நேற்றைய பதிவின் மூலம், இங்கு அருகில் உள்ளவர்களிடம் வெளிப்படையாக காட்ட முடியாத - சொல்ல முடியாத - என் உணர்வுகளை பகிர்ந்து இருந்தேன். எழுத்தில் கொட்டியபின், மனம் அமைதி ஆனது. ஆறுதலாக, கரிசனையுடன் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இங்கு உள்ள இறுகி போன சூழ்நிலை - மன நிலையில் இருந்து எப்படி வெளி வருவது என்று யோசித்து கொண்டு இருந்தேன்.
அப்பொழுது, சில நிமிடங்கள் அர்ப்பணாவை பற்றி நினைத்தேன். அவளது மறைவின் சோக பிடியில் இருந்து நான் வெளி வர, அவள் வாழ்ந்த வாழ்க்கையே எனக்கு உதவுகிறது.
அர்ப்பணாவின் வாழ்க்கை, சீக்கிரம் முடிந்து போய் இருக்கலாம். ஆனால், கடைசி நிமிடம் வரை, நன்றாக சிரித்து விட்டு சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போய் இருக்கிறாள். "Live for the moment" என்று எங்கள் அனைவருக்கும் காட்டி விட்டு சென்று இருக்கிறாள். யாரும் இந்த உலகத்தை விட்டு செல்லும் போது, பிறர் நலன் கருதியும் உதவி செய்து, வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும். தன் காரியமாக மட்டும் இருந்து விட்டு, நல்ல படியாக வாழ பாக்கி வைத்து விட்டு செல்ல கூடாது என்று சொல்லி கொடுத்து இருக்கிறாள். A quote to share: (Author unknown)
தோழிகள், அனைவரும் சந்திக்கும் போது, பலர், அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும், பிரச்சனைகளை பற்றியும் பேசி கொண்டு இருப்பார்கள். இவள் எப்பொழுதும் சந்தோஷமாக - positive ஆக பேசி கொண்டு இருப்பாள். "நீங்க எல்லாம் இங்கே இப்படி கவலை படுவதால் மட்டும், அங்கே அந்த வேலை அல்லது பிரச்சனை, தானாக முடிந்து விடுமா? அப்புறம் எதற்கு அதை பற்றியே நினைத்து கொண்டு , புலம்பி கொண்டு இருக்கீங்க? அவரவருக்கு இருக்கும் டென்ஷன் இல் இருந்து விடுபட, ஒரு change குத்தானே சந்தித்து கொள்கிறோம். இங்கேயும் அதே டென்ஷன் நினைப்புதானா?" என்று உணர வைப்பாள்.
"அடுத்து வரப் போகும் கஷ்டத்தை பற்றி மட்டும் நினைக்காமல், அடுத்து வரப் போகும் நல்ல விஷயத்தை பற்றியும் நினைங்க. வாழ்க்கையை நினைத்தால், அத்தனை பயமாக இருக்காது. உற்சாகமாக இருக்கும்" என்பது அவளின் பாலிசி.
Life is not just a terrifying thing, but a terrific thing too.
அர்ப்பணாவின் மறைவிலும், எங்களால் இன்னும் புன்னகைக்க முடிகிறது என்றால், அவளை பற்றி நினைக்கும் போது, அவள் வாழ்ந்த வாழ்க்கையில் உள்ள அர்த்தமும் ஒரு காரணம். எங்கள் புன்னைகைகளில் அவளும் வாழ்கிறாள்.
என்னை பழைய உற்சாகத்துடன் மீட்டு எடுத்து கொண்டு வர இதுவே போதுமே!!!!
இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல.
தமிழ்மண நட்சத்திரத்துக்காக , எனக்கு வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
84 comments:
மீண்டு வாருங்கள் சித்ரா. தமிழ் மண நட்சத்திரமாக ஒளி வீசுங்கள்
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல. //
Yes.. its true.
விரைவில் மீள பிரார்த்தனைகள்..
