Tuesday, June 29, 2010

அப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க ..... பேப்பர் இரண்டு

முன்னுரையும் முதல் ஐந்து கேள்விகளும்: 

சரி, இப்போ அடுத்த கட்ட டொச்சு கேள்விகளுக்கு:

பல்லு வலிச்சாலும் வாய் வலிக்காம பேசும்,  "பஞ்ச்" பக்கிரிசாமியின் கேள்வி:
6.  நாலு பசங்க ஒண்ணு சேர்ந்தா அவர்கள் பேசற டாப்பிக் கண்டிப்பாக....
   பொண்ணுங்களை பற்றி இருக்கும்
   சமீபத்தில் பார்த்த நல்ல சினிமா, கெட்ட சினிமா பற்றி இருக்கும்
   முந்தினநாளு சரக்கடித்த மட்டையான மேட்டரு பற்றி இருக்கும்
ஆனா இந்த பொண்ணுங்க நாலுபேர் ஒண்ணு சேர்ந்தா அவ்ளோ நேரம் பேசி பேசி சிரிக்கிறாங்களே
அப்படி எதைப்பத்தி பேசுவாங்க...?

1.  அதேதான்....... மற்ற பெண்களை பற்றி - உறவினர் அல்லது தோழிகள் அல்லது சண்டை கோ(தோ)ழிகள், அலட்டல் பொண்ணுங்க,  முகமே தெரியாத/பரிச்சயம் இல்லாத  பொண்ணுங்களை கூட விட்டு வைக்கிறது இல்லை.
   நீங்க பேசுனா அரட்டை - நாங்க பேசுனா  gossip - புரணி - அப்படின்னு சொல்றீங்க.
 அதேதான் ......... சினிமா - டிவி ப்ரோக்ராம் - கலை நிகழ்ச்சிகள் - சமையல் - உணவகங்கள் - புத்தகம்.
 அதேதான் ....... அடித்த திருட்டு தம்மு, சரக்கு இருந்தால் அதை பற்றி ...... அஸ்க்கு புஸ்க்கு...  இப்படி சொல்லுவோம்னு நினைச்சீங்களா....... ஆசை... தோசை.... 
2 .   குழந்தைகளை வைத்து பெருமை பாராட்டி கொள்ளல்.
3 .  ஷாப்பிங் - லேட்டஸ்ட் ஐட்டம்ஸ்,  புது கடை, தள்ளுபடி விலை,  etc ...etc....
4 .  பெருமூச்சு விட வைக்கும்  தனக்கு கிடைக்காத வாழ்க்கை அல்லது பொருட்கள்.
5 .   தான்தான் டாப்பு  என்ற வகை  பெருமை பேச்சுக்கள்  - இல்லையென்றால்  -  தான்தான் பாவப் பட்ட ஜென்மம் என்ற வகை  பேச்சுக்கள். 
6 .  பள்ளி - காலேஜ் கால லூட்டிகள்,  கலாட்டா  - சைட்  அடித்த  "ஹீரோஸ்"  -  தன்னை சைட் அடித்த  "ஹீரோஸ்" பற்றி ....
7 . பேச காரணம் வேணுமா என்ன?  ஒண்ணுமே இல்லைனா கூட - எதையாவது மணிக்கணக்காக  பேச கண்டு பிடிச்சு பேசப்படும்.

ஆயிரம் பொற்காசுகளை ஒரு சின்ன பர்சில் திணிக்க திணறும் "திருவிளையாடல்" தருமியின் கேள்வி: 
7 .  நாங்க ஒரு சின்ன purse வைத்து சமாளிக்கிறோம். ஆனால், நீங்கள்  எங்கே போனாலும் ஒரு பெரிய purse - இல்லை என்றால் - ஒரு பெரிய hand bag தூக்கிட்டு போறீங்களே, அப்படி என்னதான் அதில் இருக்கும்?

