Monday, March 29, 2010

ஒரு நேர்காணல் (interview)

சென்ற வாரம்: விருது வாரம்.

ஜலீலா அக்கா,  ஆசியா ஒமர்,  ஜெய்லானி,  பிரியா ராஜ் மற்றும் மின்மினி எல்லோரும்: Sunshine Award கொடுத்தார்கள்.
SASHIGA ஒரு விருது: Blog Loving Award  கொடுத்தார்கள். நன்றி.

மேலும்,  SASHIGA அவர்கள் -  பின்னூட்டம் பற்றிய தொடர் பதிவுக்கும், சங்கவி அவர்கள் - பேருந்து காதல் தொடர் பதிவுக்கும்  எழுத அழைப்பு கொடுத்து இருந்தார்கள்.

நான், ப்லாக் எழுத வந்த புதிதில் பேட்டி கொடுத்தது.
http://konjamvettipechu.blogspot.com/2009/11/blog-post_04.html
 அதற்கு அப்புறம், இப்பொழுதுதான் பேட்டி கொடுக்க  நேரம் வந்தது:

விருது வழங்கிய குழுவினர் மற்றும் தொடர் பதிவு குழுவினர் :  வாழ்த்துக்கள், சித்ரா!
சித்ரா:              நன்றிகள் பல.

சங்கவி:    பேருந்து காதல்???
சித்ரா:      மகளிர் பேருந்தில் போய், மகளிர் கல்லூரியில் படித்தவள். மகளிருடன்  தோழமையுடன்தான்  பழகி இருக்கிறேன்.
சங்கவி:     நல்லது. பொதுவாக வரும் பேருந்து காதல் பற்றி  உங்கள் கருத்து?
சித்ரா:       There is difference between lust and love.  அது எத்தனை பேருக்கு புரிந்து, காதல் வந்து இருக்கும் என்று தெரியவில்லை.

சங்கவி:      பேருந்து காதல் இல்லைனா பேருந்து கலாய்த்தல் பற்றி?
சித்ரா:       நான் போன பேருந்தில் வந்த டிரைவர்கள், தாத்தா வயதை உடையவர்கள். அவர்கள் எங்களுக்கு அறிவுரை வழங்கிய வேகத்துக்கு, பேருந்தையும் ஓட்டி இருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம்.
சங்கவி:    கண்டக்டர்கள்?
சித்ரா:      ரெண்டு ஆட்கள்  மாற்றி மாற்றி வருவார்கள்.
                ஒருவருக்கு: நிச்சயமா மூல வியாதி. இல்லைனா, அந்த நேரம் அவர், ஐஸ்வர்யா ராய் அவர்களை தீவிரமாக    காதலித்து விட்டு,   காதல் தோல்வி ஆகி இருந்திருக்க வேண்டும்.  எப்பொழுதும், முகத்தை உர் என்று வைத்து இருப்பார். ஒரே,  லொள், லொள், லொள் மயம்தான்.
அடுத்தவருக்கு:  பவுடர் டப்பா கிட்ட, முகத்தை தாண்டி வருவாயா என்று கேட்டு, முகத்தை விட்டு ரெண்டு இன்ச் நீளத்துக்கு இருக்கிற மாதிரி போட்டு வருவார்.  சென்ட் bottle என்ற பெயரில் ஏதோ ஒரு நாத்த திரவத்தை அடித்து விட்டு வர - நாங்க மூக்கை பிடித்து விட்டு உட்கார்ந்தால்,  இறங்க வேண்டிய ஸ்டாப் வரும் வரை மூர்ச்சையாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலைதான் பெரிதாக இருந்தது.