உங்கள் தோழியின் வரிகளின் வழியாக மீண்டு வந்திருக்கிறீர்கள் சித்ராக்கா..
எப்போதும் அவர் நினைவு நீடித்திருக்க!
//தன் காரியமாக மட்டும் இருந்து விட்டு, நல்ல படியாக வாழ பாக்கி வைத்து விட்டு செல்ல கூடாது //
அருமை - மீண்டு வாருங்கள் சித்ரா!.,
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல.//
உண்மையான வாசகங்கள்..
நீங்கள் இழப்பிலிருந்து மீண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள்..
God Bless You..
அக்கா உங்கள் நினைவுகளில்
இருந்து மீண்டு வாருங்கள்....................
நம் நண்பர்கள் நம்முடன் காலை உணவு சாப்பிட்டு மாலையில் அவர் இல்லைஎன்றால் நம் மனம் எப்படி இருக்கும். உங்கள் மனம் புரிகிறது...
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல.//
என்ன சொல்ல? உண்மையும் வலியும்.
மீண்டு வர இறைவன் உடனிருப்பார்.
தோழியின் இனிய நினைவுகள் உங்களைச் செலுத்தும் சக்தியாக இருக்க நட்சத்திர வாரம் ஜொலிக்கட்டும்.
அர்ப்பணாவின் மறைவிலும், எங்களால் இன்னும் புன்னகைக்க முடிகிறது என்றால், அவளை பற்றி நினைக்கும் போது, அவள் வாழ்ந்த வாழ்க்கையில் உள்ள அர்த்தமும் ஒரு காரணம். எங்கள் புன்னைகைகளில் அவளும் வாழ்கிறாள்---
உண்மைதான் சகோதரி
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
விரைவில் மீண்டு வாருங்கள்..
சீக்கிரம் மீண்டு வர பிராத்தனை செய்கிறேன் ................
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல...
அருமையான வாக்கியம்
"அடுத்து வரப் போகும் கஷ்டத்தை பற்றி மட்டும் நினைக்காமல், அடுத்து வரப் போகும் நல்ல விஷயத்தை பற்றியும் நினைங்க. ///
அர்ப்பணா கற்று தந்த பாடம். உண்மையிலயே அனைவருக்கும் பயன் தரும். வாழ்க்கையை அப்படி தான் எதிர் நோக்க வேண்டும். அவர் ஆத்மா சாந்தியடைய பிராதிப்போம்.
Hi akka,
Arumaiyaana advice...beautiful thoughts...:0
Dr.Sameena@
http://www.myeasytocookrecipes.blogspot.com
http://www.lovelypriyanka.blogspot.com
இன்றைய பதிவில் இருந்து நீங்கள் சற்றே மன ஆறுதல் அடைந்திருப்பது புரிகிறது.தோழி அர்ப்பணாவின்
சிந்தனைகள் நன்றாகவே உள்ளது.
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல.//
என்ன சொல்ல? உண்மையும் வலியும்.
மீண்டு வர இறைவன் துணையிருப்பார்.
தோழியின் இனிய நினைவுகள் உங்களை செலுத்தும் சக்தியாக இருக்கட்டும்.
நான் கல்லூரியில் படிக்கும் பொழுது நண்பர்கள் எல்லோரும்
life is like an ice
enjoy before it melts (இது தம் அடிகிறதுக்கு நண்பர்கள் கூறும் காரணம்)
ஆனால் இப்போது மனம் முடிந்த பின்பு இதை யோசித்தால் சரி என்று தன தோன்றுகிறது எனக்கு .
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல. //
அழகாச்சொன்னீங்க..
நட்சத்திரவாழ்த்துக்கள்.
தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்...சிந்தனைகள் அருமை...
