Saturday, November 27, 2010

நன்றி மறப்பது நன்றன்று

இந்த ஸ்பெஷல் நட்சத்திர  வாரத்தை, என்னால் மறக்கவே முடியாது.

நவம்பர் 22 முதல் 28 வரை தமிழ்மண நட்சத்திரமாக இருக்க, என்னை  தேர்ந்து எடுத்த தமிழ்மண குழுவில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகள் பல.
என்னை பொறுத்தவரை எல்லாம் இறைவன் செயல் தான்.  சில சமயம், காரணங்கள் புரியும் - சில சமயம், காரணங்கள் இருந்தும் மனிதரால் ஏற்று கொள்ள முடியாமல் போகலாம் - சில சமயம், காரணங்கள் நமது சாதாரண அறிவுக்கு எட்டாமல் போகலாம்.     தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்,  வேறு ஒரு புரிதலில் வாழ்க்கையின் அர்த்தம் - காரணங்களுடன் எல்லாமே கடந்து போகலாம்.

எனக்கு தினம் ஒரு பதிவு எழுத வேண்டியது இருந்ததால்,  அதில் என்ன எழுதலாம் - எப்படி எழுதலாம் என்று யோசித்து கொண்டு இருந்ததில், கடந்த இரண்டு வாரங்களாக நடந்து கொண்டு இருக்கும் சில சம்பவங்களின் இறுக்கமான சோக பிடியில் இருந்து வெளியே வர பெரிதும் உதவியது.  திங்கள் அன்று "முன்ன பின்ன செத்து இருந்தால்தானே? " என்று புலம்பி ஆரம்பித்த வாரத்தில்,  "மனம் தான் மகிழ்ச்சிக்கு காரணம்"  என்று நான் கற்று கொண்டேன்.   இந்த வாரத்தை,  எப்படி மறக்க முடியும்?   உங்களின்  ஆதரவான பின்னூட்டங்கள்  மூலம், எனக்கு தேவையான சப்போர்ட் மற்றும் உங்களின் தூய அன்பினை கண்டு நெகிழ்ந்தேன்.  பதிவர்களாக இருப்பவர்களுக்கு, இது வரப்பிரசாதம்.  அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்.


நவம்பர் 26 , வெள்ளி அன்று - அர்ச்சனாவின் பெற்றோரும் அவளது அண்ணனும் இங்கு வந்து விட்டார்கள்.  டிசம்பர் 4 , அர்ச்சனாவின் பிறந்த நாள் வருவதால், அது முடிந்த பின்,  வேறு ஒரு நாளில்   அர்ப்பணாவின் மறைவை குறித்து   அவளுக்கு தெரியப்படுத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளனர்.
அர்ச்சனா இன்னும் intensive care unit தான் இருக்கிறாள்.   இரண்டு வாரங்களுக்குள், அட்லாண்டாவில் உள்ள ஒரு Rehab மருத்துவமனைக்கு மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.  அவளுக்கு அங்கு வைத்து ஆறு மாதங்கள் வரை தெரபி மற்றும் treatment தொடர்ந்து நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு தூரம் தள்ளி போய்விட்டால், இப்பொழுது போல அடிக்கடி நான் அவளை பார்க்க முடியாது.   அவள் பூரண நலன் பெற்று திரும்பி வர தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

நவம்பர் 28 , என் தந்தை, திரு. பொ.ம. ராசமணி அவர்களின்  முதலாம் ஆண்டு நினைவு நாள்.  அவரை பற்றி பெருமையுடன் நினைத்து பார்த்து, அவரை எனக்கு தந்தையாக தந்த இறைவனுக்கு நன்றி  சொல்கிறேன்.
என் அம்மாவுக்கு அவர் காதலுடன் எழுதி இருந்த  கவிதைகளை, என் தம்பி ஒரு கவிதை தொகுப்பு புத்தகமாக - "ஆதலால் காதல் செய்வீர்!" என்ற தலைப்பில்,  அவர் நினைவு நாளான இன்று,  நெல்லையில் வெளியிடுகிறான்.  அந்த தொகுப்பு -  புத்தகமாக வர வேண்டும் என்பது என் தந்தையின் விருப்பமும் என்று சொல்லி சென்று இருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், எனது தம்பியின் திருமணத்தின் போது, என்றும் இளமையாய் நின்ற என் தந்தை வாழ்த்துரை வழங்கிய போது எடுத்த படம். 

