Friday, November 26, 2010

(அமெரிக்காவில்) சோளம் விதைக்கையிலே......

சென்ற மாதம், நிறைய இடங்களில் குழந்தைகளுக்கென Fall Festival - (Autumn Festival)  நடந்தது. 

எங்கள் ஊரிலும் நடந்தது.  இங்கே  உள்ள University இல் இருக்கும் விவசாய கல்லூரி டிபார்ட்மன்ட் பேராசிரியர்களும், மாணவர்களும்,   அவர்களது research மற்றும் studies க்காக உள்ள  சோள காட்டில் இந்த விழாவை  நடத்தினார்கள்.

முதலில், கார் பார்க் செய்ததும்,  எல்லோரையும்  Farm area வுக்கு அழைத்து செல்ல,  tractors வரிசையாக நின்று கொண்டு இருந்தன. அவற்றின் பின்னால் வைக்கோல் கட்டுகளை வரிசையாக அடுக்கி வைத்து இருக்கைகளாக (seats ) அமைத்து வைக்கப்பட்டு இருந்தன.  ஏறி கொண்டோம்.  வித்தியாசமான அனுபவம்.  சேர வேண்டிய இடத்தை அடைந்ததும்,  முதலில் எங்களை வரவேற்றது, பால் பண்ணை துறை.  பெரிய பண்ணையில் மிஷின் மூலம் மொத்தமாக கறக்கும் வண்ணம் விளக்கப்பட்டது. ஆனால், தனிப்பட்ட வீடுகளில், இன்னும் பசு நேசரின் "செண்பகமே .... செண்பகமே...." முறைதான்.   மழலை பட்டாளத்துக்கு தாங்களும் செய்து பார்க்க ஆசை. அதற்காகவே, ஒரு மரத்தில்,  பசு (wooden milking cow) போல செய்து வைத்து இருந்தார்கள். அதனுள், பால் மாதிரி வெள்ளையாக தண்ணீர் வேறு.  Latex (ஒரு வகை ரப்பர்) மடுவில் இருந்து "பால்" கறந்து மகிழ்ந்தார்கள். நல்ல வேளை, மரப்பசு. குழந்தைகள் வந்த வரத்துக்கு,  நிஜ பசு என்றால்,  விஜயகாந்த் கையில் அகப்பட்ட வில்லன் மாதிரி துவம்சம் ஆக்கப் பட்டு இருக்கும். ஹா,ஹா,ஹா,.....


 அது முடிந்ததும்,  அடுத்து எங்களை  பண்ணை வீடுகளில் (Farm House) வளர்க்க முடிகின்ற கால்நடைகளையும் பறவைகளையும் காண்பதற்கு அழைத்து சென்றார்கள். ஆடு, மாடு, பன்றி, வான் கோழி, கோழி, கழுதை, குதிரை, லாமா , முயல் என்று பட்டியல் நீண்டது. 


நிறைய படங்கள் இருக்கின்றன. ........ பதிவின் நீளம் கருதி போட இயலவில்லை.

அப்புறம்,  miniature குதிரையில் ஏறி, குழந்தைகளை ஒரு ராட்டினம் மாதிரி அழைத்து சென்றார்கள்.  ஒரு கம்பத்தை சுற்றி,  நான்கைந்து குட்டி குதிரைகள் கட்டப்பட்டு இருந்தன. குழந்தைகளை வைத்து ராட்டினம் மாதிரி சுற்றி சுற்றி வர செய்து இறக்கினார்கள்.  எனக்கு என்னமோ நம்ம ஊரு செக்கு மாடு மாதிரி இருந்தது.


