Thursday, April 7, 2011

அரசியல் (மு)தல....!

நான் பதிவு எழுத வந்த ஒன்னேகால் வருடத்தில்,  ஒண்ணு ரெண்டு தான்  அரசியல் குறித்த  பதிவுகள் எழுதி இருக்கேன்.  முதலும் முக்கியமான ஆன பதிவு  :  நேரம் இருக்கும் போது வாசித்து பாருங்க:

மக்கள் வயித்தை கலக்க போவது யாரு - ஒரு அரசியல் பார்வை

அந்த பதிவை எழுதியபின், எனக்கு என்ன கலங்கிச்சோ தெரியல ...அரசியல் பதிவுகள் பக்கமே அவ்வளவாக போகல.... சரி, இந்த வருஷம் வோட்டு தான் போட முடியல .... வக்கணையாக பேசி,  இன்னொரு  அரசியல் பதிவு இன்று புதுசா  போடலாமேன்னு முடிவு பண்ணி ஒரு காமெடி பதிவு எழுத நினைச்சேன். அப்புறம், அங்கே அரசியல் (மு)தலைகள் எல்லாம் மக்களை வச்சு காமெடி பண்ணி, அவங்க பொட்டியை நிரப்புறாங்களே , அது வச்சு காமெடி பண்ணாம ஒழுங்கா எழுதணும்னு முடிவு பண்ணிட்டேன். 

போன வருஷம், நவம்பர் மாதம் நாங்க இப்போ இருக்கிற ஊரில Mayor election நடந்துச்சு.   போட்டியிட்ட வேட்பாளர்கள் எல்லோரும் தனி ஆளாக,  அவரவர் கொள்கைகளை தெளிவாக பிரிண்ட் செய்து, பிட் நோட்டீஸ் கையில வச்சுக்கிட்டு, ஒவ்வொரு வீடாக வந்து ஹலோ சொல்லி பேசி கொடுத்துட்டு போனாங்க.... தனிமரமாக வந்த வேட்பாளர்களை பார்த்து, எனக்கு ஒண்ணுமே புரியல.  அவங்க கூட கோஷம் போட ஆள் இல்லை ..... கழுத்தை சுத்தி கட்சி கொடி நிறத்துல துண்டு இல்லை.... மைக் இல்லை ..... கலகலப்பு இல்லை...... களேபரம் இல்லை..... என்னங்கடா தேர்தல் பிரச்சாரம் இது என்று நினைச்சிக்கிட்டேன்.   

அதில், Bill Wells என்று ஒரு வேட்பாளர்  வந்துட்டு போனதும், எங்க பக்கத்து வீட்டு அமெரிக்க பெண்மணி வந்து,  "உங்களுக்கு இவரைத் தெரியுமா?  இவர் ரொம்ப நல்ல மனுஷன்.    இவர் முன்பு பள்ளிக்கூட பிரின்சிபால் ஆக இருந்து ஓய்வு பெற்றவர்.  ரொம்ப நல்ல பெயர் எடுத்தவர்.  இவர் குடும்பமும் நல்ல முன் மாதிரியான குடும்பம் என்று  பெயர் வாங்கி உள்ளது.  அவர் மனைவி,  நிறைய பொது நல சேவைகளில் ஆர்வமாக முன்னின்று  பணி செய்பவர்.  இவர் தான் Mayor ஆக வர வேண்டும் என்று நிறைய பேர் பேசிக்கிறாங்க, " என்று சொல்லி விட்டு சென்றார். 

Mayor Bill Wells:  

தேர்தல் முடிந்து ரிசல்ட் அறிவிச்சாங்க.... இப்போ எங்க ஊருக்கு Bill Wells தான் மற்றவர்களை விட அதிக வாக்குகள் பெற்று ஜெயிச்சு Mayor ஆக இருக்கிறார். 
 அப்போதான் பக்கத்து வீட்டு பொண்ணு சொன்னது நியாபகத்துக்கு வந்துச்சு... ஒரு வேட்பாளர் ஜெயிக்க அவர் மட்டும் அல்ல, அவர் குடும்பமே நல்ல நம்பகமான குடும்பம் என்று பெயர் வாங்கி இருக்க வேண்டியது இருக்குது.  

அதே மாதிரி,   கற்பு கிற்பு என்று அதிகம் அலட்டி கொள்ளாத அமெரிக்க நாட்டில்,  கிளின்டன் (Clinton)  ஜனாதிபதியாக இருந்தப்போ மோனிகா கூட அப்படி இப்படி இருந்துட்டார் என்று விஷயம் வெளியில் வந்தவுடன்,  மீடியா முதல் மக்கள் வரை, அவர் கண்ணில் விரலை விட்டு ஆட்டி குடைஞ்சு எடுத்தாங்க.  

"அட,  மோனிகாவுக்கு ஒரு "முடிவு" கட்டிட்டு - அவள் இருந்த இருக்கிற இடத்துல புல்லு முளைக்கிறதுக்கு வழி பண்ணாம - என்னது ஒரு அமெரிக்க ஜனாதிபதி இப்படி திருதிருனு  மாட்டிக்கிட்டு முழிக்கிறாருனு,"  எங்க நெருங்கிய தோழியோட மாமானார் சொன்னாப்போ,  நாங்க சிரிச்சு இருக்கோம்.

பக்கத்து வீட்டு அமெரிக்க பெண்மணி கிட்ட ஒரு நாள் ஆர்வம் தாங்காம கிளின்டன் விவகாரம் எதுக்கு பெரிய விஷயமாச்சு என்று கேட்டுட்டேன்.   திருமணம் ஆனப்புறம்,  ஒரு affair வந்து - டைவர்ஸ் ஆகி - வேற கல்யாணம் செய்துக்கிறது சகஜம் தானே. மேலும்,  இங்கே நம்ம ஊரு மாதிரி சமூதாயத்துக்கு பயந்து  வாழறவங்க கிடையாது.  சுய விருப்பு வெறுப்பு படி தான் முடிவு எடுத்து இருப்பாங்க... அது அவங்க உரிமை என்று மத்தவங்க தலையிட மாட்டாங்க... அப்புறம், கிளின்டன்க்கு மட்டும் என்ன தனி பஞ்சாயத்து என்று வெட்டி பேச்சு பேசியே பழக்கப்பட்டதால  கேட்டுட்டேன். 

Bill Clinton: 


அதுக்கு அந்த அம்மா சொன்னாங்க:  "  மக்கள் எல்லோரும் தங்கள் நலவாழ்வை நல்லபடியாக பார்த்துக்கத்தானே, நம்பி ஒரு ஆளை தெரிந்தெடுத்து நாட்டை ஆள பொறுப்பாக நியமிக்கிறோம்.  ஜனநாயக ஆட்சியில், முதலில் அவர் மக்கள் பிரதிநிதி.   எங்களை சர்வாதிகரத்துடன் ஆள வந்தவர் அல்ல.  மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்.  சமூதாயம் எப்படி இருந்தாலும்,  தேர்ந்தெடுக்கப்பட்டவர்  நல்லவராக இருந்து - மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  உண்மையாக இருக்க வேண்டும். மோனிகா விஷயத்தில், கிளின்டன் பொய் சொன்னது பிடிக்கவில்லை. உண்மையை ஒத்துக்கொண்டு அவர் , மக்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் பொய் சொல்லி மறைக்கப் பார்த்தார். அதனால் அவமானப்பட்டார். அதன் பின், அவர் தவறு செய்யாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டார். அரசியல் தலைவர்களும் மனிதர்கள் தான். தவறுகள் செய்வது இயல்புதான். ஆனால், மக்கள் தான் புரிய வைக்க வேண்டும்.  பக்கத்து வீட்டில் உள்ளவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அது என்னை பாதிக்காத வரை.  ஆனால்,  அரசியல் தலைவர்கள் எங்களுக்காக வந்தவர்கள்.  அவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். இல்லை, அது ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும்."

 அப்போதான் எனக்கு நிறைய சந்தேகங்கள் சரமாரியாக வந்துச்சு.... 