1 .  Driver's License - credit card/cheque book - money - hand-kerchief or tissues - hand-sanitizer or lotion - make-up items (optional) - sanitary napkins (optional) - first-aid kit (optional) - photos/camera  (optional) - 
mint/mouth refresher (optional)  - pen - cell phone - keys.
2.   ஏதாவது ஒரு லிஸ்ட் அல்லது சின்ன குறிப்பேடு  இருக்கும்.
3.  தேவைப்பட்டால்,  குடை - தண்ணீர் பாட்டில் கூட இருக்கும். 
4 .  குழந்தைகள் இருந்தால் வேற கேள்வியே இல்லை - ஒரு மினி மார்ட் உள்ளே இருக்கும்.
5.  "மத்திய பிரதேசத்தில்"  பிரச்சினை செய்யும்  பின் சீட்டு (இருக்கை) " தீவிரவாதிகளை" சமாளிக்க ஒரு பின் அல்லது ஒரு சின்ன ஷார்ப் object .

sample for American humour:

சும்மா  இருந்தாலும்  கிண்டி  விட்டுப்  போகிற  "கோள்மூட்டி" குப்புவின்  கேள்வி : 
8 .   பசங்க முன்னாடி வேற பசங்களை பத்தி உயர்த்திச்சொன்னா அதை கண்டுக்கறதில்லை...அதுவே பொண்ணுங்க முன்னாடி மத்த  பொண்ணுங்களை உயர்த்திச்சொன்னா ஏதோ கரியிற மாதிரி வாடை அடிக்குதே அது ஏன்???
1.  ஒரே வார்த்தை - பொறாமை. 
2 . ஈகோவுக்கு ஒத்து வராது. 
3 .  தன்னைத்தான் மற்றவர்களை விட better என்று நினைத்து எல்லோரும்,  குறிப்பாக ஆண்கள்  அதிகம் நேசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,  மண் விழுந்து விடுவது பிடிக்காது. 
4 .  எப்போதும் உண்மை இல்லை.  பெருந்தன்மையாக  அதை ஏற்றுக் கொண்டு  பாராட்டி பேசுவது  உண்டு. 
5 .  தன்னை கடுப்பேத்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் சில சமயம் ஆண் அப்படி பேசும் போது - நக்கல் அல்லது குத்தல் பதில்கள்  தரப்படும். அந்த கடுப்பான பதில்களுக்கு காரணம்: அந்த பெண் மேல் உள்ள எரிச்சல் அல்ல, அந்த ஆண் மேல் உள்ள எரிச்சல் தான்.


காதல் கப்பல் கரை சேரும் நாள் எப்போ என்று காத்து இருந்து,  கதை கந்தல் ஆன "காத்தாடி" காத்தவராயன் கேட்கிறார்: 
9 .  அது ஏன்  பொண்ணுங்க பசங்களா வந்து லவ்வை சொல்லனும்னு எதிர்பார்க்குறாங்க... இதனால எத்தனை லவ்வு பெயிலிராயிருக்கிறது. அது ஏன் இப்படி பண்ணுறாங்க????

1 .  எதற்கும் ஒரு பாதுகாப்பாக இருந்து கொள்வோமே என்று ஒரு நினைப்புதான்.
2 .  இப்போ எல்லாம், பெண்களும் காதலை முதலில் தெரிவிக்கிறாங்களே  .... ஆளை பிடிச்சு இருந்தா கேக்குறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.....
3 . நேரிடையாக சொல்லாமல்,  கண்களாலோ இல்லை  குறிப்பாலோ சொல்லுவார்கள்.  அது புரியாத மாங்க மண்டைக்கு, காதல் எதற்கு என்று ஒதுங்கி சென்று இருக்கலாம். 
4  .  வெளிப்படையாக சொன்னால் தன்னை பற்றி ரொம்ப cheap ஆக நினைத்து விடுவார்களோ என்ற உணர்வு.  ஈகோ தரும்  பயம்.
5 . காதல் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் ஆண்களை விட பெண்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள்.  அது ஒரு பலவீனம். 
6 . தனக்கு பின்னால் ஆண்கள் கெஞ்சி கொண்டு அல்லது லோ லோனு வழிந்து கொண்டு  வருவது இன்னும் பிடிக்கும் - பெருமை என்று கருதப்படும். 
7 .  ஆணாய் வந்து சொல்வது,  தன் அழகுக்கு - இல்லை, திறமைக்கு உள்ள recognition என்று நினைத்து கொள்வதால்.


