Monday, April 11, 2011

வசந்த கால பறவைகளே.....

ஒரு வழியாக, கிடுகிடு ......வெடவெட..... குளிர் - வெண்பனி எல்லாம்  குறைந்து, வசந்த காலம் எங்க கிரமாத்தில எட்டி பார்க்க ஆரம்பிச்சிட்டுது....   எங்கே பார்த்தாலும் அழகு அழகா மலர்களும், பறவைகளும் ....... சூப்பரோ சூப்பர்! 


எங்க வீட்டு மரங்களில் குறிப்பாக இப்போ நிறைய பறவைகள் கூடு கட்ட ஆரம்பிச்சு இருக்குது.... 
கார்டினல் எனப்படும் சிவப்பு நிற பறவைகளும்,  Blue Jay எனப்படும் நீல நிற பறைவகளும் நிறைய பார்க்கிறேன்.  

 Red Cardinals: 

 Blue Jays: நம்ம ஊரு போகி பண்டிகையில் "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்று சொல்லி  வீட்டை   புது பொலிவுடன் தயார் படுத்துகிற மாதிரி,   வசந்தம் வரும் போது,  "Spring Cleaning" என்று சொல்லி வீட்டை தயார் படுத்துவாங்க....   ஒன்றரை ஆண்டுகள் முன்னால் தான்,   இங்கே ஒரு வீட்டை வாங்கி, எங்க கிராமத்து அத்தியாத்தை தொடங்கி விட்டோம்.  அதனால், நானும் இந்த வருடம்  வசந்த கால சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கியாச்சு.... 

வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலில், ஏதோ குப்பை மாதிரி தெரிய -  அதை சுத்தப் படுத்த அருகில் சென்ற பொழுதுதான் தெரிந்தது, அது குப்பை அல்ல - பறவையின் கூடு என்று. 

எங்கள் வீட்டு ஜன்னல்: 


 நல்லவேளை,  அவசரப்பட்டு கலைக்காமல் இருந்தேன்.   ஆர்வ கோளாறில்,  உள்ளே எட்டி பார்த்தேன்.  வெள்ளை அல்லது பிரவுன் நிறத்தில்,  கோழிமுட்டையே  பார்த்து பழகியவளுக்கு,  இது என்ன புதுசா ஒரு நிறத்துல முட்டை இருக்குதே என்று பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.  இது எந்த பறவையின் முட்டையாக இருக்கும் என்று காத்து நின்று கண்டு பிடிச்சேன். 

இந்த புகைப்படத்தை எடுத்தது நானே: சூப்பர் என்று சொல்லுங்கப்பா....!நான் எதிர்பார்த்த அழகு பறவைகள் எல்லாம் மரங்களில் கூடுகள் கட்டி இருக்க,  ஒரு சாதாரண ராபின் என்ற பறவை எங்க வீட்டு ஜன்னலை அழகு படுத்தி இருக்கிறது.  சந்தோசம் தாங்கல..... அந்த மகிழ்ச்சியைத்தான் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   

Robin Bird:  

சின்ன வயதில், எங்கள் தாத்தா பாட்டிம்மா வீட்டில் தான் இந்த மாதிரி குருவி கூடுகளை பார்த்த ஞாபகம்.  இப்போ, எங்க வீட்டிலேயும் ............ சூப்பரோ சூப்பர்!  எங்க குட்டீஸ்களும் நாங்களும்,  மாத்தி மாத்தி, ஜன்னலுக்கு உள்புறம் நின்று கொண்டு அந்த கூட்டை வேடிக்கை பார்ப்பது தான் நல்ல பொழுதுபோக்காக இருக்குது....  பிரவுன் பறவைக்கு ப்ளூ முட்டைகள்..... ஹையா..... Beauty of nature!

தாய்பறவை இரை தேட சென்ற பொழுது, அவசரமாக நான் கிளிக்கியது: ஆமாம், இந்த மகிழ்ச்சியான நேரத்திலேயும் ஒரு டவுட்டு ...... செல் போன் டவர் வந்து குருவிகளை அழித்து விட்டன என்று சொல்றாங்க..... ஆனால்,   எங்க ஊரில செல் போன் டவர்ஸ் இருக்கின்றன -  குருவிகளும் இருக்கின்றன.   பல நிற பறவைகளும் அழகு படுத்துகின்றன.  அப்படின்னா,  எங்கேயோ லாஜிக் இடிக்குதே.... ஒருவேளை.... கூடு கட்ட இடம் - வீட்டமைப்பு மற்றும் மரங்கள் - இல்லாமல் நகரங்களில் மட்டும் காணாமல் போச்சோ?  சரியா சாப்பாடு கிடைக்கலியோ?  போக்குவரத்து சப்தங்களிலும் நெரிசல்களிலும் பயந்து தொலைந்து போச்சோ? காகங்கள் மட்டும் எப்படி தப்பி பிழைக்கின்றன -  ஐந்து ரூபா "கோழி"  பிரியாணி வந்த பின்னும்?  ம்ம்ம்ம்ம்ம்.......

House Sparrow: 


இன்றைய தேதிக்கு, எங்க கிராமத்துல இன்னும்  வசந்தம் இருக்குது..... பறவைகளின் கூடுகள் இருக்கின்றன..... நான் எங்க வீட்டு ராபின் (Robin)  குருவி கூட்டை ரசிக்க போறேங்கோ! 

  நன்றி:  பறவைகளின் படங்கள்:  கூகிள் அக்கா. 

133 comments:

எல் கே said...

இந்தக் கலர் முட்டை இப்பதான் நானும் பார்க்கிறேன். கிராமத்து வாழ்வு கொடுத்து வெச்சவங்க நீங்க. என்ஜாய் பண்ணுங்க... படம் நல்லா இருக்குங்க :)

கே.ஆர்.பி.செந்தில் said...

புதிய தகவல்...

Prabu said...