  இந்தியாவில் ....சரி வேணாம் விடுங்க.... 
தமிழ்நாட்டில்,  சராசரி மனிதரிடம் சமூதாயத்துக்கு பயந்து வாழும் எண்ணம் இருக்கும் அளவுக்கு, அரசியல் தலைவர்களிடம் இருக்கிறதா?  

கற்பு ... ஒருவனுக்கு ஒருத்தி .... என்ற தனித்துவ கலாச்சாரம்  எல்லாம் கட்டி காப்பாத்துகிறவர் தான் ஆள வேண்டும் என்ற தகுதியுடன் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்களா? 

மக்களின் பிரதிநிதி என்ற முத்திரையுடன் அரசியல் தலைவர்கள் வருகிறார்களா?  இல்லை, மன்னர் ஆட்சி  காலத்தில் இருந்த மாதிரி,  வாரிசு ஆட்சி தான் ஏற்றது என்ற மன நிலையில் இருக்கிறார்களா? 

சமூதாயத்துக்கு முன் மாதிரியாக இருப்பவர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்களா? 

தலைவன் தவறு செய்தால், அதை திருத்தும் எண்ணத்துடன் மக்கள் நடவடிக்கை எடுக்கும் வகையில் சுதந்திரம் உள்ளதா?  இல்லை சர்வாதிகார நிலமைதானா? 

 இன்னும் நிறைய டவுட்டு   மாறி மாறி வந்துச்சு... அதை எல்லாம் பதிவுல சொன்னா, ஆட்டோ சுமோ எல்லாம் பிளேன்ல ஏறி எங்க வீடு தேடி வரும். எனக்கு எதற்கு வம்பு?  நான் கேக்கலப்பா ...நான் ஒண்ணும் கேக்கல....  ஹையா...... நானும் தமிழ் பொண்ணு தான்...... அப்படியே நீதி நியாயம் தர்மம் என்று பேசாமல்,  வாயை நானே பொத்திக்கிட்டு, கம்முனு  வேற வேலை பார்க்க போறேன் பாருங்க..... 


ஒரு முறை,  காந்தி தீவிரமாக சுதந்திர போராட்டத்தில இறங்கினப்போ,  ரவீந்தரநாத் தாகூர் (அவர் யாருன்னு யாராவது கேட்பீங்களே .... அவர் தாம்ப்பா, தேசிய கீதம் எழுதிய மகான்) காந்தி கிட்ட வந்து சொன்னாராம்:  " இந்திய மக்கள், இது வரை மன்னராட்சியில் பிறகு வெள்ளையர் ஆட்சியில் என்று மட்டுமே இருந்து பழகியவர்கள்.  இரண்டிலுமே ஆட்சி செய்கிறவர்களுக்கு அடிமைகளாக இருந்து பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மக்களாட்சி என்றால் என்ன சொல்லி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.   அதன் பின், சுதந்திர இந்தியாவை அவர்கள் கையில் கொடுங்கள்."
அதற்கு காந்தி: " முதலில் வெள்ளையரை வெளியேற்றுவோம். பிறகு, மக்களை தயார் செய்வோம்"
மக்களை அவர் தயார் செய்வதற்குள், அவரே எதிர்பார்க்காத கலவர நிலையை நாடு சந்திக்க..... பிறகு என்ன நடந்தது என்று வரலாறு சொல்லுமே.   
அப்படியும் இப்படியுமா இத்தனை வருடங்கள் சுதந்திரம் வாங்கி ஓடி போயாச்சு.  மக்களுக்கு இந்த விழிப்புணர்வு வர வைக்கும் முதல் படி - பாடம்  எப்பொழுது நடக்கும்?  தாகூரின் கனவு எப்பொழுது நினைவு ஆகும்?  


அடுத்த வாரம், எல்லோரும் முடிந்த அளவு முயற்சி செய்து வோட்டு போடுங்க.  A/C ரூம் ல இருந்துக்கிட்டு - என்னை மாதிரி வெளிநாட்டில் இருந்துக்கிட்டு கரிசனத்துடன் பதிவு போட்டு கிழிக்கிறதை விட,  வெய்யிலில் வரிசையில் காத்து நின்று வோட்டு போடுவதால் மாற்றங்கள் வரும்.  

இந்த கட்சி விட்டா அந்த கட்சி  ... இந்த இலவசம் விட்டா அந்த இலவசம்  என்று இருக்காமல்,  தனிப்பட்ட வேட்பாளரை பற்றி நன்கு தெரிந்து கொண்டு,  "நான் வோட்டு போடுகிறவர் என் பிரதிநிதி  - நான் மதிக்கும் கலாச்சாரத்தின் பிரதிநிதி - என் கொள்கைகளின் பிரதிநிதி" என்று உணர்ந்து வாக்களியுங்கள்.  வடிவேலு பேச்சையும் சிங்கமுத்து பேச்சையும் கேட்பதை விட உங்கள் மனசாட்சியின் பேச்சை கேட்டு முடிவெடுத்தால் நல்லா இருக்குமே..... 


எங்க அப்பா இருக்கும் வரை, இப்படித்தான் தேர்ந்தெடுத்து வோட்டு போடுவார்.  ஒரு முறை, அவர் வோட்டு போட்டு வந்த ஆளுக்கு, தேர்தல் முடிவுகளில் விழுந்த வாக்குகள் மொத்தம் :  61 
 அந்த நல்ல மனிதரை நம்பி வாக்களித்தவர்கள் அறுபது பேர் தான்.  அதில் எத்தனை பேரு அந்த வேட்பாளரின்  குடும்பத்து உறவினர்களோ?   நிச்சயமாக யார் யாரு தனக்கு வோட்டு போட்டாங்க என்று அடையாளம் கண்டு பிடித்து நன்றி சொல்லி  இருப்பார்.  ஆனால்  இன்று வரை, யார் அந்த 61 வது ஆள் என்று தலையை பிச்சிக்கிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன். 

இந்த நிலைமை, நம்மூரு அரசியல் நிலவரத்தின் சிரியஸ் விஷயமா இல்லை சீரியஸ் விஷயமா?  



122 comments:

test said...

விடிவெள்ளி தானைத்தலைவி வாழ்க!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அரசியலில் அடியெடுத்து வைத்த அக்கா வாழ்க.


எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

test said...

//சமூதாயம் எப்படி இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர் நல்லவராக இருந்து - மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். உண்மையாக இருக்க வேண்டும்//

இங்கெல்லாம் அப்பிடியே உல்டாவால்ல இருக்கு!

பாட்டு ரசிகன் said...

அரசியல் பதிவா.. படிச்சிட்டு வற்றேன்...

எம் அப்துல் காதர் said...

அரசியலில் பொன் பாதம் பதித்த எங்கள் சிங்கத் தலைவி ஹா ஹா ஹா

Lifewithspices said...

Nalla sonneenga .... still now i dont know who is contesting in my location hv not even seen single head... in my area..i searched in websites and hv got the list of contestants from my location enna kodumai partheengala .. def v will vote .. unga sarapaagavum..

சமுத்ரா said...

avoid அரசியல்..:)

பாட்டு ரசிகன் said...

சரியான கேள்விகள் தான்...

நாரீகம்.. நீதி.. நியாயம்..
உண்மை.. சத்தியம்.. இவைகலெல்லாம் அரசியலில் இருந்துப்போன விஷயங்கள்...

பதிவுக்கு நன்றி..

test said...

// விஷயம் வெளியில் வந்தவுடன், மீடியா முதல் மக்கள் வரை, அவர் கண்ணில் விரலை விட்டு ஆட்டி குடைஞ்சு எடுத்தாங்க//

உண்மைதான் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு என்னா பரபரப்பு! பேப்பர்ல எல்லாம் பிரிச்சு மேய்ஞ்சிட்டாங்க இல்ல? எனக்கு அப்போ சின்னவயது! கிளிண்டன் விவகாரத்தாலதான் சில விவரங்களை புதுசா தினசரி படிச்சு தெரிஞ்சு கொள்ள முடிஞ்சுது!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா எழுதி இருக்கீங்க..
முதல்லயே சீரியஸா இதை சிரியஸாக்கக்கூடாதுன்னு முடிவெடுத்ததே சரி..