ஜலீலா அக்கா:  நல்லது.   அடுத்து எந்த விருது வாங்க "உழைத்து" கொண்டு இருக்கிறீர்கள்?
சித்ரா:              நான் இதற்கு எல்லாம் உழைப்பது இல்லை. இது அன்புடன் கொடுக்கப்படுவது.
                         ஆனால், அடுத்து நீங்கள் தரும் விருதை, கலைஞர் அவர்களுக்கு   நடக்க போகும் அடுத்த  (97,634 வது?) பாராட்டு விழாவில் வைத்து கொடுத்தால் , நீங்களே சமைத்து தரும் பிரியாணியை சாப்பிடும்  அளவுக்கு சந்தோஷப் படுவேன்.
  
 ஜெய்லானி:  நீங்கள் ஏன் யாருக்கும் விருது வழங்குவது இல்லை.
சித்ரா:            நமக்கு வாங்கித்தான் பழக்கம். இன்னும் கொடுக்க ஆராம்பிக்கவில்லை. எல்லாம் என் பிறந்த நாள் கொண்டாட்டம் வரும் போது, வச்சுக்கலாம் என்று இருக்கேன்.  பக்கா அரசியல்வாதி பேச்சு என்று நினைக்காதீர்கள். 2016 இல் நானும் முதல் மந்திரி ஆனாலும் ஆய்டுவேன்.   தமிழ் நாட்டு அரசியல் சொல்லி தந்த பாடம் #10234

பிரியா ராஜ்:   இன்னும் விருது வாங்காமல் இருக்கும் பதிவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
சித்ரா:           ஒரே வாரத்தில் ஆறு விருதுகளை வாங்கிய எனது படத்தை வைத்து மூன்று நாட்களுக்கு  பூஜித்து வந்தால், சீக்கிரம் ஒரு விருது பெற்று கொள்ளும்  வாய்ப்பு இருக்கிறது என்று பதிவர் சாஸ்த்திரம் சொல்கிறது.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், இன்னொரு பதிவரும் சித்ரா என்ற பெயரில் இருக்கிறார் - பின்னூட்டம் இடுகிறார்.  ஆனால்,  நான் தான்  profile photo வுடன் வலம் வருகிறேன். குழப்பங்களை தவிர்க்க, சொல்லி விடுகிறேன். 

ஆசியா ஒமர்: சித்ரா, உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல.
மின்மினி:       கொஞ்சம் இல்ல, ஓவரா -  ஓவரா இருக்கு. தாங்க முடியல.

SASHIGA:   பின்னூட்டங்கள் பற்றி?
சித்ரா:           வாழ்த்துரை போன்றது. எனக்கு வரும்:
  :-)  முதல், மிகவும் நீ......ண்..... ட..... கமென்ட் வரை எல்லாவற்றையும் விரும்பி படிப்பேன்.  ஒன்று தெரியுமா? தமிழிஷ் ஓட்டு மற்றும் தமிழ் மணம் பரிந்துரை, மொய் எழுதுற மாதிரி. வாழ்த்துரை சொல்கிறவர்கள் எல்லாம், மொய் எழுதுவது இல்லை. மொய் எழுதுகிறவர்கள் எல்லாம், வாழ்த்துரை சொல்வது இல்லை.  பலர், வாழ்த்துரையும் சொல்வது இல்லை, மொய்யும் தருவது இல்லை.   இருந்தாலும், வரும் அனைவருக்கும் என் நன்றிகள் பல தெரிவிக்கிறேன்.

SASHIGA:  நீங்கள்????
சித்ரா:          நான் வாழ்த்துரை (பின்னூட்டம்) வழங்கும் இடம் எல்லாம், மொய் எழுதும் நோட்டு இருந்தால் மொய் கொடுக்காமல் வருவது இல்லை.  சிலர், எங்கே வைத்து இருக்கிறார்கள் என்று தேட வேண்டியது இருக்கிறது. சிலர், மொய் வேண்டாம். நீங்கள் வந்ததே போதும் என்று இருக்கிறார்கள். எங்கே ஓட்டு பட்டை, எங்கே பரிந்துரை - அது இல்லாமல்,  சும்மா வாழ்த்திவிட்டு எனக்கு திரும்பி வர என் மனதுக்கு "கஷ்டமா" இருக்குனா பாத்துக்கோங்க.

