Tuesday, November 24, 2009

யோசிக்காம சொல்லிட்ட, சரி. இப்பவாவது சொன்னதை யோசி.





சில  சமயம் யாராவது சில கேள்விகள் கேட்கும்போதோ பதில் சொல்லும்போதோ, "எப்படி, இவங்களால மட்டும், எப்படி?" என்று உங்களை யோசிக்க வைத்திருக்கிறதா?  

எனக்கு 9th and 10th classes க்கு science teacher ஆக Mrs.மேரி கமலம் என்பவர் இருந்தார். அடிக்கடி மாணவிகளிடம் கேள்வி கேட்கும் வழக்கம் உள்ளவர். அவர் கேள்வி கேட்கும்போதே நான் நெருப்பு கோழி மாதிரி தலையை எதிலாவது புதைத்து கொள்ள வகை தேடுவேன். அவர்  கண்களை  பாக்க நேர்ந்தால் அந்த கேள்விக்கு பதில் சொல்ல அந்த மாணவி தான் எழும்ப வேண்டும். எழும்பியவள் சரியான பதிலை சொல்ல தவறினால்,  கண்டித்துவிட்டு உட்கார சொல்லும்போது எப்பொழுதும், "sit down, don't show your stupidity in the class" ("உட்கார். உன் முட்டாள்தனத்தை வகுப்பில் காட்டதே") என்பார். அந்த டீச்சரின் punch dialogue ஆக நாங்கள் அதை கருதி நாங்களும் சில சமயம் தோழிகள் நடுவில் விளையாட்டாக சொல்லி சிரிப்போம்.

ஆனால் இன்றும்  நான் சொல்ல வேண்டியது வரும் என்று நினைக்கவில்லை. சிலரின் கேள்விகள் அல்லது பதில்களை கேட்கும்போது என்னை அறியாமல் மனம், Mrs.மேரி கமலம் டீச்சரின் வசனத்தை copyright பற்றி கவலை படாது சொல்லி பார்த்து கொள்கிறது. "Sit down, don't show your stupidity." (உட்கார். உன் முட்டாள்தனத்தை காட்டாதே")

சித்ரா (மதுரையில்):    என்ன ரோடு ரொம்ப மோசமா இருக்கு? ஆட்டோ போகும்போது ரொம்ப குலுங்கி கஷ்டமா இருக்கு.
அறிவு ஜீவி:   என்ன பண்றதுங்க? மூணு மாசம் முந்திதான் ரோடு போட்டான். கவெர்மெண்டு நல்லது செஞ்சாலும் இந்த மழைக்கு பொறுக்கலை. விடாம பெஞ்சு குண்டும் குழியுமா ஆகி விட்டது.
(hello, அறிவு கொழுந்தே, வெயில் மழை எல்லாம் தாங்கிற மாதிரி போடறதுக்கு பேருதான் ரோடு. இவன் போட்ட ரோடு லச்சணத்தை பத்தி பேசாம........ இதுக்குன்னு மழை பெய்யும் போதெல்லாம் ரோடுக்கு  குடையா பிடிக்க முடியும்?)

சாத்தூரில் எங்கள் சொந்தக்கார பெண் ஒருவர் காலில் சூடான எண்ணை கொட்டி விட டாக்டரிடம் போய் treatment எடுத்துகொண்டார். எரிச்சல் வலி போக tablets உம்  காயத்தில் போட ஒரு ointment உம் டாக்டர் கொடுத்து இருந்தார்.  ரெண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு அவரை வேறு விஷயமாக பார்க்க வந்த ஒரு பெண், காலில் இவரது காயத்தை பார்த்து விட்டு -
அறிவு ஜீவி:  டாக்டர்ட்ட போனீங்களா?
சொந்தக்கார பெண்: ஆமாம், வலிக்கு மருந்தும் காயத்திற்கு தைலமும் தந்தார்.
அறிவு ஜீவி:  ஊசி ஏதும் போட்டுக்கலையா?
சொந்தக்கார பெண்: வேண்டாம்னுட்டார்.
அறிவு ஜீவி: எங்க டாக்டர் கிட்ட போங்க. ஒரு ஊசி போட சொல்லுங்க. ஒரே ஊசிதான். உடனே சரியா போயிடும்.
(hello, அறிவு கொழுந்தே, MBBS MD எல்லாம் முடிச்சிட்டு ஒருத்தர் பல்லாங்குழி விளையாடவா போர்டு மாட்டிக்கிட்டு உக்கார்ந்திருக்கார். ஒரு மாய ஊசி போடுங்கனு இவரே treatment சொல்லி டாக்டர் செய்றதுக்கு அவர் ஏன் medical college போயிருந்து இருக்கணும்? இந்த பெண்ணிடம் ஒரு tuition class போயிருந்தாலே  போதுமே.)