அதன் பின்,  சாக்குத் துணி  வைத்து சறுக்கி வைக்கோல் போருக்குள் விழுந்து, குழந்தைகள் போட்ட ஆட்டம்  இருக்கிறதே...... சூப்பர். எங்கள் குழந்தைகளை காரணம் காட்டி, அவர்களுக்குத்  துணைக்கு செல்வது போல நாங்களும் அவர்களுடன்  சறுக்கி கொண்டோம். ஹி,ஹி,ஹி,ஹி.....
வைக்கோல் போருக்குள் விளையாட்டு: 
 நான் ரசித்து பார்த்தது, மண் குவியல் போல நன்கு காய்ந்த முத்தி போன சோளத்தை (corn) ஒரு இடத்தில் பரப்பி வைத்து இருந்தார்கள். அதற்குள், குழந்தைகள் குதித்து - தங்கள் கை கால்களை புதைத்து - விளையாடியதை பார்த்தது -  ஒரு குதூகல கவிதை.

Corn Maze:

அப்புறம்,  ஆறு  அடிகளுக்கு மேலே வளர்ந்து இருந்த சோளகாட்டுக்குள், ஒரு பக்கமாக நுழைந்து வழி கண்டு பிடித்து, மறு பக்கமாக வர வேண்டும்.  தவறான வழியில் திரும்பி விட்டால், சுற்றி சுற்றி சோளக்காட்டுகுள்ளேயே வந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.  ஒரு இடத்தில், உயரே ஒரு மேடை அமைத்து வைத்து இருந்தார்கள். அதில் ஏறி பார்த்தால்,  அந்த Corn Maze பாதை, எந்த வடிவத்தில் அழகாக அமைக்கப் பட்டு இருக்கிறது என்று பார்க்க முடிந்தது.

காலியான Barrels வைத்து குழந்தைகளுக்கென ஒரு சின்ன ரயில் வண்டி:


இப்படியாக பல விஷயங்கள்.   ...........  உண்மையில், அன்று என் குழந்தைகளை விட அதிகம் என்ஜாய் செய்தது நான்தான். 

வந்து இருந்த மக்கள்,  தங்கள் வீடுகளில், மரம் மற்றும் செடிகள் வளர்ப்பதில் உள்ள சந்தேகங்களை  அங்கே இருந்த விவசாய துறை மாணவர்களிடம் இலவசமாக கேட்டு தெளிவு பெற்று கொள்ள ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.  அந்த மாணவர்களுடன் பேச்சு கொடுத்தோம்.  

"நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு கிராமப்புற குழந்தைகளுக்கு கிடைக்கும் எத்தனையோ மகிழ்ச்சியான அனுபவங்கள்  கிடைக்காமல் போய் விடுகின்றன.  எல்லாமே வீடியோ கேம்ஸ் மற்றும் டிவி என்ற வட்டத்தில் முடிந்து விடுவதில்லை.  இந்த மாதிரி திருவிழாக்களில்,   அவர்களக்கு சில வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம்.
அவர்களை வயல் வெளிகளுக்கு வர வைக்கிறோம்.  சிறு வயதில் இருந்தே இந்த வாழ்க்கையில் ஈடுபாடும் - ஒரு ஈர்ப்பும் - வர உதவி விட்டால்,  இன்று வந்த குழந்தைகளில் ஒரு சிலராவது விவசாய வாழ்க்கைக்கு வர ஆசைப்படுவார்கள்.  அந்த துறையில் படித்து, நிறைய சாதிக்க விரும்புவார்கள்.


மேலும், இன்று குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்கும் அவர்களது வழக்கமான நகர வாழ்க்கையில் இருந்து ஒரு நல்ல மாறுதல்.  பலர், இங்கு வந்து செலவிடும் நேரங்களில் மீண்டும் குழந்தைகளாக மாறி விடுகிறார்கள்.
அமெரிக்கர்களில்,  சிலர் தங்களது ஐம்பதாவது வயதிலேயே தங்களது வேலைகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டு,  கிராமப் புறங்களுக்கு வந்து விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்பு,  முட்டை பண்ணை அல்லது பால் பண்ணையில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள்.  அரசாங்கமும்,  அப்படி வருபவர்களை நன்கு ஊக்குவிக்கிறது," என்றார்கள். 

விவசாய துறை மாணவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் மேலும் கூடியது.  அவர்கள், பொறுப்புடன் சிறு குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருந்து காட்டுவதை பாராட்டினோம்.  மேலை நாட்டு கலாச்சாரம் என்று எதை எதையோ பின் பற்றுபவர்கள், என்றுதான் இந்த மாதிரி விஷயங்களையும்  பின் பற்றுவார்களோ?

