Thursday, November 25, 2010

எந்த ஊரு நேம் பஜ்ஜியோ?

Excuse number 1:  வியாழன் அன்று,  அமெரிக்காவில் "Thanksgiving Day" கொண்டாடப்படுகிறது. வியாழன் முதல், ஞாயிறு வரை பலருக்கு லீவு தான்.  எங்கள் வீட்டில்  விருந்தினர்கள் விசிட். 
Excuse number 2 :  கடந்த இரண்டு வாரங்களில் நடந்த சம்பவங்கள் .
Excuse number 3 : "தமிழ்மண நட்சத்திரம்" காரணமாக,  தினம் ஒரு இடுகை  என்பது எத்தனை பெரிய சவால் என்பதை புரிந்து கொள்கிறேன்.  ஈஸி ஆக, தினம் ஒரு இடுகையை தரும்  பதிவர்களுக்கு, ஒரு ஸ்பெஷல் வணக்கம்.
Excuse number 4 :  வேற என்ன excuse எல்லாம் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

இதனால் சகல பதிவர்களுக்கும்  அறிவிப்பது என்னவென்றால்,  உங்கள் பதிவுகளில்,  மீண்டும் பின்னூட்டப் புயல் அடிக்க, சிறிது நாட்கள் ஆகும்.  ஹி,ஹி,ஹி,ஹி.....  இப்போ draft பரணிலேயே ரொம்ப நாட்களாக இருந்ததை, தூசி தட்டி எடுத்து,  எழுதி  முடித்த இன்றைய  கோட்டா இடுகை:

 நான் Texas க்கு  புதிதாக வந்து இருந்த சமயம்:

இந்தியாவுக்கு டூர் போயிட்டு வந்த தோழி ஒருத்தி, சென்னையில் தன் உறவினர் ஒருவர், தன் கடைக்கு நேமாலோஜி (Nameology)  படி -  Vani (வாணி) ஸ்டோர்ஸ்  என்று தன் மகள் பெயரில்  இருந்ததை,   Vaannee (வான்நீ)  ஸ்டோர்ஸ் என்று மாற்றி விட்டதாக சொன்னாள். நல்ல வேளை, அவர் மகளையே இன்னொரு வீட்டுக்கு மாற்ற சொல்லவில்லை. தப்பிச்சிட்டா! என்று கமென்ட் அடித்து கொண்டோம்.   பின், என்னை ஒரு இந்திய Association நடத்திய விழாவுக்கு அழைத்துச்  சென்றாள். 

"எல்லாமே புது முகங்களாக இருக்குதே .... யாரையும் தெரியாது.  சீக்கிரம் திரும்பி போய்டலாம்," என்றேன்.  "போடி புள்ள,  நீதாண்டி இங்கே புது முகம். அவங்க எல்லாம், இங்கேயே பல வருஷமாக பழம் தின்னு கொட்டைய   போட்டவங்க.  நல்ல கதையா இருக்குதே!" என்று சிரிக்க ஆரம்பித்தாள்.  அவ்வ்வ்.....

ஒரு வீராப்புடன், நானே என்னை  அறிமுகப்படுத்தி கொள்ள முடிவு செய்தேன்.
அருகில் இருந்தவரிடம்:

"Hi - Hello,  I am Chitra."
"Oh!  I am Shawn."
"ஷான்?"
"ஸ்ரீனிவாசன் தாங்க.  சொந்த ஊரு,  அம்பாசமுத்ரம். அமெரிக்கர்கள் கூப்பிட வசதியாக ஷான் என்று சொல்லிடுவேன். அந்த பழக்கத்திற்கு இப்போதும் வந்துட்டுது."
(மக்கா, உங்களுக்கே ஓவரா தெரியல. என்னை பார்த்தால், ஸ்ரீனிவாசன் என்று சொல்ல கஷ்டப்படுற ஆளு மாதிரியா தெரியுது?)

ஆனால்  சும்மா சொல்ல கூடாது! ஷானுக்கு ரொம்ப நல்ல மனசு. அவரே, என்னை தனது நட்பு வட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.


இனி,   "நேம் ஈஸியாலாஜி அமெரிக்க பஜ்ஜி சொஜ்ஜி " படி  மாறி இருந்த இந்திய பெயர்களைப்  பாருங்க.

