் தோழமையாய் பழகுவதால், ஒரு பெண் தனக்கு இன்னலை தான் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து கொள்கிறாள் என்ற நான் அப்போ வச்சிருந்த  இலக்கணங்கள் படி, ஆண்களிடம்  என்ன பேசுவது, எப்படி பழகுவது, எல்லை கோட்டை எங்கு வரைவது, என்று சுத்தமாக புரியாமல், அரண்டு போய் ஒளிந்து கொள்வேன்.  (இதான் girls only school - girls only college மட்டும் போய்  (படிச்சி?!) வந்ததில் உள்ள பாதிப்போ?  சும்மா சொல்லிக்க வேண்டியதுதான்.)

அப்படியும் மீறி பேச வர வேண்டிய வேளையில், மூச்சுக்கு மூச்சு அண்ணா  போட்டு கொள்வேன். தங்கச்சி செண்டிமெண்ட் எத்தனை படத்தில் வொர்க் அவுட் ஆகியிருக்கு. தங்கச்சி என்ற போர்வையில் பாதுகாப்பு வளையம். ("Do not cross the line" என்று எழுதி ஒரு போர்டு மாட்டியிருக்கலாமோ?)
நோட் டு செல்வா அண்ணா:
செல்வா அண்ணா, உங்களை நான்  பாசமலர் மற்றும் கிழக்கு சீமையிலே  பாசத்துல தான் அண்ணான்னு இன்னும் கூப்பிடுறேன்.  கிண்டல் ஆரம்பிச்சுடாதீங்க.

நண்பர்களை நண்பர்களாக பார்க்காமல் அண்ணன்களாக பார்ப்பது என் மனதின் பயங்களை காட்டியது.

எனக்குள் ஒரு மிருகம் தூங்கி கிட்டு இருப்பதாக நம்பி அதை எழுப்பி  விஸ்வரூபம் எடுக்க பெரும் பாடு பட்டார், சாலமன். இந்த  அவிஞ்ச  முட்டையை  பெரிய ஆம்லட் ஆக்க பாக்குராறேனு   தோணிச்சி.  எனக்குள்ளேயே  ஒளிந்து கொண்டிருந்த என்னை தேடி, எனக்கே அடையாளம் காட்டி கொடுத்தார். புதிய பிறவியாக நான் -------------- (ஐ.... இந்த இடைவேளைக்கு அப்புறம் வர சாட்டை ராணி ரோல்  நல்லா தான் இருக்கு.)

உறிச்சாத்தான் கோழி, குழம்புக்கு ஆகும்; புரிஞ்சாத்தான் தோழி, கதைக்கு ஆகும் என்று தெரிஞ்சிகிட்டேன்.
I came out of my shell.

நட்பின் உன்னதமே, "ப(இ)ச்சை" உணர்வுகளையும் தாண்டி உயர்ந்த இடத்தில் இருப்பது - நம் மனதும் எண்ணமும் தூய்மையாய் இருந்தால் போதும்.
வேண்டா நட்பிடம் விலகி நிற்பதில் தப்பில்லை.
நட்பு ஆணிடம் ஒரு விதம் பெண்ணிடம் ஒரு விதம் என்று பிரிந்து திரிந்து வருவதில்லை - A good friend is a good friend, always. மற்றவர்கள் தெரிந்தவர்கள் - வெறும் acquaintances.
வாழ்க்கையில் உற்சாகமாக நாம் இருக்க, வாழ்க்கை கலகலக்க நண்பர்கள் வருகிறார்கள் -
ஆதாயம் இருந்து வருவது நட்பே அல்ல . நெருங்கிய நண்பர் என்றால்  உதவி என்பது கேக்காமலே வரும்.

அவர் நண்பர்களில் சிலர், அவரை விட எனக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். புதிய நண்பர்களையும், ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் கடவுள் தந்தார். பெருமித சிரிப்புடன் , "I have created a monster" என்று ஒரு நாள், சாலமன்  சொன்னார்.

ஒரு முறை, எனது இ-மெயில் id யை எப்படியோ நடராஜ் என்பவர் கைக்கு கிடைக்க,  தொடர்ந்து மின்-அஞ்சல்கள் அனுப்பி, "தொல்லை" கொடுக்க ஆரம்பித்தார். என்னை சிட்டு என்று குறிப்பிட்டு, தன்னை நட்டு என்று நான் குறிப்பிடும் படியும் எழுதி தள்ளுவார். என்ன என்னவோ "கிறுக்கி" தள்ளியிருப்பார். நானும் பதில் அனுப்பாமல், delete செய்தாலும், நிறுத்தவில்லை. நான் சாலமன் இடம் புலம்ப, " என்னை விட எவ்வளவு அழகாக ரசிச்சு கடிதம் எழுதுறான். உனக்கு போர் அடிக்குதுனு சொன்னியே. பதில் எழுது. உனக்கு வேடிக்கையா டைம் பாஸ் ஆகும். வேணா முதல் பதிலுக்கு நானும் உதவி செய்யவா?" என்று  சளைக்காமல் கிண்டல் செய்தார். அவரை முறைத்து கொண்டே, "Spam" என்று நடராஜாவின்  மெயில் id யை ரிப்போர்ட்  செய்த பின், அந்த தொல்லை விட்டது. நான் எதை பற்றியும் யாரை பற்றியும் மனம் விட்டு பேச முடியும், என் தோழர் கண்ணாவிடம்.

