Tuesday, November 30, 2010

தலையணை சண்டை

 தோழி ஒருத்தி நேற்று அழைத்து பேசினாள்.  'சித்ரா, நீ உன் ப்லாக்ல வித்தியாசமான ஊர்கள், பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள் பற்றி எழுதுறியே.  இன்னைக்கு நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். உடனே உன் நினைப்பு வந்துச்சு.  அந்த விஷயத்தை பற்றி எல்லா தகவல்களும் தொகுத்து உனக்கு இ-மெயில் அனுப்பி இருக்கேன். பாத்துட்டு சொல்லு," என்று உற்சாகத்துடன் பில்ட்-அப் கொடுத்தாள்.

சரியா போச்சு. நானே வெட்டி பேச்சு பேசிக்கிட்டு இருக்கேன். இதுக்கு volunteer ஆக assistant வேலைக்கு அவங்களே வந்து ஆஜர் போடுறாங்களேனு புல்லரிச்சு போச்சு.

இதோ, அவள் அனுப்பிய இன்றைய வெட்டி பேச்சு டாபிக்:

WORLD (???)  PILLOW FIGHTING CHAMPIONSHIPS:

 14 வயதிற்கு மேற்பட்ட "பெரியவங்க" மட்டுமே பங்கு பெறும்  இந்த போட்டி,  36 வருடங்களாக நடத்தப்படுகிறது. 
பெரும்பாலும் 20 + தான் போட்டிக்கு வராங்க. 
California மாநிலத்தில் உள்ள Kenwood என்ற இடத்தில் தான் இந்த "அறிவுபூர்வமான" போட்டி நடக்க ஆரம்பிச்சுதாம். இப்போ,  நிறைய இடங்களில்  நடக்குதாம். 
பெரிய புள்ளத்தனம் எல்லாத்தையும் அரங்குக்கு வெளியே கழட்டி  வச்சுட்டு வந்து விளையாடுற ஒரு சின்னப்புள்ளத்தனமான போட்டியாம்.  விளங்குனாப்புல தான்!

சொதசொதனு ஈரத்துடன்  இருக்கிற ஒரு களிமண்ணு பரப்பு  (pit of mud).  அதுக்கு மேல, வழுவழுனு இருக்கிற ஒரு மரக்கட்டை.  

போட்டியாளர் கையில், ஒரு தலையணை - வாத்து இறைக்கைகளால்  (Goose feathers - not duck feathers) நிரப்பப்பட்ட தலையணையை தண்ணீரில் முக்கி, ஈரப்படுத்தி கொடுத்து இருப்பார்கள். தலையணையை ஒரு கையில் மட்டுமே பிடித்த படி, கட்டையின் ஒரு முனையில் இருந்து நடுவில் -  களிமண்ணுக்குள் விழாமல் - வந்து அமர்ந்து கொள்ள வேண்டும்.  அதே போல, மறுமுனையில் இருந்து இன்னொரு போட்டியாளர் வருவார்.  அடுத்த கையையோ காலையோ உபயோகிக்காமல்,  இந்த ஈரத் தலையணையை வைத்து அடித்தே அடுத்தவரை, களிமண்ணுக்குள் விழ வைக்க வேண்டும்.   

முப்பது வினாடிக்கு மேலாக அடிக்காமல் டபாய்க்க கூடாது.  ஒரு நிமிடத்துக்குள் யாரும் விழாவிட்டால், ஒரு கையை பின்னால் வைத்து கொண்டே, மறு கையில் தலையணையுடன் அடுத்தவரை தள்ள முயல வேண்டும்.  


இப்போவே  முட்டிக்கணும் போல இருக்கிறவர்கள்,  அந்த பக்கமா போய் சுவத்துல  முட்டிக்குங்க. கம்ப்யூட்டர் ல முட்டி கிட்டி வச்சு, damage ஆனா கம்பெனி பொறுப்பு எடுக்காது.  

