Sunday, November 21, 2010

முன்ன பின்ன செத்து இருந்தால் தானே?

எங்கள் சின்ன வயதில், பாக்கியம் என்ற பாட்டி, எங்கள் ஊரில் இருந்ததை மறக்க முடியாது.    வெள்ளந்தி மனம் கொண்டவர்.  சின்ன சின்ன விஷயங்கள் கூட தெரியாமல், மற்றவர்களிடம் கேட்பார்.  "என்ன பாட்டி, இது கூட தெரியாதா?" என்று யாராவது கேட்டால் போதும் - "தம்பி, முன்ன பின்ன செத்து இருந்தால் தானே,  சுடுகாடு தெரியும்? எனக்கு எப்படி தெரியும்?" என்று சொல்லி பொக்கை வாய் காட்டி சிரிப்பார்.

அவர் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ? அந்த பழமொழிக்கு உண்மையில் என்ன அர்த்தமோ? எனக்கு  தெரியாது. ஆனால்,  கடந்த நவம்பர் 12 ந் தேதி மாலை ஐந்து மணியில் இருந்து நடந்து கொண்டு இருக்கும் சம்பவங்கள்,  எனக்கு பல அர்த்தங்களை,   கற்று கொடுத்து கொண்டு இருக்கின்றன.

அர்ச்சனாவும் அர்ப்பணாவும்  பல கனவுகளுடன்,  மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர்கள்.  இந்த டிசம்பர் மாதத்துடன்,  தங்களது இரண்டரை வருட படிப்பை முடித்து விட்டு,   ஜனவரியில் இருந்து வேலை தேடுவதில் மும்முரமாக இருக்க திட்டம்.

இந்த சூழ்நிலையில்,  எனது நெருங்கிய தோழிகளுள் ஒருத்தியான அர்ப்பணா,  நவம்பர் 12,   ஒரு பெரிய விபத்தில் சிக்கி சில மணி நேரங்களில் எங்களை விட்டு சென்றாள்.  அர்ச்சனா, பின் கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு - Spinal Cord Injury - ஆகி  paralyzed ஆக மருத்துவமனையில் critical care இல் இருக்கிறாள்.  அர்ப்பணாவின் ஆன்மா சாந்தியடையவும், அர்ச்சனா விரைவில் பூரண நலம் பெற்று மீண்டு வரவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.

இரட்டை பிறவிகள் - எனக்கு இரட்டை தோழிகள் - அர்ச்சனாவும் அர்ப்பணாவும் 

 விபத்து நடப்பது சகஜம்தான்.   அதில் மரணம் சம்பவிப்பது,  நியூஸ் ஐட்டம் என்று ஆகி விடுகிறது - அது நம் வீட்டிலேயே நடக்கும் வரை.  "முன்ன பின்ன செத்து இருந்தால் தானே, சுடுகாடு தெரியும்?"

எங்கள் ஊரில் இந்தியர்கள், மொத்தம் ஐம்பது பேர் தான் இருப்போம். அதிலும் 35 - 40 பேர்கள், இந்தியாவில் இருந்து மேற்படிப்புக்காக இங்கு வந்து செல்பவர்கள்.  இந்த சம்பவம் எங்களை, உலுக்கி எடுத்து இருக்கிறது.

நடந்தது நடந்து விட்டது. அழுதோமா - முடித்தோமா - போனாமா என்று இருக்கும் சராசரி உணர்வுகள் கூட வெளிநாடுகளுக்கு வரும் போது,  தொலைத்து விடுகிறோமோ? 

சிலர் அர்ச்சனாவை கவனித்து கொள்ள - வேறு சிலர்,  அர்ப்பணாவை இந்தியாவுக்கு அனுப்பவதில் உள்ள பேப்பர் வொர்க் செய்ய வேண்டியது இருந்தது.  Indian Embassy ,  இந்த மாதிரி இந்தியர்கள் பரிதவிக்கும் நேரங்களில்,  இன்னும் கொஞ்சம் ஆதரவாக பேசி -  விஷயங்களை நல்லபடியாக விளக்கி -  செய்ய வேண்டிய காரியங்களை, அவர்களது வேலையாக/கடமையாக  மட்டும் நினைக்காமல் (just an official work) ,  கலங்கி போய் இருக்கும் உள்ளங்களுக்கு கரிசனையாக செய்யும் உதவியாக - கொஞ்சம் passion உடன் செய்து இருக்கலாமோ?  Indian Embassy  நிலைமை, எண்ணம் தெரியாமல் எதுவும் நான் சொல்ல கூடாதோ?  

நான் கடந்த வாரத்தில், கொஞ்சம் சிரிக்க மறந்துதான் போனேன்.  அது மட்டும் அல்ல, என் உணர்ச்சிகளையும் ஒதுக்கி வைத்தேன். அர்ப்பணாவுக்காக  அழவா?  அர்ச்சனாவுக்காக கவலைப் படவா?  அழுது கொண்டு இருக்கும், மற்ற இந்திய மாணவர்களை ஆறுதல் படுத்தவா?  அர்ப்பணாவை  "பத்திரமாக" இறுதி சடங்குகளுக்காக ஊருக்கு அனுப்பும் வரை உள்ள வேலைகளை மற்றவர்களுடன் சேர்ந்து  கவனிக்கவா?  உடனே இங்கே கிளம்பி வர துடித்தும், வர முடியாமல் இருக்கும் அவர்களின் பெற்றோரின் மன நிலையை நினைத்து கலங்கி நிற்கவா? 

அர்ச்சனாவுக்கு இது வரையில் அர்ப்பணாவின்   மறைவு பற்றி தெரியாது.  பெற்றோர்கள் வந்த பின்,  அவர்களே  நேரம் பார்த்து சொல்லி கொள்ளட்டும் என்று காத்து இருக்கிறோம்.   ஆனால்,  இரட்டை பிறவிகளுக்கே உள்ள அமானுஷ்ய உணர்வு எதையோ அவளுக்கு எச்சரிக்கிறது  என்று நினைக்கிறோம்.  அர்ப்பணா பக்கத்து அறையில்,  இவளை போல்தான் எழுந்து வர முடியாத நிலையில்  சிகிச்சை பெற்று வருகிறாள் என்று சொல்லி இருக்கிறோம்.  நம்பாமல்,  போட்டோ வேண்டும் என்றாள்.  எங்கள் தோழி, வினு, அர்ச்சனா தூங்கி கொண்டு இருந்த போது, அவளையே லாங் ஷாட்டில் போட்டோ எடுத்து விட்டு, இதுதான் அர்ப்பணா என்று காட்டி விட்டாள்.  அந்த நேரத்தில், எங்கள் மனநிலை ..... ம்ம்ம்ம்..... எப்படி சொல்லி உங்களுக்கு புரிய வைப்பது? 