ஆசியா ஒமர், மின்மினி, ஜெய்லானி, ஜலீலா அக்கா, பிரியா ராஜ், சங்கவி,  sashiga: 
உங்கள் "நல்ல" மனது புரிந்து விட்டது, சித்ரா.     வாழ்த்துக்கள்.   உங்கள் பதிவுலக வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை அருமையா சொல்லி இருக்கிறீர்கள்.    பகிர்வுக்கு நன்றி.   :-)     நடத்துங்க, நடத்துங்க......... நல்லா இருக்குதுங்க. ரொம்ப எதார்த்தமாக இருக்கு, சித்ரா.    அசத்தல்.  மனதை நெகிழ வைத்து விட்டீர்கள், சித்ரா.   நல்ல கவிதை - சாரி, பேட்டி.  சே,  நீங்கள் எங்களுக்கு  எழுதும்  பின்னூட்டம் படித்து படித்து .....  எங்களுக்கும் அப்படியே பேச வருது,  சித்ரா  .......
சித்ரா:      :-)))

77 comments:

LK said...

superrrrrrrrrrrrrrr.. pinnetinga ammani

LK said...

moi eluthiachu

ஜெரி ஈசானந்தன். said...

அவார்டுக்கே அவார்டா...

PriyaRaj said...

Congrats on ur Awards ...Interview romba nalla vithyaasama eruku pa...

சைவகொத்துப்பரோட்டா said...

நேர்காணலும் நகைச்சுவையாக
இருக்கிறது!!!
வாழ்த்துக்கள் விருதுகளை அள்ளி சென்றதற்கு.

மைதிலி கிருஷ்ணன் said...

நல்ல கவிதை சித்ரா- சாரி, பேட்டி
எதுக்குமே பிடி குடுக்காம பேட்டி குடுத்திருப்பது சூப்பர். கமெண்ட் போடுறவங்கள கொஞ்சம் கால வாரி விட்ட மதிரி இருக்கு. ஆனா பாரேன் சில இடத்தில வழ்த்தும் சொல்லி மொய்யும் எழ்தினாலும் பத்த மாட்டேங்குது. ரெண்டு தடவ மொய் வைக்க் வேண்டி இருக்கு.. (உன்ன சொல்லலப்பா ... தப்பா நினைச்சிக்காத..) உன்னோட நல்ல மனச திறந்த் காட்டிட்ட.. என்ன ஒரு பில்டப்பு..

Chitra said...

கமென்ட் போடுகிறவர்களின், காலை வாரி விடவில்லை. என் காலை தான் வாரிகிட்டேன். அதெல்லாம், நான் போடுற கமெண்ட்ஸ். மற்றவர்கள், பீல் செய்தால் கம்பெனி பொறுப்பு எடுக்காது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்

வருண் said...

****நான் வாழ்த்துரை (பின்னூட்டம்) வழங்கும் இடம் எல்லாம், மொய் எழுதும் நோட்டு இருந்தால் மொய் கொடுக்காமல் வருவது இல்லை.***

பொதுவாக நம்ம கல்யாணங்களில் பகட்டுக்கும், பெருமைக்கும், லட்சக்கணக்கான பணத்தை செல்வழிச்சு கஷ்டப்பட்டு சிரித்துக்கொண்டு இருப்பார்கள் தாய் தந்தையர். ஒரு நல்ல வாழ்த்தைவிட மொய் எழுதுவதால் அவர்களுக்கு கொஞ்சமாவது உதவமுடியும்னு நம்புறேன்!

ஆனால், இந்த "பின்னூட்ட" விசயத்தில் ஒரு நல்ல பின்னூட்டத்திற்கு (வாழ்த்தோ இல்லை வசவோ) "மொய்"யை விட மதிப்பு அதிகம்னு நம்புறேன் :)

Chitra said...