சரி, அது ஒரு பக்கம் என்றால்,  Michigan மாநிலத்தில் Grand Rapids என்ற இடத்தில் நடந்த தலையணை சண்டையை பாருங்க:  பி.கு. இந்த மாதிரி தலையணை சண்டை அமெரிக்காவில் மட்டும் இல்லை, உலகில் பல நாடுகளில் இப்படி தெருக்களில் "தலையணை சண்டை" நடக்குது என்பது கொசுறு செய்தி.   உலக நாடுகளில் உள்ள சுமார் 25 பெரிய நகரங்களில்,  நடந்து இருக்கிறது.
http://en.wikipedia.org/wiki/Pillow_fight_flash_mob

நாளைக்கு உங்களுக்கு யாருடனாவது  என்ன பிரச்சனை என்றாலும்,  தெருவுல தலையணை சண்டை போட்டு தீத்துக்கோங்க. ஏதோ "உலக அமைதி"க்காக, என்னால ஆன கடமை உணர்ச்சியில், சொல்லிட்டேன்.   சரியா, மக்கா!
 இதற்காக எனக்கு அமைதிக்கான நோபெல் பரிசுக்கெல்லாம் பரிந்துரை செய்து விடாதீங்க, ப்ளீஸ்!

116 comments:

goma said...

நம்ம ஊர் தலையணை மந்திரத்துக்குத்தான் ஃபேமஸ்...[நிஜம்ம்ம்மா எனக்குத் தெரியாதும்மா...]

goma said...

இந்த முறை நாந்தான் பொரி பெற்ற முதல் மீன்

ஜீ... said...

பார்ரா! எப்புடியெல்லாம் யோசிக்கிறாங்க! அதுவும் உலக அமைதிக்காக!!
ஆனாலும் நல்லாத்தான் இருக்கு! :-)

சைவகொத்துப்பரோட்டா said...

இதென்ன கலாட்டா!

ஹரிஸ் said...

சண்டை சூப்பரு..pogo பாருங்க இந்த மாதிரி ஏகப்பட்ட விளையாட்டு விளையாடுவாங்க..

கவிதை காதலன் said...

eutronfixதலையணையில சண்டையா?? ஐயையோ எனக்கு தெரியாதுப்பா.

வைகை said...

இந்தியாவுல தலையாணிக்கு மட்டுந்தான் சண்ட வரும்!!! அங்க தலையாணி வச்சே சண்டையா?!! பேஷ்! பேஷ்!! ரெம்ப நல்லாருக்கு!!!

asiya omar said...

இதுவும் நல்லாதான் இருக்கு.

Vishy said...

இதென்ன சின்ன புள்ளத்தனமா இல்ல இருக்கு.. எங்கயாச்சும் கப்ளிங்ஸ், ஜலபுலஜங்ஸ் மாதிரி அறிவுப்பூர்வமான விளையாட்டு விளையாடினா படம் போடுங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அஸிஸ்டெண்ட் கிடைச்சிட்டாங்களா..வாவ்..
நீங்களும் அடிச்சி தூள் பண்ணுங்க:)

ஜாலியா இருக்கு ரோடுல சண்டை போடரது.. கட்டையில் உக்காந்து களிமண்ணில் தள்ளுரது டெரரா இருக்கு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\வைகை said...
இந்தியாவுல தலையாணிக்கு மட்டுந்தான் சண்ட வரும்!!! அங்க தலையாணி வச்சே சண்டையா?!! பேஷ்! பேஷ்!! ரெம்ப நல்லாருக்கு!!!

\\
அட இதுவும் நல்லா இருக்கு வைகை.:)

LK said...

வீட்ல அக்கா கூட சிறு வயதில் தலையணையால் சண்டை போட்டு இருக்கிறேன்

LK said...

//நம்ம ஊர் தலையணை மந்திரத்துக்குத்தான் ஃபேமஸ்...[நிஜம்ம்ம்மா எனக்குத் தெரியாதும்மா...//

அது உங்க ரங்கமணிகிட்ட கேக்கணும்

பார்வையாளன் said...

"நானே வெட்டி பேச்சு பேசிக்கிட்டு இருக்கேன். இதுக்கு volunteer ஆக assistant வேலைக்கு அவங்களே வந்து ஆஜர் போடுறாங்களேனு புல்லரிச்சு போச்சு."

ஹா ஹா...
ஃபர்ஸ்ட் பால் ல சிக்ஸ் அடிக்க்றமாதிரி, ஆரம்பமே சூப்பர்..

வைகை said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
\\வைகை said...
இந்தியாவுல தலையாணிக்கு மட்டுந்தான் சண்ட வரும்!!! அங்க தலையாணி வச்சே சண்டையா?!! பேஷ்! பேஷ்!! ரெம்ப நல்லாருக்கு!!!

