கடந்த எட்டு வாரங்களாக சிறந்த சேவைகள் செய்பவருக்கான விருதுக்கென ஓட்டு எடுப்பு, CNN நடத்தியது. அதன் முடிவுகள் இப்பொழுது வெளியாகி உள்ளன.
http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/index.html
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு:
http://www.cnn.com/2010/LIVING/11/21/cnnheroes.hero.of.year/index.html
2010 CNN Hero of the Year ஆக - இதுவரை, செக்ஸ் அடிமைகளாக இருந்த சுமார் 12000 பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை மீட்டெடுக்க உதவிய அனுராதா கொய்ராலா அம்மையார் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
இவரது சேவைகளுக்கு மேலும் உதவும் வகையில், இவருக்கு $100,000 வழங்கப்பட்டது.
டாப் 10 ஹீரோக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும், அவர்கள் சேவைகளை ஊக்குவிக்கும் வண்ணம்
$ 25,000 வழங்கப்பட்டு உள்ளது.
நூற்றுக்கும் மேலான நாடுகளில் இருந்து, 10,000 க்கும் மேலான நபர்களை , அவர்களது சமூதாய சேவைகளுக்கென மக்கள் சிபாரிசு செய்து இருந்தனர். ஒரு குழு அமைத்து அவர்களில் சிலரை தேர்ந்து எடுத்து வாக்கெடுப்புக்கு அறிவித்தனர். வாக்கெடுப்பு மற்றும் குழுவின் பரிந்துரை படி, பத்து பேர்களை தேர்ந்து எடுத்து கௌரவித்து உள்ளனர்.
Alphabetical order படி (ranking படி அல்ல) தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம்:
Guadalupe Arizpe De La Vega :
Juarez என்ற மெக்ஸிகோ நகரத்தில் மருத்துவமனை கட்டி, இலவச மருத்துவம் ஏழை மக்களுக்கு கிடைக்க செய்தவர்.
Susan Burton :
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில், மது மற்றும் drug போதைக்கு அடிமையாகி சிறைக்கு கூட சென்று வந்துள்ள பெண்களுக்கு மறுவாழ்வும் வீட்டு வசதியும் செய்து கொடுத்து, அவர்கள் திருந்தி வாழ சேவை செய்பவர்.
Linda Fondren :
அமெரிக்காவில், மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில், அதிக உடல் எடையால் பல நோய்களுக்கு உள்ளான மக்களுக்கு தீவிர பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு ஊட்டுவதன் மூலம் உடல் இளைக்க உதவுகிறார்.
Anuradha Koirala :
1993 ஆம் ஆண்டில் இருந்து, நேபால் நாட்டில், செக்ஸ் அடிமைகளாக விற்கப்பட்டு வரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை காப்பாற்றி அவர்களுக்கு மறு வாழ்வுகளும் வேண்டிய உதவிகளும் கிடைக்கும் படி சேவை செய்து வருகிறார். இந்திய நேபால் எல்லையிலும் கண்காணித்து , இப்படி விற்கப்பட்டு வரும் பெண்களை காப்பாற்றி வருகிறார்.
Narayanan Krishnan :
2002 ஆண்டு முதல், தனது அக்ஷயா டிரஸ்ட் மூலம், கைவிடப்பட்ட - புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்து, உணவு வழங்கி வருகிறார்.
Magnus MacFarlane-Barrow :
1992 ஆம் ஆண்டில் இருந்து , Scotland நாட்டில் இருந்து Mary's meals என்கிற சேவை நிறுவனம் மூலம், உலகத்தில் பல பகுதிகளில் இருக்கிற 400,000 குழந்தைகளுக்கு இலவச உணவு கிடைக்கும் வண்ணம் உதவி வருகிறார்.
Harmon Parker :
1997 ஆம் ஆண்டில் இருந்து, கென்யா நாட்டில், தன் கைப்பட சிலர் உதவியுடன் 45 மரப்பாலங்கள் காட்டாறுகளுக்கு மேல கட்டியுள்ளார். திடீர் என்று பிரவாகமாக எடுத்து வரும் வெள்ளங்களில் இருந்தும், கொடிய மிருகங்களிடம் இருந்தும் இந்த பாலங்கள் மூலமாக ஏழை மக்கள் தப்பிக்க உதவி வருகிறார்.