தொடர்ந்து தங்களது பரிந்துரை மூலமாகவும் - பின்னூட்டங்கள் மூலமாகவும் - வோட்டு மூலமாகவும் - விருதுகள் தந்தும்,  நானும் ஒரு தமிழ்  பதிவர் என்ற அங்கீகாரம் கொடுத்து,  என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல. 


எல்லா புகழும் இறைவனுக்கே!

118 comments:

LK said...

எந்த பப்ளிகேசன் புத்தகத்தை வெளியிடுகிறது ? எங்கு கிடைக்கும் ??

dheva said...

வாழ்த்துக்கள்..!

மிக அருமையான நட்சத்திர வாரம்...அட்டகாசமான கட்டுரைகள்...! இன்னும் நிறைய எழுதி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

Chitra said...

அந்த விவரம் நான் இன்னும் கேட்டுக்கொள்ளவில்லை. என் தம்பியிடம் கேட்டு சொல்றேன், LK. மிக்க நன்றி.

S Maharajan said...

தெய்வதிரு.ராசாமணி சார்க்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி.

அர்ச்சனா சீக்கிரமே நலம் பெற வேண்டுகிறேன்

வைகை said...

உங்களுடைய சில பதிவுகள் மட்டுமே படித்திருக்கிறேன்! படித்தவரை கண்டிப்பாக உங்களுடையது வெட்டிப்பேச்சு இல்லைன்னு மட்டும் தெரியிது! ஆங்!!! சொல்ல மறந்துட்டேன்! தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!!!!

KANA VARO said...

வாழ்த்துக்கள்..!

நட்சத்திர வார பதிவுகள் கலக்கல்

பார்வையாளன் said...

தினந்தோறும் உங்கள் கட்டுரைகளை படித்தது, எங்களுக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது...

இனிமேலும் தினம் ஒரு கட்டுரை பாணியை தொடர்ந்தால் மகிழ்வோம்

அத்திரி said...

வாழ்த்துக்கள்

ஹரிஸ் said...

வாழ்த்துக்கள்..

அமுதா கிருஷ்ணா said...

அப்பாக்கு முதலாண்டு நினைவாஞ்சலி...

ஜீ... said...

வாழ்த்துக்கள்! :)


Dr.Sameena Prathap
said...

Hi Akka,

Congrats!!Menmelum uyara vaalthugal!!:)God Bless!!":)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com
http://www.lovelypriyanka.blogspot.com

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

உணர்ச்சிகரமான நிகழ்வுகளை வெளிப்படுத்தி ஒரு பாதிப்பை எங்களிடமும் ஏற்படுத்திவிட்டீர்கள்!

யாதவன் said...

வாழ்த்துக்கள்

asiya omar said...

நன்றியை வெளிப்படுத்திய விதம் மனதை தொட்டது.எல்லாப்புகழும் இறைவனுக்கே.உங்கள் தந்தையார் நினைவு நாள்,என்றும் உங்களுடன் இருப்பதாக நினைத்து கொள்ளுங்கள்.நிச்சயம் கவிதை தொகுப்பு வெளிவந்தவுடன் வாங்கி பார்க்கவேண்டும்.நெல்லை தானே நிச்சயம் என் கையில் கிடைக்கும்.

வெறும்பய said...

வாழ்த்துக்கள்

மண்டையன் said...

அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .........

Anbe Sivam said...

I started reading your blog quite recently. And got to know you had to go through some tough times.

Nothing is permanent. We have to move on till our time comes.

Congrats for being the star of the week in tamilmanam.

All the best.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

நட்சத்திர வாரத்தை அருமையாக பூர்த்தி செய்தமைக்கு வாழ்த்துக்கள்...

Anonymous said...

தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு
வாழ்த்துக்கள்!!!சிதிராக்கா

தெய்வதிரு.ராசாமணி சார்க்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி.

R.Gopi said...

//இந்த ஸ்பெஷல் நட்சத்திர வாரத்தை, என்னால் மறக்கவே முடியாது.//

வாழ்த்துக்கள் சித்ரா...

//தொடர்ந்து தங்களது பரிந்துரை மூலமாகவும் - பின்னூட்டங்கள் மூலமாகவும் - வோட்டு மூலமாகவும் - விருதுகள் தந்தும், நானும் ஒரு தமிழ் பதிவர் என்ற அங்கீகாரம் கொடுத்து, என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல. //

இதற்கு உரியவர் தானே நீங்கள்!!

சே.குமார் said...

மிக அருமையான நட்சத்திர வாரம்...அட்டகாசமான கட்டுரைகள்...! இன்னும் நிறைய எழுதி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

தந்தை என்றும் உங்களுடன் இருப்பதாக நினைத்து கொள்ளுங்கள்.

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள் - நட்சத்திரமானதிற்கும், அப்பாவின் புத்தக வெளியீட்டிற்கும்.

காயங்களைக் காலம் ஆற்றும். இறைவன் மனஉறுதி தருவான்.

dr suneel krishnan said...

வாழ்த்துக்கள் :)

பிரபு . எம் said...

அற்புதமான நட்சத்திர வாரம் அக்கா.....
அப்பாவுக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி...
புத்தகத்தைப் பற்றிய தகவல் சொல்லுங்க வாங்கிப் படிக்கிறோம்....
அர்ச்சனாவைப் பார்த்துக்கொள்ள அப்பா அம்மா வந்துவிட்டது நல்ல செய்தி...
இனிமேல் அவர் உடல்நலம் நிச்சியம் துரிதமாய்த் தேறும்... ஆனால் சகோதிரியின் மறைவைத் தாங்கும் சக்தியைக் கடவுள் அவருக்குத் தரவேண்டும்... :-(
ஒவ்வொரு பதிவையும் ரசித்தேன்....
ரொம்ப கேஷுவலா சிர்க்க வைக்கும் நீங்கள் நிறைய இடத்தில் சிந்திக்கவும் வைத்திருந்தீர்கள்...
நட்சத்திர வாரம் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கும் நேரம் உங்களுக்கும் திருப்தி வாசித்துத் திளைத்த எங்களுக்கும் மனநிறைவு.....

சித்ரா அக்காவின் பயணம் இன்னும் பொலிவுடன் இன்பமாய்த் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

கே.ஆர்.பி.செந்தில் said...

"ஆதலால் காதல் செய்வீர்!"

தலைப்பே கவிதையாக இருக்கிறது ...

goma said...

அபர்ணாவின் மறைவு அர்ச்சனாவுக்கு சொல்லப்படும் நாளை கற்பனையில் கூட காணப்பொறுக்கவில்லை இறைவன் ,அர்ச்சனாவுக்கு மனதைரியம் வழங்க ,வேண்டிக் கொள்வோம்.

சிநேகிதன் அக்பர் said...

நட்சத்திர வாரத்தை இனிதே நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள் சித்ரா.

தந்தைக்கு எனது அஞ்சலிகளும்.

கலாநேசன் said...

வாழ்த்துக்கள்...

Madhavan Srinivasagopalan said...

//என்னை பொறுத்தவரை எல்லாம் இறைவன் செயல் தான். சில சமயம், காரணங்கள் புரியும் - சில சமயம், காரணங்கள் இருந்தும் மனிதரால் ஏற்று கொள்ள முடியாமல் போகலாம் - சில சமயம், காரணங்கள் நமது சாதாரண அறிவுக்கு எட்டாமல் போகலாம். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், வேறு ஒரு புரிதலில் வாழ்க்கையின் அர்த்தம் - காரணங்களுடன் எல்லாமே கடந்து போகலாம். //

Me too, believe so.
May Archana recovers soon.
'Kavitha' pusthakam elloraiyum adaiya vaazhththukkal.

