எங்க நண்பர் ஒருவர், வேடிக்கையாக கேட்டார்:
"இந்தியர்களுக்கும் சீன மக்களுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?"
"உருவத்தில் இருந்து எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு. எதுன்னு நீங்களே சொல்லுங்க."
" இந்திய மக்கள், பாம்புக்கு படையல் வைப்பாங்க.... சீன மக்கள், பாம்பையே படையல் ஆக்கிடுவாங்க."
மற்றவர்கள் சிரிக்க, நானும் என் கணவரும் மட்டும் சிரிக்கவில்லை.
காரணம்: வித்தியாசமாக இருக்கும் இடங்கள், விழாக்கள் தேடி பிடித்து சென்று பார்க்கும் பழக்கம் உள்ள நானும் என் கணவரும், Texas மாநிலத்தில் இருந்த பொழுது, தெரியாத்தனமாக ஒரு பாம்பு திருவிழாவுக்கு சென்று விட்டு வந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. அங்கே சென்ற பின் தான் கவனித்தேன். எத்தனையோ இந்தியர்கள் வாழும் அந்த மாநிலத்தில், எங்கள் இருவரைத் தவிர வேறு எந்த இந்தியரையும் அந்த திருவிழாவில் நான் பார்க்கவே இல்லை. எல்லோரும் விவரமாக எஸ்கேப் ஆகிட்டாங்க போல...
கொஞ்சம் வீக் இதயம் உள்ளவர்கள், இத்துடன் அபௌட் டர்ன், ப்ளீஸ்.... அப்புறம் கம்பெனி எதற்கும் பொறுப்பு எடுக்காது.
வருடந்தோறும், Sweetwater என்ற சின்ன ஊரில், மார்ச் மாதத்தில் இரண்டாம் வார இறுதியில் (வியாழன் முதல் ஞாயிறு வரை) நடக்கும் இந்த திருவிழாவுக்கு அந்த ஏரியா மக்களிடம் வரவேற்பு அதிகம். Rotary Club - Lions Club மாதிரி உள்ள ஒரு சமூக அமைப்பான Jaycees குழுவினர், "World's Largest Rattlesnake Round-up" என்று நம்ம பக்கம் உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மாதிரி, பாம்பு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துறாங்க.
வரலாறு:
ஒரு காலத்தில், அந்த பகுதிகளில் விஷப்பாம்பு வகைகளில் ஒன்றான Diamondback Rattlesnakes அதிகமாக இருந்து இருக்கின்றன. (இந்த பாம்புகளின் வால் பகுதிகளை, அந்த பாம்புகள் கிலுகிலுப்பை - rattle - மாதிரி ஆட்டி சத்தம் உண்டாக்கி எச்சரிக்கை செய்வதால், இந்த பெயர்.) அதனால் கால்நடைகளும் பாதிக்கப் பட்டு வந்து இருக்கின்றன. அந்த பாம்புகளின் வளர்ச்சியை குறைத்து, பாதுகாப்பு உள்ள இடமாக மாற்ற எண்ணி, மக்களையே அந்த பாம்புகளை பிடித்து வரச் செய்து அழிக்க வகை செய்து இருக்கிறார்கள்.
Diamondback Rattlesnake:
வாலில் உள்ள கிலுகிலுப்பை (rattle) பகுதி:
மக்களை உற்சாகப் படுத்தும் விதமாக, "இருப்பதிலேயே அதிக நீள பாம்பை பிடித்து வந்தவர்" - அதிக எடை உள்ள பாம்பை பிடித்து வந்தவர்" என்று இன்னும் சில வகைகளாக பிரித்து பரிசுகள் வழங்கி இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அந்த அளவுக்கு பாம்புகள் தொல்லை இல்லை என்றாலும் பழக்க தோஷம் யாரை விட்டது. மக்களும் "ருசி" கண்ட பூனைகள் மாதிரி, பாம்பு பிடிக்க கை துருதுரு என இருக்குதுன்னு தொடர்ந்து சொல்ல, 52 வருடங்களாக தொடர்ந்து இந்த பாம்பு விழா நடக்குது.
இதற்கெனவே பாம்பு பண்ணைகள் மூலமாக இந்த rattlesnakes வளர்க்கிறார்கள். விழா ஆரம்பிக்கும் நாட்களில் குறிப்பிட்ட இடங்களில் அந்த பாம்புகளை விட்டு விடுகிறார்கள். மக்கள் பாம்புகளை பிடித்து வர போட்டா போட்டி தான்..... பரிசுகள் தொடர்ந்து கொடுக்கப்படுகின்றன.
பாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் மற்றும் டிப்ஸ் கொடுக்கிறார்கள்.
இந்த விழா மூலமாக கிடைக்கும் நிறைய பணத்தில் தான், இந்த ஊரின் பல நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன் படுத்தப்படுகிறது. அதை குறித்த விவரங்களுக்கு:
விழா சிறப்பு நிகழ்ச்சிகள்:
வியாழன் அன்று மதியம், அரை மணி நேர Parade ஒன்று ஊரின் முக்கிய பகுதியில் நடக்கும்.
வியாழன் மாலை, Miss Snake Charmer Scholarship Beauty Pageant நடைபெறுகிறது. தங்கள் கல்லூரி படிப்புக்காக, Jaycees வழங்கும் Scholarship (கல்வி உதவி தொகை) க்காக அழகி போட்டிகள் நடக்கும். அதில் வெற்றி பெறும் அழகிக்குத்தான், Miss Snake Charmer என்ற பட்டம் வழங்கப் படுகிறது.
2009 Miss Snake Charmer அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்:
வியாழன் முதல் ஞாயிறு வரை, இசை - நடனம் என்ற கலை நிகழ்ச்சிகளும் உண்டு.
இப்படி எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.... அப்புறம் தான் விஷமே ...சாரி, விஷயமே என்னை கொட்டுச்சு..... சாரி, திக்கு முக்காட வச்சுது..... ம் ..... ம்.......ம்...... ஸ் ...ஸ்......ஸ்.....
பிடிச்சுட்டு வந்த பாம்புகளை எல்லாம் என்ன பண்றாங்க என்பதில் தான் விஷயமே அடங்கி இருக்குது....