விரைவில் மீண்டு வாருங்கள்
////// "நீங்க எல்லாம் இங்கே இப்படி கவலை படுவதால் மட்டும், அங்கே அந்த வேலை அல்லது பிரச்சனை, தானாக முடிந்து விடுமா? அப்புறம் எதற்கு அதை பற்றியே நினைத்து கொண்டு , புலம்பி கொண்டு இருக்கீங்க? அவரவருக்கு இருக்கும் டென்ஷன் இல் இருந்து விடுபட, ஒரு change குத்தானே சந்தித்து கொள்கிறோம். இங்கேயும் அதே டென்ஷன் நினைப்புதானா?" என்று உணர வைப்பாள்.///// உண்மையில் மீள முடியாத ஒரு தருணம் அக்கா.... நிச்சயம் எழுந்த வாருங்கள் நீங்கள் நினைத்தால் முடியும்...
உங்கள் தோழியின் நிணைவுகள் என்றும் இருக்கும்.
அர்ப்பணா ஆன்ம சாந்திக்கு மீண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன்
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல.//
True! :))
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல.//
உண்மைதான்... தோழியின் பிரிவில் இருந்து மீண்டு வாருங்கள்...
சோகத்தின் இடையே நட்சத்திர வாரம். நல்லா பண்ணுங்க... உங்கள் சோகம் கரைய இது வாய்ப்பாய் இருக்கட்டும்.
Thats the spirit Chithra, cheer up, God Bless You.
தங்கள் தோழியின் வார்த்தைகள் உங்களுக்கு ஆறுதலாய் இருப்பது சந்தோசம்....
விரைவில் மீண்டு வர வேண்டுகிறேன்.........
நல்லா எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
உங்களின் நேற்றைய பதிவினை படித்து மனம் வருந்திய எனக்கும் இன்றைய பதிவு ஒரு புத்துணர்வை தருகிறது..
துயரத்தில் இருந்து மீண்டு வரவும். தமிழ் மண நட்சத்திரம் ஆனதிற்கு வாழ்த்துக்கள்.
சித்ரா பிரிவின் துயரையும் தங்களுடைய தேடலையும் வெளிப்படுத்திய விதம் அருமை.தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.உற்சாகமாக வலம் வாருங்கள்.
இந்த உலகில் பிறந்த யாரும் நம்மை ஒருபோதும் விட்டு செல்வது இல்லை , அவர்கள் தங்களுடைய நற் செயல்களின் முலம் நம்முடன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்,,,
நினைவுகள் கடக்க
கனவுகள் கலைய
நலமுள்ள இன்றே
இனிதாக நாளை
படைக்கட்டும்..........
// என்னை பழைய உற்சாகத்துடன் மீட்டு எடுத்து கொண்டு வர இதுவே போதுமே//
அப்படியே புது மனுஷியாய் மீட்டு வந்து விடுங்கள். தமிழ்(உங்கள்)மணத்துக்கும் வாழ்த்துகள்!!
அன்பின் சித்ரா ! வாழ்க்கை அவரவர் மனம் போல்! நட்பின் இழப்பிலிருந்து மீண்டு சிறப்புடன் எழுத வேண்டுகிறேன்!
வாழ்த்துக்கள் சித்ரா.
இழப்பிலிருந்து மீண்டு வரவும் உதவுகிற அர்ப்பணாவின் வாழ்க்கை எல்லாருக்கும் பாடம்தான்.
அர்ப்பணாவுக்கு என் அஞ்சலிகள்!
நடந்தவைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவற்றிலிருந்து வெளியே வரமுடியும்.
வந்துவிட்டீர்கள் எனப்புரிகிறது சித்ரா..
வாழ்த்துகள்..
"அடுத்து வரப் போகும் கஷ்டத்தை பற்றி மட்டும் நினைக்காமல், அடுத்து வரப் போகும் நல்ல விஷயத்தை பற்றியும் நினைங்க. வாழ்க்கையை நினைத்தால், அத்தனை பயமாக இருக்காது. உற்சாகமாக இருக்கும்" //
அருமையான வாக்கியம்
மீண்டு(ம்) வர வாழ்த்துக்கள் .
நட்சத்திர பதிவாராகி உள்ள தங்களுக்கு வாழ்த்துக்கள்
இப்போது அழகான தலைப்புக்கு மட்டும் வாழ்த்துக்கள்.திரும்ப வருகிறேன்.
