Saturday, October 22, 2011

அமெரிக்காவிலும் தீபாவளி திருநாள்



"தல" தீபாவளி பட்சணங்கள்:

திருமணம் முடிந்து அமெரிக்கா வந்த பின், அம்மா வீட்டில் கொண்டாட முடியாமல் வரும் தல தீபாவளியை மறப்பது பலருக்கு கடினமான வேலைதான்.

புது உடைகள் தயாராக இருக்கும். ஏதோ ஒரு தமிழ் சங்கமோ இந்திய சங்கமோ கலை நிகழ்ச்சிகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும். குறிப்பாக, குழந்தை செல்வம் பெற்றவர்க்கு தீபாவளி நேரம் கோலாகலம் தான். குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு, ஊரு நினைப்பும், உறவினர்களின் பிரிவும் மனதை வாட்டிக் கொண்டு இருக்கும்.

திருமணம் ஆகி அமெரிக்கா வந்த புதிதில், எனக்கு அமைந்த முதல் நட்பு வட்டம் - ஆந்திராவில் இருந்து வந்த புஷ்பா ; பெங்காலி பெண், மௌஷ்மி என்று சிறியதாக இருந்தது. மூவரும் முதல் தீபாவளி கொண்டாட தயார் ஆகி கொண்டு இருந்த நேரம். ஊர் நினைவுகள் மனதில் பாரமாக அழுத்த ஒரு உற்சாகம் இல்லாமல் இருந்தோம். புஷ்பா ஒரு நாள், எங்களை அழைத்து, " முதல் தீபாவளிக்கு என்று ஸ்பெஷல் ஆக ஏதாவது செய்வோம். இப்படியே புலம்பி கொண்டு இருப்பதற்கு பதிலாக , நாமே பலகாரங்கள் எல்லாம் சேர்ந்து செய்தால் என்ன? நிச்சயமாக தீபாவளி களைகட்டிவிடும்," என்று பட்டாசாய் ஆங்கிலத்தில் படபடத்தாள்.

அந்த நேரம், எங்கள் மூவரில் புஷ்பாதான் கொஞ்சமாவது சமைக்கத் தெரிந்தவள். நான், "cooking" என்று ஆங்கிலத்தில் spelling தெரிந்தாலே போதும், அமெரிக்காவில் சமாளித்து விடலாம் என்ற நினைப்பில் திருமணம் ஆனவள். மௌஷ்மியோ எனக்கும் ஒரு படி மேல். living room (வரவேற்பு அறை) க்கும் கிச்சனுக்கும் (அடுக்களைக்கும்) வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரிந்தாலே போதும் என்று திருமணம் செய்து கொண்டவள்.

அப்பொழுதெல்லாம் , தமிழ்நாட்டு சமையலில் LKG பாடமான சாம்பார் வைப்பதற்கே - துவரம் பருப்பா? கடலை பருப்பா? என்று வித்தியாசம் தெரியாமல் "மோசம்பார்" வைத்து கொண்டு இருந்தேன். (இப்போ ஜூப்பரா சமைப்போம்ல..... நீங்க நம்பித்தான் ஆகணும். இல்லை என்றால், நீங்கள் கொளுத்தும் பட்டாசு வெடிக்காமல் போக .....!!!)


மௌஷ்மி வீட்டுக்கு ஒரு நாள் செல்ல வேண்டியது வந்தது. புஷ்பாவிடம் கேட்டு தோசை செய்யப் பழகி விட்டதாக சொல்லி, என்னை அழைத்து இருந்தாள். அவளது சமையல் லேப் (lab)  நான் வெள்ளெலி. அடை, ஊத்தப்பம், சப்பாத்தி சேர்ந்த 3-in-1 ஐட்டம் ஒன்று முதலில் வந்தது. அதுதான் தோசையாம். தொட்டுக் கொள்ள பருப்பு ரசம் வந்தது. "சாம்பார் வைக்கவில்லையா?" என்றேன். "அதுதானே இது!" என்று அந்த ரசத்தை கை காட்டினாள். கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடிதான் நினைவுக்கு வந்தது.

"எனக்கு காலணிகள் இல்லையே என்று கவலைப்பட்டேன். கால் இல்லாதாவனை காணும் வரை" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நானோ, "எனக்கு சமைக்கத் தெரியவில்லை என்று கவலைப்பட்டேன். மௌஷ்மியை காணும் வரை."