அந்த ஊரில் உள்ள பெரிய அரங்கில் உள்ளும் நடக்கும் நிகழ்ச்சிகளை காண நுழைந்தோம். ஒரே பேடு ஸ்மெல்லு ..... ஆமாம்ப்பா ..... துர் நாத்தம் தாங்கல ..... ஒரு பெரிய குழிக்குள் பிடித்து வரப்பட்ட எல்லா பாம்புகளும் போட்டு வைத்து இருந்தார்கள். அந்த பாம்புகள், தங்கள் பாதுகாப்புக்காக, எச்சரிக்கை கொடுக்கும் வண்ணம் இப்படி ஒரு ஸ்ட்ராங் வாடையை - ஒரு மஞ்சள் திரவம் போல வெளிப்படுத்தி விடுமாம். ஆனால், அங்கே மக்கள் ஏதோ ரோசாப்பூ வாசனையில் அன்ன நடை போட்டுக்கிட்டு போற மாதிரி நடந்தாங்க.... நான் விடுவிடுவென அந்த இடத்தை கடந்து போய் விட்டேன்.
அந்த பாம்புகளிடம் இருந்து விஷம் எப்படி எடுக்கப்படுகிறது - அதை எப்படி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்று மூன்று பேர்கள் விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.
அடுத்து பார்த்த காட்சியில், எனக்கு குடலை பிரட்டி, அதுவே பாம்பு மாதிரி வெளியே வந்துடும் போல இருந்துச்சு.... இரண்டு பேர்கள் , சில பாம்புகளை ஒரு பெரிய பெட்டிக்குள் வைத்து இருந்தார்கள். ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து, கசாப்பு கடைக்காரர் போல, பாம்பு தலையை வெட்டி கொண்டு இருந்தார்கள். நம்ம ஊர் பக்கம், ஆடுகள் பலி கொடுத்துட்டு போற மாதிரி, இங்கே சர்வ சாதாரணமாக பாம்புகளை பலி கொடுத்த மாதிரி சிரச் சேதம் செய்தாங்க... அந்த தலைகளை ஒன்று விடாமல் சுத்தம் செய்து ஒரு வாளியில் சேகரித்துக் கொண்டார்கள்.
அப்புறம், டீன் வயதில் உள்ள சின்ன பெண்களும் ஆண் பிள்ளைகளும், தலைகள் இல்லாத பாம்புகளை ஒரு பெரிய கொடியில், ஏதோ துணி காயப் போடுற மாதிரி காயப் போட்டு விட்டு, கிளிப் மாட்டி, அதன் தோலை, ஒரு வீச்சாக பிய்ந்து விடாமல், ஒரே பீசாக உரித்து கொண்டு இருந்தார்கள். யம்மா..... என்று ஓடி போய்ட்டேன்.
அடுத்த பகுதியில் அப்படி உரிக்கப்படும் தோல்களை, எப்படி பதப்படுத்துகிறார்கள் (how to make them into snake skin leather ) என்று ஒரு குட்டி வகுப்பு நடக்குது.
அடுத்து ஒரு திருவிழா கடைகள்/சந்தை பரப்பி அந்த அரங்குக்குள்ளேயே வைத்து இருந்தார்கள். அந்த பாம்பின் தோல் மற்றும் பதப்படுத்தப்பட்ட தலைகள் வைத்து - குட்டி பாம்பு முதல் பெருசுகள் வரை - செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் விற்கப்பட்டுக் கொண்டு இருந்தன.
கைத்தடி, கம்மல்கள், வளையல்கள், பெல்ட், ஜாக்கெட், பூட்ஸ், கைப்பைகள், பர்சுகள், மோதிரங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என்று வகை வகையாக இருந்தன. ஏதோ கண்காட்சியகம் போல பார்த்து கொண்டு இருந்தேன். அந்த பாம்பு கொத்துனா, மனுஷனுக்கு சங்குதான். அந்த பாம்பை, இந்த மனுஷம் கொத்துனா - சங்கு மட்டும் அல்ல - இத்தனை பொருட்களா? என்று அதிசயமாக இருந்துச்சு.... விற்பனை கோலகாலமாக நடந்து கொண்டு இருந்துச்சு.
rattlesnake belt, purse, money-clip:
rattlesnake pen:
rattlesnake கத்தி உறை:
அந்த பையன் போட்டு இருக்கிற செயின் பாருங்க:
Rattlesnake Boots: (most popular items)
rattlesnake real bones necklace:
நான் என் கணவரின் கையை பிடித்து கொண்டு, போதுண்டா சாமி..... என்னை பலி/பழி வாங்கியது போதும் ....வாங்க போகலாம் என்று இழுத்து கொண்டு வந்தால், அரங்கின் வெளியேறும் வாசல் பக்கம் - கூட்டம் அலைமோதிக் கொண்டு இருந்துச்சு... வெளியே வர முடியல. அப்புறம், மெல்ல வெளியே வந்தால் அந்த வாசல் பக்கம் தான் ஒரு கடை போட்டு, french fries உடன் பாம்பு வறுவல் விற்றுக் கொண்டு இருந்தார்கள். ஏதோ மீன் வறுவல் மாதிரி மக்கள், என்ஜாய் பண்ணி சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். வயதானவர்கள் - சிறுவ சிறுமியர் - ஆண் பெண் - என்று எல்லோரும் ஜாலியா சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.
corn dog என்பது நாய் கறி அல்ல, சோள மாவில் முக்கி எடுத்து பொரிக்கப்பட்ட ஒரு வகை sausage ஆகும்.
Rattlesnake fry with french fries:
நான் அங்கே பிடிச்ச ஓட்டத்தில் எங்க கார் பக்கம் வந்துதான் நிறுத்தினேன். நாங்க அப்போ இருந்த லபக் ஊருக்கு பத்திரமாக வந்து சேர்ந்திட்டோம். பசித்தாலும், ஏனோ எதையுமே சாப்பிடத் தோணல .....ரெண்டு நாளைக்கு....... அப்புறம் தான் சகஜ நிலைமைக்குத் திரும்பினேன்.
படங்கள்: நன்றி கூகிள் அக்கா (எனக்கு இருந்த பதட்டத்தில், நிறைய படங்கள் எடுக்கல. நின்னு நிதானமாக எடுத்து கொண்டு இருந்தால், என்னையே படமா மாட்டி இருப்பாங்க.... என் நிலைமை நிச்சயமா அப்படி ஆகி இருந்து இருக்கும். அவ்வ்வ்வ்....)