டவுட் நிறைய இருக்குங்க உங்களுக்கு..தாயம்மாவைக் கூப்பிடுங்க விளக்குவாங்க..:)

R.Gopi said...

ஆஹா...

கட்சி ஆரம்பிச்சாச்சா...

எங்கள் ஆதரவு கண்டிப்பா உண்டு...

//சமூதாயம் எப்படி இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர் நல்லவராக இருந்து - மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். உண்மையாக இருக்க வேண்டும்//

இங்க இப்போ இருக்கற நிலைமையை வைத்து யோசித்து பார்த்தேன்... சிப்பு சிப்பா மட்டுமே வருது...

ஜோதிஜி said...

சித்ரா சிலசமயம் உங்களுக்குள் இருக்கும் ஆதங்கம் இதே பல முறை ஏதோவொரு ரூபத்தில் எழுத்துக்களாக வந்து விழுந்து விடுகின்றது. என்ன சொன்னாலும் பில் கிளின்டன் எனக்கு ரொம்பவே பிடித்தவர். பல விசயங்களில்? உங்களுக்கு?

Unknown said...

அங்கே போட்டியிடுரவனுக்கு தகுதி தேவை! இங்க தகுதி இருக்குரவனால தலைவனா வர முடியாம இருக்கு அவ்வளவே!

MANO நாஞ்சில் மனோ said...

//கற்பு ... ஒருவனுக்கு ஒருத்தி .... என்ற தனித்துவ கலாச்சாரம் எல்லாம் கட்டி காப்பாத்துகிறவர் தான் ஆள வேண்டும் என்ற தகுதியுடன் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்களா? //

ஹா ஹா ஹா இது தானை தமிழ் [[ப்பூப்ப்]] தலைவனுக்கு வச்ச ஆப்பு....

தக்குடு said...

அக்கா தாராளமா அரசியல் பேசுங்க! நெல்லைசீமைல பொறந்துட்டு அரசியல் பேசலைனா எப்பிடி??..:) நியாயமான வாதங்கள் அக்கா!

MANO நாஞ்சில் மனோ said...

//இன்னும் நிறைய டவுட்டு மாறி மாறி வந்துச்சு... அதை எல்லாம் பதிவுல சொன்னா, ஆட்டோ சுமோ எல்லாம் பிளேன்ல ஏறி எங்க வீடு தேடி வரும்//

கொஞ்சம் வீட்டு மேலே எட்டி பாருங்க ஹெலிகாப்டருல ஆட்டோ'வை தூக்கிட்டு வந்தாலும் வந்துருவாங்க ஹே ஹே ஹே ஹே...

Madhavan Srinivasagopalan said...

// (அவர் யாருன்னு யாராவது கேட்பீங்களே .... அவர் தாம்ப்பா, தேசிய கீதம் எழுதிய மகான்) //

மூன்று தேசிய கீதங்களுக்கும் (இந்தியா, பங்களாதேஷ், இலங்கை) ரபீந்தரநாத் தாகூரோடு தொடர்பிருக்கிறது. ( ஹி.. ஹி.. ஒரு விளம்பரம்தான்.. )

அந்த 61 வது ஆளு உங்கப்பாதானா..
ரொம்ப நாளா தேடிகிட்டே இருந்தாரு எங்க தாத்தோட பிரண்டு.. இப்பவே அவருகிட்ட சொல்லிடறேன்..

MANO நாஞ்சில் மனோ said...

//அடுத்த வாரம், எல்லோரும் முடிந்த அளவு முயற்சி செய்து வோட்டு போடுங்க. A/C ரூம் ல இருந்துக்கிட்டு - என்னை மாதிரி வெளிநாட்டில் இருந்துக்கிட்டு கரிசனத்துடன் பதிவு போட்டு கிழிக்கிறதை விட, வெய்யிலில் வரிசையில் காத்து நின்று வோட்டு போடுவதால் மாற்றங்கள் வரும். //

என்னையும் போட்டு கிழிச்சிட்டீன்களே அவ்வ்வ்வ்வ்வ்....

RVS said...

இந்தப் பதிவ நம்ம அரசியல்வாதிகளுக்கு பார்வர்ட் செய்யணும். ரொம்ப நல்லா இருக்கு சித்ரா! ;-)

MANO நாஞ்சில் மனோ said...

// வடிவேலு பேச்சையும் சிங்கமுத்து பேச்சையும் கேட்பதை விட உங்கள் மனசாட்சியின் பேச்சை கேட்டு முடிவெடுத்தால் நல்லா இருக்குமே..//

கரக்ட்டு மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//ஆனால் இன்று வரை, யார் அந்த 61 வது ஆள் என்று தலையை பிச்சிக்கிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்.//

அது கண்டிப்பா நீங்களாதான் இருக்கும்...

MANO நாஞ்சில் மனோ said...

இது கொஞ்சம் வெட்டி பேச்சல்ல, சரியான விளாசல் பேச்சு.... சிந்தியுங்கள் மக்களே....

Anonymous said...

சிறப்பான பதிவு சித்ராக்கா. இந்த தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் கூடும் என நினைக்கிறேன். பார்க்கலாம்

அஞ்சா சிங்கம் said...

வெய்யிலில் வரிசையில் காத்து நின்று வோட்டு போடுவதால் மாற்றங்கள் வரும்.
......................///////////////////////////////////

சரி போட்டிருவோம் ஆனா இங்க எல்லாம் மொள்ளமாரிங்கதான் நிக்கிறாங்க.......

எம் அப்துல் காதர் said...

இப்ப தானே தேர்தல் கமிஷன் போஸ்டர் வேண்டாம் கொடி வேண்டாம் என்று ஒரு பிடிபிடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. காலப் போக்கில் இந்தியாவும் நீங்கள் எழுதியது போல் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்க் கில்லை. பார்ப்போமே!!

Chitra said...

அப்படி நடக்க வேண்டும் என்று தானே ஆதங்கப்படுகிறோம். வந்தால், சந்தோஷமே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i expect india will change

middleclassmadhavi said...

உங்கள் ஆதங்கத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

GENIUNE CANDIDATE?

SO... EVERYONE VOTE FOR KALAIGNAR..

HAAAAAA... ....HAAAAAAAA...

தமிழ் உதயம் said...

அமெரிக்காவில் எவ்வளவுக்கெவ்வளவு நல்லவரா இருக்காரோ- அவ்வளவுக்கெவ்வளவு ஓட்டு விழும். நம்ம இந்தியாவில் எவ்வளவுக்கெவ்வளவு அயோக்கியனோ - அவ்வளவுக்கவ்வளவு பேரும், புகழும், ஓட்டும் கிடைக்கும். நம்ம அரசியல்வாதிகள் வழி.., தனி வழி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Really, You are very Great. I say.

ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க.

ஒவ்வொரு விஷயமும் மனதைத்தொடுவதாக, அருமையாகவே உள்ளது.

இதைப்படிக்கும் என்னைப்போன்ற ஒரு சிலராவது, உங்கள் தந்தைபோல, நியாயமாக வோட்டளித்து தங்கள் வோட்டை வீண் செய்யப்போவது மட்டும் உறுதி.

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

எது எழுதினாலும் அதில் ஒரு கேலி, கிண்டல், நகைச்சுவை என உங்களின் தனித்திறமை ஜொலிக்கிறது.

என் அக்கா மகள்ன்னா சும்மாவா!

அன்புடன் கோபு மாமா.

Unknown said...

தனிப்பட்ட முறையில் வேட்பாளாரின் தகுதியை பார்த்தே ஒட்டு போட வேண்டும், அதுவே சரியானதாக இருக்கும் அது இல்லாமல், கட்சி அபிமானம், ஜாதி அபிமானம் எல்லாம் பார்த்தாம் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்பது என் கருத்து

சசிகுமார் said...

இது போன்ற விஷயங்களில் அமெரிக்காவின் கொள்கைகள் சிறந்தது.

KParthasarathi said...