இப்படி இரண்டு கில்லாடி அடியாட்களை வைத்து கொண்டு, கிச்சனில்  சமையல் அடாவடிக்கு தயார் ஆகி விட்ட புஷ்பாவை இப்பொழுது நினைத்தாலும் பரிதாபமாக இருக்கிறது.

"This Friday morning, come to my place. I asked my mom how to make " sweet laddus". Lets try it." மீண்டும் புஷ்பாவின் நுனி நாக்கு ஆங்கில அழைப்பு.

மௌஷ்மியும் நானும், "நாங்களும் தீபாவளி பலகாரம் பண்றோம்.....நாங்களும் தீபாவளி பலகாரம் பண்றோம்....... நாங்களும் சமையல் ரவுடிகள் தான்" என்று அவள் வீட்டுக்கு சென்றோம். புஷ்பாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் எங்கள் சமையல் குறிப்பு புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம். அணுகுண்டு ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு கூட இப்படி நுணுக்கமாக குறிப்பெடுக்கும் இரண்டு assistants கிடைத்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

கடலை மாவை பக்குவமாக கலந்து வைத்தாள். சீனிபாகை தயார் செய்தாள். கண்ணு கரண்டியை எடுத்து பூந்திக்கு தயார் ஆனபோது, மௌஷ்மி ஒரு சந்தேகம் கேட்டாளே பார்க்கலாம். "புஷ்பா, எல்லாம் சரி. இந்த கடலை மாவில் எப்பொழுதுதான் lettuce சேர்க்கப் போறே?"

(லெட்டூஸ் என்றல் என்ன என்று தெரியாதவர்களுக்கு: முட்டைக்கோஸ்க்கு தங்கையாம் - - - சாலட்ல போட்டு அப்படியே சாப்பிடுற இலை தழை - - - ஆட்டுக்கும் நமக்கும் வித்தியாசம் காட்ட விடாத ஒரு ஐட்டம். இப்போ புரிஞ்சுதா? )

"lettuce???" புஷ்பா அதிர்ந்தாள்.
"நீதானே ..... ஸ்வீட் lettuce செய்யப்போவதாக சொல்லி போன் பண்ணியே," மௌஷ்மி வெள்ளந்தியாக ஆக பதிலளித்தாள்.
புஷ்பா, ஸ்வீட் laddus என்று ஸ்டைல் ஆக நுனி நாக்கு ஆங்கிலத்தில் சொன்னது, மௌஷ்மிக்கு போனில் ஸ்வீட் lettuce என்று கேட்டு இருக்கிறது. ஆந்திராவில் அப்படி ஒரு தீபாவளி ஸ்வீட் ரொம்ப பாப்புலர் போல என்று நினைத்து வந்து இருக்கிறாள். அவள் விஷயத்தை சொல்லவும், நானும் புஷ்பாவும் புரையேறி கொள்ளும் அளவுக்கு சிரித்தோம்.

அந்த சந்தோஷ சிரிப்பினாலோ என்னவோ, அன்னைக்கு லட்டுக்களில் இனிப்பு அதிகமாகி இருந்தது.

நான், முதலில் உளுந்து வடை செய்தபோது, உளுந்து போண்டாவாக வந்து கொண்டு இருந்தது. பின், உளுந்து அமீபாவாக shape மாறியது. நண்பர்கள் கையில் இருப்பது உளுந்து வடைதான் என்று நான் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டி இருந்தது.

இன்றோ, நண்பர்களுக்கு தட்டில் கொடுக்கும் போதே, உளுந்து வடைதான் என்று அவர்கள் அடையாளம் கண்டு கொண்டு, அதை சாப்பிட்ட பின்னும் உளுந்து வடைதான் என்று ஒத்துக்கொள்ளும் அளவுக்கு என் சமையலில் நல்ல முன்னேற்றம்.