Gary - கேரி - குருப்ரீத் சிங்
Matt - மது
Anna - ஆனந்தி
Rick - ரிக் - ராகவபெருமாள்
ஸ்டான்லி - தேனப்பன்
MARK -   மாதவ் (M) அனந்த (A) ராம (R) கிருஷ்ணன் (K)
 Steve - ஸ்டீவ் - ஷைலேந்தர் தேவ்.
Kayla - கேய்லா - குழலி
Danny - தினேஷ் மணி
Paul - பாலசுந்தரம்
Andy - ஆனந்தன்
Ash - அக்ஷயா
Sam - சாமிநாதன்.
Sara - சாரா - சரஸ்வதி
Chris - கிருஷ்ணகுமார் 
Jay - ஜைலேந்தர் சிங்
Ray - ராம்குமார்
Bob - பாபுமோகன்
Becky - பாக்கியலட்சுமி
 Jack - ஜெகன்நாத் ஷர்மா
Tammy - தேஜஸ்வினி
Vickie - விக்கி - விசாலாட்சி
Nancy - நாகேஸ்வரி
Luke - லக்ஷமணன்
Max - மாதேஷ்வர்
Nathan - நாதன் அல்ல நேதன் -  நரேந்திரன்
Bryan - ப்ரயன் - பரணிகுமார் ரெட்டி
Pam - பிரமீளா தேவி
Ron - ரான் - ராம சுப்பிரமணியன்
Mike - மீனாக்ஷி சுந்தரம்.
Dan - தாண்டவ மூர்த்தி.
Cathy - கார்த்திக்கா

இவங்க இப்படி "அமெரிக்க நேம் ஈஸியாலாஜி"க்காக பெயர்களை மாற்றி கொண்ட பின்,  அமெரிக்க வாழ்க்கை ரொம்ப நல்லா - ஈஸி ஆக  இருக்குதாம். 


இது ஒரு புறம் இருக்க,  சில அமெரிக்கர்களை சந்திக்கும் போது அந்த ஊரில்,  தங்களது தெரிந்த இந்தியர்களை பற்றி உயர்வாக  சொல்ல  ஆரம்பிப்பார்கள்.  அவர்கள் சொல்லும் பெயர்களை வைத்து யாராக இருக்கும் என்று கண்டு பிடிப்பதற்குள் ........ ஸ்ஸ்ஸ்ஸ் ......  யப்பா.......  (என் பெயரை  பெரும்பாலும் சரியாக சொல்லி விடுவதால், தப்பிச்சேன்! சிலர் மட்டும்   - ச்சிட்ரா  - Chitra  -  )

சன் டீப் or சன் டிப்  -  Sandeep (சந்தீப்)
ஸப்பையா - Subbaiah (சுப்பையா) 
அ  ராவின் - Aravind (அரவிந்த்)
 சைத்தான்  யா - Chaitanya (சேத்தன்யா)
ஷேம் லா - Shamala
சவுண்ட் ஏரியா - Sound ariya - சௌந்தர்யா

கஸ்ஹந்த் சாம் (Sam )  - அது என்ன கல்கண்டு கஷ்டம்டா சாமி என்று யோசித்துக் கொண்டு இருந்த பொழுது,  எழுதி காட்டினார்.
Kuzhanthai Sami -  குழந்தை சாமி

ஒரு டவுட்டு:  யாருங்க, தமிழில் சிறப்பு "ழ"கரத்தை ஆங்கிலத்தில் எழுதும் போது,  "zha "  ("ழி" - "zhi ")  என்று எழுதணும்னு விதி அமைத்தது?  ரூல்ஸ்  போட்டவங்க, தமிழ் மக்களை தவிர, வேற யாருக்கும் அதை  பற்றி சொல்லல போல.  நம்மாட்களை தவிர,  மத்தவங்க "ஜா" - "ஸா" -  "zaa " மாதிரி தான் வாசிக்கிறாங்க.  அவர்களிடம், "zha " என்று இருந்தால் "ழ" என்று சொல்லணும் என்று சொல்லி கொடுக்கிறதுக்குள்ள - உள்ள தமிழும் எனக்கு  மறந்து விடும் போல.  அதனால், நானே இப்போ "L " தான் போட்டு எழுதி காட்டுவேன்.  இந்த ரூல் மீறிய குற்றத்திற்காக,  என்னை தமிழச்சி இல்லைன்னு ஒதுக்கி வச்சிருவாங்களோ?  pleeeeeez ......அப்போ  யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க.....

மக்காஸ்.... உங்களுக்கும் இந்த மாதிரி பெயர்ஸ் ...சாரி, பெயர்கள் தெரிந்தால்  எஜூதி - எஸூதி  - சே,  ezhuthi - eLuthi - எழுதி - பின்னூட்டத்தில் சொல்லுங்க.

77 comments:

KANA VARO said...

இப்பிடியெல்லாம் பேர் வைப்பாங்களா?

பகிர்வுக்கு நன்றி

a said...

Shan - ஷான் - சண்முகம்
Porch - பொர்ச் - பொற்ச்செல்வன்
DJ - டீஜே - தனஞ்சய்
Bob - பாப் - பன்னீர்செல்வம்

vanathy said...

நானும் கேள்விப்பட்டிருக்கேன். என் பெயர் ஏற்கனவே short & sweet(!!!??) தானே. அதனால் பிரச்சினை இல்லை. லாஸ்ட் நேம் கூட அமெரிக்கரின் வாயில் விழுந்து எந்த வித டாமேஜ் ஆகாமல் வெளியே வந்திடும்.