முட்டைக் கலர் வித்தியாசமாத்தான் இருக்குது இதுக்குப் பெயர்தான் "ராபின் ப்ளூ"வோ!! ஹிஹி

செல்ஃபோன் டவர்களுக்கும் குருவிகள் மறைந்துபோனதற்கும் அதிக தொடர்பில்லை என்று முன்பே சுஜாதா அவர்கள் "கற்றதும் பெற்றதும்"மில் எழுதியிருக்கிறார்....

வெயில் சுட்டெறிக்கின்ற ஏப்ரல் மாதத்தில் வசந்தகாலப் பறவைகளேன்னு பதிவு! ஹ்ம்ம்ம்ம்... கோடைகால எறும்புகளே...ன்னு நாங்க நொந்துபோய் இருக்கோம் வெப்பம் தாளாமல் வீட்டுச்சுவர்களிலும் தரைகளிலும் புகுந்துகொண்டு கால்பட்டால் கடித்துவைக்கும் சித்தெறும்புகளைப் பார்த்து!!

Nice post as usual..... :-)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நிஜமாகவே போட்டோ சூப்பர்..

கனாக்காதலன் said...

Nice pictures :)Very nice post !

Gayathri Kumar said...

Cute eggs and lovely snaps..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ப்ளூ கலர்ல முட்டையை நானும் இப்பதான் பார்க்கிறேன்.

அஞ்சா சிங்கம் said...

மிக மிக மிக மிக அழகான பதிவு எனக்கு குருவிகள் மேல் அளப்பரிய காதல் உண்டு ....................

Nithu Bala said...

Lovely colored egg..nalla ezhuthi irukeenka..photo arumai :-)

சென்னை பித்தன் said...

//நான் எங்க வீட்டு ராபின் (Robin) குருவி கூட்டை ரசிக்க போறேங்கோ! //
இதையெல்லாம் ரசிக்கவும் தெரிய வேண்டுமே.வசந்தகாலத்தை அனுபவியுங்கள்.
நீல முட்டை அழகு!

வை.கோபாலகிருஷ்ணன் said...

பறவைகளின் படங்களும், முட்டைகளின் கலரும் அதைப்பற்றிய தங்கள் வர்ணனைகளும் அடடா சூப்பரோ சூப்பருங்க. நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

நல்ல ரசனையுள்ள எழுத்தாளராகிய தங்கள் வீட்டில் அந்தப்பறவைகள் கூடு கட்டியிருப்பது நாங்கள் செய்த பாக்யம் தான்.

இல்லாவிட்டால் இதுபோன்ற அருமையான விஷயங்களை நாங்கள் எப்படி அறிய முடியும்?

அந்தக்குட்டிப்பறவைகளுக்கு என் அன்பான முத்தங்கள்.

Madhavan Srinivasagopalan said...

இயற்கையின் பாணியே சுகம்தான்...
இயற்கை வளங்களைக் காப்போம்..
அனைத்து உயிர்களையும் மதிப்போம்..

ஒரு நிமிஷம்.. தங்க்ஸ் கிட்டே இருந்து போன்..
ம்.. சரி.. சரி. ஹிட்(காக்ரோச் ஹிட்) தான.. ஈவினிங் வாங்கியாறேன்..

Anonymous said...

இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு...
நலம் தானே சித்ரா????

அப்புறம் புதியதாய் தகவல் பதிவு தந்தமைக்கு நன்றி.

அமைதி அப்பா said...

//நான் எதிர்பார்த்த அழகு பறவைகள் எல்லாம் மரங்களில் கூடுகள் கட்டி இருக்க, ஒரு சாதாரண ராபின் என்ற பறவை எங்க வீட்டு ஜன்னலை அழகு படுத்தி இருக்கிறது.//

சாதாரண ராபின்-க்கு கூட உங்களின் அன்பு புரிந்திருக்கிறது.
நீல நிற முட்டை அதிசயம்!

பாலா said...

இங்க வெயில் வெந்துகிட்டு இருக்கு... வசந்த காலமா... ம்ம் :(
பறவை மற்றும் முட்டை படங்கள் சூப்பர்.

காக்கவும் ரொம்ப நாள் எஸ்கேப் ஆக முடியாது... கொஞ்ச நாள் முன்பு காக்கா ஒன்று கூடு கட்ட wire ஒன்றை எடுத்துச்செல்லும் அவலத்தை வீட்டருகில் பார்க்க நேர்ந்தது.

Jaleela Kamal said...

வசந்த காலம் என்றதும் , பாடல் நினைவுக்குவந்தது

வசந்த கால நினைவுகளே வைர மணி நீரலைகள்.......
அவ்வளவு தான், அதை முனு முனுக்க ஆரம்பித்துவிட்டேன்,
ஹையா புளுகலர் முட்டை இப்பதான் பார்க்கிறேன், சூப்பர் படஙக்ள்

சிநேகிதி said...

நீங்க இருக்கிற கிரமத்து பறவையின் முட்டை கூட அழகாக இருக்கிறது..

போட்டோஸ் ரொம்ப அழகு

ஸ்ரீராம். said...

கறுப்பு வெள்ளை முட்டைகளையே பார்த்துப் பழகிய கண்களுக்கு கலர் முட்டை கலர் டிவி முதலில் பார்க்கும் சந்தோஷத்தைத் தருகிறது!

Kalpana Sareesh said...

OMG ippo dhaan ivalavu superaana colurfulaana eggs nanna parkiren .. beautiful n colorful birds.. enjoy!!! Good post for me for this perfect summer!!!

வெட்டிப்பேச்சு said...

அற்புதமான புகைப்படங்கள்..

படிக்கும்போதே மனதிற்கு மகிழ்ச்சி..
இது இயற்கையுடன் நாம் கொள்ளும் ஒரு உறவுதான்..

நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

படம் சூப்பரோ சூப்பருங்க.பறவை அழகா முட்டை அழகா? என்று பட்டிமன்றமே வைக்கலாம் போல பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.பகிர்வுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.
சிட்டுக் குருவி,சிட்டுக்குருவி சேதி தெரியுமா??

