Monday, January 9, 2012

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் தின சிறப்பு வாழ்த்துக்கள்

அன்பான தமிழ் வாசிக்கத் தெரிந்த தமிழ் மக்களே,

அனைவருக்கும் வணக்கம்.   நான் சமீப காலமாக பதிவுலகம் பக்கம் வர முடியாமல்  போனதற்கு  - பாட்டி வடை சுட்டு வச்சு இருந்த கதையில் ஆரம்பித்து, காக்கா வடையை கொத்திட்டு போன  காரணம் சொல்லி,  நரி  அதையும் கவ்விக்கிட்டு போன feelingsu காட்டி,   நிறைய  பேசிக்கிட்டே போகலாம்.  அதற்கும் நோ டைமுங்கோ.  ஆனாலும், என்னையும் இன்னும் பதிவர் என்று மதித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிய அனைத்து பதிவுலக அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் தின சிறப்பு வாழ்த்துக்கள்! 



பதிவுலகுக்கு நேரம் ஒதுக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.  உலக பொருளாதரத்தை முன்னேற்றும் பெரிய வேலையில் மூழ்காமல்  நீச்சல் அடித்துக் கொண்டு இருப்பதால்,  இன்னும் எதுவும் ஒத்து வரல.

 மீண்டும் பதிவுகள் எழுத  விரைவில் வர ஆசை.  அது நிறைவேறுமா இல்லை, ஆசை - தோசை - அப்பள வடை என்று ஆகுமா என்று பொறுத்து இருந்து தான் நானே பார்க்கணும்.


அது வரைக்கும் இப்போதைக்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிக்கிறேங்க.

வணக்கம்!



படங்கள்:  நன்றி - Google images







71 comments:

RAMA RAVI (RAMVI) said...

நல்வரவு சித்ரா.புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

.புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

இந்திரா said...

Happy new year
பொங்கல் வாழ்த்துக்கள் சித்ரா

ஆமினா said...

நீங்க பழையபடி வந்துட்டீங்கன்னுல நெனச்சு வந்தேன் :-( ஆச தோச அப்பள வடை எனக்குமா அவ்வ்வ்

சீக்கிரம் வாங்க சித்ரா

கிருஸ்துமஸ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Unknown said...

நீண்டடடடடடடட காலத்துக்கு பின் வருகை புரிந்த சகோக்கு ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

இம்சைஅரசன் பாபு.. said...

புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Unknown said...

இனிய பொங்கல், வடை ,போண்டா ,வாழத்துக்கள்

காஞ்சி முரளி said...

புத்தாண்டு மற்றும்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்! எங்கள் அனைவரின் அன்பும் தானாக உங்களை இழுத்து வரும்:)! காத்திருக்கிறோம்! வருக விரைவில்!

Madhavan Srinivasagopalan said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

சித்ரா, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய புத்தாண்டு, மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

உங்கள் வரவுக்கு காத்திருக்கிறோம்.

G.M Balasubramaniam said...

உலகப் பொருளாதாரத்தைமுன்னேற்றும் பணியில் வெற்றி பெறவும் புத்தாண்டுக்கும் பொங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said...

Happy New year. Pl. continue to write.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள சித்ரா,

இனிய புத்தாண்டு மற்றும்
பொங்கல் வாழ்த்துக்கள்.

அடிக்கடி வரமுடியாமல் போனாலும்
பெளர்ணமி நிலவு போல மாதம் ஒருமுறையாவது வந்தாலே
நாங்கள் அகம் மகிழ்ந்து போவோமே!

பிரியமுள்ள கோபு மாமா
http://gopu1949.blogspot.com/2011/12/2011.html

Asiya Omar said...

சித்ரா,உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிவுலகின் முடிசூடிய ராணியாக வலம் வந்து கொண்டிருந்தீர்கள்.எங்கே சித்ரா என்று எண்ணாத மனமில்லை எனலாம்.
நேரம் கிடைக்கும் பொழுது பதிவு போடுங்கள்.எங்களுடன் தொடர்பில் இருங்கள்.

Yoga.S. said...