மஞ்சள் உடையில்:  அர்ப்பணா - மற்றவர், அர்ச்சனா  - இந்த புகைப்படத்தை,  "தனி மரங்களின்"  இந்த வருட தீபாவளி பார்ட்டி போது,  நவம்பர் ஐந்தாம் தேதி அன்று, நான் எடுத்தேன். 

எல்லாவற்றையும் கடந்து,  என்னை திணற அடித்தது எது தெரியுமா?  ஒரு நொடியில்,  அவசரப்பட்டு எடுத்த திருப்பத்தால், இந்த விபத்து ஏற்பட்டு விட்டதே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கும், நிதின். இவரும் எங்கள் நண்பர்.  சமீபத்தில் தான், படிப்பு முடித்து விட்டு சிகாகோ ஏரியாவில் வேலையில் சேர்ந்தார். மே மாதம் தான் திருமணம் ஆகி உள்ளது. ஜூலை மாதம் தான், அவர் மனைவி அமெரிக்கா வர முடிந்தது.  தன் மனைவிக்கு  தான் படித்த University யையும் தனது நண்பர்களையும் அறிமுகப்படுத்துவதற்காக Kentucky வந்தார்கள். எங்கள் வீட்டில் தான் தங்க ஏற்பாடு செய்து கொண்டார்கள்.

மதியம், எங்கள் வீட்டில்,  ஒன்றாக நாங்கள்  சாப்பிட்டதும்,  நண்பர்களுடன் வெளியே செல்ல ஆசைப்பட்டார்கள். எனக்கு,  இரவு உணவு அனைவருக்கும் சமைக்கவும்,  இன்னும் பிற வேலைகளும் இருந்ததால், வரவில்லை என்று சொல்லி விட்டேன்.  அவர்கள் எங்கள்  வீட்டை விட்டு கிளம்பிய  இரண்டு மணி நேரத்தில், இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

நிதினுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் மனைவிக்கு சில காயங்கள்.  அவற்றிற்கு மருந்து இட்டு, வீட்டில் இருந்தே கவனித்து கொள்ள சொல்லி,  மருத்தவமனையில் இருந்து அனுப்பி விட்டார்கள்.   அவளை கவனிக்கும் பொறுப்பு எனக்கு.

எனது ஆருயிர் தோழியை, என்னை விட்டு பிரிந்து செல்ல வைத்தவன், வேறு யாராவது என்று இருந்து இருந்தால்,  மனதார திட்டி இருப்பேன்.  ஆனால்,  என் கவனிப்பில், என் பொறுப்பில், என் வீட்டில்,  guilty feelings உடன் கண் முன் நிற்கும் போது, என்ன செய்வது?  

இருவரும், என் வீட்டில் இருந்து கொண்டு  குற்ற உணர்வுடன் அழுது கொண்டு இருந்தார்கள்.  முதலில், அவன் மேல் எனக்கு கோபம் வராமல் இல்லை. நானும் சராசரி பொண்ணுதானே!  ஆனால்,  சில நிமிடங்களிலேயே பார்க்க பாவமாகவும் ஆகி விட்டது.  என்ன ஆறுதல் சொல்வது என்றும் தெரியாமல்,  எப்படி எனது உணர்வுகளை மறைப்பது என்றும் தெரியாமல், அர்ச்சனா - அர்ப்பணா பற்றிய வருத்தங்களையும் காட்ட  முடியாமல் .............. அப்பப்பா...... என்ன கொடுமையான தருணங்கள் தெரியுமா? என் எதிரி என்று யாராவது இருந்தால் கூட,  இப்படி ஒரு மன நிலையில் சிக்க கூடாது என்று வேண்டி கொள்கிறேன்.

மருத்துவமனையில், அர்ச்சனாவை பார்த்து விட்டும் வருத்தப் படுவேன் -  வீட்டில்,  நிதின் மற்றும் அவன் மனைவியின் மன நிலைகளை கண்டும் வருத்தப் படுவேன்.  நான் நல்லவளா? கெட்டவளா? 

 பி.கு.:   அர்ப்பணா, நவம்பர் 21 அதிகாலை, இந்திய நேரப்படி , இறுதி சடங்குக்காக ஊருக்கு வந்து விட்டாள்.  அவள் பெற்றோருக்கு விசா கிடைத்து இருக்கிறது. இந்த வார இறுதிக்குள், அர்ச்சனாவை கவனிக்க வந்து விடுவார்கள்.
நிதின்,  போலீஸ் ரிப்போர்ட்க்காக காத்து கொண்டு இருக்கிறான்.  அவன் மட்டுமே காரணமா? அவனது காரை இடித்த அடுத்த காரை ஓட்டியவருக்கும் பங்கு உண்டா என்று தெரிய வரும்.  லீகல் நடவடிக்கைகள், அதன் பின் எடுக்கப்படும்.

நாளை,  "அர்ப்பணாவுக்கு  அர்ப்பணம்" ......... எழுதலாம் என்று இருக்கிறேன்.

148 comments:

LK said...

மனதை கனக்க வைத்து விட்டீர்கள். தனக்கு பிரியமானவர்களை இறைவன் விரைவில் அழைத்துக் கொள்ளுவான் என்று கேள்வி ப்பட்டு இருக்கிறேன்

Anonymous said...

=((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜம்மாகவே உங்கள் நிலையு ம் நிதினின் நிலையும் மிக கடினம் தான்.
இறந்தபெண்ணுக்கு அந்த நொடி தான் வலியும் வேதனையும். இருப்பவர்களுக்கே வலியும் வேதனையும் தொடர்கிறது.. :( கண்ணில் நீரோடு.. அர்ச்சனாவுக்காகவும் உங்கள் அனைவரின் உடல்மற்றும் மனநலனுக்குப்ரார்த்திக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...
This comment has been removed by the author.
சுந்தரா said...

படிக்கும்போதே மனசு பதறுது சித்ரா...

அர்ச்சனா விரைவில் நலம்பெற என்னுடைய பிரார்த்தனைகள்.

மங்கை said...

அனுபவித்தான்பா வலி தெரியும்.. நீங்க அனுபவித்த அந்த தருனங்களை நாங்களும் இப்போது அனுபவிக்கறோம்... இறைவனை பிரார்த்திப்போம்... ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தை சொன்னால் அந்த நேரத்தில் கூட்டு பிரார்த்தனை செய்யலாம்.. அதில் எனக்கு நம்பிக்கை அதிகம்...

ம்ம்ம்ம்

அம்பிகா said...

அன்பு சித்ரா,
நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்து சொல்லலாம் என்று சந்தோஷமாக வந்து பதிவை படித்து, கலங்கி போனேன். புகைப்படத்தின் அழகான சிரிப்பு கலங்கடிக்கிறது.
தோழி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
பிரிந்துசென்ற தோழிக்கு அஞ்சலிகள்.

Kannan said...

சித்திரா அக்கா. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/

ஹுஸைனம்மா said...

இறைவன் அர்ப்பணாவின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மன அமைதியையும், பொறுமையையும் தரட்டும்.