Prasanna said...

திரு பொ ம ராசமணி அவர்களுக்கு அஞ்சலிகள்..
உங்களுக்கு வாழ்த்துக்கள்..!

எஸ்.கே said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!

Ramachandranwrites said...

வாழ்த்துக்கள் சகோதரி,

நானும் பல நாட்களாக உங்கள் வலை பூவை படித்து வருகிறேன். இந்த திருநெல்வேலி நக்கல் பெண் யாராக இருக்க முடியும் என்ற கேள்விக்கு இன்று தான் விடை கிடைத்தது. உங்கள் தாயார் meenakshipuram அரசு பெண்கள் பள்ளி ஆசிரியை அல்லவா ? அருமை அருமை - உங்கள் தந்தை பத்து அடி பாய்ந்தால் நீங்கள் நூறு அடி செல்கிறீர்கள்.

அன்புடன்
ராமசந்திரன்

Ramachandranwrites said...

ஒரு ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது அவர் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார் " அன்புக்கும் காதலுக்கும் என்னடா வித்தியாசம் ? "

நீண்ட இடைவெளிக்கு பின்பு ஒரு மாணவன் பதில் சொன்னான் " அய்யா ஒங்க பொண் மேல நீங்க வைத்து இருப்பது அன்பு - நான் வைத்து இருப்பது காதல் "

ஆசிரியர் அந்த மாணவனை பார்த்தார் - பையன் நல்லாவே இருந்தான் " உட்காருங்க மாப்பிள்ளை " என்று சொல்லி பாடத்தை தொடர்ந்தார்.

இது போ மா ராசாமணி சாரின் சரக்கு - இதை அவர் சொல்லி கேட்கணும், ரசிகனும்

RVS said...

தந்தையின் காதல் கவிதைகள் தொகுப்பிலிருந்து ஏதாவது ஒன்றிரண்டு எடுத்து விட முடியுமா சித்ரா? தலைப்பு ஆவலை தூண்டுகிறது. ;-) ;-) ;-)

இளங்கோ said...

எல்லா புகழும் இறைவனுக்கே!

இம்சைஅரசன் பாபு.. said...

வாழ்த்துக்கள் !!!

ராஜ நடராஜன் said...

தந்தையின் கனவும் காதலும் நினைவாக மலர்வதற்கு வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் சித்ரா - அழகாக ஒரு வாரம் நட்சத்திரமாக ஜொலித்து விட்டீர்கள் - சூப்பர் இடுகைகள் - அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அருமையாக முடித்துள்ளீர்கள் நட்சத்திர வாரத்தை.தந்தையின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்.

Kousalya said...

உங்கள் தந்தையின் பெயரை இன்றைய பதிவில் பார்த்து என் கணவர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். தங்கள் தந்தையின் பல பட்டிமன்றங்களை பார்த்து இருப்பதாகவும் நெல்லையில் உங்கள் தந்தையின் பட்டிமன்ற பேச்சு மிகவும் பிரபலம் என்றும் கூறி பெருமிதம் அடைந்தார். அவரது நகைசுவை உணர்வு தான் உங்களிடமும் இருப்பதாக சொல்லி கொண்டோம்.

அந்த நூலை வாங்கி படித்து விட்டு உங்களுக்கு மெயிலுகிறேன் சித்ரா....!


வாழ்த்துக்கள்..!

ராமலக்ஷ்மி said...

தங்கள் தந்தைக்கு என் அஞ்சலிகள். புத்தக வெளியீடு அறிந்து மகிழ்ச்சி.

கலவையான உணர்வுகளுடன் நிறைவான பதிவு. சிறப்பான நட்சத்திர வாரம்.

வாழ்த்துக்கள் சித்ரா.

சௌந்தர் said...

இந்தவாரம் முழுவது உங்கள் பதிவு நன்றாக இருந்தது சிறப்பாக எழுதியதற்கு வாழ்த்துக்கள்

"ஆதலால் காதல் செய்வீர்!" புத்தகத்தின் தலைப்பே கவிதையாக இருக்கிறது

ஆமினா said...