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ;-))))0

என் பொண்ணு பேர் மது. அவளை நாங்க இந்த ஊர் வந்த புதுசுலே அவளோட வகுப்புத் தோழிகள் கூப்பிடுவது,

மாடு, மேடு, மடு இப்படி.

என்னை......டூல் ஸி. டல்ஸி

கோபாலை...கோபல். லெட்டர்ஸ் வரும்போது அதுலே டோபல். காஸ்பெல் (dopal. gospal) போதுண்டா சாமின்னு இருக்கும்.

ஸ்பெல்லிங் சொல்லும்போது நாம் G ன்னா அவுங்க D ன்னு எழுதுவாங்க:(

settaikkaran said...

நல்லவேளை, நான் அமிஞ்சிக்கரை கூட போனதில்லை. அமெரிக்கா வந்திருந்தா என் அழகான பேர் என்ன பாடு பட்டிருக்குமோ? :-)

Unknown said...

ஊரை மாத்திப் போறது மட்டுமில்லாம.. அங்கே பேரையும் மாத்திக்கனுமா.. ரைட்டுங்க..

நல்லா சுவாரஷ்யமா எழுதியிருக்கீங்க.. :-)

suneel krishnan said...

எனக்கு தெரிஞ்சு ஸ்ரீ வத்சன் இத -vats அப்டின்னு மாத்திட்டானுங்க .சபரி நாதன் -nathy ,சதீஷ் -saty ,உங்க லிஸ்ட் பயங்கர பெருசா இருக்கு

சங்கரியின் செய்திகள்.. said...

சித்ரா...இதையும் சேர்த்துக்கங்க....என் பெயர் பெயர்- ஞானப்பூங்கோதை. இது என்ன பாடு படுதுன்னு நான் பார்த்து நொந்து போனேன். அதைவிட ஒவ்வொரு முறையும் அவள் spell பண்ணும் போது பட்ற பாடு இருக்கே.....அப்பாடீ......

அன்பரசன் said...

நான் இருப்பது வடஇந்தியா என்பதால் அவர்கள் என் பெயரை கண்டபடி அழைப்பது வழக்கம்.

அதில் சில கீழே

அம்பரசன்
அன்பன்சன்
அப்ரேசன்
அன்வர்ஹசன்
அன்பராசன்

எவ்வளவு அழகான பெயர்..
என்னத்த சொல்ல??

எல் கே said...

//ஸப்பையா - Subbaiah (சுப்பையா)
///

chanceless


இது பரவாயில்லை. ஒரு சைனீஸ் கிளையன்ட் என் பெயரை "கேத்தி" என்றுதான் சொல்லுவான்

சௌந்தர் said...

Excuse number 1: வியாழன் அன்று, அமெரிக்காவில் "Thanksgiving Day" கொண்டாடப்படுகிறது///

365 நாளும் ஒரு விழா இருக்கும் போல....

சங்கரியின் செய்திகள்.. said...

மன்னிக்கவும் சித்ரா, தவறுதலாக, என் பெண் பெயர் என்பதற்கு பதிலாக என் பெயர் என்று வந்துவிட்டது. என் மகள் பெயர்தான் ஞானப்பூங்கோதை.

சௌந்தர் said...

ஒரு வீராப்புடன், நானே என்னை அறிமுகப்படுத்தி கொள்ள முடிவு செய்தேன்.
அருகில் இருந்தவரிடம்:////

வேற வழி...

சவுண்ட் ஏரியா - Sound ariya - சௌந்தர்யா/////

அவ்வ்வ்வ்வ்


ஒரு டவுட்டு: யாருங்க, தமிழில் சிறப்பு "ழ"கரத்தை ஆங்கிலத்தில் எழுதும் போது, "zha " ("ழி" - "zhi ")////

இப்போவே யுனிகொடு ஆபிஸர் கிட்ட பேசுறேன்

சௌந்தர் said...

நம்ம ஊரிலே என் பெயரை சரியா சொல்ல மாட்டாங்க சுந்தர் சுந்தர் சொல்வாங்க soundar......O போடுங்க மக்கா......அவ்வ்வ்வ்வ்

ஆமினா said...

//சவுண்ட் ஏரியா - Sound ariya - சௌந்தர்யா//

ஹா..ஹா...ஹா....

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா சித்து இந்த ழ விவகாரத்தை தீர்த்து வைக்கத்தானே உன்னை அங்கே சாலமன் கூட்டிக்கிட்டு போய் இருக்காரு.. கேட்டுப் பாரு..:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சித்ரா.. அங்க என்னங்க அங்க இங்கயே இப்படித்தான்..இங்க ஹிந்தி பக்கோரா (பஜ்ஜிதான்)
கயல்விழி என்கிற பேரை கயால்வாஷி
:(ன்னு சொன்னா எனக்கு எப்படி இருக்கும்.. எனக்கு நீண்டபெயரால் கயல்விழிமுத்துலெட்சுமில சுருக்கி லக்‌ஷ்மின்னு சொல்லுங்கபோதும்ன்னா.. தடுக்கிவிழுந்தால் பத்து லக்‌ஷ்மி .. ஹலோ நான் லக்‌ஷ்மி பேசறேன்..