நீங்க சொன்னதுபோல, அர்ச்சனாவின் நிலையைப் போல நிதினின் நிலைமையும் மனதை வருத்துகிறது.

சௌந்தர் said...

paralyzed இருந்தால் கழுத்துக்கு கிழ் எந்த உணர்ச்சியும் இருக்காது கை கால்களை அசைக்க முடியாது எனக்கும் இந்த பிரச்னை தான் இப்போது நான் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறேன் இந்த paralyzed குணம் ஆக ரொம்ப நாள் பிடிக்கும்...என் வருத்தங்களும் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும் போது தான் கடவுள் இல்லை என்றே தோன்றுகிறது

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப சாரி மேடம் ..........

Kousalya said...

மிகவும் வருத்தமாக இருக்கிறது சித்ரா.....இரண்டு விதமான சூழ்நிலைகளையும் இப்போது சந்தித்து கொண்டிருக்கிறீர்கள்....எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.... மனதை இயல்பாக்கி கொள்ளுங்க...இப்போது நீங்கள் தான் பாதிக்க பட்டவர்களை கவனிக்கும் நிலையில் இருக்கிறீர்கள். அதனால் தைரியமாக இருங்கள். இறைவன் உங்களுடன் இருக்கிறார்......

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப வருத்தமாக இருக்கிறது...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மிக வேதனையான சம்பவங்கள்.....சித்ரா. கால்ம்தான் சிறந்த மருந்து அனைவருக்கும். உங்கள் தோழி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்.

தமிழ் உதயம் said...

ஆழ்ந்த அனுதாபங்கள். காயமுற்ற சகோதரி, நலம் பெற பிராதிப்போம்.

Balaji saravana said...

மிகுந்த அனுதாபங்கள் சித்ராக்கா :(

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
This comment has been removed by a blog administrator.
Gayathri's Cook Spot said...

Very very sorry to hear about the incident. They look so lovely in the snap. We will surely pray God for Archana's recovery. Be Brave Chitra.

சசிகுமார் said...

தலைப்பை பார்த்து காமெடி பதிவு என்று நினைத்து வந்த என்னை இந்த சம்பவம் மிகவும் கவலை அடைய வைத்து விட்டது.

பிரியமுடன் ரமேஷ் said...

சாரி சித்ரா.. ரொம்பவும் வருத்தமான சம்பவம்.. என்ன சொல்றதுன்னே தெரியலை.. விதி வலியது..

மொக்கராசா said...

காலம்,கடவுள்,நேரம் முன் நாம் அற்ப பதர்கள்(சின்ன தூசிகள்) என்பதை மீண்டும் உணர்ந்தேன்.
உங்களின் சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

S Maharajan said...

அக்கா...

அர்ச்சனா விரைவில் நலம்பெற என்னுடைய பிரார்த்தனைகள்.

Anonymous said...

There is some lack of clarity in the reportage on Nitin.

Did the couple meet with accident in which the woman died?

I am not able to know that. It appears from the waiting for police report etc. that she died.

Reg the accident and death of the girl of the twins, and the paralysis of the other twin, no explanation is possible for such accidents.

Accidents are accidents.

May you come out of all philosophically soon.

Hope to read a cheerful blogpost next from you!

ஆமினா said...

மனசுக்கு வருத்தமா இருக்கு

asiya omar said...

சித்ரா எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை,மௌனமாக அழுவதை தவிர.இருவர் முகமும் கண்ணிலேயே நிற்கிறது.அனைவரும் இந்த சூறாவளியில் இருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அலைகள் பாலா said...

மனதை கனக்க வைத்து விட்டீர்கள்....

இம்சைஅரசன் பாபு.. said...

ஆழ்ந்த அனுதாபங்கள் .......அர்ச்சனா குணமடைய வாழ்த்துக்கள் ........

sakthi said...

சித்ரா படிப்பதற்குள் மனம் கனத்து விட்டது ஒரு சிலரின் சிறிய கவனக்குறைவு எத்தகைய ஆபத்தில் முடிந்துவிடுகின்றது விபத்தில் தன் வாழ்வை இழந்த அப்பெண்ணிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். மருத்துவமனையில் இருக்கும் பெண் விரைவில் நலம் அடைய பிரார்த்திக்கின்றேன்....
அவர்களின் பெற்றோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். எவர் என்ன ஆறுதல் சொன்னாலும் அவர்களுக்கு இது மிகப்பெரிய இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை

அன்புடன் மலிக்கா said...

படிக்குபோதே அழுகை கொட்டுகிறது.
இரட்டையர்களைபார்க்கும்போதே மனம் சங்கடப்படுகிறது.

எல்லாம் வல்ல இறைவன் அர்ச்சனா குணமடையவும் அவர்கள் பெற்றோர்களுக்கு மனதைரியத்தையும் தரபோதுமானவன்.

தாங்களின் மன நிலை அப்பப்பா சொல்லிவடிக்கயிலாது. இறைவன் துணையிருப்பான் கவலைப்படாத்தீங்கக்கா..

Anonymous said...

எனது அனுதாபங்கள்.

dineshkumar said...

அக்கா நீங்க மெயில்ல சொல்லும்போதே நான் கலங்கிட்டேன்க்கா

சகோதரி அர்ச்சனா விரைவில் குணமாக பதிவுலகில் அனைவரும் பிரார்த்திப்போமாக........

Bala said...

மனதை உலுக்கியது. சொல்வதுற்கு வேறு எதுவும் தோன்றவில்லை.
ஆழ்ந்த வருத்தங்கள்.

அர்ச்சனாவிற்கு என் பிரார்த்தனைகள் !!

கே.ஆர்.பி.செந்தில் said...

வருத்தமா இருக்கு வேறென்ன சொல்ல...

dineshkumar said...

உடல்
மறைகின்றபோதே
மனதில் குடிகொள்ளும்
உயிர் மறைவதில்லை
சிலர் மனதில்
இன்றும் ..........

இளங்கோ said...

அவர்களின் பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

எங்களையும் கலங்க வைத்து விட்டீர்கள், முதல் ஆளாக என் அனைத்துப் பதிவுகளுக்கும் வருகை தரும் உங்களைக் காணவில்லை என்று போன வாரம் நினைத்தேன். காரணம் தெரிந்ததும் மிக்க வருத்தம் அக்கா.

எல்லாம் வல்ல இறைவன், மன அமைதியையும், ஆறுதலையும் தரட்டும்.
அர்ச்சனா விரைவில் நலமடைய பிரார்த்திக்கிறேன்.

யாதவன் said...

வழமைபோல் சுப்பர்

ஆனந்தி.. said...

சித்ரா...பேஸ்புக் இல் நீங்க சொல்லிருந்த இந்த தகவல்களை போன வாரம் படிச்சதில் இருந்தே ரொம்ப கஷ்டமா இருந்தது...ஆனால் சித்ரா உங்களுக்கும் எவளவு மனசில் வலி ன்னு சம்பவங்கள் எல்லாமே நீங்கள் விவரிச்சதில் இருந்து புரிகிறது...இப்போது உங்களுக்காகவும் கடவுளிடம் வேண்டுகிறேன்...இதை எல்லாம் தைரியமாய் சமாளிக்க மனசில் தெம்பும்,உடம்பில் வலுவும் உங்களுக்கு கடவுள் கொடுக்கணும்னு...!!