 படங்கள்:  கூகுள்  - நன்றி.

62 comments:

LK said...

நல்லதை எல்லாம் நாங்க எடுத்துக்க மாட்டோம்.
அந்த maze போட்டோ சூப்பர்

சௌந்தர் said...

இப்படியாக பல விஷயங்கள். ........... உண்மையில், அன்று என் குழந்தைகளை விட அதிகம் என்ஜாய் செய்தது நான்தான்.////

உங்க நேர்மை எனக்கு பிடித்து இருக்கு ம்ம்ம்ம் நல்லா விளையாடுங்கள்

வெறும்பய said...

நல்லா பகிர்வு சகோதரி.. படங்கள் அருமை..

சங்கரியின் செய்திகள்.. said...

ஆகா, நல்லா எஞசாய் பண்ணுங்க......

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
விஜயகாந்த் கையில் அகப்பட்ட வில்லன் மாதிரி துவம்சம் ஆக்கப் பட்டு இருக்கும்
//
கையில் இல்ல காலில் அகப்பட்ட வில்லன்.....
படங்கள் எல்லாம் சூப்பர்..............

அமுதா கிருஷ்ணா said...

சோளக்காடு அருமையா இருக்கு. இந்த மாதிரி இடத்திற்கு செல்லும் போது நமக்கும் வயதே தெரியாது.

ஜீ... said...

super! :)nice fotos!
//விஜயகாந்த் கையில் அகப்பட்ட வில்லன் மாதிரி துவம்சம் ஆக்கப் பட்டு இருக்கும். ஹா,ஹா,ஹா,....//
அய்யய்யோ! இங்கயும் விஜயகாந்தா!! :))

கலாநேசன் said...

நல்ல பதிவு.

வார்த்தை said...

அமெரிக்கர்களின் பாணியே வித்தியாசமனது தான்.

திரவிய நடராஜன் said...

இங்க விவசாயம் செய்கிறவனை நாட்டுப்புறத்தான்னு நக்கல் பண்ணிட்டு அமெரிக்காவுல போய் இப்படியா?

மண்டையன் said...

"நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு கிராமப்புற குழந்தைகளுக்கு கிடைக்கும் எத்தனையோ மகிழ்ச்சியான அனுபவங்கள் கிடைக்காமல் போய் விடுகின்றன///
உண்மைதான் இங்கு வெறும் தீம் பார்க் தான் குழந்தைகள் உலகம் ஆகிவிட்டது.
இங்கு விவசாயிக்கு மரியாதை இல்லை.விவசாயத்தையும் ஊக்குவிப்பதில்லை.
வல்லரசாகனும்னு ஆசை மட்டும் இருக்கு.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. கடைசியில் வெளிப்படுத்தியிருக்கும் ஆதங்கம் சிந்திக்க அனைவரையும் வைக்கும்.

// குழந்தைகள் வந்த வரத்துக்கு, //

நம் ஊரில் அடிக்கடி கேட்கிற வார்த்தைப் பிரயோகம்:)!

சைவகொத்துப்பரோட்டா said...

//மேலை நாட்டு கலாச்சாரம் என்று எதை எதையோ பின் பற்றுபவர்கள், என்றுதான் இந்த மாதிரி விஷயங்களையும் பின் பற்றுவார்களோ?//

அதானே!

ராஜ நடராஜன் said...

சோளம் விதைக்கையிலே சோளம் விளையாட போன பையா...படம் அழகு.

நம்ம முப்பாட்டன்களும் சின்ன வயசில நெல்லு விதைக்குள்ள ஒரு காலத்தில் இப்படி விளையாடியிருப்பாங்களோ?ஏன்னா எனக்கே செடில கம்பு திருடி தின்ன அனுபவம் இருக்குது:)

சசிகுமார் said...

//பெரிய பண்ணையில் மிஷின் மூலம் மொத்தமாக கறக்கும் வண்ணம் விளக்கப்பட்டது. //

இது எப்படிக்கா முடியும். ஆச்சரியமாக இருக்கு

ஹரிஸ் said...