லக்‌ஷ்மி இருக்காங்களா ?
க்ர்ர்..
எங்க வீட்டுல வேலை செய்தவங்களில் 2 பேரு வேற லக்‌ஷ்மி..:)

துளசி சொன்னமாதிரி யே என் பொண்ணுக்கு பேரு மாடு மேடி அண்ட் மேட் (mad) என்ன கொடுமை பாருங்க..

Unknown said...

Hi akka,

So amused to hear the way people change their identities!!:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com
http://www.lovelypriyanka.blogspot.com

Anonymous said...

ஹா ஹா.. ரொம்ப சுவாரஸ்யம் சித்ரா :)
இன்னும் நிறைய பெயர்கள் வரும்னு நினைக்கிறேன்..

Ramesh said...

//சவுண்ட் ஏரியா - Sound ariya - சௌந்தர்யா
கஸ்ஹந்த் சாம் (Sam ) - குழந்தை சாமி

ha ha ha super

என்னோட ஆபிஸ்ல அப்படித்தான் ஒரு முறை எங்களை ட்ரெயின் பண்றதுக்காக கிளையண்ட் (US) வந்திருந்தாங்க..

அந்தம்மா ட்ரெயினிங் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி எல்லாரோட பேரையும் ஒரு பேப்பர்ல எழுதி கேட்டது.. நாங்களும் எதார்த்தமா எழுதிக் கொடுத்தோம்.. அப்புறம்.. அதைப்பாத்துட்டு.. உங்கள கூப்பிடற பேர எழுதிக்கொடுங்கன்னு சொல்லுச்சு..

பகீர்னுச்சு.. இது என்னடா வம்பா போச்சு... வச்ச பேரதான கூப்பிடுவாங்கன்னு நினைச்சேன்..


அதைச் சொல்லியும் அதுக்கு புரியல.. எல்லாரும் கட்டாயம் பேரைச் சுருக்கிக் கொடுத்தே ஆகனும் அப்பதான் ட்ரெயினிங் ஸ்டார்ட் பண்ணுவேன்னு ஒரே அடம்..


படுத்துறாலே.. ட்ரெயினிங்குக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு நினைச்சிக்கிட்டோம்..

ஆனாலும்... எல்லாரும் ஒரு வழியா சுருக்கி மறுபடியும் எழுதிக்கொடுத்தாங்க.

என் பேரு ரமேஷ்... இதை இன்னும் எப்படி சுருக்கறதுன்னு அப்படியே எழுதிக்கொடுத்தேன்..

அது கரெக்டா.. அதைக் கண்டுபிடிச்சி.. இது யாருன்னு கேட்டு.. சுருக்கி எழுதுன்னு ஒரே ரவுசு..

அப்புறம்.. Ramesh அப்படிங்கற பேர Rame (ரமி) அப்படின்னு எழுதிக்கொடுத்தேன்...

மத்த பேரையெல்லாம்.. விட்டுட்டு.. என்ன மட்டும் கரெக்டா ரமி ரமின்னு கூப்பிட்டு ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க ஆபிஸ்ல...

அந்த சம்பவம்தான் நினவுக்கு வருது...

பின்னூட்டம் எழுதப்போய்... தொடர் பின்னூட்டம் எழுதிட்டேன் போல.. :-)

ஆனந்தி.. said...

anna -ஆனந்தி...ம்..உங்க பேச்சு கா....))))

test said...

//சவுண்ட் ஏரியா - Sound ariya - சௌந்தர்யா//
ha ha
super! :))

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

என்னே இது தமிழுக்கே வந்த சோதனை

அமெரிக்காவுல பேர் வைச்ச குழந்தைகளுக்கெல்லாம் காது குத்தியாச்சா.....

ஹஹ ஹ ஹஹ ஹஹ ஹா

ஹரிஸ் Harish said...

சூப்பரு..உங்க டவுட்டு எனக்கும் இருக்கு.. eLuthi - இப்படி எழுதுறது சரின்னு தான் தோனுது..

வெட்டிப்பேச்சு said...

//சன் டீப் or சன் டிப் - Sandeep (சந்தீப்)
ஸப்பையா - Subbaiah (சுப்பையா)
அ ராவின் - Aravind (அரவிந்த்)
சைத்தான் யா - Chaitanya (சேத்தன்யா)
ஷேம் லா - Shamala
சவுண்ட் ஏரியா - Sound ariya - சௌந்தர்யா

கஸ்ஹந்த் சாம் (Sam ) - அது என்ன கல்கண்டு கஷ்டம்டா சாமி என்று யோசித்துக் கொண்டு இருந்த பொழுது, எழுதி காட்டினார்.
Kuzhanthai Sami - குழந்தை சாமி

//

வாய் விட்டுச் சிரித்தேன்.

நல்ல பதிவு.

mightymaverick said...