Texas இல் ஒரு Indian Students' Association orientation meeting போது:     நீங்க உங்க இந்தியன் நண்பர்கள்  மட்டும் இருக்கும் போது உங்க மொழியில பேசிக் கொள்ளலாம். ஆனால் department or class இல் மற்ற மாணவர்கள் மத்தியில் உங்க சொந்த மொழியில் உங்கள் இந்தியன் நண்பர்களுடன் பேசாமல் Englishil பேசுவது நல்ல பண்பு.
அறிவு ஜீவி:  அவங்க மட்டும் அவங்க தாய் மொழியில் பேசும்போது நான் ஏன் என் தாய் மொழியில் பேசக் கூடாது.
(hello, அறிவு கொழுந்தே, பண்புக்கும் வீம்புக்கும் வித்தியாசம் தெரியாதவனே, உனக்கு ஆங்கிலம் தெரியலை என்றால் வேறு விவகாரம். Social ethics தெரியலைனா?)

அறிவு ஜீவி (இந்தியாவில் இருந்து முதல் முறையாக இங்க வந்திருந்த ஒரு நண்பரின் மனைவி):  சித்ரா, நீங்க தயிர் எங்க வாங்கினீங்க?
சித்ரா:  grocery store ல தான்.
அறிவு ஜீவி: இந்தியன் store ஆ அமெரிக்கன் store ஆ?
சித்ரா:  well, American store தான்.  அங்கியே யாரு கிட்டேயாவது கேட்டா எங்கு இருக்குன்னு சொல்லி இருப்பாங்களே.
அறிவு ஜீவி:  கேக்கலாம்னு நினைச்சேன், சித்ரா. கடையில் சுத்தி பாத்தா ஒரே foreigners ஆ இருந்தாங்க. இந்தியன்ஸ்  ஒருத்தரையும் காணோம். அதான் பேசாம வந்திட்டேன்.
(hello, அறிவு கொழுந்தே, அவன் நாட்டில் வந்து உக்காந்துக்கிட்டு அவனையே foreigner ஆக்கிட்டீங்களே? ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரியை விரட்டின கதையா ....)

சென்னையில் ஒரு அறிவு ஜீவி:   சித்ரா, உன் மகன்  என்ன இப்படி இருக்கான்? அமெரிக்காவில் இருந்து வரதுனால நல்ல குண்டா வெள்ளையா கொழு கொழுன்னு வெள்ளைக்காரன் மாதிரி இருப்பான்னு நினைச்சேன்.
(hello, அறிவு கொழுந்தே, நான் அமெரிக்காவில்தான் பிள்ளைய பெத்தேன். ஒரு அமெரிக்கனுக்கா/வெள்ளைக்காரனுக்கா பிள்ளைய பெத்தேன்? அவன், அவனோட  அப்பாவை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் மாதிரி இருந்தா குடும்பத்தில் பிரச்சினை வராதா?  நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா?)

இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இவங்க இப்படி பேசறதுக்கு காரணம்:
Ignorance or Innocence or stupidity?
அறியாமையா? வெகுளித்தனமா? முட்டாள்தனமா? 

Saturday, November 21, 2009

சினிமாவை அல்ல, சினிமா விமர்சனங்களை விமர்சிக்கலாமா?




ஏதாவதொரு சினிமாவை விமர்சிக்கலாமா என்று வெட்டியாக சிந்தித்து கொண்டிருந்த போது, சினிமாவை அல்ல, சினிமா விமர்சனங்களை விமர்சிக்கலாமா என்று தோணுச்சு..........