வைகை said...

எத்தன குருவி பார்த்தாலும் வீட்டு முற்றத்தில் கண்ணாடி பார்த்து கொத்தும் சிட்டு குருவிகளை என்னால் மறக்கமுடியாது! ஏனோ இப்போது அவைகளை பார்க்கமுடிவதில்லை!

ராமலக்ஷ்மி said...

நீலமுட்டைகளும் குருவியின் கூடும் மிக அழகு சித்ரா. குருவி ஒரு திறமையான ஆர்கிடெக்ட். அதன் கூட்டை படமெடுத்து ஃப்ளிக்கரில் பகிர்ந்திருக்கிறேன் நானும்.

குருவி பாடும் இனிய கானம் போன்றதாக இப்பதிவு:)! பகிர்வுக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

மொக்கராசா said...

ஆஹா ரெம்ப சந்தோசமா இருக்கு உங்க பதிவை படிக்கம்பொழுது....

இங்க நல்ல வெயில் சுட்டெரிக்குது,தேர்தல் வேற ...கரண்ட் கட் வேற.......

தமிழ் உதயம் said...

பறவைகளோடு வாழ்கிறிர்கள். மகிழ்ச்சி. எந்த கவலையுமே தோன்றாதே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முட்டை எனக்கு..

விக்கி உலகம் said...

மீண்டும் குழந்தையாய் மாறி ரசிக்க வைத்ததுக்கு நன்றி சகோ!

கக்கு - மாணிக்கம் said...

எடுத்த படங்கள், நெட்டில் சுட்ட படங்கள் எல்லாமே அழகு.
வசந்த விழாவிற்கு வாழ்த்துக்கள்.

சின்னப்பயல் said...

அருமையான புகைப்படங்கள்..!

MANO நாஞ்சில் மனோ said...

அய் அசத்தலா இருக்கே...

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த புகைப்படத்தை எடுத்தது நானே: சூப்பர் என்று சொல்லுங்கப்பா....!//

சூப்பர் குட்....

MANO நாஞ்சில் மனோ said...

பறவைகள் நம் அருகில் வாழ்வது நமது மனசை லேசாக்கும். இது எனது அனுபவ கண்டுபிடிப்பு...

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் எப்பிடியோ உங்க பிள்ளங்களுக்கும் நல்ல டைம் பாஸ்ட் ஹே ஹே ஹே ஹே...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான புகைப்படம் சித்ரா..:)

எங்கவீட்டுல போனவாரம் ஒரு கூடு இருந்தது. பால்கனியில் வைத்திருக்கும் ஒரு திறந்த அலமாரியில் பொருட்களுக்கு இடையில். ..

அங்க இருந்தா பூனையார் சாப்பிட்டிருவாரேனு அந்தக்கூட்டைத் தூக்கிப்போட்டுட்டேன். ஆனா அடுத்தநாளே அதை கொண்டுவந்து வச்சி ரெண்டு முட்டையும் போட்டிருச்சி..இனி எடுக்கமுடியாது பாவம். ஆனா பூனையாருக்கும் செம ஐடியா.. அடிக்கடி விசிட் செய்யரவர் இந்த பறவை கூடுகட்டரதைத் தெரிஞ்சுகிட்டு இப்பல்லாம் வரதே இல்லை.. மொத்தமா விருந்தன்னிக்குவருவார் போல..கடவுளே..

யாழ். நிதர்சனன் said...

நடத்துங்க தல


புகையால் எரியும் வாழ்வு
படிக்க வேண்டிய பதிவு http://tamilaaran.blogspot.com/2011/04/blog-post_4879.html

asiya omar said...

blue eggs படம் சூப்பரோ சூப்பர்.பகிர்வுக்கு மகிழ்ச்சி.ஊரில் எங்கள் பூர்வீக வீட்டு கண்ணாடியில் கூடு கட்டும் குருவிகள் எல்லாம் நினைவுக்கு வராங்க,அப்ப அப்ப அவங்க கண்ணாடி பார்த்து கொத்தி குதூகலிப்பதும் இப்ப மலரும் நினைவுகள்.என்ஞாய்...அய்யோ அந்த முட்டையை விட கூடு அழகு,முட்டையும் கூடும் சேர்ந்து அழகோ அழகு.

middleclassmadhavi said...

அருமை! அடுத்தடுதத பருவத்து புகைப்படங்களையும் எதிர்பார்க்கிறேன்!

kadhar24 said...

இயற்கையை ரசிக்க ஆரம்சிட்டிங்க.குழந்தையாக மாறிட்டிங்க.வாழ்த்துக்கள்.

சுசி said...

ராபின் அம்மாவுக்கு பிரசவம் ஆனதும் படம் எடுத்து போடுங்க சித்ரா.

இங்கே இப்டி கலர் கலரா குருவிகள் இல்லை :(

சிட்டுக்குருவி இருக்கு.

அழகா இருக்கு படம். சூப்பரோ சூப்பர்.

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

இதை பார்க்கும் போது நம்ம ஊரில வசந்த காலம் இல்லையேன்னு வருத்தமா இருக்கு... கழிந்த வசந்த காலம் என்றென்றும் என் நினைவில் இருக்கும் :-)

goma said...

red cardinal இந்த முறை பிட் போட்டியில் பங்கேற்க பறந்து வரட்டும்...தலைப்பு சிகப்பு .....

அமுதா கிருஷ்ணா said...

அந்த முட்டைகளை பார்த்ததும் நீல நிற பறவையின் முட்டையாக தான் இருக்கும் என்று நினைத்தேன். சூப்பராய் இருக்கு.

Nagasubramanian said...

படங்கள் அருமை அதைவிட உங்கள் (உடல் இளைக்க..) கடிகாரம் அருமையோ அருமை

வல்லிசிம்ஹன் said...