இவன் said...

May her soul rest in peace.

I dont believe in god so u ppl pls Give strength to Archana to handle this.

ஜோதிஜி said...

வாழ்த்துகள் சித்ரா. இந்த பதிவை அடுத்து போட்டு இருக்கலாமே?

இரட்டையர்? ம்ம்ம்...

ஜீ... said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!
அர்ப்பணாவின் ஆன்மா சாந்தியடையவும், அர்ச்சனா குணமடையவும் பிரார்த்திப்போம்! உங்களுக்கும் ஆண்டவன் மன அமைதியைத் தரட்டும்! அப்புறம் நிதின்...பாவம் அவருக்கும் life long அ Guiltyஅ இருக்கப் போகிறதே? :-(

ஜீ... said...

எதுக்கு இப்பிடி ஒரு டைட்டில்? நான் காமெடி என்று நினைத்தேன் :-(

அமைதி அப்பா said...

மிகவும் வருந்துகிறேன்.

VELU.G said...

ரொம்ப வருத்தமாயிருக்கிறது.

அர்ப்பணா ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

அர்ச்சனா பூரண குணம் அடைந்து மிக விரைவில் உங்களோடு இணைவார். இது பற்றி கண்டிப்பாக அடுத்த பதிவில் போடுவீர்கள்

நம்பிக்கைகளுடன் வேலு

அருண் பிரசாத் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை... :(

அருண் பிரசாத் said...

@ யாதவன்
// வழமைபோல் சுப்பர்//
படிச்சிட்டு கமெண்ட் போடுங்க சார். கடுப்பு ஏத்தாதீங்க....

வித்யா said...

deep condolences:(

பார்வையாளன் said...

எப்போதும் வாய் விட்டு சிரிக்க வைக்கும் உங்கள் எழுத்து , முதல் முறையாக அழ வைத்து விட்டது..

”அர்ப்பணாவை "பத்திரமாக" இறுதி சடங்குகளுக்காக ஊருக்கு அனுப்பும் வரை உள்ள வேலைகளை மற்றவர்களுடன் சேர்ந்து கவனிக்கவா?”

என்ற வரி தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் விடுபட முடியவில்லை

சைவகொத்துப்பரோட்டா said...

மனம் கணக்கிறது, அர்ப்பணாவிற்கு அஞ்சலி.
அர்ச்சனா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பார்வையாளன் said...

எப்போதும் வாய் விட்டு சிரிக்க வைக்கும் உங்கள் எழுத்து , முதல் முறையாக அழ வைத்து விட்டது..

”அர்ப்பணாவை "பத்திரமாக" இறுதி சடங்குகளுக்காக ஊருக்கு அனுப்பும் வரை உள்ள வேலைகளை மற்றவர்களுடன் சேர்ந்து கவனிக்கவா?”

என்ற வரி தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் விடுபட முடியவில்லை

Vinoth said...

:(

Madhavan Srinivasagopalan said...

Very difficult even to imagine such things in life.. May God saves the heavily injured person....... & the other's soul be rested in peace.

Not able to write more..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நட்சத்திர பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்

சே.குமார் said...

ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா.
உங்கள் மனநிலை எப்படியிருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது.
பிரியப்பட்டவர்களை ஆண்டவன் விரைவில் அழைத்துக் கொள்வான் என்பார்கள்... ஆனால் இந்த வயதில் பிரிய நமக்கு மனமில்லையே... என்ன செய்வது?

அபர்ணாவின் ஆன்மா சாந்தியடையவும் அர்ச்சனா விரைவில் குணமாகவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வருத்தமாக இருக்கிறது. அனைவருக்கும் விரைவில் மன அமைதி கிடைக்கட்டும். அர்ச்சனா சீக்கிரமே உடல் நலம் பெறட்டும்!

பிரபு . எம் said...

ஃபோட்டோ பார்த்தபின் மனசு இன்னும் கஷ்டமா இருக்கு அக்கா...
நிதினை நினைச்சாலும் கஷ்டமாதான் இருக்கு...
அர்ப்பனாவின் உடலை அனுப்பிவைத்தோம்னு சொல்லாமல் இன்னும் அர்ப்பனாவை அனுப்பிவைத்தோம்னு நீங்க எழுதியிருக்கிறது நீங்க அவங்க மேல் வைத்திருந்த உயிரோட்டமான அன்பைப் பிரதிபலிக்குது அக்கா... என்ன சொல்லி ஆறுதல் சொல்லன்னு தெரியலக்கா.... பிரார்த்தனையைத் தொடருவதைத் தவிர வேறு வழியில்லை இது ஒரு டிஸாஸ்டர்...

ராஜகோபால் said...

பிரிவு கொடுக்கும் வலி கொடுமையானது.
என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

பிரியமுடன் பிரபு said...

உங்க பதிவுகள் எப்பவுமே சிரிக்க வைக்கும்
இப்ப கண்கலங்க வைத்துவிட்டது
சில இழப்புகளை வார்த்தையில் சொல்ல முடியாது

ஆழ்ந்த அனுதாபங்கள்.

வினோ said...

Very Very sorry to hear this..:( My Prayers for the speedy recovery....

ஹுஸைனம்மா said...

உங்க பதிவில் முதல்முறையா ஒரு சோகப் பதிவு; இதுவே கடைசியாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

வெட்டிப்பேச்சு said...

நாங்கள் சாகாமலே எங்களுக்கு சுடுகாட்டை காண்பித்து விட்டீர்கள்..

நெஞ்சு கனத்து விட்டது..

My sincere prayers.

செ.சரவணக்குமார் said...

நட்சத்திர வாழ்த்துகள் சொல்லலாமென்று வந்தேன் ஆனால் இடுகை கண்ணீரை வரவழைத்துவிட்டது. அர்ச்சனாவை நினைத்தால் தான் மிகவும் துயரமாக இருக்கிறது.

வெட்டிப்பேச்சு said...

அவர்களது பெற்றோரின் நிலையை நினைத்தால்...


மிகக் கொடுமை..மிகக் கொடுமை..

இனி இருந்தும் பிணமாய்த் திரிவர்..

அய்யோ..

venkat said...

அர்ப்பணாவின் ஆன்மா சாந்தியடையவும், அர்ச்சனா குணமடையவும் பிரார்த்திப்போம்!

sasibanuu said...

very very sad news...

Title is not good and repeating in so many place.... Pls change.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

♥ RomeO ♥ said...

ரொம்ப கஷ்டமா இருக்கு :(

NADESAN said...

எல்லாம் வல்ல இறையாற்றல் உங்களுக்கும் உங்கள் தோழிக்கும் துணையாக இருக்க வேண்டுகிறேன்
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

dr suneel krishnan said...

