Tuesday, November 17, 2009

ஆசை தோசை அப்பள வடை: bloggaa எழுதுற blog!

நான் பாட்டுக்கு "வரட் வரட்" னு காலை சொரிஞ்சோமா நாலு friends ஒட அரட்டை அடிச்சோமானு இருந்தேன்.

என் கண்ணாவும், என் ஆருயிர் தோழி, அம்முவும், இவ கடியை மொக்கையை நாம மட்டுமே கேட்டு அவஸ்தை படறோமே, மற்ற நண்பர்கள் மட்டும் தனியா என்ன புண்ணியம் பண்ணாங்க, இவாட்ட இருந்து escape ஆகுறதுக்கு என்று பேசி, முடிவு பண்ணி, "சித்ரா, நீ blog எழுது; நீ blog எழுது....." என்று உற்சாகபடுத்தினார்கள். என்ன ஏது என்று யோசிக்காமல், நாளைக்கு கோதாவில் இறங்கினால் நம்ம தலைதான் உருளப் போகுது என்ற நினைப்பும் இல்லாமல் Oct. 22, 2009 அன்று சுப தினத்தில், ஒரு பொன்னான நேரம் கூடி வர, ஆரம்பித்து விட்டேன். முழுதா ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், நான் காலை விட்டது எழுத்து உலகில் மட்டும் அல்ல என்று இந்த மர மண்டைக்கு தெரிந்து விட்டது.

Create a blog - கொஞ்சம் வெட்டி பேச்சு - create பண்ணியாச்சு.
bloggunga - bloggitten.
நண்பர்களுக்கு link ஐ அனுப்புங்க - அனுப்பிட்டேன்.
மென் மேலும் எழுதுவதற்கு, அந்த நண்பர்களின் motivation, ரொம்ப முக்கியம். - motivate ஆயிட்டேன்.
ஆச்சா? முடிஞ்சுதா? இல்ல, இனிமேதான் சங்கதியே இருக்கு, மக்களே.


அமுதா: இப்ப successful blog உன்னு காட்டணும்.
சித்ரா: எப்படி? ஓசியில் ஓடற படத்துக்கு , வசூல் கணக்கா? என்ன சொல்றீங்க?
அமுதா: ஆமா, சித்ரா. ஆள் (followers) புடிக்கணும். நிறைய பேர் படிக்கணும். கமெண்ட் எழுதனும். award வாங்கணும்..... இப்படி நிறைய matter இருக்கு, அப்பு.
அமுதா, நான் கட்சி ஆரம்பிக்கலை. நான் புதுசா சினிமா படம் எடுக்கிறேன்னு நினைச்சிட்டீயா? நான் blog எழுதுறேன்.  blogumaa.....
அமுதா: நான் சொல்றத சொல்லிட்டேன். இனிமே உன் பாடு. blog ஆரம்பிச்ச ஆதி காலத்தில் (கி.பி. 2007) இருந்து இருக்கிருவங்களோட ஆசீர்வாதம், கூட்டணி எல்லாம் வேணும்.


நமக்கு எழுததான் தெரியும். இந்த Amway மாதிரி ஆள் புடிக்கிற வேலையை, என் திட்ட (?!) குழுவினர்களிடம் (Planning (?!) committee) விடுகிறேன்.

கட்சியின் தலைமை செயலாளர், சாலமன்,  குழுவை அழைத்து கட்சியில் எப்படி ஆள் சேர்ப்பது என்று, பொது குழு meeting நடத்துகிறார்:

சாலமன்:   எப்படி கட்சிக்கு - bloggukku - ஆள் புடிக்கிறதுன்னு நாம இப்ப முடிவெடுக்கணும். Microsoft, முதலில் இப்படித்தான் computer main-stream உக்கு வந்த நேரம், Solitaire Game மூலமா மக்களை, right click, left click, drag.....போன்ற விஷயங்களுக்கு பழக்கியது. அது போல, நாமும் ஒரு game "கொஞ்சம் வெட்டி பேச்சு" blog இல் introduce செய்வோம். விளையாட்டு போக்கில், மக்கள் தன்னையும் அறியாமல் "follow" ல click ஆகும்படி வைத்து விடுவோம்.