Aki Ra:
1993 ஆம் ஆண்டு முதல், கம்போடியா நாட்டில், சுமார் 50,000 landmines (கண்ணி வெடிகள்) கண்டுபிடித்து எடுக்க உதவி வருகிறார்.
Evans Wadongo :
23 வயதுதான் ஆகும் இவர், கென்யா நாட்டில் புகை அடிக்கும் மண்ணெண்ணையும் தீயையும் மட்டுமே எரிபொருளாக - ஒளிக்காக - நம்பி அவதி பட்டுக்கொண்டு இருந்த பல கிராம மக்களுக்கு பயன் படும் விதமாக சூரிய வெப்பம் (Solar Power) கொண்டு எரியும் lanterns கண்டுபிடித்து விநியோகம் செய்து வருகிறார்.
Dan Wallrath :
2005 ஆம் ஆண்டில் இருந்து, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் காயம்பட்டு திரும்பி வந்துள்ள போர் வீரர்கள் சிலருக்கு, இலவச வீடுகளை, சிலர் உதவியுடன் தன் கைப்பட கட்டி கொடுத்து வருகிறார். இப்பொழுது, இந்த குழு ஐந்து வீடுகளை அமெரிக்காவில், Texas மாநிலத்தில் கட்டி வருகின்றது.
தங்களது தன்னலமற்ற சேவைகள் மூலமாக, ஒரு சராசரி மனிதர் , மனித நேயம் மட்டும் இருந்தால், சமூதாயத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று காட்டி உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தனி மனிதன் நினைத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை என்பதை மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து காட்டியுள்ள இவர்கள், எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துவோம்.
இவர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வையும் சமூதாயத்தில் மேல் உள்ள அக்கறையையும் மதித்து, இவர்களுக்கு வோட்டு போட்டு, அங்கீகாரம் கிடைக்க செய்த அனைவருக்கும் நன்றிகள். இனி, இந்த நல்ல உணர்வுடனே நமது அரசியல் தலைவர்களையும் தேர்ந்து எடுப்பதில், வோட்டு போடும் போது காட்டுவோம்.
(ம்ஹூம்....... தனி ஆளாவே, இவுக எல்லாம் இம்ப்பூட்டு செய்றாவுகளே, நம்ம அரசியல் தலகள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சாலே........ எம்பூட்டு நல்லா இருக்கும்!!!! ம்ம்ம்ம்...... ஆசைதேன்.... கனவுதேன் ...... ஒரு நாள் நடக்கும்தேன்..... ம்ஹூம்......)
நன்றி, வணக்கம். இப்படிக்கு ஒரு ஆதங்க பெருமூச்சுடன், உங்களிடம் இருந்து விடை பெறுவது, தம்பட்டம் தாயம்மா.
84 comments:
Good job Chitra! I voted for Narayanankrishnan.
Thank you.
tx for da news.:)
நானும் அடிக்கடி நாராயணன் கிரிஷ்ணனுக்கு ஒட்டு போடுவேன்.
நல்ல உள்ளங் கொண்டவர்கள் கெளரவிக்க படவேண்டும்.
உங்களுக்கும், கிரிஷ்ணனுக்கும் ஓட்டு போட்டுட்டேன்..
நல்ல பகிர்தல் சித்ரா!!
thxs for sharing!! congrats to all heros...
super info Chitra.... Thank u...
நல்ல செய்தி............
நல்ல பகிர்தல்
//இனி, இந்த நல்ல உணர்வுடனே நமது அரசியல் தலைவர்களையும் தேர்ந்து எடுப்பதில், வோட்டு போடும் போது காட்டுவோம். //
கடைசியா வச்சிங்க பாருங்க ஒரு பன்ச்..!!சூப்பர்..!!
பயனுள்ள பதிவு.. நன்றி
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க சகோ,
நான் நம்ம கிருஷ்ணன் வருவார்னு நினைச்சேன், பரவாயில்லை...