நிச்சயமாக, வருண். அதனால் தான், எனக்கு பிடித்த பத்து பின்னூட்டங்கள் பற்றிய தொடர் பதிவு எழுத சொன்ன போது, என்னால் எழுத முடியவில்லை. How can I choose only 10? Each and every one is precious.

எப்பூடி ... said...

கலக்குங்க...

நாய்க்குட்டி மனசு said...

ஜாலி சித்ராவின் ஜாலி பேட்டி, வலைப்பூவில் ஜாலி க்கு ஒரு demand இருக்கத்தான் செய்யுது. நமக்குதான் அது வர மாட்டேங்குது. எதையும் நெற்றி சுருங்க பார்த்தே பழக்கம்

S Maharajan said...

நேர்காணல் அருமை!

//2016 இல் நானும் முதல் மந்திரி ஆனாலும் ஆய்டுவேன்//.

உங்கள் ஆசைக்கு என் வாழ்த்துக்கள்
அப்புறம் அக்கா நீங்க முதல்வர் ஆனதும் நம்ம பாளையம்கோட்டை நிரந்திர M.L.A வா என்னையே
promote பண்ணனும்.
வருங்கால முதல்வர் சித்ரா
அக்கா வாழ்க!

ஜெய்லானி said...

//நான் தான் profile photo வுடன் வலம் வருகிறேன். குழப்பங்களை தவிர்க்க, சொல்லி விடுகிறேன்//

//நான் வாழ்த்துரை (பின்னூட்டம்) வழங்கும் இடம் எல்லாம், மொய் எழுதும் நோட்டு இருந்தால் மொய் கொடுக்காமல் வருவது இல்லை. சிலர், எங்கே வைத்து இருக்கிறார்கள் என்று தேட வேண்டியது இருக்கிறது. சிலர், மொய் வேண்டாம். நீங்கள் வந்ததே போதும் என்று இருக்கிறார்கள். எங்கே ஓட்டு பட்டை, எங்கே பரிந்துரை - அது இல்லாமல், சும்மா வாழ்த்திவிட்டு எனக்கு திரும்பி வர என் மனதுக்கு "கஷ்டமா" இருக்குனா பாத்துக்கோங்க.////2016 இல் நானும் முதல் மந்திரி ஆனாலும் ஆய்டுவேன். தமிழ் நாட்டு அரசியல் சொல்லி தந்த பாடம்//

இப்பதாங்க கரெக்டா புரியுது. குவாட்டர், மோதிரம், வேஷ்டி சேலை ஒன்னும் தராமலேயே ஆகிடுவீங்க . ’ஜெ’ க்கு பிறகு வெற்றிடத்தை நிரப்ப நீங்கதான் சரியான் ஆளு. இப்பவே நல்லா பிட்ட போடுறீங்க .தங்க தமிழ் நாட்டை காக்க வந்த வைரத்தாயே (தங்கம் பழசு) வருக!! வருக!!ஜோதிபாசுவை போல் நிலையான ஆட்சி தருக!!(உஸ்..வந்தால் நிதி மந்திரி பதவி எனக்குத்தான். இப்பவே ஐஸ் வச்சுடுறேன்)

மயில்ராவணன் said...

// 2016 இல் நானும் முதல் மந்திரி ஆனாலும் ஆய்டுவேன். தமிழ் நாட்டு அரசியல் சொல்லி தந்த பாடம் #10234
//
எல்லாம் ஒரு ப்ளான் பண்ணித்தான் நடத்திரீகளா...இருக்கட்டும் இருக்கட்டும்...நல்லா இருக்கு பேட்டி :)

Chitra said...

பாருங்க....... 2016 இல், நான் ஆட்சி அமைக்கும் போது என்று சொல்லும் போதே - நிதி அமைச்சர், நெல்லை MLA - அதுக்குள்ளே ரெடி. விட்டா, ஒரே ராஜாங்கமே நடத்திடுவோம் போல......... ஹா,ஹா,ஹா,....