இந்த இடுகையை படித்ததும் முந்தைய பதிவுகளை தொடராமல் விட்டது தெரிகிறது.மீண்டும் வருகிறேன்.
தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்!
/// இளங்கோ said...
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல. //
Yes.. its true.////
ஆமாம்!
காலம் காயத்தை மட்டும் ஆற்றும், வடுக்களை அல்ல
அருமை...தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்..
thats the spirit chitra.
always thank God for the lovely things we've had in our life.
that quote is very nice.
you are always in my prayers.
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல.//
யதார்த்த வரிகள் சித்ரா.
உங்களுக்கு நாங்கள் ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும்.. ஆனால் சம்பவத்தின் தாக்கம் எங்களை அதிர்ச்சியில் உறைய செய்து விட்டது..
எனவே நீங்கள் எங்களுக்கு ஆருதல் சொல்ல வேண்டியதாகி விட்டது...
இந்த பதிவு சற்று ஆறுதலாக இருந்தது....
நேற்றைக்கு சொல்ல முடியல ... நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா...
/ "அடுத்து வரப் போகும் கஷ்டத்தை பற்றி மட்டும் நினைக்காமல், அடுத்து வரப் போகும் நல்ல விஷயத்தை பற்றியும் நினைங்க. வாழ்க்கையை நினைத்தால், அத்தனை பயமாக இருக்காது. உற்சாகமாக இருக்கும்" /
உண்மை தான் சகோ... மீண்டு(ம்) வாருங்கள்...
நீங்கள் மறுபடியும் மெல்ல மெல்ல பழைய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி!
சென்றப்பதிவிற்கு நான் இட்ட கமெண்ட்படி நீங்கள் அனைவரும் தியான மற்றும் யோகாசன வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளுங்கள். கண்டிப்பாக மன மலர்ச்சியோடு மன முதிர்ச்சியும் கூடும்.
இக்கட்டான தருணங்களில் மனம் சமநிலையில் இருப்பது மிகவும் அவசியம். இந்த ஆலோசனையை தள்ளிவிட மாட்டீர்கள் அல்லவா? உங்களின் மீது இருக்கும் அன்பினாலும், ஆழ்ந்த அக்கறையினாலும் சொல்கின்றேன் என்பதனை உணர்கிறீர்கள் இல்லையா சித்ரா?
மீண்டு வாருங்கள்...
நட்சத்திர வாழ்த்துக்கள்!!
இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல. //
அழகான வரிகள். இருங்க முந்தின பதிவு இன்னும் படிக்கல. படிச்சிட்டு வந்திர்றேன்
காலம் எல்லாவிதமான காயங்களையும் ஆற்ற வல்லது; சில சமயங்களில் தழும்புகளை விட்டுச்செல்லும். மகிழ்ச்சிக்கு பல நினைவுப்பொருட்கள் இருப்பதுபோல, துயரத்துக்கு அந்த தழும்புகளையோ, வடுக்களையோ கருதி பயணத்தைத் தொடர்தல் கட்டாயமாகிறது. நல்ல இடுகை; ஆழ்ந்த சிந்தனை!
மனதில் உள்ள காயம் விரைவில் ஆற வேண்டுகிறேன்.
இதுவும் கடந்து போகும்
//மீண்டு வாருங்கள்...........//
வெட்டிப் பேச்சல்ல உங்களது. கெட்டிப்பேச்சு
நேற்றைய சோகத்தை விடுத்து, இன்று
சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளதை
இநத இடுகை உணர்த்துகின்றது.
மீண்டும் முன்போலவே தொடர
வரவேற்கின்றேன்.
தமிழ்மண நட்சத்திரத்திற்கு
நல்வாழ்த்துக்கள்!
தமிழ் மண நட்சத்திரதுக்காக வாழ்த்துக்கள் சித்ரா!