மனித நேயம் உள்ளவர்கள் யாராக சரிதான்...
//(ம்ஹூம்....... தனி ஆளாவே, இவுக எல்லாம் இம்ப்பூட்டு செய்றாவுகளே, நம்ம அரசியல் தலகள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சாலே........ எம்பூட்டு நல்லா இருக்கும்!!!! ம்ம்ம்ம்...... ஆசைதேன்.... கனவுதேன் ...... ஒரு நாள் நடக்கும்தேன்..... ம்ஹூம்......) //
இதுதான் எல்லாருடைய ஆசையும் கனவும்...
நடக்குமா?
Nice
கனவு பலிக்க எல்லோரும் எல்லோரையும் வாழ்த்துவோம்
பகிர்ந்தமைக்கு நன்றி சித்ராக்கா..
//ஆதங்க பெருமூச்சு//
அது மட்டும் தான் :(
நல்ல தகவல் சித்ராக்கா!
thanks for the info :)
// நம்ம அரசியல் தலகள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சாலே........ எம்பூட்டு நல்லா இருக்கும்!!!! ம்ம்ம்ம்...... ஆசைதேன்.... கனவுதேன் ...... ஒரு நாள் நடக்கும்தேன்..... ம்ஹூம்......//
உங்க ஆசை ,கனவு பலிக்குதோ இல்லேயோ .இனி நம்ம ஊரு தொல்லைக்காட்சி உட்பட மற்ற எல்லா ஊடகங்களிலும் இப்படிப்பட்ட தேர்ந்தெடுப்புகள் நடத்தப்படுவதை தொடர் நிகழ்ச்சியாக பாக்கலாம் ... இதுவும் நடக்கும்தேன்..... ம்ஹூம்...... .
செய்திகளை முந்தித்தந்த தம்பட்டம் தாயம்மாவிற்கு இந்த ஆண்டின் சிறந்த விருது கொடுக்கலாம் ... யார் அங்கே ...
எடுத்து வாருங்கள் ...
பகிர்வுக்கு நன்றீங்க .
அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
இவங்க எல்லாம் பண்ணுவாங்க. ஆனா அரசியல்வாதிகள் எதுவும் பண்ண மாட்டங்க
செய்திக்கு நன்றி. அப்புறம் அரசியல்வாதிகளுக்கு மக்களுக்கு நல்லது செய்ய நேரமில்லைங்க.....
நல்ல பகிர்வு மேடம்
Hi,
Good blog...
Vadivelan.
http://manage-geospatial.blogspot.com/
வாம்மா தாயாம்மா.......வாழ்த்துக்கள்.
//தங்களது தன்னலமற்ற சேவைகள் மூலமாக, ஒரு சராசரி மனிதர் , மனித நேயம் மட்டும் இருந்தால், சமூதாயத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று காட்டி உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தனி மனிதன் நினைத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை என்பதை மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து காட்டியுள்ள இவர்கள், எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துவோம்.//
வாழ்த்துவோம். நல்ல பகிர்வு சித்ரா.
பகிர்தலுக்கு நன்றி. அனைத்து ஹீரோக்களுக்கும் வாழ்த்துகள். :)
நல்ல விடயம், பகிர்வுக்கு நன்றி
ஹீரோக்கள் அனைவரையும் பற்றிய பகிர்வுக்கு நன்றி சித்ரா.
நல்ல பகிர்தல்
Thnz chithra. Congrays se heros. I read nice line u hv written. Thz go ahead
நல்ல பகிர்தல்
//(ம்ஹூம்....... தனி ஆளாவே, இவுக எல்லாம் இம்ப்பூட்டு செய்றாவுகளே, நம்ம அரசியல் தலகள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சாலே........ எம்பூட்டு நல்லா இருக்கும்!!!! ம்ம்ம்ம்...... ஆசைதேன்.... கனவுதேன் ...... ஒரு நாள் நடக்கும்தேன்..... ம்ஹூம்......) //
தாயம்மாவின் ஆசைகள் பலிக்கட்டும் :)
super! good job!! best wishes!!! :))
மதுரை கிருஷ்ணன் வரணும் என்று எதிர் பார்த்தேன்...