பதிவை வாசிச்சிட்டு உங்களுக்கே ஒரு மாதிரியா இருந்துச்சுனா, நேரில் இதையெல்லாம் எடிட் பண்ணாமல் பார்த்த என் நிலைமையை யோசிச்சு பாருங்க....
நாட்டுக்கு நாடு நஞ்சுபுர சம்பவங்கள் உண்டு போல.... அதற்கு அமெரிக்கர்களும் விதிவிலக்கு அல்ல. நேரில் பார்த்திரா விட்டால், நான் கூட நம்பி இருந்து இருக்க மாட்டேன்.
126 comments:
First?
இப்ப படிக்கவில்லை...காலை எழுந்து தான் படிக்கனும்..இல்லனா...ஒரே பாம்பா கனவில் வரும்...அப்பறம் வரேன்...
பகிர்வுக்கு நன்றி சகோ.........இங்கேயும் இருக்கு அப்படி மார்கெட் ஹிஹி!
பாம்பு மட்டும் அல்ல பலவித ஜீவராசிகளின் கொலையிடம் உள்ளது சீக்கிரத்தில் பதிவிடுகிறேன் நன்றி!
முடியல! ஒன்லி வோட்ஸ்! நோ கமெண்ட்ஸ்! ச்சே காலைல சாப்பிடாம ஆபீஸ்ல இருந்து பாத்து தொலைச்சுட்டேன்! அவ்வ்வ்வ்!
தெரியாத்தனமா காலையில் படிச்சிட்டேன். இன்னைக்கு முழுதும் விரதம்தான். வீட்ல சமையல் வேலையை குறைச்சதுக்கு 'அமைதி அம்மா' நன்றி சொல்லச் சொன்னாங்க!
தானைத் தலைவி, தைரியலட்சுமி சித்ராக்கா வாழ்க! :-)
பகிர்வுக்கு நன்றி
என்னது பாம்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ....ஆளை விடுங்க சாமீஈஈ...(( இப்பவே கை காலெல்லாம் உதறுது ))
ஆமா நீங்க எத்தனை பாம்பை பிடிச்சீங்க...???? எத்தனை ஃபிரை பார்ஸல் ..??((நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் ))
பாம்பின் கால் பாப்பறியுமுன்னு சொல்வாங்களே... இத்தனை வித ஐட்டம் போட்டு இருப்பவங்களை பின்னாடியே எந்த பாம்பாவது வந்துடாது ..??? :-))
பாம்பு காப்பற்றப்படவேண்டிய ஒன்று..
ஆனாலும் பதிவு சுவாரஸ்யம்...
லைவ் வா ஒரு இங்கிலீஷ் படம் பார்த்துட்டு வந்து இருக்கீங்க....வீட்டுக்கு வந்து handbag ல ஏதாவது பாம்பு இருக்கானு பாத்தீங்களா..????
மறுபடி அங்கபோய்ட்டு வாங்க..பயம் போய்டும்...!!!!
இவ்வளவு விரிவாக சென்னதற்கு நன்றி...
ஏங்க அந்த தோளை உரிப்பது.. இதர பொருட்களை உருவாக்குவது எப்படி என்பதெல்லாம் போட்டிருக்கலாமே.!!
உங்க தலைப்பு தெலுங்கிலிருந்து தமிழுக்கு 'டப்'பான தமிழ் த்ரில்லர் படம் போல உள்ளது.. ஹி ஹி
தானைத் தலைவி, தைரியலட்சுமி சித்ராக்கா வாழ்க!
----------------ரிப்பீட்டு..
எல்லோரும் விவரமாக எஸ்கேப் ஆகிட்டாங்க போல... - ஒர் அடிமை சிக்கிட்டாங்கன்னு சொல்ராங்களே அதுபோரவா?
அம்மாடியோ......எனக்கு பயமா இருக்குப்பா............
அம்மாடியோ......எனக்கு பயமா இருக்குப்பா............
பதிவை வாசிச்சிட்டு உங்களுக்கே ஒரு மாதிரியா இருந்துச்சுனா, நேரில் இதையெல்லாம் எடிட் பண்ணாமல் பார்த்த என் நிலைமையை யோசிச்சு பாருங்க....----
நல்லாதானே இருக்கிங்க.. பதிவே டெரரா இருக்கு அதான்.
அம்மாடியோ......எனக்கு பயமா இருக்குப்பா............
பதிவை படிக்க பயமா இருந்தது. ஆனாலும் படிச்சிட்டேன்.
பாம்பை, இந்த மனுஷம் கொத்துனா - சங்கு மட்டும் அல்ல - இத்தனை பொருட்களா? என்று அதிசயமாக இருந்துச்சு.... //
பயந்து கொண்டே படித்தோம்.
நீங்க பாம்பு டான்ஸ் -பய நடனம் ஆடியபடியே பார்த்து விரதமும் இருந்தீங்களா??
அடிக்கும் வெய்யிலில் உங்கள் கோபு மாமாவுக்கு குளிர் ஜுரம் வரும்படி செய்துவிட்டீர்களே, சித்ரா.
வீட்டில் எதைப்பார்த்தாலும் பாம்பு நெளிவது போலத்தெரிகிறது.
உரிஉரியென உரித்து விட்டீர்களே உங்கள் அனுபவத்தையும், உங்கள் எழுத்துக்களில், அந்தப்பாம்புகளை அவர்கள், உரித்தது போலவே.
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி போல ஆயிரம் பாம்புத்தலைகளை வாங்கியதைப்பார்த்த அபூர்வ பெண்மணி தான் நீங்கள்.
குண்டு தைர்யம் உங்களுக்கு.
குடலைப்புரட்டிப் போட்டாலும், அங்கிருந்து தப்பித்து வந்து எங்களுக்கு பதிவு கொடுத்த நீங்கள் நீடூழி வாழ்க!
இனி இதுபோன்ற ஆபத்தான, அருவருப்பான, இடங்களுக்கெல்லாம் போகாதீங்க, Please.
அன்புடன் (உங்கள் கோபு மாமா)vgk.
நம்ம ஊர்பக்க பாம்பு பண்ணைய பாக்குரதுக்கெ ஒரு தில் வேணும்... இதுல இப்பிடி வேறயா...
உங்க பாடு கஷ்டந்தான்... :)))
செம டெரர்...
paambum paavappatta jeevanthaan enru ippathaan purigirathu. engeyo china/japanla tribe makkal paambu purse belt seyyaraangannu irunthen. ithu inagyeavaa!!!
enna solla...!!!