நீல முட்டையை இப்போதுதான் பார்க்கிறேன். வீட்டு ஜன்னலும் கூடும் அழகோ அழகு. உங்கள் வீட்டினுள்ளே
நீங்கள் சுத்தம் செய்ததும் வெளியே பரிசாக இந்தக் கூடு வந்து விட்டதோ.
மனம் நிறைந்த வாழ்த்துகள் சித்ரா.

KParthasarathi said...

நான் இருக்கும் ஊரில் இன்னும் வசந்த காலம் பிறக்க வில்லை.உற்று பார்த்தல் மரங்களில் சில துளிர் விட்டு இருப்பது தெரிகிறது.நீங்கள் அதிர்ஷ்டசாலி போல..என் கண்ணில் ஒரு பறவை கூட தெரியவில்லை.
Concrete அமைப்புகளில் சாதாரண குருவிகள் கூட மறைந்து விட்டன சென்னையில். ஆனால் டில்லியில் தென்படுகிறது.
எது எப்படியோ உங்கள் படங்கள் மிகவும் நேர்த்தியாக உள்ளன

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நீலநிற முட்டைகள். நான் பார்த்ததேயில்லை. சுப்பர் படம்.

வித்தியாசமான கடவுள் said...

It's about the habitat of the bird. The sparrows are extinguished from most of the cities because of the environment they lived have been changed. Now a lot of high rises came in and the food culture is also changed. Earlier the Sparrows had good enough food in form of grains that was dried up in the roadside; not so spoiled worms as their food. Now you cannot see the people drying the grains in the roadside; the soil is contaminated with the pesticides and so the habitats changed; and the sparrows got extincted. So now there is a movement called Save Our Sparrows (SOS) started to save them; the World House Sparrow Day is celebrated on 20th March. For more info just follow the links...

http://www.worldsparrowday.org/

http://birding.about.com/b/2011/03/16/save-our-sparrows.htm

In the meantime, last month I seen a pure cream color sparrow in my visit to the Tuticorin district and tried to take a snap but it fly away before I click... :(

RVS said...

அமெரிக்க கிராமம் நல்லா இருக்குங்க.. பல வர்ணங்களில் குருவிகள்... அழகோ அழகு... ;-))

Kurinji said...

kangalukku migavum kulumaiyaga irunthathu. Thanks for sharing.

கோவை2தில்லி said...

வசந்த காலத்தை கிராமத்தில் நல்லா எஞ்சாய் பண்ணுங்க சித்ரா.

போளூர் தயாநிதி said...

முட்டைக் கலர் வித்தியாசமாத்தான் இருக்குது
மிக மிக மிக மிக அழகான பதிவு எனக்கு குருவிகள் மேல் அளப்பரிய காதல் உண்டு அருமையான புகைப்படங்கள்..!

சத்யராஜ்குமார் said...

பறவைகளின் மேல் ஈடுபாடு இருந்தால் உங்கள் வீட்டு கொல்லைப் புறத்தில் ஒரு Bird Feeder வாங்கி தொங்க விடலாம். வருடம் பூராவும் விதவிதமான பறவை விருந்தாளிகள் வந்து போவார்கள். குழந்தைகளும் கண்டு மகிழ்வார்கள்.

Priya said...

அற்புதமான புகைப்படங்கள்... ரசித்துப்பார்த்தேன்... படித்தேன்!

ஆனந்தி.. said...

கண்ணா பின்னான்னு பொறாமையுடன் இந்த பின்னூட்டம் போடுகிறேன்...:)))) எனக்கும் அந்த ஜன்னல் வழியா நின்னு உங்களை தள்ளி விட்டுட்டு எட்டி எட்டி அந்த பறவை கூட்டை பார்க்க ஆசை...எவளவு அழகான கலரில் முட்டை..நல்ல வேளை..நீங்க பழக்க தோஷத்தில் அதையும் அவிச்சு சாப்டாமல் இருந்ததுக்கு ஒரு பெரிய ஓ...:)))) மக்கா...என்சாய்...வேறென்ன சொல்ல...எங்க வீட்டு முன்னாடி இருந்த வேம்பு,புங்கை ரெண்டு மரமும் ரோடு போடும்போது கார்பரஷேன் ஆளுங்க கண்டம் பண்ணிட்டு போய்ட்டாங்க...நிதமும் கேட்கும் குயில் சத்தம் எல்லாம் மிஸ் பண்றோம்...ம்ம்...மீண்டும் பொறாமையோடு...எரிச்சலோடு...கடுப்போடு...காதெல்லாம் புகையோடு...:)) இந்த பின்னூட்டத்தை முடிக்கிறேன்...:)))))))

தெய்வசுகந்தி said...

சூப்பர் போட்டோ!! Enjoy பண்ணுங்க சித்ரா!!

Jay said...

lovely clicks chitra...
Tasty Appetite

Vijis Kitchenan and Creations said...

சித்ரா சூப்பரா உங்க எழுதி அசத்திட்டிங்க, நான் கூட நினைத்தேன் எங்கு பார்த்தாலும் ஈஸ்டர் எக் கலர் க்லரா கிடைக்கிறது. அதுவோ என்று பார்த்தேம் முழுவதும் படித்ததும் அஹா என்ன அற்புதமா கலரில் பார்க்கவே இருக்கு. என்னோட பேவரிட் கலரில் எக்கா? வாவ்
என் பசங்களுக்கும் ப்ளூ கல்ர் பிடிக்கும் இன்றைக்கு பள்ளியில் இருந்து வந்ததும் இந்த படத்தை காட்டனும் சிதரா சந்தோஷப்படுவாங்க.
ம். எங்க வீட்டிலேயும் 2 கூடு கட்டி இருக்கே ஆனால் ப்ளூ கலர் எக்கெல்லாம் இல்லை சித்ரா சோகமா இருக்கு. என் கணவர் சொன்னார், நீ அடிக்கடி போய் பார்த்தால் அது இடத்தை மாற்றிடும் என்று அதனால் நான் படம் கூட எடுக்கல்லை. அடுத்தது நானும் போய் எடுக்கிறேன்.
சூப்பர் பதிவு. அடுத்து குட்டி வந்ததும் படம் போடுங்கோ. மறக்காமல்.