வாழ்த்துக்கள்!!

கவிதை புத்தகமாக வெளிவந்ததும் சொல்லுங்கள்!!

என் அஞ்சலியை தெரிவுத்துக்கொள்கிறேன்

sakthi said...

வாழ்த்துக்கள்!!! சித்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான நட்சத்திர வாரம்

Jaleela Kamal said...

சித்ரா நன்றி யே அருமையா போட்டு இருக்கிங்க
அப்ப்பா மறைந்து ஒரு வருடமா, நாம் வலைப்பூவில்சந்தித்தும் ஒரு வருடம் ஆகிவிட்டது.புத்தகம் வெளியீடு குறித்து மிகுந்த சந்தோஷம்.
வாழ்த்துகக்ள் வாழ்த்துகள்.
www.samaiyalattakaasam.blogspot.com

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தமிழ் மனம் வாழ்த்துக்கள் . அர்ச்சனா குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

Kurinji said...

வாழ்த்துக்கள்!!!

பாரத்... பாரதி... said...

தெய்வதிரு.ராசாமணி சார்க்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி.

என்னது நானு யாரா? said...

மனம் பக்குவபட்டிருப்பதை உங்களின் எழுத்துக்கள் மூலம் கண்டுக்கொண்டேன். எல்லா புகழும் இறைவனுக்கே என்று இறைவனுக்கு அர்பணித்துவிட்ட உள்ளம் மிகவும் விரிந்த உள்ளம்.

உங்கள் வாழ்க்கையில் இனி எது வரினும் எல்லாவற்றையும் சமநிலையான மனதோடு எடுத்துக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு வாய்க்கப்பெற்றிருக்கிறது. அதற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்! உங்களின் எழுத்துப்பணியை!

அருமையாக நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறீர்கள்! என்றென்றும் நட்சத்திரமாக ஜொலிக்கிறீர்கள்! வாழ்த்துக்கள் சித்ரா! இன்னமும் மேன்மேலும் உயர்ந்து சிறந்த புத்தகங்களை எழுதும் எழுத்தாளராக மிளிர வாழ்த்துகின்றேன்.

NIZAMUDEEN said...

'தமிழ்மணம் நட்சத்திரம்' = வாழ்த்துக்கள்!
பொ.ம.இராசமணி ஐயா அவர்களுக்கு
எனது நினைவஞ்சலி!
எனது பள்ளிப் பருவத்தில் வெளிவந்த
ரத்னபாலா பாலர் வண்ண மாத மலர்
இதழில்கூட ஐயா அவர்களின் கதைகள்
படித்துள்ளேன்.
அர்ச்சனாவின் உடல் + மனம் விரைவில்
தேறிவர பிரார்த்திக்கிறேன்.

Nithu Bala said...

வாழ்த்துக்கள் சித்ரா. தங்களுடைய தந்தையின் கவிதை புத்தகம் வெளிவருவது குறித்து மகிழ்ச்சி:-)

Riyas said...

எல்லா புகழும் இறைவனுக்கே.. ம்ம்ம்ம் உண்மை.

வாழ்த்துக்கள்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நிறைய எழுதுங்கள்!
படிக்கக் காத்துக் கொண்டு இருக்கிறோம்!!

அன்பரசன் said...

அட்டகாசமான கட்டுரை...
வாழ்த்துக்கள்.

Riyas said...

உங்கள் தந்தையைப்பற்றிய பதிவொன்று..

http://sinekithan.blogspot.com/2010/11/blog-post_28.html

சேட்டைக்காரன் said...

தமிழ்மணம் நட்சத்திரமாக பொருத்தமானவரைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எத்தனையோ புதிய வலைப்பதிவர்களுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துகிற உங்களைப் போன்றோர்தான் சரியான முன்மாதிரிகள்! இந்த சந்தர்ப்பத்தில், நான் வலையுலகுக்கு வந்த புதிதில், என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்திய உங்களது பின்னூட்டங்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

dineshkumar said...

