Saturday, November 7, 2009

தையல் கலை - அப்படின்னா kilo என்ன விலை?

சமையல் கலையை பத்தி எழுதியாச்சு. இன்னைக்கு எந்த கலையில் கைய வைக்கிறது? ஆஹ்ஹ் ..... தையல் கலை.
தையல் -  அது ஒரு கலை.  நேர்த்தியாய் செய்யப்படும் ஒரு அழகு வேலைப்பாடு. 
அது என்னவோ தெரியலை - sewing என்று சொல்லும்போது, அது ஒரு கலையா தெரிய மாட்டேங்குது. ஏதோ கிழிஞ்ச துணி தைக்கிற மாதிரி தான் இருக்கு. 


நான் 9th படிக்கும்போது, Sr.Henrietta உம்  ஒரு தையல் டீச்சரும் மாத்தி மாத்தி வந்து தையல் class எடுப்பாங்க. முதல் நாள் classil introduction for embroidery நடந்தது. "தையல் என்பதற்கு பெண் என்றும் அர்த்தம் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய கலை, இது. ............" 


அந்த வருடத்திற்கு class project,  ஒரு tablecloth க்கு எல்லா corner லேயும் embroidery இல் பூக்கள் போட வேண்டும்.
அதை  நான் போட்டிருக்க மாட்டேன் என்று என்னை நன்கு தெரிந்த எல்லோரும் correctaa guess பண்ணியிருப்பாங்க. மற்ற மாணவிகள்  embroidery போட கற்றுக் கொண்டிருந்த போது, நான் அந்த table clothai வாங்கி என் அம்மாவையும்  என் தங்கை, இந்திராவையும் முடித்து தரும்படி சொல்லி வீட்டில் கொடுத்து விட்டேன். punishment il இருந்து தப்பிக்க, classil என் அருகில் இருந்த தோழியின் tablecloth தின் ஒரு corneril அவள் வேலைப்பாடு செய்து கொண்டிருக்க, மறு முனையை desk க்கு அடியில் விட்டு மேலே என் பக்கமாக இழுத்து அது வேறு table cloth மாதிரி  நான் சும்மா பிடித்து கொண்டிருப்பேன். ஊசியில் நூல் கோர்த்து, நூலின் இறுதியில் முடிச்சு போடாமலே சும்மா ஊசியை வைத்து  குத்தி இழுத்து தைப்பது போல் பாவனை செய்தேன். 
அதனால்தானோ என்னவோ, இன்றுவரை embroidery னு  spelling தவிர வேறு எதையும் தெரிந்து கொள்ளவில்லை. 


தையலில் பல வேலைப்பாடுகளை கற்று தையல் ராணிகளாய் இருப்பவர்களை கண்டு அதிசயப் பட்டிருக்கேன். எங்க ஊரிலே நான்கே இந்தியன் குடும்பங்கள். அதில் பெல்லா, தையல் கலையில் கை தேர்ந்த  தையல். 
நூலை நெருக்கமா வச்சு தையல் போடுறாங்க - அதுதான் embroidery.
நூலை ஒரு  துணியில்  ஷேப்பா வெட்டி தைக்கிறாங்க - 
அதுதான் dress.
நூலை வைச்சு ஒரு  துணியை பல துணிகளோடு ஒட்டு போட்டு 
தைக்கிறாங்க - அதுதான் quilt.
நூலை வச்சு ரெண்டு மெலிஞ்சு போன கில்லி குச்சி வச்சு லூசா ஆட்டுறாங்க  - அதுதான் crochet. 
நூலை ரெண்டு பெரிய குத்தூசி மாதிரி இருக்கிற - நம்ம ஊரில் வெள்ளிகிழமையோ சனிகிழமையோ மட்டும் சில பெண்கள்,  தலைக்கு குளிச்சிட்டு, அது அந்த தெருவுக்கே தெரிய மாதிரி நின்னுகிட்டு,  ஒரு சிணுக்குவாரியோ சிணுக்கொலியோ வச்சிக்கிட்டு சிடுக்கு சிக்கு எல்லாம் எடுப்பாங்களே - அந்த மாதிரி ரெண்டை வச்சிக்கிட்டு - கோலாட்டம் அடிக்கிற மாதிரி பண்றாங்க - அதுதான் knitting. 
இப்படி பல வித்தைகளை நூல் கண்டில் செஞ்சு காட்டுறாங்க. 


எனக்கு வீட்டில் ஊசி நூல் வச்சுக்கவே யோசனையாய் இருக்கு. நம்ம வெட்டி பேச்சு தொல்லை தாங்க முடியாம யாராவது என் வாயை சேத்து வச்சு தைச்சிட்டுங்கன்னா? எதுக்கு வம்பு? வேணாம், அப்பு - வேணவே வேணாம்.