The only remedy for cleansing the political sphere is for good men to particpate in large number and ejecting the bad.For this to happen fighting elections should not require money but only a passion to serve, good character and willingness to work hard without expectations.There should be no place for any freebies.Everything shd be earned.Drastic changes needed in our electoral laws.There shd be many many Anna Hazares to spur the people to go for men of rectitude.A pious wish well nigh difficult to achieve in the short run.
It is good you highlighted the salient points discreetly.

மொக்கராசா said...

இந்திய அரசியலை சுத்தம் செய்யலாம்ன்னு அட இன்னுமா நம்புறீங்க.....

மிக்சி வந்துச்சா ,கிரைண்டர் வந்துச்சா ,லேப்டாப் வந்துச்சா பாக்காம கப்பிதனமா பேசிகிட்டு இருங்கேங்களே.....

போங்கப்பா போங்க, போய் பிள்ளகுட்டிகளை படிக்க வையுங்க

வலையுகம் said...

அரசியல் ஜுரம் உங்களையும் பிடிச்சுருச்சா?

ஆனாலும் எதிர்வினை நல்லாத்தான் இருக்கு

raji said...

இதை மக்கள் உணர வேண்டுமெனில் வன்முறையற்ற ஒரு புரட்சி வந்தால்தான் உண்டு

வைகை said...

கற்பு ... ஒருவனுக்கு ஒருத்தி .... என்ற தனித்துவ கலாச்சாரம் எல்லாம் கட்டி காப்பாத்துகிறவர் தான் ஆள வேண்டும் என்ற தகுதியுடன் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்களா?//

இப்படி இல்லைனாலும் பரவாஇல்லை..ஆனா இதுபோன்ற ஒரு ஆளுக்கு வோட்டு கேட்க்கும் ஆள பார்த்தீங்களா? இதெல்லாம் கேட்டா பெண்ணுரிமை பேசிகிட்டு கொடி புடிக்கிறாங்க.. என்னமோ போங்க..

நிரூபன் said...

மக்கள் வயித்தை கலக்க போவது யாரு - ஒரு அரசியல் பார்வை//

ஒரு விவகாரமான விடயத்தை, காமெடியான தலைப்புடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். மிகுதியையும் படித்த பின்னர் வருகிறேன்.

நிரூபன் said...

அப்புறம், அங்கே அரசியல் (மு)தலைகள் எல்லாம் மக்களை வச்சு காமெடி பண்ணி, அவங்க பொட்டியை நிரப்புறாங்களே , அது வச்சு காமெடி பண்ணாம ஒழுங்கா எழுதணும்னு முடிவு பண்ணிட்டேன்.//

பண முதலைகளா இல்ல அரசியல் முதலகளா?

நிரூபன் said...

தனிமரமாக வந்த வேட்பாளர்களை பார்த்து, எனக்கு ஒண்ணுமே புரியல.//

நீங்க இருக்கிறது Western countries, ஆனால் நாங்க இருக்கிறது waste ஆன அரசியல் வாதிங்க வாழுற country. இப்ப புரிஞ்சுதா?

நிரூபன் said...

ஒரு வேட்பாளர் ஜெயிக்க அவர் மட்டும் அல்ல, அவர் குடும்பமே நல்ல நம்பகமான குடும்பம் என்று பெயர் வாங்கி இருக்க வேண்டியது இருக்குது.//

அப்படின்னா, நம்ம ஊர்களிலையும் ஊழல் செய்து ஒரு குடும்பம் நல்ல பேர் வாங்கி இருக்கிறதே, அதுவும் வேட்பாளரை ஜெயிக்க வைப்பதற்கான காரணமோ;-)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சித்ரா வாழ்க சித்ரா வாழ்க சித்ரா வாழ்க சித்ரா வாழ்க

நிரூபன் said...

ஆனால், அரசியல் தலைவர்கள் எங்களுக்காக வந்தவர்கள். அவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். இல்லை, அது ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும்.//

சபாஷ்,.. இத்தனை கோடி மக்களோடை பணத்தையும் ஒரு முதலை விழுங்கியிருக்கே, ஒரு பேச்சாவது வாய் தொறந்து பேசியிருக்கா...

இத்தனை இலட்சம் மக்களை ஒரு நபர் போரில் கொன்றிருக்கிறாரே, அவர் ஏதாச்சும் பேசியிருக்காரா? (சிவப்பு சால்வை ஆளு)
வெளி நாட்டில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது, ஆனால் நம்ம நாடுகளில் கருத்துச் சுதந்திரத்திற்குப் பதிலாக கொலைச் சுதந்திரம் இருக்கு. இதனாலை தான் மக்கள் எதிர்க் கருத்துப் பேசாமல் இருக்கிறாங்க.

இது தான் நம்ம நாட்டு அரசியல்.

நிரூபன் said...

சராசரி மனிதரிடம் சமூதாயத்துக்கு பயந்து வாழும் எண்ணம் இருக்கும் அளவுக்கு, அரசியல் தலைவர்களிடம் இருக்கிறதா? //

நம்ம நாடுகளில் இதற்கு opposite வழி தான் இருக்கு. அரசியல்வாதிகளிக்குப் பயந்து தான் மக்களே வாழுறங்க.

ஆட்டோ, வெள்ளை வான் வரும் எனும் பயம், அப்புறம் குண்டர் குழுக்களுடன் (அடி தடி கோஷ்டிகளுடன்) வேட்பாளர்களுக்கு இருக்கும் தொடர்பு.

நிரூபன் said...

கற்பு ... ஒருவனுக்கு ஒருத்தி .... என்ற தனித்துவ கலாச்சாரம் எல்லாம் கட்டி காப்பாத்துகிறவர் தான் ஆள வேண்டும் என்ற தகுதியுடன் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்களா?//

அவ்..........................................................’
அப்படியான சூழ் நிலை இருந்தால் தமிழகத்தில் ஒருவர் ஐந்து தடவையாக முதல்வர் ஆகியிருக்க முடியாதே;-))))))))))))

ஆனந்தி.. said...

எச்சூஸ் மீ... அண்ணனா...அண்ணே...நாந்தேன் அகில உலக அஞ்சான் நெஞ்சன் அணி தலைவியின் அல்லக்கை...!! என்ன சேதியா?? இங்கே தம்பட்டம் தாயம்மா னு ஒரு அமெரிக்க ரவுடி உங்களையெல்லாம் வம்பிளுத்திருக்கு ...உங்க டாடி,உங்க சின்னம்மா,பெரியம்மா..மேலும் உங்களோட சில அம்மாஸ் :)) ஐ கூட சீண்டி பார்த்திருக்கு..ஒழுக்கம்,கடமை கண்ணியம் எல்லாம் இருக்கனுமாம் உங்களை மாதிரி நல்லவங்களுக்கு....அதை படிச்சு செம ரோஷம் வந்திருச்சு அண்ணாத்த ....நீ இன்னா பண்ற...விசயகாந்த்து ...நம்ம மம்மி...உங்க நைனா...ராமதாஸ் தாத்தா..மற்றும் உறவினர்கள்...:) எல்லாரையும் கூட்டிக்கினு ஒரு லாரி பிடிச்சுக்கினு இந்த பொண்ணுங்கிட்ட மூஞ்சியில காமி...விசயகாந்து ராங்கு காமுச்சால் ஒரு ஆப் வாங்கி கொடுத்துக்கினு கூட்டி வா...இன்னா வார்த்தை சொல்லிருச்சு பாத்தியா ...சீக்கிரம் போ நைனா...அதுக்குள்ளே இந்த பய புள்ள உஷாராயக்கினும்:)))

நிரூபன் said...

மக்களின் பிரதிநிதி என்ற முத்திரையுடன் அரசியல் தலைவர்கள் வருகிறார்களா? இல்லை, மன்னர் ஆட்சி காலத்தில் இருந்த மாதிரி, வாரிசு ஆட்சி தான் ஏற்றது என்ற மன நிலையில் இருக்கிறார்களா?//


நம்மாளுங்க எப்பவுமே இதிலை தனி வழி. ஏன்னா, இப்ப Grandson ஐ கூட அரசியலிலை இறக்கி வளர்க்கத் தொடங்கிட்டாங்க..
எப்பவுமே குடும்ப, பரம்பரை அரசியலிற்கு தான் எங்கள் நாடுகளில் முன்னுரிமை.
பாசக்காரப்புள்ளங்க...