அனுராதா கொய்ராலா அம்மையார் இவங்க செய்த அரும் பணிகளும் மிகவும் பாராட்டபடகூடியது. அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
இந்த செய்தியை முதலில் தெரியபடுத்திய உங்களுக்கு என் நன்றிகள் சித்ரா.
அவசியமான பகிர்வு.பகிர்வுக்கு நன்றி சித்ரா!
குட் நியூஸ் தாயம்மா..
நல்ல பகிர்வு..
500 ஃபாலோயர்ஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.. :-)
நல்ல பகிர்வு... என்ன நம்ம Narayanan Krishnan வருவார் எதிர்பார்த்தோம்....!
டும்...டும்...டும்...டும்.......
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்
தம்பட்டம் தாயம்மா அவுங்க ஒரு நல்ல செய்திய பகிர்ந்துகிட்டகா..
அதனால நம் எல்லார் சார்பிலும் நன்றி தெரிவிச்சுக்கிறோம்.
மனித நேயம் மிக்க எல்லாருக்கும் நம்முடைய அன்பையும் இதன் மூலம் தெரிவிச்சிக்கிறோம்.
டும்...டும்...டும்...டும்.......
சிறந்த மனிதர்களைப் பற்றிய ஒரு சிறந்த இடுகை!
//நம்ம அரசியல் தலகள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சாலே........//
அப்படி நடக்கும் பொன்னாள் என்று வருமோ?
ரியல் ஹீரோக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Nice write up Chitra. Thanks for the information about the heroes.
நம்மவர் வருவார் என்று எதிர்பார்த்தேன்..
அனைத்து ஹீரோக்களுக்கும் வாழ்த்துக்கள்..
நல்ல உள்ளங் கொண்டவர்கள் கெளரவிக்க படவேண்டும்.
//ம்ஹூம்....... தனி ஆளாவே, இவுக எல்லாம் இம்ப்பூட்டு செய்றாவுகளே, நம்ம அரசியல் தலகள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சாலே........ எம்பூட்டு நல்லா இருக்கும்!!!! ம்ம்ம்ம்...... ஆசைதேன்.... கனவுதேன் ...... ஒரு நாள் நடக்கும்தேன்..... ம்ஹூம்......//
என்ன ஆச்சு இப்பல்லாம் பகல்லேயே கனவு காண ஆர்மபிச்சிட்டீங்களா?? :)
பகிர்வுக்கு நன்றி.
Thanks for sharing Chitra! Congrats to all!
சூப்பர்க்கா...
தன்னலமற்ற தனிமனிதர்கள்... தன்னலம் மட்டுமே பார்க்கும் தலைவர்கள்!! ஆஹா என்னவொரு காம்பினேஷன்ல வாழ்ந்துட்டு இருக்கோம்னு யோசிக்க வைக்குது...
ரொம்ப அருமையான பதிவுக்கா...
நானும் நாராயண கிருஷ்ணனுக்கு நிறைய ஓட்டு போட்டேன்.. நல்ல பதிவு சித்ரா..
Narayanan Krishnan நல்ல தேர்வு
பகிர்வுக்கு நன்றி சித்ரா
// ஆசைதேன்.... கனவுதேன்...... ஒரு நாள் நடக்கும்தேன் //
தேனாய் நினைக்கும் உங்கள் கனவு விரைவிலேயே பலிக்கட்டும்.
சல்யூட் ஃபார் ஆல் ஹீரோஸ்.. நல்ல பகிர்வு மேடம்!! வாழ்த்துகள்.
இவ்ளோ சேவை செய்த நம் கிருஷ்ணனே தேர்வாக வில்லை என்றால் தேர்வாகி இருப்பவர் எவ்வளவு பெரிய காரியத்தை சாதித்து இருப்பார்.