Vishy said...

கவித்துவமான பதிவு.. இயற்கையின் மீது உங்கள் ரசனை அருமை..

vanathy said...

nice post & photos!

akulan said...

photos நல்லா இருக்குது....(சொல்லிடோமில்ல)..
எங்கள் பகுதியில் குளிர் இன்னமும் போகவில்லை....

S.Menaga said...

நீலகலர் முட்டையை நானும் இப்பதான் பார்க்கிறேன்..அழகான புகைப்படங்கள்,என்சாய் பண்ணுங்க சித்ரா!!

vinu said...

appo americaa laa vaathiyaaarunga ellam blue color penla thaan muttay poduvaangalaaa?


he he he he he# doubbttuuuu

Balaji saravana said...

ஃபெண்டாஸ்டிக் சித்ராக்கா! :)

இளங்கோ said...

//அந்த மகிழ்ச்சியைத்தான் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.//
அந்த மகிழ்ச்சியில் எங்களையும் பங்கு பெற வைத்தமைக்கு நன்றிகள்.
போடோஸ் எல்லாம் நல்லா இருக்குங்க.

ராம்ஜி_யாஹூ said...

பதிவைப் படித்ததும் எனக்குத் தோன்றியது:
உங்கள் ஊர்க்காரரும் எங்கள் தெருக்காரருமான, கலாப்ரியா அவர்களின் வைர வரிகள்

இந்தத் திசை தவறிய பெண் பறவை

தன் கூட்டுக்காய், தன் குஞ்சுக்காய்

அலைமோதிக் கரைகிறது

எனக்கதன் கூடும் தெரியும், குஞ்சும் தெரியும்

இருந்தும் எனக்கதன் பாஷை தெரியவில்லை

# கவிதை வீதி # சௌந்தர் said...

உங்கள பிடிப்பது கஷ்டமாக இருக்கிறது...

அதான் வந்துட்டோம்ல...

# கவிதை வீதி # சௌந்தர் said...

கக்கை குருவி என் ஜாதி மன்னிக்கவும்..
இனி நம் ஜாதி..

வருண் said...

They are beautiful! பறவைகளில் என் "ஃபேவரைட்"னா புறாக்கள்தான். அவைகளை விட்டுட்டீங்க. :( ஒருவேளை வசந்தகாலப் பறவைகள் இல்லையா அவைகள்?

-------------

மற்றபடி வசந்தகாலம்னா நம்ம "போலன் அலர்ஜி" உள்ளவங்கதான் பாவம் :(

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அழகு கொஞ்சுது சித்து.. சூப்பர் ப்ளூ முட்டைகளும் ராபின் குருவிகளும்..:)

Anonymous said...

முட்டையும் பறவையும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு...

அம்மாக்கும் காமிச்சேன் அம்மாவும் ரசித்து பார்த்தாங்க முட்டைகளை..

அடுத்தமுறை உங்க வீட்டையும் படம் எடுத்து போடுங்க..

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் சித்ராம்மா.

ஜீ... said...

முட்டையே கலர்புல்லா சூப்பரா இருக்கே! 1st டைம் பார்க்கிறேன் இப்படி!:-)

நிஷாந்தன் said...

யாத்தே ... என்னவொரு வண்ணமயமான பதிவு !

( இனி வருவதை நடிகர் திலகத்தின் ஸ்டைல் மாடுலேஷனில் படிக்கவும் )

" மே...டம். கலக்கிப்புட்டீங்களே.. ! அங்கங்கே கலர்ப் படம் இருக்கற பதிவு பார்த்திருக்கேன். ..ஆனா கலர் மட்டுமே வலைப்பக்கமா
ஜொலிக்கறத இப்பத்தானே பாக்கறேன்..

நா எத சொல்ல , எத விட ? சும்மா செகப்பு கலர்லயும், ஊதா கலர்லயும் மின்னுற குருவிங்கள சொல்றதா , கண்ணப் பறிக்கற முட்டையோட அழக சொல்றதா.. இல்ல , ஆண்டவன் உங்க வலைப் பக்கத்துக்காகத்தான் வர்ணத்தைப் படைச்சானான்னு மனசுக்குள்ளே தோணுதே அத சொல்றதான்னு புரியலையே . யம்மாடி... மொத்தத்துல எல்லாமே கண்ணு வழியா எறங்கி நெஞ்சாங் கூட்டை குளு குளுன்னு ஆக்கிடுச்சும்மா மகராசி. "

சொந்த வாக்கு மூலம்: மேற்கண்டவை யாவும் உதட்டிலிருந்து வருபவை அல்ல - உள்ளத்திலிருந்து !

ஹேமா said...

வசந்தகாலம் வந்த சந்தோஷம் உங்கள் பதிவில்.அழகா எடுத்திருக்கீங்க படம்.குருவி கூடு கட்டினா நிறைய அதிஷ்டமாம் சித்ரா !

செங்கோவி said...

சூப்பர்!

Ammu said...

பறவைகள் அனைத்தும் அழகோ அழகு

"ஆமாம், இந்த மகிழ்ச்சியான நேரத்திலேயும் ஒரு டவுட்டு ...... செல் போன் டவர் வந்து குருவிகளை அழித்து விட்டன என்று சொல்றாங்க..... ஆனால், எங்க ஊரில செல் போன் டவர்ஸ் இருக்கின்றன - குருவிகளும் இருக்கின்றன. பல நிற பறவைகளும் அழகு படுத்துகின்றன. அப்படின்னா, எங்கேயோ லாஜிக் இடிக்குதே.... ஒருவேளை.... கூடு கட்ட இடம் - வீட்டமைப்பு மற்றும் மரங்கள் - இல்லாமல் நகரங்களில் மட்டும் காணாமல் போச்சோ? சரியா சாப்பாடு கிடைக்கலியோ? போக்குவரத்து சப்தங்களிலும் நெரிசல்களிலும் பயந்து தொலைந்து போச்சோ? " - மில்லியன் டாலர் கேள்விகள் :)))

பலே பிரபு said...

