Friday, November 13, 2009

இவக பக்கத்து வீட்டில் இல்லையேனு சந்தோஷப்படுங்க..

 
பக்கத்து வீட்டு அக்கா:  friendly nature; ஓடி வந்து உதவுபவர்; நம் வீட்டில் ஒருத்தி போல் இருப்பவர்.
Don't take her for granted. You don't know who, few people are put up with...... keep reading......

பக்கத்து வீட்டு  நொக்கா:    அக்காவுக்கு நேர் எதிர்.

என் நண்பர்களுக்கு ஏற்பட்ட சில  அனுபவங்களை என்னிடம் புலம்பியதிலிருந்து  தொகுத்து இங்கே தந்துள்ளேன். இப்படியும் நிஜத்தில்  இருக்காங்க......

என் நண்பர்:  "நான் ஊருக்கு போயிட்டு ஒரு வாரம் கழித்து பத்தாம் தேதி மதியம்  வரேன். அன்னைக்கு காலையில்  மெட்ரோ வாட்டர் ஒரு குடம் எனக்கும் சேர்த்து பிடித்து வைத்து விடுகிறீர்களா?"
பக்கத்து வீட்டு  நொக்கா :  சரியா போச்சு. நீயே phone செய்து ஏற்பாடு பண்ணிட்டா, பத்தாம் தேதி மதியமே ஒருத்தன் வந்து தண்ணி கேன் வீட்டில் வந்து டெலிவரி பண்ண போறான். இதுக்கு நான் எதுக்கு? நீ நிம்மதியா ஊருக்கு போயிட்டு வாப்பா.
(தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்காம வேதாந்தம் பேசிக்கிட்டு.....)

பக்கத்து வீட்டு  நொக்கா:   எதிர்த்த வீட்டு வேலைக்காரி என் வீட்டிலும் கொஞ்சம் உதவிக்கு வராளானு கேக்கணும்.
எதிர்த்த வீட்டில் நிறைய சங்கதி நடக்குறது. எதுவும் நமக்கு முழுதா தெரிய மாட்டேங்குது.
(புரணி  பேச வேலைக்கு ஆள் வைத்து - அவளுக்கு சம்பளம் கொடுத்து.......)

பக்கத்து வீட்டு நொக்கா:   நேற்று ராத்திரி, உங்க சின்ன பொண்ணு அலற சத்தம் கேட்டதே. என்ன ஆச்சு?
(அலறல் கேட்டதும் உதவிக்கு உடனே வராமல் - மறு நாள் கதை கேட்கும் அழகு சுந்தரி.......)

பக்கத்து வீட்டு நொக்கா: என்ன இவ்வளுவு late ஆ தினமும் வேலையில் இருந்து வரே? அக்கம் பக்கத்தில் என்ன என்னவோ பேச போறாங்க......
(என்னே உந்தன் கரிசனம்.... அந்த அக்கம் பக்கம் என்பது நீதானே? இல்லைனா, அப்படி பேசுறவங்க கிட்டதான அறிவுரை சொல்லணும்.)

பக்கத்து வீட்டு நொக்கா: potluck dinnerkku  நீங்க rice pulao (புலாவ்) கொண்டாங்க;  நீங்க chicken curry கொண்டாங்க; நீங்க சாம்பார் கொண்டாங்க; நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு veg. டிஷ் - கூட்டு அல்லது பொரியல் அல்லது குருமா - கொண்டாங்க; நீங்க இனிப்புக்கு ஏதாவது கொண்டாங்க; நான் வெள்ளை சாதம் வச்சு வெங்காய பச்சடி (raita) பண்ணிடறேன்.
(நல்ல மனசுக்காரி - வெள்ளை சாதம் வைக்கிற கஷ்டமான வேலைய தோழிகளுக்கு கொடுக்காமல் தானே கஷ்டப்பட்டு செய்யப்  போறா....)