இது ஒரு புறம் இருக்க, அமெரிக்கா வந்த புதிதில்,  அடுத்தாத்து அம்புஜங்கள் சிலர் (வேற யாருங்க, நம்ம இந்திய பெண்மணிகள் சிலர்தான் - எல்லோரையும் குறை சொல்ல மாட்டேன். சிலரே சிலர்தான்.) , என்னை பற்றி தவறாக பேசுவது என் காதுக்கு வந்த போது, என்னை புரிந்திருக்க வேண்டிய தோழிகள் சிலரே இப்படி பேசுகிறார்களே   என்று வருத்தப்பட்டேன். "குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் பேச்சுக்கு நீ ஏன் வருத்தப் பட வேண்டும்?      I trust your love for me. நீ அவங்க பேசுறதை பத்தி  கவலை படாதே. சந்தோஷமா இரு." என்றார்.    போங்கடி நீங்களும் உங்க நட்பும் என்று ஊதி தள்ளி விட்டேன். அவர், அப்படி என்னை சரியாக direct பண்ணாமல் இருந்திருந்தால், எத்தனை நல்ல நண்பர்களை, இந்த உள்ளூர வயித்தெரிச்சல் கோஷ்டிகளுக்காக,  நான் இழந்திருப்பேன்.

2006 - 2007 இல், Blog concept, வந்த புதிது.  எனக்கு blogging  என்றால் என்ன என்றும் தெரியவில்லை, புரியவில்லை. அதனால் interest உம் இல்லை. இருந்தும் என் பெயரில், அவரே ஜனவரி 2007 இல், blog create செய்து வைத்தார். கிட்ட தட்ட மூன்று வருடங்கள் கழித்து (சரி, சரி, ரெண்டே முக்கால் வருடங்கள்) 2009 October இறுதியில், நான் ப்ளாக் எழுத ஆரம்பிக்கும் வரை, என் மீதும் என் வெட்டி பேச்சு திறமை  மீதும் நம்பிக்கையுடன் காத்திருந்தார். blog உலகில் எனக்கு புதிய நண்பர்கள் கிடைக்க, என்னை விட அதிக சந்தோஷத்தில் இருக்கிறார், என் ஆருயிர் நண்பர், சாலமன்.

பின் குறிப்பு:

என் நண்பருக்குள் இருக்கும் என்  கணவர் சாலமன்: இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்றா? நம்ம கணவர் அலாரம் அடிக்குதே.....ஓ. ..... இந்த மாதம் நம்ம திருமண நாளும் வருது.  ......... gift ..... gift ......
எனக்குள் இருக்கும் அவரின் மனைவி: இப்படி இப்படி நீங்க ரியாக்ட் பண்ணிதான் மொத்த அனுதாப ஓட்டும் உங்களுக்கு கிடைக்குது. கண்ணாஆஆஆஆஆஆஆ  .................



146 comments:

அரங்கப்பெருமாள் said...

May this special day bring you many pleasures and surprises.

சங்கர் said...

சாலமனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சரி சரி , அந்த கேக்கை ஒழுங்கா அனுப்பிவையுங்க

ஜெட்லி... said...

//உறிச்சாத்தான் கோழி, குழம்புக்கு ஆகும்; புரிஞ்சாத்தான் தோழி, கதைக்கு ஆகும் என்று தெரிஞ்சிகிட்டேன்.

//
சூப்பர்...
நீங்க தமிழ் படத்துக்கு பஞ்ச் வசனம் எழுதுனா..
எங்கையோ போய்டுவிங்க...

ஜெட்லி... said...

சார் இவ்ளோ நல்லவரா.....
அவர் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா தான் அவர் படுற கஷ்டம் எங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்.....

:))

sathishsangkavi.blogspot.com said...

சாலமனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Chitra said...

Thank you very much, Perumal sir.

Chitra said...

நான் செய்த கேக் மேல என்ன நம்பிக்கையா ஆசையா கேக்குறீங்க, சங்கர். கொடுத்துட்டா போச்சு.

Chitra said...

ஜெட்லி, நீங்க இப்போவே உங்க விமர்சனத்தை எழுதலாம். அப்புறம், படத்தை பாத்துட்டு விமர்சித்து...... வேணாம், அழுதுடுவேன்........ :-)

Chitra said...

jetli, அவர் எழுதமா இருக்கணும் என்கிறது என் பிரார்த்தனை. ஹி,ஹி,ஹி,.....

Chitra said...

மிக்க நன்றி, சங்கவி.

Unknown said...

சாலமனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Chitra said...

வாழ்த்துக்கு நன்றி, முகிலன் சார்.

goma said...

ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின் ஒரு ஆண் என்பதை அழகாக நிரூபித்து வருகிறார் சாலமன்.பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள்.

goma said...

ஒரு கல்லை எப்படிச் சிற்பியின் லாவகத்தோடு செதுக்கியிருக்கிறார் சாலமன்!!!!!

சித்ராவைச் செதுக்கிய நல்ல சிற்பி!

Rekha raghavan said...

சாலமனுக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். கலகலப்பான பதிவை போட்டு அசத்தறீங்க.

ரேகா ராகவன்.

Chitra said...

கோமா மேடம், உண்மை. உண்மை. உண்மை. உங்கள் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. எனக்கு இறைவன் தந்த வரபிரசாதம், என் கண்ணா.

Chitra said...

ரேகா, என்னை இவ்வளவு தூரம் நல்ல விதத்தில் மாற்றியவருக்கு, இந்த கலகலப்பான பதிவுதான் வாழ்த்து மடல். :-)

அண்ணாமலையான் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Chitra said...