படங்களும் தகவலும் அருமை..

என்னது நானு யாரா? said...

சோளம் விதைக்கயிலே சொல்லிப்புட்டு போன புள்ளே,

சோளம் வெளஞ்சு காத்துக்கிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு...


இப்படியாரும் பாடலியோ அங்கே! அப்படி பாடி இருந்தா இன்னமும் பிராமாதமா இருந்திருக்கும் இல்ல சித்ரா?

சூப்பரோ இருந்ததுங்க உங்க அனுபவம் படிக்கையிலே!

It's good to see that you have returned to normalcy! :-))

இம்சைஅரசன் பாபு.. said...

போட்டோஸ் எல்லாம் சூப்பர் ..........
இங்கேயும் இந்த விழிப்புணர்வு தேவை

☀நான் ஆதவன்☀ said...

வாவ்! சூப்பர் பகிர்வு

அன்பரசன் said...

பதிவு அருமை.
சோளக்காட்டுக்கும் எனக்குமான தொடர்பு 12 வருடங்கள்.
பழச ஞாபகப்படுத்திட்டீங்களே!

சிநேகிதன் அக்பர் said...

போட்டோக்கள் அனைத்தும் கண்ணில் ஒற்றிக்கொள்வது போல் இருக்கிறது.

அந்த மாணவர்களின் ஈடுபாடு பாராட்டுக்குரியது.

கடைசியா வாச்சிங்க பாருங்க அது செம பஞ்ச். :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் பையன்,இந்த படத்தைப் பார்த்துட்டு.. இப்பவே அங்க போனும்ன்னு அடம்..:)

சசிகுமார் said...

அக்கா நான் கேட்டதற்காக தங்களின் நேரத்தை ஒதுக்கி வீடியோவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. வீடியோவை கண்டு ரசித்தேன் ஆச்சரியமாக இருந்தது

Balaji saravana said...

நல்ல பதிவு சித்ராக்கா..
படங்களும் அருமை :)

Jaleela Kamal said...

ரொம்் நல்ல இருக்கு சித்ரா அங்குள்ள வ்யல்வெளிகளை னீங்க எல்லாம் பதிவில் போட்ட்டாதான்ட் பார்க்கமுடியும்.
ஐ சாக்கு முட்டை்ோடு வ்வை்்கோலில் சருக்கினீஙக்ளா. எ்க்கும் ரொம்ப ப்ிக்கும்.

ஆமினா said...

நல்ல பகிர்வு!

சூப்பர்!

படங்கள் அருமை

சி.பி.செந்தில்குமார் said...

கட்டுரை நெஞ்சில் நின்றது.படங்கள் கண்ணில் நின்றது.கருத்து மனதை வென்றது.

Gayathri's Cook Spot said...

Nice snaps. Post arumai.

Madhavan Srinivasagopalan said...

//"நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு கிராமப்புற குழந்தைகளுக்கு கிடைக்கும் எத்தனையோ மகிழ்ச்சியான அனுபவங்கள் கிடைக்காமல் போய் விடுகின்றன. எல்லாமே வீடியோ கேம்ஸ் மற்றும் டிவி என்ற வட்டத்தில் முடிந்து விடுவதில்லை. இந்த மாதிரி திருவிழாக்களில், அவர்களக்கு சில வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம்.
அவர்களை வயல் வெளிகளுக்கு வர வைக்கிறோம். சிறு வயதில் இருந்தே இந்த வாழ்க்கையில் ஈடுபாடும் - ஒரு ஈர்ப்பும் - வர உதவி விட்டால், இன்று வந்த குழந்தைகளில் ஒரு சிலராவது விவசாய வாழ்க்கைக்கு வர ஆசைப்படுவார்கள். அந்த துறையில் படித்து, நிறைய சாதிக்க விரும்புவார்கள்.//

முற்றிலும் உண்மை..

கிறுக்கன் said...

அருமையான பதிவுங்க!!!!