உலகின் மிக ஆபத்தான விலங்கு மனிதன் தான் போலும் .............
அபொட் டர்ன் பண்ணி போலம்னுதான் நினைச்சேன்.. சரி நீங்க பாத்துட்டீங்க..நாமளும் தைரியமா போலாம்னு மேற்கொண்டு படிச்சா...
சோ.. த்ரில்ட்....
பட்.. குட் இன்ஃபர்மேட்டிவ் போஸ்ட்....சித்ரா..!!!!! கீப் ராக்கிங்..!!!!
i'll come back later mydear sister!
ஐயோ பாம்ம் பாம்ம்பூஊஊய் உவ்வேஏஏஏய் பேச் முட்லஏய்
காலையில் இதைப் படிச்சிட்டு இருக்கும் போதே வாந்தி வந்துடுச்சு. நாலு வாட்டி ஐ த்ரூ அப் =(( பசிச்சாலும் சாப்பிடவே முடியல. ஏங்க்கா. ஏன் இந்த கொலவெறி.
// படங்கள்: நன்றி கூகிள் அக்கா //
நல்ல நகைச்சுவை. நல்ல வேலை. கூகிள் அம்மன், கூகிள் தேவி , கூகிள் ஆத்தா என்று சொல்லாமல் போனீர்கள். வேறு யாரும் சொல்வார்கள். :)))
வித்யாசமான செய்திகள் , படங்கள். சிறுவயதில் கிராமத்தில் பாம்பு பிடிபவர்கள் வந்து அலைந்து திரிந்து எப்படியாவது ரெண்டு மூணு பெரிய பாம்புகளை பிடித்துவிடுவார்கள். பின்னர் அவைகளை தோலை உரித்துப்போடுவார்கள்.ஒருவன் நின்ற வாக்கில் அந்த பாம்பை தொங்க விட ,மற்றவன் சர்ர்ர் என்று மேலிருந்து கீழாக அதன் தொலை உருவி எடுக்கும் காட்சியை பார்த்தவிட்டு வயிற்றில் வாந்தி வரும் உணர்வுடன் ஓடி விடுவோம்.
அந்த வெண்மையான தோல் இல்லாத பாம்பை பார்த்த உணர்வுதான் வந்தது உங்கள் பதிவை படித்து. போதுமா இன்னம் கொஞ்சம் சொல்லட்டா?!!:))))
Very scary post, Chitra!
பாம்பு பதிவுக்கு நன்றி!
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!உங்களுக்குக் குமட்டியது போதாது என்று எங்களுக்கும்!
ஆமாம் rattler பயங்கர விஷ்மாச்சே!இந்தப் பாம்புகளை வைத்து,ஒரு நாவலும் பின் ஒரு படமும் வந்திருக்கின்றன!
ஆங்கில திரைப்படங்களில் ஹைவேஸில் கார் பயணிக்கும் போது பெரும்பாலும் இந்த வகையான பாம்புகளைப் பார்த்திருக்கிறேன்.
பதிவுலகில் யாரும் தொட்டிராத பதிவு:)
எப்பா ஆள விடுங்க எனக்கு பாம்புன்னாலே பயம் மேலே தொடராமே இப்படியே கெளம்புறேன். படத்தை பார்த்துட்டு நான்கூட நாய் கரியோன்னு நெனச்சி கீழே பார்த்தா தான் தெரியுது.
இப்படி பயமுறுத்தறீங்க சித்ரா
rattled by rattle snake! :)))
//இந்திய மக்கள், பாம்புக்கு படையல் வைப்பாங்க.... சீன மக்கள், பாம்பையே படையல் ஆக்கிடுவாங்க//
இப்போ இந்தியாவில் மும்பையில் பாம்பு சூப் பாம்பு நூட்லஸ், பாம்பு கட்லெட் எல்லாம் கிடைக்குது மேடம்...
//படங்கள்: நன்றி கூகிள் அக்கா (எனக்கு இருந்த பதட்டத்தில், நிறைய படங்கள் எடுக்கல. நின்னு நிதானமாக எடுத்து கொண்டு இருந்தால், என்னையே படமா மாட்டி இருப்பாங்க.... என் நிலைமை நிச்சயமா அப்படி ஆகி இருந்து இருக்கும். அவ்வ்வ்வ்....) //
எழுதும் போது கை நடுங்குரதை பார்க்கும் போதே புரியுது ஒடுலே ஒடுலே ஒடுலே...
பாம்பென்றால், படையே நடுங்கும் என்கிற போது, நாமெல்லாம்
இது வரை வந்ததே (பதிவு படிச்சு பின்னோட்டமளவு) தம்புரான் புண்ணியந்தான்.
பொதுவாய், பயங்கலந்த,அருவருப்பான தவிர்த்து விடக்கூடிய விசயத்தையும், ரசிக்கும் படி எழுதி விடுகிறீரகள், அது எப்படி? உங்கள் கைபாகத்தில், பாகற்காய் கூட்டுக் கூட தித்திக்குமோ!
பாம்பு பகிர்வு, பயப்பட வைக்கிறது. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்ங்க.
I'm so scared. I can't even have my lunch today. I would like to post more information about this topic. But I don't have Tamil font in my office computer. When I was lived in vanni I heard , Ltte is also eat snak's.
பாதில ஜூட்!
பாம்பு ராணி...பாதி மட்டும் படிச்சுட்டு வேகமாய் சாப்ட்டு முடிச்சுட்டு வந்து மீதி படிக்கிறேன்...அப்புறம் என் வாந்தியை யாரு அள்ளுறது...:))) யம்ம்மா சாமி....எப்படிப்பா அந்த இடத்தில் அவளவு நேரம் இருந்திங்க...ஆனால் தம்பட்டம் தாயம்மவா இருந்தால் இந்நேரம் பாம்பு-65 வெளுத்து தின்னுட்டு வந்திருக்கும்..இந்த சித்ரா ஒரு பயந்தாங்கொள்ளி..வேஸ்ட் வேஸ்ட்....:)))))))
பாம்பென்றால் படையே நடுங்குமல்லவா... அதுவும் நாம் பாம்பை 'பய பக்தி'யுடன் பார்த்து பழக்கப்பட்டவர்கள், ஆனால் அதையே 'பகோடா' வாக்கி சாப்பிடுவதை நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை. ஏனெனில் நாம் வளர்ந்த முறை அப்படி. இருப்பினும் உங்கள் தைரிய உணர்வையும் சகிப்புத்தன்மையையும் பாராட்டியே ஆக வேண்டும். இது போன்றே என்னுடன் பணிபுரியும் 'பிலிப்பைன்ஸ்' நாட்டவர்களின் சில பிரத்யேக உணவுகளைக் காணும் போதும் சரி அல்லது அதன் வாசனையை நுகரும் போதும் சரி குடலைப் பிரட்டோ பிரட்டு என பிரட்டும். அவர்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் பூனையோ, நாயோ அதிகம் நடமாட வாய்ப்பில்லை. ஏனெனில் அது அவர்களின் கண்களில் படும் அடுத்தவேளையே சிறப்பு உணவாக மாறி விடும்.