நாஞ்சில் பிரதாப் said...

அய்யோ இவங்களை தட்டிக்கேட்க பதிவுலகத்துல யாருமே இல்லயா???

//அடுத்து நீங்கள் தரும் விருதை, கலைஞர் அவர்களுக்கு நடக்க போகும் அடுத்த (97,634 வது?) பாராட்டு விழாவில் வைத்து கொடுத்தால் , நீங்களே சமைத்து தரும் பிரியாணியை சாப்பிடும் அளவுக்கு சந்தோஷப் படுவேன்.//

இது கலக்கல்

நாஞ்சில் பிரதாப் said...

//ர்டுக்கே அவார்டா...//

கன்னாபின்னா... ரிப்பீட்டே...

அண்ணாமலையான் said...

கலக்குங்க

Chitra said...

பிரதாப்: ////அய்யோ இவங்களை தட்டிக்கேட்க பதிவுலகத்துல யாருமே இல்லயா???///

பதிவுலகில், எல்லோரும் தட்டி கொடுத்து, ஊக்கப்படுத்தியதால் வலம் வருகிறேன். Thank you, everyone. எல்லா புகழும் இறைவனுக்கே!

கமல் said...

ஓடி வந்து பார்த்தால் எல்லாம் ஒரே பெண்களின் அரட்டையாகவல்லவா இருக்கு. நேர்காணல் சுவாரசியம் கலந்த விருதுத் தகவல்களின் தொகுப்பு....

ஏங்க ஆண்களை எல்லாம் சேர்க்க மாட்டீங்களோ))):

Chitra said...

சங்கவி - ஆண் பதிவர்

நாடோடி said...

//2016 இல் நானும் முதல் மந்திரி ஆனாலும் ஆய்டுவேன்.//
அப்துல் க‌லாம் க‌ன‌வு காணுங்க‌ள் என்று சொன்ன‌து உங்க‌ செல்ல‌த்துகிட்ட‌ங்க‌... (சும்மா த‌மாசு)

வித்யா said...

:))

~~Romeo~~ said...

ஒபாமா , பின்லேடன் பேட்டிகள் வரவேற்கப்படுகிறது.. ஹி ஹி ஹி

Chitra said...

ரோமியோ, அடுத்து உங்களை தான் பேட்டி எடுக்க வாராங்களாம்.......

dheva said...

இனிமே உங்கள பஸ்ல கண்டக்டர்ஸ் ஏத்துவாங்களாங்கிறது கொஞ்சம் சந்தேகம்தான்....ஹி...ஹி....ஹி....கலக்கல் பதிவு....வாழ்த்துக்கள் சித்ரா....!

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் டீச்சர். பதிவு அசத்தலாக இருந்தது.

சே.குமார் said...

superungooooooooo..!

வரதராஜலு .பூ said...

அவார்டுகளுக்கு வாழ்த்துக்கள்.

அசத்தல் நேர்காணல்.

தொடரட்டும் அசத்தல்

தமிழ் உதயம் said...

எங்கே ஓட்டு பட்டை, எங்கே பரிந்துரை - அது இல்லாமல், சும்மா வாழ்த்திவிட்டு எனக்கு திரும்பி வர என் மனதுக்கு "கஷ்டமா" இருக்குனா பாத்துக்கோங்க.உங்க மிக பெரிய வெற்றிக்கு இது தான் காரணம். சில நேரம் உங்கள நெனச்சா பொறாமையாவும் இருக்கும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

சேட்டைக்காரன் said...

கலையரசின்னு கேள்விப்பட்டிருக்கோம்; உங்களுக்கு கலாய்ப்பரசின்னு ஒரு பட்டம் கொடுக்கலாம் போலிருக்கு! கலகலக்குறீங்க!

அஹமது இர்ஷாத் said...

அசத்துங்க....

Chitra said...