பஸ் ஸ்டாப் - பஸ் ஸ்டாப் ஆக அலையும்  "ஜோல்னா" சிங்காரம் கேட்கும் கேள்வி: 
10 .  ஆண்கள் திருமணத்துக்கு பின்னும் - குழந்தைகள்  பிறந்த பின்னும் இன்னொரு பெண்ணை பார்த்து ஜொள்ளுவதையும் அதை பற்றி பேசிக் கொள்ளுவதும் தவறாக கருதப்படுவதில்லை. ஏன், பெருமையாக கூட நினைத்து பேசுகிறார்கள்.  ஆனால், பெண்கள் திருமணத்துக்கு பின் ஜொள்ளவே  மாட்டார்களா? அதை பற்றி வேறு பெண்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்களா? அப்படியே பகிர்ந்து கொள்ளும் பெண்களை பற்றி, பெண்களே என்ன நினைக்கிறார்கள்? 

1 .  சும்மா பாக்குறது  தானே ..... ஒண்ணும் தப்பு இல்லை. அதை மற்ற தோழிகளிடம் சொல்வது -  அவர்களுக்குள் இருக்கும்  நெருக்கத்தை, நம்பிக்கையை பொறுத்தது. 
2 .  பொதுவாக,  திருமணமான பெண்கள் அப்படி செய்வது  இல்லை.   வீட்டு கடமைகள் , கவலைகள்  தான் மேலோங்கி நிற்கும்.  அப்படியே இருக்கிறது என்றாலும் சினிமா ஹீரோ  என்ற  ஒரு public இமேஜ்  கொண்ட  குறுகிய வட்டம்தான். 
3 .   பெண்கள்  சொன்னால், ஏதோ கற்பே போன மாதிரி மற்றவர்கள் பேச ஆரம்பித்து விடுவார்களே என்ற பயம் ஒரு காரணம்.  எதுக்கு வம்பு என்று ஒதுங்கி விடுவது.
4 .  மற்றவர்களிடம் சொல்வது இல்லை  - கதை/கவிதையில் கற்பனை நாயகனாய் ரசிப்பதுண்டு.
5 .  சில  பெண்களுக்கு double   personality உண்டு.  ஊருக்காக ஒரு முகம்/வரைமுறை  -  உள்ளுக்குள்  மடிந்து கொண்டு இருக்கும் உண்மை முகம்/ஆசைகள்/கனவுகள்.   பார்த்தாலே  தப்புதான் என்று அடக்கி கொள்கிறார்கள். இன்னும் அந்த சுதந்திரம் வரவில்லை - குறிப்பாக தமிழ் பெண்களுக்கு.
6 . இந்த கேள்வியை கேட்ட ஆண்கள் எத்தனை பேரு ,  தன் மனைவி,  இன்னொருவரை பார்த்து சும்மா சைட் அடிப்பதை   முழு மனதோடு  ஏற்றுக் கொள்வார்கள்? 

இத்துடன் இந்த கேள்வி-பதில் நேரம் முடிவடைகிறது.  இந்த பதில்களால் யாராவது ஒருத்தரின்  "அறிவுக்கண்" - "மனக்கண்" திறக்கப்பட்டால்,  இந்த  சர்வே பதில்கள் பெரும் பலனை தந்ததாக கருதப்படும். ப்ளீஸ் - உங்கள் "நெற்றிக்கண்"ணைத் திறந்து விடாதீர்கள்.  :-)

நன்றி:  கேள்விகள் அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றி.
உங்களது  அனைத்து கேள்விகளையும் சேர்க்க இயலாததற்கு  மன்னிக்கவும்.
நன்றி:  பதில்களை அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றி.
உங்களது அனைத்து பதில்களையும் சேர்க்க இயலாததற்கு மன்னிக்கவும்.
நன்றி:  எனக்காக படங்களை கண்டு பிடித்து கொடுத்த கூகிள்க்கு நன்றிகள் பல. அந்த படங்களை போட்டு வைத்த தளங்களுக்கும், நன்றிகள் பல....  :-)

பின்குறிப்பில் ஒரு முன் அறிவிப்பு:  அடுத்த கட்ட நேயர் விருப்பம் டாபிக் கமென்ட்டில் வரவேற்கப்படுகின்றன..... இன்னும் Airtel - BSNL - கூட எனக்கு  கமிஷன் டீல் ஒத்து வராததால்,  யாரும் SMS அனுப்பி ஏமாற  வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Sunday, June 27, 2010

இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க!