Saakshi/Sashaank - Saash (not Sauce)
Sandeepan/Deepa - Deep
Shankar/Shanmugam - Shaan
Senthil/Senbagam - Sen (A Marathi copy-writer told me how she remembers Senthil - She divides the name into two Sent-hill easy to remember and pronounce)
Bhakya - Baga/Baakki (In Tamil they don't know what baakki meens)
Manpreet - Man (Really they pronounce it in the same way of "Man")
Vijaya/Vijayender/Viji - Vij

At least they didn't embarrass you by pronouncing "Sit Raa"... And the list of such names always have "Contd..." :)

சைவகொத்துப்பரோட்டா said...

//சைத்தான் யா - Chaitanya (சேத்தன்யா)//

சேத்தன் பாவம்.

ராமலக்ஷ்மி said...

பெயர்கள் படும்பாடு பெரும்பாடுதான்! லிஸ்டு போட்டு காட்டி விட்டீர்கள். பகிர்வு சோகமான சுவாரஸ்யம்:)!

அமுதா கிருஷ்ணா said...

சைத்தான் யா...சூப்பர் பேரு சிட்ரா..

Madhavan Srinivasagopalan said...

ரொம்ப நல்லா எஜுதி இருக்கீங்க..

ஒங்க பேர் கூட 'சிட்றா' தான ?

goma said...

ஸ்ரீநிவா-ஷாண் மாதிரி ,எங்கள் வீட்டிலும் ஒரு ஷாண் இருக்கிறார்.என் நாத்தனார் பையன்
பெயர் ஷண்முகம்.
அவர் கடயத்தில் இருந்த காலத்திலேயே,அவரது அம்மாவுக்கு பட்சி சொன்னதோ என்னவோ ஷாண் என்றுதான் மாற்றிவைத்திருந்தார்.
இப்பொழுது அவர் கொலம்பஸ் நகரில்.

Unknown said...

பேரெல்லாம் படிக்கையில் செம காமெடியா இருக்கு ..

ஸாதிகா said...

ஹா..ஹா.. இதென்ன அநியாயமா இருக்கு?

சசிகுமார் said...

அடிக்கடி ஏதாவது சாக்கு சொல்லி லீவு கேட்கிறதே பெரிய வேலையா போச்சு. சரி சரி சீக்கிரம் போயிட்டு வந்துடுங்க.

jai said...

இந்த நிலைமை இன்னும் கொஞ்ச நாளுல நம்ம ஊர்லயே வந்துடும் போலிருக்கு ,,,ஏன்னா, பேரு வெக்கிறேன்னு பிறக்கிற குழந்தைக்கு வாய்ல நுழையாத பெயரா வைகிறாங்க already தமிழ் பெயர் எல்லாம் சுருங்கி
சுரேஷு
ரமேஷு
தினேஷு
மகேஷுனு ஆயிடுச்சி இன்னும் அமெரிக்கா ரேஞ்சுக்கு சுருக்குனா
'சு'
'ரா'
'தி'
'ம' னு ஆயிடும் futurela அமெரிக்கா போய் சுருகரதுக்கு நாம புள்ளைங்களுக்கு பெயரே இருகாது ,,, என்ன கொடுமை (ச)ரவணா இது ,,,,,,,

ராஜவம்சம் said...

சவுதிகாரனுக்கும் {அரேபியர்} தமிழ் பெயர் மண்டையில ஏறலைன்னா இந்தக்கொடுமைதான் குமார் என்றால் ஹமார் என்பான்.

ஹமார் - கழுதை.

வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

ஒரு விசாரணை கமிஷண் ஒன்றில் ராமகிருஷ்ண ஹெக்டே விற்காக, ராம் ஜேட்மலானி வாதம் செய்துக்கொண்டிருந்தார். எதிர்கட்சிக்காரரான‌ ஏ.கெ.சுப்பைய்யாவை, சப்பைய்யா வென்று பலமுறை சொல்லிக்கொண்டிருந்தார். சுப்பைய்யா அவர்கள் ஜேட்மலானியை, ஜூட்மலானி என்று கூறினார். அந்நொடியிலிருந்து ஜேட்மலானி, சுப்பைய்யாவை, சுப்பைய்யா என்று குறிப்பிட தொடங்கினார்.

நம் பெயரை தவறாக யாரேனும் பலுக்கினால், உடனே அவர் பெயரை வேண்டுமென்றே தவறாக கூறினால், அவர் திருந்துவார். ‍பதிலாக நம் பெயரை மாற்றிக்கொள்வது சரியே என உணரவேண்டும். நம் ஊர்களில் நெடு நாளாக வசிக்கும் வெளி நாட்டினர் யாரேனும் நம் ஊர் பெயராக மாற்றிகொண்டவரை யாரேனும் கேட்ட‌/பார்த்துண்டா?

CS. Mohan Kumar said...

சரிங்க ச்சிட்ரா

vasan said...