///கலையரசின்னு கேள்விப்பட்டிருக்கோம்; உங்களுக்கு கலாய்ப்பரசின்னு ஒரு பட்டம் கொடுக்கலாம் போலிருக்கு!////


......சேட்டைக்காரன், கலாய்ச்சிட்டு போறார். ஹா,ஹா,ஹா,ஹா.... "நன்றிகள் பல"!

வானம்பாடிகள் said...

ஓ. தானே வசதியா கேள்வி கேட்டு தானே பதில் சொல்ற அளவுக்கு அரசியல் படிச்சாச்சா. 2016லாம் டூ லாங். 2011லயே முடியும் போலயே:))

கண்ணா.. said...

இதுவரைக்கும் வந்த எல்லா தொடர்பதிவுக்கும் சம்பந்தமே இல்லாம பாலை போட்டு கோல் அடிச்சுருதீங்களே...


ஓரு நேக்காதான் பண்ணுறீங்க...

// ஒரே வாரத்தில் ஆறு விருதுகளை வாங்கிய எனது படத்தை வைத்து மூன்று நாட்களுக்கு பூஜித்து வந்தால், சீக்கிரம் ஒரு விருது பெற்று கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று பதிவர் சாஸ்த்திரம் சொல்கிறது.//

ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க... ஒண்ணும் பண்ணிக்க முடியாது..

asiya omar said...

ஆண்டவா என்னைக்காப்பாத்து,இதற்கு பின்னூட்டம் எப்படி கொடுப்பதுன்னு தெரியலையே,இருங்க ஜெய்லானியும் மங்குனியும் வரட்டும் அவங்க தான் சரி.

ஜெட்லி said...

இனிமே விருது கொடுப்பவர்கள் கூடவே லம்பா ஒரு அமௌன்ட்டை
அக்கௌன்ட்இல் போட வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும்........:))

அக்பர் said...

நேர்காணல் அருமை.

விருதுக்கு வாழ்த்துகள்.

V.Radhakrishnan said...

ஆஹா ஆறு விருதுகளா. மனம் உவந்த பாராட்டுகள் சித்ரா. உங்கள் எழுத்து மிகவும் கலகலப்பு.

சசிகுமார் said...

என்னங்க இப்படி கலக்குறீங்க ஒரே வாரத்துல ஆறு விருதா, அடி பின்றீங்க மேலும் பல விருதுகளை வாங்கி குவியுங்கள்.

துபாய் ராஜா said...

திருநெல்வேலியா.. கொக்கான்னானாம். கலகல கலக்கல்.

சுசி said...

கலக்கிட்டீங்க சித்ரா..

வாழ்த்துக்கள் விருதுகளுக்கு..

பிள்ளையாண்டான் said...

ஒரே வாரத்தில் ஆறு விருதுகளை வாங்கிய
" பாளைய‌ங்கோட்டை சித்திரம் "
" நகைச்சுவைப் பேரொளி "
" தொடர்பதிவுகளின் சூறாவளி "

வாழ்க வாழ்க‌!

Chitra said...

யாரங்கே, நம்ம புள்ளயாண்டானுக்கும் ஒரு தொகுதி ஒதுக்கி வைங்க.

Mrs.Menagasathia said...

கலக்கிட்டீங்க சித்ரா!! அடுத்த வருங்கால நகைச்சுவை முதல்வர் நீங்கதான். ஹி...ஹி...

ரிஷபன் said...

இது.. இதைத்தான்.. ரொம்ப ரசிச்சேன்.. உங்களுக்கு ஹியூமர் சென்ஸ் ரொம்ம்ம்ப.. ஹேட்ஸ் ஆஃப்

வருண் said...

****Chitra said...
நிச்சயமாக, வருண். அதனால் தான், எனக்கு பிடித்த பத்து பின்னூட்டங்கள் பற்றிய தொடர் பதிவு எழுத சொன்ன போது, என்னால் எழுத முடியவில்லை. How can I choose only 10? Each and every one is precious. ****

Very true, Chitra!

padma said...