தாங்க அடிக்கிற ஊழலை தங்கள் வம்சமும் அடிக்கக் கூடாதா எனும் நம்பிக்கை தான்.

நிரூபன் said...

சமூதாயத்துக்கு முன் மாதிரியாக இருப்பவர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்களா?//

சமுதாயத்திற்கு முன் மாதிரியாக கள்ள ஓட்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

சமுதாயத்திற்கு முன் மாதிரியாக இருக்கிறவர்களைத் தேர்ந்தெடுத்தால், இந்த முறை எலக்‌ஷனிலை கப்டன் நிச்சயம் தோல்வி தான் அடைவார், ஒரு சீட்டுக் கூட கிடைக்காது, ஏன் கருணாநிதி, ஜெயலலித...
இவங்க எல்லோருக்குமே தோல்வி தான் கிடைக்கும். மக்கள் இது பற்றிச் சிந்திப்பதில்லை சகோ.

நிரூபன் said...

தலைவன் தவறு செய்தால், அதை திருத்தும் எண்ணத்துடன் மக்கள் நடவடிக்கை எடுக்கும் வகையில் சுதந்திரம் உள்ளதா? இல்லை சர்வாதிகார நிலமைதானா?//

அப்படியொரு நிலமை இருந்தால் எப்பவோ கலைஞர் டீவிக்கு மூடு விழா வைச்சு, அப்புறம் ஸ்பெக்டர் வழக்கிலை கலைஞரையே மக்கள் கைது செய்யச் சொல்லி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருப்பாங்க..
நோ பீலிங்கிஸ்.

பாலா said...

இங்க எல்லாமே சிரியஸ் தான்...

அண்ணா ஹசாரே: ஒரு காந்தியவாதி போராட்டம் ஊழலுக்கு எதிரா பெரிய அளவுல போராட்டம் பண்றார்.. ஆனா நம்ம ஊர்ல அது யாருக்கும் தெரியாது. எந்த தமிழ் தொலைகாட்சியும் இதை ஒளிபரப்பவில்லை..

இன்று நமது வேட்பாளர்களின் நிலை...
choose between the devil and deep sea :((

நிரூபன் said...

அப்படியும் இப்படியுமா இத்தனை வருடங்கள் சுதந்திரம் வாங்கி ஓடி போயாச்சு. மக்களுக்கு இந்த விழிப்புணர்வு வர வைக்கும் முதல் படி - பாடம் எப்பொழுது நடக்கும்? தாகூரின் கனவு எப்பொழுது நினைவு ஆகும்?//

குடும்ப அரசியல் இருக்கும் வரை நிறைவேறுவது என்பது கடினமான விடயம் தான்.

ஒரே ஒரு விடயம், எமது நாடுகளில் நன்றாகப் படித்த, முன் மாதிரியான சிந்தனை உள்ள இளைஞர்கள் அரசியலில் வந்து புரட்சி செய்தால் தான் எங்கள் நாடுகள் முன்னேறும், மற்றும் படி தொலை நோக்குச் சிந்தனை இல்லாமல் தன் மக்களைப் பற்றிச் சிந்திக்கும் இந்த நபர்கள் ஆட்சியில் இருப்பதால், எந்தவிதப் பலனும் ஏற்படாது என்பது எனது கருத்து.

இளங்கோ said...

//பக்கத்து வீட்டில் உள்ளவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அது என்னை பாதிக்காத வரை. ஆனால், அரசியல் தலைவர்கள் எங்களுக்காக வந்தவர்கள். அவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். இல்லை, அது ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும் //

ithu unmai.

சிங்கக்குட்டி said...

//அவர் குடும்பமே நல்ல நம்பகமான குடும்பம் என்று பெயர் வாங்கி இருக்க வேண்டியது இருக்குது//

ஹி ஹி ஹி அப்ப நம்ம ஊரு அரசியல் மக்கள் யாருமே அரசியல் தகுதி பெற முடியாது...!

அமைதி அப்பா said...

என்னுடைய பாராட்டுக்களைப் பிடிங்க மேடம்!

எல் கே said...

இப்படிலாம் நடக்க வாய்ப்பு ரொம்பக் கம்மி

Asiya Omar said...

//"நான் வோட்டு போடுகிறவர் என் பிரதிநிதி - நான் மதிக்கும் கலாச்சாரத்தின் பிரதிநிதி - என் கொள்கைகளின் பிரதிநிதி"//
மிகச்சரியாச்சொன்னீங்க சித்ரா.

அமெரிக்க தேர்தல் முறை பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

சன் டீவியும்,ஜெயா டீவியும் மாற்றி மாற்றி பார்த்து நடக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் நகைச்சுவையை ரசிக்காமல் இருக்க முடியலை.

அருண் பிரசாத் said...

அமெரிக்காவில் நடக்கும் எதையுமே இந்தியாவில எதிர்பார்க்க முடியாதுங்க சித்ரா...

எதையுமே...

Geetha6 said...

அருமை நல்லா எழுதி இருக்கீங்க!

செங்கோவி said...

//அதற்கு காந்தி: " முதலில் வெள்ளையரை வெளியேற்றுவோம். பிறகு, மக்களை தயார் செய்வோம்"// இந்தத் தகவல் சரி தானாக்கா? ஏனென்றால் காந்தி இந்தியா வந்ததும் நடத்திய முதல் போராட்டம் பீகாரில் சம்பரானில்(?) நடந்தது. அங்கே போராட்டத்தை ஆரம்பிக்கும் முன் மக்களை ஜனநாயகத்திற்குப் பழக்கவே பல நாட்கள் எடுத்துக் கொண்டார். பிறகு தான் போராட்டத்தை ஆரம்பித்தார். தன் வாழ்நாள் முழுக்க காந்தி இந்தியா முழுதும் அதையே செய்தார். காந்தியை நாம் கொண்டாடுவதற்கான காரணம், அவர் எல்லா அடித்தட்டு மக்களையும் ஜனநாயகத்திற்கு இழுத்து வந்தார். காந்தி வரும்வரை ஒரு சிலரின் திண்ணைப் பேச்சாக இருந்த காங்கிரஸ், காந்தியின் காலத்திலேயே அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்தது. காந்தியின் ஆகப் பெரிய சாதனையே அது தான். ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன்க்கா!.மற்றபடி, ஒரு உண்மையான ஜனநாயகத்தை பதிவில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

கலகலப்பு இல்லை...... களேபரம் இல்லை..... என்னங்கடா தேர்தல் பிரச்சாரம் இது என்று நினைச்சிக்கிட்டேன். //
நானும் அப்படித்தான் கேட்டேன்.
சிந்திக்க ஆரம்பித்தால் நல்லது தானே?

சென்னை பித்தன் said...

எதுல புகுந்தாலும் ஒரு கலக்குக் கலக்கிடறீங்க!
//வடிவேலு பேச்சையும் சிங்கமுத்து பேச்சையும் கேட்பதை விட உங்கள் மனசாட்சியின் பேச்சை கேட்டு முடிவெடுத்தால் நல்லா இருக்குமே..... //
நல்லாத்தான் இருக்கும்!

Nagasubramanian said...

next "saidai Tamizharasi" vazhga

தெய்வசுகந்தி said...

நம்மளால ஆதங்கப் பட்டுக்க மட்டும்தான் முடியுது!

சாந்தி மாரியப்பன் said...

//சமூதாயம் எப்படி இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர் நல்லவராக இருந்து - மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும்//

நடந்தா நல்லாத்தான் இருக்கும்.. தலை சரியாயிருந்தா வாலும் சரியாயிருக்கும்ன்னு நம்மூர்ல ஒரு சொலவடை சொல்லுவாங்கல்ல..

ராஜ நடராஜன் said...

ரொமபவே யோசிக்க வைத்த பதிவு.