என்  தோழி: உங்க வீட்டு இட்லி பொடி நல்லா இருக்கு. எனக்கு  கொஞ்சம் தாரீங்களா?
பக்கத்து வீட்டு நொக்கா: கொஞ்சம் தாரேன். ஆனால் எங்க ஊரில் இட்லி பொடி கொடுத்தா ஒரு ரூபாவது கையில வாங்கிக்கணும். சும்மா கொடுத்தா சண்டை வந்திடும்னு ஒரு நம்பிக்கை. அதனால், நீங்களும் காசு கொடுத்திடுங்க.
(எந்த ஊரு நம்பிக்கையோ? இட்லி பொடிக்காக ஊரையே விலை பேசுறா.....)

பக்கத்து வீட்டு நொக்கா:  உங்களுக்கும் கொடுக்க சொல்லித்தான் அவங்க கேக் கொடுத்தாங்க. உங்களுக்கு பிடிக்குமோ என்னவோனு வேண்டாம்னு சொல்லிட்டோம்.
(காசா? பணமா?  ஓசியில் ஒரு ஆள் கொடுக்கிறதில் கூட ஆப்பு வச்சிட்டாளே ......)

என் தோழி : ஒரே கவலையா இருக்கு. ஒரு வயசு ஆகியும் என் மகன் இன்னும் சரியா நடக்க மாட்டேங்கிறானே.
doctor இன்னும் ரெண்டு மாதம் wait பண்ணலாம் என்கிறார்.
பக்கத்து வீட்டு நொக்கா: எனக்கு அந்த கவலையே இருந்தது இல்லை. எட்டு மாதத்திலேயே என் பொண்ணு நல்லா நடக்க ஆரம்பிச்சுட்டா.
(தோழியின் சோகத்தை  என்னமா புரிந்து கொண்டு பங்கு எடுத்துகிறா .......)

பக்கத்து வீட்டு நொக்கா:  நல்ல குறைந்த விலை என்று இந்த சல்வார் செட் என் பொண்ணுக்கு எடுத்தேன். அவளுக்கு கலர் பிடிக்கலை, வேண்டாம் என்று சொல்லிட்டா. என் தங்கை மகளுக்கு கேட்டேன். அளவு சரியில்லை. மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறவங்க கிட்டே கேட்டேன். இந்த designil வேறு நிறத்தில் வைத்து இருக்காளாம். என் அண்ணன் வீட்டில் கேக்கலாம்னா இதை எடுத்துக்கிட்டு காசு கொடுன்னு எப்படி கேக்கிறது?  வேற யாருக்கு நல்லா இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன். உங்க பொண்ணுக்குத்தான் இந்த design கலர் எல்லாம் அருமையாய் இருக்கும். இந்த சல்வார் செட்டில் ரொம்ப அழகா இருப்பாள். வாங்கி கொள்கிறீர்களா?
(ஊரில் இளிச்ச வாய் யாரு? கோவில் ஆண்டி..........)

பக்கத்து வீட்டு நொக்கா: என் மகனை (எட்டு வயது) சினிமாவுக்கு கூட்டிட்டு போறீங்களா? சும்மா இருக்க மாட்டானே. கோக் வாங்கி கொடு, popcorn வாங்கி கொடு, chocolate வாங்கி கொடு, chips வாங்கி கொடு என்று கேட்பானே. எல்லாம் வாங்கி கொடுத்து எப்படித்தான் சமாளிக்க போறீங்களோ?
(எட்டு வயது பையன் கூட புரிஞ்சு நடந்துப்பான் போல இருக்கு. விட்டா இவங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வரச் சொல்வாங்க போல.....)

பக்கத்து வீட்டு நொக்கா:  உங்க friendu குடும்பம் ஊரில் இருந்து வந்தா, எப்படி உங்க ஒத்த பெட்ரூம் apartmentil தங்க முடியும்? உங்க வீடு வசதியா இருக்காதே. லிவிங் ரூமில் (ஹாலில்) படுத்துக்கலாம் என்றால் அதுவும் சின்னதாக இருக்கே. எப்படி சமாளிப்பாங்க?
(வர guestum கவலை படலை. வீட்டில் உள்ளவர்களும் கவலை படலை. இவ மட்டும், கவலை படற மாதிரி பேசிக்கிட்டே எப்படி குத்தி பேசுறா? சந்தர்ப்பம் பாத்து negative comment ஐ வாழை பழத்தில் ஊசி சொருகிறாப் போல சொல்றா....)