இந்த பாதிப்பில்ருந்து நீங்களும் உங்கள் நட்பு வட்டமும் விரைவில் வெளிவர வேண்டும் என்று வேண்டுகிறேன் , இத்தகைய இழப்புக்களின் வலி மிகவும் கொடியது ,அதை கடந்து வர இயல்பாக சில காலம் பிடிக்கும் அது வரை மனோ திடத்துடன் இருக்க வேண்டும் , மகளை படிக்க வந்த இடத்தில் இழந்த அக்குடும்பத்தின் வலி இன்னும் மோசமானது , அர்ச்சனா எழுந்து நடமாட கொஞ்சம் காலம் ஆகும் ,உங்களது சோகத்தை பகிர்ந்ததன் மூலம் சிறிதேனும் ஆறுதல் கிட்டும் என்று நம்புகிறேன்

பாலாஜி சங்கர் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஜெய்லானி said...

படிக்கும் போதே மனசு தாங்கல . பழகிய உங்களுக்கு....
என்ன சொல்றதுன்னே புரியல..:-((

ஜெயந்தி said...

என்ன சொல்றதுன்னே தெரியல. அந்தப் பிள்ளைகளின் படத்தைப் பார்த்தால் அழுகைதான் வருகிறது.

நிதினுக்கு சொல்லுங்கள் தெரியாமல் நடந்த விபத்து. மனதை தேற்றிக்கொள்ளச் சொல்லுங்கள். குற்ற உணர்வை அனுபவிப்பதைவிட வேறு கொடுமையான தண்டனைகள் இருக்க முடியாது. பாவம் அவர் அவருக்கு ஆறுதல் சொல்லுங்கள்.

ஹரிஸ் said...

:((..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அர்ச்சனா விரைவில் நலம்பெற என்னுடைய பிரார்த்தனைகள்.

கே.ரவிஷங்கர் said...

மனம் கனக்கிறது.

சங்கர் said...

ரொம்ப வருத்தமா இருக்குக்கா

Reddiyur said...

ரொம்ப வருத்தமாக இருக்கிறது... மனதை கனக்க வைத்து விட்டீர்கள்
..நிஜம்மாகவே உங்கள் நிலையு ம் நிதினின் நிலையும் மிக கடினம் தான்.
இறந்தபெண்ணுக்கு அந்த நொடி தான் வலியும் வேதனையும். இருப்பவர்களுக்கே வலியும் வேதனையும் தொடர்கிறது.. அனுபவித்தான்பா வலி தெரியும்.. நீங்க அனுபவித்த அந்த தருனங்களை நாங்களும் இப்போது அனுபவிக்கறோம்... இறைவனை பிரார்த்திப்போம்... ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தை சொன்னால் அந்த நேரத்தில் கூட்டு பிரார்த்தனை செய்யலாம்.. அதில் எனக்கு நம்பிக்கை அதிகம்...

என். உலகநாதன் said...

சித்ரா,

வாழ்த்து சொல்ல வந்தவுடன் கலங்கி போய் நிற்கிறேன்.

இதைப் போல நிறைய சம்பவங்களை என் வாழ்க்கையில் நான் பார்த்திருப்பதால் உங்கள் மனநிலை எனக்கு புரிகிறது.

ஆண்டவன் என்று ஒருவர் இருந்தால், வழக்கம் போல அவர் மேல்தான் எனக்கு கோபம் வருகிறது.

தைரியமாக இருங்கள். நண்பருக்கும் தைரியம் சொல்லுங்கள்.

சுசி said...

சித்ரா.. எப்டி ஆறுதல் சொல்றது.. என்ன சொல்றதுன்னு ஒண்ணுமே தெரியலைப்பா.. ஸ்தம்பிச்சுப் போய்ட்டேன்..

ரெண்டு பேர் முகத்தையும் சிரிப்பையும்.. கடவுளே..

அர்ச்சனா நலம் பெறவும், அர்ப்பணா ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.

dheva said...

தெரியல சித்ரா.......எனக்கு கண்டிப்பா தெரியல....


நான் என்ன கமெண்ட் போடுறதுன்ன்னு எனக்கு தெரியல சித்ரா....! எனது கண்கள் கலங்கியிருக்கின்றன....நெஞ்சம் பதறிக் கொண்டு இருக்கிறது.......ஓ வென்று கத்தி அழ வேண்டும் என்று தோன்றுகிறது...எனது உள் முனைப்பும் ரொம்ப ஷார்ப் ஆனது சித்ரா.....

உங்களின் சூழலை வாங்கிக் கொண்டேன்.....!!!!!!!!! உங்களால் எப்படி எழுத முடிந்தது என்றும் வியந்தேன்....எனக்குள் வாழ்க்கை பயணம் பற்றிய தெளிவுகள் இருந்தாலும் இந்த கணம் என்னுள் ஒரு ஆழ்ந்த அமைதியும் எதன் மீதோ மிக அதீத கோபமும் வருகிறது....எதன் மீது....????? தெரியவில்லை......

வாகனம் ஓட்டும் ஒவ்வொறூ கணமும் வாழ்க்கையின் மறுக்கமுடியாத ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கணம் என்ற நிறுவலை இந்த கட்டுரை மறைமுகமாக மெளனமாக போதிக்கிறது.

எல்லா வித முகங்களும் கொண்ட வாழ்க்கையின் கோர முகம் இது.....

அர்ப்பணாவின் ஆத்மா சந்தியடைய எனது பிரார்த்தனைகாஇயும்.....

அர்ச்சனா நன்றாக தேறி வந்து எல்லா செய்திகளையும் வாங்கிக் கொண்டு திடமாக வாழ்க்கையை தொடர என் வேண்டுதல்களையும்.....கடுமையான எனது பிரார்த்தனைகளை தினமும் தொடர்கிறேன்...சித்ரா....!!!!

நீங்களும் திடப்பட்டு இந்த சூழலில் இருந்து வெளிவர பிரார்த்திக்க்றேன்...!!!!!!!!

Nithu Bala said...

மனம் கனத்து விட்டது...அந்த பெற்றோரின் நிலை நினைத்து ரொம்பவும் கஷ்டமாக உள்ளது...அர்ப்பணாவின் ஆன்மா சாந்தியடையவும்,அர்ச்சனா விரைவில் உடல்நலம் தேறி வரவும் பிராத்திக்கிறேன்...சித்ரா, அன்பு தோழியை இழந்து தவிக்கும் உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்லுவது என்று புரியவில்லை...

Mrs.Menagasathia said...

பேஸ்புக்கில் படிக்கும் போதே மனம் கனத்துவிட்டது..இந்த பதிவு எழுதும்போதும் உங்க மனநிலை புறிகிறது..என்ன சொல்றதுன்னு தெரியவில்லை.கடவுள் உங்களுக்கு மனதைரியம் கொடுக்கவும்,அர்ச்சனா மிக விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்....