ஒரு நாள் ஒரு நிமிடம் பிடிக்கும் ரசிக்கும் விஷயங்கள் கூட வேறொரு நாள் வேறொரு நேரம் பிடிக்காமல் போய்விடுகிறது. இல்லையா?  நான் Texas இல் இருந்த போது,  ராதாகிருஷ்ணன், கார்த்திக், ராஜேஷ், ராமலிங்கம், ராஜ் மோகன் என்று நண்பர்கள் பட்டாளத்துடன் கேலியும் கிண்டலுமாய் ரசித்து பார்த்த படம்: விஜயகாந்தின் "நரசிம்மா". அதே படத்தை சமீபத்தில் K TV யில் போட்ட போது பத்து நிமிடத்துக்கு மேல பாக்க முடியலை. அப்போ படத்தை பற்றி என்ன சொல்வது? சரியான வாண்டு பட்டாள நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக பாக்க வேண்டிய படம். Award rangekku அலசி ஆராயும் நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய படம்.

பலருக்கு, சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம் - ஒரு mass entertainment.
சிலருக்கு, அது ஒரு educational சாதனம் - documentary.
சிலருக்கு, அது ஒரு கலை அம்சம் - award தரம்.
சிலருக்கு, அது ஒரு மொக்கை - ஜாலிக்கு மட்டும்.
சிலருக்கு, அது கனவுலகின் திறவுகோல் - fantasy.

எதிர்பார்ப்புகள் மாறுபடுகின்றன.  மொக்கை படம் என்று தெரிந்தாலும், படம் பாக்க போகிறவர்களும் இருக்கிறார்கள். They will have fun somehow. சூப்பர் படம் மட்டும்தான் பாப்பேன் என்று சொல்லி, ரொம்ப எதிர்பாத்து, படம் பாத்து நொந்து போகிறவர்களும் இருக்கிறார்கள்.



சிலர் விமர்சனம் என்ற பெயரில் மொத்த கதையும் சொல்லிடுறாங்க. படத்தில் யார் யார் செத்து போறா - யார் கொலை பண்ணா...... இது எப்படி இருக்கு? ஒரு வேளை, படத்தில் சொல்லிக்குற மாதிரி வேற எதுவும் இல்லையோ? படிக்கும் நமக்கு, இப்ப சினிமா கதை கேக்க வந்தேனா, சினிமா எப்படி இருக்குனு கேக்க வந்தேனா என்று குழம்பி விடும்.

ஒரு award பட  நடிகையிடம்  குலுக்கல் ஆட்டத்தையும், குலுக்கல் ஆட்ட நடிகையிடம்  award range நடிப்பையும் எதிர் பார்த்து விமர்சிக்க மாட்டார்கள்தானே? நமீதாவை ஆட்டத்துக்காக  ரசிப்பவர்களால்,  அவர் serious ஆ நடிக்க (???) ஆரம்பித்து விட்டால் எப்படி ரசிக்க முடியும்?

ஒரு நாள் எங்கள் வீட்டில் வைத்து ஹோம் தியேட்டரில் "முத்து" படம் பாத்து கொண்டு இருந்தோம்.
ரஜினிக்கு  வயது என்னவா இருந்தா என்ன? ரஜினி ரஜினிதான்.  மீனா மட்டும் இல்லை, மீனா பேத்திக்கு கூட,  அவர் ஜோடியா நடிப்பார்.  ரஜினி, ஒரு hospital இல் ICU  or life supportil இருப்பார். அப்போ, மீனாவோட பேத்தி, டீனா ஒரு நர்சா வந்து, ரஜினி மேல லவ் ஆகி, "தில்   தானா, தில்   தானா.  இன்னும் உங்களுக்கு தில் தானே..." என்று பாடுவாங்க. அதையும் அப்போ என்னை மாதிரி ரசிகர்கள் ரசிப்பார்கள், ஹி,ஹி,ஹி,........... 

மீண்டும், முத்து படத்துக்கே வருவோம்:
"தில்லானா தில்லானா" பாடல் ஆரம்பிக்கவும், நான் ரஜினி மேல் வைத்த கண்ணை எடுக்கவில்லை.  மீனா,  ஏன் குறுக்கே குறுக்கே வாராங்க என்று இருந்தது எனக்கு.
என் கூட படம் பாத்து கொண்டிருந்த ஒரு ஜொள்ளு பார்ட்டி, "மீனா, இந்த பாட்டில் சூப்பர் அப்பு!" என்றார்.
வேறு இரண்டு லொள்ளு பார்ட்டிகள், "13 தான். " "இல்ல இல்ல, 16 தான்" என்று argue பண்ணி கொண்டு இருந்தார்கள். சத்தம் பெரிதாகவே, என்ன என்று கேட்டேன்.
"சித்ரா, திரும்ப அந்த பாட்டை முதல இருந்து போடுங்க" என்றார்கள்.
"எதுக்கு"
"நான் மீனா தொப்புளுக்கு 13 தடவைதான் close-up என்கிறேன். இவன் 16 தடவை என்கிறான். யார் correctunu சரி பாக்கணும்."