இந்த தீபாவளி நேரத்தில், சமையல் ஆர்வ கோளாறு கொண்ட புது மனைவியை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் - உள்ளே தள்ளியதை வெளியே துப்பவும் முடியாமல் - திருதிரு விழிகளுடன் வரும் புதிதாய் திருமணம் ஆன நண்பர்களுக்கு மறக்காமல் இனிய "தல(விதி) தீபாவளி வாழ்த்துக்கள்" சொல்ல மறக்காதீங்க. காரணம், முதல் தீபாவளி உள்ளவரை, சமையல் அலம்பல்கள் அமெரிக்காவில் தொடர்ந்து கொண்டே இருக்கும்......



மற்ற அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

படங்கள்: நன்றி கூகிள்வதி . ( இல்லை, ஒபாமாவுக்கு அந்த லட்டுக்கள்ள ரெண்டு புஷ்பா கொடுக்கப் போனப்போ எடுத்ததுன்னு ரீல் பட்டாசு கொளுத்தி போடவா?)


(பின் குறிப்பு: அமெரிக்காவில் உள்ள Connecticut தமிழ் சங்க தமிழ் இதழ் "பொன்னி" தீபாவளி மலர் வந்துள்ள en கட்டுரை. )

118 comments:

test said...

ME THE FIRST?

Unknown said...

லட்டு அருமையா வந்து இருக்கு பதிவுல ஹிஹி நன்றி சகோ!...இந்த முறை வீட்ல செய்யப்போறோம்(நானுந்தேன்!)...எங்க வீட்ல அடிக்கடி ஒரு வார்த்த சொல்லுவாங்க...எனக்கு சிக்கிய அடிமை நல்லாத்தான் சமையல் செய்யிறான்...ஆனா பேச்சு மட்டும் தான் ரொம்ப அதிகம்னு ஹிஹி!

Unknown said...

தீபாவளி வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!

test said...

//இன்றோ, நண்பர்களுக்கு தட்டில் கொடுக்கும் போதே, உளுந்து வடைதான் என்று அவர்கள் அடையாளம் கண்டு கொண்டு, அதை சாப்பிட்ட பின்னும் உளுந்து வடைதான் என்று ஒத்துக்கொள்ளும் அளவுக்கு என் சமையலில் நல்ல முன்னேற்றம்//

மெய்யாலுமா? போர்டு ஒன்னும் வைக்கிறதில்லையே? :-)

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

settaikkaran said...

அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் ”இந்த” தீபாவளி இனிப்பு மிகவும் ஸ்பெஷல்! :-)

இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

சாந்தி மாரியப்பன் said...

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

Asiya Omar said...

ஸ்வீட் லெட்டூஸ் ரெசிப்பி நினைத்து நினைத்து சிரிப்பை அடக்க முடியலை,வழக்கம் போல் கமெடியுடன் கூடிய உங்கள் பகிர்வு அருமை.அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Madhavan Srinivasagopalan said...

ரொம்பநாள் கழிச்சு ஒரு இனிய பதிவு.. வாழ்த்துக்கள்..

எங்க தீபாவளி கடைக்கும் ஒரு விசிட் Please..

வைகை said...

ரொம்ப நாள் கழிச்சு இனிப்போட வந்துருக்கீங்க.... உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி வாழ்த்துக்கள் :)

Sumi said...

very nice and funny post.Iam happy to be back in US and reading your blog after a long time.Happy Deepavali :)

சி.பி.செந்தில்குமார் said...

>>அமெரிக்காவில் உள்ள Connecticut தமிழ் சங்க தமிழ் இதழ் "பொன்னி" தீபாவளி மலர் வந்துள்ள en கட்டுரை. )


எழுத்தின் மேல் ஆர்வம் உள்ளவர்கள் எங்கே இருந்தாலும் தங்களை அவர்களயும் அறியாமல் வெளிப்படுத்தி விடுவார்கள் என்பதற்கு இது சான்று.. வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>>நான், "cooking" என்று ஆங்கிலத்தில் spelling தெரிந்தாலே போதும், அமெரிக்காவில் சமாளித்து விடலாம் என்ற நினைப்பில் திருமணம் ஆனவள்.

ஹா ஹா குட் காமெடி .. சாலமன்கு தான் டிராஜடி..

தங்களுக்கும் , தங்கள் குடும்பத்துக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

திபாவளி வாழ்த்துகள்

சாருஸ்ரீராஜ் said...

நகைச்சுவையான எழுத்து நடை.

ராமலக்ஷ்மி said...

கலகலப்பான தீபாவளிப் பட்டாசு:)! உங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சித்ரா!!!