\\
அட இதுவும் நல்லா இருக்கு வைகை.:)///////

நன்றி!!! எல்லாம் உங்க ஆசீர்வாதம்!

முனைவர்.இரா.குணசீலன் said...

வேடிக்கை மனிதர்கள்!!!!!!!!!!!

முனைவர்.இரா.குணசீலன் said...

வேடிக்கை மனிதர்கள்!!!!!!!!!!!

RVS said...

வித்தியாசமா இருக்கே! ;-)

KANA VARO said...

உங்கள் பதிவுகள் என்றுமே வித்தியாசத்திற்கு குறைவில்லை.

பாடசாலைகளில் சாரணராக இருப்பவா்கள் ஜம்போரி போகும்போது தலையணை சண்டைகளில் ஈடுபடுவதை யாழ்ப்பாணத்தில் பார்த்திருக்கின்றேன்.

dineshkumar said...

சின்ன வயசில எங்க அண்ணன துரத்தி துரத்தி அடிச்ச ஞாபகம்.....

நல்ல பகிர்வுக்கா அப்புறம் உலக அமைதிக்காக தமிழர்கள் மத்தியில் தலையணை சண்டையை அறிமுகம் படுத்திய சித்ரா அக்கா கூடிய விரைவில் நோபல் பரிசு கிடைக்கா விடினும் பதிவுலக கலைவாணர் விருது வழங்க பதிவுலகிற்கு பரிந்துரை செய்கிறேன்

பிரியமுடன் ரமேஷ் said...

இந்த மாதிரி வேடிக்கை விளையாட்டு எல்லாம் வெளிநாட்லதான் பாக்க முடியுது.. நம்ம நாட்ல ஏன் பெரியவங்க எல்லாம்.. பெரியவங்களாட்டமே நடிக்கறாங்க?

ஆனந்தி.. said...

//இதற்காக எனக்கு அமைதிக்கான நோபெல் பரிசுக்கெல்லாம் பரிந்துரை செய்து விடாதீங்க, ப்ளீஸ்!//
கொடும..கொடும னு கோயிலுக்கு போனால் அங்கே கொடும வந்து ஜிங்கு..ஜிங்கு னு ஆடுச்சாம்...கொடும சித்து...கொடும!முடில..அழுதுருவேன்... :)))

VELU.G said...

வாய்க்கா சண்டை, வரப்பு சண்டை, குழாயடிச் சண்டைங்க மாதிரி தலையணைச்சண்டையா ஹ ஹ ஹ ஹ ஹா....... வீட்டுக்குள்ள நடக்கறதும் இப்ப வெளிய வந்துடுச்சா

வழிப்போக்கன் - யோகேஷ் said...

ஒரு அடிமை சிக்கியாச்சி போல......... நடத்துங்க......

தேனம்மை லெக்ஷ்மணன் said...

எங்கே அந்த தலகாணி.. கொண்டு வா சித்துவை ரெண்டு போட..:))

Anonymous said...

தலையணை சண்டையா?????
பாருடா...

வெட்டிப்பேச்சு said...

மனிதர்களின் குழந்தைத்தனம் எப்போதும் சுவராசியமானதுதான்.

நல்ல பகிர்வு.

நன்றிகள்.

தமிழ் உதயம் said...

இது மாதிரி அறிய தகவல்களை இன்னும் எதிர்பார்க்கிறோம்.

அருண் பிரசாத் said...

தலையணை டேமேஜ் ஆனா ஓகே.... ஆள் டேமேஜ் ஆனா?

இரவு வானம் said...

வெள்ளக்காரனுங்க வர வர சின்னப்புள்ளத்தனமா போய்கிட்டு இருக்கானுங்க, வெளங்கிரும்.

சிவா என்கிற சிவராம்குமார் said...

அது சரி! இனிமே ரெண்டு நாட்டுக்கும் பிரச்சினைன்னா பேசாம தலையணை சந்திய வெச்சிக்கலாம்!

Arun Prasath said...

அரசல் புரசலா கேள்வி பட்டு இருக்கேன்... தெளிவா விளக்கிடீங்க..

சௌந்தர் said...

நாளைக்கு உங்களுக்கு யாருடனாவது என்ன பிரச்சனை என்றாலும், தெருவுல தலையணை சண்டை போட்டு தீத்துக்கோங்க////

ஏன் ஏன் நாங்க எல்லாம் கத்தி வைச்சு தான் விளையாடுவோம்...