Michigan Ammu:    followers - தொண்டர் படை. சாலமன், குண்டர் படையும் வேணுமா? "follow" பண்ணலைனா இந்த குண்டர் படைக்கு பதில் சொல்லணும் என்று சொல்வோம்.
சித்ரா: சொறி, சிரங்கு படைனு கேட்காம போனீங்களே. நன்றி.

அனுஜா:   நான் நல்லா வடை பண்ணுவேன். என் ஆருயிர் தோழி, நெல்லை தமிழச்சி கட்சியில் இன்னைக்கு சேருகிரவர்கள், ஒரு வடை பெறும் வாய்ப்பை பெறுவார்கள்.
சாலமன்:    அப்படியே ஒரு வடை தட்ட போகும் முன், follow இல் click பண்ணி, கட்சியில் சேர்ந்துட்டு போங்க.

விஷி :    நான் வேணா, Houston Meenakshi Temple உண்டியல் பக்கம் ஒரு boardu வைக்கிறேன்.
சித்ரா:    இன்றைய special: உண்டியல காசு போட்டுட்டு, அப்புறம் சித்ரா blog இல் போய் "follower" ஆனா, செய்த பூஜைக்கு ரெண்டு மடங்கு பலன்.  அப்படின்னா?

கோமி:    உன் friend, சந்திரா ராஜாவை Miami இலிருந்து chappals வாங்கி அனுப்ப சொல்லு. இந்த வாரத்தில் சேர ஒவ்வொரு follower க்கும் ஒரு ஜோடி Miami chappal இலவசம்.
சாலமன்:    கோமி, ஐடியா நல்லாத்தான் இருக்கு. அங்க, சந்திராவே இன்னும் தான் கட்சியில சேரதுக்கு, follow பண்ணறதுக்கு தனக்கு பேரம் பேசிக்கிட்டு இருக்காரு. அவர் கிட்ட போய்...... ஆமா, நீங்க சேர்ந்துட்டீங்களா?
கோமி: அடுப்பில் வைத்த வத்தல் குழம்பு அடி புடிக்குதுன்னு நினைக்கிறேன். ஒரு நிமிஷம், இந்தா வரேன்.

லலிதம்:    நாலு வருஷம் முன்னால வர, என் "கனவு கன்னி"யாய் இருந்த தானை தலைவி, சித்ராவுக்கு நான் ஏதாவது செஞ்சே ஆகணும்.
சாலமன்:   முதல, நீங்க கட்சியில சேரலாம்...... follow பண்ணலாம்........

தினேஷ்:     US market தொகுதி பத்தியே பேசிக்கிட்டு இருக்கீங்களே. இந்தியாவிலும் branch ஆபீஸ், தொகுதி எல்லாம் கவனிக்க வேண்டாமா?
சாலமன்:    சித்ராவோட தம்பிக்கிட்ட அந்த பொறுப்ப விட்டுரலாம்.
தம்பி (psychiatrist):    Actually, இவ blog ல, follower ஆனப்புறம், மண்டை damage ஆகி, என் உதவி எல்லோருக்கும் தேவைப்படலாம். இப்ப ஆள விடுங்க.

தினேஷ்:    atleast, திட்ட குழுவில் கட்சிக்காரங்க, "followers" மட்டும் தான் இருக்கலாம் என்று செயக் குழு meeting ல முடிவு எடுக்க சொல்லணும்.

சித்ரா:   இந்த  பிரச்சினையே வேண்டாம். பேசாம, blog படிச்சப்புறம் follow ல click பண்ணி follower ஆகலைனா, இன்னைக்கு ராத்திரியே ரத்த வாந்தி எடுத்துருவீங்கன்னு ஒரு எச்சரிக்கை எழுதி வச்சிட்டா?

ஆமாம், நான் ஜாலிக்கு blog எழுத வந்தேனா, அரசியல் பண்ண வந்தேனா? இப்படி "முதல்வன் அர்ஜுன்" மாதிரி புலம்புறேனே..................