ஒரே மீனாதான். ஒருவர் மீனா முகத்தை பாத்து ஜொள்ளு வடிக்கிறார். மற்ற இரண்டு பேர் மீனாவின் belly button tunnel இல் train விட்டு கொண்டு இருந்தார்கள். அதே சமயம் யாரோ ஒருவர் நிச்சயமாக மீனா ஏன் இப்படி ஒரு ஆட்டம் போடணும்னு முகம் சுளித்து இருந்திருக்கலாம். படம் எடுப்பவர்கள் தங்களால் முடிந்த மட்டும் எல்லார் ரசனையும் cover பண்ண முயற்சிதான் பண்ண முடியும். வேறு என்ன? (இன்னும் போன paragraphil மீனாவோட மிடில் dentukku எத்தனை முறை close-up என்று அங்கேயே stuck-up ஆனவர்கள், மீண்டும் அந்த பாட்டை பார்த்து விடை தெரிந்து கொள்ளவும்.)

தன் சொந்த எதிர்பார்ப்பை வைத்து விமர்சிப்பவர்கள், "இது என் சொந்த கருத்து. இது என் சொந்த விருப்பு வெறுப்பு. என் எதிர்பார்ப்புக்கு இவ்வளுவுக்குதான் வந்திருக்கு." என்று சொல்லிட்டா நல்லா இருக்கும்.

Detroit இல் உள்ள என் தோழி ஒருத்தி, எந்த தமிழ் படம் என்றாலும் DVD யோ VCD யோ, உடனே இந்தியன் stores இல் இருந்து rent பண்ணிட்டு வந்து பார்ப்பாள். பாக்கும்போதெல்லாம், "சே, இந்த படத்தை போய் ஏன்தான் எடுத்துட்டு வந்தேனோ? தாங்க முடியவில்லை. இப்படியா படம் எடுக்கிறது?" என்று புலம்பிக்கொண்டே, remote control உதவியுடன், 1/2 மணி நேரம், 3/4 மணி நேரத்தில் மொத்த படத்தையும்  பாத்து விடுவாள். இதை கவனித்து வந்த அவள்  கணவர், ஒரு முறை அவளிடம் இருந்து remote control ஐ எடுத்து மறைத்து விட்டு, "முழு படத்தையும் ஒரு சீன் விடாம பாரு. அப்போதான், இந்த தமிழ் பட addiction போகும்" என்று shock treatment கொடுத்தார். இப்போ அவள் வருடத்திற்கு 3 தமிழ் படங்கள் பார்த்தாலே அதிகம் என்று நினைக்கிறேன். அந்த 3 படங்களும் மற்றவர்களின் விமர்சனத்தையோ ரசனையை பொறுத்தோ தான் முடிவு செய்ய்படுகிறதோ?



opinion வேறு; விமர்சனம் வேறு.  opinion comes from one's ரசனை.  ரசனை  என்பது ஒருவருக்கொருவர் மாறுபடுவது. ஒருவரின் விருப்பு, வெறுப்பு, interest, புலமை, mood, நட்பு வட்டம் போன்று பல அம்சங்கள் ஒருவரின் ரசனைக்கு ஆணி வேர்களாகின்றன. விமர்சனம் - சுய விருப்பு வெறுப்பு இல்லாமல் நடு நிலைமையுடன் சொல்வது.
 

ஒரு படத்தை விமர்சிப்பதற்கு நிறைய சினிமா அம்சங்களை பற்றி ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம், காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டரில் போய் படம் பாத்து அவஸ்தை பட்டிருக்க வேண்டும். "பார்த்ததும் படித்ததும், ஜெட்லி சார்" மாதிரி. அவரோட ஒரு கட்டுரையில் : " அங்கே பார்த்த படம் சக்கரக்கட்டி என்று நினைக்கிறேன், நிறைய பேர் அதை மொக்கை படம் என்று சொன்னார்கள் இருந்தும் நான் போய் படம் பார்த்தேன் அது ஏன் என்றால் எப்படி அவளோ கேவலமா படம் எடுத்துங்கானு தெரிஞ்சிக்கதான்."  இதை படிச்சிட்டு இன்னும் சிரித்து கொண்டு இருக்கிறேன். 