யப்பாஆஆ.. படிக்கவே குமட்டலும் உதறலுமா இருக்குன்னா.. நீங்க ஷமத்து சித்ரா..
இதான் அந்த கிலுகிலுப்பை பாம்பாஆவ்வ்.. அந்த பாம்புக் கும்ம்ம்பி.. யப்பே..
பகிர்வுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா..
ஒருதடவை டிஸ்கவரியோ.. நேஷனல் ஜியாக்ரபியோ.. ஏதோ ஒரு சேனலில் பார்த்தேன். வெட்டிப்போட்டப்புறமும் தலைங்க துடிச்சுட்டிருந்ததை பார்க்க ஐயோ பாவமா இருந்தது.
நல்ல தைரியமான பதிவு.
பாளையங்கோட்டையில் டாக்டர் ராஜேந்திரன் பாம்பு பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். பாம்பு பற்றி புத்தகம் எழுதி இருக்கிறார். வீட்டிலும் பாம்பு வளர்த்து வந்தார். அவரது மகள் தற்போது பெரியகுளத்தில் இருக்கிறார். ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் வேலை பார்த்து தற்போது ஓய்வில் இருக்கிறார்.
நன்றி.
அமெரிக்காவுலேயா இப்படி? இதெல்லாம் தடை பண்ணலியா அங்கே?
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் அப்படின்னு நம்மூர்ல சொல்லுவாங்க, இங்க பாம்பே ப்ரை ஆகிட்டு இருக்குது :)
அந்த ஊர் மக்கள் எல்லாரும் சமயம் வந்த பாம்பாட்டிகளா மாறிவிடுகிறார்கள் போல......
யக்காவ் பயமாயிருக்கு.........
இந்திய மக்கள், பாம்புக்கு படையல் வைப்பாங்க.... சீன மக்கள், பாம்பையே படையல் ஆக்கிடுவாங்க.":)
இந்தப்போக்கிலை பேச்சுதன்னா பாம்பகளும் சிக்கிரமே அழிந்துவிடும். ஸோ பயம், ஆபத்து என்றாலும் பறவாய் இல்லை பாம்புகள் காக்கப்படவேண்டியதுதான்.
அதெல்லாம் சரி நஞ்சுபுரம் பார்த்தாச்சா???
பட்ட அனுபவத்தின் சுவை ( ! ) குன்றாமல் அச்சு அசலாக விவரித்த பாங்கு அபாரம் ! என்னவோ தொலைக் காட்சி சமையல் நிகழ்ச்சியில் சுடச் சுட சிக்கன் 65 செய்முறை விளக்கியது போன்ற ரேஞ்சில் ஒரு நேர்த்தி. இதுதான் `வலைச் சக்ரவர்த்தினி'யின் சிறப்பு.!
எங்க பார்த்தாலும் ஒரே பாம்பா தெரியுதுங்க...
இந்த பதிவை எழுதி இப்படி பயமுறுத்துறீங்களே?
சித்ரா நீங்கள் சொல்வதை கேட்கும் போதே கஷ்டமாய் இருக்கிறது.
நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்!
நாக்குல எச்சி உறுதுங்க பாம்பு கரிதிங்க
Oh man, so many snakes...I can imagine how scared you would have been!
I had few experiments with snakes and scorpions, - live, of course. After done with practicals...I won't have food for two days. I dunno' somehow snakes gives us creeps.
Despite pheromones(nasty smell), poison, scarifying rattle noise...Man wouldn't stop, right! So, now who is creepiest?
யப்பா படங்களை பார்க்கறதுக்கே கண்ணைக் கட்டுதே ::((
ஆனால் பாம்பினத்தை இப்படி சாப்பிட்டும் இன்ன பிற தேவைகளுக்காகவும் அழிப்பது வருத்தத்ற்க்குரியது ::(((
அல் ஐன் zoo வில் பார்க்க அழகான பாம்புகள்,சென்னை பாம்பு பண்ணை கூட பரவாயில்லை,ஆனால் அமெரிக்கர்களின் நஞ்சு புரம்,அட்டகாசம் தான் போங்க,அட நம்ம ஊரில் விலாங்கு மீன் வருமே,அது கூட பாம்பு மாதிரி தான் இருக்கும்,பாம்பு விலாங்குன்னு கூட சொல்வாங்க,ருசி செமையாக இருக்கும்,சித்ரா உவ்வே சொல்வதற்குள் எஸ்கேப்...
அவ்வளவு அருவெறுப்பாக எல்லாம் இல்லை! விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த வகைப் பாம்பைப் பற்றி டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறேன்.ஆனாலும் புதுப் புது இடங்களுக்குப் போய் புதுப் புது விஷயங்கள் சொல்கிறீர்கள்.
தப்பு என்னது தான் சித்ரா! கையில் டிபன் தட்டை வைத்துக் கொண்டே இந்தபதிவைப் படித்திருக்கக் கூடாதுதான்.
'உவ்வே'ன்னு வெளியிலயும் வராம, 'ஆவ்'ன்னு உள்ளேயும் போகாம டிபன் நெஞ்ஜாங்கூட்டுலேயே நிக்குதும்மா!
இந்த புளு கிராஸ்....புளு கிராசுனு சொல்லுவாங்களே..அதெல்லாம் அங்க இல்லையா? ஜல்லிகட்டுக்கே பாஞ்சு பாஞ்சு வர்றாங்க...அங்க வரலையா?
தப்பு என்னது தான் சித்ரா! கையில் டிபன் தட்டை வைத்துக் கொண்டே இந்தபதிவைப் படித்திருக்கக் கூடாதுதான்.