எனது முந்தைய பதிவு ஒன்று,  "ஆண் பேச நினைப்பதெல்லாம்"......... வாசித்து விட்டு,  அதன் தொடர்ச்சியாக,
"ஆண் கேட்க நினைப்பதெல்லாம் ....." என்று எழுதுங்க என்று சிலர் எனக்கு இ-மெயில் அனுப்பி இருந்தார்கள்.
அடிக்கிறது வெட்டி அரட்டை,   இதுல நேயர் விருப்பம் ...... ஆஹா..... சூப்பரு என்று நானும், கேள்விகளை அனுப்புங்க ....என்னால் முடிந்த அளவு, பெண்களிடம் பேசி, பதில் வாங்கி தருகிறேன் என்று ஒரு சேவை மனப்பான்மையுடன்  அடுத்த "ஆராய்ச்சி" மணி அடிக்க கிளம்பினேன்.......  சந்தோஷமாக,  கேள்விகள் வந்து குவிந்தன.... அதில்,  மொத்தம்  பத்து கேள்விகள் எடுத்துக்கிட்டு, சர்வே ஆரம்பிச்சேன்.....  முக்கியமாக நம் பெண் பதிவர்கள் சிலரும்  ஆர்வமாக பங்கு பெற்று கொண்டாங்க......  மற்ற நட்பு வட்டங்களும் பதில் தந்து இருக்காங்க.... சிலர், அவர்களுடைய தோழிகளிடம் இருந்து பதில் வாங்கி தந்து இருக்காங்க....

 அந்த பதில்களில் முக்கியாமனவற்றை தெரிந்து எடுத்து, இங்கே தொகுத்து தந்து இருக்கிறேன்......

பெண்ணின் மனதை தொட்டு அறியாதவர்களுக்கு ஒரு சிறிய முன்னுரை: 

பெண் மனதில் - பெண் கொண்டுள்ள attitude பல வகைப்படும்.  கீழ் கண்ட பதில்களில் இருந்து நீங்கள் தெரிந்து/புரிந்து  கொள்ளலாம். அதில், நீங்கள் எந்த வகை பெண் - girlfriend/wife/friend - உடன் டீல் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து,   பதிலை சாமர்த்தியமாக செலக்ட் செய்து கொள்ளவும். தவறான பதிலுடன் தவறான வகை மனதுள்ள பெண்ணுடன் அணுகினால்,  மக்கா - உங்க முதுகில "கெட்டி மேளம்" தான்..... இதற்கு கம்பெனி பொறுப்பு ஆகாது. அதனால், உங்கள் மண வாழ்க்கையில் - காதல் வாழ்க்கையில் - வரும் "சுனாமி"களுக்கும் இந்த
வெட்டி பேச்சு "மன்னார் அண்ட் கம்பெனி" பொறுப்பு எடுக்காது.

முதல் ஐந்து கேள்விகளும் பதில்களும் இங்கே:  மற்ற ஐந்து கேள்விகள்  அடுத்த பதிவில்/இடுகையில்:

மந்தைவெளியில் இருந்து "கரிசனம்" கந்தசாமி கேட்கிறார்:
1. நான் ஆணாக பிறந்து இருக்கலாம் என்று எப்போதாவது நினைத்தது உண்டா?
(முடிந்தால், இரண்டு மூன்று வரிகளில் எப்பொழுது (why and when)  என்று சொல்லவும்.)

 1.   ஒரு போதும் நினைத்தது இல்லை.
2.   நான் ஆணாகப் பிறக்காததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வேன்.  
3 .   நான் வளர்ந்ததே ஆண்பிள்ளை (Tom Boy) மாதிரி தான். அதனால், அப்படி தோன்றியது இல்லை.
4 .  சில நேரங்களில்,  நினைத்து ஏங்கி இருக்கிறேன்:
................ பெற்றோருக்கு பண உதவி செய்வதில் இருந்து, கூட வைத்து கவனித்து கொள்ள இயலாத நிலையில்.
.................சில வேலைகளுக்கு (field job) ஆணாக இருந்து இருந்தால், இன்னும் advantage இருந்து இருக்கும். 
................. ஜஸ்ட் லைக் தட் ... நண்பர்களுடன் சௌகரியமாக ஆண்கள்,   கும்மி, ரம்மி, தண்ணி, சைட்  அடிக்க முடியும்.  இந்த செயல்களுக்கும் அவர்களது  "நல்லவர்" இமேஜ்க்கும் நோ டேமேஜ். ஆனால், விளையாட்டாக பொண்ணுங்க செய்தால் கூட, "முத்திரை" குத்திடுறாங்க..... குறிப்பாக, திருமணம் ஆன பெண்களுக்கு இது ஒரு challenge தான்.  ஹி,ஹி,ஹி,ஹி.... 
5.     இது என்ன காஞ்சு போன கருவாட்டு கேள்வி.  ஆண்கள் எப்பொழுதாவது பெண்ணாக பிறந்து இருக்கலாம் என்று நினைத்தது உண்டா? அப்படி நினைத்த தருணங்கள் தவிர மற்ற நேரம்,  நாங்க அப்படி நினைச்சோம் என்று வச்சுக்க சொல்லுங்க...... 