தக்குடு said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா!! உங்களோட சமையல் திறமையை பாத்து அசந்துபோயிட்டேன்!! :P

SURYAJEEVA said...

நானும் என் நண்பர்களும் சப்பாத்தி சுட்டு, குருமா வைத்து விட்டு பத்து பேராக சாப்பிட உட்கார்ந்தோம்.. அருமையாக இருந்தது சாப்பாடு... அப்பொழுது ஒருவன் கேட்டான்.. மச்சான் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஒன்னு வச்சிருக்கியே அது என்னடா? அருமையாய் இருக்கு என்றான்..
கூட இருந்தவர்கள் கூறியது..
மச்சான் அது குருமா.
டேய் அது கடப்பாடா..
இல்லடா காரக்குழம்பு...
நான் நடுவில் புகுந்தேன்...
சமைத்தவனை கேட்டா தெரிஞ்சுட போகுது...
அவன் சாப்பிட்டு கொண்டே சொன்னான்,
"எவனுக்குடா தெரியும், நல்லா இருக்கா? அது போதும்..."

கோகுல் said...

வாங்க!வாங்க!ரொம்ப நாள் கழிச்சு ஸ்பெசலா வந்திருக்கீங்க!

லட்டு லட்டா இருந்ததா?
எப்படியோ?
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
மீள் வருகை அசத்தலாக, டைம்மிங் பண்டிகைக் காலப் பெரு விழாவோடு சிறப்பாக அமைந்திருக்கிறது.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் நிறைந்த இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

நத்தார் வாழ்த்துச் சொல்லும் வரை நான் பதிவுலகில் இருப்பேனா தெரியாது.
அதனால் இப்பவே இரண்டையும் சேர்த்துச் சொல்லிக்கிறேன்.

நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, மீண்டும் நீண்ட இடைவெளிக்குப்பின் சித்ரா பெளர்ணமி தரிஸனம் கண்டோம்

மிக்க மகிழ்ச்சி.

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

அன்புடன் உங்கள் [கோபு மாமா]vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

//துவரம் பருப்பா? கடலை பருப்பா? என்று வித்தியாசம் தெரியாமல் "மோசம்பார்" வைத்து கொண்டு இருந்தேன். (//

மோசம்பார் என்றால் மோர் குழம்பு + சாம்பார் கலந்ததோ என நினைத்தேன்.
ரொம்ப மோசம்ங்க நீங்க.

//(லெட்டூஸ் என்றல் என்ன என்று தெரியாதவர்களுக்கு: முட்டைக்கோஸ்திருமதி என்யாம் - - - சாலட்ல போட்டு அப்படியே சாப்பிடுற இலை தழை - - - ஆட்டுக்கும் நமக்கும் வித்தியாசம் காட்ட விடாத ஒரு ஐட்டம். இப்போ புரிஞ்சுதா? )//

அடடா! இப்போ நல்லாப் புரிந்து விட்டது.

நீங்கள் மூவரும் செய்த லட்டூஸ் சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டது. திருப்பதி லட்டு போல அருமையாக இருந்தது, இந்தப்பதிவு.

arasan said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி வாழ்த்துக்கள் :)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தீபாவளி வாழ்த்துக்கள்...

மீண்டும் வருக.. வருக.. என வரவேற்க்கிறேன்...

ஆனந்தி.. said...

//>அமெரிக்காவில் உள்ள Connecticut தமிழ் சங்க தமிழ் இதழ் "பொன்னி" தீபாவளி மலர் வந்துள்ள en கட்டுரை. )


எழுத்தின் மேல் ஆர்வம் உள்ளவர்கள் எங்கே இருந்தாலும் தங்களை அவர்களயும் அறியாமல் வெளிப்படுத்தி விடுவார்கள் என்பதற்கு இது சான்று.. வாழ்த்துக்கள்//

சி.பி. !! சரியா சொல்லிருக்கீங்க...அப்பா ஜீன் பொண்ணுக்கு அப்டியே...அமெரிக்காவிலும் அட்டகாசமா...:-)) வாழ்த்துக்கள் சித்ரா...

லட்டூஸ் கதையை விவரிச்ச விதம் சூப்பர்...சித்ராவும் நகைச்சுவையும் ஒட்டிபிறந்த ரெட்டை குழந்தைகள்...ஹாப்பி தீவாளி அம்மு....
--

goma said...