அசத்தல் சித்ரா வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//2016 இல் நானும் முதல் மந்திரி ஆனாலும் ஆய்டுவேன். தமிழ் நாட்டு அரசியல் சொல்லி தந்த பாடம் #10234//

நெல்லைக்கு நான் தான் முதல்வர்.

Chitra said...

நான் ஒரே கல்லில், பல மாங்காய்களை அடித்தால் - பங்குக்கு வருகிறீர்களே! ஹா,ஹா,ஹா,ஹா..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

{{{{தாத்தா வயதை உடையவர்கள். அவர்கள் எங்களுக்கு அறிவுரை வழங்கிய வேகத்துக்கு, பேருந்தையும் ஓட்டி இருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம்}}}}

பாட்டி சொல்ல தட்டாத என்று எழுதிய புண்ணியவான்கள் தாத்தா சொல்லையும் தட்டாத! என்று எழுதி வைக்க மறந்தால வந்த வினை இது!!

கலக்கல் பதிவு!!! தொடருங்கள்!!!

Uma said...

Congratulations!

ஸ்ரீராம். said...

மொய் எழுதும் நோட்டு இருந்தால் மொய் கொடுக்காமல் வருவது இல்லை. சிலர், எங்கே வைத்து இருக்கிறார்கள் என்று தேட வேண்டியது இருக்கிறது//

உண்மைதான்.
நானும் கூட..

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு நேர்காணல்:)! பெற்ற விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.

மேரிஜோசப் said...

நீங்கள் என்தோழி சரண்யா போல் இருக்கின்றீர்கள்.

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

princerajan C.T said...

//இன்னொரு பதிவரும் சித்ரா என்ற பெயரில் இருக்கிறார் - பின்னூட்டம் இடுகிறார். ஆனால், நான் தான் profile photo வுடன் வலம் வருகிறேன். குழப்பங்களை தவிர்க்க, சொல்லி விடுகிறேன்.//இதுதான் கொஞ்சம் குழப்பமாக உள்ளது .ஒட்டு மொத்த மகளிர் அணியும் உங்கள் பக்கம் தான் இருக்கு போல! உங்கள் secret of success எங்களுக்கும் தெரிஞ்சி போச்சு.ஹஹா ஹ

kutipaiya said...

vaazhthukkal chitra - thoooo kilapunga!

thenammailakshmanan said...

சித்து வழக்கம் போல கலக்கிட்டேடா இன்னும் கொஞம் எழுதி இருக்கலாம்

ஆனாலும் அந்த பதிவர் சாஸ்திரம் உன் அக்மார்க் குறும்பு

வேலன். said...

உங்களுக்கு கமெண்ட் போட்டால் எரர் மெஜெச் வருகின்றது(எதிர்கட்சிகள் சதியாக இருக்கும்)ஜெய்லானிக்கு நிதி மந்திரி என்றால எனக்கு பொதுப்பணிதுறை தரவும்(அதில் தான் பாலங்கள் காண்ராக்ட் வரும்) வாழ்க முதல்வர்...வாழ்க வளமுடன்,வேலன்.

Jaleela said...

மக்கா ஒரே ஆளுக்கொரு தொகுதிய கேட்கிறீங்க.

சித்ரா அபப்டியே நான் சொல்லும் முன் எனக்கும் ஒரு தொகுதிய ஹோல்ட் பண்ணி வையுங்க.

நான் லேட்டா வேற வந்துட்டேன்,

சித்ரா "என்னை வைத்து காமிடி கிமிடி பண்ணலையே"

அமைச்சரே, உம் லொள்ள விட இது பெரிய லொள்ளா இருக்கே ஹே ஹே

அதுக்கு தான் பயந்து மேற்கெ பார்த்து ஓடிட்டீரா,


வேலன் சார் உஷாரா இருகாரு...

Jaleela said...

பின்னுட்ட விஷியத்தில் நான் சொல்ல வந்ததெல்லாம் எப்பூடி சித்ரா இப்பூடி போட்டு கலக்குனீங்க.