இனிமையான வாழ்த்துக்கு நன்றி, அண்ணாமலையான் சார்.

கலையரசன் said...

//முக்கிய கதா பாத்திரத்தின் முகத்தில் எரி மலை வெடிக்கும், கடல் கொந்தளிக்கும். அப்படி அவர் முகம், அதிர்ச்சியில்//

ஆகா/... அடி பின்றீங்க!! உங்க கைப்புள்ள கண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!!!

Prathap Kumar S. said...

ஹஹஹ செம காமெடியா எழுதியிருக்கீங்க... உங்கள் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எப்படி இருந்த நீங்க எப்படி ஆயிட்டீங்க...? சாலமன் சாருக்கு ஒரு ஜே...

கண்ணா.. said...

//அந்த பக்கம் மதுரை, இந்த பக்கம் கன்னியாகுமரி, ஒரு பக்கம் தூத்துக்குடி, மறு பக்கம் குற்றாலம் - தாண்டாத "உலக" வரைபடத்துக்குள் இருந்தேன்//

:)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. சாலமன்

vasu balaji said...

சாலமனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளும் உங்கள் திருமண நாள் வாழ்த்துகளும். அருமையா எழுதுறீங்க.

ரோஸ்விக் said...

அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதை விட... உங்களை, உலகத்தை புரிந்துகொண்ட... தொடர்ந்து உங்களுக்கு பக்க பலமாக இருக்கும் அந்த அன்பு உள்ளத்திற்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். "-)

Chitra said...

வாழ்த்து சொல்லிய கலையரசனுக்கு நன்றி, நன்றி, நன்றி.

Chitra said...

எப்படி இருந்த நான் எப்படி ஜே ஜே னு மாறிட்டேன், நாஞ்சிலாரே. வாழ்த்துக்கு நன்றி.

கண்ணா.. said...

வாங்கடா கலை, நாஞ்சிலு,

இப்பிடி அமீரக குருப்பெல்லாம் இங்க ஆபிஸ் தொறந்த உடனே கமெண்ட் போட வந்தா...நம்ம சித்ராக்கா..நாம ஆபிஸ்ல வேலை செய்யாம இதுதான் பண்ணிகிட்டு இருக்கோம்னு நினைக்க மாட்டாங்க.......

@ சித்ராக்கா..

அது வேறொண்ணுமில்ல..இங்க இப்ப மணி 8...ஆபிஸ் இப்போதான் ஆரம்பிக்கும் ஹி..ஹி...

Chitra said...

என் கண்ணாவுக்கு வாழ்த்து சொல்லிய கண்ணாவுக்கு நன்றி. :-)

Chitra said...

அருமையான வாழ்த்துக்களுக்கு நன்றி, பாலா சார்.

Chitra said...

பாராட்டி வாழ்த்து தெரிவித்த அன்பு ரோஸ்விக் உள்ளத்துக்கும் நன்றி.

Chitra said...

கண்ணா, நீங்க ப்லாக் ஆபீஸ் என்றுதானே சொன்னீங்க. நல்லா கமெண்ட் அடிக்கிற வேலை பாக்குறீங்க. :-)

Unknown said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar said...

சாலமனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரேங்க!! நீங்க எழுதிய விதம் (குறிப்பா அடைப்பு குறிக்குள் எழுதியவை) காமெடி -ஆ இருந்தது. அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துக்களும்

Chitra said...

மிக்க நன்றி, ஜெயா மேடம்.

Chitra said...

மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி, மோகன்.

goma said...

சித்ரா
முதல் எழுத்திலிருந்து முடிவெழுத்து வரை,ஒரு அழகான குறும்பட எஃப்ஃபெக்ட்டில், உங்கள் எழுத்து அனைவரையும் அழகாகக் கொண்டு செல்கிறது.
பாராட்டுக்கள்.
ஃப்ளோ இயற்கையாக வருகிறது.

Chitra said...

கோமா மேடம், நீங்கள் மிகவும் ரசித்து பாராட்டுவது எனக்கு சந்தோஷமாக உள்ளது. நான் ப்லாக் எழுத ஆரம்பித்த நாள் முதலாய் தவறாது வாசித்து உற்சாகமூட்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Mythili (மைதிலி ) said...

கண்ணனுக்கு கண்ணனுக்குன்னு ஐஸ் போட்டது போதும்.. சளி பிடிச்சிக்க போகுது மா... உனக்கு கிபிட் கிடைகிறது இருக்கட்டும்... நீ என்ன கிபிட் வங்கி வச்சிருக்க...அத சொல்லு முதல்ல...(இலவச கிப்டா ..அதான் உம்மா.... டூயட் ரெடி பண்ணியாச்சா ?? ), சாலமனுக்கு என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும். இப்பதான் தெரியுது சாலமன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்னு உன்னை ஒரு monster aakka ...கலக்கு மகளே கலக்கு...

Chitra said...

மைதிலிம்மா,
சனிக்கிழமை special - surprise birthday party arrange பண்ணேன்.
sunday special - அவருக்கு பிடிச்ச items. (லிஸ்ட் போட மாட்டேன்.)
திங்கள் special - ப்லாக் entry.
TUESDAY BIRTHDAY BONUS - இப்போவே சொன்னா, அவருக்கு சுவாரசியம் போய்டும். விட்டுடு.

SUFFIX said...