மோசம்பார்...சுவையோசுவை

'பரிவை' சே.குமார் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Sivakumar said...

ஏற்கனவே லிபியாவில் ஒபாமா அண்ட் கோ தீபாவளி கொண்டாடிவிட்டனரே..

MANO நாஞ்சில் மனோ said...

உங்களுக்கும் உங்ககள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் தாபாவளி நல்வாழ்த்துக்கள்....

Yoga.S. said...

தீபாவளி வாழ்த்துக்கள்,தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!

baleno said...

நல்ல தீபாவளி தகவல்கள்.

Thenammai Lakshmanan said...

சூப்பர் லெட்டூஸ்.. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சித்து..:)

தனிமரம் said...

சமயலில் நடக்கும் சுவாரசியமான விடயத்தை நகைச் சுவையாக சொல்லியிருக்கிறீங்க  உளுந்து வடை எங்களுக்கும் கொடுத்து அனுப்புங்கள் சகோதரி.

தனிமரம் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் முன்கூட்டியே.

RAMA RAVI (RAMVI) said...

ரொம்ப நாட்களுக்கு பிறகு உங்க நகைசுவையான பதிவை பார்க்க சந்தோஷமாக இருக்கு.

உங்க தீபாவளி இனிப்பு கலாட்டவை படித்து மனம் விட்டு சிரித்தேன்.

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் சகோதரி.

ஸாதிகா said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

நிரூபன் said...

உறவினர்களைப் பிரிந்திருந்தாலும், நண்பர்கள் கிடைக்கும் போது தீபாவளி கொண்டாடுவது இன்பம் தரும் என்பதனை அழகுறச் சொல்லி நிற்கிறது உங்கள் பதிவு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தீபாவளி வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!

நெல்லி. மூர்த்தி said...

”தமிழ்நாட்டு சமையலில் LKG பாடமான சாம்பார் வைப்பதற்கே - துவரம் பருப்பா? கடலை பருப்பா? என்று வித்தியாசம் தெரியாமல் "மோசம்பார்" வைத்து கொண்டு இருந்தேன். (இப்போ ஜூப்பரா சமைப்போம்ல..... நீங்க நம்பித்தான் ஆகணும். இல்லை என்றால், நீங்கள் கொளுத்தும் பட்டாசு வெடிக்காமல் போக .....!!!)”

சரி சரி.. நாங்க நம்பிடறோம்; உங்க சாபத்துக்கு பயந்துகிட்டு... ஹி ஹி ஹி

நெல்லி. மூர்த்தி said...

”ஒபாமாவுக்கு அந்த லட்டுக்கள்ல ரெண்டு புஷ்பா கொடுக்கப் போனப்போ எடுத்ததுன்னு ரீல் பட்டாசு கொளுத்தி போடவா?)”

நீங்க ரொம்ப நல்லவங்க.... பொய் சொல்லணும்னு நினைச்சாக் கூட எங்க கிட்ட கேட்டுகிட்டு சொல்லலாம்னு நினைக்கிற உங்க நல்ல மனசு யாருக்கு வரும்!?”

நெல்லி. மூர்த்தி said...

உங்க பதிவ படிச்ச உடனே எங்களுக்கும் தீபாவளி, கண்ணைக் கட்ட சாரி சாரி...களை கட்ட ஆரம்பிச்சுடுச்சு! சிறு இடைவெளிக்கு பின்பு கலகல கலக்கல்!

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Good one.

JAYANTHI DINESH said...

Chitra,

Nelinamanaa padipudu...Also Congratulations!

ஹேமா said...

சித்ரா...தீபஒளி இன்னும் பரவ மனம் நிறைந்த வாழ்த்துகள் !

Unknown said...

சகோதரி! நலமா!
நீண்டநாளாயிற்று
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

சத்ரியன் said...

அக்கா குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.இனி வலையுலகில் எப்போதும் காணலாம் அல்லவா.?

வல்லிசிம்ஹன் said...

அடடா, ஒபாம மிஷெல் உங்க பதிவுக்கு வந்து லட்டு சாப்டாங்களா. சித்ரா!! ஹை கனெக்ஷன்ச்:)
பதிவு ரொம்ப அருமையா ஸ்வீட்டா இருந்தது.