பதிவுலகை
சிரிக்கவைத்தும்
சிந்திக்கவைத்தும்
பயணிக்கும்
எங்களுக்கும்
ஊக்கமளித்து
பிறர் நலனில்
நலன் காணும்
அக்காவிற்கு
வாழ்த்த வயதில்லை வணக்கத்துடன் தம்பி தினேஷ்

உம்மை பெற்றெடுத்த பெருந்தெய்வம் தந்தையவர்கள் புகழ் பாட புவி எங்கும் அவர் கவி வளம் வரட்டும் என்றும்

வருண் said...

அப்பாவுக்கு என் நினைவஞ்சலிகள், சித்ரா!

ஜெரி ஈசானந்தன். said...

பதிவுலகில் உங்களுடன் பயணிப்பது பெருமையாய் இருக்கிறது சித்ரா.

மாணவன் said...

உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுகளுடன்...
மாணவன்

வாழ்க வளமுடன்

தெய்வதிரு.ராசாமணி சார்க்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி.

அர்ச்சனா சீக்கிரமே நலம் பெற வேண்டுகிறேன்...

PriyaRaj said...

Very interesting....

கும்மாச்சி said...

அர்ச்சனா நலம் பெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் தந்தை எழுதிய கவிதை தொகுப்பின் விவரம் கொடுத்தால் வாங்கிப் படிக்க ஏதுவாக இருக்கும்.
தமிழ்மனம் நட்சத்திரமானதற்கு மற்றும் ஒருமுறை வாழ்த்துகள், மிகப் பொருத்தமனவருக்கே இந்த கௌரவம் வழங்கப் பட்டிருக்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்சத்திர வாரம் உங்களை இலகுவாக்கியது என்பதை அறிந்து மிக்கமகிழ்ச்சி ..உண்மையில் இது நீங்க சொன்னது போல இந்நேரத்தில் அமைந்ததும் .. எல்லாரும் உங்களுடன் இருந்து உங்களுக்கு மாறுதலுக்கு உதவியதும் என இறை செயலாகவே இருக்கலாம்.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் சித்ரா.அர்ச்சனா பூரண நலம் கிடைத்து பழைய படி வாழ என் வாழ்த்துக்களும்,பிரார்த்தனைகளும்.

Ammu said...

சித்ரா,

உங்கள் தந்தையின் நினைவு நாளான இன்று, அவரின் ஆன்மா, ப்ளாக் உலகில் நீங்கள் பெற்ற புகழையும், வெற்றியையும் குறித்து பூரித்துப் போயிருப்பார்.

அர்ப்பனாவின் ஆன்மா சாந்தியடையவும், அர்ச்சனா பூரண குணமடைந்து திரும்பவும் பிரார்த்திக்கிறேன்.

ராஜவம்சம் said...

சிறப்பான வாரம்
தந்தை சிறந்த வரம்
(உங்கள் தந்தையைப்பற்றி நண்பர் அக்பர் இன்னும் சிறப்பாக பதிந்துள்ளார்}

அலைகள் பாலா said...

vaazhthukkal

Gopi Ramamoorthy said...

சித்ரா, எனக்கு அந்தப் புத்தகம் வேண்டும். உங்கள் தம்பியின் முகவரி கொடுங்கள்.

நன்றி

Denzil said...

பொ.மா. ராசாமணி சார் மகளா நீங்கள்? சார் எங்கள் ஊரில் எல்லாம் வந்து பட்டிமன்றத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். நான் St.Xavier's பள்ளியில் சேர்ந்த நேரம் உங்கள் சகோதரர் பத்தாம் வகுப்பில் ரேங்க் வாங்கியுள்ளதாக பள்ளியே பரபரத்துக்கொண்டிருந்தது. புலிக்கு பிறந்தவர்கள்!

சாருக்கு அஞ்சலிகள். உங்களுக்கு வாழ்த்துக்கள்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நாங்க சின்னவயசுல ‌ஸ்கூல்ல படிக்கும்போது சித்ரா அப்பா பேச்சை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும். அந்தளவுக்கு அவரது பேச்சில் ஒன்றிடுவோம். எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. என்ன சொல்வது என்றே தெரியல.. அன்னாருக்கு என்னுடைய அஞ்சலிகள்.