அடுத்த கேள்வி கேட்பவர், நாளைக்கு கல்யாணம் பண்ண ரெடி ஆகி கொண்டு இருக்கும் "அசால்ட்"ஆறுமுகம்:

2 .  பெண்கள், தனக்கு வரப் போகும் கணவரிடம், முக்கியமாக எதிர்பார்ப்பது என்ன?
(எல்லாம் அல்ல.  மிக முக்கியம் என கருதப்படும்  விஷயங்கள் மட்டும்)

1.   தன் மனைவியை  விரும்ப வேண்டும்.
2.  தன் மனைவி  மேல் உள்ள அன்பை வெளிப்படுத்த தெரிய வேண்டும்.
3 .  அவ்வப்போது பாராட்டி, உற்சாகப் படுத்த வேண்டும்.  
4 .  வீட்டு பொறுப்புகளில் உதவி செய்ய வேண்டும் - சீண்டலுடன் - கூடலுடன் - சேட்டைகளுடன் - சில்மிஷங்களுடன்.
5 .  நல்ல வேலை அல்லது பிசினஸ் இருக்க வேண்டும்.  ஓரளவுக்காகவது,  பார்க்கிற மாதிரி லுக் இருக்க வேண்டும்.
6 . நல்ல understanding - மனைவியின் உணர்வுகளை, ஆசைகளை மதிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். 
7 .  அனுஷ்கா, தமன்னா மாதிரியும் இருக்கணும் - "எங்கும் எங்கெங்கும்" பொம்மீஸ் நைட்டீஸ் போட்ட குடும்ப தலைவியாயும் இருக்கணும் என்று எதிர்பார்த்து - மனைவியை  டார்ச்சர் பண்ணாம இருக்கணும். 

எதிர்பார்ப்புக்கும் கிடைத்ததற்கும் பாலமாக ஒரு கேள்வியை எடுத்து விடுகிறார்,  "பில்ட் அப்" பீட்டரு:
3 .  உங்கள்  கணவரிடம்  பிடித்த முக்கியமான விஷயங்கள் என்ன?  

1 .  விருந்தோம்பல் - பிறருக்கு உதவுவது.
2 .  தன் மனைவி சுதந்தரத்தில் தலையிடாமல் இருப்பது.
3 .  3 Idiots virus மாதிரி டைமிங் சென்ஸ் கொண்டிருப்பது.
4 .  தன் மனைவியுடன் கலந்து பேசி விட்டு, எந்த முடிவையும் எடுப்பது. 
5 .  தன் மனைவி மேல் வைத்து இருக்கும் நம்பிக்கை. 
6 .  ப்ரித்வி ராஜ் மாதிரி சொக்க வைக்கவில்லை என்றாலும்,  சிம்பு மாதிரி விரல் வித்தை காட்டி அலட்டி கொண்டு, மிரட்டாமல் இருப்பது. 

ஆத்துக்குள்ள காலை விடும் முன், "ஆழம்" பார்க்க எண்ணும் "அடுத்தாத்து" ஆல்பர்ட்டு:  
4 .  உங்கள் கணவர் அல்லது காதலர், இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்று தெரிய வருகிறது. உங்கள்  reaction என்ன? என்ன செய்வீர்கள்?  