அவர்கள் இயற்கையில் இன்பந்தேட நாமோ
செயற்கையில் செழிப்பை தேடுகிறோம்.

-
கிறுக்கன்

ஆனந்தி.. said...

//உண்மையில், அன்று என் குழந்தைகளை விட அதிகம் என்ஜாய் செய்தது நான்தான்.//
சித்ரா...jealous with you....)))) ..உண்மையில் படிக்க படிக்க செம பொறமை ஆய்டுச்சு...))))

Prasanna said...

Superb experience :)

வினோ said...

அருமை சித்ரா... சூப்பர்...படங்கள் அருமை...

இளங்கோ said...

//அன்று என் குழந்தைகளை விட அதிகம் என்ஜாய் செய்தது நான்தான்.//
we too enjoy :).
Thank you for sharing.

Jay said...

wow..very informative n interesting...Thanx for sharing Chitra..Enjoy n have fun..:)
Tasty Appetite

மோகன் குமார் said...

பகிர்வு அருமை.Selected Photoes are also good.

மாதேவி said...

ரசனையான பதிவு.நேரில் பார்ப்பது போல இருக்கின்றன படங்கள்.

KANA VARO said...

படங்களுடன் பகிர்வு அருமை..

VELU.G said...

//சிலர் தங்களது ஐம்பதாவது வயதிலேயே தங்களது வேலைகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டு, கிராமப் புறங்களுக்கு வந்து விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்பு, முட்டை பண்ணை அல்லது பால் பண்ணையில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள். அரசாங்கமும், அப்படி வருபவர்களை நன்கு ஊக்குவிக்கிறது," என்றார்கள்.
//

நல்ல விஷயமாக இருக்கிறதே நம் ஊரில் அந்த மாதிரி வருமா?.

சாமக்கோடங்கி said...

//படங்கள்: கூகுள் - நன்றி. //

அப்ப நீங்க எடுக்கலியா...???

இருந்தாலும் பதிவு சூப்பர்..

கையில் சோளம் வாரி இறைப்பது போன்ற ஒரு படம் கவிதையாய் பேசுகிறது..

கே.ஆர்.பி.செந்தில் said...

நானும் என் பிள்ளைகளை அழைத்து சென்று விவசாயம் பற்றி சொல்லிகொடுக்கலாம் என நினைத்தால் பசங்களின் ஒவ்வொரு லீவுக்கும் நான் சொல்லிவச்சா மாதிரி வெளிநாடு போகிறேன் ( ஆணி ) .. இந்த வருடம் பொங்கலுக்கு அழைத்து போகணும்...

சாமக்கோடங்கி said...

//நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு கிராமப்புற குழந்தைகளுக்கு கிடைக்கும் எத்தனையோ மகிழ்ச்சியான அனுபவங்கள் கிடைக்காமல் போய் விடுகின்றன. //
இன்று ஆனைமலை பகுதியில் இருந்த ஒரு ஐடிஐ சென்று வந்தேன். அந்த மாணவர்களுடன் உரையாடும்போது எனக்குத் தோன்றியது, நகரப் பகுதிகளில் கிடைக்கும் கல்வித்தரமும், பயிற்சிகளும் இந்தக் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை என்று..

இக்கரைக்கு அக்கரைப் பச்சை தானோ..

venkat said...

//மேலை நாட்டு கலாச்சாரம் என்று எதை எதையோ பின் பற்றுபவர்கள், என்றுதான் இந்த மாதிரி விஷயங்களையும் பின் பற்றுவார்களோ?\\

சிந்திகவேண்டிய கேள்வி.

goma said...

maze amazing.....

இரவு வானம் said...

இப்படி எல்லாம் படத்தையும், பதிவையும் போட்டா யாரா இருந்தாலும் அமெரிக்கா போகனும்னு ஆசை வரும், எனக்கும்தான் ஒரு விசா ஏற்பாடு பண்ணுங்க மேடம்

பிரபு . எம் said...

