ஏதாவதொரு சினிமாவை விமர்சிக்கலாமா என்று வெட்டியாக சிந்தித்து கொண்டிருந்த போது, சினிமாவை அல்ல, சினிமா விமர்சனங்களை விமர்சிக்கலாமா என்று தோணுச்சு..........
ஒரு நாள் ஒரு நிமிடம் பிடிக்கும் ரசிக்கும் விஷயங்கள் கூட வேறொரு நாள் வேறொரு நேரம் பிடிக்காமல் போய்விடுகிறது. இல்லையா? நான் Texas இல் இருந்த போது, ராதாகிருஷ்ணன், கார்த்திக், ராஜேஷ், ராமலிங்கம், ராஜ் மோகன் என்று நண்பர்கள் பட்டாளத்துடன் கேலியும் கிண்டலுமாய் ரசித்து பார்த்த படம்: விஜயகாந்தின் "நரசிம்மா". அதே படத்தை சமீபத்தில் K TV யில் போட்ட போது பத்து நிமிடத்துக்கு மேல பாக்க முடியலை. அப்போ படத்தை பற்றி என்ன சொல்வது? சரியான வாண்டு பட்டாள நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக பாக்க வேண்டிய படம். Award rangekku அலசி ஆராயும் நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய படம்.
பலருக்கு, சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம் - ஒரு mass entertainment.
சிலருக்கு, அது ஒரு educational சாதனம் - documentary.
சிலருக்கு, அது ஒரு கலை அம்சம் - award தரம்.
சிலருக்கு, அது ஒரு மொக்கை - ஜாலிக்கு மட்டும்.
சிலருக்கு, அது கனவுலகின் திறவுகோல் - fantasy.
எதிர்பார்ப்புகள் மாறுபடுகின்றன. மொக்கை படம் என்று தெரிந்தாலும், படம் பாக்க போகிறவர்களும் இருக்கிறார்கள். They will have fun somehow. சூப்பர் படம் மட்டும்தான் பாப்பேன் என்று சொல்லி, ரொம்ப எதிர்பாத்து, படம் பாத்து நொந்து போகிறவர்களும் இருக்கிறார்கள்.
சிலர் விமர்சனம் என்ற பெயரில் மொத்த கதையும் சொல்லிடுறாங்க. படத்தில் யார் யார் செத்து போறா - யார் கொலை பண்ணா...... இது எப்படி இருக்கு? ஒரு வேளை, படத்தில் சொல்லிக்குற மாதிரி வேற எதுவும் இல்லையோ? படிக்கும் நமக்கு, இப்ப சினிமா கதை கேக்க வந்தேனா, சினிமா எப்படி இருக்குனு கேக்க வந்தேனா என்று குழம்பி விடும்.
ஒரு award பட நடிகையிடம் குலுக்கல் ஆட்டத்தையும், குலுக்கல் ஆட்ட நடிகையிடம் award range நடிப்பையும் எதிர் பார்த்து விமர்சிக்க மாட்டார்கள்தானே? நமீதாவை ஆட்டத்துக்காக ரசிப்பவர்களால், அவர் serious ஆ நடிக்க (???) ஆரம்பித்து விட்டால் எப்படி ரசிக்க முடியும்?
ஒரு நாள் எங்கள் வீட்டில் வைத்து ஹோம் தியேட்டரில் "முத்து" படம் பாத்து கொண்டு இருந்தோம்.
ரஜினிக்கு வயது என்னவா இருந்தா என்ன? ரஜினி ரஜினிதான். மீனா மட்டும் இல்லை, மீனா பேத்திக்கு கூட, அவர் ஜோடியா நடிப்பார். ரஜினி, ஒரு hospital இல் ICU or life supportil இருப்பார். அப்போ, மீனாவோட பேத்தி, டீனா ஒரு நர்சா வந்து, ரஜினி மேல லவ் ஆகி, "தில் தானா, தில் தானா. இன்னும் உங்களுக்கு தில் தானே..." என்று பாடுவாங்க. அதையும் அப்போ என்னை மாதிரி ரசிகர்கள் ரசிப்பார்கள், ஹி,ஹி,ஹி,...........
மீண்டும், முத்து படத்துக்கே வருவோம்:
"தில்லானா தில்லானா" பாடல் ஆரம்பிக்கவும், நான் ரஜினி மேல் வைத்த கண்ணை எடுக்கவில்லை. மீனா, ஏன் குறுக்கே குறுக்கே வாராங்க என்று இருந்தது எனக்கு.