Jaleela said...

நாஞ்சிலாரே உம் கவுஜ மொக்கைய பார்த்தே யாரும் உம்மை தட்டி கேட்கல, எங்க கட காலியாகி இங்க கூட்டம் சேருதேனா, வேற என்ன அப்படியே நர்த் இந்தியா பக்கம் காத்து வாஙக் போன எப்பூடி...

Jaleela said...

மொத்தத்தில் நேர் கோணல் சூப்பர்

எல்லாரும் பின்னூட்ட குலசாமிக்கு படையல் போட்டூடீங்களா, அபப் நான் தான் பாக்கியா/////

ரோஸ்விக் said...

டிகிரி-ல நக்கல் செஞ்சுருகீங்க... நகைச்சுவை எப்போதும் போல மூச்சு விடாமல் கபடி ஆடுகிறது இந்த பதிவிலும்.... இது வெட்டிப்பேச்சு அல்ல... வெரைட்டி பேச்சு.... :-)

Chitra said...

/////எல்லாரும் பின்னூட்ட குலசாமிக்கு படையல் போட்டூடீங்களா, அபப் நான் தான் பாக்கியா/////

...... நீங்கள் சொன்ன பின்னூட்ட குலசாமி யாரு அக்கா? இப்படிக்கு பின்னூட்டம் பற்றி ஏதும் தெரியாதோர் சங்கம். ஹி,ஹி,ஹி,ஹி...


ஜலீலா அக்கா - --- உங்க approach எனக்கு பிடிச்சிருக்கு.

malar said...

நீங்க என்ன பதிவு போடாலும் நல்ல தான் இருக்கு....

மங்குனி அமைச்சர் said...

பப்ளிக் :
என்னாங்க இது அநியாயமா இருக்கு , பின்னூட்ட கொலசாமிக்கு படையள ஆரபிச்சு வச்சதே நம்ம மங்குனி , கடைசில அவர வுட்டிகளே
இப்படிக்கு
நான் மங்குனி அமைசர் இல்லை , இல்லை, இல்லை
(சே , இந்த மானம் கெட்ட பொழப்புக்கு மருந்த குடிச்சு சாகலாம் )

Chitra said...

மங்குனி அமைச்சரே, நோ bad பீலிங்க்ஸ். இதெல்லாம், அரசியல் வாழ்க்கையில் சகஜமப்பா. :-)

karthik said...

பகிர்வுக்கு நன்றி

அன்புடன் மலிக்கா said...

விருதுகளை அள்ளிச்செல்ல எதைகொண்டுபோனீர்கள். எல்லார் கேள்விகளோடு இதையும் சேர்த்துக்கொல்[ள்]ளவும்.

சித்ராமேடம் சித்துவேலையெல்லாம் காட்டுறீங்க அதாகப்பட்டது சிரிக்கவைக்கிறீங்கன்னு சொன்னேன்.

சூப்பர் நேர்காணல்..

Priya said...

Congrats Chitra!
superb Interview!!!

Anonymous said...

அங்க இங்க என்று சுற்றுவதால் வலைப் பகுதிக்கு வர முடியவில்லை. அருமை சித்ராக்கா. சிரிப்பாக எழுதி இருந்தாலும் மனதை தொடும் சிறு சிறு வரிகள் ஆங்காங்க இருக்கின்றன.

Sangkavi said...

Waw.......... Super Interview...........

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஹும்ம் லேட்டா வந்ததுனால வேற வழி இல்ல.

கொஞ்சம் ரெகமெண்ட் பண்ணி பிரதமர் போஸ்ட் வாங்கி குடுத்துட்டீங்கன்னா நீங்க எப்ப கூப்பிட்டாலும் திறப்பு விழாவுக்கு ஓடோடி வந்திடுவேன்..:))

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அசத்தல் . மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிங்க . வாழ்த்துக்கள் !