தனி மனிதனால் முடியும் என்று நிருபித்துவிட்டார்கள்
மக்கள் நினைத்தால் மாற்ற முடியும் என்ற நிலை நம் அரசியல் சாக்கடைகளுக்கு தெரியவேண்டும் ஏன் மக்களாட்ச்சி தானே நடக்கிறது வாக்கெடுப்பில் மாற்ற முயல்வோம்
சுயம் நம்மை
ஆள்கிறது மக்கா
தூக்கி எரிந்து
துணிவோடு வாருங்கள்
அடுத்த தலைமுறையாவது
சாக்கடையில்லா
அரசியல் காணட்டும்
நல்ல பகிர்வு சித்ரா.. இவர்கள் அனைவரும் போற்றப்படவேண்டியவர்கள். தன் வாழ்க்கையில் பிறருக்காக நல்லது செய்து ஊர்போற்ற வாழவேண்டும் என்ற எண்ணம் அவர்களை மேலும் உயர்த்தும்.
"வாழ்ந்தவர்கோடி மறைந்தவர்கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?.."
"மாபெரும் சபைதனில் நீ நடந்தால் மாலைகள் விழவேண்டும்."
நல்ல பகிர்வு சித்ரா.. நன்றி.
நாமும் இப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுவது தான் இப்படிப்பட்ட நிகழ்சிகளின் வெற்றி.. நன்றி..
அனுராதா கொய்ராலா அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்.
அருமையானதொரு பகிர்வு சித்ரா!!!
சித்ரா தமிழ்மணம் இந்த வார நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் பணி. .
rombha nalla post, nalla thagaval,rombha nandri akka
நீங்க போடுற பதிவு எவ்வளவு பெருசா இருந்தாலும் படிக்க தோணுது.
மறுபடியும் தாயம்மா சந்தோஷம்.
அனுராதா கொய்ராலாவுக்கு கிடைத்தது சந்தோஷமான விஷயம்.
நான் ஓட்டுப்போட்டது தமிழனுக்கு.
//இந்த நல்ல உணர்வுடனே நமது அரசியல் தலைவர்களையும் தேர்ந்து எடுப்பதில், வோட்டு போடும் போது காட்டுவோம்//
அரசியல்வாதிகள் எப்படியோ...மக்கள் ரொம்ப நியாயவாதிகள்...பணம் வாங்கிக் கொண்டு யார் பணம் தருகிறார்களோ அவர்களுக்கு தப்பாமல் வோட்டுப் போட்டு விடுவார்கள்!
அருமையானப் பதிவு!
நானும் நாராயணன் கிருஷ்ணனுக்குத்தான் ஓட்டுப் போட்டேன்.
தகவலுக்கு மிகவும் நன்றி!கூடவே நாராயணன் கிருஷ்ணன் வந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
Thank you once again.
//நானும் அடிக்கடி நாராயணன் கிரிஷ்ணனுக்கு ஒட்டு போடுவேன்.//
நிலாமதி!அடிக்கடி ஓட்டு போடுவீங்களா?
கள்ள ஓட்டு ஏன் போடுறீங்க:)
கண்டிப்பாக இவர்கள் மக்களால் போற்றபடவேண்டிய நிஜ ஹீரோக்கள் தான்,,, நல்ல செய்தியை பகிர்ந்ததற்கு நன்றி
////ம்ஹூம்....... தனி ஆளாவே, இவுக எல்லாம் இம்ப்பூட்டு செய்றாவுகளே, நம்ம அரசியல் தலகள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சாலே........ எம்பூட்டு நல்லா இருக்கும்!!!! ம்ம்ம்ம்...... ஆசைதேன்.... கனவுதேன் ...... ஒரு நாள் நடக்கும்தேன்..... ம்ஹூம்......//
என்ன ஆச்சு இப்பல்லாம் பகல்லேயே கனவு காண ஆர்மபிச்சிட்டீங்களா?? :)//
நானும்தான் கடைல உட்கார்ந்துகிட்டே கனவு காண்கிறேன்.வாங்க எல்லோரும் சேர்ந்து கனவு காணலாம்:)
சித்ரா...நான் நினைச்சுட்டே இருந்தேன் ரிசல்ட் என்னசுனு பார்க்கனும்னு...அதுல எங்க ஊருகாரரும் இருக்கார் இல்லையா..)) பரவால ...ஹீரோயன் ஆ நம்ம நாட்டு பெண் தானே வந்து இருக்காங்க...அதுவும் நமக்கு பெருமை தான்...தேங்க்ஸ் தங்கமே ரிசல்ட் சொன்னதுக்கு...))))