இங்கு கூட நிறைய பேர் சிட்டுக் குருவிகளை காணவில்லை என்கிறார்கள் ஆனால் எங்கள் ஊரில் பார்க்க முடிகிறது. என்ன ஒன்று கிளிகள் தான் காணவில்லை.

வீட்டுக்குள்ளேயே விருந்தாளிகள் என்ஜாய் பண்ணுங்க.

ராஜ நடராஜன் said...

வசந்த காலம்ன்னு சொல்லிட்டு ஆரஞ்சு கலர் இலைகள் மரத்தைக் காணோமே:)

ராஜ நடராஜன் said...

//இந்த மகிழ்ச்சியான நேரத்திலேயும் ஒரு டவுட்டு ...... செல் போன் டவர் வந்து குருவிகளை அழித்து விட்டன என்று சொல்றாங்க..... //

அதெல்லாம் சும்மா!நம்ம ஆளுகளுக்குப் பயந்துட்டு உங்க ஊருக்கு House Sparrowன்னு பெயர் மாத்திகிட்டு,சிட்டுக்குருவின்னு அரபிகள் ஊருக்கு வந்துடுச்சு:)

சிகனலுக்கு நிற்கும் போது பக்கத்துல இருக்குற மரங்களில் துள்ளிக்குதிக்கும் போது நம்ம ஊரை நினைச்சுப் பெருமூச்சுதான் வருது:(

Chitra said...

ராஜ நடராஜன் said...

வசந்த காலம்ன்னு சொல்லிட்டு ஆரஞ்சு கலர் இலைகள் மரத்தைக் காணோமே:)


......அது இலையுதிர் காலத்தில் (Autumn/Fall season) அப்படி இருக்கும்... வசந்த காலத்தில், different shades of green. :-)

Malar Gandhi said...

Wow beautiful clicks. Hope you guys are having good time - bird watching:) Same here, started my spring cleaning ritual. There are lots of birds this year, multicolor small sparrows, geese, robin, jay bird, etc...I feed them with grains. Love their voice early in the morning.

தாராபுரத்தான் said...

பாசப்பறவை..பறவைபாசம்.

HVL said...

முட்டைகள் அழகா இருக்கு. இப்ப தான் இப்படி ஒரு முட்டைய பாக்கறேன்.

meandmythinkingcap said...

Spring..love the season. Short skirts, spagetti tops and gorgeous ladies and kids in bike,and lovely babies in strollers and colorful trees and flowers..hmmm love the sound of lawnmower and scenery

Anonymous said...

பதிவையே வசந்த காலமாக மாத்திடுச்சி வண்ணப்பறவைகளும் நீல நீற முட்டையும்.. நீல நிற முட்டை புதிய தகவல்..சித்ராவை எங்களைப் போலவே பூக்களுக்கும் பறவைகளுக்கும் பிடிச்சிப் போச்சி..

GEETHA ACHAL said...

போன வருடம் இங்கு கூட குருவி கூடு கட்டி இதே மாதிரி தான் ப்ளு கலர் முட்டையினை பார்த்து எங்களுக்கு ஒரே ஆச்சரியம்..

இந்த தடவையும் அக்‌ஷதாவிற்கு Birdச், Nest கட்ட வேண்டும்...இல்லை என்றால் நானே அதுக்கு Nest கட்டி கொடுக்கிறேன் என்று எங்கு போனாலும் Branches, Leaves என்று பொறுக்கி கொண்டு இருக்கின்றாள்...

Ramani said...

மிகுந்த ரசனையுடன் வாழ்வதால்தான்
உங்களால் இத்தனை அழகான
படங்களையும் பதிவுகளையும்
தர முடிகிறது
பறவைகளிடம் மறக்காமல்
இந்தப் பாடலை சொல்லவும்
"நீ வந்த இடம் நல்ல இடம்
வரவேண்டும் எங்கள் மகாராணி...

அமைதிச்சாரல் said...

அழகோ அழகு.. படங்களும் இடுகையும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. எத்தனை எத்தனை பறவைகள், விலங்கினங்கள் – முன்னேற்றம் என்ற பெயரில் எத்தனை விஷயங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்க நினைக்க வருத்தம் தான் மிஞ்சுகிறது!

கே. பி. ஜனா... said...

சொல்லிட்டேன்.. Super!

சசிகுமார் said...

நீல நிற முட்டையை பார்த்தவுடன் அந்த முட்டைகளை நீல நிற பறவை தான் போட்டிருக்கும் என்று எனக்குள்ளேயே ஒரு அதிமேதாவி கணக்கு போட்டேன் அதை தப்பாக்கிடீங்க

நட்புடன் ஜமால் said...

கிராமத்து வாழ்வே வாழ்வு தாங்க

அந்த பறவைகளும் அந்த முட்டைகளும் மிக அழகாய்

இதே போன்ற வசந்த காலம் நம் மனதில் இந்த இந்திய நாட்டில் எப்போதான் ....

நாய்க்குட்டி மனசு said...

அந்த கடைசி படம் சோவிகளுக்கு நடுவில் குருவி, அதென்ன அதன் வாயில் ஏதோ ? அட ! அதுவும் ஒரு சோவி தானா?

raji said...

ஐயோ சித்ரா!எனக்கு ரொம்ப பொறாமை பொறாமையா வருது.
எனக்கும் சேர்த்து அந்த பறவைகளையும் கூடுகளையும் முக்கியமா ப்ளூ கலர்
முட்டைகளையும் ரசிக்கணும் சொல்லிட்டேன்.அது குஞ்சு பொரிச்சதும் ஃபோட்டோ
போடுவீங்களா?

நாடோடி said...