வித்யா said...

வித்யாசமா இருக்கே..

எப்படியெல்லாம் பொழுத போக்கறாங்கப்பா:)

இளங்கோ said...

ஏதோ "உலக அமைதி"க்காக, என்னால ஆன கடமை உணர்ச்சியில், சொல்லிட்டேன்.
its ok :)

பிரபு . எம் said...

தலகாணி ஃபைட் ரொம்ப டேஞ்சரஸ்க்கா...
என் சொந்தக்காரப் பையன் ஒருத்தன் டார்வின் தியரிபடி பொறந்தவன்...
ஒரு குடும்ப விழால சின்ன பசங்க எல்லாம் தலயணைச் சண்டை போட்டு இருந்திருக்காங்க...
இவன் சைஸைப் பார்த்து இவனும் சின்னப் பையன்னு நெனெச்சு ஆட்டத்துக்கு சேத்திருப்பாங்கபோல...
இவன் தலையணையைத் தூக்கிப் பறந்து பறந்து அடிச்சிருக்கான்... கொஞ்ச நேரத்துல அழுகை சத்தம் வர ஆரம்பிக்க.... கம்ப்ளயண்ட் வர ஆரம்பிச்சுது.... கொரங்குப் பயபுள்ளய‌ப் ப‌த்தித் தெரிஞ்சு யாரும் அவ‌ன‌க் க‌ண்டிக்க‌ல‌.... அவ‌ங்க‌ அப்பா அம்மா ப்ளாண‌ட் ஆஃப் தி ஏப்ஸ் பார்ட் 3 ஷுட்டிங்க்கு போயிட்டாங்க‌...
ஒரு நாட்டாமை நியாய‌த்த‌ த‌ட்டிக் கேக்க‌ப் போக‌ த‌லைய‌ணையை தூக்கிப் போட்டு ஃப்ள‌வ‌ர் வாஸை வெச்சு அவ‌ரைத் தாக்கு தாக்குன்னு தாக்கியிருக்கான்... இந்த‌ வான‌ர‌ம் ஆயிர‌ம்!

நான் ச‌ண்டைக்கெல்லாம் போற‌தேயில்ல‌க்கா.... வீடியோ எல்லாம் பார்க்க டெர‌ர்ராரா இருக்கு.....!!

எப்பூடி.. said...

இதை நம்ம கேப்டன் விஜகாந்த் பார்வையில போட்டீங்கின்னா அடுத்த படத்தில தீவிரவாதிகள தலையணையாலேயே உதைப்பாரு :-)

கிறுக்கன் said...

தலையணையில் இத்தனை தந்திரமா....

ஸாதிகா said...

அட..நல்லாத்தான்ப்பா இருக்கு.

Balaji saravana said...

ரைட்டு.. அப்போ அடுத்த விஜயகாந்த் படத்துல தலையணை பைட் ஒன்னு வச்சிடலாம் ;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னது சண்டையா. நான் ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவன். எஸ்கேப்

Madhavan Srinivasagopalan said...

தலையணை தந்திரம் ?

சங்கரியின் செய்திகள்.. said...

பொழுது போக்குக்கு புதுசு புதுசா கண்டுபிடிச்சி அசத்துறாங்கப்பா.....

பதிவுலகில் பாபு said...

:-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

புதுசா இருக்கே.

சசிகுமார் said...

சூப்பர் தின்னுட்டு வீட்ல இருக்க முடியாம புதுசு புதுசா யோசித்து விளையாடுவான்களோ.

சேலம் தேவா said...

நானும் என் தங்கச்சியும் போடற தலையணை சண்டைக்கு முன்னால இதெல்லாம் சும்மா..!! ஹி.ஹி..ஹி...

வெங்கட் நாகராஜ் said...

அடடா இது நல்லா இருக்கு. முதல் விளையாட்டை விட இரண்டாவது பெட்டர். பகிர்வுக்கு நன்றி.

எம் அப்துல் காதர் said...

இந்த விளையாட்டுக்கு நா வரல!! ஏற்கனவே வாங்குறது .....!!

sakthi said...

புதிய தகவல் சித்ரா !!!!

என்ன என்னமோ நடக்குது உலகத்துல....

வேலன். said...