எப்பூடி.. said...

ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

சத்ரியன் said...

கொடுமையான நிகழ்வு.

மோகன் குமார் said...

உங்களிடமிருந்து வந்த இப்பதிவு வருந்த வைக்கிறது.

சேட்டைக்காரன் said...

நெருங்கியவர்களின் இழப்பு நிலைகுலைய வைத்து விடுகிறது. விபத்துக்கள் - வாழ்க்கையைத் தடம்புரள வைத்து விடுகின்றன. இறைவன் இறந்தவரின் ஆன்மாவுக்கு அமைதியையும், சிகிச்சை பெற்று வருகிறவர் விரைவில் குணமடைந்து இயல்புநிலைக்குத் திரும்பவும் அருள்புரிவான்!

இரவு வானம் said...

சாரி அக்கா, என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

ஜெரி ஈசானந்தன். said...

சித்ரா..பயங்கர அதிர்ச்சியாய் இருக்கிறதே,ஆன்ம சாந்திக்காய் பிரார்த்திக்கிறேன்.

angelin said...

very pathetic chitra.
you made me cry today.
i pray for archanas speedy recovery .i could understand your feelings.we shall pray together .

ராஜவம்சம் said...

ரொம்பவும் கஸ்டமான நிகழ்வு Facebook யில் பகிர்ந்தபோதே மனம் கலங்கியது .

தெய்வசுகந்தி said...

:((

வருண் said...

***எல்லாவற்றையும் கடந்து, என்னை திணற அடித்தது எது தெரியுமா? ஒரு நொடியில், அவசரப்பட்டு எடுத்த திருப்பத்தால், இந்த விபத்து ஏற்பட்டு விட்டதே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கும், நிதின். இவரும் எங்கள் நண்பர்.***


***நிதின் மற்றும் அவன் மனைவியின் மன நிலைகளை கண்டும் வருத்தப் படுவேன்.***

இவருடைய நிலைமைதான் ரொம்பப் பாவம்.

Sorry for asking this. தோழிகள் இருவரும் safety சீட் பெல்ட் போட்டு இருந்தார்களா? னு தெரியுமா உங்களுக்கு? There was one another accident happened to someone I know. A similar scenario. The couple seated in the front were wearing seat belt and so they survived just like nithin and his wife. Two people seated in the back seat did not wear seat belt. One died at the spot and the other one had a head injury and still not recovered yet. :(

உங்களுக்கும் உங்க தோழிகள் பெற்றோருக்கும் எப்படி ஆறுதல் சொல்றதுனு எனக்குத் தெரிலை. :(

ம.தி.சுதா said...

அக்கா பார்க்கவே நெஞ்சு கனக்கிறது.... ஆழ்ந்த அனுதாபங்களுடன் மற்ற சகோதரி மீண்டும் நலம் பெற கடவுளை வேண்டிக் கொள்கிறேன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

KParthasarathi said...

இதென்ன கொடுமை.படிக்கவே பயங்கரமாகவும் பரிதாபமாகவும் உள்ளதே.இதையெல்லாம் எப்படி நேரில் தாக்குபிடித்தீர்கள்.நினைக்கவே முடியவில்லையே. அர்ச்சனா சீக்கிரம் குணமாக வேண்டிகொள்வோம்.

அன்னு said...

கஷ்டமாகத்தான் இருக்கிறது சித்ராக்கா. இது ஒரு இக்கட்டான சூழ்நிலைதான். அவர்களையும் விட்டுக்கொடுக்க இயலாது. இவர்களையும் விட்டுவிட முடியாது. அனைவரின் மனதிலும் சாந்தி ஏற்படவும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிடவும் பிரார்த்திக்கிறேன். :(

அரசூரான் said...

Very sad to hear this. Hope all will get well soon.

மதுரை சரவணன் said...

மனம் கனக்கிறது. அர்ச்சனா குணமாக இறைவனை பிராத்திப்போம்... நீங்கள் தைரியமாக இருந்து , அவர்களூக்கு ஆறுதல் சொல்லுங்கள். அர்ச்சனாவுக்கு தைரியம் கொடுங்கள் , நம்பிக்கையான வார்த்தைகளை விதையுங்கள், அனைவரின் பிரார்த்தனையில் நிச்சயம் உடல் நலம் தேறி வருவார்...

பின்னோக்கி said...

என் ஆழ்ந்த அனுதாபங்கள். விபத்தில் சிக்கி மருத்துவமனையிலிருக்கும் அர்ச்சனா விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். உங்களுக்கு எப்படி பட்ட அதிர்ச்சி இருக்கும் என புரிகிறது. வருத்தங்கள்.

goma said...

அர்ச்சனா தூங்கி கொண்டு இருந்த போது, அவளையே லாங் ஷாட்டில் போட்டோ எடுத்து விட்டு, இதுதான் அர்ப்பணா என்று காட்டி விட்டாள். அந்த நேரத்தில், எங்கள் மனநிலை ..... ம்ம்ம்ம்..... எப்படி சொல்லி உங்களுக்கு புரிய வைப்பது?
இந்த வரிகள்,
இன்னமும் மனதை விட்டு நீங்காமல்,பிசைகிறது..

.

Thekkikattan|தெகா said...

very sad news! sorry to hear that. keep up the spirit!

Sethu said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் அனைவருக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் துணை செய்யும்.

Mahi_Granny said...

=(( அர்ச்சனா விரைவில் நலம்பெற என்னுடைய பிரார்த்தனைகள்.

Kanchi Suresh said...

Kangal kulamaga, manadhu valikka, idhayam padapadakka...yengalin azhndha varuthangal matrum seekkiram gunamaga iraivanai prathikkirom

NIZAMUDEEN said...

நகைச்சுவைப் பதிவு என்று எண்ணித்தான்
படிக்க வந்தேன். ஆனால், சோகத்தை
அல்லவா இந்தப் பதிவு கொண்டு வந்தது?
அபர்ணா-வின் ஆன்மா சாந்தியடைக!
அர்ச்சனா விரைவில் குணமடைய
பிரார்த்திக்கின்றேன்.
அர்ச்சனா எவ்வளவு விரைவில் தேறி
வருகிறாரோ, அந்த அளவு நீங்களும்
நிதினும் அர்ச்சனாவின் பெற்றோரும்
சோகத்திலிருந்து விரைந்து சகஜநிலை
அடைவீர்கள். நீங்களும் அனைவருக்கும்
ஆறுதல் சொல்லுங்கள்!

வானம்பாடிகள் said...

sorry to hear.

ஸாதிகா said...

மனதை பாரமாக்கி விட்டீர்கள் சித்ரா.அர்ப்பணாவின் குடும்பத்தினருக்கு இரைவன் பொறுமையைக்கொடுப்பானாக!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

தமிழ்மண நட்சத்திரப் பதிவருக்கு என் வாழ்த்துக்கள் . இந்த பதிவை வாசித்து முடித்ததும் ஒரு மிகப் பெரிய சோகம் இன்னும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது உள்ளத்தில் .