என் தோழியின்  புலம்பல்: நான் உடனே அம்மா வீட்டுக்கு வர வேண்டியது இருந்ததால்,  வேறு ஊரில் இருந்து வரும் என் கணவருக்காக , சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு வந்தேன். திரும்பி போய் பார்த்தால், என் fridge இல் நான் வாங்கி வைத்து இருந்த காய்கறிகள், மீதியிருந்து உள்ளே எடுத்து வைத்து இருந்த உணவு எல்லாம்  என் dining table மேல் இருந்தன. fridge உக்குள் என்ன என்று பார்த்தால், எல்லாம் பக்கத்து வீட்டுக்காரியின் பொருட்கள். நான் சீக்கிரமாக வருவேன் என்று எதிர்பார்க்காதவள், என் பொருட்கள் போனால் போகிறது என்று வெளியே வைத்து விட்டு, அவள் fridge ஐ use பண்ண ஆரம்பித்து விட்டாள். இவளை நம்பி இன்னும் ஒரு நாள் கழித்து போயிருந்தால், இங்கு வீட்டில் குடித்தனமே பண்ண ஆரம்பித்து இருப்பாள்.
(நல்ல வேளை: லீலைகளை dining room ஓடு நிறுத்தி விட்டாள்.......)

பக்கத்து வீட்டு நொக்கா: இப்போதான் மணக்க மணக்க மீன் குழம்பு பண்ணி சாப்பிடலாமேன்னு எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன். பக்கத்து வீட்டு பாட்டி, இந்நேரமா பாத்து மண்டைய போடணும்?
(அவளுக்கு, திரும்பி வரா உயிரை விட திரும்பி வைக்கப் போகிற மீன் குழம்பு முக்கியம்...........)

உங்க பக்கத்து வீட்டில் அக்காவா? நொக்காவா?
அக்காவா இருந்தால், கடவுளுக்கு நன்றி!
நொக்காவா இருந்தால், கடவுள் உங்களை காப்பாற்றட்டும்!

7 comments:

Chitra said...

From Sangeetha: (via e-mail)
Blogs padikkiraen, supera irukku.. kalakuringa ponga....

goma said...

பக்கத்து வீட்டில் அக்காவா நொக்காவான்னு நாம டிசைட் பண்ண முடியாது .....
நாம நொக்காவா இல்லாம பார்த்துக்கலாம் .
சரியா அக்கா?

Chitra said...

நாம decide பண்ண முடியாதுதான். அதற்காக பக்கத்து வீட்டுக்கு பலிகடா ஆக முடியுமா, Goma madam? blog length கருதி, சில சம்பவங்களை சுருக்க வேண்டியதாகி விட்டது. அதனால், நண்பர்களுடைய feelings ஐ எவ்வளவு cover பண்ணேன்னு தெரியலை.

Vishy said...

அக்காவோ, நொக்காவோ, பக்கத்து வீடு பளிச்சுன்னு இருந்தா, அது பக்கா :)

goma said...

நான் பலிகடா ஆன பின்னும் இப்படி எழுதுகிறேன்...

கொஞ்சம் இனா வானா,கொஞ்சம் ஏமாளி...கொஞ்சம் பொழைக்கத் தெரியாதவள்...எல்லா பட்டமும் நாம் அக்காவா இருந்தால் நம்மை வந்து சேரும் கொஞ்சம் அக்கா கொஞ்சம் நொக்கா தான் நல்லது.

Chitra said...

அருமையா சொன்னீங்க, Goma madam.

Chitra said...

ிஷி, இந்த அக்கா, நொக்கா கவலையெல்லாம் ஜொள்க்காவுக்கு இல்லை....... ஹ,ஹ,ஹ.....