1 .  கண்டிப்பாக சண்டைதான்.......
2 .   பயங்கர கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாது...... இரு தரப்பு பெற்றோர் வரை விஷயம் போகும்.
3 .  தன்னை பிடிக்காமல் தானே இன்னொரு பெண்ணை தேடினார் என்று ஒதுங்கி விடுவது..... ஒரு வேளை, தன் கணவர் அப்படி செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் இவ்வளவு உறுதியான பதிலை  தர முடிகிறதோ என்னவோ.....
4 .  குழந்தைகளுக்காகவாவது விவாகரத்து வரை போகாவிட்டாலும்,  "மறந்தேன் - மன்னித்தேன்" என்று நிச்சயம் இருக்க முடியாது.
5 .  "அரிசினு அள்ளவும் விடாமல் - உமினு ஊதவும் விடாமல்" பாடாக படுத்தி,  பழி வாங்கி  விடுவது.
6 .   திருமணத்துக்கு முன் என்றால் - போட்டிக்கு தானும் வேறு ஆளை தேடி கொள்ளுதல்  ....... திருமணத்துக்கு பின் என்றால் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - இந்த கற்பு கிற்பு என்று தடுக்கிறதே...... நிச்சயமாக அவருக்கும் மனம் வலிக்கிற மாதிரி ஒரு செயல் உண்டு....

இந்த கேள்வியை கேட்பது,  வம்பு வேண்டாமே ஆனாலும் ஏதோ ஒன்றை கேட்டு வைப்போமே என்று இருக்கும் "டீசன்ட்டு" தங்கசாமி: 
5 .  உங்கள் கணவர் அல்லது காதலருக்கு, உங்களை (மட்டுமே) பிடிக்க முக்கியமான காரணங்கள் சொல்லுங்களேன்...

1 .  மனைவியின் சமையல்  - வீட்டு நிர்வாகம்.
2 .  மனைவியின் தன்னம்பிக்கையும் தைரியமும்.
3 .  வெளிப்படையான பேச்சு.
4 .  மனைவி அல்லது girl friend கிட்ட ஏதாவது ஒன்று கன்னாபின்னான்னு பிடிக்கணும்.  அப்போ தான் சரிப்பட்டு வரும்.
இது ஆளாளுக்கு வேறுபடுவதால் குறிப்பிட்டு சொல்ல முடியாது.
5 .  இதையும் கேள்வின்னு கேக்குறவங்களை என்னனு சொல்றது?  அவரோட டைப்புக்கு, வேற எவளும் இப்படி அட்ஜஸ்ட் பண்ணி இருக்க மாட்டாள்.   இதுதான் "cheap maintenance " .......
 

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...... இப்போவே கண்ணை கட்டுதே...... இன்னும் பாதி கிணறு இருக்குதே....." என்று நினைக்காதீங்க..... கேட்டதுதான் கேட்டுட்டாங்க - முழு பதில்களையும் பாத்து தெரிஞ்சுக்கோங்க...
  விரைவில் அடுத்த பாகம்!

நன்றி: படங்கள் கூகிள்.

Friday, June 25, 2010

ஆண் ஒரு சூரியன் - பெண் ஒரு நிலா

 
 படத்துல பாத்தீங்களா? அவர் , சூரியன் வச்சு தான் சிகரட் பத்த வைத்து கொள்வாராம்......This is attitude!

நிலாவை பெண்ணுக்கு ஒப்பிட்டோ அல்லது  பெண்ணை நிலாவுக்கு ஒப்பிட்டோ குறிப்பிடப்படும் அதே வேளையில், ஆணை எப்பொழுதும் சூரியனுக்கு ஒப்பிட்டு தான் சொல்கிறார்கள்.  பெண், ஆணை depend பண்ணி இருக்கிறாள் என்பதற்கு symbolic ஷாட் எடுத்து விடுறாங்களாம்...... அவ்வ்வ்வ்......
 நிலா பெண்ணே................ இந்த படத்தில்!  This is illusion!

 இது எப்படி இருக்கு?




இதுவும் எப்படி இருக்கு?

இப்படியாய் இருக்கும் சூரியனும் சந்திரனும் ஒரே கோட்டுக்குள் கொண்டு வரும் சக்திக்கு பெயர், காதல் என்று சொல்றாங்க.... அதையும் இந்த so called சூரியன்ஸ் எப்படி சொதப்புறாங்கனு -   so called நிலாஸ் அப்படி என்ன பண்றாங்கனு பாலாஜி என்பவர் அருமையாக ஒரு குறும் படம் எடுத்து காட்டி இருக்கிறார். இதை நீங்க முன்னே பார்த்து இருக்கலாம்.  மீண்டும்........!!
இந்த குறும்படத்தை, எனக்கு அனுப்பி வைத்த பதிவுலக நண்பர்,  பிரின்ஸ் ராஜனுக்கு நன்றி.
பாலாஜி சாருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.