Solomon the Great!! நண்பர் சாலமனுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், You are so lucky ஆமாம், இவ்வளவு புரிந்துணர்வுடன் ஒரு துணை உங்களுக்கு கிடைத்து இருக்கிறது, அன்பை கொட்டிக் கொடுத்து, தங்களின் மனதை வென்று, நம்பிக்கையை திடப்படுத்தி உள்ளார் சாலமன். Just ignore about the society. Wish you the best to all of you.

Chitra said...

Thank you for your heartfelt wishes, SUFFIX. ரொம்பவே impress ஆகி கமெண்ட் எழுதி இருக்கீங்க. சாலமன் எனக்கு கணவராக அமைந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்றேன்.

Vishy said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.. நேரிலியே பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன், The way he treats his wife in front of others, the way he is being encouraging and supportive, Solomon is a role model for quite a few of us. அதுவும், அவர் செய்யறதை எல்லாம், அவர் wife பாராட்டற மாதிரி பண்றாரே, அதுக்கே அவருக்கு இன்னொரு PhD கொடுக்கலாம்.. Happy Birthday Solo..

தமிழ் உதயம் said...

நெல்லை மாநகரில் தொடங்கி, அமெரிக்க வாழ்க்கை வரை... மகிழ்ச்சியான பயணம்... தொடர்ந்து தொடர மனமார வாழ்த்துக்கள்.

EKSAAR said...

//ஆனால் அவர், ஒரு புன்முறுவலுடன், என்னை பாத்து - ஆமாங்க, இந்த அசடை பாத்து:
"I love you" என்று சொல்லிவிட்டு நெத்தியில் முத்தம் இட்டார்.
ரொம்பவும் பொறுமையாக,//

கௌதம் மேனனின் படம் மாதிரி இருக்கு..

என்னதான் பெண்கள் முற்போக்காக இருந்தாலும் giftஐ ஞாபகப்படுத்துவதில் மட்டும் எல்லாரும் ஒன்றுதான். :( :(
so sad... so sad...
சம்பளம் மிஞ்சுமா?

Chitra said...

ரொம்ப நன்றி, தமிழ் உதயம் சார். தொடர்ந்து உங்களை மாதிரி நல்ல நண்பர்கள் கிடைப்பதால் மகிழ்ச்சி பயணம். கடவுளுக்கு நன்றி.

Chitra said...

விஷி, thats so sweet. I miss the birthday parties we used to have in Texas. I will pass on your comment to Solomon. Thank you very much, buddy.

Unknown said...

@Chitra & Solomon...good read..both of you really complement each other...With wishes and regards..GH

Chitra said...

என்ன கொடுமை சார், இது? நான் gift பத்தி கேக்கவே இல்லையே. நான் மட்டும் gift கொடுக்கலையா என்ன? பின்குறிப்பு வரிகள், நண்பருக்கும் கணவருக்கும் உள்ள தன்மையை சொல்ல எழுதி இருந்தேன். நீங்க தப்பா புரிஞ்சு இருக்கீங்க.

Unknown said...

@Chitra & Solomon...good read...you both really complement each other..With regards and wishes..GH

Chitra said...

Thank you George. Thats so nice of you.

S.A. நவாஸுதீன் said...

அருக்காணியா இருந்த உங்களை சித்ராவா மாற்றிய பெருமை சாலமன் சாரைத்தான் சேரும்போல.

வாழ்த்துக்கள் சாலமன் சார். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன் அட்வான்ஸ்.

Chitra said...

ஒரு நிமிஷத்துல, அருக்காணியாய் நினைச்சு பாத்தேன். ஹா, ஹா, ஹா,.......அந்த அளவுக்கு மோசம் இல்ல, சார். நீங்க வேற....... ஹா, ஹா, ஹா,.....
வாழ்த்துக்களுக்கு நன்றி. :-)

Chitra said...

FROM DINESH: (via e-mail)

The way you have drafted starting to finish Chitra is quite amazing... amongst several work I started reading; without distracting to other work I got into the blog so involvingly... Wonderful; Keep up the great work... 3 Cheers to Solo...

Happy Anniversary...

Chitra said...

Dinesh, Thank you, நண்பா...... என்னோட முன் கதை சுருக்கம் அவ்வளவு involving ஆ இருந்துச்சா? என்னவோ போங்க.
வாழ்த்துகளுக்கு நன்றி.

சி. முருகேஷ் பாபு said...

அட... நம்மூரு புள்ளைக்கு இம்புட்டு அறிவானு பொறாமைப்படுற... சாரி, பெருமைப்படுற அளவுக்கு அசத்தலா எழுதியிருக்கீங்க! நானும் திருநெல்வேலிக்காரந்தான்... சேவியர்ஸ் காலேஜ்! சாலமனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Chitra said...

நம்மூர்காரர் வாழ்த்திட்டார், மக்கா. முருகேஷ் சார், மரியா கான்டீன் நினைவு வச்சுரிக்கீகளே. சூப்பர்.

Dr.Rudhran said...

best wishes for a hppy anniversary celbration

ஆதி மனிதன் said...

//இது ஒரு புறம் இருக்க, அமெரிக்கா வந்த புதிதில், அடுத்தாத்து அம்புஜங்கள் சிலர்...//

இதே அனுபவம் என் மனைவிக்கும் முதல் தடவை U.S. வந்தபோது ஏற்பட்டது.

புலவன் புலிகேசி said...

சாலமனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். கேக் குடுப்பீங்களா???

ஹுஸைனம்மா said...