'உவ்வே'ன்னு வெளியிலயும் வராம, 'ஆவ்'ன்னு உள்ளேயும் போகாம டிபன் நெஞ்ஜாங்கூட்டுலேயே நிக்குதும்மா!
மிக அருமையான பதிவு இது, பகிவுக்கு நன்றி அக்கா...
கண்ணை மூடிட்டே கீழே ஒரே ஓட்டமா வந்து கமன்ட் போடுறேன். இப்ப எல்லோரும் பா..பு பற்றி பதிவுகள் போடுறார்களே ஏன்??? ஏதாச்சும் வேண்டுதலா?? சத்தியமா இந்த பதிவு படிக்கவே மாட்டேன்.
ரொம்ப பயமா இருக்குங்க... நாகராஜாவை போட்டு ஏன் இப்படி படுத்தறாங்க.. நாம எதுவும் செய்யலைன்னா பாம்பு எதுவும் பண்ணாதுங்க... அப்பிராணி அது.. ;-))
அந்த பாம்பை, இந்த மனுஷம் கொத்துனா - சங்கு மட்டும் அல்ல - இத்தனை பொருட்களா? //
சான்ஸ்சே இல்லை சித்ரா . அப்பாவின் நகைச்சுவை அட்சரம் பிசகாமல் உங்களிடம்
பாம்புக்கே பயமா இருக்கும் இந்தப் பதிவைப் பாத்தா !
அய்யய்யோ!!!
வோட் மட்டும் போட்டுட்டேன்,பதிவை படிக்கல..சோ நோ கமெண்ட்ஸ்...
சகோதரி...நான் ராத்திரி துர்ங்கனா மாதிரிதான்.ஏற்கனவே கனவுகளில் பாம்பு அடிக்கடி வரும். இப்போது இதையும் படித்தவுடன் பாம்பு ஞாபகமாகவே வருகின்றது...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra,
Wow, a lot of info and kinda scary.
I knew only about rattlesnakes. It looks like there are more to it.
பகிர்தலுக்கு நன்றி.
Thanks
amaaaazing info! really enjoyed the read... thanks for sharing...! :)
இதெல்லாம் கூட நடக்குமா அங்கே ...பாம்ம்ம்ம்ம்ம்ம்பு.....பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்குங்க...
இந்த மாதிரியான விழாக்களைப் பற்றி நான் கேள்வி கூட பட்டதில்லை. இப்போது தெரிந்து/அறிந்து கொண்டேன்.. நன்றி
சாப்பிட்டது இங்குள்ள மக்களா சீனர்களா ? இங்கு நடக்கிறது ஆச்சரியமாகத் தான் இருக்கு
சைனீஷ் ஏன் எல்லாவற்றையும் சாப்பபிடுறாங்கனா.. சைனாவில் ஒரு காலத்தில் ஏதோ பெரிய பஞ்சம் வந்ததாம், எந்தவிதமான உணவும் கெடைக்காமல் மக்க்ள செத்துக்கொண்டு இருந்தபோது "சர்வைவல்"க்காக பாம்பு எல்லாம் சாப்பிட்டு பழகிட்டாங்கலாம்னு யாரோ சொன்னாங்க! :)
மேடம்... நீங்க படிக்காதீங்க படிக்காதீங்கண்ணு கொடுத்த பில்டப்புக்கு இதைவிட அதிகமா எதிர்பார்த்தேன்... ம்ம்ம் ஓகே...
துணிவே துணையா..நல்ல வேளை குழந்தைகளை கூட்டிக்கிட்டு போகலைதானே..
madam, u r 1 daredevil. I cant even watch or read newspapers which has pics of snakes. Whenever we go to museum I let my hubby take the kids near the Boa and I shut my yes and walk away.
And whatever information you share it is all new and interesting. Keep my good work. And thanks for the warning.
[Kinda reminded me of CAREFUL tag attached in subject line to all porno picture emails in boy's inboxes]
என்ன அக்கா பயமுருத்திட்டீங்க....!!
ராத்திரி கனவுல எல்லாம் பாம்பா வருது...அவ்வ்வ்வ்...
தம்பட்டம் தாயம்மா இப்படித் திடீர்னு நஞ்சுபுரம் நாகம்மாவா அவதாரம் எடுத்துப் பதிவுலகத்தையே மிரட்டிட்டீங்க போங்க! :-)))
வெல்.. ஜோக்ஸ் அபார்ட்.... மறுபடியும் ரொம்ப லைவான ஒரு பயணக் கட்டுரை அக்கா....
சூப்பர் couple நீங்க.... :-) எவ்ளோ இடங்களை எவ்ளோ கலாச்சாரங்களை விஷயங்களை லைவா explore பண்ணுறீங்க! இந்த அமெரிக்கப் பயணக் கட்டுரைகள் எல்லாம் சீக்கிரம் அச்சில் வரணும்னு ஆசை... பாருங்க கண்டிப்பா நடக்கும் :-)
அடுத்தவாரம் எங்களை எங்கே கூட்டிட்டுப் போகப் போறிங்க லேடி கொலம்பஸ்?!!!! :-)
நீங்கள் பார்த்ததை உணர்ந்ததை
படிப்போரும்
பார்த்தபடி உணர்ந்தபடி
எப்போதும்
உணரச் செய்யும் உங்கள் பதிவு
இப்போது
இந்தப் பதிவு
நுகரக்கூடச் செய்துவிட்டது
படங்களுடன் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
சித்ரா என்னையும் மீறி உடல் உதறத் தொடங்கியது படித்து முடித்ததும் படங்கள் மிரட்டலாய் பாவம் பாம்புகள் வேற சொல்ல தெரியலைடா..
சகோ நான் ஏதோ இப்போ தமிழ் ல ரிலிஸ் ஆகியிருக்கிற படத்தபத்தி சொல்லி இருக்கேங்கனு வந்தாஆஆஆஅ, முடியல, படிச்ச எங்களுக்கே இப்படின, நேருல பாத்த உங்களுக்கு எப்படி இருக்கும்....பாவம் அந்த பாம்புகள்....
இங்கு இப்படி இருக்கையில் இந்தியாவின் அடையாளமாக மேலை நாட்டினர் பாம்பாட்டியை வைத்திருக்கிறார்களே இது எப்படி?