NADESAN said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
துபாய்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எங்கே போயிட்டீங்க சித்ரா ஆளையே காணோம்

அம்பாளடியாள் said...

எங்குமே மங்களம் பொங்கிடும் இன்பத் தீபாவளி உங்கள் வீட்டிலும் நாட்டிலும் தங்கியே இன்பம் தந்திட என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி .மிக்க நன்றி பகிர்வுக்கும் உங்கள் வலைத்தள வருகைக்கும் .

இராஜராஜேஸ்வரி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ப.கந்தசாமி said...

அன்பு வாழ்த்துக்கள்.

Angel said...

ரொம்ப நாளுக்கப்புறம் ஜாலி கலகல பதிவு .சந்தோஷமாக இருந்தது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

ஸ்ரீராம். said...

நீண்ட நாள் தயாரிப்புக்குப் பின் வெளி வரும் தீபாவளி ரிலீஸ் படம் போல உங்கள் பதிவு! சுவாரஸ்யம். உளுந்து வடையாவது போண்டாவாவது...நாங்கள் எல்லாம் சொல்லிச் செய்ய மாட்டோம். செய்த பிறகுதான் பெயர் வைப்போம்! இது எங்கள் டெக்னிக்! அணு குண்டு விஞ்ஞானிக்கு உதவி செய்வது போல குறிப்பெடுத்தோம் வரிகளுக்கு சிரிப்பு வந்து விட்டது.

உங்களுக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். எனது வலைப்பூவில் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி.

அமுதா கிருஷ்ணா said...

அப்ப செய்த லட்டு ஃபோட்டா இல்லையா சித்ரா?? தீபாவளி வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

வாங்க!தீபாவளிக்கு வந்துட்டீங்க! தீபாவளி வாழ்த்துகள்.

சேலம் தேவா said...

ஹேப்பி தீவாளி..!!

venkat said...

தீபாவளி இனிய வாழ்த்துக்கள்!

bandhu said...

வெகு சுவாரஸ்யம்..happy Diwali.

CS. Mohan Kumar said...

Wish you and ur family a happy Diwali !

Mahan.Thamesh said...

பகிர்வுக்கு நன்றி. தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா

GIS said...

really nice.. .

தாராபுரத்தான் said...

தீபாவளி பலகாரம் ..தித்திக்குதுஅம்மா.

தாராபுரத்தான் said...

தீபாவளி பலகாரம் ..தித்திக்குதுஅம்மா.

Unknown said...

உளுந்து போண்டா
செய்த எங்கள் தலைவி வாழ்க
வாழ்க


தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா
வாழ்க வளமுடன்

உலக சினிமா ரசிகன் said...

தங்களுக்கும்...
தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
உங்கள் நகைச்சுவை சமையலை சாப்பிட்டேன்.
நா இனித்தது.
மனசு குளிர்ந்தது.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்

Unknown said...

அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் தோழிக்கு.
இனிய தீபாவ . ளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்

Unknown said...

அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் தோழிக்கு.
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்

சக்தி கல்வி மையம் said...

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

காந்தி பனங்கூர் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா

மாய உலகம் said...

தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ!... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

மாணவன் said...

உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் மேம்!

ராஜ நடராஜன் said...

//லெட்டூஸ் என்றல் என்ன என்று தெரியாதவர்களுக்கு: முட்டைக்கோஸ்க்கு தங்கையாம் //

Too good!தங்கைக்குத்தான் மார்க்கெட்டுல வரதட்சனை கூட கேட்கிறாங்களாம்.அதனால KFC க்காரன் அக்காளுக்கு வாழ்க்கைப்பட்டுட்டான்:)

கொங்கு நாடோடி said...

வருக வருக நீண்ட விடுமுறையோ...

அட ஒபாமா கூட நம்ப பால்டிமோர் விஷ்ணு கோவில் சாஸ்திரி...

Yaathoramani.blogspot.com said...

தீபாவளி சிறப்புப் பதிவு மிக மிக அருமை
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

Karthikeyan Rajendran said...

அன்பு பதிவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் எனது தளத்தை தரிசித்தமக்கு, நன்றி!!!!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நீச்சல்காரன் said...