எப்ப‌டியோ 'பேருக்குன்னு' ஒரு ப‌திவை போட்டுடிங்க‌.
ச‌மாளிபிகேஷன்...? நாங்க இதை ஒப்பேத்தியாச்சுன்னு சொல்லுவோம்.

வார்த்தை said...

//ஷானுக்கு ரொம்ப நல்ல மனசு. அவரே, என்னை தனது நட்பு வட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.//

ஆடு, பூசாரிய பத்தி தெரியாம; தான் மட்டும் தலையாட்டுறதோட இல்லாம இனத்தையும் சேத்து விட்டுச்சாம்மா....
:)

pichaikaaran said...

"நல்ல வேளை, அவர் மகளையே இன்னொரு வீட்டுக்கு மாற்ற சொல்லவில்லை"

உங்களுக்கே உரித்தான கிண்டல்.. ஹா ஹா

செம காமடி பதிவு

Anonymous said...

சைத்தான் யா..

சூப்பரப்பூ..

Anonymous said...

ha ha ha ha.

Sandy - Soundarya
Mandy - Manthuvanthi
Brandy for someone else. I do not know her real name. Pavam Brandy =))

சுந்தரா said...

நல்ல சிரிப்பு சித்ரா...இங்கயும் சின்னச்சாமின்னு ஒருத்தர்
சைனா சமியானதைக் கேட்டிருக்கிறேன் :)

மே. இசக்கிமுத்து said...

நல்ல சுவாரசியமான பதிவு!!
பெயர் வைப்பதிலும் புதுமை!!!

தேவன் மாயம் said...

படிக்கப் படிக்க சிரிப்பாகத்தான் வருகிறது!1

KParthasarathi said...

Hilarious Chitra.Siricchu siricchu vayatthai vallikkaradhu.!!

அமுதா said...

:-))

வினோ said...

என் பெயரை வினு(vinu) என்றும் விண்டோ (vindo) என்றும் எப்போவும் மாத்தீடாங்க.. :(

Happy Thanks giving sis.. :)

Asiya Omar said...

ச்சிட்ரா இப்படி சூப்பராக பதிவு உங்களால் தான் கொடுக்க முடியும்,very very interesting and comedy too.

சுசி said...

//அவர்கள் சொல்லும் பெயர்களை வைத்து யாராக இருக்கும் என்று கண்டு பிடிப்பதற்குள் ........ ஸ்ஸ்ஸ்ஸ் ...... யப்பா....... //

ஹஹாஹா.. யாம் பெறும் துன்பம்..

என் சித்தி பேர் நாகேஸ்வரி.. நாகி ஆக்கிட்டாங்கப்பா..

ஒரு நண்பி பேர் சுலோச்சனா.. சூல்..

மேரி 'மாறி'யா போச்சு..

என் பேர்.. ஆவ்வ்வ்வ்..

curesure Mohamad said...

நல்ல பேரு ..நல்ல பஜ்ஜி ..ஹி ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present madam

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

//சவுண்ட் ஏரியா - Sound ariya - சௌந்தர்யா//
ha ha
super! :))

எனக்கும் பிடித்தது இதுவே..!!!
மற்றும்
உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அன்போடு அழைத்திருக்கிறேன்...!!!!

சிநேகிதன் அக்பர் said...

இங்கு சிலர் நம் ஊர் பெயர்களை சொல்லும் போது பயங்கர சிரிப்பு வரும்.

அதே ஃபீலிங் உங்கள் பதிவிலும்.

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்.

தினேஷ்குமார் said...

ஹப்பா தலைய சுத்துதே

தினேஷ்குமார் said...

அப்ப கன்னியப்பன், முனியாண்டி,சடையப்பன், தட்ஷனாமூர்த்தி , கயல்விழி, கண்மணி, மண்ணாங்கட்டி, ..........

இவங்களும் அங்க வந்தா.......???

ஸ்ரீராம். said...

citra....super cooler!

பதிவு செம ஜாலியா இருந்தது. வாணீ என்று பெயர் மாற்றம் செய்தால் நேமாலஜி. ஆளையே அடுத்த வீட்டுக்கு மாற்றினால் வாஸ்து ஆகி விடுமோ! செல் ஃபோனில் வாய்ஸ் ரெக்க்நிஷனுக்கு இங்குள்ள பெயர்களை எல்லாம் சொல்லும்போது கூட இந்த எஃபெக்ட் கேட்டிருக்கிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல பதிவு சித்ரா. சுவாரசியத்துடன் தங்கள் தமிழ் பெயரை மாடர்ன் ஆக்கிக் கொள்பவர்களுக்கு இலேசாக ஒரு குத்து விட்டிருக்கிறீர்கள்.

Menaga Sathia said...