தெரிந்திராத பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது சித்ரா. பகிர்வுக்கு நன்றி.
அம்மாடி... எப்படி தான் இப்படி தேடி பிடிக்கறீங்களோ?
அம்மாடி...
எல்லாம் ஒரு முடிவோடதான் சுத்துவாய்ங்க போல..
மாறுபட்ட கோணத்தில் செய்திகள் தருகின்றீர்கள் உளம் கனிந்த பாராட்டுகள் உங்களின் ஒவ்வொரு இடுகையும் ஒரு கதை சொல்கிறது
அய்யோ பாம்பா
அவர் என்னா பாம்பு புத்து குள் எட்டி பார்க்கிறார், உள்ளே இழுத்து போட்டுட போகுது எம்மா எனக்கு பயமா இருக்கு
Present teacher....
மிக அருமையான பதிவு..... இதைபோய் வெட்டிபேச்சுன்னு சொல்லுறிங்களே... நீங்கள் சொன்னவிதம் அருமை. படிக்கும்போதே அந்த இடத்தில் நீங்கள் நாங்களாக மாறி உணர்ந்தோம். நல்ல எழுத்தாற்றல். வாழ்த்துக்கள்.
" இந்திய மக்கள், பாம்புக்கு படையல் வைப்பாங்க.... சீன மக்கள், பாம்பையே படையல் ஆக்கிடுவாங்க."//
வணக்கம் சகோதரம், ஆஹா. ஆஹா பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது எம்மூர் பழமொழி, பாம்பென்றால் பசியும் போய்விடும் என்பது அமெரிக்கப் பழமொழியோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
வியாழன் முதல் ஞாயிறு வரை, இசை - நடனம் என்ற கலை நிகழ்ச்சிகளும் உண்டு.
இப்படி எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.... அப்புறம் தான் விஷமே ...சாரி, விஷயமே என்னை கொட்டுச்சு..... சாரி, திக்கு முக்காட வச்சுது..... ம் ..... ம்.......ம்...... ஸ் ...ஸ்......ஸ்.....//
நல்ல வேளை இதனைப் பார்த்து நீயா படத்தில் வருவது போன்று ஒரே ஜீவன் ஒன்றே கண்ணாய் என்று நீங்கள் பாடத் தொடங்கவில்லை:-))
அந்த பையன் போட்டு இருக்கிற செயின் பாருங்க//
அக்காச்சி முடியலை.....பயத்திலை கைகால் நடங்குது.
சகோதரி,உங்களின் பதிவின் மூலம் உலகின் எங்கோ ஓர் மூலையில் இருக்கும் விசித்திரமான உணவு முறையினையும், பாம்புகளை வைத்து ஒரு திருவிழா நடாத்தப்படுவதனையும் அறிந்து கொண்டேன் சகோதரம்.
உலகில் விசித்திரமான உணவுப் பழக்கங்களை பல்வேறு இன மக்களும் கொண்டிருக்கிறார்கள்.
உலகில் மனிதனை மனிதர்களே பிடித்து உணவாக உட்கொள்ளும் கனிபாலிசம் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது தொடர்பான ஒரு பதிவினை நான் வெளியிட்டிருந்தேன். நேரம் கிடைத்தால் ஒரு முறை கிளிக் பண்ணிப் பாருங்கோ.
அடுத்ததாக எலிகளையே உணவாக உட் கொள்ளும் மனிதர்கள், சியராலியோன், மலாவி, போன்ற அமெரிக்க நாடுகளில் வாழ்கிறார்கள்.
சீனா, வியட்னாம், தாய்வான் முதலிய நாடுகளில் உள்ள மக்கள் நாய்களையும் உணவாக உட் கொள்ளுவார்கள்.
அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து, இன்னும் பல நாடுகளில் சிலந்திகள், கரப்பொத்தான் பூச்சிகள், இன்னும் பல Insects வகைகளையும் சாப்பிடுவார்கள்.
தாய்லாந்து, சீனா முதலிய நாடுகளில் இறந்த சிசுக்களை Fetal Cannibalism, Embryo உணவாக உண்ணுவார்கள். தகரங்களில் அடைத்தும் விற்பார்கள்.
சிசுக்களை கிறில் பண்ணி அல்லது நெருப்பில் வாட்டிச் உண்பதற்கு இந் நாடுகளில் ந்ல்ல வரவேற்பும் இருக்கிறது. தாய்வானில் ஒரு உணவின் விலை, அமெரிக்க நாணய மதிப்பில் எழுபது டாலர்களை விடவும் அதிகம் என்றும் கூறுகின்றார்கள்
உங்களின் பகிர்விற்கு நன்றிகள். உங்களின் இப் பகிர்வு பல விடயங்களையும் தேடியறியும் வகையில் எனது ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.
http://www.trosch.org/lif/baby-eat.html
மிரள வைத்த பதிவு
உங்கள் எழுத்து மிக சாதாரணமாக பாம்பு வெட்டும் பகுதியை விவரிக்கும் பகுதி...அடேயப்பா...எழுத்து நடை உங்ககிட்டத்தான் கத்துக்கணும் போல
என்னை ரொம்ப நேரம் யோசிக்க வைத்த பதிவு..இந்த பாம்புக்கு நம்ம ஊர்ல என்னமோ ஒரு பேரு...ஆனா கிளுகிளுப்பை பகுதி என சொன்னபோது...காமெடி
அடுத்து பார்த்த காட்சியில், எனக்கு குடலை பிரட்டி, அதுவே பாம்பு மாதிரி வெளியே வந்துடும் போல இருந்துச்சு//
ம்ஹீம்..இதை தொகுக்கும்போது நீங்க பட்ட கஸ்டம் இன்னும் அதிகம் இருக்கும்
ungalukku eathukkupaaa intha kolay veriiiiiiiiiii
நீங்க குடுத்த எச்சரிக்கையில மீதிப் பதிவ படிச்சுருக்கக்கூடாது.. அப்பாடி..ம்ம்.. டூலேட்.. படிச்ச உடனே.. முதுகுல எதோ ஊர்ற மாதிரி இருக்கு :)
Dangerous Label America...O.America.
ஊருக்கு வரும்போது FRIED RATTLE SNAKE ஒரு பிளேட் பார்சல்.