வணக்கம் சித்திரா!உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும்,தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களும்!தொடர்ந்து எதிர் நீச்சலடித்து கரையேறி பதிவுலகம் வர வல்லானை வேண்டுகிறேன்!

ஸ்ரீராம். said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகளும் பொங்கல் நல்வாழ்த்துகளும்....ஆசை தோசை அப்பளம் வடை எல்லாம் இருக்கட்டும் தொடர்ந்து பதிவு எழுதுங்கள்....!

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

welcome back chellam;-)

ஆனந்தி.. said...

welcome back chellam;-)

KParthasarathi said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் தின சிறப்பு வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் தின சிறப்பு வாழ்த்துக்கள்!

Rathnavel Natarajan said...

வருக. வருக.
இனிய பொங்கல் வாழ்த்துகள்.
நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துகள்.

Thoduvanam said...

வணக்கம் ..தங்களுக்கு சிறிதே காலம் கடந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் ..முன் கூட்டிய பொங்கல் வாழ்த்துக்கள் ..நக்கலாய் நச்சுன்னு வாழ்த்து சொல்லி இருக்கீங்க ..ரசிப்பதைத் தவிர வழி இல்லை ..உங்க லொள்ளு இல்லாம எங்களுக்கும் பொழுது போகலை ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொஞ்சம் பாத்து டைம் ஒதுக்குங்க..:)

வாழ்த்துகள்..உங்களுக்கும்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

வணக்கம் சகோதரி,
வாழ்த்து சொல்லவாவது பதிவு எழுதினீர்களே,
இது போல இன்னும் எழுத்தை தொடரவும்....

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்......

Jaleela Kamal said...

வாங்க சித்ரா, ரொம்ப சந்தொஷ்ம்.
தாயம்மா வந்ததும் தான் பதிவுலகமே கலகட்டுது, இதான் உங்கள் பதிவிலேயே சிறிய பதிவு...

Jaleela Kamal said...

ஆஹா அப்பள வடைஎ ல்லாம் ஆகாது , அப்ப்டி கொஞ்சம் தலை கிச்சிட்டு போங்க்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இனிய புத்தாண்டு மற்றும்
பொங்கல் வாழ்த்துக்கள்.

முத்தரசு said...

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் மனசாட்சியின் இனிய பொங்கல்
திருநாள் நல்வாழ்த்துக்கள்

Unknown said...

சித்ரா நலமா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ஆச்சி ஸ்ரீதர் said...

உங்களுக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்

கோபாலகிருஷ்ணன் சார்
நேற்று பெளர்ணமிதான்.

பால கணேஷ் said...

நான் வலையுலகத்துக்கு வெளியில இருந்தப்ப மிக ரசிச்சப் படிச்ச பதிவுகள் உங்களோடது. வலைக்குள்ள நான் வந்தப்புறம் நீங்க எழுதலையேங்கற கவலையில் இருந்தேன். தீபாவளிக்கப்புறம் புத்தாண்டு பொங்கல் வாழ்த்து சொல்லிருக்கற நீங்க, தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நிறைய எழுதணும்னு கோரிக்கையோட, உங்களுக்கு இதயம் நிறைந்த புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்...

மாதேவி said...

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்.

ஆசை தோசை....இழுத்துவரும்.

ஆவலுடன்..........

சமுத்ரா said...

புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_08.html
ஜனவரி 8 வலைச்சரத்தில் மனநிறைவு என்ற தலைப்பில் உங்கள் பதிவை பகிர்ந்து கொண்டேன்.
நேரம் இருக்கும் போது பாருங்கள்.
ஜனவரி 2 முதல் 8ம் தேதிவரை.

ரஹீம் கஸ்ஸாலி said...

நீ......ண்....ட....இடைவெளிக்கு பின் வந்திருக்கீங்க....வாங்க... நல்ல பதைவுகளை தாங்க

வை.கோபாலகிருஷ்ணன் said...

thirumathi bs sridhar said...
//உங்களுக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்

கோபாலகிருஷ்ணன் சார்
நேற்று பெளர்ணமிதான்.//

அன்புள்ள ஆச்சி மேடம்!