இலவம்பஞ்சு தலையணை என்றால்பரவாயில்லை....சாதா பஞ்சு தலையணை என்றால் அவ்வளவுதான்...
நான்வரலையப்பா...விளையாட்டுக்கு...

வாழ்கவளமுடன்.
வேலன்.

மண்டையன் said...

மீண்டும் குழந்தை ஆவதற்கு யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்கள்

மண்டையன் said...

மீண்டும் குழந்தை ஆவதற்கு யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்கள்
ஒரு தலயனைக்காக இந்த போரா ஒரே அக்கப்போராக அல்லவா இருக்கிறது .

ஜெயந்தி said...

கத்தி, துப்பாக்கி, அருவாவுக்கெல்லாம் பதிலா தலையணைய குடுத்துட்டா நல்லாத்தான் இருக்கும்.

ஸ்ரீராம். said...

ரொம்ப மென்மையான விளையாட்டா இருக்கும் போல!

NADESAN said...

சூப்பர் அக்கா
உங்கள் பதிவு படித்தாலே மனதில் நல்ல சந்தோசம்

அன்புடன்
நெல்லை பெ.நடேசன்
அமீரகம்

Gayathri's Cook Spot said...

Migavum arumai!

சுசி said...

ஹஹாஹா.. வாழ்க உங்கள் பணி..

ராமலக்ஷ்மி said...

பஞ்சு எல்லாம் காலடியில் பிய்ஞ்சு பறக்க நல்லாப் போடுறாங்க சண்டை:))!

ஹேமா said...

ம்ம்...அங்கயுமா !

தக்குடுபாண்டி said...

சூப்பர் ஸ்டாரோட விசிறியான தமிழ் மன ஸ்டார் சித்ரா அக்காவுக்கு மட்டும் தான் இதெல்லாம் தோனும்!..:)

roshaniee said...

நல்ல பகிர்வு

மதுரை பாண்டி said...

ayyo sandaiya??? escape!!!

வெறும்பய said...

வித்தியாசமா இருக்கே! ;-)

Priya said...

வித்தியாசமா இருக்கே...........!!!!

ம.தி.சுதா said...

அக்கா இது நல்ல சவாரசியமான சண்டை தான் வன்னியில் ஒரு முறை வென்றிருக்கிறேன்... (ஆனால் பல முறை தோற்றிருக்கிறேன்..)

சத்ரியன் said...

சித்ரா,

நம்ம பொண்டு புள்ளைங்களுக்கு தலையணை மந்திரம் தானே தெரியும்!

இதென்ன புதுசா இருக்கே?

சிவகுமாரன் said...

உங்க ப்ளாக் படிச்சா மனசு இலேசாகிப் போகுதுங்க. தாங்க்ஸ்.

GEETHA ACHAL said...

புதுவிதமான சண்டையாக இருக்கு...இதுவரை கேள்விபட்டதே கிடையாது...நல்லா தான் இருக்கு...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப சுவாரசியமா இருக்கு.. சின்ன சின்ன சந்தோசங்களுக்காக விளையாடும் இந்தமாதிரி விளையாட்டுக்கள் மனதுக்கு நிம்மதி தரும்.

vanathy said...

China நாட்டுப் பசங்களும் அடிச்சுக் கொள்வதைப் பார்த்திருக்கேன். இங்கேயும் அடிச்சுகிறாங்களா???

எனக்கும் ஒரு அஸிஸ்டென்ட் வேணும்!!!!

ராஜ நடராஜன் said...

//சரியா போச்சு. நானே வெட்டி பேச்சு பேசிக்கிட்டு இருக்கேன். இதுக்கு volunteer ஆக assistant வேலைக்கு அவங்களே வந்து ஆஜர் போடுறாங்களேனு புல்லரிச்சு போச்சு.//

சிரிக்கவே மாட்டேன்னு சொல்லும் விஜிபிகாரரும் சிரிப்பார்:)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சூப்ப்ர் சண்டைதான்

philosophy prabhakaran said...

அடடே தலையணை சண்டைன்னதும் ஏதோ ரொமாண்டிக் மேட்டர்ன்னு உள்ளே வந்தேனே...

ILA(@)இளா said...

நியூஜெர்சியில கூட இது நடக்குதுங்க.. ஆனா அடிதான் தாங்க முடியாது. தலையாணை எல்லாம் பெட்ஷீட் மாதிரி கொண்டுவந்து பின்னுவாங்க

பாரத்... பாரதி... said...