//உறிச்சாத்தான் கோழி, குழம்புக்கு ஆகும்;//

எனக்கும் இந்த அரிய தத்துவம் அபுதாபி வந்ததுக்கப்புறம்தான் தெரிஞ்சுது!! பின்னே? இங்க வந்தப்புறம்தானே நானே சமையல் செய்யவேண்டியிருந்துது!!

//ஊதி தள்ளி விட்டேன்.//

அவங்கல்லாம் அப்படியே பறந்தே இந்தியாவுக்கு வந்துட்டாங்களாமே? ஃப்ளைட் டிக்கட் மிச்சப்படுத்துன புண்ணியம் உங்களுக்கு!!

//அவிஞ்ச முட்டையை பெரிய ஆம்லட் ஆக்க பாக்குராறே//

//சிரிப்புடன் , "I have created a monster" என்று ஒரு நாள், சாலமன் சொன்னார்.//

;-D


மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள்!!

சத்ரியன் said...

// நட்பு ஆணிடம் ஒரு விதம் பெண்ணிடம் ஒரு விதம் என்று பிரிந்து திரிந்து வருவதில்லை //

சித்ரா,

”நச் n டச்”

அண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளும்,

தம்பதியருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகளும்.

Priya said...

தலைப்பு அசத்தல், ஏன்னா நானும் என்னவரை செல்லமா கண்ணா என்றுதான் அழைப்பேன்.

நல்லா எழுதியிருக்கீங்க, அப்புறம் உங்க அவருக்கு என்னோட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Enjoy!!!

வால்பையன் said...

எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்!
கையோடு ஒரு ப்ளாக் ஆரம்பித்து ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தில் மெம்பராக சொல்லுங்கள், உங்ககிட்ட மாட்டிகிட்டு ரொம்ப கஷ்டப்படுறார்னு நினைக்கிறேன்!

வால்பையன் said...

உங்களுக்கும் உங்கள் சக”பாதி”க்குமான உறவை நகைச்சுவையாக சொன்னாலும், வெகு நேர்த்தியாக இருந்தது! வர இருக்கும் திருமண நாளுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்!

Romeoboy said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Chitra said...

Thank you very much, Dr.Rudhran.

Chitra said...

ஆதி மனிதன் சார், இந்த மனுஷிகள் அமெரிக்காவில் இருந்தால் என்ன? அமிஞ்சகரையில் இருந்தால் என்ன?
திருந்தவே மாட்டாங்களா?

Chitra said...

யாரங்கே, புலவருக்கு ஒரு முக்கோண இனிப்பு வில்லை "கேக்"காமலே கொடுங்க............

Chitra said...

”நச் n டச்” வாழ்த்துக்களுக்கு நன்றி, சத்ரியன் சார்.

Chitra said...

same feelings, தோழி பிரியா. :-)
அசத்தலான வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

Chitra said...

உங்கள் நேர்த்தியான வாழ்த்துக்களுக்கு நன்றி, வால்பையர்

Chitra said...

thank you, Romeoboy.

வால்பையன் said...

//வால்பையர் //

இந்த “ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு” யாருக்கு வேணும்! ஒழுங்கா வால்பையன்னு கூப்பிடுங்க!

மீன்துள்ளியான் said...

வாழ்த்துக்கள் உங்க கண்ணனுக்கு சித்ரா ..

Chitra said...

ஓகே,ஓகே, ஓகே, வால் பையன் ன் ன் ன் ன் ன் ன் ன் ன் ன் ...........

Chitra said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க......... மீன் துள்ளியான்.

Ramesh said...

வாழ்த்துக்கள் ........ அவருக்கு.
இப்ப போறன் பிறகு வாறன் பரிசுகளோடு

Chitra said...

நன்றி, வாழ்த்துக்களுக்கு....... special thanks, பரிசுகளுக்கு. வாங்க, வாங்க - பரிசுகளோட வாங்க. டெம்போ போதுமா, lorry உக்கு சொல்லவா? ஹா, ஹா, ஹா......

ரிஷபன் said...

நீங்க என்னதான் கலாய்ச்சு எழுதியிருந்தாலும் உள்ளுட ஓடுகிற பிரியம் பச்சுனு தெரியுது.. மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ்.. கடைசி வரை இந்த அற்புத நேசம் நிலைச்சிருக்கட்டும்..

Chitra said...

உங்களின் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி, ரிஷபன் சார்.

Chitra said...
This comment has been removed by the author.
ISR Selvakumar said...

ஹாய் தங்கை,
உன்னுடைய நண்பர் சாலமனுக்கும்
உன்னுடைய கணவர் கண்ணாவுக்கும்
பிறந்தநாள் வாழ்த்துகள்!

பெரிய ஆள்தான் நீ!
வாழ்த்து சொல்லுகிற சாக்கில் பிரமாதமாக எழுதக் கூடிய ஆள் என்று நிருபித்திருக்கிறாய்.

இதுதான் உன் கண்ணாவுக்கு நீ கொடுத்திருக்கிற பிறந்தநாள் பரிசு.

உங்கள் இருவருக்கும் கடவுளின் ஆசிர்வாதங்களும், இந்த பாசமலரின் வாழ்த்துகளும் என்றென்றும் உண்டு!

Chitra said...

அண்ணாத்தையை எங்கே காணோமே என்று நினைச்சேன். உங்கள் பிரார்த்தனைகளும், ஆசிர்வாதங்களும் பலிக்கின்றன. வாழ்த்துக்களுக்கு நன்றி, செல்வா அண்ணா.