நான் இருக்கு இட‌த்தில் நிறையா புறாக்க‌ளை பார்க்க‌ முடிகிற‌து... :)

ப‌திவு வ‌ழ‌க்க‌ம் போல் சூப்ப‌ர்..

அப்பாவி தங்கமணி said...

சிவப்பு நிற பறவை - வாவ்... ரெம்ப அழகா இருக்கு..

//Blue Jays:// - அவங்களா நீங்க? சொல்லவே இல்ல..:))

//இந்த புகைப்படத்தை எடுத்தது நானே: சூப்பர் என்று சொல்லுங்கப்பா....!//
சூப்பரோ சூப்பர்... முட்டைய சொன்னேன்...ஹி ஹி ஹி...;)) குட்டி குருவி வெளிய வந்தப்புறம் மறக்காம போட்டோ புடிச்சு போடுங்க... eager to see... thanks

கலக்கல் போஸ்ட்... எப்பவும் போல... அப்படியே refresh ஆய்டுச்சு... தேங்க்ஸ்...:))

Happy Spring.... and much happier summer too...:)

Bragi said...

அருமையான வலைபதிவு.. அழகான வர்ணனை மற்றும் நீல நிற முட்டைகள் புதிய தகவல்.. உண்மை தான் குருவுகளை சென்னையில் பல வருடங்களாக பார்க்காமல் New York இல் பார்த்து மகிழ்தேன்..

Bragi said...

அருமையான வலைபதிவு.. அழகான வர்ணனை மற்றும் நீல நிற முட்டைகள் புதிய தகவல்.. உண்மை தான் குருவுகளை சென்னையில் பல வருடங்களாக பார்க்காமல் New York இல் பார்த்து மகிழ்தேன்..

இன்றைய கவிதை said...

சித்ரா

கொடுத்து வைத்தவர் நீங்கள் வசந்தம் தங்கள் வாசல் தேடி வந்திருக்கிறது சும்மா இல்லை கொஞ்சம் புது ஜன்னத்தோடு

அருமை , படங்களும் சூப்பரோ சூப்பர்

நன்றி
ஜேகே

R.Gopi said...

அட... சிவப்பு... நீலம்...பிரவுன் நிறங்களில் பறவைகள்... பலே நீல நிறத்தில் “முட்டைகள்”... முதல் முறையாக இந்த நிறத்தில் முட்டைகள் பார்க்கிறேன்...

படு சூப்பர்....

ஜெரி ஈசானந்தன். said...

// பிரவுன் பறவைக்கு ப்ளூ முட்டைகள்..... //
எங்கயோ தப்பு நடந்துருக்குப்பா..

ஜெரி ஈசானந்தன். said...

உங்கள் பதிவுகளில் எனக்கு ப்பிடித்த டாப் டென் பதிவுகளில் இந்த பறவைகளுக்கும் இடமுண்டு.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

குழந்தை குதூகலத்தோடு எழுதி இருக்கிறீர்கள். நீல நிற முட்டை வியப்பாகவே இருக்கிறது, புகைப் படங்கள் அருமை. இயற்கை தீட்டும் வர்ணங்களுக்கு ஈடு இணை இல்லை.

நிரூபன் said...

ஒரு வழியாக, கிடுகிடு ......வெடவெட..... குளிர் - வெண்பனி எல்லாம் குறைந்து, வசந்த காலம் எங்க கிரமாத்தில எட்டி பார்க்க ஆரம்பிச்சிட்டுது.... எங்கே பார்த்தாலும் அழகு அழகா மலர்களும், பறவைகளும் ....... சூப்பரோ சூப்பர்!//

நீங்கள் ரொம்ப கொடுத்து வச்சனீங்க.. இயற்கை அனுபவிக்க, இயற்கையுடன் இணைந்திருப்பது போன்ற உணர்வினைப் பெற்றவர்கள் என்பதனை, உங்கள் இயற்கை வரணனையாக அமையும் பதிவின் முதல் பந்தியே விளக்குகிறது.

நிரூபன் said...

வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலில், ஏதோ குப்பை மாதிரி தெரிய - அதை சுத்தப் படுத்த அருகில் சென்ற பொழுதுதான் தெரிந்தது, அது குப்பை அல்ல - பறவையின் கூடு என்று.//

நீங்க ரொம்ப கொடுத்து வச்சனீங்க. நம்மூர் வழக்கப் படி குருவி கூடு கட்டினால் அதிஸ்டம் உண்டாகுமாம், நல்ல காலம் பொறக்குமாம்.

நிரூபன் said...

இந்த புகைப்படத்தை எடுத்தது நானே: சூப்பர் என்று சொல்லுங்கப்பா....!//

நாங்க நம்புறம். ஆனால் உங்க வீட்டுக்காரர் காப்பி றைட்ஸிற்கு உரிமை கோரும் சவுண்ட் பின்னாடி
கேட்குதே;-)))

நிரூபன் said...

ஐந்து ரூபா "கோழி" பிரியாணி வந்த பின்னும்? ம்ம்ம்ம்ம்ம்.......//

இப்பத் தான் ஒரு சூடான சிக்கன் புரியாணி சாப்பிட்டு வந்திருக்கிறன், சாப்பிட்டதை, வாமிட் வரப் பண்ணுறீங்களே...
ஹி..ஹி......

பதிவு இயற்கையினை இணையத்தினுள் புகுத்தி, எங்களையும் இலயிக்க வைத்திருக்கிறது.

பதிவு போட்ட உடனே ஜனநாயக கடமையை நிறை வேற்றினேன். ஆனால் இப்பத் தான் வாசித்து, கருத்துரைகள் வழங்க முடிஞ்சுது.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நீலக்கலர் முட்டைகள் அவ்வளவு அழகு

Jeyanthi said...

ரொம்ப அழகா இருக்கு சித்ரா !