/எனக்கு அமைதிக்கான நோபெல் பரிசுக்கெல்லாம் பரிந்துரை செய்து விடாதீங்க, ப்ளீஸ்!//
சரி சரி கோரிக்கை வைச்சுடுவோம்..

பாரத்... பாரதி... said...

பதிவு இடையே வரும் உங்களின் கலாய்ப்புகள் அருமை.

பாரத்... பாரதி... said...

//பதிவுலக கலைவாணர் விருது வழங்க பதிவுலகிற்கு பரிந்துரை செய்கிறேன்//

வருண் said...

***இதற்காக எனக்கு அமைதிக்கான நோபெல் பரிசுக்கெல்லாம் பரிந்துரை செய்து விடாதீங்க, ப்ளீஸ்!***

உங்க தன்னடக்கம்தான் பெஸ்ட்டு! :)))

வினோ said...

இப்படியுமா? :)

S.Menaga said...

இந்த சண்டையும் நல்லாதான் இருக்கு...

அன்பரசன் said...

நல்லா இருக்கே

நசரேயன் said...

//இந்த முறை நாந்தான் பொரி பெற்ற முதல் மீன்//

விருது கேப்பீங்க போல

தாராபுரத்தான் said...

நானும் படித்துட்டேன்,

Geetha6 said...

அருமை!

அமைதிச்சாரல் said...

ஜாலியான ஃபைட் :-))))). வருங்காலத்துல தமிழ்சினிமாக்களில் ஹீரோக்களிடம் இதை எதிர்பார்ப்போமாக...

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமான விளையாட்டு இதையும் ஒரு நாள் போகோ சானலில் போடுவாங்கள்

மனோ சாமிநாதன் said...

வேடிக்கையான சண்டைதான்! நீங்களேதான் சொல்லி விட்டீர்களே, பெரிய புள்ளைத்தனம் எல்லாவற்றையும் கழற்றி வைத்து விட்டு சின்னப்புள்ளைத்தனத்துடன் இந்த விளையாட்டில் ஈடுபடணும் என்று! சரியாகத்தான் இருக்கிறது! டென்ஷன், பிரச்சினை என்று அன்றாடம் எத்தனை எத்தனை மன அழுத்தங்கள் மனிதனுக்கு! அதனால்தான் இத்தனை தேசங்களில் அதை சின்னப்புள்ளைத்தனத்துடன் ரசிக்கின்றார்களோ என்னவோ! ஜெர்மனியில் இது போன்ற விளையாட்டுக்களை அவ்வப்போது விளையாடுவார்கள். 20 வருடங்களுக்கு முன்னால் இங்கு எல்லா ஆங்கில சானல்களிலும் காண்பிப்பார்கள்.

அமுதா said...

எப்படி தான் இப்படி வித்யாசமா சுவாரசியமா தகவல் எடுக்கறிங்களோ!!!!

பாரத்... பாரதி... said...

//எப்புடியெல்லாம் யோசிக்கிறாங்க! அதுவும் உலக அமைதிக்காக!!//

மோகன்ஜி said...

குழந்தைப் பருவத்தில் உடன்பிறந்தோருடன் தலையணை சண்டை!. பெற்றோரானதும் பிள்ளைகளுடன் தலையணை சண்டை!
முதுமையில் தலையணையில் முகம்புதைத்து துக்கத்துடன் சண்டை!

Malar Gandhi said...

Haha...thats hilarious.

Kousalya said...

ம்...எல்லார் வீட்டிலும் நடக்கிறதை இப்படி பொதுவிலும் நடத்துறாங்க....!! நல்ல ரசனை தான்....!

கோமதி அரசு said...

நல்லா இருக்கு. சின்னபுள்ளை தலையணை சண்டை விளையாட்டு.

அரசன் said...

நல்லா இருக்குங்க தலையணை சண்டை...

அன்னு said...

//சரியா, மக்கா!
இதற்காக எனக்கு அமைதிக்கான நோபெல் பரிசுக்கெல்லாம் பரிந்துரை செய்து விடாதீங்க, ப்ளீஸ்!//

GRRRRRRRRRRRRRRRrrrrrrrrrrrrrrrrrrrrr...

பாரத்... பாரதி... said...

காத்திருக்கிறோம்....

மாணவன் said...

செம கலக்கல்.....

தொடரட்டும் உங்கள் பணி...

மாணவன் said...