நல்ல செய்தி........
நானும் நாராயண கிருஷ்ணனுக்கு ஓட்டுப்போட்டேன். பார்க்கும் நல்லவர்களையாவது மதிப்போம்.
பயனுள்ள பதிவு.. நன்றி
டாப் ஹீரோக்களுக்கு வாழ்த்துக்கள்..
பதிவிட்ட உங்களுக்கும்
//தங்களது தன்னலமற்ற சேவைகள் மூலமாக, ஒரு சராசரி மனிதர் , மனித நேயம் மட்டும் இருந்தால், சமூதாயத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று காட்டி உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தனி மனிதன் நினைத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை என்பதை மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து காட்டியுள்ள இவர்கள், எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துவோம். //
இந்த எழுத்துக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..
நல்ல தேர்வுகள் சித்ரா !
அரசியல்வாதிங்க ஸ்பெக்ட்ரம்,கொம்மன்வெல்த்கேம் என்று ரொம்ப பிசியா இருக்காங்கோ அம்மிணி..
நல்ல தகவல் சித்ரா அக்கா......
இதை படிக்கும் போது ,நாமெல்லாம் ஒன்னுமே இல்லை என்று தோன்றுகிறது ,இப்படி பட்ட சில ஜீவன்கள் இன்னும் உயிர் வாழ்றது நாள தான் இந்த உலகம் இயங்குது
sUpper..best article
நல்ல உள்ளங் கொண்டவர்கள் கெளரவிக்க படவேண்டும்
நாராயணன் கிருஸ்ணன் மேடை ஏறி பரிசு வாங்கியதை நானும் பார்த்தேன்...அவருடை சேவையை மிக அழகாக ஒரு குறும்படம் மாதிரி தொகுத்து இருந்தார்கள். இந்தியாவில் பிறந்த எல்லோருக்கும் இந்த "அன்பு மனிதனால்" பெருமை.
எல்லோர் உடம்பிலும் 5.5 லிட்டர் ரத்தம் ஒடுகிறது..என்னை பொருத்தவரை அனைவரும் சமம் என்ற அவரது வார்த்தை .....Simply Superb.
நல்ல உள்ளங்கள் நம்பிக்கையை கொடுக்கிறார்கள். அவர்கள் என்னாலும் மன மகிழ்ச்சியோடு வாழட்டும்! அவர்களைப்போல சிலர் இருப்பதனால் தான் மண்ணுலகம் இன்னமும் பலருக்கு வரமாக இருக்கிறது.
இல்லையென்றால் எப்போதோ சுடுகாடாக ஆகிவிட்டிருக்கும். நல்ல பதிவு தாயம்மா! வாழ்த்துக்கள்!
உலக நாயகனை தேர்ந்தெடுக்கும் வரை பல பதிவுகளிலும் வலைத்தளங்களிலும் மின் அஞ்சல்களிலும் வலம் வந்த செய்தி, தேர்விற்குப் பின் யார் தேர்வானார்கள் என்பதில் தகவல் இன்றி குழம்பினேன். தங்களுடைய பதிவின் வாயிலாக உணர்ந்து மகிழ்கின்றேன். மிகச் சரியானத் தேர்வே. முக்கிய பத்தில் நம்மவரும் உள்ளது நமக்கும் பெருமை. அவருக்கு பல முறை வாக்களித்ததும் (ஆங்.., இது செல்லாத ஓட்டு என்று சொல்வதற்கு நம்ம ஊரு தேர்தல் அல்ல) பலரை வாக்களிக்க வைத்ததும் ஒரு தமிழனாக பெருமிதம் கொள்கின்றேன். - நெல்லி. மூர்த்தி, சவூதி.
well its not just 'vetti petchu' ... :)
well its not just 'vetti petchu'... :))
Post a Comment