உங்களுக்கும்
─╔╦╗──────╔═╗║───╔╗
╔╬╚╝║─║╔╦─║─║║╔═╤╬║
╠╬╗─║─║║║─╠╗║║║─║║║
╚╝║─╚═╝║║─╚╝╚╝╠╗║║║
─╔╝───────────╚╝───
வாழ்த்துகள்

ம.தி.சுதா said...

தீபாவளி மலரில் கலக்கல் பூ ஒன்று பூத்திருக்கிறதே...

ம.தி.சுதா said...

அக்கா எங்களுக்கு யாரும் எப்படிக் கொண்டாடினாலும் கவலை இல்லை. ஆனால் முழுப் பலகாரமும் வந்து சேரணும்...

RVS said...

தீபாவளி வாழ்த்துகள். :-)

சுந்தரா said...

அதிரடி சமையல் திறமையால் அமெரிக்காவையே கலக்கியிருக்கீங்க :)

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

mamtc said...

Happy Diwali.
Your flashback and kitchen adventure is wonderful and hilarious.
My thaladiwali was interesting. My hubby was in Virginia and he had some prod implementation and I was in NJ and I was working per day 18 hours and no weekends and nothing, so both of us worked and meanwhile my dad's friend dropped in to my office and left some surprise gifts from India.
Anyway we compensated around the next weekend visit. :) Good times.

Now with kids and stuff it is pretty more interesting and for the whole month I had been cooking and cooking and cooking.

Actually I am an ok cook, I learnt it when I stayed in hostel and during my college days and my mom is horrible cook so I had to avoid learning from her to save myself and my future family from the demise.
My cooking skills got my man to marry me, or least that is what he says :)

Avainayagan said...

//நீங்க நம்பித்தான் ஆகணும். இல்லை என்றால், நீங்கள் கொளுத்தும் பட்டாசு வெடிக்காமல் போக .....!!!)//

இப்படி நான் ரசித்துப்படித்த வரிகள் பல.அருமையான நகைச்சுவை கலந்த கட்டுரை. வாழ்த்துக்கள்

J.P Josephine Baba said...

சுவாரசியமான பதிவு. வாசித்தேன் ரசித்தேன் என்னையும் நினைத்து சிரித்து கொண்டேன்!!!

விச்சு said...

நல்ல ரசிக்கும்படியான காமெடி.

Priya dharshini said...

Lettuce joke super...kalakureenga.

Jayanthy Kumaran said...

wonderful post Chitra..
hope u had a joyous diwali with your family ..;)
Tasty Appetite

கே. பி. ஜனா... said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

வழக்கம்போல் அழகான, நகைச்சுவையுடன் கூடிய சரளமான பதிவு!

சிவகுமாரன் said...

லட்டு போலவே ஸ்வீட்டா இருந்தது உங்கள் பகிர்வு.

KParthasarathi said...

ரொம்ப தாமதமாக வந்திருக்கிறேன்.ரொம்ப நாள் இடைவெளிக்கு பின்னர் வந்து ஒரு கலக்கு கலக்கிறீர்கள் பாருங்கள் உங்களுக்கு இணை நீங்களேதான்.பழயபடி அடிக்கடி எழுதி எங்களை சிரிக்க வைத்து கொண்டு இருங்கள்

புல்லாங்குழல் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

புல்லாங்குழல் பக்கமே காணோமே!

Rathnavel Natarajan said...

நீண்ட நாட்களாகி விட்டது. கடந்த பத்து நாட்களாக Dash Board இல் பதிவுகள் வரவில்லை.
அருமையான தீபாவளி பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.

பாலா said...

ரொம்ப லேட்டான வாழ்த்துக்கள் அக்கா :)

அம்பாளடியாள் said...

உங்கள் அடுத்த ஆக்கம் எங்கே சகோ ?....உங்கள் வரவுக்காகவும்
கருத்திற்க்காகவும் என் தளம் எப்போதும் காத்திருக்கின்றது .முடிந்தால் வாருங்கள் .

பால கணேஷ் said...

துவரம் பருப்பா? கடலை பருப்பா? என்று வித்தியாசம் தெரியாமல் "மோசம்பார்" வைத்து கொண்டு இருந்தேன்.
-தமிழுக்குப் புது வார்த்தைகள் எல்லாம் சேர்க்கறியள். ரொம்ப லேட்டா வந்துட்டேன்னு நினைக்கிறேன். உங்கள் பதிவு அருமை. இனி தொடர்ந்து வருகிறேன்.