Alarmel Mangai said...

Chitra,

We have seen dear Solo for so many years. He is not only a very good husband, but also a doting father and above all he is a wonderful human being.

Solomon Chitravai melum melum pattai theeti jolikka seyattum.

Happy Birthday Dear Solo

நசரேயன் said...

சாலமன் அண்ணாச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. இன்றைக்கு ஒரு நாளாவது நல்ல ஹோட்டல போய் சாப்பிடவும்

Chitra said...

FROM SUNDAR MADURAIDURAI: (via e-mail)


"சித்ரா, உனக்குள்ள திற்மை கண்டு வியந்தேன்... நீ சொன்னது சம்பவங்கள் அல்ல..சரித்திர சங்கதிகள்.நான் 'கண்ணா'வை வாசிக்கவில்லை...உனது வரிகளில் வாசம் செய்தேன்.... சாலமனைக் கரம் பற்றிய நீ, நீடு வாழ்வாய்...சாலமனுக்கு என் அன்பான வாழ்த்துகள்....."

Chitra said...

ஆமாம், கண்ணா. ஹோட்டல் பில்லை நம்ம நசரேயன் சார் கட்டிடுவார். அவர் treat.
:-)

Chitra said...

சங்க காலத்து காவிய காதல் அளவுக்கு வாழ்த்திட்டீங்க, மதுரை துரை மன்னர் அவர்களே.

Chitra said...

அம்மு, ப்லாக் உலகில் நான் பட்டை தீட்டப்பட முக்கிய காரணங்களில் ஒருவரான அன்பு தோழியே, நீங்க சொன்னது மிகவும் சரி.
வாழ்த்துக்கு நன்றி பல.

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்... சித்ரா... ரெண்டு பேருக்கும்..

Chitra said...

thank you, kalakalapriya - from both of us.

prince said...

...En iniya pasamalargalukku intha sakotharanin iniya thirumana naal nalvazhthugal............

Chitra said...

முதல் வருகைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும், நன்றி இளவரச அரசே!

Paleo God said...

"I have created a monster" //

சரிதான்..::))

Thenammai Lakshmanan said...

அட இன்னைக்குத்தான் சாலமோனுக்கு உங்க கண்ணாவுக்கு பிறந்த நாளா சித்து

உங்க திருமண நாளுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள் டா சித்து வாழ்நாள் பூராவும் இதேபோல சந்தோஷமா இருங்க

Chitra said...

உங்கள் கலக்கல் கமெண்ட் உக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றிங்க, ஹுசைன் அம்மா.

Chitra said...

நன்றிங்க, பலா பட்டறை.

Chitra said...

நன்றிங்க, தியாவின் பேனா.

Chitra said...

தேனம்மை அக்கா, உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் மிக்க நன்றி.

பின்னோக்கி said...

உங்களவருக்கு வாழ்த்துக்கள்.

Chitra said...

மிக்க நன்றி, பின்னோக்கி.

Jaleela Kamal said...

சித்ரா பாளையங்கோட்டையிலிருந்து அமெரிக்கா வாழ்க்கைய ரொம்ப அருமையான முறையில் சொல்லி இருக்கீங்கள்.

சால‌ம‌ன் சாருக்கு பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள்.

என்றும் ச‌ந்தோஷ‌மாய் இதே போல் இருக்க வாழ்த்துக்கள்.

அட‌ என் பிரைட் ரைஸ் செய்ய‌ போறீங்க‌ளா? ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.

Chitra said...

அக்கா, உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றிகள் பல. ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

Jaleela Kamal said...

http://www.arusuvai.com/tamil/experts/3475


சித்ரா இப்ப ஒன்றிரண்டு ரெசிபி போடு கொண்டு தான் இருக்கேன்.

இடையில் அருசுவை கிடைக்காததால் கொடுக்க முடியாமல் போய் விட்டது இந்த லிங்கை கிளிக் பண்ணுங்கள்.

எல்லாமே என்னுடையது தான்

malar said...

,,,ஊரில் நாலு பேர் நாலு விதமா பேசிட்டாலே, உலகம் பூரா நம்ம விஷயம் நாறி போச்சுன்னு நினைச்ச கூட்டத்தில் இருந்தவ நான். (அவங்க மனதில் இருக்கும் துர்நாற்றம் அவங்க வாயில் வீசுது. அது நம்ம கவலை இல்லன்னு ஒதுக்கிட்டு போக இப்போ புரியுது.),,,

இன்று தான் உங்கள் பதிவு படித்தேன்.பல விசயங்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் .

வாழ்த்துகள்

priyamudanprabu said...

சால‌ம‌ன் சாருக்கு பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள்.

Chitra said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும், நன்றி மலர்.
வாழ்த்துக்களுக்கு, நன்றி பிரபு.

எறும்பு said...

I am little late i think... Congrats..


:))

Chitra said...

Better late than never. ......... Thank you, எறும்பு.

ஹேமா said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் உங்கள் துணைக்கும்.

Chitra said...

நன்றி, ஹேமா. தங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

திருவாரூர் சரவணா said...

தமிழ்ப்புத்தாண்டு - சில தகவல்கள்...
மேடம், முதல்ல சாரி கேட்டுக்குறேன். பாலோயர்ஸ் லிஸ்ட்டுல போய் க்ளிக் செய்தப்ப send மெசேஜ் லிங்க் மட்டும்தான் வந்துச்சு. அதனால உங்களுக்கு ஈமெயில் id மட்டும்தான் இருக்குன்னு நினைச்சுட்டேன்.அதனாலதான் உங்க பிளாக்கிற்கு வரலை. நீங்களே invitation கொடுக்குற அளவுக்கு விட்டிருக்க கூடாது. சாரி.