அது போகட்டும். இப்ப என் மூளை ஏன் எங்க தையல் டீச்சர் சொன்ன முதல் நாள் introduction வார்த்தைகளை மட்டும் இன்னும்  நினைவு வச்சிருக்கு. ஆனால் அவங்க கத்து கொடுத்த embroidery யை நினைவு வச்சுக்கலை? 
அந்த topic இல் ஆராய்ச்சி எல்லாம் பண்ணுது. அதுக்கு மேல போய் தையல் கலையை கத்துக்க மட்டும் மாட்டேங்குது.  பெண்ணை ஏன் தையல் என்று சொல்கிறார்கள்?  தையல் என்ற வார்த்தை பெண் என்றும் அர்த்தம் கொள்ளும் என்றால்,  தையல்காரன் என்ற வார்த்தை யாரை குறிக்கும் - என்ன அர்த்தம் கொள்ளும்?  பெண்ணுக்கு தையல் மாதிரி, ஒரு ஆணுக்கு கலைகளில் எந்த பெயர் பொருந்தும்? ஏன் தையல் என்ற தமிழ் வார்த்தையை நிறைய பேர் இப்ப use பண்ண மாட்டேங்குறாங்க? தையல் என்று சொன்னாலே என் மூளை,  நூல் கண்டில் சிக்கல் விழுந்தது போல் ஆகிறது.


அன்னைக்கும் இன்னைக்கும் எனக்கும்  தையலுக்கும் ஒரே போராட்டம்தான்.
தையல்னு  சொன்னியே எந்த தையல்னு சொன்னியானு கேட்காதீங்க. நூலை வச்சு - ஊசிய வச்சு - மேல குத்தி கீழ இழுத்து - கீழ குத்தி மேல இழுத்து - முடிச்சு போட்டு - இப்படி சுத்தி - அப்படி சுத்தி - கிட்டிபுல் விளையாண்டு - சிக்கு எடுத்து - சிடுக்கு போட்டு - கும்மி அடிச்சு - கோலாட்டம் ஆடி -  நேர்த்தியா பண்றாங்களே - அந்த தையல்தான்.

18 comments:

தமிழினிமை... said...

AvaLaa nee?sollaavae illa...

goma said...

தையல் சொல் கேளேல் என்ற பாடலைச் சரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவுதான் உங்களுக்குத் தையல் புரியவே இல்லை.

ராமலக்ஷ்மி said...

ஆகா அந்த நாட்களுக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். மறந்தே போயிருந்தது அந்த ‘தையல்’ வகுப்பு நாட்கள். ஹி, நானும் என் தங்கையுடன் கொடுத்துதான் எம்ப்ராயிட்ரி முடித்தது:))! அந்த வகுப்புகளில் நானும் // நூலை வச்சு - ஊசிய வச்சு - மேல குத்தி கீழ இழுத்து - கீழ குத்தி மேல இழுத்து -// அங்கே பார்த்து இங்கே பார்த்து நேரத்தைக் கடத்தியதோடு சரி:)! இப்போ மெஷினில் தைக்க வருவதைத் தாண்டி பெரிசா ஏதும் தெரியாது அந்தக் கலையில்.

நல்லா எழுதியிருக்கீங்க:)!

Chitra said...

Amudha, naama 9th il adikkaadha kooththaa? andha conductor bag, goemetry miss, Ms.Panjavarnam gyaabagam irukkaa?

Chitra said...

adhaan, Goma madam - thaiyal class eduththa "thaiyal" teacher solli koduththathai kekkaamal vittuten. :-)

Chitra said...

Ramalakshmi akka, nanri. vaaraththukku oru naal nadakkum andha classgalukku madhippe thanithaan.......sema jolly ponga.

தமிழினிமை... said...

Ellaarum jamaa saendhaachchaa?THAAMIRAPARANI thanniyum IGNATIUS CONVENT thanniyum saendhu oedudhu BLOGil..nalla munnaettram.ANGITTU DHAMAYANTHIyum INGITTU vandhaahannaa VATTAM poorththi aahumm..nadakkattum nadakkattum.Naeththu comment panninappa nadandha kooththa FACEBOOKla unnudaya SUVATTRIL ezhudhiyirukkiraen paaru..EVVVVVLOE PERIYA(DHEVAYANI maadhiri vaasikkavum)COMMMMMMMENTUU!..in 1 minute everything vanished..raaththiri muzhukka thoongavae illa theriyumaa?

தமிழினிமை... said...

ramalakshmi akka,vaanga!!!kalandhu kalandhu pazhaguvoemmm-koodi,koodi kummi adippoem..en thozhiyin BLOGukku neenda naatkkal kazhiththu vandhdhamaikku nandri..(if u had come a little earlier ,innum konjam paiththiyam jaasthi aahiyirukkum-CHITHRAAVUKKU)

தமிழினிமை... said...