என் கூட படம் பாத்து கொண்டிருந்த ஒரு ஜொள்ளு பார்ட்டி, "மீனா, இந்த பாட்டில் சூப்பர் அப்பு!" என்றார்.
வேறு இரண்டு லொள்ளு பார்ட்டிகள், "13 தான். " "இல்ல இல்ல, 16 தான்" என்று argue பண்ணி கொண்டு இருந்தார்கள். சத்தம் பெரிதாகவே, என்ன என்று கேட்டேன்.
"சித்ரா, திரும்ப அந்த பாட்டை முதல இருந்து போடுங்க" என்றார்கள்.
"எதுக்கு"
"நான் மீனா தொப்புளுக்கு 13 தடவைதான் close-up என்கிறேன். இவன் 16 தடவை என்கிறான். யார் correctunu சரி பாக்கணும்."
ஒரே மீனாதான். ஒருவர் மீனா முகத்தை பாத்து ஜொள்ளு வடிக்கிறார். மற்ற இரண்டு பேர் மீனாவின் belly button tunnel இல் train விட்டு கொண்டு இருந்தார்கள். அதே சமயம் யாரோ ஒருவர் நிச்சயமாக மீனா ஏன் இப்படி ஒரு ஆட்டம் போடணும்னு முகம் சுளித்து இருந்திருக்கலாம். படம் எடுப்பவர்கள் தங்களால் முடிந்த மட்டும் எல்லார் ரசனையும் cover பண்ண முயற்சிதான் பண்ண முடியும். வேறு என்ன? (இன்னும் போன paragraphil மீனாவோட மிடில் dentukku எத்தனை முறை close-up என்று அங்கேயே stuck-up ஆனவர்கள், மீண்டும் அந்த பாட்டை பார்த்து விடை தெரிந்து கொள்ளவும்.)
தன் சொந்த எதிர்பார்ப்பை வைத்து விமர்சிப்பவர்கள், "இது என் சொந்த கருத்து. இது என் சொந்த விருப்பு வெறுப்பு. என் எதிர்பார்ப்புக்கு இவ்வளுவுக்குதான் வந்திருக்கு." என்று சொல்லிட்டா நல்லா இருக்கும்.
Detroit இல் உள்ள என் தோழி ஒருத்தி, எந்த தமிழ் படம் என்றாலும் DVD யோ VCD யோ, உடனே இந்தியன் stores இல் இருந்து rent பண்ணிட்டு வந்து பார்ப்பாள். பாக்கும்போதெல்லாம், "சே, இந்த படத்தை போய் ஏன்தான் எடுத்துட்டு வந்தேனோ? தாங்க முடியவில்லை. இப்படியா படம் எடுக்கிறது?" என்று புலம்பிக்கொண்டே, remote control உதவியுடன், 1/2 மணி நேரம், 3/4 மணி நேரத்தில் மொத்த படத்தையும் பாத்து விடுவாள். இதை கவனித்து வந்த அவள் கணவர், ஒரு முறை அவளிடம் இருந்து remote control ஐ எடுத்து மறைத்து விட்டு, "முழு படத்தையும் ஒரு சீன் விடாம பாரு. அப்போதான், இந்த தமிழ் பட addiction போகும்" என்று shock treatment கொடுத்தார். இப்போ அவள் வருடத்திற்கு 3 தமிழ் படங்கள் பார்த்தாலே அதிகம் என்று நினைக்கிறேன். அந்த 3 படங்களும் மற்றவர்களின் விமர்சனத்தையோ ரசனையை பொறுத்தோ தான் முடிவு செய்ய்படுகிறதோ?
opinion வேறு; விமர்சனம் வேறு. opinion comes from one's ரசனை. ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடுவது. ஒருவரின் விருப்பு, வெறுப்பு, interest, புலமை, mood, நட்பு வட்டம் போன்று பல அம்சங்கள் ஒருவரின் ரசனைக்கு ஆணி வேர்களாகின்றன. விமர்சனம் - சுய விருப்பு வெறுப்பு இல்லாமல் நடு நிலைமையுடன் சொல்வது.
ஒரு படத்தை விமர்சிப்பதற்கு நிறைய சினிமா அம்சங்களை பற்றி ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம், காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டரில் போய் படம் பாத்து அவஸ்தை பட்டிருக்க வேண்டும். "பார்த்ததும் படித்ததும், ஜெட்லி சார்" மாதிரி. அவரோட ஒரு கட்டுரையில் : " அங்கே பார்த்த படம் சக்கரக்கட்டி என்று நினைக்கிறேன், நிறைய பேர் அதை மொக்கை படம் என்று சொன்னார்கள் இருந்தும் நான் போய் படம் பார்த்தேன் அது ஏன் என்றால் எப்படி அவளோ கேவலமா படம் எடுத்துங்கானு தெரிஞ்சிக்கதான்." இதை படிச்சிட்டு இன்னும் சிரித்து கொண்டு இருக்கிறேன்.