ஆஹா எல்லா பெயரும் சுருக்கமா கூப்பிட நல்லாயிருக்கு..என் பெயரைக்கூட இந்த ப்ரெஞ்ச்காராங்க மேனக்கா அல்லது மேன்க்கா..என்ன கொடுமைடா சாமின்னு நினைச்சுப்பேன்..ஏங்க என் பெயர் அப்படி கஷ்டமாவா இருக்கு,யாராவது சொல்லுங்களேன்...குடும்ப பெயர் முருகப்பா என்னும் பெயரை மட்டும் அழகா தப்பில்லாம கூப்பிடுவாங்க...என்ன கொடுமை பாருங்க....

Prabu M said...

Unisys- ல் வேலைபார்த்துக் கொண்டிருக்கும்போது எங்க‌ளின் ஃப்ர‌ண்ட் ஆஃபிஸ் ப்ராஜ‌க்ட் லீட் மார்க் என்ப‌வ‌ர் என்னை "ப்ராப்ப்ப்" என்றுதான் அழைப்பார்.... "டேய் அது எங்க‌ம்மா வெச்ச‌ பேர்டா... பிடிக்காட்டி ப‌ட்ட‌ப்பேர் வெச்சுக்கூட‌ கூப்பிடு திரும்பிப் பாக்குறேன்.. இப்படி பேர‌க் கொல்லாத‌"ன்னு சொல்லுவேன்... இந்த‌ பெய‌ர்க‌ளைப் பார்க்கும்போது.... மார்க் ப‌ர‌வாயில்லைன்னு தோணுது!! அமெரிக்கா ப‌க்க‌ம் வ‌ந்தா "ஸ்டீவ் வாக்க்க்"னு பேரை மாத்திவெச்சுக்கிட்டா ப்ர‌ச்னை இல்ல‌ன்னு நென‌க்கிறேன்.. சிங்ங்ங் இன் த‌ ரைன்..ஐய‌ம் ஸ்வைங்ங்ங் இன் த‌ ரைன்..!!!

சூப்ப‌ர்க்கா... சின்ன‌ சின்ன‌ ஸ்வார‌ஸ்ய‌ங்க‌ளைக் க‌ள‌னா எடுத்துக்கிட்டு ஆரோக்ய‌மா சிரிக்க‌ வெச்சுட்டீங்க‌....
அஜ‌கு... அஸ‌கு... ஸாரி அழ‌கு (அLaகு)!! :‍-)))))))

நாகு (Nagu) said...

சவுந்தர்யா நல்ல தமாஷ். என் நண்பன் மனைவியை எல்லாம் 'சவுண்ட்' என்று அழைப்போம்.

இங்கே மற்ற பெயர்கள்:

Nat - Natarajan
Dan - திருஞானசம்பந்'Dan' (இவன் கொஞ்ச நாள் 'Sam' ஆக இருந்தான்). இப்போது அல்பாயுசில் வாழ்க்கையிலிருந்தே 'ban' ஆகிவிட்டான் :-(

Kris - Krishnamurthy.
haaree - Harryயும் இல்லாமல் Hariயும் இல்லாமல் நடுவில் -ஹரி

Angel said...

vadhani --- vaadi Nee
arasi --- arisi(rice)
jacintha ---yesintha(j is pronounced as y by germans)
aadhi easan --- atishaan
vidhusan---- vit u saan
sundar ----- sander
sunitha --- sanita
subburaj --- saabuu raa
jagadishwari --- ya ga dishwaari
jothi --- yothi
jason--- yasun
jenifer ----yenivar
last but not least evangelin---- e faaangaleen.(g as gaa)ang v as faa
indha names ellam germans vayil kadithu vizhungi vizundhavai.

பித்தனின் வாக்கு said...

ஆகா எனக்கு என் பெயரே மறந்து போச்சு. சில பெயர்கள் படிக்கும் போது சிரிப்பு வருது. ஆனா கிருஷ்ண குமாருக்கும், கிருஸ்த்துவுக்கும் உள்ள ரிலேட்டிவிட்டி நல்லா இருக்கு. நல்ல பதிவு. சித், அதுதானா உங்களுக்கு அங்கன கூப்பிடும் பெயர்.

ராஜ நடராஜன் said...

//"ஸ்ரீனிவாசன் தாங்க. சொந்த ஊரு, அம்பாசமுத்ரம். அமெரிக்கர்கள் கூப்பிட வசதியாக ஷான் என்று சொல்லிடுவேன். அந்த பழக்கத்திற்கு இப்போதும் வந்துட்டுது."
(மக்கா, உங்களுக்கே ஓவரா தெரியல. என்னை பார்த்தால், ஸ்ரீனிவாசன் என்று சொல்ல கஷ்டப்படுற ஆளு மாதிரியா தெரியுது?)//

சிரிச்சிகிட்டு படிக்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

//ஹைய்யோ ஹைய்யோ;-))))0

என் பொண்ணு பேர் மது. அவளை நாங்க இந்த ஊர் வந்த புதுசுலே அவளோட வகுப்புத் தோழிகள் கூப்பிடுவது,

மாடு, மேடு, மடு இப்படி.