CHITHTHU,ellaamae nyaabaham irukku............JASMINE MISSoeda frock....,CATHERINE MISSoeda shirt&skirt....,FIRST STANDARD MISSsoeda payyan(HE SOMEWHAT RESEMBLES HENNY)...,BAAMA MISSsoeda kanniyam...,SATHYA BAAMA MISSsoeda melindha dhaeham(i still remember when she was teaching about absent mindedness-she washed her hands with butter milk thinking it was water)...,POONGKODI MISS classil naam class DECORATIONukku vaangiya parisu(a big ball which v hung in our class room)...,GOMATHI MISSoeda voice...,MUTHTHU LAKSHMI MISSsoeda vaLaindhu neLindha koondhal &her maths....,8th standard missoeda------------..,JEYA MISSsoeda veLLikkizhamai pattuch chaelaihaL...,SOLOMON MISSsoda death...,METTILDA MISSoeda maternity death...,PANJAVARNAM MISSsoeda 'CATCH THE GEOMETRY NOTE BOOK CONTEST'....,PUSHPA MISSsoeda "OETTA VURUVAMAE"...,JEBA MISSsoeda manliness...,"KUR...KUSALAvoeda attahaasangaL,LOYALA CONVENT -XAVIER annavum avanga TROUSERum,avanga family...,namma music master...(he is now in ANGU ISAIKKUZHU-U WOULD HAVE SEEN HIM IN LALITHAvin pattukku paattu)..,appuram naama LOYOLA vila poeetta garden(when teacher told that plants grow well on singing v used 2 go ther &sing regularly)appuramaa nammaloeda kutti kaalaththu friends elloerum.....romba thaedudhu elloerayummm..i want 2 go back and live that life again..we would have had all our prejudices,favouring and all silly stuff..BUT NOW THE HEART IS SO TAMED AND FILLED WITH LOVE 4 ALL OF THEM .Do u remember-one of our class mates-SUDALAI SUNDARI used to sit alone and have her lunch .nobody willed 2 take her as a lunch partner.(1st std,2nd std)-the only reason -she being very black&not good looking(???????????????)and not rich..SORRY SUDALAI-we all have a share of the injustice done 2 u..wherever u r v send all those love u missed from us(tears r rolling down my eyes as i write this 2 u)chiththu ....idhukku maela ezhudha mudiyala..

தமிழினிமை... said...

edhayaavadhu sollaama vitturundhaennaa nee ezhudhu...I'M CHOKED HABIBI..

Chitra said...

Oh boy, that was our school life in a minute mini- tortoise surul.
I remember Sudalai Sundari too. For whatever reason (hopefully not because of her mean class mates) , she changed her school/or town. May God bless her. 8th std. teacher - Immaculate miss. 6th grade tamil teacherin "erumai, erumai", 7th std.in Mrs.Leela Packiaraj (the impact of the Muslim rule in India also includes introduction of biriyani to Indian cuisine. But do not write this point in your test papers...), Rani missin history and geography classes, Mary kamalam miss in "do not show your stupidity in the class" - (i am going to use this phrase in one of the blog kooththu...), and Amudha, HOW CAN YOU FORGET THE GREAT KURUVAMMA - GAJA RAJAM miss? (May God bless her soul) I had a never -ending "war" with her.

Chitra said...

I sent a mail to Dhamayanthi too.

Chitra said...

first standard missoda peru, Mrs.Edward. She worked at Rosemary for few years after her retirement. Rosemary has taken over the whole area around the convent and convent looks like "araichchu vachcha thuvaiyal at the end of the ammi kallu". so sad......

Alarmel Mangai said...

Chitra and Amudha,

First, thanks a lot Chitra, for bringing back the scene back so vividly.

More and more, the comments are becoming nostalgic... Thanks for bringing back sweet and sad memories. How can I forget all those teachers who made life interesting, when there were some dull pauses. But wait, I do not remember any dull moments with GAJA RAJAM rocking the earth, KUR KUSALA with all her monkey tricks, PANJA VARNAM's hysterical outbursts. We called Jyothimani miss, "Thodudaiya Seviyaal" as her ear-rings were always on the verge of jumping out of her ear lobes.

Hmm...beautiful memories.....

However, that was a beautiful phase and come on girls, we need to move on, enjoying the phase we are in right now. We will talk about the past, enjoy, have a few laughs together, but move on...

Love,
Ammu

Alarmel Mangai said...

Chitra,

That does not mean you should stop writing about the past school life. Keep writing, trigger our memory, make us go down the memory lane, make us laugh, cry, but bring us back to reality by posting from the present life :))))

Eppadi idea?

Overaa pastukkulla poi vidamal paarthukkonga. Tamizhini remba emotional akittangale?

Adutha jokai eduthu vidunga, please!!!!!!!!!!

Ammu

Chitra said...

jothimani miss - vellai mudi - karuppu kondai.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இன்னைக்கு நிறைய உங்களுடைய பதிவுகளைப் படிச்சேன்.. நல்லா சுவாரசியமா இருந்தது..
தையல் நானும் படிச்ச்சென்னு ஒரு ஃபேஷன் மேக்கர் மிசின் வாங்கி வச்சேன்.. அது அலமாரியில் 10 வருசமா தூங்குது.. :))

Chitra said...

ஹா, ஹா, ஹா, ... நீங்களும் நம்ம இனம். முத்துலட்சுமி அக்கா, ரொம்ப நன்றி. தொடர்ந்து படிங்க.