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மனம் மிகவும் தேவனைப்படுகிறது

Denzil said...

படிக்கவே கஷ்டமான செய்தி. நாங்க எல்லோரும் உங்களோட இருக்கோம், pray பண்ணுகிறோம்கிறங்கது உங்களுக்கு ஆறுதல் தரட்டும்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மனம் மிகவும் வேதனைப்படுகிறது. காலமானவருக்காக பிரார்த்திக்கிறேன். அர்ச்சனா மிக விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கொடுமைங்க.. :(

ஹேமா said...

மனம் கனக்கிறது சித்ரா.சொல்ல ஏதுமேயில்லை !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன சொல்றதுன்னு தெரியலை

முகுந்த் அம்மா said...

மனசு கனக்குது சித்ரா. அர்ச்சனா விரைவில் நலம்பெற என்னுடைய பிரார்த்தனைகள்.

வந்தியத்தேவன் said...

மனதைக் கனக்கச் செய்த நிகழ்வு. நிச்சயம் உங்கள் நிலையை நினைத்துப்பார்க்கவே மனது நோகின்றது. இந்த நேரத்தில் கடவுள் என்ற கருப்பொருளே கேள்விக்குறீயாக மாறுகின்றது.
அபர்ணாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.
அர்ச்சனா நலம் பெற்றுவர அதே இறைவனை வேண்டுகின்றேன்.

philosophy prabhakaran said...

ஒருவித தாவிப்பை ஏற்படுத்திவிட்டது... இரட்டையர்களை ஒருவர் இறந்துபோனால் மற்றவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Sorry to hear this incident.May God bless their family.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உயிரோட இருக்கற பொண்ண நினைச்சு ரொம்ப கவலையா இருக்கு.. Spinal cord injury :((((

சித்ரா.. நீங்க நார்மல்.. மனசத் தேத்திக்குங்க.. நிதின் க்கு ஆறுதலா இருங்க..

பித்தனின் வாக்கு said...

அமெரிக்காவில் ஒரு ஆண்டு ஒன்றுக்கு சாராசரியாக இருபது ஆயிரம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றார்கள் என்று செய்தி படிக்கும் போது வலிக்காத மனம், நம்மை சார்ந்தவர்களுக்கு விபத்து என்று அறியும் போது வேதனைப் படுகின்றது.எல்லாம் வல்ல கடவுள் அருளால் காலமும், காட்சிகளும் மாற பிரார்த்திக்கின்றேன்.

அறிவும், மனமும் ஒரு விபத்து நடக்கும் முன்னர் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும், அது இல்லாமல் நடந்து முடிந்த பின்னர் வேதனைப் பட்டு என்ன பயன்.

சீக்கிரம் இந்த் வலிகள் ஆற இறைவனை பிரார்த்திப்போம்.

Yoganathan.N said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனது ஆழ்ந்த அனுதாபங்கள். :(

ராமலக்ஷ்மி said...

முகப்புத்தகத்தில் இந்நிகழ்வைப் பற்றிய உங்கள் பகிர்வு பதற வைத்தது. இப்போது படங்களுடன் பார்க்கையில் மனம் இன்னும் வேதனையடைகிறது. அர்ச்சனாவை எப்படி சமாதனம் செய்வீர்களோ? உங்களுக்கும் நண்பர்களுக்கும் துயரிலிருந்து மீண்டு வரும் சக்தியை இறைவன் அருள்வாராக. அர்ப்பனாவின் ஆத்ம சாந்திக்கும் பிரார்த்திக்கிறேன்.

பதிவுலகில் பாபு said...

மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சுங்க..

Vengi said...

Its too sad

மதுரை பாண்டி said...

Kangalil kannerudan padithu mudithen.. romba varuthamaga ulladhu..

விக்னேஷ்வரி said...

அழுகையா வருது. உங்க மனநிலை எவ்வளவு மோசமாக இருக்கும். ஆறுதல் கொள்ளுங்கள் தோழி.

எம் அப்துல் காதர் said...

எங்களிடம் சொன்னதே உங்களுக்கு பாதி பாரம் குறைந்திருக்கும்.
இதை ரொம்ப ஃபீல் பண்ணி மனதில் ஏத்திடாதீங்க. மனதை ரிலாக்ஸ் செய்ய முன்பு போல் பதிவுகளை வந்து படித்துக் கொண்டிருங்க. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் சரியாகி விடும். உணர்வுகளும் காயங்களும் எப்போதுமே நீர் குமிழி போல் தான்.

//சராசரி உணர்வுகள் கூட வெளிநாடுகளுக்கு வரும் போது, தொலைத்து விடுகிறோமோ? //

இது எல்லோரையும் உணர வைக்கிற வரிகள்.

நந்தா ஆண்டாள்மகன் said...

மிகுந்த வேதனையாக உள்ளது....மனம் வேதனையில் உழல்கிறது...

தஞ்சாவூரான் said...

:((((

க.பாலாசி said...

வருத்தம் தரத்தக்க செய்தி.. கேக்கவே இவ்ளோ கஷ்டமாயிருக்கே. உங்களுக்கு எப்படியிருக்குமென்று புரிகிறது. மனதை தேற்றுங்கள். அபர்ணாவின் ஆத்மா சாந்தியடையட்டும். அர்ச்சனா கூடியவிரையில் நலம்பெறட்டும். பிரார்த்திப்போம்.

என்னது நானு யாரா? said...

சித்ரா! ஆழ்ந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள்.

என்ன சொல்வது! ஆழ்ந்த அனுதாபங்களை சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அதெல்லாம் வெறும் சடங்காகத்தானே ஆகிப்போகும்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். எப்போது ஒரு விபத்து சம்பவிக்க வேண்டும் என்று இருக்கிறதோ அப்போது அறிவு குன்றி ஒரு மூர்கத் தனம் மனதுக்குள் வந்துவிடுகிறது. எல்லா செயல்களும் விபத்து நடப்பதை நோக்கியே நடக்கும் அந்த கணங்கள். பேய்களின் கணங்கள்.

நண்பர் நிதின் அவருடைய மனைவி - இருவரின் மனநிலையையும் புரிந்துக்கொள்ள முடிகின்றது. யோகா மற்றும் தியான வகுப்புகளுக்கு போக சொல்லுங்கள். காலம் அவர்களின் மன இரணங்களை ஆற்றும்.

இரட்டையர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த மன ஆறுதல்கள் தேவை. கூடுமான வரை மிகவும் மன முதிர்ச்சியோடு செயல்களை செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலை தான் நம்முடைய மன முதிர்ச்சியை வளர்க்கிறது. வயதான அந்த பெற்றோர்களும் சகஜ நிலை திரும்ப என்னவிதமான உதவிகள் தேவையோ கண்டிப்பாக மிகுந்த மனபக்குவத்துடன் செய்வீர்கள் என்றே எனது நம்பிக்கை.