******
சாலமன் சாருடைய பிறந்தநாள் பற்றி தெரிந்ததும் விவேகானந்தர் நினைவும் என் கல்லூரி அனுபவங்களும்தான் நினைவுக்கு வந்தன. உடன் படித்த இரண்டு தோழிகளுக்கு ஜனவரி 12 தான் பிறந்த நாள்.விவேகானந்தர் பிறந்த தினத்தை மனதில் கொண்டு அவர்களுக்கு பரிசளித்தேன். அதைப் பார்த்த வகுப்பில் இருந்த மற்ற தோழிகள் எங்களுக்கும் பிறந்த நாளில் பரிசளிக்கவில்லை என்றால் அவ்வளவுதான் என்று செல்லமாக மிரட்டியது ஒரு ஜாலியான அனுபவம்.

******
பாளையங்கோட்டை என்றதும் பள்ளிக்காலங்களில் அங்கிருந்துதான் வினாத்தாள்கள் வருகிறது என்று சொல்வதால் ஒரு இனம்புரியா வெறுப்புதான் தோன்றும். அது படிப்பை வேப்பங்காயாக நினைத்த அறியா வயசு. ஆனால் இப்போது இந்த எண்ணங்களை பற்றி நினைத்து பார்த்தபோது காமெடியாகத்தான் தோன்றுகிறது.

******
சாலமன் அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க(விவேகானந்தருக்கும் தோழிகளுக்கும் ஏற்கனவே சொல்லிட்டேன்.). தாமதம்னு நினைச்சா பிரிட்ஜுல வெச்சு 2011 ல சொல்லிடுங்க.

Chitra said...

விவேகானந்தர் - ஜனவரி 12 - பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
சரிதானே, சரண். முதல் வருகைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.
பாளையங்கோட்டை மேல் இருக்கும் வெறுப்பு, வினாதாள்களோடு மட்டும் இருக்கட்டும். ஹி,ஹி,ஹி,.....

Jerry Eshananda said...

மாப்பிள்ளைக்கு பிறந்த நாள் வாழ்த்தும்,தங்கச்சிக்கு தமிழர் திருநாள் வாழ்த்தும் சொல்லிக்கிறேன்.

Radhakrishnan said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தங்களின் கணவருக்கு.

பிரமாதமான எழுத்து நடை. நேரில் பேசியது போன்ற ஒரு உணர்வினைத் தந்தது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதைப் போல ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறார் என எண்ண வைத்த அழகிய பதிவு.

நல்ல நட்பை அடையாளம் கண்டு கொள்ள செய்ததும், தங்களுக்கு இருக்கும் ஒரு அளப்பரிய ஆற்றலை உணரவைத்தவர் என்கிற முறையிலும் தங்களின் கணவர் போற்றுதலுக்குரியவரே.

எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்த்திட வாழ்த்துகிறேன்.

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

Sakthi said...

kanna.. happy pongal

Sakthi said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

A FRIEND IS ALWAYS A FRIEND. என்ன ஒரு
பொக்கிஷமான வார்த்தை! தங்கள் கணவருக்கு
என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். உங்கள்
இடுகையைப் படிக்கும் போது தோன்றியது.

'.......இவர் கணவன் என்னோற்றான் கொல் எனும் சொல்"


வாழ்த்துக்களுடன்

ஆர்.ஆர்.

Chitra said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, ராமமூர்த்தி சார். தவமோ வரமோ - எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம் தான். :-)

கமலேஷ் said...

சித்ராக்கா.... சாலமன் அண்ணனுக்கு சுத்தி போடுங்க முதல்ல ...பதிவு படிச்ச எல்லோர் கண்ணும் ௦பட்ருக்கும்....(முக்கியமா என்னோட கண்ணு..) சாலமன் அண்ணனுடைய போட்டோ ஒன்னு போட்ரிந்தா இன்னும் ரொம்ப சந்தோசம் பட்ருப்பேன்....உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

- I think you both made for each other -

Chitra said...

அதானே. போட்டோ போடணும்னு எனக்கு தோணவில்லை, பாருங்க.
உங்களை மாதிரி நல்ல உள்ளங்கள் வாழ்த்தும். கடவுள் அருள்ங்க. கேடு வராது.
" I think you both made for each other - " - Thats so sweet! Thank you.

பித்தனின் வாக்கு said...

பதிவைப் படிக்காமல் தாமதம் ஆகிவிட்டது.மன்னிக்கவும்.
சாலமன் தி கிரேட், யு ஆர் தெ ஹைனஸ் பார் ஹிம்.
நிறைய சந்தோசங்களுடன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சித்தரா. சாலமனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவமில்லை.

Unknown said...

//நண்பர்களை நண்பர்களாக பார்க்காமல் அண்ணன்களாக பார்ப்பது என் மனதின் பயங்களை காட்டியது.
//

நிச்சயமா நண்பர்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே அண்ணன்னு கூப்டுவாங்க...

Unknown said...