அமுதா: "அடுத்து Tamilish, தமிழ் மணம் மாதிரியான blog கடலில் நீ சங்கமம் ஆக வேண்டும்."
சித்ரா: "எதுக்கு? "
அமுதா: "அப்பதான் எல்லோரும் vote பண்ண முடியும்."
சித்ரா: "blog கட்சி பத்திதான் பேசிக்கிட்டு இருந்தோம். இப்ப தேர்தல் பத்தி பேசுற, அமுதா?"
அமுதா: "அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை வரும் தேர்தல் பத்தி யார் சொன்னா? இது அதை விட முக்கியம். ஒவ்வொரு blog article வாசிக்கும் போதும் ஓட்டு போடுவாங்க."
சித்ரா: "அம்மா, தாயே, ஐயா, தர்மதுரை, அண்ணாச்சி, ஓட்டு போடுங்க."
அமுதா: "உன்னை பிச்சை எடுக்க சொல்லலை."
சித்ரா: "சரிதான். ஒன்றில், ஓட்டில் பிச்சை வாங்க வேண்டும். ஒன்றில், ஓட்டுக்காக பிச்சை போட வேண்டும்."
அமுதா: "இப்படியெல்லாம் பேசுனா உனக்கு யாரும் ஓட்டு போட மாட்டாங்க. இந்த தெனாவெட்டு பதிலுக்கு எல்லாம் யாரும் award கொடுக்க மாட்டாங்க."
சித்ரா: "award வாங்குன படம்னாலே யாரும் போக மாட்டாங்களே. award வாங்குன blog என்று யாரும் படிக்காம விட்டுட்டா?"
அமுதா: "இது Blog World. award வாங்கினாதான் மதிப்பு. popular blog என்று select ஆகணும். publicity வேணும். ஆயிரம் பேர் blog எழுதுற நேரத்தில் ஜெயிச்சு காட்டணும்."

சரி, TAMILISH.COM இல் link கொடுத்தாச்சு. facebook ல இருக்கு. வேற என்ன?

எனக்கு, சரத்குமார் மாதிரி முன்ன பின்ன யோசிக்காம கட்சி (blog) ஆரம்பிச்சிட்டோமோ என்று இருந்தது.

என் blog வெற்றிக்கு சினிமா strategy ஒத்து வருமா? ரூம் போட்டு யோசிக்கிறேன்:
நோட்டீஸ் ஒட்டலாம். சன் pictures அ sponsor பண்ண சொல்லிட்டு, சன் டிவியில், "ரிவால்வர் ரீட்டா, என் சகோதரியா?" கேட்கிறார், நெல்லை கண்ணு, சித்ரா. படிச்சிட்டீங்களாஆஆஆஆ? அப்படினா, Blog Top 10 ல easy ஆ வந்துரலாம்.

அரசியல் strategy: ஆள் புடிச்சி, வோட்டு போட வச்சி ................... ஆஆஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!!!!!!

ித்ரா: "நான் என் ஆத்மா திருப்திக்காக எழுதுறேன். ஜாலிக்காக எழுதுறேன்."
அமுதா: "அது blog உலகில் survive பண்ண தெரியாதவன் பேச்சு. இவ்வளவு யோசிக்கிறவா, வீட்டில் diary இல் எழுதி நீ மட்டும் படிச்சிக்கணும். இது public matter மா. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு."
சித்ரா: "ஹான்..................ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்......"
அமுதா: "நாயீ, நாயீ, உன் நல்லதுக்குத்தான் சொல்றேன் புள்ள. என் friend உக்கு ஒண்ணு நல்லது நடக்கட்டுமேன்னு பாத்தா.........."
சித்ரா: "நாளைக்கு blog எழுதுறதுக்கே material கிடைக்குமானு யோசிக்கிறேன். இதுல, இந்த லொள்ளு வேறயா?"


நல்லா கிளப்புறாங்கையா பீதியை...............
சும்மா  காலை சொறிஞ்சுக்கிட்டு இருந்தவளை, சாலமநும் அம்முவும் தலைய சொரிய .... sorry ......பிச்சுக்க வச்சுட்டாங்களே! இது வேலைக்கு  ஆவுறது இல்லை..... நான் பாட்டுக்கு எழுத போறேன்.

24 comments:

ஜெட்லி... said...

//சரத்குமார் மாதிரி முன்ன பின்ன யோசிக்காம கட்சி (blog) ஆரம்பிச்சிட்டோமோ என்று இருந்தது//

ஹீ.. ஹீ ....
நான் கூட சில சமயம் இப்படி யோசித்து இருக்கிறேன்...