Sethu said...

'நன்றி மறப்பது நன்றன்று'.


நன்றி.

வினோ said...

வாழ்த்துக்கள் சகோ... அப்பாவுக்கு என் அஞ்சலி...

Vishy said...

அப்பாவுக்கு நினைவஞ்சலிகள்.. அவரை சந்தித்த நாட்களும், அவருடன் இருந்த தருணங்களும் என்றும் என் நினைவில் வாழும். அவருடைய சொல்வன்மையும், நகைச்சுவை உணர்வும் உங்கள் மூலமாய் உயிர்வாழ வாழ்த்துக்கள்..

நசரேயன் said...

ராசாமணி ஐயாவுக்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி.

S.Menaga said...

வாழ்த்துக்கள் சித்ரா!! அர்ச்சனா மிகவிரைவில் பூரணகுணம்பெற பிரார்த்திக்கிறேன்..உங்கள் தந்தைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி....

Priya said...

வாழ்த்துக்கள் சித்ரா!
இன்னும் நிறைய எழுதி என்றுமே என் தோழி நட்சத்திரமாய் ஜொலித்திட இறைவனை வேண்டுகிறேன். அப்பாவின் கவிதைகளை படித்திட ஆசையா இருக்கு, கிடைக்குமா?

தாராபுரத்தான் said...

மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்,,,அப்பா

Balaji saravana said...

வாழ்த்துக்கள் சித்ராக்கா :)

ஆனந்தி.. said...

dai..!! i am speechless...!!!

Karthick Chidambaram said...

வாழ்த்துக்கள்..!

GEETHA ACHAL said...

வாழ்த்துகள் சித்ரா...

அபர்ணா சீக்கிரமாக குணமடைய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டு கொள்வோம்...

உங்கள் தந்தை எழுதிய கவிதைகள் புத்தக வடிவில் உங்கள் தம்பி வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி..உங்கள் தம்பியிற்கு வாழ்த்து தெரிவிக்கவும்...

நம்மைவிட்டு நெருங்கியவர்கள் நம்மை பிரிந்தாலும், அவர்களுடைய வாழ்த்துகள் நம்மை எப்பொழுதும் நல்ல வழியில் வழி நடத்தும்...

NADESAN said...

வாழ்த்துக்கள்
NELLAI P. NADESAN
DUBAI

சசிகுமார் said...

தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!!!

சைவகொத்துப்பரோட்டா said...

ஒரு வாரம் முடிஞ்சிருச்சா! வாழ்த்துக்கள் சித்ரா.

தல தளபதி said...

விக்ரமன் படம் மாதிரி செண்டிமெண்ட், காமெடின்னு போகுதுங்க உங்க பதிவுகள் எல்லாம் படிக்கறப்போ. வாழ்த்துக்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

பிரார்த்தனையும் வாழ்த்துக்களும்

செ.சரவணக்குமார் said...

அன்பான உங்கள் தந்தைக்கு எனது அஞ்சலிகள்.

Jay said...

Congrats dear...Continue your fantastic job...:)

பதிவுலகில் பாபு said...

வாழ்த்துக்கள்..

VELU.G said...

வெற்றிகரமான தமிழ் நட்சத்திர வாரத்திற்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

மேலும் மேலும் உங்கள் எழுத்துக்கள் சிறப்படைய என் வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றிக்கு நன்றி!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இந்த நட்ச்சத்திர வாரத்தில் மிகவும் சிறப்பாக பல பதிவுகளை தந்து சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள் . இந்த வாரத்தின் பல பதிவுகளை வாசிக்க இயலாத நிலை அதுதான் மறுமொழிகள் எதுவும் இட இயலவில்லை .அனைத்தையும் வாசித்துவிட்டு மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கிறேன் . பகிர்வுக்கு நன்றி

சுந்தரா said...

நட்சத்திர வாரத்தில் அத்தனை பகிர்வுகளும் அருமை சித்ரா.