//நின்னு நிதானமாக எடுத்து கொண்டு இருந்தால், என்னையே படமா மாட்டி இருப்பாங்க..//
ROFL
ரொம்பவும் ரசித்து எழுதுவது என்பது வேறு; இந்த விவகாரத்தில் அதனைச் செய்ய முடியாது. ஆனால் மிகவும் உணர்ந்து உள்வாங்கி எழுதுவது என ஒன்றிருக்கிறது. அதனை இந்தப் பதிவில் செய்திருக்கிறீர்கள். படிக்கிறவர்களையும் அதே உணர்வை அனுபவிக்கச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
அன்புடன்,
அமுதவன்.
அடுத்தவொரு புதுமையான விஷயம் தெரிந்து கொண்டோம்... ஆனால் சற்று வித்தியாசமாக உணர்கிறேன் இந்த பின்னூட்டத்தினை இடும் வேளையில், இப்படியுமா? என்பது தான் அந்த வித்தியாசத்தைச் சொல்லும் ஒரே வார்த்தை..
எதுவாகிலும் தெரிந்துகொண்ட விஷயத்தைப் பற்றி நாளைக்கு விவாதம் பண்ண வேண்டும் அலுவலகத்தில்..
வழக்கம் போலவே அருமையான பதிப்பு..
பார்க்க நல்லாத்தான் இருக்குது.......
பாவம் பாம்பு.. இவங்க பிடிச்சு விளையாட அது தான் கிடைத்ததா என்று கடுப்பா இருக்கு.. தலைய வெட்டின பின்னாடி தான் தோலை உரிக்கிறாங்க என்ற அளவிலாவது மனச சமாதனப் படுத்திக்க வேண்டியது தான்..
விவரம் எல்லாம் நல்லாத்தேன் இருக்கு... ஆனா விவகாரமா இருக்குக்கோய் !!! நானில்ல இந்த விளையாட்டுக்கு :(
யப்பா....
என்னா டெர்ரர் பதிவா இருக்கு...
பதிவை படிக்கவே பயமா இருக்கு... நீங்க நேர்ல எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி இருக்கீங்க....
காலையில் ஆஃபீஸ்ல வந்து பார்த்தாச்சு... இனிமே டிஃபன் சாப்பிடும் போது கூட “ஸ்நேக் பாபு” ஞாபகத்திற்கு வருவார்...
ஹி.........ஹி..........ஹி...........!! நான் தொடர்ந்து படிப்பேன்! எனக்கு பாம்புக்கு பயமில்லை!! ( அப்பாடா தைரியத்தை வரவழைத்தேன்! )
அருமையான போட்டோக்களே உங்கள் பதிவின் உள்ளடக்கத்தை சொல்லி நிற்கின்றன! சூப்பர்!!
Oh my...Chitra...really feel my tummy rumbling...! but very informative post..lively n interesting..! keep them coming dear..
Tasty Appetite
மிக அருமையான தகவல்கள். ஒரு சில படங்கள் வயிற்றை கலக்குகின்றன.
ஆனாலும் சித்ரா... உங்களுக்கு தைரியம் கொஞ்சம் அதிகம்தான்....பாவம் சாலமன் சார்
படிப்பவர்கள் கட்டாயம் Rattlesnake fry சாப்பிடவேண்டும் என்று சொல்லாததால் :) தப்பித்தோம்.
ஏன் இந்த கொலைவெறி :)
நாங்கெல்லாம் படிக்காதீங்கன்னாதான் படிப்போம்.
இந்திய தேசத்தின் மீது மிகுந்த மரியாதையும் பக்தியும் கொண்ட எங்கள் வலைப்பூ! உங்கள் ஆதரவு மிக முக்கியம் >> வருக வருக
http://sagamanithan.blogspot.com/
உங்கள் விஜயம் எங்கள் வளர்ச்சிக்கு தேவைதான். உங்கள் கருத்துகளை அங்கே எழுதவும், நன்றி!
http://sagamanithan.blogspot.com/
oh oh
it looks so scary ;-)
Fantastic shots ...
Texas la dhan irukken,enakku idhai pathi onnume theriyadhu pa.Ayyo pull arikkudhu.
உள்ள பயம்தான் ! வெளிய காட்ட முடியல
விடுற விடுற சூனா பானா !
கொஞ்சம் வீக் இதயம் உள்ளவர்கள், இத்துடன் அபௌட் டர்ன், ப்ளீஸ்....
இப்படி சொன்னாதான் நான் நிச்சயமா படிப்பேன்.
நீங்க எப்படி நேரா பாத்தீங்க!! உங்களுக்கு தைரியம் அதிகமாவே இருக்கு...
//எத்தனையோ இந்தியர்கள் வாழும் அந்த மாநிலத்தில், எங்கள் இருவரைத் தவிர வேறு எந்த இந்தியரையும் அந்த திருவிழாவில் நான் பார்க்கவே இல்லை. எல்லோரும் விவரமாக எஸ்கேப் ஆகிட்டாங்க போல//
நான் லாஸ்ட் வீக் ஒரு வார விடுமுறை பயணமாக ப்ளோரிடாவில் உள்ள டிஸ்னிவோர்ல்டு போயிருந்தேன். அங்கே நான் பார்த்தது ஒரே ஒரு இந்திய குடும்பத்தைதான் எனக்கு ஒரே ஆச்சிரியம் நாம அமெரிக்காவில்தான் இருகிறோமா என்று அல்லது தப்பி தவறி வேறு கண்டம் போகிவிடேனா என்று. அல்லது நான் வருவதை கண்டு பயந்து ஒடி விடார்களா? அல்லது காசை சேமிக்க ஆரம்பித்து வீட்டிலே இருக்க ஆரம்பித்து விட்டார்களா?
உங்களுக்கு நல்ல தைரியம்தான் இந்தமாதிரி இடத்துகெல்லாம் போய்வர்கிறீகள். வாழ்த்துகள். எப்போ சந்திர மண்டலம் போய்வரப்போகிறீரகள். நீங்கள் அங்க்கே போய்வந்தால் நல்ல சுவராசியமான விஷயங்கள் தமிழில் படிக்க கீடைக்கும்.
ஃஃஃஃபாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் மற்றும் டிப்ஸ் கொடுக்கிறார்கள். ஃஃஃஃ
இதுக்கெல்லாமா கொடுக்கிறாங்கள்... நல்லயிருக்கு விளையாட்டு தென்னாபிரிக்க காட்டில் விட்டால் தெரியும்...
Post a Comment