//உண்மையில், அன்று என் குழந்தைகளை விட அதிகம் என்ஜாய் செய்தது நான்தான்.//

நாங்களும்தான்க்கா.... சில மணி நேரங்கள் கவலை மறந்து குழந்தையாக வாழ்ந்த அனுபவம் கிடைத்தது..
அற்புதமான பதிவு.... நன்றிக்கா :)

dineshkumar said...

சோளக்காட்டு
போம்மையாகி
படித்தேன்........

அக்கா

பித்தனின் வாக்கு said...

அட நம்மாளுங்க, அவன் கிட்ட இருக்க நல்ல பழக்கம் எல்லாம் பழக மாட்டாங்க. நல்ல படங்களுடன் அருமையான பதிவு. சின்ன வயதில் எங்க மாமா வீட்டில் இது போல ஒரு ரூம் நிறைய உடைக்காத வேர்க்கடலை கொட்டி வைத்து இருப்பார்கள், அதுக்குள்ள புகுந்து அந்த பையன் போல விளையாடியது ஞாபகம் வருது, அப்படியே கொசுறுவாக மாமா மகளுடன் வேர்க்கடலைகளுடன் கைகோர்த்து விளையாடி முத்தமிட்டது நினைக்க வைத்து விட்டது. நன்றி சித்ரா.

பித்தனின் வாக்கு said...

சோளக்காட்டைப் போட்டு எனக்கு ஒரு காமடியான நிகழ்வை ஞாபகப் படுத்தி விட்டாய், சோளக்காட்டில் பேய் என்ற பதிவு விரைவில் வரும். நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா பகிர்வு

பார்வையாளன் said...

மக்கள் நாயகன் ராமராஜன் படம் பார்த்த எஃபெக்ட்

Sunitha said...

என்னை விளையாட கூட்டிட்டு போகலை..............

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Priya's Feast said...

Unga pathivugal super....antha twins pathina post,appadiye norugiten,akka...

தெய்வசுகந்தி said...

நல்ல பகிர்வு!

GEETHA ACHAL said...

அருமை..சூப்பரோ சூப்பர்ப்...

நாங்களும் இங்கு இதே மாதிரி ஒரு இடத்திற்கு சென்றோம்...

அங்கேயும் இதே மாதிரி Milking the cow இருந்தது...அக்ஷ்தா குட்டியும் பால் கரந்தாள்...ஆனா அது உண்மையான பசு...முதலில் நான் பய்ந்தேன்..அப்பறம் சரியாகிவிட்டது..

cheena (சீனா) said...

சூப்பர் இடுகை - அனுபவிச்சு எழுதுனதாக்கும் - பலே பலே

ஜெயந்தி said...

அவங்க விவசாயத்துக்கு எப்படி மரியாதை கொடுக்கறாங்க. குழந்தைகளுக்கே விவசாயத்தின் மீது மரியாதையான எண்ணம் வர வைக்கிறார்கள். ரொம்ப நல்ல விசயம்.

Nithu Bala said...

Nalla pathivu Chitra..padankal arumai..vijayakanth kaila sikkina villan matiri..hahahah..

asiya omar said...

அருமையான பகிர்வு,சிறு வயதில் அறுப்புகளத்தில் வைக்கோற்படையில் விழுந்து புரண்டதை நினைவு படுத்தி,என் கல்லூரி வாழ்க்கையும் நினைவிற்கு வந்தது.dairy farming and animal husbandary course நினைவு வேறு.சூப்பர்.

DrPKandaswamyPhD said...

படங்களை நீங்கள் எடுக்கவில்லையா?

Chitra said...

நான் எடுத்த படங்கள், இன்னும் நன்றாக வந்து இருந்தது. ஆனால், அதில் என் மகளின் தோழிகளும் இருந்தார்கள். அவர்கள் பெற்றோர்களின் சம்மதம் வாங்காமல் எனக்கு பதிவில் அவர்களின் படங்களை போட விருப்பம் இல்லை. அதனால், அதே மாதிரி படங்களை ஒத்து போனதை தேடி போட்டு இருக்கிறேன்.

DrPKandaswamyPhD said...

ரொம்ப நன்றிங்க உங்க பதிலுக்கு.