அப்படி இல்லாமல், என்னை  மாதிரி ஆட்கள் comment அடிப்பதற்கு பேரு விமர்சனம் இல்லை - படத்தை கலாய்க்கிறது. right?

Tuesday, November 17, 2009

ஆசை தோசை அப்பள வடை: bloggaa எழுதுற blog!

நான் பாட்டுக்கு "வரட் வரட்" னு காலை சொரிஞ்சோமா நாலு friends ஒட அரட்டை அடிச்சோமானு இருந்தேன்.

என் கண்ணாவும், என் ஆருயிர் தோழி, அம்முவும், இவ கடியை மொக்கையை நாம மட்டுமே கேட்டு அவஸ்தை படறோமே, மற்ற நண்பர்கள் மட்டும் தனியா என்ன புண்ணியம் பண்ணாங்க, இவாட்ட இருந்து escape ஆகுறதுக்கு என்று பேசி, முடிவு பண்ணி, "சித்ரா, நீ blog எழுது; நீ blog எழுது....." என்று உற்சாகபடுத்தினார்கள். என்ன ஏது என்று யோசிக்காமல், நாளைக்கு கோதாவில் இறங்கினால் நம்ம தலைதான் உருளப் போகுது என்ற நினைப்பும் இல்லாமல் Oct. 22, 2009 அன்று சுப தினத்தில், ஒரு பொன்னான நேரம் கூடி வர, ஆரம்பித்து விட்டேன். முழுதா ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், நான் காலை விட்டது எழுத்து உலகில் மட்டும் அல்ல என்று இந்த மர மண்டைக்கு தெரிந்து விட்டது.

Create a blog - கொஞ்சம் வெட்டி பேச்சு - create பண்ணியாச்சு.
bloggunga - bloggitten.
நண்பர்களுக்கு link ஐ அனுப்புங்க - அனுப்பிட்டேன்.
மென் மேலும் எழுதுவதற்கு, அந்த நண்பர்களின் motivation, ரொம்ப முக்கியம். - motivate ஆயிட்டேன்.
ஆச்சா? முடிஞ்சுதா? இல்ல, இனிமேதான் சங்கதியே இருக்கு, மக்களே.


அமுதா: இப்ப successful blog உன்னு காட்டணும்.
சித்ரா: எப்படி? ஓசியில் ஓடற படத்துக்கு , வசூல் கணக்கா? என்ன சொல்றீங்க?
அமுதா: ஆமா, சித்ரா. ஆள் (followers) புடிக்கணும். நிறைய பேர் படிக்கணும். கமெண்ட் எழுதனும். award வாங்கணும்..... இப்படி நிறைய matter இருக்கு, அப்பு.
அமுதா, நான் கட்சி ஆரம்பிக்கலை. நான் புதுசா சினிமா படம் எடுக்கிறேன்னு நினைச்சிட்டீயா? நான் blog எழுதுறேன்.  blogumaa.....
அமுதா: நான் சொல்றத சொல்லிட்டேன். இனிமே உன் பாடு. blog ஆரம்பிச்ச ஆதி காலத்தில் (கி.பி. 2007) இருந்து இருக்கிருவங்களோட ஆசீர்வாதம், கூட்டணி எல்லாம் வேணும்.


நமக்கு எழுததான் தெரியும். இந்த Amway மாதிரி ஆள் புடிக்கிற வேலையை, என் திட்ட (?!) குழுவினர்களிடம் (Planning (?!) committee) விடுகிறேன்.

கட்சியின் தலைமை செயலாளர், சாலமன்,  குழுவை அழைத்து கட்சியில் எப்படி ஆள் சேர்ப்பது என்று, பொது குழு meeting நடத்துகிறார்:

சாலமன்:   எப்படி கட்சிக்கு - bloggukku - ஆள் புடிக்கிறதுன்னு நாம இப்ப முடிவெடுக்கணும். Microsoft, முதலில் இப்படித்தான் computer main-stream உக்கு வந்த நேரம், Solitaire Game மூலமா மக்களை, right click, left click, drag.....போன்ற விஷயங்களுக்கு பழக்கியது. அது போல, நாமும் ஒரு game "கொஞ்சம் வெட்டி பேச்சு" blog இல் introduce செய்வோம். விளையாட்டு போக்கில், மக்கள் தன்னையும் அறியாமல் "follow" ல click ஆகும்படி வைத்து விடுவோம்.