//"I have created a monster"//

ஐயையோ புரிலயே..,

then..,

உங்களுக்கு நல்ல கணவர் கிடைத்து இருக்கிறார் வாழ்த்துக்கள்...,

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஐயோ! சித்து!(I want to call you like this,forgive me) வெளியுலகம் போற ஒவ்வொரு தமிழ் பொண்ணுக்கும் இப்புடி ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கும் போலங்க!.நம்ம தான் உலகம் தெரியாம வளந்துட்டம்னு பொண்ணுக்கு சுதந்திரம் குடுத்தா அது சிணுங்குது. சரி உனக்கு ஒரு லெட்சு கெடைக்காமயா போய்டுவார்னு சொல்லுவேன்.உங்க கண்ணாவப் பாத்தா உலகம் அறியாத பொண்ணுகளுக்குன்னே கடவுள் இப்புடி ஆளுகள அனுப்புவார் போல.வாழ்த்துகள்.அன்புடன்,க.நா.சாந்தி லெட்சுமணன்

Chitra said...

சாந்தி அக்கா,

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க. கடவுள் பாத்து பாத்து தான் எல்லா உறவுகளையும் வாழ்க்கை கடலில் பயணிக்க தருகிறார். சிலர், சந்தோஷ கப்பலில் செல்கிறார்கள்; சிலர், நம்பிக்கை தோணியில் செல்கிறார்கள்; சிலர், சோதனை புயலில் மாட்டி கொள்கிறார்கள். காரணங்கள் படைத்தவனுக்கு தான் தெரியும். சரிதானே?

இப்படிக்கு சித்து. (அப்படியே அழையுங்கள். நன்றாக இருக்கிறது.)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் நட்புக்கும் உறவுக்கும் வாழ்த்துக்கள் சித்ரா..
கூட்டுபுழுவிலிருந்து ஒரு பட்டாம்பூச்சி விரிவது போல உங்களைப்பற்றி அழகா எழுதி இருக்கீங்க..

நட்புடன் ஜமால் said...

அடிச்சி ஆடுறதுங்கறது இது தானா

செம போங்க

சாலமன் வாழ்க

நட்பு என்பது பெரும் பலம் அதுவே துணையாக இருந்தால் வேறு இல்லை பலம்.

cho visiri said...

Vaazhththukkall.

Asiya Omar said...

கண்ணா நீ ஜெயிச்சுட்டே ! தலைப்பு நல்ல இருக்கில்ல சித்ரா.வாழ்த்துக்கள்.GOD BLESS YOU.

சி.பி.செந்தில்குமார் said...

அடடா.. இதை மிஸ் பண்ணீட்டேனா.. ஹேப்பி பர்த்டே சாலமன் சார்.( ரொம்ப லேட்டோ..?)

priyamudanprabu said...

ippaththan [padichen kalakala irukkku

( en varumkala manaivikkum ithai mail panniden)

Anonymous said...

உங்க கணவர் ரொம்ப நல்லவரா இருக்கார்..
சந்தோஷமா இருங்க சித்ரா.

நிஷாந்தன் said...

ஆதர்ச தம்பதி சித்ரா- சாலமனுக்கு அன்பான வாழ்த்துக்கள் !

மொழிந்த பொன்மொழிகள் அபாரம். அடிக்கடி பொழிய வாழ்த்துக்கள் ( தொகுத்து வைத்தல் நலம். யார் கணடது, காலப் போக்கில் ஏதாவது ஒரு யுனிவர்சிடியில் பாட நூலாக வைக்கக் கூடிய வாய்ப்பு கூட வரலாம்.)

அன்பு தம்பதியரே, சமயம் கிடைக்கும் போது நம்ம புதுக்கடைக்கும் ( http://nisshanthan.blogspot.com ) வருகை தந்து கருத்தலாமே , இங்கும் உண்டு 100% சேமிப்பு !

Malar Gandhi said...

Good that he introduced blogging world to you. Kudos:)

'nallavelai naan avai moolai illai' was funny.

பாலராஜன்கீதா said...

சாலமன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Asiya Omar said...

சித்ரா,சாலமன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தம்பதிகள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன் !

Anto Rajkumar said...

You are a special couple. Role models for many. You should write more about your special love story. Happy Birthday aththaan.

Rathnavel Natarajan said...

திரு சாலமன் அவர்களுக்கு மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துகள்.
உங்களது வருகை (come back) மகிழ்ச்சி அளிக்கிறது.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

test said...

//உறிச்சாத்தான் கோழி, குழம்புக்கு ஆகும்; புரிஞ்சாத்தான் தோழி, கதைக்கு ஆகும் என்று தெரிஞ்சிகிட்டேன்//
அட அட அட! என்னா வசனம்!
என்னோட படத்துக்கு நீங்கதான் டயலாக்!
மாம்சுக்கு வாழ்த்துக்கள்!

kalps said...

our wishes to solaman sir...chithu kallakitta po.as usual..comedya pesssuvannu therriyum anna ippo superavum un mannasai,mannasil ullathai sollirukka gr8..hope u will make the day more beautiful..have a nice day.:)

kalps said...

our wishes to solaman sir..chithu kallakittapo..unnakku nalla pessatherriyumnu therincha ennaku innaki nee nalla ezuthavum seivannu therinchittathu..short film effcta kudduthitta..have a wonderful day..

சௌந்தர் said...

சாலமன் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.... :))

அமுதா கிருஷ்ணா said...

உலகின் மிக அருமையான ஒரு ஆண்மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சித்ரா..

ஆமினா said...

உங்கள் உணர்வுகளை மதிக்க தெரிந்த உங்கள் நண்பர் சாலமன்க்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாலராஜன்கீதா said...

சாலமன் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்