நாம் அடிப்படையவே தொலைத்து விட்டோம்.உங்க ஊர் மேயர் மாதிரி ஓட்டுக் கேட்கறதாவது?தற்போதைக்கு தேர்தல் கமிசன் மாதிரி தலையில் குட்டியே மாறினாத்தான் உண்டு.

அண்ணா ஹசரே உண்ணாவிரதம் இருக்கிறாரே!அந்த மாதிரி ஒருத்தர் உண்ணாவிரதம் இருக்கட்டும் தமிழ்நாட்டில்.கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டு இலவசம் கிடைக்குற கூட்டத்துக்கு ஓடிப்போயிடுவாஙக.

ஆனாலும் நாடு நல்லாயிருக்கனும்ன்னும் யோசிக்கிற தார்மீக ஃபயர் பலருக்கும் இருக்குறதால கொஞ்சம் போராடினா ஓரளவுக்காவது மாற்ற்ங்களைக் கொண்டு வந்து விடலாம்...

திண்ணை காலியாகட்டும்!பார்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

அப்புறம் வெளிநாட்டுல இருக்கறதால ஓட்டுப் போட முடியா விட்டாலும் நிகழ்வுகளைக் கழுகுக் கண் கொண்டு பார்க்க இயலுகிறது.நல்லது கெட்டதெல்லாம் நல்லாவே புரியுது.ஊர்ல உட்கார்ந்துகிட்டிருந்தா வடிவேலு சொல்றதக் கேட்டு சிரிச்சிகிட்டே ஓட்டுப் போடும் மனநிலை வந்திருக்கும்.இல்லாட்டி மானாட மயிலாட,சினிமான்னு ஏதோ ஒன்றின் ஆக்கிரமிப்பு இருந்திருக்கும்.இதையெல்லாம் கடந்தும் வலைப்பதிவுகளுக்கு தமிழகத்திலிருந்து வரும் வாசகர்களை பாராட்டுகிறேன்.

நான்,சீரியல் பார்த்தே அம்மணி கூட நானும் சீரியல் ரசிகனாயிருப்பேன்.நேற்று கொட்டித் தீர்த்து விடுன்னு ஒரு நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சியில்...அம்மணியும் நானும் பேசிகிட்டதை சொன்னா சென்சார் ஆகி விடும் பின்னூட்டம்.

எனவே எஸ்கேப்:)

Chitra said...

இல்லீங்க.... அந்த பதிவுக்கு , "மக்கள் வயித்தை கலக்கப் போவது யாரு... " கிளிக் செய்து வாசிக்கணும். அதில் அரசியல் கட்சிகள் பற்றி எழுதி இருந்தேன்.

ராமலக்ஷ்மி said...

//தனிப்பட்ட வேட்பாளரை பற்றி நன்கு தெரிந்து கொண்டு//

முக்கியமான விஷயத்தை வலியுறுத்தும் அவசியமான பதிவு சித்ரா.

Jana said...

தாங்கள் அரசியல் பதிவுகளை மிக குறைவாக எழுதுவதையும் இந்த விடயத்தில் ஓடும் செம்பழமும்போல இருப்பதையும் கவனித்திருக்கின்றேன் அக்கா.. வாஸ்தவமானதும்தான்.
"அரசியல் என்பது சாக்கடை என்ற மேலான பேச்சுக்கள் மறைந்து அரசியல் என்பது உன்னதமானது என்ற நிலை உலகம் முழுவதும் வந்தால், அன்றே மனிதன் ஏழாவது அறிவை பெற்றுவிட்டான் என்று செதுக்கவைக்கலாம் இல்லையா!

Thenu said...

ஒரே வார்த்தையில் சொல்லனும்னா "நச்"....

Alarmel Mangai said...

இதுவரை நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த பதிவு இதுதான்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் தனி மனித ஒழுக்கம் பற்றி இந்தியாவில் யாரும் கவலைப் படுவது இல்லை. வேட்பாளர் ஆவதற்கான தகுதியே, ஒன்று ரௌடியாக இருந்திருக்க வேண்டும், அல்லது யாருக்காவது வாரிசாக இருக்க வேண்டும். இந்தநிலையில் தமிழ் நாட்டை ஆண்டவன்தான் காக்க வேண்டும்.

இது போன்ற 'சமுதாயச் சாடல்' பதிவுகள் அடிக்கடி எழுத வேண்டுகிறேன்.

Anonymous said...

வடிவேலு பேச்சையும் சிங்கமுத்து பேச்சையும் கேட்பதை விட உங்கள் மனசாட்சியின் பேச்சை கேட்டு முடிவெடுத்தால் நல்லா இருக்குமே.....

ரொம்ப சரியா சொன்னீங்க சித்ரா..

Avargal Unmaigal said...

சித்ரா மேடம் நீங்க அமெரிக்காவில் உள்ள ஏதோ ஒரு நல்ல ஊரில் இருந்து அமெரிக்காவை பற்றிய நல்ல விஷயங்களை எழுதுகீறிர்கள் ஆனா அமெரிக்காவிலும் அரசியல்வாதிகள் ஒன்றும் ஒழுங்கு இல்லை அவர்களும் நம் அரசியல்வாதிகள் போலத்தான். ஒர் பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பார்கள் அதற்கு ஒரு உதாரணம் நான் வசிக்கும் மாநிலத்தில் இருந்து ஒரு உதாரணம் பார்த்த பின் நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள்,
44 arrested in N.J. corruption probe
Suspects include rabbis, mayors; probe involved black-market kidneys
மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லவும் http://www.msnbc.msn.com/id/32103250/ns/us_news-crime_and_courts/

மோகன்ஜி said...

சித்ரா! உங்கள் பதிவுகளுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் அழகு.. என் வோட்டு சித்ராவுக்கே!

Avargal Unmaigal said...

Former Illinois Gov. George Ryan received a sentence of six and a half years in prison on Wednesday, after being convicted on charges of racketeering, mail fraud, filing false tax returns, and lying to investigators. The Chicago Sun-Times reports that in the last three decades, at least 79 local elected officials have been convicted of a crime, including three governors, one mayor, and a whopping 27 aldermen from the Windy City. What makes Chicago so corrupt?

Chitra said...

அப்படி தவறு செய்பவர்கள் எல்லோரும் மாட்டி கொண்டு, தண்டனை தரப்பட்டு இருப்பதையும் நீங்களே சுட்டி காட்டி இருக்கிறீர்களே. அதுவே அவர்களின் அரசியல் வாழ்வுக்கு ஒரு மூடு விழா... அதை பற்றி தான் கிளிண்டன் சம்பவம் மூலமாக விளக்கி உள்ளேன்.

க.பாலாசி said...

சனநாயக நாடு புண்ணாக்குன்னு சொல்லியே நாசமாப்போயிட்டோமுங்க.. சந்தேககங்கள்லாம் கரைட்டாதான் இருக்கு.. விடைக்கு பக்கத்தால ஒரு பெரிய கேள்விக்குறி இருக்குங்களே..

மிக நல்ல இடுகை...

Anonymous said...

தனிமரமாக வந்த வேட்பாளர்களை பார்த்து, எனக்கு ஒண்ணுமே புரியல. அவங்க கூட கோஷம் போட ஆள் இல்லை .//
துட்டு செலவு பண்ணனும்...ஹிஹி..எங்க ஊர்ல துட்டு கொடுத்துட்டா எல்லா வேலையும் அவங்களே பார்த்துக்குவாங்க..பதினெட்டு பட்டிக்கும் சேர்த்து ஒரே இடத்துல வந்து நின்னு ஓட்டு போடுங்க மக்களே ந்னு கூவிட்டு போயிடுவாங்க

Anonymous said...

தங்கதாரகையே வருக...

Lingeswaran said...

நல்ல சிந்தனை....! எனக்கு தெரிந்து முதலில் மக்கள் மனதில்தான் மாற்றம் வரவேண்டும்.....அதாவது இலவசங்களை எதிர்பார்க்கும் நிலையை விட்டொழித்து....கொஞ்சம் சுயமரியாதையோடு
நான் கடமையை செய்கிறேன், எனக்கு என் உரிமையை கொடு என்ற அளவில் மக்கள் மனநிலையில் மாற்றம் வேண்டும்.