Michigan Ammu:    followers - தொண்டர் படை. சாலமன், குண்டர் படையும் வேணுமா? "follow" பண்ணலைனா இந்த குண்டர் படைக்கு பதில் சொல்லணும் என்று சொல்வோம்.
சித்ரா: சொறி, சிரங்கு படைனு கேட்காம போனீங்களே. நன்றி.

அனுஜா:   நான் நல்லா வடை பண்ணுவேன். என் ஆருயிர் தோழி, நெல்லை தமிழச்சி கட்சியில் இன்னைக்கு சேருகிரவர்கள், ஒரு வடை பெறும் வாய்ப்பை பெறுவார்கள்.
சாலமன்:    அப்படியே ஒரு வடை தட்ட போகும் முன், follow இல் click பண்ணி, கட்சியில் சேர்ந்துட்டு போங்க.

விஷி :    நான் வேணா, Houston Meenakshi Temple உண்டியல் பக்கம் ஒரு boardu வைக்கிறேன்.
சித்ரா:    இன்றைய special: உண்டியல காசு போட்டுட்டு, அப்புறம் சித்ரா blog இல் போய் "follower" ஆனா, செய்த பூஜைக்கு ரெண்டு மடங்கு பலன்.  அப்படின்னா?

கோமி:    உன் friend, சந்திரா ராஜாவை Miami இலிருந்து chappals வாங்கி அனுப்ப சொல்லு. இந்த வாரத்தில் சேர ஒவ்வொரு follower க்கும் ஒரு ஜோடி Miami chappal இலவசம்.
சாலமன்:    கோமி, ஐடியா நல்லாத்தான் இருக்கு. அங்க, சந்திராவே இன்னும் தான் கட்சியில சேரதுக்கு, follow பண்ணறதுக்கு தனக்கு பேரம் பேசிக்கிட்டு இருக்காரு. அவர் கிட்ட போய்...... ஆமா, நீங்க சேர்ந்துட்டீங்களா?
கோமி: அடுப்பில் வைத்த வத்தல் குழம்பு அடி புடிக்குதுன்னு நினைக்கிறேன். ஒரு நிமிஷம், இந்தா வரேன்.

லலிதம்:    நாலு வருஷம் முன்னால வர, என் "கனவு கன்னி"யாய் இருந்த தானை தலைவி, சித்ராவுக்கு நான் ஏதாவது செஞ்சே ஆகணும்.
சாலமன்:   முதல, நீங்க கட்சியில சேரலாம்...... follow பண்ணலாம்........

தினேஷ்:     US market தொகுதி பத்தியே பேசிக்கிட்டு இருக்கீங்களே. இந்தியாவிலும் branch ஆபீஸ், தொகுதி எல்லாம் கவனிக்க வேண்டாமா?
சாலமன்:    சித்ராவோட தம்பிக்கிட்ட அந்த பொறுப்ப விட்டுரலாம்.
தம்பி (psychiatrist):    Actually, இவ blog ல, follower ஆனப்புறம், மண்டை damage ஆகி, என் உதவி எல்லோருக்கும் தேவைப்படலாம். இப்ப ஆள விடுங்க.

தினேஷ்:    atleast, திட்ட குழுவில் கட்சிக்காரங்க, "followers" மட்டும் தான் இருக்கலாம் என்று செயக் குழு meeting ல முடிவு எடுக்க சொல்லணும்.

சித்ரா:   இந்த  பிரச்சினையே வேண்டாம். பேசாம, blog படிச்சப்புறம் follow ல click பண்ணி follower ஆகலைனா, இன்னைக்கு ராத்திரியே ரத்த வாந்தி எடுத்துருவீங்கன்னு ஒரு எச்சரிக்கை எழுதி வச்சிட்டா?

ஆமாம், நான் ஜாலிக்கு blog எழுத வந்தேனா, அரசியல் பண்ண வந்தேனா? இப்படி "முதல்வன் அர்ஜுன்" மாதிரி புலம்புறேனே..................