அப்பாவின் பேச்சை நானும் கேட்டு ரசித்திருக்கிறேன். அவர் ஆசி பூரணமாக உங்களிடம் நிறைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

>>>சில சமயம், காரணங்கள் புரியும் - சில சமயம், காரணங்கள் இருந்தும் மனிதரால் ஏற்று கொள்ள முடியாமல் போகலாம் - >>

poetic lines citra

சி.பி.செந்தில்குமார் said...

usually u posting weekly one or 2. but last week u posted 7 post.so hard work and satisfaction u might get wishes congrats

சி.பி.செந்தில்குமார் said...

i think this week top 20 blogs il u will come under top 10,advance congradulation.

சி.பி.செந்தில்குமார் said...

due to hard work and busy u cant put coments jollywise in others blog ,i notedown,welcome back and get cheers

சி.பி.செந்தில்குமார் said...

appaadaa 100 & 101

அன்புடன் மலிக்கா said...

சித்ராக்கா.தாங்களின் அப்பாக்கு முதலாண்டு நினைவாஞ்சலி. மற்றும்
தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!!!!

எம் அப்துல் காதர் said...

நட்சத்திர வாரத்தை இனிதே நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள் sago.சித்ராக்கா.

தந்தைக்கு எனது அஞ்சலிகள்...

Thangarajan said...

VAAZHTHUKKAL...

சிங்கக்குட்டி said...

ஒரு நிலா இங்கு நட்சத்திரமாகி விட்டதே அடடே ஆச்சரிய குறி...! (கவிதை கவிதை) :-)

மேலும் மேலும் ஒளிர மனம் திறந்த பாராட்டுக்கள் சகோ.

சிங்கக்குட்டி said...

முன்னமே சொல்ல நினைத்தேன் நேரமில்லை, மன்னிக்கவும்.

தான் படைத்த அழகில் தானே மயங்கி விட்டான் போல இறைவன், அந்த பெண் அத்தனை அழகு. என்னவெல்லாம் கனவு கண்டிருப்பார்கள் அவரின் பெற்றோர்கள், அவர்கள் வலி வார்தையில் ஆறுதல் சொல்ல முடியாதது சகோ.

மற்றொரு பெண் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல அந்த ஈஸ்வரனை வணங்குகிறேன்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அருமை சித்து.. ஒரே நெகிழ்வாகிவிட்டது..

vanathy said...

வாழ்த்துக்கள், சித்ரா.
அர்ச்சனா வெகு விரைவில் உடக் தேறி வர பிரார்த்தனைகள்.

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்...

அப்பாவின் கவிதைகளை கொஞ்சம் கொஞ்சம் வெளியிடலாமே...

LK said...

உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

பாரத்... பாரதி... said...

அடுத்த பதிவு எப்பங்க,

வேலன். said...

அர்ச்சனா விரைவில் நலமடைய பிராத்திக்கின்றேன்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

KParthasarathi said...

You deserve all the accolades in full measure.I am grateful to you for making me smile every day when I read your humourous posts except in the recent past due to some tragic happenings.Hearty Congratulations

சுபத்ரா said...

Akka.. I m now in Tirunelveli only.. How to get that book?

Anonymous said...

உங்களுக்கு ஒரு விருது அளித்துள்ளேன் பெற்றுக் கொள்ளவும்
http://kalpanarajendran.blogspot.com/2010/12/blog-post_03.html

அன்னு said...

:) :) :)

No words sis. You are really stronger inside. Keep it up. Post some of those interesting poems someday insha Allah. :)

Congrats...even though a a bit late :)

ஜி.ராஜ்மோகன் said...

தந்தையின் கவிதை தொகுப்பை வெளியிடும் உங்கள் தம்பிக்கு வாழ்த்துக்கள். எந்த பதிப்பகம் என்று அடுத்த பதிவில் தெரிவிக்கவும் .நேரம்
இருக்கும் போது என் வலைபூவுக்கு வரவும் http://grajmohan.blogspot.com

ROAD TRAFFIC said...

உங்கள் தந்தையைப் பார்த்தல் நடிகர் ஸ்ரீகாந்த் போல இருக்கே!