Chitra said...

அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லி பலன் இல்லை. மக்கள் தங்கள் கடமைகளை எந்த அளவுக்கு செய்து, தங்கள் உரிமைகளை பெற போராடுகிறார்கள் என்பதும் முக்கியம்.

ஊரான் said...

"நான் வோட்டு போடுகிறவர் என் பிரதிநிதி - நான் மதிக்கும் கலாச்சாரத்தின் பிரதிநிதி - என் கொள்கைகளின் பிரதிநிதி"

இப்படி யாரும் இந்தியாவில் கிடையாது. குறிப்பாக தமிழகத்தில் கிடையாது. ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளில் நல்லவனைத் தேடுவது "நரகலில் நல்லரிசியைத் தேடுவது" போல. அதுதான் இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நிலை.

Avargal Unmaigal said...

//அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லி பலன் இல்லை. மக்கள் தங்கள் கடமைகளை எந்த அளவுக்கு செய்து, தங்கள் உரிமைகளை பெற போராடுகிறார்கள் என்பதும் முக்கியம்//

இதை நான் 100 % ஆதரிக்கிறேன். மக்கள் சிந்தித்து கடமை உணர்வோடு வோட்டு போட்டால் நம்ம நாடும் க்ளின் நாடாக இருக்கும்.

ரேவா said...

அருமையான அலசல் சகோ... நம் கடமையை இலவசத்திற்கு இரையாக்காமல், சிந்தித்து வேட்பாளரை தெரிவு செய்ய சொல்லும் அவசியமான பதிவு சகோ...வாழ்த்துக்கள் ...

கோமதி அரசு said...

"நான் வோட்டு போடுகிறவர் என் பிரதிநிதி - நான் மதிக்கும் கலாச்சாரத்தின் பிரதிநிதி - என் கொள்கைகளின் பிரதிநிதி" என்று உணர்ந்து வாக்களியுங்கள்//

சரியாக சொன்னீர்கள் சித்ரா என் கருத்தும் அதுதான்.

Menaga Sathia said...

நல்ல பகிர்வு சித்ரா!!..

Jayanthy Kumaran said...

wow...interesting post Chitra..:)
Tasty Appetite

அரசூரான் said...

ஐ யுவர் ப்ளாக் ரீடர் அண்ட் ஐ அப்ரூவ்ட் திஸ் பதிவு... ஹி...ஹி...ஹி

சுசி said...

வருங்கால முதல்வர் வாழ்க!!!

ரோஸ்விக் said...

Fantastic Chithra.

Thanks for such a nice post.

Rathnavel Natarajan said...

நன்றி சித்ராம்மா.
தயவு செய்து தமிழ்நாட்டு அரசியலில் தலையிடாதீர்கள்.
வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

சிந்திக்க சொல்லும் பதிவுங்க..நல்லவரைத்தான் தேட வேண்டியிருக்குதுங்க.

a said...

காமடியா எழுதியிருந்தாலும். உண்மையில் சீரியஸ் விசயங்கள்....
-----------------------------------
சிந்தனை சிற்பி... சயனைடு குப்பி..
சித்ரா வாழ்க... வாழ்க...

சக்தி கல்வி மையம் said...

100.. அக்கா நான் ரொம்ம்ம்ப லேட்டா வந்தாலும் சென்சுரி போட்டோமில்ல..

சக்தி கல்வி மையம் said...

சிந்தனையை தூண்டும் பதிவு...

Chitra said...

செங்கோவி said...

//அதற்கு காந்தி: " முதலில் வெள்ளையரை வெளியேற்றுவோம். பிறகு, மக்களை தயார் செய்வோம்"// இந்தத் தகவல் சரி தானாக்கா? ஏனென்றால் காந்தி இந்தியா வந்ததும் நடத்திய முதல் போராட்டம் பீகாரில் சம்பரானில்(?) நடந்தது. அங்கே போராட்டத்தை ஆரம்பிக்கும் முன் மக்களை ஜனநாயகத்திற்குப் பழக்கவே பல நாட்கள் எடுத்துக் கொண்டார். பிறகு தான் போராட்டத்தை ஆரம்பித்தார். தன் வாழ்நாள் முழுக்க காந்தி இந்தியா முழுதும் அதையே செய்தார். காந்தியை நாம் கொண்டாடுவதற்கான காரணம், அவர் எல்லா அடித்தட்டு மக்களையும் ஜனநாயகத்திற்கு இழுத்து வந்தார். காந்தி வரும்வரை ஒரு சிலரின் திண்ணைப் பேச்சாக இருந்த காங்கிரஸ், காந்தியின் காலத்திலேயே அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்தது. காந்தியின் ஆகப் பெரிய சாதனையே அது தான். ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன்க்கா!.மற்றபடி, ஒரு உண்மையான ஜனநாயகத்தை பதிவில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!



....தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் தேடிக் கொண்டு இருந்த கட்டுரை, கூகிள் செய்தால் கிடைக்கவில்லை. மகாத்மா காந்தியையோ தாகூரையோ நான் குறை சொல்லவில்லை. ஆனால், காந்தியின் கொள்கைகள் பலவற்றை தாகூர் ஆதரித்தது இல்லை என்பது உண்மை. அதனால், அவர் சொல்வது சரி என்று சொல்லவில்லை. தாகூர் மக்கள் ஆட்சியை கூட பெரிதாக முதலில் ஆதரித்து பேசியது இல்லை. அதை காட்டும் விதமாக கூட அந்த கருத்தை சொல்லி இருந்து இருக்கலாம். சர்ச்சைக்குரிய ஒரு கட்டுரை தான் கூகிள் செய்த போது கிடைத்தது.


http://www.mukto-mona.com/Articles/aparthib/reflection_tagore_arts.htm

அமுதா கிருஷ்ணா said...

கட்டாயம் ஓட்டு போடணும் என்று தான் நினைக்கிறேன்.ஆனால், நிற்கிற யாரும் ஒழுங்கா இல்லையே.

Chitra said...

இருப்பதில் கொஞ்சம் குறைவா கெட்டவர் யாருன்னு பார்த்து வோட்டு போடணுமோ என்னவோ? :-(

mightymaverick said...

யாருமே சரியில்லேன்னா 49-O இருக்கவே இருக்கே... அதை ஏன் யாருமே செய்ய மாட்டேங்கிறோம்னு தெரியல... நாம கட்சி ஆளுங்களுக்கு பயப்படவில்லை என்று தெரிந்தால் தான் கட்சி ஆட்கள் நமக்கு பயப்படுவார்கள்... இலவசத்தை குறை கூறி விட முடியாது... ஏனெனில் மாதத்திற்கு ரூ.5000/=க்கு குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்கள் இன்னும் இங்கு உண்டு... இவர்கள் தான் அதிகம் ஓட்டு போடவும் செய்கிறார்கள்... அவர்களுக்கு வாழ்க்கையில் கனவாக இருக்கும் ஒரு விசயத்தை இலவசமாக கொடுப்பவர்களுக்கு தான் இவர்கள் ஓட்டு போடுவார்கள்... இவர்கள் வாழ்க்கை தரத்தை மேலே கொண்டு வர படித்தவர்களாகிய நாம் என்ன செய்தோம்? இன்னும் எங்கோ வெளியூரிலோ வெளிநாட்டிலோ உட்கார்ந்து கொண்டு "வெட்டிப்பேச்சு" (சித்ரா... இது உங்களை தாக்கி பேசியதாக கொள்ள வேண்டாம்) தான் பேசிக்கொண்டிருக்கிறோம்...

அது சரி... மேலே கடிகாரத்தில் உள்ளது போல உடம்பு இளைக்க எத்தனை ஆசனங்கள் செய்கிறீர்கள்?

Chitra said...