குட்டி முட்டை மாதிரி குட்டி கவிதை :)

''ஒய்யார வீடு பக்கத்துல

ஓரமா ஒரு கூடு கட்டி

என் வாரிசுகள விட்டுட்டு போறேன்

பசிக்கு இறை தேடிட்டு பறந்து வந்துடுறேன் !

வீட்டுகார அம்மா பத்திரமா பாத்துகோங்க ''

சிநேகிதி said...

உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தோழி பிரஷா said...

nice post.
happy new year

Ramani said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
எனது இனிய
மனங்கனிந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

நல்லாயிருக்கு...வாழ்த்துக்கள்!

சரியில்ல....... said...

ஆனந்தி மேடம் சொன்னது போல நானும் ஏகப்பட்ட வயித்தெரிச்சலோடு சொல்கிறேன்... உங்கள இட்டாந்து சென்னைல விட்டால் தான் தெரியும்...
வெறும் காய்ந்து போன காக்கவும்.. குறுக்கே வரும் தண்ணி லாரியின் ஹார்ன் சத்தமும் என்ன பாடாய் படுத்தும் என்று.....
ம்ம்ம்... உங்களுக்கு அப்பிடியொரு ராஜ யோகம்.. ம்ம்.... நடத்துங்க....

அன்புடன் மலிக்கா said...

ஹை குரிவி குருவி முட்டை எல்லாம் சூப்பராக இருக்கு
கிராமத்தின் வாழ்க்கை நரகத்தில் ஏது அச்சோ நகரத்தில் ஏது. எல்லாம் அவசரமயம்.

தகவல் களஞ்சியம் சித்ரா வழ்க வாழ்க..

பார்வையாளன் said...

மிக மிக ரசித்து படித்து இடுகை இது..

படங்களும் அருமை..

மாலதி said...

உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

திருவாரூர் சரவணன் said...

இதையெல்லாம் படிக்கும்போது நிறையவே இழந்துகிட்டு இருக்கோம்னு புரியுது.

ஒரு நாள் மொத்தமா சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம, கத்தை கத்தையா பணத்தையும் கம்ப்யூட்டர் மாதிரியான பொருட்களையும் மட்டும் வெச்சுகிட்டு புலம்ப போறோம். அது மட்டும் தெரியுது.

மாதேவி said...

வசந்தகாலப் பறவைகள் அழைக்கின்றன...

சித்திரை புதுவருடவாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Sunitha said...

very nice nga

SELVENTHIRAN said...

நான் அற்பமாக எழுதுகிறவன். சொற்பமாக வாசிக்கிறவன். இணைய தேடலில் மிகுந்த தற்செயலாக உங்களது பக்கங்களை வாசிக்க நேரிட்டது. பொ.ம.ராவின் புதல்வி என்ற தகவல் என் நோஸ்டால்ஜியாவை கிளறிவிட்டது. என் சிறு வயதில் (இப்போதும் சிறுவயதுதான்) நகைச்சுவைத் தென்றல் பொமராவின் பட்டிமன்றங்களுக்கு சைக்கிள் மிதித்துச் சென்றிருக்கிறேன். அவர் தொகுத்த நகைச்சுவை கதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். பட்டிமன்ற நகைச்சுவையில் அவர் பலருக்கு முன்னோடி. சாத்தான்குளத்தை சுற்றியுள்ள ஊர்களில் அவரது குழு பட்டிமன்றம் நடத்தாத ஊரே இருக்க வாய்ப்பில்லை. உங்களை இணையத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

கிருஷ்ணமூர்த்தி said...

அழகான நேசிப்பின் வெளிப்பாட்டையே
உங்கள் பதிவாக்கி வருகிறீர்கள் .
அற்புதம் .
நீல முட்டை படம் அழகு .
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தின் அனைவருக்கும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (தாமதமாக )

Jana said...

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம்! மனதை சில காலங்கள் முன்னோக்கி கொண்டு போனது உங்கள் பறவைகள் பதிவு! நிறைய பறவைகளையும் நாங்கள் மிஸ் பண்ணுகின்றோம். மிஸ் பண்ணிட்டோம்.

! சிவகுமார் ! said...

படங்கள் அனைத்தும் அருமை. இங்க வெயில்ல காஞ்சிகிட்டு இருக்கோம். இப்ப போய் இந்த பதிவை போட்டு கடுப்பு ஏத்தறீங்க.

//ஆமாம், இந்த மகிழ்ச்சியான நேரத்திலேயும் ஒரு டவுட்டு ...... செல் போன் டவர் வந்து குருவிகளை அழித்து விட்டன என்று சொல்றாங்க..//

'குருவி'ன்னு படத்துக்கு பேரு வச்சா கூட தியேட்டரை விட்டு பறந்துடுது..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நீலக் கலர்ல முட்டை எவ்ளோ நல்லா இருக்கு! இந்த வாத்தியார்களும் இருக்காங்களே, வெள்ளைக் கலர் சாக்பீஸ்ல ஸ்லேட் முழுக்க முட்டை போட்டு...
ஒரு குருவிக்குத் தெரிஞ்சது கூட குருவுக்குத் தெரியல்லையே???

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

பாச மலர் / Paasa Malar said...

நீல நிற முட்டைகள் படம் மிக அழகு சித்ரா....பகிர்வுக்கு நன்றி..

மோகன்ஜி said...

கொஞ்சம் ஊர்சுற்றி வந்ததால் தாமதம். நல்ல பதிவுங்க! உங்கள் பதிவுகளுக்கு நீங்கள் இடும் படங்களுக்கு நானோர் ரசிகன் சித்ரா!

செந்தில்குமார் said...

அருமையான் தகவல் சித்ரா....

நான் இரண்டாவது...முறையாக பார்க்கிரேன் இந்த மாதிரியான முட்டைகளை.....

வசந்தகாலத்தை....என்ஜாய் பண்ணுங்க

சிவகுமாரன் said...

நீலக்கலர் முட்டை அழகோ அழகு

ஆனந்தி.. said...

வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html

Murugeswari Rajavel said...

மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு(பதிவு)!