வணக்கம்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

நம் எல்லோருடைய அன்புக்கும் பாத்திரமான ”சித்ரா” அவர்கள் பிறந்ததே ஒரு “சித்ரா பெளர்ணமி” அன்று தான்!!

அதனால் தான் அவ்வாறு எழுதினேன்.

அன்புடன் vgk

சென்னை பித்தன் said...

வாங்க! வாங்க!தங்கள் வரவு நல்வரவாகுக.
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.
(வலைச்சரத்தில் கொஞ்சம் பிசி.)

கொங்கு நாடோடி said...

திருவிழா திருவிழாவுக்கு எழுதுறிங்க, அடுத்தது பொங்கலுக்கா? சரி இன்னும் ஒருவாரம் தானே... சிக்கிரம் வாங்க.

குறையொன்றுமில்லை. said...

சித்ரா வெல்கம். இனிய புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துகள்.

மதுரை சரவணன் said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு , பொங்கல் நல்வாழ்த்துகள்..

எதிர் நீச்சல் அடிச்சாவது சீக்கிரம் வாங்க :-)

Priya said...

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சித்ரா:-)

KANA VARO said...

அன்பான தமிழ் வாசிக்கத் தெரிந்த தமிழ் மக்களே,.//

ஆரம்பமே கலக்குதே அக்கா, உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

nellai ram said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு புதிய பகிர்வு.....

சீக்கிரமே வந்து நல்ல பதிவுகளைத் தொடர்ந்து தர வேண்டுகோள்....

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

goma said...

ஹாய் ஹாய்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Angel said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சித்ரா .

இராஜராஜேஸ்வரி said...

உலக பொருளாதரத்தை முன்னேற்றும் பெரிய வேலையில் மூழ்காமல் நீச்சல் அடித்துக் கொண்டு இருப்பதால், இன்னும் எதுவும் ஒத்து வரல./

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் தின சிறப்பு வாழ்த்துக்கள்"

அமைதி அப்பா said...

அவசியம் தொடரவும், உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாதம் ஒரு பதிவாவது போடலாமே?!

புத்தாண்டு வாழ்த்துகள்.

பாலராஜன்கீதா said...

சாலமன் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Avainayagan said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள் சொல்வதைக் கூட வித்தியாசமாக சொன்ன உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

Anonymous said...

இனிய புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

வணக்கம் நல்லாயிருக்கிங்களா?

உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

வணக்கம் நல்லாயிருக்கிங்களா?

உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

Vadivelan said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ADHI VENKAT said...

விரைவில் கலக்கல் பதிவுகளைத் தாருங்கள்....

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

கே. பி. ஜனா... said...

புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

பித்தனின் வாக்கு said...

நீங்க பழையபடி வந்துட்டீங்கன்னுல நெனச்சு வந்தேன் :-( ஆச தோச அப்பள வடை எனக்குமா அவ்வ்வ்

repeattu.... what happend?.

Jayanthy Kumaran said...

wishing you & yours a very fantastic 2012 chitra..;)
Tasty Appetite

விச்சு said...

கண்டிப்பா நேரம் கிடைக்கும். விரைவில் வருக...

பாலராஜன்கீதா said...

சித்ரா சாலமன் அவர்களுக்கு மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துகள்

vinu said...

ஆங் மறக்காம நம்ம வூட்டு விசேசத்துக்கு வந்துடுங்கோவ்!!!!!!!!!

Lingeswaran said...

உலக பொருளாதாரத்தை முன்னேத்துறது ஒரு பக்கம் இருக்கட்டும், அக்கா....
I really miss your hilarious writing style... Please keep writing...

Anonymous said...

அன்புள்ள சித்ரா,
வணக்கம். ப்ளாகர்.காம் மூலம் உங்களது ‘கொஞ்சம் வெட்டிப்பேச்சு’ வலைப்பதிவுகள் படித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள்.
இனி அடிக்கடி சிந்திப்போம்.
அன்புடன்,
ரஞ்ஜனி