:-))))

Anisha Yunus said...

kodanaattula amma estatekku pakkathu estatela oru thundu podungappaa... kentuckyla irunthu vara 36 hours journey theriyumilla. ac van arrange pannunga pirasaarathukku....yaaruppa athu, paambu sinnam potta kodi ready panna sonnene....


chitra akkaa....kaamediya aarambicu, kadasila pichu otharitteenga...hmm...etho nadakkirathu....naan phone panniye clearn pannikkaren :))

நாடோடி said...

தேர்தல் நேரத்தில் சரியான பதிவு..

வாழ்த்துக்கள்

மனோ சாமிநாதன் said...

இந்த உணர்வுகளும் குமுறல்களும் நிறைய பேர் மனதில் இருக்கிறது சித்ரா! ஆனால் யாருக்கு ஓட்டு போடுவது என்பதுதான் பிரச்சினையே! அரசியல் நாகரீகம், உண்மையான நாட்டுப்பற்று, நல்ல சிந்தனைகள் கொண்ட மனிதர் என்று தேடினால் ஓரிருவர் கூட மிஞ்ச மாட்டார்கள் என்பதுதான் இன்றய நிதர்சனம்!

மாலதி said...

//சமூதாயம் எப்படி இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர் நல்லவராக இருந்து - மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். உண்மையாக இருக்க வேண்டும்//கட்சி ஆரம்பிச்சாச்சா...

எங்கள் ஆதரவு கண்டிப்பா உண்டு...

Yoganathan.N said...

பதிவு அருமை சித்ராஜி.
உங்கள் சந்தேகங்கள் மிக நியாயமானவை...
உங்கள் ஊரில் நடக்கும் தேர்தல் பிரச்சாரம் (?) ரொம்பவே வித்தியாசம். காரணம் இங்கு மலேசியாவிலும், ஏறக்குறைய தமிழ்நாட்டின் நிலை தான். :(
மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும்...

Malar Gandhi said...

First of all, I appreciate a political view write-up.

Once upon a time, we used talk-talk and talk all about politics (even when bunch of people have difference of opinion), and I used to be aware of whats happening in the country. Now a days people are so tight-lipped (like under dictatorship), in fact we are slowly losing the 'freedom of speech'.

Like the sense of humor in last paragraph:)

Prabu Krishna said...

//தாகூரின் கனவு எப்பொழுது நினைவு ஆகும்? //

நாங்களும் காத்திருக்கிறோம்......

நிஷாந்தன் said...

//"நான் வோட்டு போடுகிறவர் என் பிரதிநிதி - நான் மதிக்கும் கலாச்சாரத்தின் பிரதிநிதி - என் கொள்கைகளின் பிரதிநிதி" என்று உணர்ந்து வாக்களியுங்கள்//

சாரமிக்க சத்தியமான வார்த்தைகள்... ! ஒவ்வொருவரும் நல்லவருக்குத்தான் வாக்களிப்பது என்று ஒரு மனதாக முடிவெடுத்து செயல்பட்டால் காலப் போக்கில் நல்லவர்கள் மட்டுமே பதவிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. எந்தவொரு பெரு வெள்ளமும் சிறு சிறு மழைத் துளிகளாகத்தான் துவங்குகிறது... எந்தவொரு மாரத்தான் ஓட்டமும் காலின் ஓர் எட்டிலிருந்துதான் துவங்குகிறது...நம்பிக்கை இழக்காமல் செயல்பட்டால் நல்லதே நடக்கும்.. எறும்பு ஊறக் கல்லும் குழியும்தானே ?

ஸ்ரீராம். said...

சுதந்திரம் வந்து விட்டது என்று சொல்கிறோம். கண் முன்னாள் தப்பு செய்திருக்கிறார் என்று தெரிந்தவரை அப்புறப்படுத்தவும் முடியவில்லை, தண்டிக்கவும் முடியவில்லை.நான் வாக்களிக்கா விட்டால் வேறு நாலு பேர் வாக்களித்து மறுபடி அவரே வந்து விடுகிறார். ஜன நாயகம்!

குறையொன்றுமில்லை. said...

அடுத்தவாரம் தமிழகத்தில் தேர்தலாம்.
மக்களின் தேர்வு எப்படின்னுபாக்கலாம்.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஅந்த பதிவை எழுதியபின், எனக்கு என்ன கலங்கிச்சோ தெரியல ...அரசியல் பதிவுகள் பக்கமே அவ்வளவாக போகல.... சரி, இந்த வருஷம் வோட்டு தான் போட முடியல .... ஃஃஃஃஃ

அதெல்லாம் அரசியலோட ராசியக்கா.. உங்களை மட்டும் விடுமா ?

பொன் மாலை பொழுது said...

///விடிவெள்ளி தானைத்தலைவி வாழ்க!///


அம்மா தாயே பேசாம நாடு திரும்பி ஒரு கட்சி ஆரம்பிச்சுடுங்க. நாங்க இருக்கோம். உங்கள தமிழ் நாட்டின் முதல் அமைச்சரா ஆக்கிட்டே மறு வேலை.
விளையாட்டு இல்லை சித்ரா. நம்ம ஊர் பெண்மணிகள் எதனை பேர் இந்த தெளிவுடன் இருக்கிறார்கள்? :(((((((

நட்புடன் ஜமால் said...

"நான் வோட்டு போடுகிறவர் என் பிரதிநிதி - நான் மதிக்கும் கலாச்சாரத்தின் பிரதிநிதி - என் கொள்கைகளின் பிரதிநிதி"

is there anyone like this

I never come across one such ...

Chitra said...

அப்போ நீங்க இந்த தடவை election ல நிற்கலியா? ஆஆஆஆஆ......

mamtc said...

Chitra - you never cease to amaze me. An eyeopener post nad I agree with every single thing.
India unless removes the control from the Gandhi family which had been runing India by ruling for almost 60 yrs , there is no solution.
And one other family from our state which is raping whole of tamilnadu.
http://meandmythinkingcap.blogspot.com/2010/12/magic-with-my-tax-money.html
Your are pretty good in poltical articles, you should write more and share your thoughts..

Jaleela Kamal said...

mm அரசியலா இதுல நா வரல, உங்கள் ஏரியாவுக்கு நிற்க தயராகிட்டீஙக்லா?

இராஜராஜேஸ்வரி said...

சித்ரா!தங்கள் சுட்டிப் பேச்சை என் பதிவுகள் எதிர்நோக்கிக் காத்திருக்கினறன.

Anonymous said...

//அதற்கு காந்தி: " முதலில் வெள்ளையரை வெளியேற்றுவோம். பிறகு, மக்களை தயார் செய்வோம்"
மக்களை அவர் தயார் செய்வதற்குள், அவரே எதிர்பார்க்காத கலவர நிலையை நாடு சந்திக்க..... பிறகு என்ன நடந்தது என்று வரலாறு சொல்லுமே//

வெள்ளையரை விட கொள்ளையர்களின் இம்சை தாங்கவில்லை. சாதி, ஊழல் போன்றவற்றை ஒழிக்க தத்தளித்து கொண்டு இருக்கிறோம் இன்று வரை.

சாமக்கோடங்கி said...

//இந்த கட்சி விட்டா அந்த கட்சி ... இந்த இலவசம் விட்டா அந்த இலவசம் என்று இருக்காமல், தனிப்பட்ட வேட்பாளரை பற்றி நன்கு தெரிந்து கொண்டு, "நான் வோட்டு போடுகிறவர் என் பிரதிநிதி - நான் மதிக்கும் கலாச்சாரத்தின் பிரதிநிதி - என் கொள்கைகளின் பிரதிநிதி" என்று உணர்ந்து வாக்களியுங்கள். வடிவேலு பேச்சையும் சிங்கமுத்து பேச்சையும் கேட்பதை விட உங்கள் மனசாட்சியின் பேச்சை கேட்டு முடிவெடுத்தால் நல்லா இருக்குமே..... //

நெத்தியடி அக்கா... மக்கள் விழிப்புணர்வு பெறும்வரை நாடு வல்லரசாகாது..

Malar Gandhi said...

Dear,

I have some awards waiting for you at my blog. Please feel free to collect them. And I will be delighted to see your Honest 7 Facts. Happy Blogging:)