நிதானம் தவறும் ஒவ்வொரு கனமும் விபத்து தான். இதனை நன்கு புரியவைத்து விட்டது உங்களின் பதிவு. நிதானம் கைக்கூட மனிதர்களுக்கு தியானமும், யோகப்பயிற்சிகளும் உதவும். இந்த ஆலோசனையை மிகவும் கூர்ந்து கவனியுங்கள் சித்ரா! ஏதோ சொன்னேன் என்று இந்த ஆலோசனையை தள்ளிவிடாதீர்கள். மன அமைதி இந்த தருணத்தில் மிக மிக அனைவருக்கும் முக்கியமானது.

உங்கள் அனைவருக்கும் மன மலர்ச்சி திரும்பி வரவேண்டும் என்று அந்த பரம்பொருளை பார்த்து பிராத்திக்கின்றேன்.

அன்பரசன் said...

வருத்தமாயிருக்கிறது.

அர்ச்சனா பூரண குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நாய்க்குட்டி மனசு said...

சித்ரா ஏதாவது சீரியஸ் ஆக எழுதலாமே எப்போவுமே விளையாட்டு தானா? என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இந்த 'சீரியஸ்' மனதை கனக்கசெய்கிறது.

vanathy said...

படிக்கவே கஷ்டமா இருக்கு. இதை தாங்கும் சக்தியை ஆண்டவன் அவரின் குடும்பத்திற்கு அருள்வாராக.

கிரி said...

:-( வருத்தம் தான் சித்ரா.. என்ன செய்வது? மனதை தேற்றிக்கொண்டு ஆக வேண்டியதை கவனியுங்கள்.

இதுவும் கடந்து போகும்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

என்ன சொல்ல. எப்படி ஆறுதல் சொல்ல! கண்டவர் விண்டிலார் இருப்பவர் தீர்க்காயுள் பெற எல்லாம் வல்ல இறைமையை வேண்டுகிறேன்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

என்ன சொல்ல. எப்படி ஆறுதல் சொல்ல! கண்டவர் விண்டிலார் இருப்பவர் தீர்க்காயுள் பெற எல்லாம் வல்ல இறைமையை வேண்டுகிறேன்.

மோகன்ஜி said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை சித்ரா! உங்கள் வேதனையில் பங்கு கொள்கிறோம். கர்த்தர் உங்களுக்கு அமைதியை தரட்டும் சகோதரி!

kannan said...

இருவரும், என் வீட்டில் இருந்து கொண்டு குற்ற உணர்வுடன் அழுது கொண்டு இருந்தார்கள். முதலில், அவன் மேல் எனக்கு கோபம் வராமல் இல்லை. நானும் சராசரி பொண்ணுதானே! ஆனால், சில நிமிடங்களிலேயே பார்க்க பாவமாகவும் ஆகி விட்டது. என்ன ஆறுதல் சொல்வது என்றும் தெரியாமல், எப்படி எனது உணர்வுகளை மறைப்பது என்றும் தெரியாமல், அர்ச்சனா - அர்ப்பணா பற்றிய வருத்தங்களையும் காட்ட முடியாமல் .............. அப்பப்பா...... என்ன கொடுமையான தருணங்கள் தெரியுமா? உண்மை தான் ...நிதின் நிலையை தான் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது ....திருமணமாகி.... வாழ்கையை ..அனுபவிக்க வேண்டிய தருணத்தில் .... உண்மை தான் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது தான் ... எல்லோரது மனமும் சாந்தியடைய ஆண்டவனிடம் வேண்டிகொள்கிறேன் .....தச்சை கண்ணன்

malgudi said...

நாங்களும் ஒருநாள் இறக்க வேண்டும் என்று தெரிந்திருந்தும்,நாம் நேசிக்கும் ஆத்மா எம்மை விட்டுப் பிரிந்து செல்லும் போது ஏற்ப்படும் உணர்வு கோரவலி.
நண்பியான உங்களுக்கே இந்த உணர்வென்றால் அந்த உடன்பிறப்பு,தாய் தந்தையை நினைக்கும் போது மனம் கனக்கின்றது.

நாஸ்திகம் பேசும் என்னால் சொல்லக்கூடியது இதுவும் கடந்து போகும்.
:-(

kayal said...

romba kashtamaga iruku akka, sila unarvugalai express panna mudiyaadhu, adhu evlo kashtamnu theriyum..idhula yaarukume samadhaanam solla mudiyaadhu chitu

Anonymous said...

மனதை என்னவோ செய்கிறது :(

Anonymous said...

இந்தப் பதிவில் நகைச்சுவை கலந்திருக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது அக்கா.. :(

Sethu said...

Sorry to hear.

http://www.hindu.com/2010/11/14/stories/2010111459530100.htm

திருவாரூரிலிருந்து சரவணன் said...

மூன்று நாட்களாக இணைய இணைப்பு எனக்கு கிடைக்க வில்லை. அதனால் எந்த விவரமும் தெரியவில்லை. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கல்லூரியில் படித்த மாணவி என் கண் எதிரிலேயே லாயின் சக்கரத்தில் சிக்கியதை பார்த்தேன். பதினைத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. அந்த மன பாரம் குறைய பல மாதங்கள் ஆனது. இப்போது உங்கள் பதிவைப் படித்ததும் அதை விட அதிக துயரமாக உணருகிறேன். சாலை விபத்தின் கோர முகம் ....இதை பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

Anonymous said...

படிக்கும்போதே மனசு பதறுது சித்ராக்கா :( ...

அர்ச்சனா விரைவில் நலம்பெற என்னுடைய பிரார்த்தனைகள்

Raja said...

இரவில் தூங்கும் முன்
சிரித்து விட்டு தூங்கலாமென்று எண்ணி
வெட்டிபேச்சினை படிக்க ஆரம்பித்தேன்.
படிக்க படிக்க மனம் கனத்து போனது
தூக்கம் கண்களிலிருந்து அறுந்து போனது
ஆழ்ந்த அனுதாபங்கள்.....

ரிஷபன் said...

மனசுக்குள் என்னவோ செய்கிறது.. நம்மால் தடுக்க முடியாதவற்றில் குமுறுகிற தருணங்கள்..

Sunitha said...

இந்த பதிவு படித்து மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.பாவம் அர்ப்பணா வாழ்க்கை பற்றி எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்.

தமிழ்க் காதலன். said...

தாமதத்திற்கு வருந்துகிறேன். இந்த சூழல் எவருக்கும் வரக் கூடாது. இரண்டு பக்கம் அடி வாங்கும் மத்தளம் போல் உங்கள் நிலையை சொல்லி இருக்கிறீர்கள். ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன். அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

அமுதா said...

ஆழ்ந்த வருத்தங்கள் சித்ரா. அர்ச்சனா விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள். வாழ்க்கையை ஒரு நொடியில் காலம் புரட்டி விடுகிறது. ஒன்றும் செய்ய இயலா பார்வையாளர்களாகத் தான் பல வேளைகளில் நாம் :-(