அமுதா: "அடுத்து Tamilish, தமிழ் மணம் மாதிரியான blog கடலில் நீ சங்கமம் ஆக வேண்டும்."
சித்ரா: "எதுக்கு? "
அமுதா: "அப்பதான் எல்லோரும் vote பண்ண முடியும்."
சித்ரா: "blog கட்சி பத்திதான் பேசிக்கிட்டு இருந்தோம். இப்ப தேர்தல் பத்தி பேசுற, அமுதா?"
அமுதா: "அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை வரும் தேர்தல் பத்தி யார் சொன்னா? இது அதை விட முக்கியம். ஒவ்வொரு blog article வாசிக்கும் போதும் ஓட்டு போடுவாங்க."
சித்ரா: "அம்மா, தாயே, ஐயா, தர்மதுரை, அண்ணாச்சி, ஓட்டு போடுங்க."
அமுதா: "உன்னை பிச்சை எடுக்க சொல்லலை."
சித்ரா: "சரிதான். ஒன்றில், ஓட்டில் பிச்சை வாங்க வேண்டும். ஒன்றில், ஓட்டுக்காக பிச்சை போட வேண்டும்."
அமுதா: "இப்படியெல்லாம் பேசுனா உனக்கு யாரும் ஓட்டு போட மாட்டாங்க. இந்த தெனாவெட்டு பதிலுக்கு எல்லாம் யாரும் award கொடுக்க மாட்டாங்க."
சித்ரா: "award வாங்குன படம்னாலே யாரும் போக மாட்டாங்களே. award வாங்குன blog என்று யாரும் படிக்காம விட்டுட்டா?"
அமுதா: "இது Blog World. award வாங்கினாதான் மதிப்பு. popular blog என்று select ஆகணும். publicity வேணும். ஆயிரம் பேர் blog எழுதுற நேரத்தில் ஜெயிச்சு காட்டணும்."

சரி, TAMILISH.COM இல் link கொடுத்தாச்சு. facebook ல இருக்கு. வேற என்ன?

எனக்கு, சரத்குமார் மாதிரி முன்ன பின்ன யோசிக்காம கட்சி (blog) ஆரம்பிச்சிட்டோமோ என்று இருந்தது.

என் blog வெற்றிக்கு சினிமா strategy ஒத்து வருமா? ரூம் போட்டு யோசிக்கிறேன்:
நோட்டீஸ் ஒட்டலாம். சன் pictures அ sponsor பண்ண சொல்லிட்டு, சன் டிவியில், "ரிவால்வர் ரீட்டா, என் சகோதரியா?" கேட்கிறார், நெல்லை கண்ணு, சித்ரா. படிச்சிட்டீங்களாஆஆஆஆ? அப்படினா, Blog Top 10 ல easy ஆ வந்துரலாம்.

அரசியல் strategy: ஆள் புடிச்சி, வோட்டு போட வச்சி ................... ஆஆஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!!!!!!

சித்ரா: "நான் என் ஆத்மா திருப்திக்காக எழுதுறேன். ஜாலிக்காக எழுதுறேன்."
அமுதா: "அது blog உலகில் survive பண்ண தெரியாதவன் பேச்சு. இவ்வளவு யோசிக்கிறவா, வீட்டில் diary இல் எழுதி நீ மட்டும் படிச்சிக்கணும். இது public matter மா. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு."
சித்ரா: "ஹான்..................ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்......"
அமுதா: "நாயீ, நாயீ, உன் நல்லதுக்குத்தான் சொல்றேன் புள்ள. என் friend உக்கு ஒண்ணு நல்லது நடக்கட்டுமேன்னு பாத்தா.........."
சித்ரா: "நாளைக்கு blog எழுதுறதுக்கே material கிடைக்குமானு யோசிக்கிறேன். இதுல, இந்த லொள்ளு வேறயா?"


நல்லா கிளப்புறாங்கையா பீதியை...............
சும்மா  காலை சொறிஞ்சுக்கிட்டு இருந்தவளை, சாலமநும் அம்முவும் தலைய சொரிய .... sorry ......பிச்சுக்க வச்சுட்டாங்களே! இது வேலைக்கு  ஆவுறது இல்லை..... நான் பாட்டுக்கு எழுத போறேன்.