என்னை......டூல் ஸி. டல்ஸி

கோபாலை...கோபல். லெட்டர்ஸ் வரும்போது அதுலே டோபல். காஸ்பெல் (dopal. gospal) போதுண்டா சாமின்னு இருக்கும்.

ஸ்பெல்லிங் சொல்லும்போது நாம் G ன்னா அவுங்க D ன்னு எழுதுவாங்க:(//

துளசி டீச்சர் இடுகைய படிக்கவிடுங்களேன்:)

ராஜ நடராஜன் said...

//ஸ்டான்லி - தேனப்பன்//

எல்லா பேரும் சரி! இது என்ன:)

இந்த பதிவின் சிரிப்பை நான் தவிர்க்காமல் படித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்:)

ராஜ நடராஜன் said...

என் பேர் கூட சிரமம்ன்னு பிலிப்பினோகாரிக(பன்மை) நட் ன்னு மாத்திட்டாங்க.பதிவுலகம் வந்த புதுசுல நானும் நட்டுன்னே சொல்லிகிட்டிருந்தேன்:)

Jaleela Kamal said...

சித்ரா நேம் பஜ்ஜி ஜூப்பரு,
இஙக் மட்டும் என்னவா, பிலிப்பைனி்ள் அப்படி தான் கூட்ட்பிடுவார்்ள்.
சொதாப்்லா//

S Maharajan said...

சூப்பரப்பூ..

கிரி said...

ஹா ஹா ஹா செம shunmugam என்பதை எல்லோரும் பெரும்பாலும் ஷுண்முகம் என்று தான் கூறுவார்கள். நான் விமான நிலையத்தில் இருந்த பொது இப்படி அறிவிப்பில் ஒருத்தரை கூப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்... அவரும் வேறு யாரையோ கூப்பிடுறாங்க என்று போகவே இல்லை..:-)))

//சன் டீப் or சன் டிப் - Sandeep (சந்தீப்)
ஸப்பையா - Subbaiah (சுப்பையா)
அ ராவின் - Aravind (அரவிந்த்)
சைத்தான் யா - Chaitanya (சேத்தன்யா)
ஷேம் லா - Shamala
சவுண்ட் ஏரியா - Sound ariya - சௌந்தர்யா//

ஹா ஹா அல்டிமேட் எதுனா ஸப்பையா சைத்தான் தான் :-)))

Vishy said...

பெயர் என்பதே கூப்பிடத்தானே.. எத்தனை chinese காரர்கள் பெயரை நம்மால் சரியாக உச்சரிக்க முடிகிறது.. அதனால ஈஸியாலஜியாவது ஓரளவுக்கு ஒத்துக்கலாம்.. என்னால ஒத்துக்க முடியாத விஷயம் - நம் தமிழ் நண்பர்கள், குழந்தைகள் பெயரை வித்தியாசமாக/தனித்தன்மையாக இருக்கிறேன் என்கிற பெயரில், சொந்த தாத்தா பாட்டிகள் கூட கூப்பிட முடியாதபடி வைக்கிறார்கள்.. தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைத்தால் அரசாங்கமே ஒரு கிராம் பொன் தருகிறேன் என்கிற அளவுக்கு இந்த நிலமை இருக்கிறது என்றால் யோசித்து பாருங்கள்.. ஓரு காலத்தில் பெயரை வைத்தே அவர் எந்த ஊர்/எந்த குலம் என்பதை அறிய முடியும்.. இது இந்திய பெயர் என்றில்லை.. எல்லா நாட்டினருக்கும் இது பொருந்தும்.. ஆனால் இப்பொழுதெல்லாம் தமிழ் குழந்தைகளுக்கு கூட ரஷ்யப் பெயர் சூட்டுகிறார்கள் (Tanya/Natasha)

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

//யாருங்க, தமிழில் சிறப்பு "ழ"கரத்தை ஆங்கிலத்தில் எழுதும் போது, "zha " ("ழி" - "zhi ") என்று எழுதணும்னு விதி அமைத்தது?//

நானும் தேடிகிட்டேயிருக்கேன்... என்ன விதியோ இது? நல்லவேளை ‘ழ’வோட நிறுத்திகிட்டாங்க இந்த ஸ்பெஷல் ரூலை!! “ள”, ந, ன, ண, ற, ர... இதுக்கெல்லாமும் போட்டிருந்தாங்கன்னா என்ன ஆகியிருப்போம்... :-)))

cheena (சீனா) said...

என் பேரன் பேரு நேதன் என்ற நாதன் ( இந்திய்ர்கள் அழைப்பது நாதன் - மற்றவர்கள் அழைப்பது நேதன்

Anonymous said...

செம காமெடி சித்ரா

Malar Gandhi said...

I would like to add couple of names to the list as well.

Maalini - Melanie
Vigneswari - Vikki
Hari - Harry

I am happy that my friends call me correctly, Malar as it is spelled. At business circle they call me 'Ms. Gandhi'...thanks to my surname:)However, one of my friend keeps calling me 'Marlo'...I really get mad at him:(