விச்சு said...

என்னங்க? தீபாவளி விடுமுறை இத்தனை நாளைக்கா? சீக்கிரமா எழுத வாங்க....

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

கோமதி அரசு said...

அருமையான தீபாவளி நினைவலைகள்.

tenkasikaran.blogspot.com said...

என்னக்கா இப்படி ஆகஸ்டுக்கு(ஆடி) ஒன்னு அக்டோபர்க்கு (அமாவாசைக்கு) ஒன்னு நு பதிவு போட்டா வெட்டியா இருக்குற நாங்க எப்படி டைம் பாஸ் பண்றதாம்?

மாதேவி said...

அமெரிக்க தீபாவளி கலக்குகிறது :)

RJ said...

Hi Chithra,

Naan Jayanthi. Ignatius-la Chandra classmate. She told me about your blog today only. Innum pala madhangal archive paddipathiley spend penna poren. Idhe madhiri en husband pongala kudichittu pona natkal undu.

சித்ரவேல் - சித்திரன் said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன் நட்பே...
சீக்கிரமா பொங்கல் கட்டுரைய படிச்சிடறேன்..

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோ எப்படி உள்ளீர்கள் ?.....எப்போ உங்கள் ஆக்கங்கள்
தொடரப் போகின்றீர்கள் ?...உங்கள் வரவு காண ஆவலாய் உள்ளது .

Malar Gandhi said...

Superb Story...sweet lettuce - very funny:):)

Suresh Subramanian said...

very nice.... thanks ... please read my blog www.rishvan.com and leave your comments.

பித்தனின் வாக்கு said...

//இன்றோ, நண்பர்களுக்கு தட்டில் கொடுக்கும் போதே, உளுந்து வடைதான் என்று அவர்கள் அடையாளம் கண்டு கொண்டு, அதை சாப்பிட்ட பின்னும் உளுந்து வடைதான் என்று ஒத்துக்கொள்ளும் அளவுக்கு என் சமையலில் நல்ல முன்னேற்றம்//

(இப்போ ஜூப்பரா சமைப்போம்ல..... நீங்க நம்பித்தான் ஆகணும். இல்லை என்றால், நீங்கள் கொளுத்தும் பட்டாசு வெடிக்காமல் போக .....!!!)”

intha three para vai nampuvathu kastam enralum nampittom.

soloman machan seivatahi ellam neenga seiyaratha pathivu podak koodathu.

பித்தனின் வாக்கு said...

//இன்றோ, நண்பர்களுக்கு தட்டில் கொடுக்கும் போதே, உளுந்து வடைதான் என்று அவர்கள் அடையாளம் கண்டு கொண்டு, அதை சாப்பிட்ட பின்னும் உளுந்து வடைதான் என்று ஒத்துக்கொள்ளும் அளவுக்கு என் சமையலில் நல்ல முன்னேற்றம்//

(இப்போ ஜூப்பரா சமைப்போம்ல..... நீங்க நம்பித்தான் ஆகணும். இல்லை என்றால், நீங்கள் கொளுத்தும் பட்டாசு வெடிக்காமல் போக .....!!!)”

intha three para vai nampuvathu kastam enralum nampittom.

soloman machan seivatahi ellam neenga seiyaratha pathivu podak koodathu.

Angel said...

Chitra and family,,

May this Christmas be filled
With happiness in all that you do
And may this joy continue
The whole year through.

Wishing you a Merry Christmas
And a Happy New Year.


From Angelin

காஞ்சி முரளி said...

தங்களுக்கும்...!
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் "இதயமார்ந்த கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்"....!

நட்புடன்...!
காஞ்சி முரளி...!

கோமதி அரசு said...

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சித்ரா.
புது வருட வாழ்த்துக்களும்.

உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பதிவு எழுதி நாள் ஆச்சே!
புது வருடத்தில் உங்களை எதிர்ப் பார்க்கிறேன்.

பித்தனின் வாக்கு said...

wish you happy new year to you and your family

ஜோதிஜி said...

வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Dino LA said...

கலக்கல் தலைவரே