அப்படி இல்லாமல், என்னை மாதிரி ஆட்கள் comment அடிப்பதற்கு பேரு விமர்சனம் இல்லை - படத்தை கலாய்க்கிறது. right?

11 comments:
சினிமா விமரிசனத்தை விமரிசித்தவரது விமரிசனத்தை நான் விமரிசிக்கப் போய் அதை இன்னொரு பின்னூட்டாளர் விமரிசிக்க......
எதுக்குங்க... வேணாங்க விட்டுருங்க....
Goma madam, உங்களோட இந்த approach எனக்கு பிடிச்சிருக்கு. உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன.
நீங்க என்ன சொல்ல வரீங்க??
ஏன்னா நிறைய பேரு விமர்சனம் எழுதுறவங்களை
நொள்ளை சொல்வாங்க......ஆனா நீங்க என்ன
சொல்ல வரிங்கன்னு எனக்கு புரியல.....
நான் விமர்சனம் சொல்றவங்களை நொள்ளை சொல்லவில்லை. சினிமா விமர்சனத்தை, மொக்கை படங்களுக்கு கூட, சிலர் சீரியஸா எழுதி, சினிமாவை ஒரு சீரியஸ் கலையாக நினைப்பதை படிக்க எனக்கு வேடிக்கையாக இருக்கிறது என்று சொல்கிறேன். சில சமயம், நான் நண்பர்களுடன், படம் பார்க்க போகும்போது, மொக்கை படம்தான் பெஸ்ட். தெரிந்துதான் போகிறோம்.
உங்க ஸ்டைல் விமர்சனம் ரொம்ப பொருத்தம். எனக்கு பிடிக்கும்.
என் படத் தேர்வு எப்படி?
திகில் கூடாது,மகாநதி மாதிரி அழுவாச்சி கூடாது,என்ன ஆனாலும் கதாநாயகன் வந்து காப்பாத்துவார் என்று தெரிந்தும் பக் பக்ன்னு படபடக்ற படமென்றால் ஓகே.
நல்ல இருக்குங்க மேடம்.. நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.. கருத்துக்கும் விமர்சனத்திற்கும் நிறைய வித்யாசம் இருக்கு.. ஆனா ரெண்டையும் நமக்கு பிடித்த கோணத்தில் மட்டும் பார்ப்பதால் வித்யாசம் தெரியாமல் போய் விடுகிறது. கலாய்கிறது என்பது வேற மேட்டர் ..
அந்த மாதிரி படங்கள் எனக்கும் பிடிக்கும்.
சரியா சொன்னீங்க, கிஷோர் சார். நன்றி.
Revathy madam, சரிங்க, நான் ஆங்கிலம் அதிகம் கலப்பதை கவனிக்கலை. அப்படியே தோன்றுவதை எழுதினேன். சில ஆங்கில வார்த்தைகைள் தவிர்க்க முடியவில்லை. கொஞ்சம் முயற்சி எடுத்து குறைச்சிக்கிறேன்
//ரஜினிக்கு வயது என்னவா இருந்தா என்ன? ரஜினி ரஜினிதான். மீனா மட்டும் இல்லை, மீனா பேத்திக்கு கூட, அவர் ஜோடியா நடிப்பார்//
ஏங்க இது உங்களுக்கே ஓவரா தெரில...
//நான் மீனா தொப்புளுக்கு 13 தடவைதான் close-up என்கிறேன். இவன் 16 தடவை என்கிறான். //
16 தான் கரெக்ட். பொதுஅறிவுல நாங்க கில்லாடில்ல...:-)
நரசிம்மா படம் பாத்தீங்களா? அது எப்படிங்க எதோ உலகப்படம் பார்த்தமாதிரி அவ்ளோ பெருமையா சொல்றீங்க?? :-)
நாஞ்சில் சார், அந்த நண்பர் பட்டாளத்தோடு படம் பாத்தால், நரசிம்மா படத்தை மட்டும் இல்லை, கஜேந்திரன், சபரி முதல் வில்லு படம் வரை பெருமையாய் சொல்லிடுவோமோனு ஒரு பயம் இல்லாமல் இல்லை.
Post a Comment