இந்தப் பதிவிலிருந்து நீங்கள் சகஜநிலைக்கு வருவது புரிகிறது. அதுவே மறைந்த சகோதரியின் நட்புக்கு நீங்கள் செய்யும் மரியாதை.
நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா.
நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா..
சமத்து.. வெளிய வாங்க.. வெட்டியா பேசுவோம்.. கண்ட மிச்சம் என்ன வாழ்க்கையில :))
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல. //
அருமை - மீண்டு வாருங்கள் சித்ரா!.,
தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவராய் தெரிவாகியமைக்கு வாழ்த்துக்கள்.
சீக்கிரம் சகஜ நிலைக்கு வாருங்கள். நாங்க பழைய கல கல(லொட லொட) சித்ராவை உங்களின் எழுத்தில் பார்க்க வேண்டும்.
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல. //...தட்ஸ் ட்ரு!
நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா!!
migavum kodumai chitra...Read the whole story about aprana and archana...really feeling terribly sad..I can understand your feeling too...They both looks so cute and charm...But i don't know why god do like this...Why these things r happening...Praying for the soon recovery of the girl...
வலி குறைய வேண்டுகிறேன்.. விபத்துகளை குறைக்க வழி தேடுவோம்..
காலம் எப்படிபட்ட துயரங்களையும் ஆற்றிவிடும். ..அமைதி..
நல்ல மனோரீதியயல் பதிவு.மேலும் டாப் 20 யில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்
//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல. //
YES
நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா.
Very true...Happiness is in Mind.
மனம் அமைதியடைந்திருக்கிறீர்கள் சித்ரா.நட்சத்திர வாழ்த்தும் சேரட்டும் !
கண்டிப்பா சிலபேர் வாழ்ந்து நமக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறார்கள். உங்கள் அபர்ணாவும் அப்படியே.. உங்களுக்கு அவர் ஒரு படிப்பினை தந்திருக்கிறார். அப்படியான மகிழ்ச்சியான தருணங்களை மனதிலிருந்து எடுங்கள். நட்சத்திர வாழ்த்துக்கள்.
விரைவில் மீண்டு வாருங்கள் சித்ரா... உங்கள் ஸ்மைல் (:-)) எங்களுக்கு வேண்டும்...
அக்கா ஒரு தம்பியாக என்னால் இந்த வரிகளைத்தான் உங்களுக்கு தர முடிகிறது.
# நொடிக்கொரு நிலை மாறும் வாழ்க்கை
வெடிக்கும் உணர்ச்சி வெறுமை தாளாமல் தனித்தே வாடும் என்னுயிர் எரிக்கும் வெப்பத்தில் வெந்து தணியும் உடல்.
# அரிதுயில் ஆழ்வதரிது...வரினும்
மீள்துயில் மீண்டெழும் மானிடர்க்கே,
மீளாதுயில் மாண்டவர்க்கே
மண்ணில் வாய்க்கும்.
பாழ்வெளித் தொட்டு...
பால்வெளி வரை,
நீண்ட என் உதிர உறவே..!
உனைத் தேடுகிறேன்.
அர்ச்சனா இப்போ எப்டி இருக்காங்க சித்ரா?
அவங்க கூடிய விரைவில் உடல் நலம் பெற்று தன பெற்றோருக்கு ஆறுதலாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் கருத்தாக்கமுள்ள பதிவு. வாழ்த்துக்கள் தோழி.
இதில் என்னை கவர்ந்த விஷயம், இவைகளை நீங்கள் பொத்தி வைக்காமல் எங்களுடன் பகிர்ந்து கொண்டது. பகிர்தல் என்பது அற்பமான ஒன்று அல்ல.
துக்கத்தில் பகிர்வு ஆறுதலையும் அமைதியையும் , மகிச்சி .கொண்டாட்டங்களில் பகிர்வு அவைகளை அதிகமாக்கிவிடும். இதுதான் உண்மை. இரண்டு மாறுபட்ட நிலைகளிலும் மனிதர்கள் ஒன்று சேர்வது இதற்காகத்தானே!
Post a Comment