தமிழினிமை... said...

unnudaya padhivuhalilaeyae romba ..........,...............,................,...........,...............,......................,........................,.........................,..............,..................,..................,......................,..................aana PADHIVU...aela im very very happy

தமிழினிமை... said...

comment adikkiradhukkulla thaavukatta theendhu poidudhu...charge the old system again

எண்ணங்கள் 13189034291840215795 said...

அப்பா வழியில் மகளா. வாழ்த்துகள். சித்ரா..

Chitra said...

மங்கள புன்னகையே, நன்றி.
அமுதமான தமிழே, தாவாக்கட்டை, ஏன் தீர்ந்து போகுது?
charge the old system??????

Alarmel Mangai said...

அடடே, நான் என்னவோ "நான் பெற்ற இன்பம் இவையகமும் பெறட்டும்" னு நினைச்சேன். இவ்வளவு
விஷயம் இருப்பது முழுப் பண்டிதர் சாலமனுக்கும், அரை வேக்காடு அம்முவுக்கும் தெரியாமப் போச்சு.
இப்ப இது ஒரு பெரிய விஷயமே இல்லை... நம்ம கட்சி எதுக்கு இருக்கு? அத்தனை தொண்டர்களையும் கட்சிப் பணியில் ஈடுபடுத்த வேண்டியதுதான்...

Chitra said...

ஜெட்லி, நீங்க எல்லாம் titanic. நான் வெறும் boat. உங்கள் commentukku, ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.

Chitra said...

தமிழினி, உங்க commentukku ...........,............, ..........., ..........., ........

சூர்யா ௧ண்ணன் said...

//விளையாட்டு போக்கில், மக்கள் தன்னையும் அறியாமல் "follow" ல click ஆகும்படி வைத்து விடுவோம்.//

Follow பண்ணியாச்சு!.. பண்ணியாச்சு!..

Chitra said...

என்ன சொல்றதுனே தெரியலை, சூர்யா அ(க)ண்ணன் அவர்களே....... நாம எழுதுனதுக்கு கூட, இந்த effect ஆ???

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

அம்மு, சும்மாவா உங்களை, என் கட்சிக்கு குண்டர் படை தலைவியா பதவி கொடுத்திருக்கேன்?

Prasanna said...

//எனக்கு, சரத்குமார் மாதிரி முன்ன பின்ன யோசிக்காம கட்சி (blog) ஆரம்பிச்சிட்டோமோ என்று இருந்தது.//
ஹா ஹா.. புதுசா ஆரம்பிக்கற எல்லார்க்கும் வர பயம் தான்..
நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள் :)

Chitra said...

நான் அரை வேக்காடு என்று தெரிந்தும் வாழ்த்தி உற்சாகப்படுத்துவதற்கு நன்றி.

goma said...

நான்தான் உலக மகா பிளேடுன்னு நினைச்சிருந்தேன் என்னையும் மொக்கையாக்கி விட்டாரே ......
இப்படிக்கு
சித்ராவின் வருகையால் பிளேடின் கூர் கெட்டவர் சங்கத் தலைவி கோமா.

goma said...

அம்முவின் தமிழ் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.அடுத்த வலைப்பூ அம்முவிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

Goma madam, thank you.

பித்தனின் வாக்கு said...

நல்ல எழுதி இருக்கீங்க சித்ரா, நல்ல இடுகை. நன்றி.

Chitra said...

நன்றி, பித்தன். என்ன தோணுச்சோ அதை தான் எழுதினேன்.

வால்பையன் said...

நகைச்சுவையா இருக்கு!

தொடர்ந்து எழுதுங்க!

Chitra said...

நன்றி வால் பையன் (ர்). இப்பதான் திருநெல்வேலி நக்கல் பேச்சு தமிழிஷில் போட்டுருக்கேன். அந்த நகைச்சுவையும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

english words athigama use pannathiga

Chitra said...

சரிங்க, நான் அதை கவனிக்கலை. அப்படியே தோன்றுவதை எழுதினேன். ஆங்கிலம் கலப்பதை யோசிக்கவில்லை. கொஞ்சம் முயற்சி எடுத்து குறைச்சிக்கிறேன்.