//அந்த பக்கமா போய் சுகத்துல முட்டிக்குங்க.//

“சுவத்துல” சுவர் என்னாத்துக்கு ஆகும்...

ஹா ஹா ஹா...

தொடரட்டும் உங்கள் பணி

வாழ்க வளமுடன்

நன்றி

மாணவன் said...

100

மாணவன் said...

அப்பாடி அப்ப 100வது வடை,போண்டா பஜ்ஜி எல்லாம் எனக்குதானா!

செல்வா அண்ணாகிட்ட சொல்லிடாதீங்க...

மாணவன் said...

பரவாயில்ல லேட்டா வந்தாலும் வடை கிடைத்ததில் ரொம்ம்ப சந்தோஷம்...

மாணவன் said...

இப்ப போதும்னு நினைக்கிறேன் போய்ட்டு அப்புறமா வரேன் அக்கா....

நன்றி

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வும் சுவாரசியமான தொகுப்பு

தொடர்க சித்ரா வாழ்த்துகள்

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு சூப்பர்,ஏற்கனவே நான் சொன்னபடி
தமிழ்மணம் டாப் 20 இல் 10வது இடம் உங்களுக்கு இந்த வாரம் ,வாழ்த்துக்கள்

polurdhayanithi said...

தலை யனை ...
தமிழர்களுக்கோ ...
அது ...
மந்திரம் ஓதும்
இடம்
இங்கோ ...
இதுஒரு நல்ல
விளையாட்டு
பதிவுக்கு
நல்ல பாராட்டு .

பாரத்... பாரதி... said...

நாளைக்காவது கொஞ்சம் வெட்டிய பேசுவீங்களா?

Anonymous said...

//சரியா போச்சு. நானே வெட்டி பேச்சு பேசிக்கிட்டு இருக்கேன். இதுக்கு volunteer ஆக assistant வேலைக்கு அவங்களே வந்து ஆஜர் போடுறாங்களேனு புல்லரிச்சு போச்சு.//

ithu thaan chitra..hahhaa

adada eppadi ellam sandapodarangaiya..

Anonymous said...

தலையணையில சண்டையா??...
தூக்கம் தானே வரும் .... அக்கா

புதுமை......

சிங்கக்குட்டி said...

தலைப்பை பார்த்ததும் இதுக்கு எல்லாமா சண்டை என்று நான் என்னவோ எதோ என்று நினைத்து விட்டேன்.

பாரத்... பாரதி... said...

//புதுமை......//

Lakshminarayanan said...

தலையணையால அடிச்சிக்கிறதா? நல்லா இருக்கே கதை.... காலை வாரி விடற நம்ம தமிழின 'கேம்' ஒன்னு இருக்கே ....அதை அங்கே பிரபலப்படுத்துங்க அககாவ்....

Lakshminarayanan said...

தலையணையால அடிச்சிக்கிறதா? நல்லா இருக்கே கதை.... காலை வாரி விடற நம்ம தமிழின 'கேம்' ஒன்னு இருக்கே ....அதை அங்கே பிரபலப்படுத்துங்க அககாவ்....

சிவகுமார் said...

தங்கள் பதிவை முதன் முறை பார்வை இடுகிறேன். வெட்டி பேச்சா! வெற்றி பேச்சு! அடிக்கடி விசிட் செய்வேன். இன்று முதல் உங்கள் பதிவுகளை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!முதன் முறை ஒரு பெண் பதிவரின் தளத்தை பின் தொடர்கிறேன். என் பதிவுகள் பற்றி கருத்து சொல்ல உங்களை அழைக்கிறேன். ஒரே ஒரு பெண் பதிவராவது என் பதிவு பற்று கருத்து சொன்னால் நன்றாக இருக்கும் என்பதால். நன்றி! என் பதிவுலகங்கள் madrasbhavan.blogspot.com and nanbendaa.com ... பிடிக்காவிடில் என்னை பொளந்து கட்டவும்.

Dubukku said...

Thats interesting. Thanks for sharing this :))

Jaleela Kamal said...

வீட்டில் பிள்ளைகலுக்கு ரொம்ப இது போல் தலையணை வைத்து சண்டை போடுவது அதை வைத்து குதிரை ஓட்டுவதுஎல்லாம் ரொம்ப பிடிக்கும்,

இது சூப்பர் கலட்டாவாஅ இருக்கே/